ஊழல் மலிந்த துறைகளுக்கு கபில் சிபலை அமைச்சாராக்கும் மர்மம் என்ன – சோனியாவின் பிரமாதமான நாடகம் (4)

ஊழல் மலிந்த துறைகளுக்கு கபில் சிபலை அமைச்சாராக்கும் மர்மம் என்ன – சோனியாவின் பிரமாதமான நாடகம் (4)

 

கபில் சிபல் வக்கீல், தந்திரக்காரர், சாதுர்யமான புத்திக் காரர், கைதேர்ந்த வித்தைக் காரர்.

 

ஏஜி எடுத்துக் காட்டிய 1,75,000 கோடி நஷ்டம் என்பதனை ஒன்றுமேயில்லை என்று செய்த மோடி வித்தைக்காரர்.

 

தான் தொலைதொடர்பு அமைச்சர் பதவிக்கு வந்ததும், ஊடகத்தில் இப்பாட்டைப் பாடி, “ஜீரோ லாஸ்” (பூஜ்யம் நஷ்டம்), நஷ்டம் ஒன்றுமேயில்லை என்று செய்த மோடி வித்தைக்காரர்.

 

அதற்கேற்றபடி, ஏலத்தில் விட்டு, பார் ஒன்றுமே கிடைக்கவில்லை, ஆக ஏஜி எடுத்துக் காட்டிய 1,75,000 கோடிகள் என்பதெல்லாம், வெறும் யேஷ்யம் தான், உண்மையல்ல என்று பேசிவந்தார்!

 

சோனியாவே வியந்து விட்டார், ஆஹா, இப்படி பட்ட ஆள் தானே நமக்கு வேண்டும், சரி இவரை ரெயில்வே துறைக்குப் போட்டால், இப்படியே “ஜீரோ” ஆக்கி வந்த விடுவார், தொல்லை போய் விடும் என்று தீர்மானித்து, முதலில் ஒரு ஜோஷி என்ற ஆளைப் போட்டு, சட்டத்துறைக்கு கபில் சிபலைப் போட்டுள்ளார்!

 

இனி நிலக்கரி ஊழல் ஒன்றும் இல்லை என்று இவர் ஆக்கிவிடுவார்!

 

மந்திரிகளே இல்லாத துறைகள்: ரூ.10 கோடி லஞ்ச பேரத்தில் சிக்கியதால் ரெயில்வே மந்திரி பன்சாலும், நிலக்கரி ஊழல் அறிக்கையை திருத்திய சர்ச்சையில் சிக்கியதால் சட்ட மந்திரி அஸ்வினிகுமாரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து மத்திய மந்திரி சபையில் காலியாக உள்ள இடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சில ராஜாங்க மந்திரிகள், தி.மு.க விலகியதால் ஏற்பட்ட காலியிடங்கள் என, சுமார் 10 மத்திய மந்திரி பதவி நிரப்பப்பட வேண்டியதுள்ளது. இந்நிலையில் காலியாக உள்ள மத்திய மந்திரி பதவிகளில் சட்ட துறை கபில் சிபலுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் ரெயில்வே துறை சி.பி.ஜோஷிக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டனர்.

 

போட்டி போடுவதால் சண்டை, சச்சரவு: எல்லோருக்கும் இத்துறைகளின் மீது கண்ணுள்ளதால், யாருக்குக் கொடுப்பது என்ற பிரச்சினை வெளிப்படையாகி விட்டது. மூத்த அமைச்சர்கள், அமைச்சர்கள் இல்லாது கட்சிசார்பு பேச்சாளர்கள், ஊடக தொடர்பாரளர்கள் முதலியோருக்கு உள்ள ஒரு வருடத்தில் கொடுத்தால், அவர்களுக்கும் நன்மையாக இருக்குமே என்ற எண்ணமும் உள்ளது, அவர்களுக்கும் ஆசை உள்ளது. இந்நிலையில் தான் “சோனியாவிற்கும், மன்மோஹனுக்கும் லடாய்” என்று ஊடகங்கள் ஹாஸ்யமாக செய்திகளை வெளியிட்டன[1].

 

இல்லை, சோனியாமன்மோகன்சிங்இருவரும்சேர்ந்துஎடுத்தமுடிவு:  இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி கூறுகையில், ஒரு சில மீடியாக்களில், அமைச்சர்கள் இருவரும், சோனியா வலியுறுத்தலினால் தான் பதவி விலகினார்கள் என செய்தி வெளியானது[2]. இது தவறான தகவல். பன்சால் மற்றும் அஸ்வனி குமார் இருவரும் பதவி விலக வேண்டும் என்ற முடிவு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் இணைந்து எடுத்த முடிவு என கூறியுள்ளார்[3]. ஆகவே இருவருக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்று காங்கிரஸ் தெளிவுபடுத்தியுள்ளது[4]. என்னதான் பொம்மை பிஎம் என்றாலும், சோனியா வெளிப்படையாக தானே அமைச்சர்களை நீக்குவது, நியமிப்பது என்பது, தன்னை அவமதிப்பதாக நினைப்பதாக செய்திகள் வெளியாகின[5]. ஜனார்த்தன் திவேதி மேலும், “2014 வரை மன்மோஹன் தான் பிரதமராக இருப்பார்”, என்பது[6] வேடிக்கையாக இருந்தது!

