IUML – DMK கூட்டணி, ஏழு முஸ்லிம்கள் எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது, இரண்டு முஸ்லிம்கள் அமைச்சர்கள் ஆனது! அண்ணாவின், “இனம் இனத்தோடு சேரும்,” சித்தாந்தம், ஸ்டாலின் டுவிட்டரில் வெளிப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தோற்றதும், ஜவஹிருல்லா வென்றதும்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் போட்டியிட்ட மூன்று இடங்களிலும் – கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் தோல்வியடைந்தது. உதயசூரியன் சின்னத்தில் நிற்காமல், தங்களது சின்னத்தினால் நின்றதால் தோல்வியடைந்தனர். ஆனால், ஜவஹிருல்லா உதயசூரியன் சின்னத்தில் நின்று ஜெயித்தது கவனிக்க வேண்டும். சிலர் ஜவஹிருல்லாவை விமர்சித்தாலும், வெற்றி பெற்றது நிதர்சனம் ஆகிறது. மேலும், சபாநாயகராக நியமிக்கப் படுவார் என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதாவது, அப்படி செய்யப் பட்டால், இவர் மீதான வழக்குகள், அரசியல் ரீதியில் நீர்க்கப் பட்டு விடும்.
SDPI, AIMIM, அம்மா.முக கூட்டு யாரை தோற்கடிக்க வைத்தது?: டிடிகே.தினகரனுடன் கூட்டு வைத்துக் கொண்ட அஸாசுதீன் ஒவைஸி – AIMIM கட்சியினரும் தோல்வியடைந்தனர் –
- டி.எஸ். வகீல் அஹ்மது, வாணியம்பாடி (T.S. Vakeel Ahmed contested in Vaniyambadi),
- அமீனுல்லா, கிருஷ்ணகிரி (Ameenualla in Krishnagiri),
- முஜிபூர் ரஹ்மான், சங்கராபுரம் (Mujibur Ragiman in Sankarapuram)
அஸாசுதீன் ஒவைஸளாம்பூருக்கு வந்து, உருதுவில் பேசி, பிரச்சாரம் செய்தும், அங்குள்ள முஸ்லிம்கள் இவர்களுக்கு எதிராக ஓட்டளித்துள்ளனர். ஆக, இங்கெல்லாம் முஸ்லிம்கள் தோல்வியடையவில்லை, வெல்லும் குதிரைகளுக்கு ஓட்டளித்துள்ளனர் அல்லது ஏற்கெனவே திட்டமிட்டு, திமுக கூட்டணி வெல்லாமல் இருக்க இவ்வாறு செயல்பட்டனர் என்றாகிறது..
தோல்வியடைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொஹிதீன் ஸ்டாலினை பாராட்டியது: தலைவர் காதர் மொஹிதீன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர், சாதுர்யமாக, சாமர்த்தியமாக ஸ்டாலினைப் போற்றி, 07-05-2021 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த உண்மையினை எடுத்துக் காட்டியுள்ளார். முதன் முதலில், காமராஜர் தான், ஒரு முஸ்லிமுக்கு அமைச்சர் பதவி கொடுத்தார். பிறகு, அந்த வழக்கம் பின்பற்றப் பட்டது. அண்ணா-கருணாநிதி வழி வந்த ஸ்டாலினும், இரு முஸ்ம்களை மந்தியாக்கியுள்ளார்[1]. தந்தையின் வழியில் தப்பாமல் செல்லும் தனயன் என்னும் பேர் பெற்றுள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கலும் தனது தந்தையின் வழிநின்றுளைரனு முஸ்லிம்களுக்கு தனது அமைச்சரவையில் இடமளித்துள்ளது என்று கூறியுள்ளார். இதனால், அவரும், சம்பிரதாயத்தை மறக்காமல் பின்பற்றியுள்ளார்[2]. சரியான தேர்ந்தெடுக்கப் பட்ட தலைவராக, ஸ்டாலின் விளங்குகிறார் என்றெல்லாம் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.
ஆவடி சா.மு.நாசர் [S M Nasar – Minister for Milk & Dairy]: அமைச்சரை வீழ்த்திய வேட்பாளருக்கு கட்சி தலைமை அமைச்சர் பதவி கொடுத்து கவுரவிக்கும் என்கிற பொதுவான செண்டிமெண்ட் ஒன்று இருக்கிறது[3]. தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளில் ஆவடி தொகுதிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் வசிக்கும் தொகுதியாக ஆவடி இருக்கிறது. ராணுவத்திற்கு பீரங்கி தயாரிக்கும் தொழிற்சாலையும், ராணுவ வீரர்களுக்கான ஆடை தயாரிப்பு மற்றும் ராணுவ தளவாடங்கள் ஆராய்ச்சி மையம் இங்கு அமைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு சிறப்பு காவல் படையும், விமானப்படை, மத்திய ரிசர்வ் காவல் படை ஆகியவற்றின் பயிற்சி மையங்களும் அமையப்பற்றது ஆவடி[4]. பால்வளத்துறை அமைச்சராகும் சா.மு. நாசர் (61) ஆவடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ள சா.மு.நாசருக்கு பாத்திமா கனி என்ற மனைவியும், ஆசிம் ராஜா என்ற மகனும் உள்ளனர். ஆவடி சட்டமன்ற தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக போட்டியிட்டுள்ளார். 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தற்போது நடந்து முடிந்த தேர்தலில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனை வீழ்த்தி அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
செஞ்சி கே.எஸ். மஸ்தான் [Gingee K S Masthan – Minister for Minorities Welfare and Non Resident Tamils Welfare – Minorities Welfare, Non Resident Tamils Welfare, Refugees & Evacuees and Wakf Board]: சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராகவுள்ள செஞ்சி கே.எஸ்.மஸ்தான் (66) விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ளார். இவருக்கு சைத்தானி பீ மஸ்தான் என்கிற மனைவியும் கே.எஸ்.எம்.மொக்தியார் மஸ்தான் என்கிற மகனும், மைமுன்னிசா, ஜெய் முன்னிசா, தை முன்னிசா என்கிற மகளும் உள்ளனர். செஞ்சி தேசூர் பாட்டையில் வசித்து வருகிறார். தொடர்ந்து திமுக விசுவாசியாக, பல பொறுப்புகளில் இருந்து வேலை செய்துள்ளார்.
பெரும்பாலான முஸ்லிம், கிருத்துவத் தலைவர்கள், நிறுவனங்கள் வாழ்த்து சொல்லியிருப்பது: இது ஒரு சாதாரணமான, வழக்கமாக, ஏதோ மரியாதை நிமித்தம் செய்யப் பட்டது இல்லை.
- ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி,
- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், ஊவா மாகாண முன்னாள் முதல்-மந்திரியுமான செந்தில் தொண்டமான்,
- சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்,
- மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா,
- தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன்,
- தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் தலைவர் பொன்குமார்,
- அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஆ.மணி அரசன்,
- இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப்,
- சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன்,
- காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர் பால் தினகரன்,
- தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம்-கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம்,
- தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் கொளத்தூர் ரவி, தென்னிந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை தலைவர் அறம் அருண்,
- இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் சி.கே.ரங்கநாதன்,
- தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம்,
- அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்,
- ஜம்மியத் உலமா ஹிந்த் மாநில செயலாளர் எம்.ஜி.கே.நிஜாமுதீன் ஆகியோரும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம்கள் தோல்வியடைந்து, வென்றுள்ளது திட்டமே: முஸ்லிம் கட்சிகள் பிரிந்து கிடப்பது காட்சியளித்தாலும், ஓட்டளிப்பதில், அவர்கள் கட்டுண்டுள்ளனர்.
- ஒவைசியை, மஸ்தான் இதயங்களை இணைப்போம் மாநாட்டிற்கு அழைத்து, ஜகா வாங்கியது, முக்கியமான நிகழ்வு. அந்த மஸ்தான் இப்பொழுது மந்திரியாகியுள்ளார்.
- குறைந்த வாக்குகளைப் பெற்ற நாம் தமிழா் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக, ஐஜேகே, ஓவைசி உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், சுயேச்சைகளாகவும் போட்டியிட்டவர்கள் பல இடங்களில் தங்களது வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.
- ஆகவே, வெல்ல மாட்டோம் என்று தெரிந்தும், இவை கூட்டணி அமைத்து, தேர்தலில் களம் கண்டன. இதனால், திமுக எதிர்ப்பு மற்றும் அதிமுக ஆதரவு ஓட்டுகள் சிதறின.
- பல இடங்களில் அமமுக மற்றும் அதிமுக ஓட்டுகளை சேர்த்தால், திமுக் ஓட்டுகளை விட அத்கமாக வருகிறது.
- இதே போலத்தான் மக்கள் நீதி மய்யம், பிஜேபி ஆதரவு ஓட்டுகளை உடைத்துள்ளது.
- அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம், திமுகவின் பி-டீமாக வேலை செய்து வெற்றி பெற செய்துள்ளது.
- ஐஜேகே / பச்சமுத்து, தனது வியாபாரத்தை காத்துக் கொள்ள திமுகவுக்கு ஆதரவு கொடுத்தது. வேலூர் இஞ்னியைங் குழுமம் விஸ்வநாதனும் அவ்வாறே செய்துள்ளார். முன்னர் இவர்கள் பிஜேபியுடன் இருந்தனர். இதற்கு பிரஷாந்த கிஷோர் ஆலோசனை கொடுத்தாரா என்று தெரியவில்லை.
- ஐஜேகே அட்மிஷன் வியாபாரத்திற்கு உதவுவதால் தொடர்ந்து இருக்கும். ஆனால், மக்கள் நீதி மய்யம் மறைந்து விடும்.
- தோல்வியுற்ற காதர் மொஹிதீன் அபாரமாக புகழ்ந்தது, ஆற்காடு நவாப் செக்யூலரிஸமாக வாழ்த்து தெரிவித்தது எல்லாமே, இதில் சேரும்.
- திராவிடத்துவம் அதனால், அண்ணாவின், “இனம் இனத்தோடு சேரும்,” சித்தாந்தத்தில், போலித்தனமாக, ஸ்டாலின் டுவிட்டரில் வெளிப்பட்டுள்ளது.
© வேதபிரகாஷ்
08-05-2021
[1] Times of India, IUML president lauds Stalin for inducting two Muslims into his cabinet, R Gokul / TNN / May 7, 2021, 18:11 IST.
[2] https://timesofindia.indiatimes.com/city/chennai/iuml-national-president-lauds-stalin-for-inducting-two-ministers-from-muslim-community/articleshow/82457244.cms
[3] டாப்.தமிள்.நியூஸ், சா.மு. நாசருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது எப்படி?, By, kathiravan, 06/05/2021 5:53:56 PM
[4] https://www.toptamilnews.com/255540how-did-nasser-become-a-minister/