Posts Tagged ‘முட்டாள்’

மோடியின் சென்னை வருகை – பேச்சும், சவாலும், அரசியலும் – திராவிட சித்தாந்தத்தை மாற்றுமா, தமிழக மக்கள் மாறுவார்களா, மாற்றி ஓட்டுப் போடுவார்களா? (2)

பிப்ரவரி 9, 2014

மோடியின் சென்னை வருகை – பேச்சும், சவாலும், அரசியலும் – திராவிட சித்தாந்தத்தை மாற்றுமா, தமிழக மக்கள் மாறுவார்களா, மாற்றி ஓட்டுப் போடுவார்களா? (2)

 

மோடியின் உத்வேகமான பேச்சு

மோடியின் உத்வேகமான, உற்சாகமான, ஊக்குவிக்கும்  பேச்சு

அண்டை  நாடுகளின்  விஷமத்தை  தடுக்காதது: மத்திய அரசு பலவீனமாக இருப்பதால்தான், இந்தியாவின் கோரிக்கைகளுக்கு அண்டை நாடுகள் செவிசாய்ப்பதில்லை[1]. இந்தியா மெத்தனமாக இருப்பதன் காரணமாக இலங்கை-பாகிஸ்தான்-வங்கதேசம்-நேபாளம்-மியான்மர் போன்ற நாடுகளில் இந்திய மக்கள் பெரும் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். சீனாவின் ஊடுருவலைக்கூடக் கண்டிக்காமல் மெத்தனமாக இருக்கிறது. இதனால்தான் சுற்றியுள்ள சிறிய நாடுகள் எல்லாம் இந்தியாவை சதாய்த்து வருகின்றன. மத்தியில் உள்ள அரசு வலுவான அரசாக இருந்தால், அண்டை நாடுகளுடன் வலுவான உறவைப் பேணமுடியும்.

 

சென்னையில் பிஜேபி கூட்டம்

சென்னையில் பிஜேபி கூட்டம்

ராணுவ  அமைச்சர்  ஒருமாதிரியாக  பேசுவது, ராணுவ  அதிகாரிகள்  வேறுவிதமாக  பேசுவது: பாகிஸ்தான் எல்லை-ஊடுருவல் பற்றி ராணுவ அமைச்சர் ஒரு மாதிரியாக பேசுவது, ராணுவ அதிகாரிகள் வேறுவிதமாக பேசுவது என்று பார்க்கும் போது கேவலமாக இருக்கிறது. சுதந்திர இந்தியாவில் இது மாதிரி ஒருதடவைக் கூட நடந்ததில்லை. ராணுவ அதிகாரிகள் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை-ஊடுருவல்களில் ஈடுபட்டுள்ளனர் என்றால், அமைச்சர் பாகிஸ்தான் ராணுவத்தினர் உடையில் தீவிரவாதிகள் எல்லை-ஊடுருவல்களில் ஈடுபட்டுள்ளனர் என்று பாராளுமன்றத்திலேயே பேசினார். பிஜேபி ஆட்சி வந்தால் இப்பிரச்சினை தீரும் என்றார்.

 

உற்சாகமான மோடி ஆதரவாளர்கள்

உற்சாகமான மோடி ஆதரவாளர்கள்

தவறாக  பயன்படுத்தப்  படும்  சிபிஐ: அரசியல் காரணங்களுக்காக – வாக்கெடுப்பு நடத்துவதற்காகவும், ஆளும் அரசைக் காப்பாற்றுவதற்காகவும் மட்டுமே சிபிஐ-யை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. சிபிஐ சரியான வழியில் செயல்பட்டால்தான் தவறிழைப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த முடியும். [உபி, தமிழகம் முதலிய மாநிலங்களில் சிபிஐயை செயல்படுத்துவதை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். சமீபத்தில் இர்ஸத் ஜஹான் வழக்கில் சிபிஐ, அமீத் ஷா பெயரை சேர்த்திருந்தால் யுபிஏ அரசு மகிழ்ந்திருக்கும், ஆனால், அவர்க்கு எதிராக ஆதாரங்கள் இல்லாததால் விடப்பட்டது என்றார். உடனே கூண்டுக்கிளி பேதலித்துவிட்டது என்று சமஜ்வாடி கட்சி தலைவர் கமென்ட் அடித்தார்].

