Posts Tagged ‘மாட்டுக்கறி’

பசு மாமிசமும், மாட்டிறைச்சியும்: உசுப்பி விடும் ஊடகங்கள், ஓவைசி போன்ற கலவரக்காரர்கள், குளிர்காயும் எதிர்கட்சிகள், அரசியலில் மாட்டிக் கொண்ட பிஜேபி!

ஏப்ரல் 4, 2017

பசு மாமிசமும், மாட்டிறைச்சியும்:  உசுப்பி விடும் ஊடகங்கள், ஓவைசி போன்ற கலவரக்காரர்கள், குளிர்காயும் எதிர்கட்சிகள், அரசியலில் மாட்டிக் கொண்ட பிஜேபி!

Congress - calf and cow symbol

பசுவின் முக்கியத்துவம்: பாரதத்தில் பசுவைப் போற்றும் பழக்கம் பழங்காலத்திலிருந்து இருந்து வருகிறது. பசுவதை பெரும்பாவம் என்று கல்வெட்டுகளில் அதிகமாகவே குறிப்பிடப் பட்டுள்ளன. “இந்தக் கல்வெட்டை சிதைத்தால் கங்கைக்கரையில் காராம் பசுவை (சினைப் பசு) கொன்ற பாவம் கிடைக்கும், ” போன்றவை மிகப்பிரபலம். பிராமணர்கள் தாம் தாவர உணவை சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர், மற்றவர்கள் எல்லாவகையான உணவுகளையும் உண்டு வந்தனர். பிறகு ஜைனர் மற்றும் பௌத்தர்கள் புலால் மறுத்தல், புலால் உண்ணாமை, ஜீவகாருண்யம் முதலியவை போதித்தாலும், அவர்களும் அவற்றைப் பின்பற்றவில்லை. ஏனெனில், சத்திரிய ஜைனர்கள் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். புத்தரே பன்றி இறைச்சி தின்று வயிற்றுப் போக்கு, ரத்தம் வெளியேறியதால் இறந்தார். மேலும், பௌத்தர்கள் மாமிசம் உண்பவர்களாக இருக்கின்றனர். சங்க இலக்கியங்களிலிருந்து, திருக்குறல் வரையிலுள்ளவற்றை திரும்பச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இக்காலத்தில் இதைப் பற்றி பிரச்சார ரீதியில் கருத்துகள் வெளியிடப் படுகின்றன. ஜீவகாருண்யம் பேசுபவன், எப்படி புலால் உண்ணுவான் என்று கூட யோசிக்காமல், கண்டவன் எல்லாம் சித்தாந்தம் பேச ஆரம்பித்து விட்டான்.

Get sinned if one kills cow

முகமதியஐரோப்பிய காலங்களில் பசுவதை: முகமதியர் இந்தியாவில் நுழைந்து, கொள்ளையடுத்து, பிறகு ஆட்சி செய்த காலங்களில், இவ்வுணர்வு அதிகமாகியது. ஏனெனில், அவர்கள் மாமிசம் உண்பவர்கள் மட்டுமல்லாது, பசுமாமிசம் உண்பவர்களாகவும் இருந்தனர். ஐரோப்பியர்கள் அப்பழக்கத்தைக் கொண்டிருந்ததால், அவ்வாறே சித்தரிக்கப் பட்டனர். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் [1839-1898] புலால் உணவுக்காக உயிர் வதை செய்வதை மிகக் கடுமையாகக்    கண்டித்தவர். அந்தக் காலத்தில் ஆங்கிலேயர் பசுக் கொலை செய்து ஊன் தின்னும் கொடுமையை வெறுத்துத் தாக்கி 100 பாடல்கள் கொண்ட ‘ஆங்கிலேயர் அந்தாதி’ என்னும் சமுதாய சிந்தனை நூலை இயற்றியவர். பாரதத்தைப் பொறுத்த வரையில், மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் இருந்தாலும், பசு மாமிசம் உண்பதில்லை. அதே போல, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்ற பண்டிகை-விரத காலங்களில் மாமிசம் உண்பதில்லை. அத்தகைய ஒரு நெறிமுறை பின்பற்றப்பட்டு வந்தது. இதனால், மக்களிடையே எந்த பிரச்சினையோ, விவாதமோ வந்ததில்லை. ஆகவே, இத்தகைய உணவு உண்ணும் பழக்க-வழக்கங்களில், மாமிசம் அறவே உண்ணாக்கூடாது என்று சொல்லவே, அமூல் படுத்தவோ முடியாது. பசுவதை மூலம் கலவரங்களை உண்டாக்கலாம் என்றறிந்து, பரிசோதனை செய்தவன் வெள்ளைக் காரன். அச்சதியில் ஒத்துழைத்தவர்கள் முகமதியர். இக்கலை இப்பொழுதும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளால் பின்பற்றப்பட்டு வருகிறது.

Anti-Gandhi pro-beef campaign

மாட்டிறைச்சியும், பசு மாமிசமும்: மாட்டிறைச்சி எனும்போது, எருது, எறுமை முதலியவற்றின் மாமிசங்களும் இருக்கின்றன. முஸ்லிம்கள், கிருத்துவர்கள், மேனாட்டவர் போன்றோர் தாம் பசுமாமிசமும் உண்கின்றனர். இந்துக்களில் 90% பசுமாமிசம் உண்பதில்லை. எனவே, பசு மாமிசம் உண்ண மாட்டோம், பசுவதை செய்யமாட்டோம் என்று மற்றவர்கள் சொன்னாலே, இப்பிரச்சினை இல்லாமல் போய்விடும். மாட்டிறைச்சியை உண்பதை யாரும் தடுக்க முடியாது. இப்பொழுது கூட சட்டம், தண்டனை முதலியவை “பசுவதை” பற்றி தான் உள்ளதே தவிர மற்ற மாட்டிறைச்சி பற்றியில்லை. ஆனால், ஊடகங்கள், இதனை ஊதி பெரிதாக்கி, செய்திகளை வெளியிட்டு கலாட்டா செய்து வருகின்றன. ஒவைசி போன்ற தீவிரவாத-அடிப்படைவாத முஸ்லிம்களும் திமிராக, நான் அப்படித்தான் பேசுவேன், முடிந்தால் வழக்குத் தொடுத்துக் கொள் என்று அகங்காகரமாக பேசி வருகின்றனர். இதிலிருந்தே, ஊடகங்களும், மற்றவர்களும், இதை வைத்து கலவரம் உண்டாக்க எத்தனித்திருப்பது தெரிகிறது.     முன்னரே குறிப்பிட்டப் படி, “பசு மாமிசம் உண்ண மாட்டோம், பசுவதை செய்யமாட்டோம் என்று மற்றவர்கள் சொன்னாலே”, இப்பிரச்சினை இல்லாமல் போய்விடும்.

Anti-Gandhi pro-beef campaign-gandhi against beef

பிஜேபிக்காரர்கள் குழப்புகின்றனரா, குழம்பியுள்ளனரா?: கேரள மாநிலம் மல்லப்புரம் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் ஸ்ரீபிரகாஷ் 03-04-2017 அன்று செய்தியாளர்களை சந்திக்கும் போது மாட்டிறைச்சிக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார். குறிப்பாக, சட்டீஸ்கர் முதல்வர் ராமன் சிங், ‘பசுவதை புரிவோரை தூக்கிலிடுவேன்’ எனக் கூறியிருந்தார்[1]. இதையடுத்து, நாடு முழுவதும் பா.ஜ.க-வின் பசு பாதுகாப்பு கொள்கைகள் விவாதங்களைக் கிளம்பியுள்ளன[2]. பிற மாநிலங்களில் உ.பி, ஜார்கண்ட், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில், பா.ஜனதா மாட்டிறைச்சிக்கு எதிரான கொள்கையை கொண்டு உள்ளநிலையில் தரமான மாட்டிறைச்சியை வழங்குவேன் என அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[3]. கேரள மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படவில்லை. உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததுமே சட்டவிரோதமாக செயல்பட்ட மாட்டிறைச்சி கூடங்கள் மீது நடவடிக்கை தொடங்கியது[4]. பிற பா.ஜனதா ஆளும் மாநிலங்களிலும் நடவடிக்கை இதனை அடுத்து அதிகரித்து உள்ளது. குஜராத் மாநிலத்தில் பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை வழங்கும் சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. இந்நிலையில்தான் ஸ்ரீபிரகாஷ் தொகுதி மக்களுக்கு தரமான மாட்டிறைச்சியை வழங்குவேன் என கூறியுள்ளார்.

Gandhi againat cow slaughter

பசுவதை மற்றும் மாட்டிறைச்சி சித்தந்தங்களை குழப்பும் ஊடகங்கள், அரசியல்வாதிகள்: “இடைத்தேர்தலில் எனக்கு வாக்களித்தால் உயர் தரமான மாட்டிறைச்சிகள் கிடைக்க செய்வேன், இறைச்சி கூடங்களை சுத்தமாக பராமரிக்க தேவையான நடவடிக்கை எடுப்பேன், தடையின்றி மாட்டிறைச்சி கிடைக்க வழி செய்வேன்,” என அவர் தெரிவித்திருந்தார்[5]. பசுவதை மற்றும் மாட்டிறைச்சிக்கு எதிரான சித்தாந்தங்களை உடைய பா.ஜ.க.வில் இருக்கும் அவர் இத்தகைய கருத்து கூறியிருந்தது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது[6]. இந்நிலையில், இன்று தன்னுடைய கருத்தில் இருந்து பல்டியடித்துள்ளார். செய்தியாளர்களிடம் இன்று பேசிய ஸ்ரீபிரகாஷ், “நான் பேசிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் பசுவதைக்கு முழுவதும் எதிரானவனே, உத்தரப்பிரதேசத்தில் செய்தது போல சட்டவிரோதமாக செயல்படும் இறைச்சிக் கடைகளை கேரளாவிலும் மூடுவோம் என சொல்லி, மக்களுக்கு தரமான உணவு கிடைக்க செய்வோம் என கூறியிருந்தேன்,” என தெரிவித்துள்ளார். மாட்டிறைச்சி குறித்து பா.ஜ.க வேட்பாளர் ஸ்ரீபிரகாஷ் இருவேறு கருத்துக்கள் தெரிவித்தது குறித்து அம்மாநில பா.ஜ.க தலைவர் கும்மனம் ராஜேந்திரனிடம் கேள்வியெழுப்பியபோது, அவருடைய பேட்டிகளை நான் பார்க்கவில்லை என பதிலளித்துள்ளார்.

Gandhi againat cow slaughter-MODI

பசுவதை தண்டனைப் பற்றிய குழப்பங்கள், சட்டங்கள்: குஜராத்தில் பசுவை கொன்றால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டம் ஏற்கெனவே அமலில் உள்ளது. எனினும் பசுவதை தொடர்பான சம்பவங்கள் அங்கு நீடித்து வந்ததை அடுத்து, தண்டனையை கடுமையாக்க மாநில அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் குஜராத் மாநில விலங்குகள் பாதுகாப்பு (திருத்தம்) சட்டம் 2011-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, புதிய சட்டம் நேற்று அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது[7]. இந்த சட்டத்தின்படி பசுவை கொன்றது உறுதியானால் அவர் களுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். மேலும் இறைச்சியை வாகனத்தில் கொண்டு சென்றாலோ, பதுக்கி வைத்தாலோ, விற்பனை செய் தாலோ அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். பசு மட்டுமின்றி, எருது, கன்றுக்குட்டி எருமைகளை கொன்றாலும் இச்சட்டம் பாயும். தவிர அனைத்து குற்றங்களுக்கும் ஜாமீனும் வழங்கப்படமாட்டாது என புதிய சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில உள்துறை இணையமைச்சர் பிரதீப்சின் ஜடேஜா கூறும்போது, ‘‘பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்க குஜராத் மாநில விலங்குகள் பாதுகாப்பு (திருத்தம்) சட்டம் 2011-ல் திருத்தம் செய்யும்படி சாதுக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர் களது கோரிக்கைக்கு இணங்க நாட்டிலேயே மிக கடுமையான சட்டம் குஜராத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது’’ என்றார். குஜராத் சட்டப்பேரவைக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடை பெறவுள்ள நிலையில், வாக்காளர்களை ஈர்க்கவும், அரசியல் ஆதாயம் பெறவும் மாநில அரசு இச்சட்டத்தை நிறைவேற்றி இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன[8].

Cow slaughter-Act-implementation-violation

பசுவதை, பசுவதை தடுப்பு, பசுமாமிசம் விற்பது, முதலியவற்ரைப் பற்றிய சட்டநிலைமை: பசுக்கள் வதைசெய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்திய அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 48ல், “பால் கொடுக்கும் பசுக்கள் மற்றும் கன்று குட்டிகள் மற்ற மாடுகளைக் கொல்வது நடக்காமல் அரசு தடை செய்ய வேண்டும்” என்றுள்ளது. அக்டோபர் 26, 2005 அன்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில், அரசியல் நிர்ணய சட்டத்தில் உள்ள அப்பிரிவை ஆமோதித்தது மட்டுமல்லாது, மாநிலங்கள் ஏற்படுத்தியுள்ள அத்தகைய பசுவதை எதிர்ப்பு சட்டங்களையும் ஆதரித்தது. ஆக, 24 2015 மாநிலங்களிலும் பசுவதை தடுப்பு, பசுமாமிசம் விற்பது, பற்றிய விவகாரங்களை ஒழுங்குபடுத்த சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், கேரளா, மேற்கு வங்காளம், அருணாசலப் பிரதேசம், மீசோராம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் தடையில்லை. இருப்பினும், ஏற்படுத்தப் பட்டுள்ள சட்டங்களின் ஓட்டைகளை உபயோகப்படுத்திக் கொண்டு, பொய்யான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு, பசுமாடுகள், கன்றுகள் முதலியன தடையில்லாத மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தடையுள்ள மாநிலங்களிலேயே சட்டங்களை மீறி, திருட்டுத்தனமாக கசாப்புக் கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் தான் அடிக்கடி கேரளாவுக்கு கடத்தப் படும் பசுமாடுகள் பிடிக்கப்படுகின்றன.

© வேதபிரகாஷ்

04-04-2017

Cow slaughter-Act-implementation-violation-in states

[1] விகடன், அனைவருக்கும் தரமான மாட்டிறைச்சி கிடைக்கச் செய்வேன்’ : பா.. வேட்பாளரின் வாக்குறுதி!, Posted Date : 15:26 (02/04/2017); Last updated : 10:00 (03/04/2017

[2] http://www.vikatan.com/news/india/85204-bjp-candidate-campaign-against-beef-ban.html

[3] தினத்தந்தி, எனக்கு வாக்களித்தால் தரமான மாட்டிறைச்சி கொடுப்பேன் பா.ஜனதா வேட்பாளர் வாக்குறுதி, ஏப்ரல் 02, 05:00 PM

[4] http://www.dailythanthi.com/News/India/2017/04/02170000/Give-me-your-vote-I-will-give-you-good-quality-beef.vpf

[5] மாலைமலர், ’பசுவதைக்கு நான் எதிரானவனேதரமான மாட்டுக்கறி வழங்கப்படும் எனக் கூறிய கேரள பா.. வேட்பாளர் பல்டி , பதிவு: ஏப்ரல் 03, 2017 22:57

[6] http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/03225742/1077888/Am-against-cow-slaughter-says-BJP-candidate.vpf

[7] தி.இந்து, பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை; ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்: குஜராத்தில் புதிய சட்டம், Published: March 31, 2017 14:45 ISTUpdated: April 1, 2017 09:12 IST

[8]http://tamil.thehindu.com/india/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-7-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article9609759.ece