Posts Tagged ‘விளம்பரம்’

சூரிய ஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல் – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (1)

ஜூலை 14, 2013

சூரிய ஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல் – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (1)

Solar scam details - The Hindu - Graphics

படித்தவர்கள் நிறைந்த கேரளாவில் சூரிய ஒளி ஊழல்: சூரிய ஒளி மற்றும் காற்று மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்று அரசாங்கம் கோடிகளைக் கொட்டி திட்டங்களை வகுத்துள்ளது. இதில் ஊக்கத்தொகை, வரிவிலக்கு, சுங்கவரி விலக்குபோன்ற சலுகைகள் முதலியனவும் கொடுக்கப்படுகிறது. இத்திட்டங்களைப் பற்றி சந்தேகங்கள் ஏற்கெனவே எழுப்பப்பட்டுள்ளன[1]. ஏனெனில், முதலில் அதிகமாக முதலீடு செய்தால், குறைவாகவே பலன் கிடைக்கும். அதாவது ஒரு வாட் மின்சாரத்தின் விலை மிக அதிகமாக இருக்கும். இருப்பினும், நெடுங்கால வைப்பு நிதிபோல பணத்தைப் போட்டு வைத்தால் பலன் கிடைக்கும் என்று, பணம் உள்ளவர்கள் இதில் முதலீடு செய்து வருகிறார்கள். ஆனால், கேரளாவில் இதை வைத்துக் கொண்டு கோடிகளில் ஊழல் செய்துள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

Chandys two aides arrested

அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் ஊழல் ஈடுப்பட்டுள்ளது: கேரளாவின் அரசியல்வாதிகள் மத்திய அதிகமான தாக்கம் கொண்டிருப்பவர்கள். சோனியா சர்வ வல்லமை படைத்த தலைவராக இருப்பதனால், கிருத்துவர்கள் பெரிய பகுதிகளில் இருக்கின்றனர். இதனால், சாதாரணமான விஷயத்திற்கு கூட தமது அதிகாரத்தை, அரசியல் நெருக்கத்தைக் காட்டிக் கொண்டு வருவர். இந்நிலையில் பிஜு ராதாகிருஷ்ணன் என்பவர், சரிதா நாயர் என்ற பெண்மணியுடன் சேர்ந்து கொண்டு சூரிய ஒளி பெனல் திட்டம் மூலமாக கோடிகளை ஏமாற்றியுள்ளதாக விவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. போதாகுறைக்கு கவர்ச்சிகரமான நடிகைகளும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள். அந்நடிகைகளுடன் மத்திய அமைச்சர் மற்றும் மாநில அமைச்சர்களின் தொடர்புகள்ளும் உள்ளன.

Saritha-S-Nair - IE photo- Solar scam

சரிதா நாயரின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள்: பிஜு ராதாகிருஷ்ணன் டீம் சோலார் ரெநியூபல் எனர்ஜி சிஸ்டம்ஸ் [Team Solar Renewable Energy Systems] என்ற கம்பெனியை தடபுடலாக ஆரம்பித்தார்[2]. அக்கம்பெனியின் கிளைகளும் மந்திரிகள், நடிகைகள் என்று வைத்து ஆரம்பிக்க வைக்கப் பட்டன. ஊடகங்களில் பிரமாதமாக விளம்பரமும் செய்யப்பட்டது. அரசில் தொடர்புள்ள சரிதா நாயர், லட்சுமி நாயர், நந்தினி நாயர் என்று ஆறு பெயர்களை உபயோகப் படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. பொதுவாக மும்தாஜ் என்ற பெயரை உபயோகப் படுத்தி, டீம் சோலார் கருவிகளில் முதலீடு செய்யுமாறு கேட்டு வியாபாரப் பேச்சுகளை நடத்தியுள்ளார். வெற்றிகரமாக பணத்தையும் பெற்றுள்ளார். சரிதா அமைச்சர்களை “மாமா” என்றுதான் அழைப்பாராம். அந்த அளவிற்கு நெருக்கம் இருந்தது[3]. யாரிடம் பணம் உள்ளது என்று அறிந்து அவர்களிடம் சென்று சோலார் பெனல் திட்டதில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்வாராம். சிலரிடம் தனது யுக்திகளைப் பயன்படுத்தி மயக்கவும் செய்வாராம். அவர்களுடன் நெருக்கமாக இருக்கும்பொழுது ரகசிய கேமரா மூலம் அக்காட்சிகளை படமெடுத்து, அவற்றைக் காட்டி, அவர்களை மிரட்டியும் பணமுதலீடு செய்ய வைத்திருக்கிறார். நிறையபேர் புகார் கொடுக்காமல் இருக்கிறார்களாம். காரணம் அவர்கள் தங்களுடைய கருப்புப் பணத்தை இவ்வாறு முதலீடு செய்து வெள்ளையாக்கலாம் என்று நினைத்தனர்[4]. ஆனால், இப்பொழுது பிரச்சினை பெரிதானவுடன் மைனமாகி விட்டனர். பாதிக்கப்பட்ட சிலரே புகார் அளித்துள்ளனர்[5].