 

அடுத்த பிரதமர் ராகுலா, சிதம்பரமா, ஆன்டனியா – இப்படி பேச்சு எப்படி வரலாம்?: யார் அப்படி சந்தாகப்பட்டது, எதற்காக இந்த விளக்கம் என்று தெரியவில்லை. பிறகு, எப்படி இந்த விளக்கம் தேவைப்படுகிறது[7]. சோனியாவிற்கு பாதகமாக எந்த ஊடகங்களும் செய்திகள் வெளியிட முடியாது. பிறகு, அவர் எப்படி பிரதம மந்திரியை மாற்ற வேண்டும் என்ற கருத்திற்கு இடம் கொடுப்பார் என்றும் தெரியவில்லை. அடுத்த பிரதமர் ராகுலா, சிதம்பரமா, ஆன்டனியா, யார் என்று ஊடகங்கள் அலச ஆரம்பித்து விட்டனவாம். காரணம், அடுத்த பாராளுமன்ற கூட்டத்திற்கு முன்பாக, அத்தகைய மாறுதலைக் கொண்டு வர அவர் விரும்பியுள்ளார் என்கின்றன[8]. இப்படியான பேச்சு / யூகம் எப்படி வரலாம்? அதிகாரம் இரண்டு நிலைகளில் இருந்தால் இப்பிரச்சினை வரத்தான் செய்யும்[9].

 

சட்ட நடைமுறைகள் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது[10]: எப்படி இவர் கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை. சட்ட மந்திரியாக பதவியேற்ற கபில் சிபல் கூறுகையில், “சட்ட நடைமுறைகள் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது. வளர்ச்சியை ஊக்குவிக்கவேண்டும். பரந்த இலக்கினை அடைவதற்கு, சட்டத்துறையில் எளிமையான, வெளிப்படையான நடைமுறைகள் அவசியம் தேவை. அதை உறுதிப்படுத்தும் வகையில் சட்டத்துறை செயல்பாடுகள் எளிமைப்படுத்தப்படும். நீதித் துறை நியமனங்களும், செயல்பாடுகளும் வெளிப்படையாக இருக்க நடவடிக்கை எடுப்பேன்.  விசாரணை முதல் தீர்ப்பு வழங்குதல் வரை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். நீதிபதிகள் நியமனம் வெளிப்படையாக நடைபெறும். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற குறுகிய காலமே உள்ள நிலையில், சட்டத்துறையில் எனது பணிகளை சிறப்பாக செய்ய முயற்சிப்பேன்” என்றார்[11].

 

ஊழல்களை ஒழித்து ரெயில்வே துறையை உயர்த்த முயற்சி செய்வேன்: அடடா, இதென்ன, ரெயில்வே துறையில் ஊழல் உள்ளது என்பதனை ஒப்புக் கொண்டு விட்டார் போலிருக்கிறாதே? இதேபோல் ரெயில்வே மந்திரியாக பொறுப்பேற்ற சி.பி.ஜோஷி கூறுகையில், “ரயில்வே வாரிய உறுப்பினர் நியமன முறைகேடு விவகாரத்தால் ரயில்வே துறை மீது களங்கம் ஏற்பட்டுள்ளது. அதைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்.ஊழல்களை ஒழித்து ரெயில்வே துறையை உயர்த்த முயற்சி செய்வேன். ஊழியர்கள் மத்தியிலான நம்பிக்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் பொறுப்புக்களை நிறைவேற்றுவேன்” என்றார்[12].

