“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4)

“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4)

ஆலவாயன்- பெருமாள் முருகன்

ஆலவாயன்- பெருமாள் முருகன்

திராவிடத்துவவாதிகள் மௌனம் சாதித்தது (தி இந்து வர்ணனை): எழுத்தாளர் பெருமாள்முருகன் மீது திணிக்கப்பட்டுள்ள சமூக புறக்கணிப்பை மேலும் உறுதி செய்வதாகவே இருக்கிறது ‘மாதொருபாகன்’ பிரச்சினையில், திராவிட கட்சிகள் மவுனம் சாதிப்பது[1]. தமிழ் இலக்கியப் பணியில் இருந்து முற்றிலும் விலகுவதாகவும், இனி ஆசிரியர் பணியை மட்டும் தொடரவுள்ளதாகவும் எழுத்தாளர் பெருமாள்முருகன் அறிவித்துள்ளார். அவரது உணர்ச்சிமிகு இந்த அறிவிப்புக்குப் பின்னரும்கூட அரசியல் கட்சிகள், குறிப்பாக திராவிட கட்சிகள் தங்களது மவுனத்தை கலைத்தபாடில்லை.  முக்கியப் பிரச்சினைகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டி அறிக்கைகளை அவிழ்த்துவிடும் திமுக தலைவரும், இலக்கியவாதியுமான கருணாநிதிகூட ஒட்டுமொத்த ஊடக உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள பெருமாள்முருகன் பிரச்சினையில் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காதது ஏனோ? ஆளும் அதிமுகவும் இந்த விஷயத்தைப் பொருத்தவரை பாரபட்சமில்லாமல் மவுனம் காத்துவருகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டு நிரூபணமான பின்னர் ஜெயலலிதா எந்த விவகாரத்திலுமே தலையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது[2], என்று முடிக்கப்பட்டது. அரசியல்வாதிகள் இப்பிரச்சினையால் தமக்கு ஆதாயம் வருமா என்று பார்த்துதான், கருத்துத் தெரிவிப்பார்கள்.  ஒருவேளை எதிர்ப்புக் கிளம்பும், ஓட்டுகள் கிடைக்காது என்றால், அமைதியாகத்தான் இருக்கும்.

மாதொரு பாகன் - அத்தியாயம்,13, ப,84-85

மாதொரு பாகன் – அத்தியாயம்,13, ப,84-85

சித்தாந்த ரீதியில் தமிழக எழுத்தாளர்கள் ஈடுபட்டு வருவது: தமிழகத்தைப் பொறுத்த வரையில் முற்போக்கு சிந்தனை, தாராளமான எண்ணங்கள், நவீனத்துவம், முதலிய முகமூடிகளில், நாத்திகர்கள், இடதுசாரி வகையறாக்கள், முஸ்லிம்கள், கிருத்துவர்கள் முதலியோர் சித்தாந்த ரீதியில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் எல்லோருமே பாரபட்சமுறையில் கருத்துகள் தெரிவிப்பது, குறிப்பிட்ட மதங்களுக்கு சார்பாக பேசுவது, அதே நேரத்தில், இன்னொரு மதத்தை தூஷிப்பது; குறிப்பிட்ட ஜாதிக்கு சார்பாக பேசுவது, அதே நேரத்தில், இன்னொரு மதத்தை விமர்சிப்பது; சில விழாக்கள், பண்டிகைகள், ஊர்வலங்கள் முதலியவற்றை ஆதரிப்பது, மற்றவற்றை எதிர்ப்பது என்று கடந்த 60 ஆண்டுகளாக செய்து வருகின்றனர். இப்பொழுது கூட சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின், ஜோசப், முதலியோர் பற்றி குறிப்பிடுவதில்லை. 1970ல் ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்டது போன்ற விசயங்களும் இப்பொழுதுள்ள இளைஞர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால், இன்று அப்படி செய்தால், என்னாகும் என்பது அவர்களுக்குத் தெரியும். இதை தமிழக மக்களும் கவனித்து வருகின்றனர். முன்பு திராவிட கட்சிகளை எதிர்த்துக் கேட்பவர்கள் அடிக்கப் பட்டார்கள், அவர்கள் உடமைகள் தாக்கப்பட்டன; இதனால் அவர்கள் பயந்து கிடந்தனர்.  இப்பொழுது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கே, தங்களது சித்தாந்தம் இனிமேல் எடுபடாது என்று தெரிந்து விட்டது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள், இதுவரை அடிகள் வாங்கி அமைதியாக இருந்தவவர்கள், திரும்பினால் என்னவாகும் என்பதனையும் அவர்கள் உணர ஆரம்பித்திருக்கலாம்.

அர்த்தநாரி- பெருமாள்

அர்த்தநாரி- பெருமாள்

இந்துத்துவவசைபாடல், இந்துவிரோதவாதம் எப்பொழுதும் எடுபடாது: சமீப காலத்தில் அவர்களது அரசியல் மற்றும் சித்தாந்தம் வலுவிழந்து விட்டதால், மக்கள் உண்மையினை உணற ஆரம்பித்து விட்டனர். கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதே நிலையை அடைந்து விட்டதால், திராவிட கட்சிகள் போன்று, பல அவதாரங்களைப் பெற்று வேலை செய்து வருகின்றன. மதம், பாரம்பரியம் கலாச்சாரம், நாகரிகம் முதலியவற்றைப் பற்றிய அவர்களது விளக்கங்களும் திரிக்கப்பட்டவை, பொய்யானவை, சரித்திர ஆதாரமற்றவை என்றும் மக்களுக்குப் புரிய ஆரம்பித்தன. இதனால், தான் மக்கள் கேட்டுள்ளனர். ஆனால், அதனை, ஊடகங்கள் “இந்துத்துவவாதிகளின்” வேலை என்றெல்லாம் இன்னொரு திரிபு விளக்கத்தைக் கொடுத்து திசைத் திருப்பப் பார்த்தார்கள். “பெருமாள் முருகன் இந்துத்துவ மற்றும் சாதி சக்திகளினால் வேட்டையாடப்பட்டதால் எழுதுவதையே விட்டுவிட தீர்மானித்தார்…..” என்று தலைப்பிட்டு “தி ஹிந்து” பிரத்யேகமாக 14-01-2015 அன்று வெளியிட்டுள்ளது. அதில் கூட மக்களின் மனம் புண்பட்டதே, அதனால் தானே அவர்கள் வெகுண்டனர், போராட்டம் நடத்தினர்…என்பதனை மறைத்து, திரித்து இந்துத்துவம் என்றெல்லாம் வாதிப்பது நோக்கத்தக்கது. அதாவது, எல்லாவற்றிற்கும் காரணம் இந்து அமைப்புகள் தாம் என்ற கருத்தைத் திணிக்கப் பார்க்கிறது. கருணாநிதி மௌனமாக இருந்தாலும், இந்த இந்து-எதிர்ப்புவாதத்தை விடுவதாக இல்லை. சாதியத்தை வளர்த்து, கட்டிக்காத்தது திராவிட சித்தாந்தமும், அதனை சார்ந்த அரசியலும் தான் என்ற உண்மையினை அவர்கள் மறைக்கப் பார்க்கிறார்கள். இங்கும் சாதியப் பிரச்சினை சம்பந்தப்பட்டிருப்பதால், இன்னொரு உதாரணம் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.ஏனெனில், அதுவும் ஒரு புத்தகம் பற்றியது தான், மார்ச்.2014ல் நடந்த நிகழ்ச்சி! சென்ற 2014ல் அருந்ததி ராய் முன்னுரையுடன் வெளியான ஒரு புத்தகத்தை “தலித்துகள்” எதிர்த்ததைப் பற்றி நமது அறிவிஜீவிகள் மறைத்துள்ளதால், அதைப் பற்றிய விவரங்களைத் தருகிறேன்.