Salu with Biju - Solar scam-before arrest

ஷாலு மேனன் – கவர்ச்சிகர வியாபாரம் பெருகியது: ஷாலு மேனன் ஒரு நடிகை, நாட்டியம் ஆடுபவர், கோரியோகிராபர் ஆவர். இவர் பல அமைச்சர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார். இதனால் சென்சார் போர்டின் உறுப்பினர் பதவியினையும் பெற்றார். ஜெய கேரளா நடனப் பள்ளி[6] என்ற நாட்டியப்பள்ளியை பதனம்திட்ட மாவட்டம் முழுவதும் பல கிளைகள் வைத்து நடத்தி வந்தார். அங்கு நடனம், பாட்டு எல்லாம் சொல்லிக் கொடுக்கப்பட்டது[7]. டீம் சோலார் கம்பெனியின் எக்சிகியூடிவ் டைரக்டர் என்று பிஜுவால் அறிமுகப்படுத்தி வைக்கப் பட்டார். சரிதா நாயருடன் பிஜு சேர்ந்து வாழ்ந்து வந்தாலும், ஷாலுவுடன் இருந்தது மற்றும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றும் செய்திகள் வந்துள்ளன[8].

Solar scam - more names of actresses

உத்திரா உன்னி டீம் சோலாரின் பிராண்ட் அம்பாசிடரா?[9]: உத்திரா உன்னி என்ற இன்னொரு நடிகையின் பெயரும் இவ்விவகாரத்தில் அடிபடுகிறது. சென்னை-தில்லி சென்றுவர விமான டிக்கெட்டுகள் பிஜு-சரிதாவினரால் ஒரு டிராவல் ஏஜென்சி மூலம் வாங்கப் பட்டுள்ளன. அவை உத்திரா உன்னி செல்வதற்காக வாங்கப் பட்டுள்ளன. ஆனால், கொடுத்த செக் பவுன்ஸ் ஆனதால், அந்த டிராவல் ஏஜென்சி உத்திரா உன்னி மேல் புகார் கொடுத்துள்ளது. மேலும் பேஸ்புக்கில் உத்திரா உன்னி, டீம் சோலார் கம்பெனியின் பிராண்ட் அம்பாசிடர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்திரா உன்னி தான் பிராண்ட் அம்பாசிடர் இல்லை, ஆனால், அக்கம்பெனியின் விளம்பரத்தில் நடித்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார். முக்தா என்ற இன்னொரு நடிகையும் தான் ஏமாற்றப்பட்டதாக புகார் கொடுத்தார்[10]. இதில் வேடிக்கையென்னவென்றால், ஷாலு மேனனே தன்னை பிஜு ஏமாற்றியதாக புகார் கொடுத்துள்ளது தான்!

Saritha has contacts with ministers and Chennitala

அரசியல் தொடர்புகள் விரியும் மர்மங்கள்: டீம் சோலார் ஊழல் வழக்கில் ரஷீக் அலி, மனாகாட், திருவனந்தபுரம் என்ற நபர் கொடுத்த புகாரின் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிகிறது[11]. இதனையடுத்து ஷாலு மேனன் என்ற அந்த நர்த்தகி மற்றும் நடிகை வெள்ளிக்கிழமை 05-07-2013 கோட்டயத்திற்கு அருகில் உள்ள அவரது வீட்டிலிருந்து தம்பனூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்[12]. திருவனந்தபுரம் மேஜிஸ்ட்ரேட் ஷாலு மேனனுக்கு ஜாமின் கொடுத்தால் தனக்குள்ள அரசியல் சக்தியினால் சாட்சிகளை களைத்துவிடுவார் என்று அவரது ஜாமினும் நிராகரிக்கப்பட்டது[13]. இடதுசாரிகள் உள்துறை அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணனுக்கும் இந்த நடிகைக்கும் தொடர்பு உள்ளது என்று கூறிவருகிறது. திரிசூரில் ஒரு பெரிய வீடு கட்டி, கிருகபிரவேஷம் செய்தபோது, அமைச்சர் வந்திருக்கிறார்[14], அதனால், அவர் இந்நடிகையை இவ்வழக்கிலிருந்து தப்பித்துக் கொள்ள உதவி வருகிறார் என்று குற்றஞ்சாட்டி வருகின்றன[15]. ஷாலு மேனன் மற்றும் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் டீம் சோலார் கூட்டத்தில் பங்கு கொண்ட புகைப்படங்கள் வெளிவந்துள்ளன[16]. கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி, எர்ணாகுளத்தில் உள்ள பிஜுவின் வீடு, டீம் சோலார் அலுவலகங்களில் (திருபுனித்துரா, ஆலப்புழா, திரிசூர்) சோதனை நடத்தப் பட்டது. பல ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன[17].

The office of Team Solar on Chittoor Road in Kochi raided on Sunday 16-06-2013

நடிகைகளுடான தொடர்புகள், சேர்ந்து வாழ்தல், கொலை முதலியன: பிஜூ ராதாகிருஷ்ணன், சரிதா நாயருடன் சேர்ந்து வாழ்வதை அவரது மனைவி ரேஷ்மி எதிர்த்ததால், 2006ல் கொலை செய்தான். சென்ற மாதம் ஜூன் 17 அன்று அதற்காக கோயம்புத்தூரில் கைது செய்யப்பட்டான்[18]. இப்பொழுது இந்த சோலார் ஊழலில் பிஜு, சரிதா மற்றும் கே.பி. கணேஷ்குமார் என்ற நடிகர்களை இழுத்துள்ளான். கைது செய்யப்பட்டபோது, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் சொல்லிக் கொண்டான்[19]. ஏற்கெனவே கணேஷ்குமாரின் மனைவி மற்ற பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த சரிதா நாயரே கணேஷ்குமாரின் முந்தைய மனைவி அல்லது சேர்ந்து வாழ்ந்திருக்கிறார் என்று கேரள ஊடகங்கள் கூறுகின்றன[20]. கே.பி. கணேஷ்குமார் முந்தைய மந்திரியும் கூட. பெண்களைக் கொடுமைப் படுத்தினார் என்பதனால் பதவி விலக நேர்ந்தது. கே. சி. வேணுகோபால், மத்திய அமைச்சரின் தொடர்பும் இதில் காணப்படுகிறது[21]. அவர் தான் என்றுமே உதவியதில்லை என்று மறுத்தாலும், நடுராத்திரி வேளைகளில் சரிதாவுக்கு போன் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[22]. முன்பு கே. சி. ஜோசப் சரிதாவின் கோட்டயம் அலுவலகத்தைத் திறந்து வைத்துள்ளார்[23]. இவ்வாறு காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள் தொடர்பு கொண்டிருப்பது கேள்விகளை எழுப்பியுள்ளன. சரிதா குறைந்த பட்சம் ஆறு கேரள மந்திரிகளுடன்[24] போனில் பேசியுள்ளதற்கு[25] ஆதாரங்கள் உள்ளன[26].

Saritha has contacts with ministers and Chennitala2

சரிதா பற்றி முதலமைச்சரிடம் பேச வேண்டிய அளவிற்கு என்ன விஷயம் இருக்கிறது?: இன்றைக்கு திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல் என்பது சிலரின் வழக்கத்தில் வந்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே “மனைவி-துணைவி” என்ற சித்தாந்தங்கள் உள்ளன. இவற்றை தமிழகத்தில் நாத்திகம் என்று சொல்லிக் கொண்டு நடிகர்-முதலமைச்சர் என்று பின்பற்றப் பட்டு வருகிறது. இதெல்லாம் புரட்சி என்று சொல்லிக் கொண்டாலும், சமூகசீரழிவிற்கு காரணமாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இத்தகைய கூடா தாம்பத்திய உறவுமுறைகள் கேரளாவிலும் உள்ளது போலிருக்கிறது. இங்கு பிஜு, கே.பி. கணேஷ்குமார், சரிதாவுடன் கொண்டுள்ள உறவு பற்றி சாண்டியுடன் ஒரு மணி நேரம் பேசியதாக கூறியுள்ளான்[27]. தான் குற்மற்றவன் என்றும் சரிதாவின் கணேஷ்குமாருடைய தொடர்புகளால் தான் இப்பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன என்று பிஜு கூறியுள்ளான்[28]. சாண்டி இதைப் பற்றி ஒன்றும் கூறாவிட்டாலும், காங்கிரஸ் எம்பி எம்.ஐ.ஷானவாஸ் பிஜுவை தனக்கு அறிமுகம் செய்து வைத்ததை ஒப்புக் கொள்கிறார்[29]. இதனால் உம்மன் சாண்டி, சரிதா-கணேஷ்குமார் இடையே மத்தியஸ்தம் செய்ய முயன்றாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது[30]. என்ன இருந்தாலும், தன்னுடன் வாழும் பெண்னைப் பற்றி உம்மன் சாண்டியுடன் பேச வேண்டிய அவசியம் என்ன? மேலும் தனது மனைவியை 2006லேயே கொலை செய்துள்ளான் என்ற பிஜுவுடன் என்ன பேச்சு வேண்டியுள்ளது?

வேதபிரகாஷ்

© 13-07-2013


[3] Allegedly Saritha’s clout in power circles was such that she even used to address one of the LDF ministers as ‘Uncle’

[4] ஶ்ரீஜன் என்ற டைம்ஸ்-நௌ நிருபர் இவ்விஷயங்களை எடுத்துக் காட்டியுள்ளார். அந்த டிவி செனலும் இதைப் பற்றி அதிகமாகவே செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. “Sleaze, scam and scandal” என்ற நிகழ்ச்சி திரும்ப—திரும்பக் காட்டப்பட்டுகிறது.

[5] CNN-IBN, NDTV, Headlines Today, News-X முதலிய செனல்களில் இதைப் பற்றி அதிகமாகவே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவையும் இங்கு எட்டுத்தாளப்பட்டுள்ளன.

[6] JAYAKERALA SCHOOL OF PERFORMING ARTS, OPP.N.S.S COLLEGE, PUZHAVATHU ROAD, CHANGANNACHERRY, PH: +91 481 2421487, 3205111; Mob: + 91 9387611137
jayakeralachry@gmail.com; http://jayakerala.org/

[7] She owns her own dancing school named Jaya Kerala School Of Performing Arts. It has branches almost in every part of Pathanamthitta District, Kerala. It also taught music, both vocal and non-vocal apart from all types of dancing. Read more at: http://entertainment.oneindia.in/malayalam/news/2013/shalu-menon-was-to-marry-biju-radhakrishnan-113922.html#slide234889

[14] ccording to the latest reports, Home Minister Thiruvanchoor Radhakrishnan is said to have visited the residence of serial actress Shalu Menon. But the visit is said to have been made on an occasion other than the house warming.  According to Thiruvanchoor Radhakrishnan, he paid a visit to Shalu Menon’s house, “not on the occasion of her housewarming, but on route to a visit to Amritanandamayi Mutt.” “Party activists who were in the area called me over. Also I know Shalu Menon’s grandfather Tripunithura Aravindaksha Menon. Otherwise there is no way that I know her,” said Thiruvanchoor Radhakrishnan. “When you are a minister, there are occasions like housewarming and marriages, which cannot be avoided. We cannot find out if those persons are involved in any case, before we set out for these functions,” he said. “All I did was spend around two minutes in Shalu’s home. Otherwise there is no other connection. I am not related to her by blood or any other way. In fact there have been other political leaders from other parties too, that day,” he said.

http://www.janamtv.com/news/Thiruvanchoor_Radhakrishnan_has_visited_Shalu_Meno_116274.php

[16] Images of Menon and Radhakrishnan attending a meeting of the solar panel company also appeared in the media. Reports also surfaced that Radhakrishnan had given a good amount of the money to Menon, and also purchased expensive gifts for her.

http://indialocalnews.in/2013/07/06/actress-shalu-menon-produced-in-court/

[20] இதைத் தவிர சரிதா நாயருக்கு 10 பேர் கணவர்கள் இருந்தனர் என்றெல்லாம் மலையாள ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

http://www.marunadanmalayali.com/index.php?page=newsDetail&id=16221

[21] “Con woman” Saritha S Nair’s estranged husband Biju Radhakrishnan on Saturday dropped a bombshell saying former minister K B Ganesh Kumar and Union minister K C Venugopal had illicit relationships with his wife and that it was Ganesh who destroyed his  family and their solar power business.

http://newindianexpress.com/states/kerala/Callgate-Saritha-hubby-targets-Ganesh-Venugopal/2013/06/16/article1637437.ece

[22] Union minister of state for Civil Aviation and Energy K C Venugopal claims he never helped her, though records of late calls from Saritha to him have been found.

http://newindianexpress.com/thesundaystandard/Keralas-first-couple-of-sleaze-and-blackmail/2013/06/23/article1648086.ece

[23]  K C Joseph, Kerala’s culture minister inaugurated Saritha’s Kottayam office.

http://newindianexpress.com/thesundaystandard/Keralas-first-couple-of-sleaze-and-blackmail/2013/06/23/article1648086.ece

[24] Phone call list of solar cheating scam accused Sarita S Nair made available is sure to give sleepless nights to many ministers. The phone list which first mentioned calls made to the chief minister and the home minister has now extended to some more ministers and KPCC president Ramesh Chennithala. On Thursday, when the phone call list was made available to the media, Ramesh Chennithala and union minister K C Venugopal, state ministers Aryadan Muhammed, K C Joseph, Adoor Prakash, M P Anilkumar, Shibu Baby John and MLAs P C Vishnunath, Benny Behan, Hiby Edin, former minister Moncy Joseph, congress leaders Shanimol Usman, T Sidhique among others figured in the list. The calls were made ranging from a few minutes to a longer duration, according to available documents.

http://www.mathrubhumi.com/english/story.php?id=137684

[28] The prime accused in the solar cheating case Biju Radhakrishnan had revealed to a private TV channel on Saturday that he is innocent and that his wife Sarita S Nair had illegal links with former minister K B Ganesh Kumar and that was the reason for all the present issues. Biju revealed that after the inauguration of his office in Coimbatore, Ganesh and Sarita had stayed together in a hotel. It was the managers who had revealed to him about their relationship. Records revealing the teleconversations between Sarita and Ganesh would be given to P C George later, Biju said.

http://www.mathrubhumi.com/english/story.php?id=137050

[29] Causing further trouble for the CM, Biju claimed he had met the chief minister once for an hour-long discussion on Ganesh’s affair with Saritha. Chandy is yet to reveal the details. However, he said that Biju was referred to him by Congress MP M I Shanavas.

http://newindianexpress.com/thesundaystandard/Keralas-first-couple-of-sleaze-and-blackmail/2013/06/23/article1648086.ece

அரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தம் என்ன – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தாக்கிய மர்மம் என்ன?

மார்ச் 21, 2013

அரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தம் என்ன – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தாக்கிய மர்மம் என்ன?

Aurobindu Ashram attacked by Dravidian group

இலங்கைப் பிரச்சினைக்காக புதுச்சேரியில் போராட்டம்: இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள ஐ.நா.தீர்மானத்துக்கு மத்திய அரசு அனைத்து கட்சிகளுடன் கருத்து கேட்டது. மேலும் நாடாளுமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவும் அரசியல் கட்சிகளிடம் மத்திய அரசு கருத்து கேட்டது. இதற்கு பிற மாநிலத்தில் உள்ள பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.  புதுச்சேரியில், மாணவர் கூட்டமைப்பு மற்றும் வணிகர்கள் சங்கம் உள்ளிட்ட, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில், கடையடைப்பு போராட்டம் இன்று நடந்தது. இதையொட்டி புதுச்சேரியிலுள்ள பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில், உண்ணாவிரதம், பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடந்தன[1]. அரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தம் என்ன?

DK attacked Ayodhya mantap with petrol bombs

ஶ்ரீலங்கா பிரச்சினை விஷயத்தில் மம்தா கூறியது: ஶ்ரீலங்கா பிரச்சினை விஷயத்தில் காங்கிரஸை ஆதரிப்பேன் என்று மம்தா கூறியிருந்தார்[2]. மம்தா பேஸ்புக்கில்[3] குறிப்பிட்டது, இவ்வாறாக உள்ளது[4]:

“Our Party supports the cause of the Tamil brothers and sisters. We are deeply concerned about the atrocities meted out to a section of Tamil population in a foreign country.Local sentiments and their causes sometimes become very critical. We are supporting their cause. At the same time, our Party follows a policy that we should not interfere into issues involving external relations with foreign countries. We leave it for the Central Government to decide on such issues. However, the concerns of the state and the sentiments of the people must be kept in view by the Centre, before taking any decision pertaining to foreign country.”

மாறாக, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இலங்கை நட்பு நாடு என்பதால் அந்நாட்டு எதிராக தீர்மானம் கொண்டு வரக்கூடாது என கருத்து தெரிவித்து இருந்தார், என்று தமிழ் ஊடகங்கள் கூறியிருக்கின்றன. ஆங்கிலத்தில் இருப்பதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் புதுவை அரவிந்தர் ஆசிரமம் அருகில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று பகல் 12 மணியளவில் ஒன்று கூடினார்கள். “தி ஹிந்து” காரணம் என்னவென்று தெரியவில்லை என்று குறிப்பிடுகின்றது[5].

புதுவையில் அரவிந்தர் ஆசிரமம் சூறை: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கடந்த காலங்களில் வன்முறையில் ஈடுபடுவதை பழக்கமாகக் கொண்டுள்ளனர். இப்பொழுதும், அரவிந்தர் ஆசிரமம் அருகில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று பகல் 12 மணியளவில் ஒன்று கூடி ஆர்பாட்டம் என்ற பெயரில், “ஒழிக” கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர். அதனால், யாரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர் அங்கிருந்து அதன் தலைவர் வீரமோகன், துணை தலைவர் இளங்கோ ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக வந்து ஆசிரமம் முன்பு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென்று ஆசிரமத்துக்குள் புகுந்து அங்கிருந்த பூ ஜாடிகளை அடித்து உடைத்தனர்[6]. மேலும் அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்த கண்ணாடிகள், அலுவலக பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினார்கள்[7]. மேலும் ஆசிரமத்தையும் கல்வீசி தாக்கினார்கள். இதில் ஆசிரம கட்டிடத்தில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்தன[8]. இதனால் அந்த பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையெல்லாம் மற்றவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர். யாரும் தடுத்ததாகத் தெரியவில்லை.

அப்படியென்றால், மென்மையான இலக்கு, தாக்குதலுக்கு ஏற்ற சௌகரியமான சின்னம், அவற்றைத் தாக்குவது சுலபம், யாரும் கேட்க மாட்டார்கள், அடித்தாலும், உதைத்தாலும், பெட்ரோல் பாம்ப் / குண்டு போட்டு வெடித்தாலும், ஏன் அரிவாளால் வெட்டினாலும் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள் என்று அவர்கள் எப்படி அடையாளம் காண்கிறார்கள் அல்லது காட்டப்படுகிறது. இதே மாதிரி மற்ற சின்னங்கள் ஏன் அடையாளம் காணப்படுவதில்லை, காணப்பட்டாலும், இதே மாதிரி தாக்கப்படுவதில்லை. அப்படியென்றல், இதில் உள்ள நுணுக்கம், ரகசியம், சதி தான் என்ன?

Salem Kanchi mutt attacked

எளிதான இலக்கைத் தேர்ந்தெடுத்து இவர்கள் தாக்குவது ஏன்?: உண்மையில் இவஎகள் தாக்க வேண்டும் என்றால், காங்கிரஸ்காரர்களைத் தாக்கியிருக்க வேண்டும். அவர்களது சின்னங்களைத் தாக்க வேண்டும் என்றால், சோனியா, ராஹுல், பிரியங்கா புகைப்படங்களைத் தாக்கியிருக்க வேண்டும். ஆனால், இப்படி சமந்தம் இல்லாமல் ஆசிரமத்தைத் தாக்குவது, பொருட்களை நாசம் செய்வது, வன்முறையில் ஈடுபடுவது என்பது இவர்களுக்கு வாடிக்கையாக இருந்து வருகின்றது. முன்பு, சென்னையில், பழைய மாம்பலத்தில், இதேபோல சம்பந்தமே இல்லாத, இரண்டு அப்பாவி பிராமணர்களைத் தாக்கி, அருவாளால் வெட்டியுள்ளனர். இப்பொழுது இங்கு இப்படி செய்த அட்டூழியத்திற்காக, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டனர்[9] என்று செய்திகள் வந்துள்ளன. அப்பொழுதும், வெட்டியதற்கு சிலர் கைது செய்யப்பட்டனர். ஆனால், பிறகு என்னவாயிற்று என்று எந்த செய்ட் ஹிகளும் வெளிவரவில்லை. இப்படி வன்முறையில் ஈடுபட்டு, ஒருவேளை கைது செய்யப்பட்டு விடுவிக்கப் பட்டால், அத்தகையோர் மறுபடி-மறுபடி வன்முறையில் ஈடுபடுவது வாடிக்கையாகி விடும்.

Raghavendra Brindavan attacked - Rama idol uprooted and thrown

© வேதபிரகாஷ்

21-03-2013


[5] A group of pro-Tamil activists today barged into the Aurobindo Ashram, damaged furniture and smashed glass panes after reportedly attacking and injuring the watchman. Police said activists of the Periyar Dravidar Kazhagam (PDK) also smashed flower pots and damaged the notice board, a clock and the ashram emblem atop the main gate. They also raised pro-Tamil slogans, police said, adding that the reason for the attack was not known.

http://www.thehindu.com/news/national/protamil-activists-attack-aurobindo-ashram/article4534302.ece

விநாயகருக்கு ஒரு மிஸ்டு கால் அனுப்புங்க, உடனே பரிசை அள்ளுங்க! விநாயகரிடமிருந்து பரிசைப் பெற!!

ஓகஸ்ட் 28, 2011

விநாயகருக்கு ஒரு மிஸ்டு கால் அனுப்புங்க, உடனே பரிசை அள்ளுங்க! விநாயகரிடமிருந்து பரிசைப் பெற!!


விநாயகருக்கு ஒரு மிஸ்ட் கால் அனுப்புங்க, உடனே பரிசை அள்ளுங்க! விநாயகரிடமிருந்து பரிசைப் பெற உங்கள் மொபைல் போனிலிருந்து டயல் செய்யுங்கள்……….என்று “சங்கீதா” என்ற கம்பெனி அரை பக்கத்திற்கு விளம்பரம் தினமலரில் கொடுத்துள்ளது[1]. வழக்கம் போல கண்ணுக்குத் தெரியாத  விதத்தில், “Conditions apply. Offer on select model only. Gifts can be claimed only againsy purchase. Admissibility of claims subject to terms & conditions of the insurance policy” என்று ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


இந்த விநாயக சதுர்த்தியில், எங்களிடம் ஃபோன் வாங்கும் முன்பே உங்களுக்கான பரிசைத் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கான நீங்கள், விநாயகருக்கு ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும் (ஆமாம் தயவு செய்து உங்கள் மொபைல் ஃபோனிலிருந்து மட்டும் டயல் செய்யுங்கள்). மற்ற செல்போனிலிருந்து செய்தால் என்னாகுமோ?

செக்யூலரிஸ வியாபாரமா அல்லது வியாபார செக்யூலரிஸமா? இது வியாபார யுக்தியா அல்லது சந்தர்ப்பவாதமா அல்லது வேண்டுமென்றே கிண்டலுக்காக செய்வதா? ஏனெனில், மற்ற பண்டிகைகளின் போது, அவ்வாறு யாரும் மற்ற கடவுளர்களுக்கு மிஸ்டு கால் அனுப்பச் சொல்லி விளம்பரம் செய்திருக்கவில்லை. கிருஷ்ண ஜெயந்தி சென்று சில நாட்களே ஆகின்றன. ரம்ஜான் 30-08-2011 அன்றும் மேரி ஜெயந்தி 08-09-2011 அன்றும் வருகின்றன. அப்பொழுதும் அத்தகைய விளம்பரங்களை வெளியிடுவார்களா? அந்தந்த கடவுளர்களுக்கு மிஸ்டு கால் கொடுக்கச் சொல்வார்களா?


[1] தினமலர், ஞாயிறு 28-08-2011, பக்கம்.16