 

உற்சாகமான மோடி ஆதரவாளர்கள்

உற்சாகமான மோடி ஆதரவாளர்கள்

வருமானவரித்  துறையை  தங்கள்  கைக்குள்  வைத்துக்  கொண்டு  எதிர்க்கட்சியினரை  மிரட்டி  வருகிறது: இதே போன்று மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வருமான வரித்துறையை தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சியினரை மிரட்டி வருகிறது. குஜராத்துக்கு முதலீடு செய்ய வரும் தொழிலதிபர்களை மிரட்டி முதலீடு செய்யாமல் தடுக்கும் பணியில் வருமான வரித்துறை ஈடுபடுகிறது. மகளிர் ஆணையம், சிறுபான்மையினர் ஆணையம், எஸ்.டி., எஸ்.சி. ஆணையம் என மக்களுக்கு நன்மை செய்யும் அமைப்புகளையும் செயல்பட விடாமல் மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது.  குறிப்பாக, ஏழைகளுக்கு இந்த அரசு எந்த உதவியும் செய்யவில்லை.

 

வெங்கைய நாயுடு, பச்சமுத்து முதலியோர்

வெங்கைய நாயுடு, பச்சமுத்து முதலியோர்

நீதிமன்றத்தை  அவமதிக்கிறது: தற்போதுள்ள மத்திய அரசு நீதிமன்றத்தை அவமதிக்கிறது. இந்த நாட்டின் ஏழை எளிய மக்கள் நீதிமன்றத்தின் மீது, குறிப்பாக உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர். உச்சநீதி மன்ற தீர்ப்புகளை அமூல் படுத்தாமல் வைத்திருக்கின்றது. [2ஜி, காமன்வெல்த், கோல்கேட் போன்ற பல வழக்குகளில் உச்சநீதி மன்றம் அரசிற்கு எதிராகவே நடவடிக்கை எடுக்க ஆணையிடுள்ளது, ஆனால் காலந்தாழ்த்தி வருகிறது]

 

இக்கூட்டம் ஓட்டாளர்களாக மாறினால் ஆட்சி மாறும்

இக்கூட்டம் ஓட்டாளர்களாக மாறினால் ஆட்சி மாறும்

அதிகமான  தானியங்களை  ஏழைகளுக்குக்  கொடுக்காமல்   விற்றது: நாட்டில் உள்ள உணவு தானியக் கிடங்குகளில் ஏராளமான உணவுப் பொருள்கள் முறையாக பராமரிக்கப்படாமல் வீணாகின்றன. இப்படி வீணாகும் பொருள்களை ஏழை மக்களுக்குக் கொடுங்கள் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட மத்திய அரசு அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் உணவுப் பொருள்கள் வீணாகிவிட்டதாகக்கூறி. ஒரு கிலோ அரிசி 80 காசு என மதுபான ஆலைகளுக்கு விற்று வருகிறது. இப்படி ஏழைகளுக்கு துரோகம் இழைத்துவிட்டது. 

 

நதிகள்  இணைப்புத்  திட்டம்: நாட்டில் உள்ள நதிகளை தேசியமயமாக்கி ஒன்றாக இணைக்க வேண்டும் என்று வாஜபாய் பிரதமராக இருந்தபோது திட்டம் தீட்டினார். ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நதிகள் இணைப்புத் திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டது. கங்கை-காவிரி திட்டம் முடக்கப்பட்டது.  இந்த நதிநீர் இணைப்புத் திட்டம் ஏன் செயல்படுத்தவில்லை என்று ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்[2]. நதிகளை இணைக்க குழு அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு 15 மாதங்களாகியும் குழு அமைக்கப்படவில்லை.