Arunthati Roy book - The Doctor and the Saint - released March 2014

Arunthati Roy book – The Doctor and the Saint – released March 2014

தலித் அறிவிஜீவிகள் அருந்ததி ராயை எதிர்த்தது ஏன்?: “ஜாதியை ஒழித்துக் கட்டுவது எப்படி?” என்ற அம்பேத்கரின் புத்தகம், அருந்ததி ராய் எழுதிய முன்னுரை மற்றும் குறிப்புகளுடன் “மஹாத்மாவுக்கு ஒரு பதில் என்ற விதத்தில் நாராயண பதிப்பகத்தாரால் 2014ல் வெளியிடப்பட்டது[3]. அப்பதிப்பகம் தன்னுடைய இணைதளத்திலேயே பல விவரங்களைக் கொடுதுள்ளது[4]. ஹைதராபாதில் மார்ச்.9, 2014 அன்று நடக்கவிருந்த அப்புத்தக வெளியீட்டு விழா தலித்துகள் எதிர்ப்பார்கள்[5] என்ற அச்சத்தினால், ரத்து செய்யப்பட்டது[6]. தலித் அடிப்படைவாதிகள் அல்லது தீவிரவாதிகள் (Dalit Radicals), அருந்ததி ராய் அம்பேத்கரைப் பற்றி எழுத விரும்பவில்லை என்றும் கட்டுரைகள் உள்ளன[7]. அப்புத்தகம் தடை செய்யப் படவேண்டும் என்றும் சில தலித் இயக்கங்கள் குரல் எழுப்பின. மேலும் அந்த அருந்ததி ராய்-நாராயண திட்டம், ஒரு பார்ப்பன சதி என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது[8]. அருந்ததி ராய், அம்பேத்கரை விட காந்தியைப் பற்றி முன்னுரையில் அதிகமாக எழுதியிருக்கிறார், மாவோயிஸ சித்தாத்திக்கு அம்பேத்கரைப் பற்றி எழுத முடியுமா, அம்பேத்கரைப் பற்றி எழுத அவருக்குத் தகுதி இருக்கிறதா என்றெல்லாம் கேள்விகளை எழுப்பினர்[9]. அருந்தியின் பேட்டி[10] மற்றும் கட்டுரை[11] அவர்களால் எதிர்க்கப்பட்டன. காந்தியைப் பற்றிய அவரது எழுத்துகளை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா, அல்லது அருந்ததியை எதிர்க்க வெறென்ன காரணம் இருந்தது என்று புரியாமல் தான் இருந்தது[12]. “தலித்” அறிவுஜீவிகள் ஒட்டு மொத்தமாக எதிர்த்தபோது, ஆதரவு, முஸ்லிம்-ஆதரவு இணைதளத்திலிருந்து வந்திருப்பது சிந்திக்க வைப்பதாக இருக்கிறது[13].  இதை இங்கு ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால், இவ்விசயத்தில் “முற்போக்கு” யார், “பிற்போக்கு” யார், சாதியத்தை எதிர்ப்பது யார், ஆதரிப்பது யார் என்பதையெல்லாம் புரிந்து கொள்ளத்தான்! “எழுத்தாளர்கள்” என்று தங்களைத் தாங்களே பற்பல அடைமொழிகளை வைத்துக் கொண்டு தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள் “செலக்டிவ் அம்னீஸியா” இல்லாமல் எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கவேண்டும்.  திராவிடம் இத்தகைய ஆண்-பெண் சேர்ப்பு, புனைப்பு, பிள்ளைப் பிறப்பு முதலிவற்றுடன் சம்பந்தப் பட்டிருப்பதால், ஒரு திராவிட உதாரணத்தையும் கொடுக்கலாம்.

வேதபிரகாஷ்

16-01-2015

[1] http://www.thehindu.com/news/national/tamil-nadu/what-is-behind-dravidian-parties-silence-in-perumal-murugan-issue/article6787696.ece?ref=relatedNews

[2] http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/article6788072.ece?utm_source=vuukle&utm_medium=referral

[3] A Reply To The Mahatma– Excerpted from Annihilation of Caste: The Annotated Critical Edition, published by Navayana, New Delhi.B.R. AMBEDKAR

[4] http://navayana.org/product/annihilation-of-caste/#_amscckbx

[5] “……And yes, the launch was cancelled by Navayana for a number of reasons, including an SMS that was circulated that said: “Save Ambedkar writings. Oppose Navayan publication. Annihilation of Caste is our holy book. Arundhati Roy and Anand. S contaminated it. Participate in the protest on 9th March at Sundaraiah Vigynana Kendram, Hyderabad.” From Arunthati’s letter.

http://roundtableindia.co.in/index.php?option=com_content&view=article&id=7284:arundhati-roy-replies-to-dalit-camera&catid=119&Itemid=132

[6] Strangely, some Dalit radicals and intellectuals have a problem with Arundhati Roy reading, learning from and expounding about Ambedkar. On March 9, Roy was to be in Hyderabad to launch the book. But the event was cancelled because the publisher feared protests from Dalit radicals who have been upset about the book.

[7] http://scroll.in/article/658279/Why-Dalit-radicals-don’t-want-Arundhati-Roy-to-write-about-Ambedkar

[8] அப்பிரசுரத்தின் நாராயணன் என்ற இளைஞர் ஒரு பிராமணர் என்பதால், அவ்வாறு கூறப்பட்டது.

[9] In other words, Dalit intellectuals think it is their right, by virtue of their caste, to decide whether a Maoist sympathiser can write on Ambedkar; whether one can write on the Ambedkar debate with Gandhi; or whether one is allowed to write more words in criticism of Gandhi than in praise of Ambedkar.

[10] http://www.outlookindia.com/article/We-Need-AmbedkarNow-Urgently/289691

[11] http://www.outlookindia.com/article/The-Doctor-And-The-Saint/289693

[12]  http://www.newsyaps.com/ambedkar-arundhati-roy-and-the-politics-of-dalit-representation/102338/

[13] http://twocircles.net/2014mar13/dalit_intellectuals_voices_should_be_heard_arundhati_roys_ambedkar_introduction.html#.VKx3evmSynU

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

16 பதில்கள் to ““மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4)”

  1. “மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4) | Mathorubagan Says:

    […] திராவிட கட்சிகள் மவுனம் சாதிப்பது[1]. தமிழ் இலக்கியப் பணியில் இருந்து […]

  2. “மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4) | Mathorubagan Says:

    […] என்றும் கட்டுரைகள் உள்ளன[7]. அப்புத்தகம் தடை செய்யப் படவேண்டும் […]

  3. “மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4) | Mathorubagan Says:

    […] சதி என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது[8]. அருந்ததி ராய், அம்பேத்கரை விட […]

  4. “மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4) | Mathorubagan Says:

    […] என்பது குறிப்பிடத்தக்கது[2], என்று முடிக்கப்பட்டது. […]

  5. “மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4) | Mathorubagan Says:

    […] 2014ல் வெளியிடப்பட்டது[3]. அப்பதிப்பகம் தன்னுடைய […]

  6. “மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4) | Mathorubagan Says:

    […] பேட்டி[10] மற்றும் கட்டுரை[11] அவர்களால் எதிர்க்கப்பட்டன. […]

  7. மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4) | Mathorubagan Says:

    […] திராவிட கட்சிகள் மவுனம் சாதிப்பது[1]. தமிழ் இலக்கியப் பணியில் இருந்து […]

  8. மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4) | Mathorubagan Says:

    […] என்பது குறிப்பிடத்தக்கது[2], என்று முடிக்கப்பட்டது. […]

  9. மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4) | Mathorubagan Says:

    […] சதி என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது[8]. அருந்ததி ராய், அம்பேத்கரை விட […]

  10. மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4) | Mathorubagan Says:

    […] என்றெல்லாம் கேள்விகளை எழுப்பினர்[9]. அருந்தியின் பேட்டி[10] மற்றும் […]

  11. மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4) | Mathorubagan Says:

    […] 2014ல் வெளியிடப்பட்டது[3]. அப்பதிப்பகம் தன்னுடைய […]

  12. மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4) | Mathorubagan Says:

    […] விழா தலித்துகள் எதிர்ப்பார்கள்[5] என்ற அச்சத்தினால், ரத்து […]

  13. மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4) | Mathorubagan Says:

    […] சிந்திக்க வைப்பதாக இருக்கிறது[13].  இதை இங்கு ஏன் குறிப்பிடுகின்றேன் […]

  14. “மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4) | Mathorubagan Says:

    […] திராவிட கட்சிகள் மவுனம் சாதிப்பது[1]. தமிழ் இலக்கியப் பணியில் இருந்து […]

  15. “மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4) | Mathorubagan Says:

    […] என்பது குறிப்பிடத்தக்கது[2], என்று முடிக்கப்பட்டது. […]

  16. “மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4) | Mathorubagan Says:

    […] பேட்டி[10] மற்றும் கட்டுரை[11] அவர்களால் எதிர்க்கப்பட்டன. […]

பின்னூட்டமொன்றை இடுக