 

© வேதபிரகாஷ்

14-05-2013


[7] Congress spokesperson Janardan Dwivedi clarified that Sonia Gandhi and Manmohan Singh shared a perfect relationship and also sought to scotch reports about the Congress high command was contemplating a leadership change at the Centre. “There cannot be any better relationship between a party president and a PM,” he said. “Reports about differences between PM and Sonia Gandhi are a rumour and disinformation, Congress condemns it,” he added. He also said that there was no doubt that ‘Manmohan Singh will remain PM till 2104’.

http://zeenews.india.com/news/nation/manmohan-singh-will-remain-pm-till-2014-congress_848361.html

http://www.firstpost.com/politics/from-here-on-sonia-manmohan-dyarchy-is-a-slow-train-wreck-779135.html

[8] The Congress leader was forced to clarify the party’s stand against the background of reports doing rounds that a section of the party wanted to replace Manmohan Singh as PM before the Monsoon Session of Parliament. The name of Congress vice president Rahul Gandhi along with Union Finance Minister P Chidambaram and Defence Minister AK Antony was doing the rounds to replace Manmohan Singh.

http://zeenews.india.com/news/nation/manmohan-singh-will-remain-pm-till-2014-congress_848361.html

http://www.firstpost.com/politics/from-here-on-sonia-manmohan-dyarchy-is-a-slow-train-wreck-779135.html

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

4 பதில்கள் to “ஊழல் மலிந்த துறைகளுக்கு கபில் சிபலை அமைச்சாராக்கும் மர்மம் என்ன – சோனியாவின் பிரமாதமான நாடகம் (4)”

 1. K. T. Narayayanaswamy Pillai Says:

  Group of Ministers, headed by P Chidambaram, to decide on CBI autonomy
  Reported by Sunil Prabhu, Edited by Shamik Ghosh | Updated: May 14, 2013 16:02 IST
  http://www.ndtv.com/article/india/group-of-ministers-headed-by-p-chidambaram-to-decide-on-cbi-autonomy-366701

  New Delhi: Almost a week after the government was severely reprimanded by the Supreme Court for influencing the Central Bureau of Investigation (CBI) in the coal scam, Prime Minister Manmohan Singh today constituted a Group of Ministers to decide the plan of action to secure the autonomy of the investigating agency.

  The ministers’ group would be headed by Union Finance Minister P Chidambaram and will include newly-appointed Law Minister Kapil Sibal, External Affairs Minister Salman Khurshid and Minister of State for Personnel V Narayanasamy.

  The PM has directed the senior ministers to bring a Cabinet proposal on the law that needs to be drafted to safeguard the CBI’s autonomy and help formulate an affidavit that will be submitted in the Supreme Court.

  Most Recent
  Micromax A111 Canvas Doodle with stylus now available online for Rs. 12,999
  Amazon buys display maker Liquavista from Samsung
  The Supreme Court last week had called the CBI “a caged parrot” which “speaks in its master’s voice” after the investigating agency admitted in an affidavit that Ashwani Kumar, who quit as the Law Minister on Friday, and senior officials of the Prime Minister’s Office and the coal ministry had made certain changes in the report on the allocation of coal blocks.

  During the hearing, the Supreme Court had asked the Centre whether it was contemplating a law to make the working of the CBI independent and insulate it from extraneous intrusion and interferences.

  The country’s top law officer, Attorney General GE Vahanvati, who is also smeared by the coal scandal for seeing a draft of the CBI’s probe report, had agreed with the Supreme Court that the agency should be made more independent.

 2. K. T. Narayayanaswamy Pillai Says:

  சிபிஐயின் அதிகாரம் : மத்திய அமைச்சரவைக் குழு ஆய்வு
  By dn, புது தில்லி
  First Published : 14 May 2013 02:05 PM IST
  http://dinamani.com/latest_news/2013/05/14/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D–%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85/article1589754.ece

  சிபிஐயின் அதிகாரத்தில் தலையீடு குறித்து உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அதன் சுய ஆட்சி அதிகாரம் குறித்து மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஆய்வு செய்கிறது.

  பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்ற அமைச்சரவைக் கூட்டத்தல் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தலைமை வகித்தார். மேலும் அமைச்சர்கள் கபில் சிபல், நாராயணசாமி, சுஷில்குமார் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சிபிஐ இயக்குநர் ரஞ்ஜித் சின்ஹாவும் கலந்து கொண்டார்.
  ————————————————————————-
  சிபிஐ சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பது குறித்து ஆய்வு
  ப.சிதம்பரம் தலைமையில் அமைச்சர்கள் குழுவை நியமித்தது மத்திய அரசு
  கருத்துகள் மாற்றம் செய்த நேரம்:5/14/2013 2:49:46 PM
  14:24:21Tuesday2013-05-14
  http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=49543

  புதுடெல்லி: சிபிஐ சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு முடிவு எடுக்க அமைச்சர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், சட்ட அமைச்சர் கபில் சிபல், பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாரயணசாமி ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். சிபஐ-க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது குறித்து இந்த அமைச்சர்கள் ஆய்வு மேற்கொள்ளும்.

