Posts Tagged ‘மேளம்’

ஜுபின் மெஹ்தாவின் எஹாஸ்-இ-காஷ்மீர் மற்றும் பிரிவினைவாதிகளின் ஹகீகத்-இ-காஷ்மீர் – காஷ்மீரத்தில் போட்டி இசைக்கச்சேரி எப்படி நடந்தது?

செப்ரெம்பர் 10, 2013

ஜுபின் மெஹ்தாவின் எஹாஸ்-இ-காஷ்மீர் மற்றும் பிரிவினைவாதிகளின் ஹகீகத்-இ-காஷ்மீர் – காஷ்மீரத்தில் போட்டி இசைக்கச்சேரி எப்படி நடந்தது?

 

காஷ்மீரத்தின் பாரம்பரிய இசைக்கருவிகள்

காஷ்மீரத்தின் பாரம்பரிய இசைக்கருவிகள்

 

ஜுபின்மேத்தாஒருயூதர்என்றபொய்பிரச்சாரம்[1]: ஜுபின் மேத்தா ஒரு யூதர் என்ற பொய் பிரச்சாரம் கூட நடந்து கொண்டிருக்கிறது. இதைப் பற்றி அவரிடம் கேட்டபோது, “முதலில் நான் இந்தியன் என்ற அடையாளத்தைக் கொண்டிருக்கிறேன். என்னிடம் இந்திய பாஸ்போர்ட் இருக்கிறது. நான் அதைக் கொண்டு வந்து, மக்களிடம் காட்டியிருக்க வேண்டும். ஏனெனில், இப்பொழுது தேவையில்லாமல் நான் ஒரு யூதர் என்று இங்குள்ள மக்கள் நினைக்கிறார்களாம். அது மிகவும் பொய்யான விசயமாகும்”, என்றார்[2]. இஸ்ரேலில் தனது இசைக்குழு ஆரம்பித்தது, இஸ்ரேல் அரசாங்கத்தால் பாராட்டப்பட்டது முதலியவற்றை வைத்துக் கொண்டு,, இவர் “ஓரு யூதர்” என்பது போன்ற பிரச்சாரம் நடக்கிறது போலும்[3].இந்தியவிரோத, ஊடகங்கள் ஜுபின் “முஸ்லிம்கள்-யூதர்கள்” இணைக்கப் பாடுபடுகிறார் என்றும் செய்திகள் வெளியிட்டன[4]. தனக்கு ஒரு குழந்தை இஸ்ரேலில் உள்ளது என்று ஒப்புக் கொண்டதாகவும், இணைதளங்கள் சொல்கின்றன[5]. “முஸ்லிம்-யூதர்கள்” பிரச்சினை அவர்களுடையது, ஆனால், அதை இந்தியாவுன் இணைத்து அடிப்படைவாதத்தைத் தூண்டிவிட பார்க்கிறார்கள் என்று தெரிகிறது.

 

ஜுபினுக்கு தடை, இஸ்ரேலுக்கும் தடை

ஜுபினுக்கு தடை, இஸ்ரேலுக்கும் தடை

ஜூபின் மேத்தா ஒரு யூதர் என்றும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. 

ஹகீகத்-இ-காஷ்மீர் – இஸாஸ்-இ-காஷ்மீருக்க்கு எதிராக – எதிர்பாட்டு[6]: ஜுபின் இசைநிகழ்ச்சியை எதிர்த்து நடத்திய பிரவினவாதிகளில் இசைநிகழ்ச்சி வேடிக்கையாக இருந்தது. ஏனெனில், இசை கூடாது என்றவர்கள் இசைக் கருவிகளுடன் இசையை முழக்கியதுதான் அந்த வேடிக்கை (தாரை-தப்பட்டை போன்று முழக்கி / அடித்து) முனிசிபல் பார்க், ஶ்ரீநகரில் நடந்தது[7]. ஏதோ காஷ்மீரத்தில் இசையே இருந்ததில்லை என்பதுபோல, அடிப்படைவாதிகள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால், காஷ்மீரத்தின் கலாச்சாரம் தெரிந்தவர்கள் அவ்வாறு கூறமாட்டார்கள். இதற்கு அரசு எந்த தடையினையும் விதிக்கவில்லை[8]. இசைக்கச்சேரி, பாட்டு முதலியவை இஸ்லாத்திற்கு விரோதமானது என்று சொன்னவர்களும் எதிர்க்கவில்லை. மாறாக கலந்து கொண்டார்கள். இதிலிருந்தும், இவர்களது இரட்டைவேடம், போலித்தனம் முதலியவை வெளிப்படுகின்றன.

