Posts Tagged ‘எல்லீசன்’

திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடிய தமிழக ஆளுனர் – திராவிடத்துவ மற்றும் இந்துத்துவவாதிகள் எதிர்த்த மற்றும் ஆதரித்த நிலைகள் (1)

மே 26, 2024

திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடிய தமிழக ஆளுனர்திராவிடத்துவ மற்றும் இந்துத்துவவாதிகள் எதிர்த்த மற்றும் ஆதரித்த நிலைகள் (1)

திருவள்ளுவர் திருநாளை கொண்டாடிய தமிழக ஆளுனர்: திருவள்ளுவர் திருநாளை கொண்டாடுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு குறிப்பிட்டவர்களே அழைக்கப் பட்டதாகத் தெரிகிறது. யார் அழைக்கப் படக் கூடாது- வரக்கூடாது என்று தீர்மானிக்கப் பட்டது தெரிகிறது. அரசியல் அப்படித்தான் வேலை செய்யும், அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவர், வைகாசி அனுஷம் தினத்தில் பிறந்ததாக கருதப்படுகிறது. அந்நாள் அனுஷ்டிக்க படும் நிலையில், அவரின் திருநாளை கொண்டாடுவதாக ஆளுநர் மாளிகை தரப்பு தெரிவித்தது. திருவள்ளுவர் திருநாட்கழகம் எல்லீசர் அறக்கட்டளை போன்றவை ஏன் அத்தகைய உற்சாகத்தை, வேகத்தை 20024ல் காட்டவில்லை என்று அவற்றின் முக்கியஸ்தர்களைத் தான் கேட்டறிய வேண்டும். கவர்னர் மாளிகை செய்தி வெளியீடு எண்.25 தேதி 24-05-2024 இதை விளக்குகிறது. கவர்னரே இந்த நிகழ்ச்சியை நடத்தியதால், தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை வைத்துக் கொண்டு, நிகழ்ச்சி நடத்தப் பட்டுள்ளது.

திட்டத்துடன் நடத்தப் பட்ட நிகழ்ச்சி: கவர்னர் செய்தி வெளியீடு மூலம் குறிப்பிடப்பட்டுள்ள, அழைக்கப்பட்ட விருந்தாளிகளின் பெயர்களைக் கவனிக்கும் பொழுது அவற்றில் பெரும்பாலோர் அறியப்படாதவர்களாகவே இருக்கின்றனர். முன்னர் இத்தகைய விவகாரங்களில் சமந்தப் பட்டுள்ளதாகவும் தெரியவில்லை. குறிப்பிட்ட நபர்கள் திருவள்ளுவர் திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை போன்ற முன்னால் குறிப்பிட்ட சர்ச்சைக்குள்ள அமைப்புகள் என்று தெரிகிறது. எனவே, குறிப்பிட்ட இந்துத்துவாதிகள் சேர்ந்து உட்கார்ந்து தீர்மானமாக முடிவு செய்த நிகழ்ச்சி தான் இது என்பது நன்றாக தெரிகிறது. அதனால் தான் முன்னமே குறிப்பிட்டபடி, நிகழ்ச்சியில் யார் பங்கு கொள்ள வேண்டும் என்பதை விட, யார் பஙகு கொள்ளக்கூடாது, அழைக்கப்படக்கூடாது, ஏன் அவர்களுக்கு தெரியவும் கூடாது என்ற திட்டத்தில் இருந்து செயல்பட்டு இருக்கிறார்கள். இப்போக்கு, முந்தைய திருவள்ளுவர் சிலை மற்றும் அருண் விஜய் விவகாரங்களிலும் நன்றாகவே கவனிக்கலாம்.

விழாவில் இந்த நிலையில், மின்னணு திருப்பு புத்தகத்தை வெளியிட்டது: விழாவில் டி.கே. ஹரி மற்றும் டி.கே. ஹேமா ஹரி ஆகியோர் எழுதிய “திருவள்ளுவர் – தமிழ்நாட்டின் புரவலர் துறவி” என்ற மின்னணு திருப்பு புத்தகத்தை கவர்னர் ஆர்.என் ரவி வெளியிட்டார்.  அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், நான் இங்கு கவர்னராக வீற்றிருப்பதைவிட திருவள்ளுவரின் சீடனாக, மாணவனாக அமர்ந்திருப்பதிலேயே பேருவகை கொள்கிறேன். எனது பள்ளி பருவத்தில் திருவள்ளுவர் பற்றி முதன்முதலில் அறிந்தேன். 1964-ம் ஆண்டு ஒரு சரஸ்வதி பூஜை அன்று பள்ளி நூலகத்தில் இந்தி புத்தகம் ஒன்றில்,பாரதத்தின் தென்கோடியில் ஒரு மகான் இருந்தார். அவர் திருவள்ளுவர் என்று அதில் போடப்பட்டு அவர் எழுதிய குறளும் பதிவு செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாட்டின் கவர்னராக பணியாற்றுவதால், திருக்குறளை ஆழமாக படிக்க வாய்ப்பு கிடைத்தது[1]. திருக்குறளில் மகத்தான, ஆழமான விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன[2].

ஆராய்ச்சியில் இந்துத்துவவாதிகளும், திராவிடத்துவவாதிகளும்: அவ்விசயத்தில் கருணாநிதி அரசியல் செய்தலால், மற்ற குழுக்களும் இதில் இறங்கின. திருவள்ளுவர் திருநாட்கழகம் எல்லீசர் அறக்கட்டளை என்றெல்லாம் திடீரென்று உருவாக்கி கலாட்டா செய்தனர். ஆனால், தமது போலித்தனத்தைத் தான் வெளிப்படுத்திக் கொண்டனர். “சேம் சைடில் கோல் போடும் வேலையை” செய்தது, பலர் கண்டுகொண்டனர். ஆனால், பொதுவாக, “இந்துத்துவவாதிகள்” என்று கூறிக்கொள்பவர், இவ்விசயத்தில் திடீரென்று தோன்றி, தமது அரசியல், ஆதிக்கம், பலம் முதலிய காரணிகளால், தமது சக்தியைக் காண்பித்து, பிறகு மறைந்து விடுவர். இதுதான் கடந்த பத்தாண்டுகளாக நடந்து கொண்டிருக்கின்றன. அரசியல், ஆதிக்கம், பலம் முதலியவை இல்லையென்றால் இருக்கும் இடம் கூட தெரியாமல் இருப்பர். இப்பொழுது, கவர்னர் இல்லாமல், இவர்களால், இவ்வேலைகளை செய்ய முடியாது எனும் பொழுது, ஆராய்ச்சி எனும் பொழுது, முறையாக செய்திருக்க வேண்டும். இப்பொழுதும் இந்துவிரோதிகள் ஒன்றாக சேர்ந்து எதிர்க்கிறார்கள். ஆனால், இந்த்த்துவவாதிகள் இந்துக்களையே ஒதுக்குகிறார்கள்.

மூலங்களை ஏற்று தெரிவிக்க தைரியம் இல்லாத போலி இந்துத்துவ ஆராய்ச்சியாளர்கள்: பூணூல் விசயத்தில் ஆய்வுக்கருத்து என்றும் செய்தி வெளியிடப் பட்டுள்ளது[3]. இதில் எல்லோருமே அரைவேக்காட்டுத் தனமாக விளக்கம் கொடுத்திருப்பது தெரிகிறது[4]. திடீரென்று முளைத்துள்ள இந்த ஆராய்ச்சியாளர்கள் முறையோடு, ஆராய்ச்சி செய்வதாகத் தெரியவில்லை. பத்து புத்தகங்களைப் படித்து, ஒரு கருத்தை உருவாக்கி, அதுதான் தீர்மானிக்கப் பட்ட முடிவு என்று பிடிவாதம் பிடிக்கும் போக்குத் தான் தெரிகிறது. இவர்கள் தங்களைத் தாங்களே ஆராய்ச்சியாளர், முனைவர், சரித்திராசிரியர் …என்றெல்லாம் பிரகடனப் படுத்திக் கொள்வதையும் கவனிக்கலாம். ஏற்கெனவே, பி.எஸ். சுப்ரமணி சாஸ்திரி, ராகவ ஐயங்கார் போன்றோர்களின் ஆராய்ச்சிகளை மறைத்து, இப்பொழுதுள்ளவர்கள் ஏதோ தாங்களே கண்டுபிடித்தது போலக் காட்டிக் கொள்வதால், ஒரு நிலையில் உரிய விளக்கத்தை அவர்களால் கொடுக்கமுடியாமல் முழிப்பது தெரிகிறது.

தமிழக ஊடகங்களும் நடுநிலையற்ற தன்மையில் தான் உழலுகின்றன: திருவள்ளுவர் திருநாள் விழா என்ற பெயரில் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் திருவள்ளுவர் காவி உடையுடன் இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது[5]. அதாவது, ஊடகங்கள் அவ்வாறு செய்ய தீர்மானத்துடன் இருக்கின்றன. அதன்படியே, அபாரமாக செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆளுநர் மாளிகை வட்டாரத்தில் திருவள்ளுவருக்கு தொடரும் காவி உடையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது[6]. இதற்கு பல்வேறு அமைப்புகளும், பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்[7]. பொதுவாக இவர்கள் எல்லோருமே திக, திமுக, மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் தான் என்பதை கவனிக்கலாம். ஆளுநரின் செயலர் பெயரில் அந்த விழாவும் அழைப்பும் அமைந்திருக்கிறது[8].

கவர்னரை எதிர்க்கும் திட்டம் தொடர்கிறது: கேரளா, மேற்கு வங்காளம் போன்று, எப்பொழுதும் கவர்னருடன் தகராறு செய்வது என்று ஆளும் திமுக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதனால், அத்தகைய பிரச்சாரத்தை இவ்விசயத்திலும் ஊடகங்கள் மேற்கொள்வதை கவனிக்கலாம். ஒவ்வொரு முறையும், ஆளுனர் செயல்பாட்டை வைத்து, இந்த இந்துவிரோதிகள் இவ்வாறு சரித்திர ஆதாரம் இல்லாத ஆரிய-திராவிட இனவாதம், பார்ப்பன காழ்ப்பு-துவேசம், என்றெல்லாம் தாராளமாக பேசி விவரித்து, இந்துக்களைத் தாக்குகின்றன என்பதனை கவனிக்கலாம். இதோ அவை சொல்வது [வீரமணி அறிக்கை] –   ஆர்.என். இரவி, தான் ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட கடந்த 2021 தொடங்கி திருவள்ளுவரை எப்படியாவது ஆரியக் காவிக்குள் அடக்கி விட வேண்டும் என்பதற்காக எண்ணற்ற புளுவுகளையும் புனைவுகளையும் தொடர்ந்து பேசி வருவதைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமின்றி உலகமெங்கும் பரவி இருக்கிற தமிழர்களும் அறிவார்கள்[9].

© வேதபிரகாஷ்

26-05-2024


[1] ஐபிசி.தமிழ்நாடு, வள்ளுவரின் சிஷ்யன் நான்; திருக்குறள் மொழிபெயர்ப்பு ஒரு தலைபட்சமானதுஆர்.என்.ரவி!, ஸ்வேதா, 25-05-2024.

[2] https://ibctamilnadu.com/article/governor-rn-ravi-about-thirukural-translation-1716618394

[3] தமிழ்.இந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் கிளப்பிய திருவள்ளுவர் காவி உடை சர்ச்சைஆய்வுகள் சொல்வது என்ன?, நிவேதா தனிமொழி, Published : 24 May 2024 09:05 PM, Last Updated : 24 May 2024 09:05 PM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/1253344-thiruvalluvar-saffron-dress-controversy-stirred-up-by-the-governor-again-what-the-studies-say-4.html

[5] தினகரன், மீண்டும் காவி உடையில் திருவள்ளுவர்: ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் சர்ச்சை, 03:36 pm May 23, 2024

[6] https://m.dinakaran.com/article/News_Detail/1374138

[7]தமிழ்.இந்தியன்.இக்ஸ்பிரஸ், திருவள்ளூவர் நெற்றியில் திருநீறு, கழுத்தில் ருத்திராட்சம், காவி உடை: மீண்டும் வெடித்த சர்ச்சை!, WebDesk, 23 May 2024 16:41 IST.

[8] https://tamil.indianexpress.com/tamilnadu/thiruvalluvar-was-dressed-in-saffron-in-the-invitation-card-distributed-by-the-tamil-nadu-governors-house-4598305

[9]  உபயோகப் படுத்தப் பட்டுள்ள சொல்லாடல்களை வைத்தே எவ்வாறு வெறுப்பு அரசியல், பார்ப்ப எதிர்ப்பு பெயரில், இந்து எதிர்ப்பு வெளிப்படுத்தப் பட்டுள்ளது என்பதை கவனிக்க்கலாம்.

திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)

ஜூன் 16, 2017

திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை,தாமஸ் கட்டுக்கதை பரப்பும்வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)

Ellis is praised without knowing his baxkground

எல்லீசர்பெயரில் எமது, அறக்கட்டளை மற்றும் விருது: சாமி தியாகராசனின் வேண்டுகோள் தொடர்கிறது, “மேலும், வழிபாடு நிறைவெய்திய பின்னர், திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார்எல்லீசர்பெயரில் எமது, கழக அறக்கட்டளைச் சார்பில் விருது வழங்கும் விழா காலை 10.30 மணிக்கு இராயபேட்டை நெடுஞ்சாலை, திருவள்ளுவர் சிலைக்கு அருகில் இருக்கும் சமஸ்கிருதக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். இவ்விரண்டு விழாக்களிலும் நமது போற்றுதலுக்குரிய பெரியவர்கள் பங்கேற்கின்றனர்”, என்று சாமி. தியாகராசன் வேண்டியுள்ளது வேடிக்கையாக இருந்தது:

  1. திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்”.
  2. ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்” – அத்தனை மதிப்பு?]
  3. “எல்லீசர்” பெயரில் எமது, கழக அறக்கட்டளை.
  4. “எல்லீசர்” அறக்கட்டளை விருது.

அப்படியென்றால், எல்லீசர் அறக்கட்டளை எப்பொழுது ஏற்படுத்தப் பட்டது, யார் பணம் கொடுத்தது போன்ற விவரங்களை இக்குழுவினர் தெரிவிப்பார்களா? செயற்குழுவினரில் ஒருவரான, பி.ஆர்.ஹரண், எல்லிஸ் முதலிய கிருத்துவர்கள் எல்லாம் தமிழுக்கு ஒன்றும் செய்யவில்லை, அதெல்லாம் கட்டுக்கதை என்று எழுதியுள்ளார்[1]. “தமிழ் செல்வன்” என்ற பெயரில் எழுதினாலும், அவரது புகைப்படம் அங்கு போடப்பட்டிருப்பதால், அவர் தான் எழுதினார் என்பது தெரிகிறது. இதுதான், ஜூலையில் ஐந்து பகுதிகளாக எழுதியது[2]. பிறகு, சுருக்கமாக ஆகஸ்ட் 2, 2010ல் எழுதியது:

Tiruvalluvar Invitation- appreciating ELLIS

நிகழ்ச்சி பற்றி ஓமாம்புலியூர் ஜயராமனின் விவரிப்பு[3]: இந்த ஓமாம்புலியூர் ஜயராமன் என்னை விமர்சித்து கமென்ட் போட்டிருந்தார் [கௌதமனுடனான உரையாடலில்]. அதனால், வருடைய வர்ணனை அப்படியே போடுகிறேன் [அவர் மூலமாக நாம் அறிந்து கொள்வது]: “பின்னர் மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

  • இதில் திருப்பனந்தாள் காசிமடத்து இணை அதிபர் திருஞானசம்பந்தர் ஸ்வாமிகள் கலந்து கொண்டு ஆசி வழங்கினார்.
  • திரு. V.G.சந்தோஷம், திரு.சுபாஷ், திரு. பசுபதி தன்ராஜ் (இவரும் காங்கிரஸ்) ஆகியோருக்கு திருவள்ளுவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
  • நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மாண்புமிகு அண்ணன் பொன். ராதாகிருஷ்ணன், மாண்புமிகு தமிழக இந்து அறநிலையத் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு. சேவூர் ராமச்சந்திரன் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் திரு.இல.கணேசன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினர்.

Pon radhakrisha at Valluvar temple-function 08-06-2017.speaking.2

திரு.பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது 1972வரை திருவள்ளுவர் பிறந்த தினம் வைகாசி அனுஷத்தில் தான் கொண்டாடப்பட்டது. கருணாநிதி முதல்வராக ஆனபின் பல நூறு ஆண்டுகளாக கொண்டாடப்பட்ட நிகழ்வை தன் இஷ்டத்திற்கு தை2 வள்ளுவர் பிறந்த தினமாக மாற்ற யார் அதிகாரம் கொடுத்தது? தமிழறிஞர்கள் தொ.பி.மீனாட்சி சுந்தரம், மறைமலை அடிகள், திரு.வி. போன்றோரும், அண்ணாதுரை, .வே.ரா, ராஜாஜி, பக்தவத்சலம், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போன்றோர் கொண்டாடிய வைகாசி அனுஷம் பிறந்தநாளை, கருணாநிதி மாற்றுகிறார் என்றால் இவர்கள் அனைவரையும் விட கருணாநிதி பெரியவரா? திருவள்ளுவர் பிறந்த தினம், தமிழ் வருடப்பிறப்பு போன்ற இந்துக்களின் பண்டிகைகளில் தலையிடுகிறார். இதனை தற்போது மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மாற்ற வேண்டும் என்று பேசினார். கருணாநிதியால் ஏற்படுத்தப்பட்ட வரலாற்றுப் பிழையை சரி செய்ய மாநில அரசுக்கு மத்திய அமைச்சர் என்ற முறையில் கோரிக்கை விடுக்கிறேன் என்று பேசினார்.

Mylapore function 08-06-2017-5

  • VHP R.B.V.S. மணியன்ஜி,
  • காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், மூத்த வழக்கறிஞருமான திரு.காந்தி,
  • G.R.ன் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவரும், தமிழக சட்ட மேலவை (MLC) உறுப்பினராகவும், தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவருமான மூத்த கவிஞர் திரு. முத்துலிங்கம்

அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை தமிழறிஞர் பேராசிரியர் சாமி. தியாகராஜன் அவர்களும் வழக்கறிஞர் பத்மா அவர்களும் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய இயக்குனர் பால.கௌதமனும் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்”.  இனி நமது ஆராய்ச்சியை கவனிப்போம்.

B R Haran, Tamil Selvan, Myth of Christian cont.to Tamil and my reply

 

2010ல் பிரிவினைவாதி, தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர், மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர் என்ற எலீஸ் எப்படி இவர்களுக்கு 2017ல் மரியாதைக்குரியவராக மாறினார்?: பி.ஆர். ஹரண், தமிழுக்கு கிறிஸ்தவர்கள் ஆற்றிஅ பங்கு என்ற கட்டுக்கதை, என்ற கட்டுரையில், Misinformation campaigners project missionaries such as G.U. Pope, Constantine Joseph Beschi, Robert Caldwell, Barthalomaus Ziegenbalg, Francis Whyte Ellis and Dr. Samuel Green et al as great champions of Tamil and magnificent contributors to its development, including the introduction of “prose” writing. Of these, Francis Whyte Ellis or ‘Ellis Durai’ in Tamil, was a Madras-based civil servant in the British government and Samuel Green a doctor in Sri Lanka; both supported missionaries in evangelical causes,” என்று எழுதினார்.

“தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர் எல்லிஸ்…மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர்,” என்று எல்லிஸை, ஜி.யூ.போப். ஜோசப் பெஸ்கி, கால்டுவெல், ஜீஜன்பால்கு, வில்லிஸ், சாமுவேல் கிரீன் உதலியோரை குற்றங்கூறினார்.

“Ironically, A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages cannot be termed his own work as he allegedly took lots of passages from Francis Whyte Ellis, who wrote Dravidian Language Hypotheses.. To understand why Caldwell resorted to “research” South Indian languages, one should read Dr. K. Muthaia’s articleCaldwell Oppilakkanaththin Arasiyal Pinnani (“The Politics Behind Caldwell’s Comparative Grammar), published in the April 1997 issue of the Tamil monthly magazine Kanaiyaazhi.
“கால்டுவெல் பெரும்பாலான விசயங்களை எல்லிஸ் புத்தகத்திலிருந்து தான் எடுத்தாண்டுள்ளார்.” அதாவது, எல்லீஸ் தான் “திராவிடம்”, “திராவிடத்துவம்”, “திராவிடப் பிரிவினைவாதம்” …முதலியவற்றிற்கு காரண கர்த்தா என்கிறார். ஆக, கிருத்துவர்கள் தமிழுக்கு செய்த சேவை என்பதெல்லாம் கட்டுக்கதை என்று எழுதித் தள்ளினார். ஆனால், இப்பொழுதோ, இக்குழுவில் இருந்து பரிசு கொடுக்கிறார்.

Tiruvalluvar according to ELLIS

ஏன் இல்லீசரை இப்பொழுது தூக்கிப் பிடிக்க வேண்டும்?: பிறகு அத்தகைய எல்லிஸை, மதிப்பு-மரியாதையுடன் “எல்லீசர்” ஆக்கி, அவர் பெயரில் அறக்கட்டளையை உருவாக்கியது ஏன்?

  1. எல்லீஸ் மீது இவர்களுக்கு திடீர் என்று எப்படி அவ்வளவு காதல், பாசம், எல்லாம் வந்தன?
  2. “எல்லிஸை” பிரிவினைவாதி, தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர், மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர் என்றெல்லாம் வசைபாடி, எப்படி “எல்லீசர்” என்று உயர்த்தினார்கள்?
  3. திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர் என்று உயர்த்திப் பிடிப்பானேன்?
  4. எல்லிஸுக்கு ஏசுகிறிஸ்து தானே கடவுள், பிறகு திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடினான்?
  5. யார் பணம் கொடுத்தது?

இதற்கெல்லாம், பி.ஆர்.ஹரண், கௌதமன், சாமி. தியாகராசன் போன்றோர் பதில் கூறுவார்களா?

© வேதபிரகாஷ்

16-06-2017

Pon radhakrisha at Valluvar temple-function 08-06-2017.speaking

[1] Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil, Posted on August 2, 2010.

 https://bharatabharati.wordpress.com/2010/08/02/myth-of-christian-contribution-to-tamil-%E2%80%93thamizhchelvan/

[2] Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil – 1, Posted on July 21, 2010.

http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=1324

Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil – 2, Posted on July 22, 2010.

http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=1325

Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil – 3, Posted on July 23, 2010.

http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=1326

Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil – 4, Posted on July 22, 2010.

http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=1327

Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil – 5, Posted on July 25, 2010.

http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=1328

[3] https://www.facebook.com/jayaraman.v.o/posts/10154585311106709?hc_location=ufi