 

தமிழ்நாடுஎன்னஇந்தியாவில்இல்லையா?: குழாய் வழியாக நீரைக் கொண்டு வர பாதை போடவேண்டும். ரெயில் பாதை குறுக்கே வருகிறது. அதன் கீழாக பைப்புகளை எடுத்துச் செல்ல ரெயில்வே நிர்வாகம் அனுமதி கொடுக்க வேண்டும், ஆனால், அனுமதி காலம் தாழ்த்தப்படுகிறது அல்லது மறைமுகமாக மறுக்கப்படுகிறது. ரெயில்வே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், தமிழக மக்களும் இந்தியர்கள் தாமே? தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கிறது? பிறகு எதற்கு இந்த பாரபட்சம்? கூட்டாட்சியினை மத்திய அரசு மதிக்க வேண்டும் என்று விளக்கம் அளித்தார். [வைகோ இருந்தால் ரசித்திருப்பார், பாவம், டிவியிலாவது பார்த்துக் கேட்டிருப்பார்!]

 

திட்ட  கமிஷனை  முடக்கியது: நேரு அமைத்த திட்டக் கமிஷனுக்கு மரியாதை இல்லை.  அதைப்பற்றி இப்போது யாரும் விவாதிப்பதும் இல்லை. திட்டக் கமிஷன் தலைவராக பிரதமர் இருக்கிறார். ஆனால், திட்டக் கமிஷனின் பரிந்துரைகளை, மத்திய அமைச்சரவைக் குழு நிராகரிக்கிறது. திட்டக் கமிஷனுக்குப் போட்டியாக தேசிய ஆலோனைக் குழு செயல்படுகிறது. தேசிய ஆலோசனைக் குழுவை யாரோ ஒருவர் (அவர் சோனியா காந்தியை மறைமுகமாகக் குறிப்பிட்டார்) திரைமறைவில் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

 

ஆளுநர்  மாளிகைகளா  அல்லது  காங்கிரஸ்  கட்சி  அலுவலகங்களா? ஒரு மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். மாநிலத்தின் உறவை பராமரிக்க வேண்டிய பொறுப்பு ஆளுநருடையது. மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற மாநில சட்டமன்றம் ஒரு சட்டத்தை இயற்றும். ஆளுநர் அந்த சட்டத்தில் கையெழுத்துப் போட மாட்டார். இப்படிச் செய்தால் மாநில அரசுகள் எப்படி மக்களுக்கு நன்மை செய்ய முடியும்? சட்டமன்றம் நிறைவேற்றும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் தருவதில்லை. ஆளுநர் மாளிகைகளை எல்லாம் காங்கிரஸ் கட்சியின் அலுவலகங்களாக மாறிவிட்டன என்று நரேந்திரமோடி குற்றஞ்சாட்டினார்.

 

ராணுவத்தில்  மதரீதியில்  எண்ணிக்கை  எடுக்கச்  சொன்னது: சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளில் மத்திய அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே நல்லுறவு இருந்து வந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக அந்த நிலை இல்லை. அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே ஒரு பதட்டமான சூழ்நிலையே நிலவுகிறது[3]. ராணுவத்தில் இதுவரை எந்த மதவாத சிந்தனையும் இல்ல. ஆனால், மதவாத ரீதியாக கணக்கெடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. விஷத்தின் விதைகளை விதைக்க முயன்றுள்ளது [இது சோனியா உபயோகப்படுத்திய வார்த்தைகள். மறுபடியும் அவருக்கு எதிராக மோடி பயன்படுத்தியுள்ளார்[4]]. இதற்கு மறுத்துவிட்ட ராணுவம், ‘நாங்கள் அனைவரும் பாரத தாயின் புதல்வர்கள், இதை அனுமதிக்க மாட்டோம்’ என்று கூறிவிட்டது. இப்படிப்பட்ட அரசு மக்களை எப்படிக் காப்பாற்றும்?