 

காஷ்மீரத்தின் பாரம்பரிய இசைக்கருவிகள்

காஷ்மீரத்தின் பாரம்பரிய இசைக்கருவிகள்

அருந்ததி ராய் போன்றோர் எங்கே காணவில்லை என்று தெரியவில்லை: ஜிலானி முதலியோர் இருந்தபோது, அருந்ததி ராயை ஏன் காணவில்லை என்று தெரியவில்லை. என்.டி டிவியின் பிரணாய் ராயின் மைத்துனி உறவில் இருக்கும் அவரை கண்டு பிடித்து, பேட்டியில் கலந்து கொள்ள செய்திருக்கலாம். ஆனால், இப்படி அடிக்கடி அவர் காணாமல் போவது ஆச்சரியமாக இருக்கிறது. இல்லை, வாரத்தின் இறுதி நாட்களில் அவர்களது புரோகிராமின் படி பிசியாகி விடுவார்கள் போலிருக்கிறது. அந்நிலையில் அவர்களக் கூப்பிடவும் முடியாது, அவர்கள் வர்ரவும் முடியாது போலும்!

ஜிலானி-அருந்ததி

ஜிலானி-அருந்ததி

பரிக்கிரமா அரசியல் – காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலத்தில் ஒருமாதிரி, மற்ற ம்மஆந்நிலங்களில் வேறுமாதிரி: பரிக்கிரமா – சுற்றிவருதல் என்பது ராமர்-கிருஷ்ணர் போன்றோர்கள் சம்பந்தப்பட்ட இடங்களை பக்தர்கள் சுற்றி வருதல் என்ற தீர்த்தயாத்திரை போன்ற நிகழ்ச்சியாகும். உதாரணத்திற்க்கு, சைதன்யர் எப்படி கிருஷ்ணர் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று வந்தாரோ, அதேபோல, பக்தர்கள் இன்றும் சென்று வருவர். புரிந்து கொள்வதற்கு சொல்லவேண்டுமானால், இது நம்ம ஊர் கிரிவலம், காவடி / பால்குடம் ஊர்வலம் போன்ற சுற்றுவரும், ஊர்வலம் செல்லும் நிகழ்ச்சி ஆகும். இவை வருடம் தோறும் குறிப்பிட்ட நாள், வாரம், மாதங்களில் நடந்து வருகின்றன. இவற்றிற்கு யாரும் விளம்பரம் கொடுப்பதில்லை, தேவையும் இல்லை. ஏனெனில், காலம்-காகமாக மக்கள் கொண்டாடப் பட்டுவரும் நிகழ்ச்சிகள் ஆகும். அவற்றை யாரும் தடுக்க முடியாது. ஆனாக், காங்கிரஸ் அதனை அரசியல் ஆக்கியுள்ளது[9]. காங்கிரஸ்-முல்லாயம் கூட்டு இருப்பதனால், தடை செய்யப்பட்டது. சமீபத்தில் கிருஷ்ணர் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று வந்த பரிக்கிரமா அமைதியாக நடந்துள்ளது[10]. எந்த செய்தியும் வரவில்லை. ஏனெனில் அவை ராஜஸ்தானில் நடந்துள்ளன. ஆனால், அவையே, ராமர் விசயத்தில் உபியில் நடத்த தீர்மானித்தபோது, முல்லாயம் வழக்கம் போல அரசியல் ஆக்கினர், காங்கிரஸும் அதனை ஆதரித்தது. ஊடகங்களும் துணை போயின.

 

Susanna Arundhati Roy casually

Susanna Arundhati Roy casually

என்.டி டிவியினரின் பரிக்கிரமா நிகழ்ச்சி செய்திகள்: பரிக்கிரமா – சுற்றிவருதல் சடங்கைப் பற்றி இதே என்.டி டிவியினர் வேறுவிதமாக செய்திகளை வெளியிட்டது[11]. அதே பர்கா தத் (2ஜி ஊழலில் ஊழல் பத்திரிக்கை யுக்திகளை கையாண்ட ஊடகக்கார பெண்மணி) வேறுவிதமாக கருத்துகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். சனிக்கிழமை (07-09–2013) நடந்த “பெரிய சண்டை” நிகழ்ச்சியில், இவர் இல்லை. அதில் வி.எச்.பி.காரர், இந்திய செக்யூலரிஸ இரட்டைவேடங்கள், மோசடிகள் முதையவற்றைப் பற்றி எடுத்துக் காட்டிபோது, என்.டி டிவி ஏங்கரோ, பங்கு கொண்ட உவைசி, கமால் பருக்கி முதலியோர்களின் முகங்கள் சுருங்கி விட்டன. அவர்களால் ஒன்றும் பேசமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்களே இதனைப் புரிந்து கொண்டார்கள். அவர் இந்தியில் பேசியதால், ஒருவேளை அந்த இளைஞர்களுக்கு நன்றாக புரிந்தது போலும்.

 

கல்லடி-காவாலித்தனத்தை-செய்துகாட்டும்-இந்தியவிரோதி

கல்லடி-காவாலித்தனத்தை-செய்துகாட்டும்-இந்தியவிரோதி

முஸ்லிம் ஓட்டுவங்கியை உருவாக்கி, அவர்களை தம்மக்கு சாதகமாக ஒட்டளிக்க வைக்க வேண்டும் என்பதற்காக, இத்தகைய வேலைகள் நடக்கின்றன எனலாம். ஆனால், முஸ்லிம்கள் ஏன் அத்தகைய அரசியல்வாதிளின் திட்டங்களுக்கு,, நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஒத்துழைப்புக் கொடுக்கிறார்கள், அவ்வாறே நடந்து கொள்கிறார்கள் என்பதை பார்க்கவேண்டும். ஓருபக்கம், அவர்களும் முன்னேற வேண்டும், உழைக்கவேண்டும் என்ற எண்ணங்களுடன் இருந்தாலும், சில முஸ்லிம் தலைவர்கள் மற்றவர்கள், தங்களது ஆதாயங்களுக்காக உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள் என்றால், அவர்களுக்குள் எப்படி ஒற்றுமை வரும்?

 

© வேதபிரகாஷ்

09-09-2013


[2] On his citizenship, he said his first identity was as an Indian. “Absolutely! I should have brought my passport and showed it, once for all. There are people who think I am Israeli. That’s rubbish”.

http://www.ndtv.com/article/india/zubin-mehta-s-kashmir-dream-that-will-never-be-fulfilled-416065?curl=1378711189

[3] Conductor and musical director Zubin Mehta has admitted that he is the father of an 8-year-old illegitimate Israeli boy. An interviewer for the London Sunday Telegraph this week mentioned rumors that Zubin Mehta had “a smattering of illegitimate children from various affairs” during the course of his 30-year marriage to former actress Nancy Kovack. When pressed on reports of his extramarital children, Mehta admitted: “There is a child in Israel.” Asked if he and the child were close, Mehta replied: “I am getting to be close. I couldn’t communicate with him because I don’t speak Hebrew, but he’s starting to speak English.” While Mehta, 63, does not have any children from his marriage to Kovack, he does have two by his first wife, Canadian Carmen Lasky, who is now married to his younger brother, Zarin. Mehta launched his career as the conductor of the Israel Philharmonic Orchestra, where he established an international reputation, and, while still in his early 30s, became the youngest musical director of the Los Angeles Philharmonic Orchestra. He currently lives in Los Angeles and retains a close attachment to Israel, but spends the bulk of his work as the musical director of both the Munich Philharmonic Orchestra and the Bavarian State Opera. Read more: http://www.jta.org/1999/08/23/news-opinion/conductor-zubin-mehta-admits-he-has-illegitimate-son-living-in-the-jewish-state#ixzz2eOAtuCMz