Posts Tagged ‘சிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு’

கசாப்பைத் தூக்கில் போடவேண்டுமென்றால் இந்துக்களும் தண்டிக்கப் படவேண்டும்!

மே 3, 2010

கசாப்பைத் தூக்கில் போடவேண்டுமென்றால் இந்துக்களும் தண்டிக்கப் படவேண்டும்

வளர்ந்ந்து வந்த குரூர – முகமதிய-தாலிபான் -இஸ்லாமிய – அல்-உம்மா-ஜிஹாதி தீவிரவாதம், பயங்கரவாதம், கொலைவாதம் முதலியவற்றைச்சட்டப்படி தண்டிக்க வேண்டுமானாலும், நீதித்துறை தனது “செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம்” என்பதனை நிரூபித்துவிட்டுதான் செய்யவேண்டும் என்று யாரோ கட்டளையிட்டது போல நீதித்துறை, சிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு, போலீஸார், என எல்லோரும் வேலை செய்வது தெரிகின்றது. ஊடகங்களும் அதற்கேற்றாற்போல செய்திகள் அள்ளிக் கொடுக்கின்றன.

கசாப்பைத் தூக்கில் போடவேண்டுமென்றால் இந்துக்களும் தண்டிக்கப் படவேண்டும்: நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய மும்பை பயங்கரவாத தாக்குதலில் 166 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்தனர். பாகிஸ்தானிலிருந்து கடல் வழியாக வந்த கசாப், அவனது கூட்டாளி அபு இஸ்மாயில் மற்றும் மேலும் எட்டு தீவிரவாதிகள் மும்பையின் தாஜ் ஓட்டல், நாரிமன் இல்லம், ஓபராய் ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தினர். ரத்தத்தில் மிதந்த மும்பை, மீண்டுவர பல நாட்கள் ஆகின. உயிகளை இழந்த தாய்கள், தந்தையர், முதலியோர் அந்த கொடூரனைத் தூக்கில் போடவேண்டும் என்று கேட்டுள்ளனர். இதில் மாற்றுக் கருத்துக் கூடாது என்று உறுதியாக உள்ளனர்.

இதனிடையே அக்கொடூர சம்பவத்தை நினைவுகூர்ந்த ஜமுனாவகேலா என்ற 50 வயது பெண்மணி, ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்த பிறகு தன்னுடைய 32 வயது மகனை தீவிரவாதி அஜ்மல் கசாப் சுட்டுக் கொன்றதை குறிப்பிட்டு அவனை இனியும் தாமதமின்றி தூக்கில் போட வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், கசாப்புக்கு எவ்வித கருணையும் காட்டப்படக்கூடாது என்று தெரிவித்தார். மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதி அஜ்மல் கசாப் என்பது குறிப்பிடத்தக்கது.

திடீரென்று ஜார்கண்ட் பிரச்சினை: கசாப்பைத் தூக்கில் போடவேண்டுமென்றால் இந்துக்களும் தண்டிக்கப் படவேண்டும் என்ற சித்தாந்தம் இங்கு வைக்கப் படுகிறது. ஜார்கண்டில் ஏற்கெனவே காங்கிரஸ், பிஜேபிஐ ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கிறது. கருணாநிதி போல அங்கு பல கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ள சிபு சோரன் காங்கிரஸ் சொல்லியபடி அல்லது காங்கிரஸை மிரட்டி அதிகாரம் செல்லுத்தி வருகிறார். ஆகவே, அம்மாநிலத்தையும் தொடர்பு படுத்தி கைதுகள் நடக்கின்றன. ஆஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இந்து அமைப்பை சேர்ந்த தேவேந்திர குப்தா (36) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்[1]. ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரில் உள்ள தர்காவில், கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் பலியாயினர்; 30 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய தேவேந்திர குப்தா(36) என்பவரை போலீசார் தேடி வந்தனர். ‘அபிநவ பாரத் சங்கதன்’ என்ற அமைப்போடு குப்தா தொடர்புடையவர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலைமறைவாக இருந்த தேவேந்திர குப்தா, தனது தாயை பார்ப்பதற்காக ஆஜ்மீர் வந்த போது நேற்று முன்தினம் போலீசாரிடம் பிடிபட்டார். மாலேகான் குண்டு வெடிப்பில் கைதாகியுள்ள பெண்சாமியார் பிரக்யா தாக்குருக்கும், குப்தாவுக்கும் தொடர்பு உண்டு என, போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆஜ்மீர் செக்ஸ், பங்களூர் செக்ஸ் என்று ஊடகங்கள் ஆரம்பித்து விட்டன: திடீரென்று முஸ்லீம் பாபாக்களின் செக்ஸ் விவகாரங்கள் அங்கும் இங்குமாக காலந்தாழ்த்தி வெளிவருகின்றன. இதன் மர்மம், நேரம் முதலியவை ஆச்சரியமாக உள்ளது. ஆனால், அந்நேரத்தில் ஏன், ஆஜ்மீர் பாபா செய்யும் காமலீலைகள் கண்டுக்கொள்ள மாட்டோம், ஆதாரங்களைத் தேடி மாட்டியே விடுவோம் என்ற ரீதியில் ஆஜ்மீர் குண்டு வெடிப்பிற்காக ஆட்களைப் பிடிப்போம் என்று வேகமாக வேலை செய்கின்றனர்? பங்காரப்பா தன்னுடைய மைத்துனர், சபலமுள்ளவர் என்று திடீரென்று போட்டுத்தரவேண்டும்? நவம்பர் 2009லேயே புகார் கொடுக்காமல், இப்பொழுது ஏன் புகார் கொடுக்கவேண்டும்?


[1] http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18232