Posts Tagged ‘வளைகுடா’

சவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: இலங்கைப் பிரச்சினை போன்று கேரளப்பிரச்சினை உருவாக்கப்படுகின்றதா?

ஏப்ரல் 14, 2013

சவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: இலங்கைப் பிரச்சினை போன்று கேரளப்பிரச்சினை உருவாக்கப்படுகின்றதா?

Saudi Arabia and its flag

பிரச்சார ரீதியில் முன்வைக்கப்படும் பிரச்சினை: பிரச்சினை உண்மையா, பொய்யா அல்லது பீதிகிளப்ப உருவாக்கப்பட்டுள்ளதா என்று அலசப்படும் நிலையில், ஊடகங்கள் மற்றும் தமிழில் எழுதுபவர்கள் வெவ்வேறுவிதமாக வரைந்து கட்டிக் கொண்டிருக்கிறார்கள்:

  • ஆசியக்காரர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
  • இந்தியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
  • கேரளத்தவரர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
  • கேரள முஸ்லீம்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
  • கேரள கிருத்துவர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
  • கேரள இந்துகளுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது[1].

என்று ஒருபக்கம் தலைப்புகள் இட்டு ஆங்கில ஊடகங்கள் அலசும்போது, தமிழில் கீழ்கண்டவாறு செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்:

  • சவுதி அரேபிய சட்டத்தினால் இந்தியர்கள் வேலை இழக்கக்கூடும்[2].
  • அரேபிய அரசின் நடவடிக்கையால் தமிழர்கள் வேலை இழக்கும் அபாயம்[3]
  • வேலை இழக்கும் தொழிலாளர்களை அழைத்து வர இலவச விமான சேவை[4]
  • கேரளாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உதவிமையம்[5]
  • சவுதியில் வேலை இழந்தவர்களுக்கு இந்தியாவில் வேலை.

என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், அரசியல்வாதிகளும் வாக்குற்திகளையும், சலுகைகளையும் அள்ளிவீசிக்கொண்டிருக்கிறார்கள்.

Saudi royal life

இலங்கைப் பிரச்சினை போன்று கேரளப் பிரச்சினை உருவாக்கப்படுதல்: இலங்கை விஷயத்தில், “தமிழர்-முஸ்லீம்”, “இலங்கைத்தமிழர்-தமிழ் முஸ்லீம்கள்” என்றெல்லாம் பேசியே, மக்களை அரசியல்வாதிகள்[6], ஊடகங்கள்[7] மற்ற நிபுணர்கள் ஏமாற்றிவிட்டனர். இலங்கையில் இப்பொழுதும் “தமிழர்” பிரச்சினை எப்படி பேசப்படுகிறது, “முஸ்லீம்” பிரச்சினை எப்படி அணுகப்படுகிறது என்பதனைப் பார்க்கலாம். முஸ்லீம்கள் அதனை சாமர்த்தியமாக, தமக்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள். தமிழர்கள் சென்னையில் / தமிழகத்தில் போஸ்டர்கள் ஒட்டிக் கொண்டு “ஆர்பாட்டம்” நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுதும் சவுதி அரேபியா வேலைப்பிரிப்புக் கொள்கை விஷயத்தில் “கேரளத்தர்”, “மலையாளிகள்” என்று பேசிக் குறிப்பிடப் படுகின்றனர். அங்கு “இந்தியர்” என்று குறிப்பிடுவதைவிட, இப்படி காட்டிக் கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

Saudi women

சவுதி அரேபியாவில் பிரச்சினை என்ன?: சவுதி அரேபிய நாட்டில், புதிதாக அமலுக்கு வந்துள்ள சட்டப்படி, அங்கு சிறிய தொழில்கள் செய்து வரும் இந்தியர்கள், அந்நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது[8] என்று தமிழ் நாளிதழ்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், “இதுகுறித்து கவலைப்படவேண்டாம்’ என, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர், வயலார் ரவி தெரிவித்தார் என்றும் கூறுகின்றன. உண்மையில் பிரச்சினை என்னவென்று அலசாமல், நுனிபுல் மேய்கின்ற மாதிரி கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகின்றன. நாத்திகம் பேசும் “விடுதலை” கூட, மற்றவர்கள் பிரசுரித்துள்ளதை அப்படியே போட்டுள்ளது[9]. “ஹிந்தி படித்தால் வேலைக் கிடைக்கும் என்றால், ஹிந்தி பேசும் மாநிலங்களில் வேலையில்லா திண்டாட்டம் ஏன்?”, என்று பகுத்தறிவோடு கேட்பது போல, இஸ்லாமிய நாட்டில் எல்லாம் கிடைக்கும் என்றால் ஏன் வேலை கிடைப்பதில்லை என்றோ, எல்லொரும் சமம் ஏன் முஸ்லீம்களுக்கே வேலை கொடுக்காமல் விரட்டுகிறார்கள் என்றோ கேள்விகள் கேட்கவில்லை. இதுதான் இந்திய செக்யூலரிஸவாதத்தின் தன்மை, மேன்மை மற்றும் மகத்துவம் போலும்!

Saudi women protesting

சவுதிமயமாக்கல் என்றால் என்ன: உண்மையில் சவுதி மயமாக்கல் என்றுதான் சவுதி அரசு பேசி வருகின்றது. மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்தும், தொடரும் இஸ்லாமிய நாடுகளில் சவுதியும் ஒன்று. அக்கால அரசர்கள் போலத்தான் இன்றும் சகவாசிகளாக எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டு வருகிறார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் என்றுதான் வாழ்கிறாற்கள். அந்நிலையில், மென்பொருள்-வன்பொருள் என்றமுறையில், அறிவுசார்ந்த-உடல்சார்ந்த உ௳ஐப்புகளுக்கு அவர்களுக்கு ஊழியர்கள்-வேலையாட்கள் தேவைப்பட்டது. அக்காலமாக இருந்தால், வேண்டியவர்களை விலை கொடுத்து வாங்கி, அடிமைகளாக வேலைக்கு வைத்திருப்பர். இப்பொழுது, காசு கொடுத்து வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் மற்ற இஸ்லாமிய நாடுகளில் புரட்சி என்ற பெயரில் மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு வருகிறது. இருப்பினும் மெக்கா-மெதினா அல்லது மக்கா-மதினா தங்களது கட்டுக் காப்பில் உள்ளதால், தான்தான் இஸ்லாமியத்தைக் காத்து வருவதில் முதலில் இருக்கிறேன் என்றும் காட்டிக் கொண்டு வருகிறது. இதனை இரான் போன்ற நாடுகள் மறுத்து வருவது வேறு விஷயம். ஆகவே, உள்ளூர்வாசிகளுக்குத்தான் வேலை என்பது “சவுதிமயமாக்கல்” திட்டத்தின் கீழ் வருகிறது, அதன்படி தான் “நிகாதத்” என்ற இஸ்லாமிய சட்டம் எடுத்துவரப்பட்டுள்ளது.

Saudi worker

இஸ்லாம் மயமாக்கல் என்றால் என்ன: சவுதி மயமாக்கல் என்பது இஸ்லாம் மயமாக்கல் தான், எனெனினும், முஸ்லீம்களும் அதில் பாதிக்கப்பட்டுள்ளானெரே எனலாம். அங்குதான், சுத்த-ஆசார இஸ்லாமிஸம் மற்ரும் வாஹாபியிஸம் வருகிறது. குரானை, அல்லாவை, முஹம்மது நபியை ஏற்றுக் கொண்டவர்கள் எல்லோரும் “முஸ்லீம்கள்” தான் என்றாலும், எல்லா முஸ்லீம்களும் சுத்தமான முஸ்லீம்கள் ஆகிவிடமுடியாது. “ஹஜ்ஜின்” போது, எப்படி பலநாட்டு முஸ்லீம்கள் பலவிதமாக் கருதப் படுகின்றனரோ அதுபோலத்தான். சவுதிமயமாக்கத்தில், சவுதி முஸ்லீம் மற்ற முஸ்லீம்களைவிட உயர்ந்தவர்கள் ஆகிறார்கள். அதனால், இந்திய முஸ்லீம்கள் வெளியேற்றப்படுகின்றாற்கள். நிறங்கள் எல்லாம் ஒரு மொன்னோடிதான். மக்கா-மதினா நகரங்களில் நுழைய அளிக்கப்படும் நுழைவு சீட்டு, பாஸ்போர்ட், பிரத்யேக அனுமதிசீட்டு போல அவை மாற்றப்படும்.

Saudi workerker striking

இலங்கை முஸ்லீம்கள் தமிழில் இணைத்தளத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது: இலங்கை முஸ்லீம்கள், ஊடகங்கள் முன்னர் இலங்கைப் பிரச்சினை விஷயத்தில் குறிப்பிட்டப்படி, ஒட்டுமொத்தமாக, தமிழ் பேசும் இலங்கை மக்களின் நலனிற்காகப் பாடுபடவில்லை. “முஸ்லீம்கள்” என்று தான் செயல்பட்டு, அரசுடன் இணைந்து பெறவேண்டியதைப் பெற்றுக் கொண்டனர். இப்பொழுதும், தங்கள் நாட்டுப் பிரச்சினையை, பொதுப்பிரச்சினைப் போன்று இணைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். உண்மையில், சவுதி அரேபியர்கள் “முஸ்லீம்கள்” முஸ்லீம்களாக இருந்தாலும் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அது என்ன என்பதனை வெளிப்படுத்த வேண்டும். அப்படியென்ன முஸ்லீம்களிடத்தில் வித்தியாசம் உள்ளது என்பதனை தெளிவாக எடுத்துரைக்கவேண்டும்.

வேதபிரகாஷ்

14-04-2013


[1] இதுவரை யாரும் சொல்லவில்லை, ஏனெனில் அப்படி குறிப்பிட்டால், இந்திய செக்யூலரிஸ அளவுகோள்களின் படி, உடனடியாக அவர் “கம்யூனலிஸ” சித்தாந்தியாகி விடுகிறார்.

[4] “சவுதி அரேபிய அரசின், புதிய சட்டத்தால், அங்கு பணியாற்றும் இந்திய தொழிலாளர்கள், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேலை இழந்தவர்கள், கேரளாவுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கான விமான பயண கட்டணத்தை, மத்திய அரசே, செலுத்த முன்வந்துள்ளது,” என, கேரள முதல்வர், உம்மன் சாண்டி கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=681845

[5] இந்த விவகாரம் குறித்து, கேரள அமைச்சக கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. கேரளாவைச் சேர்ந்தவர்கள், சவுதியில், வேலை இழந்து திரும்பினால், அவர்களுக்கான மறு வாழ்வு பணிகளை மேற்கொள்வது குறித்தும், அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஒவ்வொரு மாவட்ட, கலெக்டர் அலுவலகங்களிலும், உதவி மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, உம்மன் சாண்டி கூறினார்.