 

குஜராத்  மக்களை  முட்டாள்கள்  என்று  ராகுல்  சொன்னதை  கிண்டல்  அளித்தது: அதே நாளில், “பர்தோலி யாத்திரை” என்று சர்தார் படேலைக் காப்பியடிக்கும் விதத்தில், ராகுல் குஜராத்திற்குச் சென்று குஜராத்திகளை முட்டாள்கள் என்றவிதத்தில் பேசியுள்ளதைச் சுட்டிக் காட்டி, சென்னையில், மோடி “அதனால்தான் குஜராத் மக்கள் மூன்றுமுறை காங்கிரசை நிராகரித்துள்ளார்கள். இனி இந்திய மக்களும் காங்கிரசை நிராகரிப்பார்கள்”, என்று பேசினார்[5].

 

தேர்தலில்  ஓட்டாக  மாற  வேண்டும்: மோடி கூட்டத்தில் பிஜேபி ஆதரவாளர்கள் மட்டுமல்லாது, மற்றவர்களும் கலந்து கொண்டிருப்பது தெரிகின்றது. இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் குறிப்பாக மோடியின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று வந்தார்கள். ஆங்கிலத்தில் பேசியதை அவர்கள் ரசிக்கவும் செய்தார்கள். ஹிந்தி தெரிந்தவர்கள் அதிகமாகவே ரசித்தனர். நண்பர்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்னார்கள். திக, திமுக மற்ற எதிர் கட்சியினர், ஏன் முஸ்லிம்கள் கூட கலந்து கொண்டுள்ளனர்[6]. இருப்பினும் இந்த ஆர்வம், ஆச்சரியம் மற்றும் தமாஷா போன்ற விசயங்கள் ஓட்டுகளக மாறி பிஜேபிக்கு அரசியல் ரீதியாக ஆதாயம் வருமா என்பது சில மாதங்களில் தெரிந்து விடும். திராவிடத் தலைவர்களையும் மீறி தமிழகத்து ஓட்டாளிகள் மாறி ஓட்டளித்தால், நிச்சயமாக மாற்று அரசாக பிஜேபி கூட்டணி அமையும் என்று நம்பலாம்.

 

வேதபிரகாஷ்

© 09-02-2014


[1] தினகரன், காங்கிரஸ்கட்சிமீதுநரேந்திரமோடிதாக்கு-மத்தியஅரசுநினைத்திருந்தால்மீனவர்பிரச்சனையில்சுமூகமுடிவுஎடுத்திருக்கமுடியும்…, பிப்ரவரி 9, 2014.

 

[2] மாலைமலர், மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: வண்டலூர் பொதுக்கூட்டத்தில் பட்டியலிட்டார் மோடி, பதிவு செய்த நாள்: சனிக்கிழமை, பெப்ரவரி 08, 9:29 PM IST

[4] Hitting back at Congress President Sonia Gandhi for her “zeher ki kheti” remark, he said the UPA government was sowing the “seeds of communal poison” in Army by ordering a head-count based on religion.

http://indiatoday.intoday.in/story/narendra-modi-chennai-rally-attacks-chidambaram-manmohan-rahul-2014-polls/1/342561.html

[5] Hitting out at Rahul for attacking him in Gujarat on Saturday, Modi said the Congress vice president has said “useless” things against him. “He (Rahul) has used a word from Hindi which is used to abuse. He has described the people of Gujarat as “Ulloo” (fools). He insulted all the people of Gujarat. The people whom you describe as fools have rejected you for three terms.

http://indiatoday.intoday.in/story/narendra-modi-chennai-rally-attacks-chidambaram-manmohan-rahul-2014-polls/1/342561.html