Posts Tagged ‘ராம்விலாஸ் பஸ்வான்’

நிதிஷ்குமாரை சாடிய சோனியா, ராகுல், மன்மோஹன் முதலியோர் மண்ணைக் கவ்வினர்!

நவம்பர் 24, 2010

நிதிஷ்குமாரை சாடிய சோனியா, ராகுல், மன்மோஹன் முதலியோர் மண்ணைக் கவ்வினர்!

மொத்தம் 243 தொகுதிகளில் –

என்.டி.ஏ – 206 (ஜே.டி.யு – 115, பி.ஜே.பி – 91),

ஆர்.ஜே.டி -25,

காங்கிரஸ் – 4,

இடது – 1,

மற்றவர் – 7 என்று வெற்றிப்பெற்றுள்ளனர்.

ஐந்தாண்டு ஆட்சியில் மக்கள் உண்மையாகவே பீஹாரிகள் வளர்ச்சியைக் கண்கூடாக பார்த்தனர். சாலைகள், மருத்துவ மனைகள், சட்டம்-ஒழுங்குமுறை, சுகாடாரம், படிப்பு என்று முக்கியத் துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஊழல் குறைந்துள்ளது. இதெல்லாமே, முந்தைய லாலு அரசிற்கு மாறுபட்டது, மக்கள் தெளிவாக உணர்ந்தது, அறிந்தது. ஆனால், சோனியா, ராகுல், மன்மோஹன்சிங், தேர்தல் பிரச்சாரம் போது, அப்பட்டமாக பொய்களை வாய்கூச்சமல் வாரி இறைத்துள்ளனர். இதனை மக்கள் நிச்சயமாக விரும்பவில்லை. அவர்கள் சரியான பதில் அளித்துள்ளனர்.

16-10-2010 பபுவா மற்றும் பக்ஸார்: சோனியா சேர்ந்து பீஹாரின் பின்தங்கிய நிலைக்குக் காரணம் நிதிஷ்குமாரின் ஆட்சிதான் காரணம் என்று 16-10-2010 அன்று பபுவா மற்றும் பக்ஸார் என்ற இடங்களில் நடந்த பொது கூட்டங்களில் பேசினார். வெறும் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை கனவு உலகத்தில் வைத்துள்ளார். இதனால்தான், பிஹாரில் உள்ள வேலையின்மையினால், மக்கள் மற்ற மாநிலங்களுக்கு மக்கள் வேலைத் தேடி செல்கின்றனர். ஆகையால், வேலையின்மை, ஏழ்மை, பின்தங்கிய நிலமை முதலியவை பீஹாரில் இருக்கின்றன, என்றெல்லாம் வசவு பபட்டுப் பாடி சென்றார்[1].

24-10-2010 கிஷண்கஞ் மற்றும் மோதிஹாரி: சென்ற 24-10-2010 அன்று முஸ்லீம்கள் அதிகமாக உள்ள தொகுதிகளான கிஷண்கஞ் மற்றும் மோதிஹாரி என்ற இடங்களில் பேசும்போது, நிதிஷ்குமார் ஒரு சந்தர்ப்பவாதி என்றும், அதனால்தான் பாஜகவுடன் கூட்டு வைத்திருப்பதாகாக சாடி பேசினார். அதுமட்டுமல்லது, மத்திய அரசு கொடுக்கும் நிதியை சரியாக பயன்படுத்தவில்லை, அந்நிதி எங்கே போகிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை, ஊழலைப் பற்றிய எல்லாம் புகார்கள் வந்துள்ளன என்றெல்லாம் பேசினார்[2]. வளர்ச்சி பற்றி பேசும் போது, மத்திய அரசு ஒப்புதல் அளித்தப் பிறகு கூட, அலிகர் முஸ்லீம் பலகலைக்கழகத்திற்கு நிலம் கொடுக்காமல் இருக்கிறது.

28-10-2010 பகல்பூர்[3]: பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாற்றியுள்ளார். பீகார் மாநிலம் பகல்பூர் என்ற இடத்தில் இன்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் இக்குற்றச்சாற்றைக் கூறிய அவர், பீகார் அரசு கல்வி, சுகாதாரம் என எல்லாவற்றிலும் பின் தங்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மின்சாரம், குடிநீர், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றிற்கு எதுவும் செய்யப்படவில்லை என்றார். இந்த துறைகளுக்கு மத்திய அரசு போதுமான உதவிகளை செய்தது. ஆனால் அவற்றை பீகார் அரசு சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் கூறினார். மேலும் அவர் கூறுகையில், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி புகார்கள் வந்துள்ளன. ஆனால் அது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நிதிஷ் குமார் ஒரு சந்தர்ப்பவாதி. தன்னை மதச்சார்பற்றவர் என அடையாளப்படுத்தி கொள்கிறார். அதே நேரத்தில் தேர்தலுக்காக, மதச்சார்புடைய கட்சியுடன் கூட்டணி அமைத்து கொள்கிறார்[4], காங்கிரஸ் மட்டும் தான், உண்மையான மதச்சார்பற்ற அரசியல் கட்சி, என்று அவர் மேலும் கூறினார்.

மன்மோஹன் சிங்: இதற்கு முன்பாக மன்மோஹன் சிங்கும் இதே மாதிரி மத்திய அரசு கொடுக்கும் நிதியை சரியாக பயன்படுத்தவில்லை, திட்டங்களுக்குக் ஒடுத்த பணத்தை உபயோகப்படுத்தி விட்டு, அதற்காக, அவர் பெயர் வாங்கிக் கொள்வது வேடிக்கையாக இருக்கிறது என்றெல்லாம் பேசினார்[5]. காங்கிரஸுக்கு செக்யூலார் இமேஜ் இருக்கிறது, ஆனால், நிதிஷ்குமார் பிஜேபியின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடுகிறது. அராரியா மாவட்டத்தில் 16-10-2010 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் இவ்வாறெல்லாம் பேசினார்.

ராகுல் பேசியது (14-10-2010 மற்றும் 18-10-2010): கதிஹர் என்ற இடத்தில், பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியபோது, நிதிஷ்குமார் இரட்டை வேடம் போடுகிறார். குஜராத் மோடியை ஆதரிக்கிறார். நாங்கள் செக்யுலார் அஜென்டாவைப் பின்பற்றப் பார்க்கிறோம். இந்த நாட்டில், ஹிந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்..எல்லோருமே இருக்க விரும்புகிறோம். இரண்டு தலைவர்களுக்காக இல்லை”, என்றெலாம் பேசினார்[6]. இதைத் தவிர மற்ற பாட்டுகளைப் பாடினார். இதில் முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இரண்டு முறை ராகுல் பீஹாரில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்[7].

18-11-2010 – ஆராவது கட்ட தேர்தல் கூட்டத்தில் பேசியது: மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம், ஜவாஹர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், கிராமங்களில் மின்வசதி ஏற்படுத்தும் திட்டம் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தவிர, விவசாயிகளின் கடன் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் பிகார் மாநில அரசோ, மத்திய அரசிடமிருந்து எவ்வித நிதி உதவியும் கிடைக்கவில்லை என தவறான பிரசாரத்தை செய்து வருகிறது. பல்லாயிரம் கோடி நிதியை மத்திய அரசு அளித்தபோதிலும் அதை மறைத்து பிரசாரம் செய்கிறது மாநில அரசு. இவற்றுக்கெல்லாம் மேலாக இந்த நிதி ஏழை மக்களைச் சென்றடையவில்லை என்பதுதான் கவலையளிக்கிறது என்றார்.

நிதிஷ்குமார் நல்லாட்சி செய்கிறர் என்று ராகுல் முன்பு புகழ்ந்தது: “பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நல்லாட்சி செய்கிறார். அவரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன’ என, ராகுல் பாராட்டியது குறித்து, அமைச்சர் லாலுவிடம் கேட்ட போது, “நிதிஷ்குமார் பற்றி ராகுல் என்ன சொன்னார் என்பது எனக்குத் தெரியாது. “நல்லாட்சி நடத்துவதாக நிதிஷ்குமாரை அவர் புகழ்ந்திருந்தால், அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். பீகாருக்காக நல்லது எதையும் நிதிஷ்குமார் செய்யவில்லை. அப்படிச் செய்திருப்பதாக காங்கிரஸ் கட்சி வேண்டுமானால் நம்பலாம். ஆனால், நான் அந்தக் கட்சியைச் சேர்ந்தவன் இல்லை’ என்றார். ராகுலின் பேட்டி குறித்து ராம்விலாஸ் பஸ்வானிடம் கேட்ட போது, “பீகார் முதல்வர் நல்லது செய்திருப்பதாக காங்கிரஸ் கட்சி நம்பினால், ஏன் அந்தக் கட்சி ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இப்படி பக்குவம் இல்லாமல் முன்னுக்கு முரணாக பேசியாதால்தான், சரத் யாதவ், ராகுலை கங்கையில் தூக்கியெறிய வேண்டும் என்று கிண்டல் அடித்தார்[8]. “ராகுலுக்கு என்ன தெரியும், யாரோ எழுதி கொடுப்பதை மனப்பாடம் செய்து ஒப்பித்து, ராஜிவைப்போல நடிக்கிறார். மக்கள் நொந்துபோய் இருக்கின்றனர். மக்கள் இவர்களை கங்கையில் தூக்கி எறிந்திருக்கவேண்டும்”

சோனியா-ராகுல் சொன்ன பொய்களால் மக்கள் சரியான பாடம் கற்பித்துள்ளனர்: சோனியாகூட தாங்கள் மறுபடியும் ஆரம்பத்திலிருந்து தங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ள ஆவண செய்துகொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று ஒப்புக்கொண்டார். ராகுல் காந்தியின் பார்முலா, அவர் சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே படு தோல்வி அடைந்திருப்பதால் காங்கிரஸ் வட்டாரமும் தனது நிலையை மறு ஆய்வு செய்ய வேண்டியதுள்ளது[9]. ராகுல் காந்தி போட்ட கணக்கு முதல் முறையாக ஒரு சட்டசபைத் தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளது. இத்தேர்தலுக்காக ராகுல்காந்தி பீகாரில் பல முறை வலம் வந்து, ஏழைகளின் குடிசைகளுக்கெல்லாம் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் ராகுல் காந்தியை ஒரு பொருட்டாகவே பீகார் வாக்காளர்கள் கருதவில்லை என்பது கடந்த முறையை விட குறைவான 6 இடங்களே கிடைத்துள்ளதிலிருந்து வெளிப்பட்டுள்ளது.

வேதபிரகாஷ்

© 25-11-2010