  ஆய்வின் முடிவில் அமைச்சர்கள் குழு அறிக்கை ஒன்றை தயார் செய்து அரசிடம் அளிப்பார்கள். நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக சிபிஐ நடத்திய விசாரணையில் முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் தலையிட்டதை உச்சநீதிமன்றம் கண்டித்ததால், மத்திய அரசு இந்த அமைச்சர்களை குழு நியமித்துள்ளது. இந்த அமைச்சர்கள் அளிக்கும் ஆய்வு அறிக்கை பொறுத்தே சிபிஐ-க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்.
  ————————————————————————–
  சிபிஐக்கு சுதந்திரம்… ப.சிதம்பரம் தலைமையில் அமைச்சர்கள் குழு அமைப்பு Posted by: Mayura Akilan Published: Tuesday, May 14, 2013, 15:23 [IST]
  http://tamil.oneindia.in/news/2013/05/14/india-group-ministers-headed-chidambaram-to-decide-on-cbi-175266.html

  டெல்லி: உச்சநீதிமன்றத்தால் கூண்டுக்கிளி என வர்ணிக்கப்பட்டுள்ள சிபிஐக்கு முழுமையான சுதந்திரம் தருவது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான அமைச்சர்கள் குழு ஆய்வு செய்யும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான அமைச்சர்கள் குழுவையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தக் குழுவில் ப.சிதம்பரம் தவிர கபில் சிபல், சல்மான் குர்ஷித், நாராயணசாமி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்த அமைச்சர்கள் அமர்ந்து பேசி, சிபிஐக்கு மேலும் சுதந்திரம் கொடுப்பது குறித்த திட்ட வரைவை உருவாக்குவார்கள். மேலும், இந்தத் திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணத்தையும் இவர்களே இறுதி செய்வார்கள்.

  Read more at: http://tamil.oneindia.in/news/2013/05/14/india-group-ministers-headed-chidambaram-to-decide-on-cbi-175266.html

 3. K. T. Narayayanaswamy Pillai Says:

  நார்த் பிளாக் மற்றும் சவுத் பிளாக் என்று தில்லியில் மத்திய அமைச்சர் அலுவலகங்கள், அதிகாரிகள் மற்றும் அவர்கள் கீழ் வேலை செய்பவச்ர் என்று எல்லோரும் அடங்கிய அலுவலகங்களில் தான், இந்த ஊழல் வெளியான ஆரம்ப நிலை கோப்புகள் இருக்கும்.

  இப்பொழுது, இவரது அதிகாரத்தில் வரும் போது, அவற்றை மாற்றியமைக்க வாய்ப்புள்ளது. உச்சநீதி மன்றத்திற்கு வழக்கு வருவதற்கு முன்னர், அம்மாதிரி மாற்றியக்மைக்கப் பட்டால், உள்ள ஆவணங்கள் மறைக்கப்பட்டால், வழக்கு வலுவிழந்து விடும்.

  2ஜி விஷயத்தில் கபில் சிபல் அவ்வாறு செய்து காட்டினார், அதாவது, அந்த 1,75,000 கோடிகள் நஷ்டம் என்பது பொய், அந்த கணக்கீடே உத்தேசம் தான், ஊழல் ஒன்றும் நடக்கவில்லை என்ற தோரணையில் செய்துள்ளார்.

  இனி இத்துறைகளுக்கும், அம்மாதிரியான வெள்ளையடிக்கப் பட்டு, சுத்தமாக்கப்படும் என்று தெரிகிறாது.

 4. Charlie J. Diaz Says:

  ”அகில இந்திய காங்கிரஸ் போராடி 63 தொகுதிகளை வாங்கியிருக்​கிறது. ஆனால், தமிழக காங்கிரஸ் தங்களுக்குள் ஒரு பங்கீட்டை வைத்துக்கொண்டு ஸீட்களைக் கூறு போட்டு இருக்கிறார்கள். 12 நாய்கள், 18 கழுதைகள், 16 பன்றிகள் என்று பிரித்துக்கொள்வதா உள் கட்சித் தொகுதிப் பங்கீடு? சில மாதங்களுக்கு முன்பே, 234 தொகுதி​களுக்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்துவிட்டு, காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை அறிவித்தால் பிரச்னை ஏற்படாது. கடைசி நேரத்தில் நடக்கிற குதிரை பேரமாக வேட்பாளர் பட்டியல் மாறிவிட்டது. வேட்பாளர் தேர்வில் நடந்த பிரச்னைகளால், 12-ல் இருந்து 18 தொகுதிகள் வரையில்தான் காங்கிரஸ் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஜெயித்தால், தி.மு.க. அமைச்சரவையில் மனைவிக்கு மந்திரி பதவி வாங்கிவிட வேண்டும் என்பது தங்கபாலுவின் திட்டம். எது எப்படியோ, மயிலாப்பூரில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜலெட்சுமிதான் ஜெயிப்பார்!” என்கிறார் எஸ்.வி.சேகர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: