Posts Tagged ‘ராமசாமி’

தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவின் அரசியல் கூட்டணிகள் – மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகள் (1)

பிப்ரவரி 15, 2014

தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவின் அரசியல் கூட்டணிகள் – மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகள் (1)

 

modi vandalur5

modi vandalur5

இந்திய  ஜனநாயக  கட்சி 2010-2014: இந்திய ஜனநாயக கட்சி 28-04-2010 அன்று துவக்கப்பட்டது, மே மாதத்தில் கட்சியின் முதல் தேசிய மாநாடு 29ம் தேதி திருச்சியில் நடந்தது[1].  தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து, பாரிவேந்தர் ஆனார்[2]. தனித்தே போட்டியிடுவோம் என்றெல்லாம் பேசிவந்த பச்சமுத்து (2011) இப்பொழுது பாஜகவுடன் கூட்டு சேருவதில் வியப்புத்தான் ஏற்படுகிறது[3]. 2012ல் பச்சமுத்துவை வளைத்துப் போடவும் திமுக மற்றும் அதிமுக முயன்றன. அக்கட்சி ஒரு நிலையில் ஜனவரி 2012லேயே பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொள்வோம் என்றும் சொல்லியிருக்கிறது[4]. கட்சி ஆரம்பிக்கப் பட்டதற்கு முன்பாகவே திமுக மற்றும் அதிமுக கூட்டணி முயற்சிகள், பேரங்கள் நடந்தன. ஆனால், அவை பச்சமுத்துவுக்கு சாதகமாக அமையவில்லை.  மேலும், அவற்றை எதிர்க்கும் அளவில் பலத்தையும் பெற்றுவிட்ட அவர், தனித்துக்கூட போராடலாம் என்ற துணிவும் வந்துவிட்டது. வழக்கம் போல 2013ல் அவர் மீது வருமான வரி சோதனை[5], கல்லூரியில் சேர பணம் வாங்குதல்[6], பண மோசடி, நில அபகரிப்பு[7], பாலியல் தொந்தரவு போன்ற புகார்கள் எழுப்பப்பட்டன, நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. சிபிஐ ரெய்ட், விசாரணை கூட நடத்தப்பட்டது. ஒருவேளை காங்கிரஸும் அவர்மீது கண் வைத்ததோ என்னமோ? ஏனெனில் மத்திய அரசு ஆணையில்லாமல் சிபிஐ ரெய்ட் நடக்காது[8]. ஆக திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் முதலியவற்றிலிருந்து தப்ப ஒரே வழி பிஜேபி தான். ஆனால், அது கொஞ்சம் “ரிஸ்க்” ஆன விசயம் தான், இருப்பினும் வியாபார ரீதியில் “மோடி பிரான்ட்” பிராமாதமாக வேலை செய்து வருவதால், பச்சமுத்து சரியாகவே தீர்மானித்து கூட்டு சேர்ந்துள்ளார்.

 

rajnath-pachamuthu-தில்லியில் சந்திப்பு ஆகஸ்ட் 2013

rajnath-pachamuthu-தில்லியில் சந்திப்பு ஆகஸ்ட் 2013

மோடி  சின்னத்தைப் பயன்படுத் தவிரும்பிய  பச்சமுத்து: கல்வியும் அரசியலும் வியாபாரமாகி விட்ட பிறகு, அவற்றில் கூட்டு சேருவது, அதற்காக பணம் செலவழிப்பது முதலியவை எல்லாம் சகஜமானவை தாம். ஆகஸ்ட் 2014ல் பச்சமுத்து தமிழிசை சௌந்தர் ராஜனுடன் தில்லிக்குச் சென்று ராஜநாத் சிங்குடன் பேசியுள்ளனர். முன்னர் குஜராத்திற்குச் சென்று மோடியையும் சந்தித்துள்ளார். இவ்வாறாக பிஜேபி-ஐஜேகே கூட்டு உருவாகியுள்ளது. ஆக, ‘‘வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் தொகுதிகளை பா.ஜனதாவிடம் கேட்டுள்ளோம்’’ என்று இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் தெரிவித்தார் என்றால் அது வதந்தியாகாது. அதாவது ஒன்று பச்சமுத்துவிற்கு, மற்றது அக்கட்சி மகளிரணி அமைப்பாராக உள்ள லீமாரோஸ் மார்ட்டின்[9] என்பவருக்கு. இவர் லாட்டரி கிங் சான்டியாகோ மான்ட்டினின் [lottery kingpin Santiago Martin] மனைவி, பல மோசடிகளில் சிக்கியுள்ளவர்[10].  இங்குதான் பிரச்சினை வருகிறது. ஊழலை எதிர்க்கும் கட்சி என்றால், ஐஜேகேவுடன் பிஜேபி கூட்டு வைக்கக் கூடாது. முன்பு திமுகவுடன் கூட்டு வைத்ததால், இவையெல்லாம் மறக்க/மறைக்கப்படும். ஒருவேளை ஆம் ஆத்மி கட்சியினர் வேண்டுமானால் கலாட்டா செய்யலாம், ஆனால், தமிழகத்தில் அவர்களின் அகையே நாறிவிட்டது.

 

Leema-Rose கைது

Leema-Rose கைது

திராவிடக்  கட்சிகளுடன்  மோதிய  லீமாரோஸ் (2012-2013): பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் திடீரென அரசியலில் புகுந்துள்ளார்[11]. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அதிபர் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சியில் அவர் இணைந்துள்ளார். கடந்த திமுக ஆட்சியில் ஆட்சிக்கு மிக நெருக்கமாக இருந்தார் மார்ட்டின். படத் தயாரிப்பிலும் அவர் ஈடுபட்டார். அதன் பின்னர் ஆட்சி மாறி அதிமுக பதவிக்கு வந்ததும் (2012) மார்ட்டின்  மீது பல்வேறு வழக்குகள் சரமாரியாக பாய்ந்தன. அடுத்தடுத்து ஒவ்வொரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். குண்டர் தடுப்புச் சட்டமும் அவர் மீது பாய்ந்தது. கோர்ட்டுக்கும், சிறைக்கும் அலைக்கழிக்கப்பட்டார். இந்த நிலையில், மார்ட்டினை விடுவிக்க தன்னிடம் அதிமுகவினரும் போலீசாரும் கோடிக்கணக்கில் பேரம் பேசுவதாகவும், இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டுள்ளதாகவும் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் புகார் கிளப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்[12]. மார்ட்டினை விடுவிக்க வேண்டுமானால் பணம் தர வேண்டும் என்று மிரட்டி ஆளும் கட்சியின் பெயரைச் சொல்லியும் போலீஸ் உயர் அதிகாரிகள் பெயரைச் சொல்லியும் பலரும் தன்னிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பறித்து வருவதாக மார்ட்டினின் மனைவி லீமா புகார் கூறியிருந்தார். மேலும், திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வியின் முன்னாள் உதவியாளர் தங்களிடம் ரூ. 2 கோடி கேட்டு மிரட்டுவதாகவும் லீமா ரோஸ் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக போலீசிலும் புகார் தந்துள்ளார், அது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் திடீரென பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சியில் போய்ச் சேர்ந்துள்ளார் லீமா ரோஸ். அரசியல் ரீதியான பாதுகாப்பு கருதி அவர் பாரிவேந்தரிடம் போய்ச் சேர்ந்துள்ளதாக பேசப்படுகிறது. ஆனால் இந்திய ஜனநாயகக் கட்சி அவருக்கு எந்த வகையில் பாதுகாப்பாக இருக்கும் என்பது தெரியவில்லை[13], இப்படி ஒரு தமிழ் இணையம் முடித்திருந்தது.  ஆனால், இப்பொழுது லீமா ரோஸுக்கு சீட்டே கேட்டாகி விட்டாயிற்று! மற்ற கட்சிகள் கொடுப்பார்களா என்று தெரியவில்லை.

 

பீஜேபி அரசியல் கூட்டு வியப்பானது

பீஜேபி அரசியல் கூட்டு வியப்பானது

சான்டியா  கோமார்ட்டின்திராவிட  கட்சிகளின்  சண்டைகள்: சான்டியாகோ மார்ட்டின் திமுக மற்றும் அதிமுக கட்சிகளுடன் சமரசமாகவே இருந்து வந்தார். ஆனால், இந்த கட்சிகளின் சுழற்சி ஆட்சி மற்றும் மற்ற மாநிலங்களில் உள்ள பரிமாற்றங்கள் பிரச்சினைகளை ஏற்படுத்தின. சான்டியாகோ மான்ட்டினின் மனைவி மற்றும் ஐஜேகே கட்சி மகளிரணி அமைப்பாராக உள்ள லீமா ரோஸ், 2012ல் கருணநிதியின் மகள் செல்வி ஆளை வைத்து தன்னை மிரட்டி வருகிறார் என்று மகன் சார்லஸ் மார்ட்டின் மற்றும் மகள் டெய்ஸி மார்ட்டின் சகிதம் வந்து கோயம்புத்தூர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்[14]. நிலமோசடி, கள்ள ஆவணம் தயாரித்தல் முதலிய சட்டமீறல்களில்[15] மார்ச் 22ம் தேதி 2013 அன்று கைதாகி[16], ஒரு மாத காலம் சிறையில் இருந்து பெயிலில் வெளியே வந்தவர்[17]. மார்ட்டினைப் பற்றி கேட்கவே வேண்டாம். “இளைஞன்” என்ற படத்தை ரூ.50 கோடி செலவழித்து எடுத்தாராம் (பிப்ரவரி 2011), அந்த படத்திற்கு “ஸ்கிரிப்ட்” எழுதியதற்காக கருணாநிதிக்கு ரூ.45 லட்சம் கொடுத்தாராம்[18]. திருட்டு லாட்டரி மூலம் கோடிகளை சம்பதிக்கும் இவருக்கு கருணாநிதி உதவியும் செய்துள்ளார்[19], அதாவது பி.எஸ்.ராமன் என்ற மூத்த வழக்கறிஞர் மார்ட்டினுக்காக வாதாடியிருக்கிறார்ரானால், கேரள அரசு கருணாநிதிக்கு கடிதம் எழுதி அவரை திரும்பப் பெறச் செய்தது. மார்ட்டினின் லைசென்ஸையும் கேன்சல் செய்தது. இவையெல்லாம் இப்படியிருந்தாலும் திமுக மற்றும் அதிமுக அரசியல்வாதிகளுடன் மறைமுக ஆதரவு முதலியவை இருந்து வருகின்றன. இத்தகைய கூட்டுகள் நடுநிலை வகிக்கும் பார்வையாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களுக்கு வியப்பாக இருக்கிறது.

 

வேதபிரகாஷ்

© 15-02-2014


[13] தமிள் ஒன் இந்தியா,இந்தியஜனநாயகக்கட்சியில்அடைக்கலம்புகுந்தலாட்டரிமார்ட்டின்மனைவிலீமாரோஸ், Posted by: Vadivel, Published: Tuesday, March 12, 2013, 14:25 [IST]

[16] Leema Rose, wife of lottery kingpin Santiago Martin, has been arrested from Coimbatore airport in connection with a case relating to the seizure of 7 crore from an accomplice of her husband in 2012, which was believed to be from the sale of illegal lotteries in the state. She is being brought to Chennai by a Central Crime Branch (CCB). Police said Leema Rose had then created fake documents and submitted them in the Madras high court to prove the cash was obtained out of a land deal. While scrutinising the documents, court found them to be fabricated. Police booked Santiago Martin, businessman Nagarajan and Murthy after they seized 7 crore from Nagarajan’s house in Thillai Ganga Nagar in Chennai on March 13, 2012. After the documents were found to be fabricated, CCB police registered a case under IPC section 468 (forgery for purpose of cheating), 471 (using as genuine a forged document) and was on the lookout for Rose.

http://articles.timesofindia.indiatimes.com/2013-03-23/chennai/37959985_1_santiago-martin-fake-documents-sale-of-illegal-lotteries

[17] The Madras High Court has granted conditional bail to Leema Rose, wife of lottery baron S. Martin, who was arrested in a case for alleged offences including cheating, conspiracy and forgery. Justice R. Subbiah granted the relief on a petition by Mrs.Rose. The prosecution case was that during a search of the house of M.Nagarajan at Nanganallur here, Rs.7.20 crore was recovered along with records relating to transport of lottery tickets to West Bengal, Bhutan and Sikkim. A search of the house of G. Moorthy at Annanagar yielded Rs.50 lakh. The cash was seized. Interrogation revealed that Nagarajan sold lottery tickets of other States in Tamil Nadu. Nearly 3,625 lottery tickets were seized. The allegation was that the petitioner colluded with the other two accused and fabricated documents to obtain bail for her husband, who was an accused. She made arrangements along with other accused to convert the ill-gotten money into white money and tried to cheat the government. Counsel said the petitioner had been falsely implicated in the case. Mr.Justice Subbiah said the petitioner had been in jail for more than a month. There was no need for her custodial interrogation. He ordered that she be released on bail on executing a bond for Rs.10,000 with two sureties for a like sum. She should appear before the City Central Crime Branch daily for four weeks and thereafter as and when required.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/conditional-bail-for-leema-rose/article4675218.ece

[18] M. Karunanidhi’s 75th film as scriptwriter,Ilaignan, got him Rs.45 lakh – the highest-ever fee he had taken. All thanks to Santiago Martin, or “lottery king” as he is better known, who revived the movie, which was lying in limbo for over three years. Martin’s venture S. Martin Productions spent around Rs.50 crore on the movie.

http://indiatoday.intoday.in/story/santiago-martin-is-indias-illegal-lottery-king/1/129601.html

[19] Another controversy broke out when Tamil Nadu’s advocate general P.S. Raman appeared for Martin in a case in Kerala. The Tamil Nadu Government clarified that Raman appeared in his capacity as a senior counsel. But after the Kerala Government sent a letter to Karunanidhi, he asked Raman to step down. “In Kerala alone, lottery sale is fetching him Rs.6 crore every day,” says Balaji. Martin’s business interests in Coimbatore include a textile showroom in his wife Leema’s name, a nursing college, and recently floated property firm Martin Promoters. If sources are to be believed, he has floated more than 300 companies in the last 10 years.

http://indiatoday.intoday.in/story/santiago-martin-is-indias-illegal-lottery-king/1/129601.html