மோடியின் சென்னை வருகை – பேச்சும், சவாலும், அரசியலும் – திராவிட சித்தாந்தத்தை மாற்றுமா, தமிழக மக்கள் மாறுவார்களா, மாற்றி ஓட்டுப் போடுவார்களா? (1)

மோடியின் சென்னை வருகை – பேச்சும், சவாலும், அரசியலும் – திராவிட சித்தாந்தத்தை மாற்றுமா, தமிழக மக்கள் மாறுவார்களா, மாற்றி ஓட்டுப் போடுவார்களா? (1)

 

மோடியின் சென்னையில்  பேசும்போது 2014

மோடியின் சென்னையில் பேசும்போது 2014

சனிக்கிழமை  மாலை  மோடியின்  தாக்கம்  சென்னையில்  உணரப்பட்டது: மோடியின் வருகை சென்னையில் நிச்சயமாக உணரப்பட்டது. விருப்பம் இல்லாதவர்களுக்குக் கூட, மனதில் ஏதோ அவரைப் பற்றி, கூட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. சன்டிவியே ஒலி-ஒளிபரப்பு செய்தலால் வழக்கமான சீரியல்களை (நாதஸ்வரம், மண்வாசனை, தெய்வமகள், வம்சம் முதலியன) விடுத்து, பெண்கள் கூட பார்த்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடப்பட வேண்டிய விசயமாகிறது. குறிப்பாக இளைஞர்கள் கூட, ஏதோ “மாட்சின் ஸ்கோர்” கேட்பது போல, செனலை மாற்றிப் பார்த்திருக்கின்றனர். இதெல்லாம் மோடியின் பால் ஒரு ஈர்ப்பினை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிகிறது. இருப்பினும் தமிழகம் திராவிட சித்தாந்தத்திலிருந்து விடுபட்டு, திராவிட பிடிவாத மோடிவிரோதத்தைக் கைவிட்டு, பிஜேபிக்கு ஓட்டு விழச் செய்யுமா, அல்லது பிரிக்கச் செய்யுமா என்பது கேள்விக் குறியாகிறது.

 

மோடியின் சென்னை விஜயம் பேச்சு அரசியல் 2014

மோடியின் சென்னை விஜயம் பேச்சு அரசியல் 2014

பிரமாண்ட மேடை,   ஏற்பாடு[1]:  தமிழகத்தில், திருச்சிக்கு பிறகு, மோடி பங்கேற்கும், இரண்டாவது பொதுக்கூட்டம் என்பதால், சென்னையில் மிகப் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது. பிஜேபியின் தொண்டர்கள் செய்த ஏற்பாடுகள் பிரமிக்கத்தக்கதாக இருந்தது. சென்னை, விமான நிலையத்தில் இருந்து, வண்டலூர் வி.ஜி.பி., மைதானம் வரை, 30 கி.மீ., தூரத்திற்கு, சாலையின் இரு புறங்களிலும், மோடியை வரவேற்று, பா.ஜ., கொடி, தோரணம் கட்டப்பட்டு வரவேற்பு தட்டிகள் வைக்கப்பட்டன. பா.ஜ., உடன் கூட்டணி வைக்க, உடன்பாடு எட்டியுள்ள,

  1. ம.தி.மு.க.,
  2. புதிய நீதிக்கட்சி,
  3. இந்திய ஜனநாயக கட்சி,
  4. இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம்,
  5. மக்கள் தமிழகம் கட்சிகள் சார்பிலும்,

மோடியை வரவேற்று, கொடி மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டன[2]. வண்டலூர் வி.ஜி.பி. திடலில் மோடி பேசுவதற்காக நாடாளுமன்ற கட்டட வடிவில் 160 அடி நீளம் 40 அடி அகலம் கொண்ட பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டது. மேடை நடுவே 30 அடி அகலம் 12 அடி உயரம் கொண்ட பிரமாண்ட எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டது. மைதானம் முழுவதும் 10 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டன். பொதுக்கூட்ட மைதான முகப்பு செங்கோட்டை வடிவில் அமைக்கப்பட்டது. தலைவர்கள் படங்களுடன் அலங்கார நுழைவாயிலும் உள்ளது. திடலில் குடிநீர், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி செய்யப்பட்டது. மருத்துவக் குழுவினருடன் 10 ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டது. தொண்டர்கள் அமர சுமார் 5 லட்சம் பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டன. 40 ஆயிரம் வாகனங்களை நிறுத்த 13 இடங்களில் வசதி செய்யப்பட்டது. சென்னையில் இருந்து வண்டலூர் வரை வழிநெடுக கொடி தோரணம், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பல கோணங்களில் மோடி படங்கள் இடம் பெற்றன.

 

நரேந்திர  மோடி  கார்  அணிவகுப்பில்  புகுந்த  ஆசாமி: போலீசார்  மடக்கி  பிடித்து  விசாரணை: வண்டலூர் பொதுக்கூட்டத்துக்கு நரேந்திர மோடி சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் சென்றார். அப்போது ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தாம்பரம் ரெயில் நிலையம் அருகே போக்குவரத்து நிறுத்தப்பட்ட நேரத்தில் மர்ம ஆசாமி ஹெல்மெட் அணிந்து கொண்டு அதிவேகமாக மோடி அணிவகுப்பு வந்த சாலையின் எதிரில் சென்றான்[3]. பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் விரட்டியபோது பிடிபடாமல் அதிவேகமாக சென்றான். உடனே வயர்லெஸ்ஸில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாம்பரம் தாலுகா அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிள் ஆசாமியை போலீசார் மடக்கினர்[4]. பின்னர் வாலிபர் பிடிபட்ட சில நிமிடங்களில் மோடியின் கார் அணிவகுப்பு அந்த பகுதியை கடந்து வண்டலூர் நோக்கி சென்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் திடீர் பதற்றத்தை ஏற்படுத்தியது. பிடிபட்ட மர்ம நபர் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் என தெரிகிறது. அவர் எதற்காக மோடி வருகையின் போது எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்தார். ஏதும் சதிதிட்டத்துடன் வந்தாரா? என்பது குறித்து போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கூட்டணிக்  கட்சியினரின்  வருகை, பங்கேற்பு: கூடணி சார்பில் ம.தி.மு.க.,வின் மல்லை சத்யா, எம்.பி., கணேசமூர்த்தி; புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்; கொங்குநாடு தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன்; இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர் ஆகியோர், மாலை, 5:00 மணிக்கு, மேடைக்கு வந்தனர். எதிர்பார்த்தபடி, வைகோ வரவில்லை. பாஜக தலைவர்கள் வெங்கைய்யா நாயுடு, முரளிதர் ராவ், இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன். எச்.ராஜா மற்றும் மதிமுக-இந்திய ஜனநாயகக் கட்சி-கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி-புதிய நீதிக் கட்சி ஆகியவற்றின் நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்[5]. மோடி வருவதற்கு முன், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பேசி முடிப்பதற்கு வசதியாக, மாலை, 5:20 மணிக்கு, தமிழக பா.ஜ.,தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், பொதுக்கூட்டத்தை துவக்கி வைத்தார். இம்பால் மற்றும் அசாம் மாநிலம், கவுகாத்தியில் நேற்று காலை நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய மோடி, இரவு, 7:00 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். இரவு, லட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் பேசிய மோடி, காங்கிரஸ் மற்றும் மூன்றாவது அணி கட்சிகளைத் தாக்கி பேசினார்.

 

தமிழகப்  பிரச்சினைகளை  கவனமாகக்  கையாண்ட  மோடி[6]: தமிழக, குஜராத் மீனவர்கள் பிரச்னை நீடிப்பதற்கு பலவீனமான மத்திய அரசே காரணம் என்று குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார். சென்னை அருகே வண்டலூரில், பா.ஜ.க. சார்பில் சனிக்கிழமை (08-02-2014) பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நரேந்திர மோடி பேசியதாவது[7]: “தமிழக மீனவர்கள் இலங்கை சிறையிலும், குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் சிறையிலும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மீனவர்கள் பிரச்னைக்குத் தீர்வுகாண்பதில் மத்திய அரசுக்கு போதிய அக்கறையில்லை. மீனவர்கள் பிரச்னை தொடர்ந்து நீடிப்பதற்கு பலவீனமான மத்திய அரசே காரணம்[8]. பிஜேபி ஆட்சி வந்தால் இப்பிரச்சினை தீரும் என்றார்.

 

திமுகஅதிமுகவினரை   விமர்சிக்காமல்  விடுத்தது: தமிழகத்திற்கு ஏற்றமுறையில், மிகவும் சாதுர்யமாக மோடி பேசியுள்ளார். 2ஜி ஊழலில் பயன்பெற்றவர்கள் இங்கு இருக்கிறார்கள் என்று ஒரே தடவை குறிப்பிட்டாலும், திமுக-அதிமுகவினரை விமர்சிக்காமல் பேசியுள்ளார்[9]. கூட்டணி அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று யூகிப்பது, எதிர்பார்ப்பது இதில் தெரிய வருகிறது. மூன்றாவது அணி என்பது, பிஜேபியின் ஓட்டுகளைப் பிரிப்பது-உடைப்பது என்ற சதிதிட்டம் ஆகும். இதனால், காங்கிரசுக்குத் தான் சாதகம். இதைத்தான் அவர்கள் (காங்கிரஸ்காரர்கள் மற்றும் மூன்றவது அணியினர்) 2004 மற்றும் 2009 ஆண்டு தேர்தல்களில் செய்து பிஜேபியை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்துள்ளனர். அதே சதிதிட்டத்தில் இப்பொழுதும் ஈடுபட்டுள்ளனர். இதில் ஜெயலலிதா சேர்ந்துள்ளது விசித்திரமான விசயமாக உள்ளது. அதனால் தான், மோடி கவனமாக பேசியுள்ளார்.

 

சிதம்பரம்  மற்றும்  மன்மோஹன்பொருளாதார  மேதைகளை  சாடியது: மறு-எண்ணிக்கை அமைச்சர் [Recounting Minister] என்று குறிப்பிட்டு சிதம்பரத்தைக் கிண்டலடித்துப் பேசினார்[10]. பொருளாதார முன்னேற்றம், வளர்ச்சி புத்தகங்களினின்றுஙறியப்படுவதில்லை, ஆனால், மக்களுடன் சேர்ந்து செயல்படும் போதுதான் தெரிய வருவது. நாட்டின் முனேற்றத்திற்கு கடின உழைப்புதான் பலன் தருமேயன்றி அயல்நாட்டுப் படிப்பு உதவாது (ஹார்வார்ட் உதவாது ஹார்ட் வொர்க் தான் பலன் தரும்) என்று பேசினார். இதற்கான ஆதாரங்களைக் கொடுத்து ஆங்கிலத்திலேயே பேசினார்:

 

  • While the NDA-led government had in 2004 ensured an over eight per cent grwoth rate, “as per your own statistics, Mr Recounting Minister, the GDP growth was 4.5 per cent in 2012-13,” Modi said.
  • Modi said when he took over the reins in Gujarat in 2001, the GDP growth rate was minus 4.8 per cent.
  • “We worked hard with our so-called limited knowledge of economics. See what we have achieved. India grew at an average 7.6 per cent between 2001 and 2011-12 while the growth rate for Gujarat was 10.1 per cent,” he said.
  • In fact, most states were better positioned in terms of debt and government liability than the Centre and so was the case with fiscal deficit, he said.
  • The central government’s debt liability was Rs.50 lakh crore by March 2013, which was 50 per cent of the GDP, he claimed.

 

மத்திய அரசில் மறு ஓட்டு எண்ணிக்கைமந்திரி என ஒருவர் உள்ளார். தேர்தலில்தோற்ற அவர், மறு ஓட்டு எண்ணிக்கையில் ஜெயித்தவர். இவர் அகங்காரத்தின் உச்சியில் பேசிவருகிறார். என்னை பற்றி தவறாக பேசிவருகிறார். இருப்பினும் நான் அமைதியாக உள்ளேன். மோடியின் பொருளாதார அறிவை ஸ்டாம்பில் எழுதிவிடலாம் என கூறியுள்ளார். ஸ்டாம்ப் ஒட்டினால்தான் போஸ்டர் சென்றுசேரும். நான்என்னுடையே செயல்பாட்டின் மூலம் நிருபித்துள்ளேன். காங்கிரசில் அரசில் பிரதமர் ஒருபொருளாதார நிபுணர். நிதியமைச்சர் தானும்,பொருளாதார நிபுணர் என நினைக்கிறார். பிரதமர், நிதியமைச்சர் வெளிநாடுகளில் சென்றுபடித்தவர். நான் அரசுப்பள்ளியில் படித்தவன். அவர்களின் சவால்களை ஏற்றுக் கொள்கிறேன். நாட்டை உருவாக்குவது ஹார்வர்டா அல்லது ஹார்ட் ஒர்க்கா. நான் கடினமான உழைப்புமூலம் வந்தவன். தே..,ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி6.8 சதவீதமாக உள்ளது. ஆனால் .மு., அரசில் கடந்த 2012ம் ஆண்டில் 4.6 சதவீதமாக உள்ளது. . இதுதான் உங்கள் வளர்ச்சியா? குஜராத் முதல்வராக நான் பதவியேற்றபோது, மாநிலத்தின் பொருளாதாரவளர்ச்சி -4.8 சதவீதமாக இருந்தது எங்களின் பொருளாதார அறிவை வைத்து நாங்கள் சாதித்துள்ளோம். நாட்டின் சராசரிவளர்ச்சி 7.1 சதவீதமாக இருந்தபோது, குஜராத்தின் வளர்ச்சி 10.6 சதவீதமாக இருந்தது. நாட்டின்கடன் 50லட்சம் கோடியாக உள்ளது. இதுநாட்டின் வருமானத்தில் 50 சதவீதமாகும், என மோடி சென்னைகூட்டத்தில் பேசினார்.

 

வேதபிரகாஷ்

© 09-02-2014


[3] தினத்தந்தி, நரேந்திரமோடி கார்அணிவகுப்பில் புகுந்த ஆசாமி: போலீசார் மடக்கி பிடித்து விசாரணை, பிப்ரவரி 9, 2014

[6] In an apparent reference to Chidambaram’s 2009 victory in Lok Sabha polls from Sivaganga after a recounting of votes, the Gujarat Chief Minister described him as the “Recounting Minister” and charged him with displaying ‘excessive arrogance’ while leaving the country’s economy in bad shape.

[7] தினமணி, மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசின் பலவீனமே காரணம்: நரேந்திர மோடி, பிப்ரவரி 9, 2014

குறிச்சொற்கள்: , , , , , ,

2 பதில்கள் to “மோடியின் சென்னை வருகை – பேச்சும், சவாலும், அரசியலும் – திராவிட சித்தாந்தத்தை மாற்றுமா, தமிழக மக்கள் மாறுவார்களா, மாற்றி ஓட்டுப் போடுவார்களா? (1)”

  1. vedaprakash Says:

    வண்டலூரில் இன்று நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில், ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா பேசியதாவது:-

    ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு 1964 ஆம் ஆண்டு, இதேபோன்ற ஒரு மக்கள் கடலுக்கு முன்னால் பேரறிஞர் அண்ணா சொன்னார்: ஆல மரத்தடியில் நின்று கொண்டு, உன் கண்ணுக்கு என்ன தெரிகிறது? என்று துரோணாச்சாரியார் கேட்டபோது, வில் விஜயன் அர்ஜூனன் சொன்னான்: குருநாதரே, என் கண்ணுக்கு எதுவுமே தெரியவில்லை; அம்பின் நுனியும் குருவியின் கழுத்தும் மட்டும் தெரிகிறது என்றான். அதுபோலத் தம்பிமார்களே, வரப்போகின்ற பொதுத் தேர்தலில் உங்கள் கண்ணுக்குத் தெரிய வேண்டிய ஒரே இலக்கு, காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவது ஒன்றுதான் என்று அண்ணா சொன்னார்.

    அதுபோலத் தோழர்களே, இன்று நம் கண்ணுக்குத் தெரிய வேண்டிய ஒரே இலக்கு, நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில், மக்கள் விரோதக் காங்கிரஸ் கட்சியை, டெல்லி அதிகார பீடத்தில் இருந்து, மத்திய அதிகார பீடத்தில் இருந்து அதல பாதாளத்துக்குத் தூக்கி எறிவதுதான்.

    அதனால்தான், எங்கள் தலைவர் வைகோ, நாடெங்கும் நரேந்திர மோடி அலை வீசுகிறது; அவர்தான் அடுத்த பிரதமர். பாரதிய ஜனதா கட்சி மட்டுமே 270 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும், என்றார். அது நடக்கத்தான் போகிறது.

    சோனியா காந்தி இயக்குகின்ற கைப்பாவை மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தமிழ்நாட்டுக்குக் கேடு செய்தது. தமிழக மீனவர்கள் 578 பேர்களைப் படுகொலை செய்த இலங்கை அரசோடு கைகோர்த்துக் கும்மாளம் போடுகிறது.

    வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, ‘இலங்கை அரசு பணம் கொடுத்தாலும் இந்தியா ஆயுதங்களை விற்பது இல்லை’ என்று முடிவு எடுத்தார்.

    எனவே, அமையப் போகும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ஈழத்தமிழர் பிரச்சினையில் வாஜ்பாய் கடைப்பிடித்த அதே அணுகுமுறையைப் பின்பற்றும் என்று, மறுமலர்ச்சி தி.மு.கழகம் நம்புகிறது.

    குஜராத் மாநிலத்தில், இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், சிறுபான்மை மக்கள் இன்றைக்கு நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ்கிறார்கள் என்பதுதான் உண்மை.

    ஊழல் சாம்ராஜ்யம் நடத்துகின்ற காங்கிரஸ் கட்சி, மாநிலங்களின் அதிகாரங்களை எல்லாம் கபளீகரம் செய்த ஆக்டோபஸ் ஆகவும், மாநிலங்களின் உரிமைகைளை நசுக்குகின்ற எதேச்சாதிகாரியாகவும், மத்திய அரசை இயக்கி வருகிறது.

    மத்தியில் குவிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். இந்தியாவில் உண்மையான கூட்டு ஆட்சி மலர வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் வலுப்பெறும்.

    நரேந்திர மோடி அமைக்கப் போகும் அரசு அத்தகைய கூட்டு ஆட்சியை மலரச் செய்து, சமூக நீதியையும், மதச்சார்பு இன்மையையும் சிறுபான்மை மக்களையும் பாதுகாத்து, தமிழக மீனவர்களின் துன்பத்தைப் போக்கி, விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்து, நேர்மையான அரசியலை நிலைநாட்டும்.

    அத்தகைய வரலாறைப் படைக்க, தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்கு அளித்து மகத்தான வெற்றி பெறச் செய்யவேண்டும். தமிழக அரசியல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்குப் புதியதோர் திருப்பத்தை உருவாக்க, மாற்றம் எனும் பரிமாணத்தை ஏற்படுத்த, பம்பரமாய்ச் சுழன்று பணி ஆற்றுவோம் என உறுதி ஏற்போம்.

    இவ்வாறு மல்லை சத்யா பேசினார்.

  2. vedaprakash Says:

    மோடியின் பேச்சு பற்றி வைகோ…

    காலையில் இம்பாலில் பேசிவிட்டு, பகலில் ஹௌகாத்தியில் பேசிவிட்டு, மாலையில் இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் உணர்ச்சிமிக்க உரையாற்றுவது என்பது அனைவராலும் இயலாது என்றார் வைகோ.

    “இந்தியில் நீங்கள் உரையாற்றும் நிமிடங்களில் அம்மொழியைப் புரிந்து கொள்ளாதவர்களைக் கூட நீங்கள் எழுப்பும் உணர்ச்சி மிக்க குரல், அதன் தொனி, உங்களுடைய கரங்களும் முகமும் வெளிப்படுத்தும் பாவனை மக்களை வசீகரித்தது. இன்று நீங்கள் ஆற்றிய உரை, உன்னதமான சொற்பொழிவாகும்” என்று வைகோ கூறியபோது, “மிகச்சிறந்த பேச்சாளரான நீங்கள் அல்லவா? பாராட்டுகிறீர்கள்” என்றார் மோடி.

    “இன்றைய பேச்சில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மாநில உரிமைகளை நசுக்குவதைக் கண்டித்து, கூட்டாட்சி தத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தியது நாட்டுக்கு மிக அவசியமான கருத்தாகும்” என்று வைகோ கூறியபோது, “தமிழ்நாட்டுக்கு இந்தக் கருத்து மிகவும் அவசியமாயிற்றே” என்றார் மோடி.

    “தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கொல்லப்படுவதையும், அதைத் தடுக்காத மத்திய அரசின் கையாலாகாத தன்மையைப் பற்றிச் சாடியதும், நதிகள் இணைப்பின் அவசியத்தை வலியுறுத்தியதும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பங்கேற்ற தமிழ்நாட்டு கட்சிகள் ஊழல் செய்து அதனால் பலன் பெற்றதைப் பற்றியும் நீங்கள் கூறியதோடு, தன்னை மேதையாகக் கருதிக்கொள்ளும் மறு வாக்கு எண்ணிக்கை புகழ் அமைச்சர் சிதம்பரத்தை கிண்டல் செய்த முறையும் பேச்சின் சிறப்பான முத்திரைகள் ஆகும்” என்றார் வைகோ.

    “வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி மட்டுமே 250 முதல் 272 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: