Posts Tagged ‘பாபர்’

புனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (3)

ஓகஸ்ட் 22, 2015

புனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (3)

Gajendra Chauhan - Vaasanaa- afilm acted by him

Gajendra Chauhan – Vaasanaa- afilm acted by him

பிட்டு பட ஹீரோவை / செக்ஸ் நடிகரை கல்லூரி சேர்மனாக நியமித்த பாஜக : போராட்டத்தில் மாணவர்கள்[1]: இப்படி தலைப்பிட்டு உரு இணைதளம் இச்செய்தியை விம்ர்சித்துள்ளது. கஜேந்திர சௌஹான் 600 தொடர்களுக்கு மேல் நடித்துள்ளார். அது இப்போது பிரச்சினை இல்லை. அவர் ஆரம்பகால கட்டத்தில் நடித்த கில்மா படங்கள் தான் காரணம் என்று ஆரம்பிக்கிறது ஒரு இணைதளம். “சவுஹான் ஒரு செக்ஸ் நடிகர்” என்று இவரை பற்றி கூகுளில் தேடினால் அதிகம் ஷேர் ஆகும் வீடியோ ஒன்று கண்ணில் சிக்கியது[2]. வினவு தலைப்பிட்டு ஒருதலைப்படசமான விவரங்களைக் கொடுத்துள்ளது[3]. 1989-ல் ரிலீஸான “குலி கிட்கி” என்ற படத்தில் எசகுபிசகான ரோலில் டிஸ்கோ சாந்தியோடு நடித்திருக்கிறார். இதுபோன்ற மோசமான பி மற்றும் சி கிரேடு படங்களில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சினிமா நடிகர்கள் அசோஸியேன் தலைவராக இருந்த இவர் 2004-ல் பா.ஜ.க‍ வில் இணைந்தார். சின்னச்சின்னதாய் பல பொறுப்புகளை வாரி வழங்கிய பா.ஜ.க அரசு இத்தனை ஆண்டு விசுவாசத்துக்கான பலனாக உயரிய மற்றும் மிகக் கௌரவமான புனே திரைப்படக் கல்லூரி சேர்மன் பதவியை வழங்கிக் கௌரவித்திருக்கிறது. இவர் நியமிக்கப்பட்டதும் நூற்றுக்கணக்கான திரைப்படக் கல்லூரி மாணவர்கள் ஜூன் மாதம் 12ம் தேதியில் இருந்து இன்றுவரை காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களுக்கு ஆதரவாக முன்னாள் சேர்மனான இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனும் களத்தில் குதித்துள்ளார். பா.ஜ.க ஆதரவாளர் என்பதற்காக பிட்டு பட ஹீரோவையெல்லாம் நியமிப்பதா என்ற எதிர்ப்புக்குரல் கொடுக்கின்றனர்.

Mahesh Bhatt muslim kissing woman

Mahesh Bhatt muslim kissing woman

சென்டிமென்ட்டாக தூண்டில் போடுகிறார் என்று முடித்துள்ளது: இது குறித்து சௌகான் கூறுகையில், என் மகனுக்கு 25 வயது ஆகிறது. இங்கு படிக்கும் மாணவர்களும் 25 வயதுக்குள்தான் இருக்கிறார்கள். இந்தப் பிரச்னையை நான் தகப்பன் ஸ்தானத்தில் இருந்துதான் அணுகுவேன். உணர்ச்சிகளுக்கும் வெறும் கூச்சல்களுக்கும் நான் வேறுவிதமாக ரியாக்ட் செய்யமாட்டேன். நான் நடிகனாக தர்மராகவும் துரோகம் இழைக்கும் கணவராகவும் நடித்திருக்கிறேன். அது என் தொழிலில் சகஜம். இந்தப் போராட்டத்தில் மும்முரமாக எனக்கு எதிராகக் களம் இறங்கி இருக்கும் மாணவர்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்துக் காத்திருக்கிறேன், ஒரு நண்பனாக என சென்டிமென்ட்டாக தூண்டில் போடுகிறார்.

Gajendra Chauhan - Khuli khidki - afilm acted by him

Gajendra Chauhan – Khuli khidki – afilm acted by him

கல்லுாரி இயக்குனர் பிரசாந்த் பத்ரபேவை சிறை பிடித்த மாணவர்கள் மீது, புகாரின் பேரில், வழக்கு பதிவு, 5 பேர் கைது: புனே திரைப்பட கல்லூரிக்குள் செவ்வாய்கிழமை 18-08-2015 நள்ளிரவில் அதாவது 19-08-15 அதிகாலை 1.15 மணிக்கு புகுந்து 5 மாணவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்[4]. அவர்கள் மீது கலவரத்தை துாண்டுதல், சட்டவிரோத செயல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன[5]. பயிற்சி மைய தலைவராக புதிதாக நியமிக்கப்பட்ட கஜேந்திர சவுகானுக்கு எதிராக மாணவர்கள் போராடி வந்தனர். கல்லுாரி இயக்குனர் பிரசாந்த் பத்ரபேவை சிறை பிடித்த மாணவர்கள் மீது, அவர் அளித்த புகாரின் பேரில், 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் டெக்கான் ஜிம்கானா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டனர்[6]. மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள புகழ் பெற்ற இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயற்சி மையம் (FTII) உள்ளது. இதன் தலைவராக கஜேந்திர சவுகான் என்பவர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்திற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து 2 மாதங்களுக்கும் மேலாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திரைப்பட கல்லூரி மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் உள்பட 5 பேர் கொண்ட குழு தான் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக, பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டதில், பா.ஜ.க-வின் தலையீடு உள்ளதாகக் கூறி, கடந்த 69 நாட்களாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Janab Mahesh Bhatt and his second wife Parveen Babi

Janab Mahesh Bhatt and his second wife Parveen Babi

ஆகஸ்ட் 5 முதல் 17 வரை விடுதிகளில் தங்கியிருந்து ஆர்பாட்டம்: இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்த 30 முன்னாள் மாணவர்களை உடனடியாக வெளியேறும் படி நிர்வாகம் உத்தரவிட்டது, மேலும் தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில் அந்த மாணவர்கள் மேற்கொண்டிருந்த பணிகளை உடனடியாக முடித்து அவர்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுவாக இதெல்லாம் எல்லா கல்லூரிகளிலும் நடக்கும் விசயம் தான். இருப்பினும், இங்கு அரசியல் மற்றும் சித்தாந்தவாதிகளின் தாக்கம் இருப்பதினால் அரசாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 17-08-2015 திங்கள் இரவு மாணவர்கள் கல்லூரியின் இயக்குனர் பிரசாந்த் பத்ரபேவை சில மணி நேரங்கள் சிறை பிடித்தனர். இதனை அடுத்து இயக்குனர்  பிரசாந்த் பத்ரபேவை மாணவர்கள் பற்றி காவல்துறையில் புகார் அளித்தார். 2 பெண்கள் உட்பட 17 மாணவர்கள் மீது மேல் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இது தவிர 25 – 30 மாணவர்களின் பெயர்களும்  எப்.ஐ.ஆர். -யில் இடப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது[7].

Gajendra Chauhan - Jaungal ki rani - afilm acted by him

Gajendra Chauhan – Jaungal ki rani – afilm acted by him

கைது செய்யப்பட்ட மாணவர்கள், பிணையில் விடுதலை (19-08-2015): மாணவர்கள் நள்ளிரவு கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மீதான நடவடிக்கை அதிர்ச்சியளிப்பதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்து இருந்தார். அதேபோல், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் தனது டுவிட்டர் பக்கத்தில் நள்ளிரவு மாணவர்களை கைது செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.  இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மாணவர்கள் 5 பேரையும் ஜாமீனில் உள்ளூர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. காவலில் வைக்க வேண்டும் என்ற அரசு தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி நரேந்திர ஜோஷி 3 ஆயிரம் பிணைத்தொகையுடன் 5 பேரையும் ஜாமீனில் விடுவித்தார்[8]. நேற்று முன்தினம், கஜேந்திர சவுகானை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்நிலையில் புனே திரைப்பட கல்லூரிக்குள் நள்ளிரவில் புகுந்து போலீசார் 5 மாணவர்களை கைது செய்தது. இதனால் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது[9].

Janab Mahesh Bhatt and his three wives

Janab Mahesh Bhatt and his three wives

அரசியலாக்கப்பட்டப் பிரச்சினையும், வலதுசாரிகளின் பலஹீனமும்: காங்கிரஸ், ஆப் முதலிய கட்சிகள் இப்பிரச்சினையில் சேர்ந்து பெரிதாக்கி விட்டுள்ளன. கம்யூனிஸ கோஷ்டிகளுக்கு இதனால் குஷியான நிலை உருவாகி விட்டது. கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக இடதுசாரி, கம்யூனிஸ்ட் மற்றும் இதர அடிப்படைவாத சித்தாந்திகளின் கூடாரமாகி விட்ட இந்நிறுவனங்களை, திடீரென்று மாற்றிவிட முடியாது, ஏனெனில், பற்பல பகுதிகளில் அவர்கள் இன்று வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது மகள்-மகன்கள், உறவினர்கள், விசுவாசிகள், ஆதரவாளர்கள் என்றிருக்கும் அவர்கள் தத்தமது சொந்தங்களை, தோழர்களை, ஆட்களை, ஆதரிப்பார்களே தவிர மற்றவகளை ஆதரிக்க மாட்டார்கள். திரையுலகத்திலேயே பலர் எதிர்ப்பதிலிருந்து இதனை அறிந்து கொள்ளலாம். வலதுசாரி சித்தாந்திகளுக்கு அந்த அளவு திறமை, சாமர்த்தியம் மற்றும் அணுகுமுறை முதலியவை போறாது. அவர்களுக்கு சித்தாந்த பயிற்சி, செயல்படும் அனுபவம் மற்றும் பிரச்சார-எதிர்பிரச்சார நுணுக்கத் திறமை முதலியவை இல்லை.

Janab Bhatt, Dig - conspiracy-theory- book agaibst RSS

Janab Bhatt, Dig – conspiracy-theory- book agaibst RSS

“ரெடிமேட்”, “பாஸ்ட்-புட்” மற்றும் திடீர்-அதிரடி இந்துத்துவவாதிகளால் ஒரு பிரயோஜனமும் இல்லை: ஏதோ என்.டி.ஏ கூட்டாட்சி உள்ளது, பிஜேபிக்கு மெஜாரிட்டி உள்ளது என்ற நிலைகொண்டு, ஒன்றையும் உடனடியாக சாதித்து விட முடியாது. பிஜேபி ஆட்சியில் இருந்தால், இந்துத்த்வம் பேசுவது, இல்லையென்றால் மறைந்து விடுவது போன்ற “ரெடிமேட்”, “பாஸ்ட்-புட்” மற்றும் திடீர்-அதிரடி இந்துத்துவவாதிகளால் ஒரு பலமும் இல்லை, ஏனெனில், அவர்கள் பிஜேபி ஆட்சியில் இருந்தால் வருவார்கள், இல்லையென்றால் மறைந்து விடுவார்கள். கூட்டணியில் உள்ளபோது, கூட்டு சித்தாந்தம் வேலை செய்யும் போது, அது இடதுசாரி, கம்யூனிஸ்ட் மற்றும் இதர அடிப்படைவாத சித்தாந்திகளின் கூட்டை எதிர்கொள்ள முடியாது. இது என்.டி.ஏ ஏற்கெனவே பட்ட பாடம் தான், இப்பொழுதும், அனுபவித்துக் கொண்டிருக்கிறது. பழமைவாத-எதிர்ப்பு, முதலாளித்துவ-எதிர்ப்பு, முதலியவற்றை முன்னிருத்தி தேசவிரோதம், இந்திய-விரோதம், மத-அடிப்படைவாதம் முதலியவற்றை மறைத்து வேலை செய்யும் அவர்களிடம் வெளிப்படையான இந்துத்துவவாதிகளால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூட சொல்லலாம்.

 

© வேதபிரகாஷ்

22-08-2015

[1] http://www.tutyonline.net/view/28_97394/20150722193753.html

[2] h5ttps://www.youtube.com/watch?v=f4v7Pw_ajc8

[3] htt6p://www.vinavu.com/2015/07/08/interview-with-ajayan-adat-ftii/

[4]  தினகரன், புனே திரைப்பட கல்லூரிக்குள் நள்ளிரவில் புகுந்து 5 மாணவர்களை போலீசார் அதிரடியாக கைது: கல்லூரிவளாகத்தில் பதற்றம், ஆகஸ்ட்.19, 2015; மாற்றம் செய்த நேரம்:8/19/2015 11:00:44 AM

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1321584

[6] தினமலர், புனே: திரைப்பட கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது, ஆகஸ்ட்.19, 2015; 03.27.

[7]மாலைமலர், நள்ளிரவில் கைது செய்யப்பட்ட 5 புனே திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு ஜாமீன், பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஆகஸ்ட் 19, 11:34 PM IST

[8] http://www.maalaimalar.com/2015/08/19233425/5-arrested-FTII-students-get-b.html

[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=162276

ராம்ஜென்ம பூமி-பாபரி மஸ்ஜித் போராட்டம் தொடர்ந்து நடத்தப் படுவது ஏன் – செக்யூலரிஸமயமாக்கப்படும் நீதிமன்ற வழக்குகளும், தெரு ஆர்பாட்டங்களும் (2)

திசெம்பர் 7, 2014

ராம்ஜென்ம பூமி-பாபரி மஸ்ஜித் போராட்டம் தொடர்ந்து நடத்தப் படுவது ஏன் – செக்யூலரிஸமயமாக்கப்படும் நீதிமன்ற வழக்குகளும், தெரு ஆர்பாட்டங்களும் (2)

கட்டிடம் எப்படி விழுந்தது 06-12-2014

கட்டிடம் எப்படி விழுந்தது 06-12-2014

செக்யூலரிஸமாகி விட்ட டிசம்பர் 6 ஆர்பாட்டங்கள்[1]: இதுவரை முஸ்லிம்கள் மட்டும் ஆர்பாட்டம் செய்து வந்ததால், அது கம்யூனலிஸமாகப் பார்க்கப்பட்டது. என்ன, இந்த முஸ்லிம்களுக்கு வேறு வேலையில்லையா என்று கூட பொது மக்கள் முணுமுணுத்தது உண்டு. ஆனால், இந்து இயக்கத்தினரும் இதனை கடைபிடிக்க ஆரம்பித்து விட்டதால், இது செக்யூலரிஸமடயமாக்கப் பட்டுவிட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியே, அதனை மறைமுகமாகச் சுட்டிக் கட்டிவிட்டார். அதாவது ஆர்பாட்டம் நடத்த முஸ்லிம்களுக்கு உரிமைகள் இருக்கின்றன என்றால், இந்துக்களுக்கும் இருக்கின்றனலீனி தா. பாண்டியன், திருமா வளவன், நெடுமாறன் முதலியோர் முஸ்லிம்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டது ஏன் என்ற கேள்விக்கு வினா காண முற்படும்போதும், அந்த செக்யூலரிஸ ஆபத்து வெளிப்படுகிறது. திப்பு சுல்தான் சங்கம் மற்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதிஹாத் போன்ற முஸ்லிம் இயக்கங்கள் சார்பில் ஆர்பாட்டம் நடந்துள்ளது. இது செக்யூலரிஸம் அல்லது இந்துவிரோத சின்னங்களை உபயோகப்படுத்தும் போக்காக உள்ளது. எனவே, நிச்சயமாக, இனி இந்துக்கள் எதிர்க்கக் கூடும். திப்புசுல்தானைப் பொறுத்த வரையில், கம்யூனிஸ்டுகள், நாத்திக-திராவிட சிந்தாந்திகள், முற்போக்குவாதிகள் என்று பலகூட்டத்தினர் ஆதரிப்பதால், இந்துக்கள் தனிமைப்படுத்தப் படுகின்றனர்.

Demonstration at Delhi by the Hindu organization

Demonstration at Delhi by the Hindu organization

சர்ச்சைக்குரிய கட்டிட இடிப்பு, நூற்றுக்கணக்கான கரசேவகர்கள் இறப்பு முதலியவற்றிற்கு யார் காரணம்?: 1936ம் ஆண்டிற்குப் பிறகு சர்ச்சைக்குட்பட்ட கட்டிடம் மசூதியாகப் பயன்படுத்தப்படவில்லை மற்றும் அங்கு தொழுகையும் செய்யவில்லை, என்று மார்ச் 23, 1951 அன்று பைஸாபாத்தின் சிவில் நீதிபதி பதிவு செய்துள்ளார். முன்னர் டிசம்பர் 1949ல் இரண்டு வாரங்களுக்கு மேலாகக் கூடி இந்துக்கள் நாமசங்கீர்த்தனம், பஜனை செய்துள்ளனர். டிசம்பர் 22, 1949 அன்று அங்கு விக்கிரங்கள் அதிசயமாகத் தோன்றியுள்ளன. அதாவது, முஸ்லிம்கள் பாணியில் சொல்வதானால், காபிர்கள் அந்த இடத்தில் சாத்தான்களின் சின்னமான விக்கிரங்களை வைத்து வழிபாடு செய்ய ஆரம்பித்தனர், எனலாம். அதனால், அக்கட்டிடத்திற்கு பூட்டுப் போடப்பட்டது, ஆனால், இந்துக்கள் வழிபாடு அனுமதிக்கப்பட்டது. ஆக, காங்கிரஸ் கட்சி நேரு காலத்திலிருந்தே, இப்பிரச்சினையை இந்துக்களை தாஜா செய்ய உபயோகப்படுத்தி வந்தது. சோமநாதபுரம் கோவில் கட்டப்பட்டது இந்துக்களுக்கு எழுச்சியை ஏற்படுத்தியது எனலாம். இந்திரா காந்தி காலத்திலும் இது இருந்துகொண்டுதான் வந்துள்ளது. ராமஜென்மபூமியை விடுவிக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செப்டம்பர் 1984லியே ஶ்ரீ ராம ஜானகி ரத யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டது[2]. ஆனால், இந்திரா காந்தி அக்டோபர்.31, 1984 அன்று கொலையுண்டதால் அது நின்று போனது. நேருவின் பேரன் பிப்ரவரி.1, 1986 அன்று பைஸாபாத்தின் நீதிபதி கட்டிடத்திற்கு போடப்பட்ட பூட்டுகளை திறக்க ஆணையிட்டு, இந்துக்கள் வழிபட செய்தார். இதனால் பப்ரி மஸ்ஜித் நடவடிக்கைக் கமிட்டி [The Babri Masjid Action Committee (BMAC)] மார்ச் 1986ல் உருவானது.

Ayodhya pictures Demolition, blessed, martyrs, judgment

Ayodhya pictures Demolition, blessed, martyrs, judgment

ராஜிவ் காந்தி முதல் வி.பி.சிங் வரை செக்யூலரிஸம் வளர்த்தமுறை: ராஜீவ் காந்தி காலத்தில், அவரே அயோத்தியில் இருந்த பாபாவிடம் கால்கள் தனது தலைமீது வைத்து ஆசி பெற்றுள்ளார்.  உபிக்கு என்.டி.திவாரி முதலமைச்சராகவும், ராஜிவ் பிரதம மந்திரியாகவும், பூட்டா சிங் உள்துறை அமைச்சராக இருந்தபோது, அரசு அனுமதியுடன், நவம்பர்.10, 1989 அன்று காமேஷ்வர் சௌப்பல் என்ற பட்டியியினத்தவர் மூலம் “சிலன்யாஸ்” / பூமிபூஜை நடந்தது. அதாவது கோவில் கட்ட ஆரம்பிக்க கடைகால் பூஜை கட்டிடத்திலிருந்து 192 அடிகள் தூரத்தில் நடைபெற்றது. ராஜிவ் காந்திக்குப் பிறகு, 1989ம் ஆண்டு வி.பி.சிங் பிஜேபி ஆதரவுடன் பிரதமரானார். 11-11-1989 அன்று சுன்னி வக்ப் போர்ட், பைசாபாதில் வழக்குத் தொடுத்ததால், கோவில் கட்டிட வேலை நிறுத்தப்பட்டது. வி.பி.சிங் 10 மாதகால அவகாசம் கேட்டுக் கொண்டார். ஆகஸ்ட் 1990ல் கோவில் கட்டுவதற்கு வேண்டிய கற்கள் வர ஆரம்பித்தன. வி.பி.சிங் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பிஜேபி ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்டது மற்றும் டிசம்பர் 1990ல் சோம்நாத்திலிருந்து, அத்வானியின் ரத யாத்திரை ஆரம்பித்தது.

Make-shift temple and proposed model

Make-shift temple and proposed model

சந்திரசேகர் காலத்தில் நடந்த சமரச முயற்சிகள் (1989-1991): இதற்குள் 1991ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்தாலும், சந்திரசேகரை பிரதமர் ஆக்கினர். இவர் காலத்திலும் சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், முஸ்லிம் குழுக்கள் ஒத்துவரவில்லை. பிறகு பி.வி. நரசிம்ம ராவ் பதவிக்கு வந்தார். உபி அரசு 2.77 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கின் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு டிசம்பர் 6.1992 அன்று வரவிருந்திருந்தது. ஆனால், அது டிசம்பர் 11.1992 அன்றைக்கு ஒத்திப் போட்டது. ஏற்கெகெனவே லட்சங்களில் கரசேவர்கள் ஆவலுடன் காத்திருந்த நேரத்தில், தீர்ப்புத் தள்ளிவைத்தது, அவர்களைத் தூண்டிவிட்டது போலாகியது. இதனால் ஏற்பட்ட விளைவுதான், அந்த கட்டிடத்தின் இடிப்பு.

Long wait for the devotees Ayodhya

Long wait for the devotees Ayodhya

நரசிம்மராவ் காலத்திலும் பிரச்சினை தொடர்ந்தது (1991-1996): 08-12-2002 அன்று அரசாங்கம் அவ்விடத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. ஆனால், தற்காலிகக் கொட்டகையில் ராமர் விக்கிரத்தின் பூஜை-வழிபாடு தொடர்ந்தது. ஆனால், வழக்கம்போல அயோத்தியாவுக்கு வந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அது மிகவும் இடைஞ்சலாக இருந்தது. பக்தர்கள், யாத்திரிகர்கள் முதலியோர் தரிசனம் செய்யாமல் கூட திரும்ப அனுப்பப்பட்டனர். இதனால், சில இந்து இயக்கங்கள், லக்னௌ உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. நீதிமன்றமும், வரும் பக்தர்களை தரிசனம் ஏற்பாடு செய்ய வேண்டும், அதே நேரத்தில் பாதுகாப்பு கருதி அவர்கள் தொலைவிலிருந்தே அத்தரிசனத்தை மேற்கொள்ள வசதிகள் செய்யப்பட வேண்டும் என்று 01-01-1993 அன்று தீர்ப்பளித்தது. இதையெதிர்த்து யாரும் வழக்குப் போடவில்லை. இன்று வரை பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்[3]. ஜனவரி.7, 1993 அன்று அரசு இன்னொரு ஆணை மூலம் ராமஜென்மபூமி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திக் கொண்டது. இதனையும் முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் நீதிமன்றத்தில் எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால், உச்சநீதி மன்றம் மற்றும் அலஹாபாத் நீதிமன்ற தீர்ப்புகளில் சரித்திர ரீதியில் பல விசயங்கள் அலசப்பட்டன. பிரபல சரித்திராசிரியர்கள் எல்லோரும் முஸ்லிம்களின் சாட்சியாக வழக்குகளில் சேர்க்கப்பட்டது விசித்திரமாக இருந்தது. அவர்கள் தங்களது செக்யூலரொஸத்தைக் காட்டிக் கொள்ள அவ்வாறு செய்தனர் போலும். ஏனெனில், நாளிதழ்களில் அவ்வாறே பேட்டிக் கொடுத்துக் கொண்டும், முஸ்லிம்களுக்கு சார்பாகவும் எழுதிக்கொண்டிருந்தனர்.

ASI excavations at Ayodhya 2003.1

ASI excavations at Ayodhya 2003.1

நரசிம்ம ராவ் பின்பற்றிய செக்யூலரிஸ பாதை (1991-1995): 1996ல் பிஜேபி 13 நாட்கள் ஆட்சி செய்தது. நடுவில் காங்கிரஸ் ஆதரவில் தேவ கவுடா (ஏப்ரல் 1997 வரை) மற்றும் ஐ.கே.குஜரால் பிரதமராக சிலகாலம் பதவி வகித்தனர். பிப்ரவரி 21.1998 அன்று கல்யாண் சிங் அரசு பதவி நீக்கம் செய்யப்பட்டது. நரசிம்ம ராவ் பிஜேபி ஆட்சி செய்துவந்த மூன்று மாநில அரசுகளையும் அரசியல் நிர்ணய சட்டத்தின் 356 பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்து டிஸ்மிஸ் செய்தார்[4]. 1998 தேர்தலில் பிஜேபி மறுபடியும் ஆட்சிக்கு வந்து 13 மாதங்கள் (பிப்ரவரி 1998 முதல் ஏப்ரல் 1999 வரை) ஆட்சி நடத்தியது. 1999ம் ஆண்டு தேர்தலில் மறுபடியும் பிஜேபி ஆட்சிக்கு வந்தது. இதற்குள், தீவிரவாதிகள் பிப்ரவரி 27.2002 அன்று கோத்ரா ரெயில் நிலையத்தில் அயோத்தியாவிற்குச் சென்று திரும்பிய கரசேவகர்கள் கொண்ட பெட்டியைத் தீவைத்துக் கொளுத்தினர். இதனால் ஏற்பட்ட கலவரங்கள் உலக செய்திகள் ஆகின, ஆனால், குரூரமாக எரித்துக் கொல்லப்பட்ட அப்பாவி யாத்திரிகள் மறக்கப்பட்டனர். அதில் அப்பாவி யாத்திரிகர்கள் 58 பேர் கருகி செத்தனர். அதே ஆண்டு 2002ல் அலஹாபாத் நீதிமன்றம் சர்ச்சைக்குட்பட்ட கட்டிடத்திற்கு கீழே கோவில் இருந்ததா என்று கண்டறிய இந்தியத் தொல்துறையைக் கேட்டுக் கொண்டது[5]. மார்ச்.12 2003ல் ASIன் ஆய்வு ஆரம்பித்தது, ஆகஸ்டில் கீழே கோவில் இருந்ததாக ஆதாரங்களுடன் அறிக்கை சமர்ப்பித்தது.

ASI excavations at Ayodhya 2003.2

ASI excavations at Ayodhya 2003.2

கீழே கோவில் இருந்தது என்ற அறிக்கையை எதிர்த்த செக்யூலரிஸ்ட்டுகளும், தூண்டிவிடப்பட்ட முஸ்லிம்களும்: ஆனால் வழக்கம் போல செக்யூலரிஸ்ட் சித்தாந்திகள், பிரபலமான சரித்திராசிரியர்கள் போன்ற கோஷ்டிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. இவர்கல் எதற்காக முஸ்லிம்களை ஆதரிக்க வேண்டும் என்பது புதிராக இருந்தது. இது முஸ்லிம்களை உசுப்பிவிட்டதுடன், தீவிரவாதிகளையும் வளர்த்தது. ஜூலை 2005ல் இஸ்லாமிய தீவிரவாதிகள் அவ்விடத்தை குண்டுகளுடன் தாக்கியதில், எதிர்நடவடிக்கையில் ஆறுபேர் கொல்லப்பட்டனர்[6]. செப்டம்பர் 30.2010 அன்று அலஹாபாத் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாகப் பிரித்து, இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் இப்பொழுதுள்ள ராம்-லல்லா கோவில் என்று கொடுக்கவேண்டும் என்று ஆணையிட்டது[7].  இப்பொழுது கூட (டிசம்பர் 2014) மொஹம்மது ஹஸிம் அன்சாரி [Mohammed Hashim Ansari] என்ற வாதி, 1949லிருந்து நீதிமன்றத்தில் முஸ்லிம்களுக்காகப் போராடி வருகிறார். ஆனால், இவ்வழக்கினால் தான் சோர்ந்து போய் விட்டதாகவும், ஆஸம் கான் போன்ற தலைவர்கள் இதனை அரசியல் ஆக்குவதாகவும், அதனால் தான் இனி போராடப் போவதில்லை என்றும், இடத்தை ராம்-லல்லாவிற்கே விட்டுக் கொடுத்துவிடலாம் என்று கூறியுள்ளார்[8].

© வேதபிரகாஷ்

07-12-2014

[1] https://secularsim.wordpress.com/2014/12/07/ramjanmabhumi-babrimasjid-demonstration-leading-to-confrontation/

[2] 7 and 8 April: The Vishwa Hindu Parishad (VHP) sponsored Dharma Sansad in a session at Vigyan Bhawan, New Delhi gives  call to liberate the Ramjanamabhumi. To create national awareness in support of the liberation of the Bhumi the VHP organizes a rath-yatra of Sri Rama Janaki Virajman on a motorized chariot from Bihar 25 Sept 1984 to reach Ayodhya on 6 October 1984. But Indira Gandhi’s assassination later that month leads to a suspension of the yatra.

[3] மத்திய அரசின் வெள்ளை அறிக்கை மற்றும் Justice Deoki Nandan, Sri Rama Janma Bhumi – Historical and Legal Perspective, 2001.

[4] The Supreme Court’s verdict in the Bommai case sharply limited the constitutional power vested in the Central Government to dismiss a State government, but upheld the dismissal of four BJP Governments for going against the constitutional philosophy and provisions that were secular.

http://www.frontline.in/static/html/fl1422/14220170.htm

[5] In 2002, the Allahabad High Court directs the Archaeological Survey of India to excavate the site to determine if a temple lay underneath. On 12th March 2003, the Archaeological Survey of India (ASI) begins excavation in Ayodhya on the directions of the Allahabad High Court to ascertain whether a temple existed at the place where the Babri Masjid was built. In August 2003, the survey says there is evidence of a temple beneath the Mosque.

http://zeenews.india.com/exclusive/chronology-of-ramjanmabhoomi-movement_3026.html

[6] In July 2005, suspected Islamic militants attack the disputed site, using a jeep laden with explosives to blow a hole in the wall of the complex. Security forces kill five people they say are militants, and a sixth who was not immediately identified.

[7] Allahabad High Court on September 30 ruled by a majority verdict that the disputed land in Ayodhya be divided equally into three parts among Hindus and Muslims and that the place where the makeshift temple of Lord Ram
exists belongs to Hindus. Status quo to be mantained till three months.

[8] http://zeenews.india.com/news/india/babri-masjid-case-set-ram-lalla-free-says-oldest-litigant-hashim-ansari_1508696.html

ராம்ஜென்ம பூமி-பாபரி மஸ்ஜித் போராட்டம் தொடர்ந்து நடத்தப் படுவது ஏன் – செக்யூலரிஸமயமாக்கப்படும் நீதிமன்ற வழக்குகளும், தெரு ஆர்பாட்டங்களும் (1)

திசெம்பர் 7, 2014

ராம்ஜென்ம பூமி-பாபரி மஸ்ஜித் போராட்டம் தொடர்ந்து நடத்தப் படுவது ஏன் – செக்யூலரிஸமயமாக்கப்படும் நீதிமன்ற வழக்குகளும், தெரு ஆர்பாட்டங்களும் (1)

டிசம்பர் 6 முஸ்லிம்கள் ஆர்பாட்டம்

டிசம்பர் 6 முஸ்லிம்கள் ஆர்பாட்டம்

முஸ்லிம் மற்றும் இந்து அமைப்பினர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டது: இடிக்கப்பட்ட பாபர் மசூதியை மீண்டும் கட்ட வலியுறுத்தி, முஸ்லிம் அமைப்புகள் 06-12-2014 (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன[1]. முன்னர் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்து முன்னணி தொடர்ந்த வழக்கு 02-12-2014 (செவ்வாய்கிழமை) அன்று தள்ளுபடி செய்யப்பட்டது[2].  திருவெண்ணை நல்லூர் மற்றும் விழுப்புரம் முதலிய இடங்களில் தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக இந்துமுன்னணியினர் வழக்குத் தொடர்ந்தனர்[3]. ஆனால், அவ்விடங்கள் மிகவும் மக்கள் நெருக்கம் அதிகமான இடங்கள் என்பதால், போலீஸார் மறுத்துள்ளதாகவும், அதற்கு பதிலாக, புதிய வேறிடங்களில் போலீஸார் அனுமதியுடன், ஆனால், விதிக்கப்படும் நிபந்தனைகளுடன், நடத்தலாம் என்றும் நீதிபதி ஆணையிட்டார்[4]. ஏனெனில் அதே நாளில் இந்து அமைப்புகளுக்கும் ஆர்பாட்டம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக் காட்டினார் நீதிபதி[5]. ஆக, ஆர்பாட்டம் நடத்துவதும், இந்து இயக்கங்கள் சேர்ந்து கொண்டதால், செக்யூலரிஸமயமாக்கப் பட்டுவிட்டன.

06-12-2014-muslims-protest-தமிள் ஒன் இந்தியா

06-12-2014-muslims-protest-தமிள் ஒன் இந்தியா

வழக்கம் போல போலீஸார் பாதுகாப்பு, சோதனை, பயணிகள் அவதி: வழக்கம்போல, இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டது, தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர், சென்னையில் மட்டும் 18,000 போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர், ரயில் நிலையங்கள், கோயில்கள் (மசூதிகளை ஏன் விட்டுவிட்டனர் என்று தெரியவில்லை), கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும்  விமானநிலையத்தில் ஆயுதம் ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்[6] என்று செய்திகள் வெளியிடப்பட்டன. அனைவரும் முழுமையான பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் ரோந்துப் பணிகளை மேற்கொண்டனர். வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதற்காகும் செலவு என்னவென்று அறிவிக்கப்படவில்லை.

06-12-2014 திருமா முஸ்லிம்களுடன்

06-12-2014 திருமா முஸ்லிம்களுடன்

தா. பாண்டியன், திருமா வளவன், நெடுமாறன் முதலியோர் முஸ்லிம்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டது ஏன்?: உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி எனப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டிடம் 1992 டிசம்பர் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இதைக் கண்டித்து, ஆண்டுதோறும் டிசம்பர் 6-ஆம் தேதி முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. அதன்படி, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) சார்பில் சனிக்கிழமை 06-12-2014 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மற்றும் 22 ஆம் ஆண்டு தினம் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது[7].  இந்த ஆர்பாட்டத்தில் பெரியவர்கள் மட்டுமல்லாது சிறுவர்களும், குழந்தைகளும் கையில் பதாகைகளை ஏந்தி பங்கேற்றனர். தமுமுக தலைவர் ஜே.எஸ். ரிபாயீ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் எஸ்.எம். பாக்கர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசினர்.

06-muslims-protestt-தமிள் ஒன் இந்தியா

06-muslims-protestt-தமிள் ஒன் இந்தியா

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும்: பாபர் மசூதி இடிப்பு வழக்கை விரைவுபடுத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும், இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் பாபர் மசூதி கட்ட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர்[8]. இதேபோல் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தபால் நிலையம் முன்பு முஸ்லீம் அமைப்புகள் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியாவில் உள்ள பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பாபர் மசூதி இடிப்புத் தினத்தை ஒட்டி நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தின் போது ஒரு சிலர் பேருந்து மீது கல்வீசி தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன[9]. பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களிலும், கடலோர காவல் நிலையங்களிலும் கூடுதல் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

06-muslims-protest-தமிள் ஒன் இந்தியா

06-muslims-protest-தமிள் ஒன் இந்தியா

தி ஹிந்துவின் கவரேஜ்: ஹைதரபாதிலும் நடைப்பெற்றது என்று “தி ஹிந்து” புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது[10].

A street in Hyderabad wears a deserted look on the 22nd Anniversary of Babri Masjid Demolition, on 06-12-2014. Photo-PTI

A street in Hyderabad wears a deserted look on the 22nd Anniversary of Babri Masjid Demolition, on 06-12-2014. Photo-PTI

ரெய்ச்சூரிலும் ஆர்பாட்டம் நடைப்பெற்றது என்று “தி ஹிந்து” புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. திப்பு சுல்தான் சங்கம் மற்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதிஹாத் [Tipu Sultan Sangha and the All-India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM)] போன்ற முஸ்லிம் இயக்கங்கள் சார்பில் ஆர்பாட்டம் நடந்துள்ளது.

Raichur, Karnataka RJM-BM demonstration 06-12-2014 - The Hindu

Raichur, Karnataka RJM-BM demonstration 06-12-2014 – The Hindu

பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோஹர் ஜோஷி, வினய் கத்தியார் முதலியோர் [Bharatiya Janata Party leaders L.K. Advani, Murali Manohar Joshi, and Vinay Katiyar for their alleged involvement in demolishing the historical structure] மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோஷமிட்டனர்[11]. ஜன்சத்தா என்ற நாளிதழ் தில்லி, கோயம்புத்தூர் முதலிய இடங்களில் நடந்த ஆர்பாட்டங்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது[12]. ஜமாத்-இ-ஹிந்த் நீதிமன்றத்திற்கு வெளியாக ஒரு சமரச உடன்படிக்கை ஏற்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்தது[13]. இருப்பினும் ஆர்பாட்டக்காரர்கள் பேசியதையே இவர்களும் பேசியுள்ளார்கள்.

06-muslims-pro-தமிள் ஒன் இந்தியா

06-muslims-pro-தமிள் ஒன் இந்தியா

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் கோயில் கட்ட வலியுறுத்தி, இந்து முன்னணியினர் சென்னையில் பல்வேறு இடங்களில் 06-12-2014 (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான இந்து முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர் என்று தினமணி இரண்டு வரிகளில் செய்தி வெளியிட்டது. ஆனால், இதில் எந்த அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டதாக செய்திகள் வெளிவரவில்லை. அதாவது, இந்துக்களுக்கு ஆதரவாக கலந்து கொள்ள யாரும் இல்லை அல்லது அந்த அளவிற்கு இன்னும் துணிவு வரவில்லை போலும். இணைத்தள இந்து போராட்ட வீரர்கள், கோஷ்டிகள் முதலியன என்ன செய்து கொண்டிருந்தனர் என்று தெரிடயவில்லை. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்று தினமலர் ஒரே வரியில் செய்தியை வெளியிட்டுள்ளது[14].

Babri-5th

Babri-5th

டிசம்பர் 6ம் தேதிபீதி கிளப்பும், பொது மக்களை தொந்தரவு செய்யும் தினமாக மாறி வருவது[15]: இந்த வருடமும் அம்பேத்கரை மறந்து விட்டனர். வழக்கம் போல இத்தினம் ரெயில்வே மற்றும் பேருந்து நிலையங்களில் கெடுபிடி இருந்தது. பொது மக்கள் தொல்லைக்குள்ளானார்கள். கோவில்களில் கூட பக்தர்கள் அத்தகைய தொல்லைகளை அனுபவிக்க வேண்டியிருந்தது. யாரோ குண்டு வைத்து விடுவார்கள் என்று தான், இத்தகைய சோதனகள். பிறகு, பொது மக்கள் மனங்களில் யார் குண்டு வைப்பார்கள் என்று அறிய மாட்டார்களா அல்லது அவர்களைப் பற்றி அடையாளம் காணமாட்டார்களா. இத்தகைய போராட்டங்களால் முஸ்லிம்கள் சாதிப்பது என்ன என்பதை அவர்கள் தான் தீர்மானித்துக் கொள்ளவேண்டும். இக்காலப் பிரசார யுகத்தில், விளம்பரத்திற்காக, இவ்வாறெல்லாம் செய்யலாம், ஆனால், தொடர்ந்து தொல்லகளுக்குள்ளாகும் பொது மக்களின் மனங்களில் முஸ்லிம்களைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகும் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்[16].

© வேதபிரகாஷ்

07-12-2014

[1] தினமணி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம்: முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம், By dn, சென்னை, First Published : 07 December 2014 01:47 AM IST

[2] On Tuesday (02-12-2014), the judge passed orders on two petitions filed by S Elumalai and K Balu, office bearers of Hindu Munnani. The Madras high court has rejected a petition which sought denial of permission for Muslim organisations to stage protests against demolition of Babri Masjid on Saturday (06-12-2014). Muslim organisations have been holding anniversary meetings and rallies across the country ever since the masjid was brought down on December 6, 1992.

[3] They challenged the police refusing them permission to hold demos at Thiruvennai Nallur and Villupuram on December 6 demanding a Ram temple at the disputed site in Ayodhya. The Villupuram police submitted that the places where the petitioners want to hold demonstration are highly congested. But the petitioners said that they were prepared to shift the time and venue if needed. Disposing of the petitions, the Judge said that the first petitioner may shift the venue of demonstration at Thiruvennai Nallur to the place suggested by the police, who shall permit to hold a demonstration at the new venue, subject to reasonable restrictions.

[4] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Muslim-Outfits-Can-Stage-Demo-on-Dec-6/2014/12/04/article2554298.ece

[5] http://timesofindia.indiatimes.com/city/chennai/Cant-deny-nod-for-Babri-protest-HC/articleshow/45367930.cms

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=121307

[7] தமிள் ஒன் இந்தியா, பாபர் மசூதி இடிப்பு தினம்: முஸ்லீம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம், Posted by: Mayura Akilan Updated: Saturday, December 6, 2014, 17:53 [IST], Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/protests-mark-babri-masjid-demolition-anniversary-216469.html

[8]http://www.dinamani.com/edition_chennai/chennai/2014/12/07/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF/article2558998.ece

[9] http://tamil.oneindia.com/news/tamilnadu/protests-mark-babri-masjid-demolition-anniversary-216469.html

[10] http://www.thehindu.com/news/cities/Hyderabad/babri-masjid-demolition-anniversary-passes-off-peacefully-in-hyderabad/article6668051.ece

[11] Thousands of citizens under the banner of Tipu Sultan Sangha and the All-India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM) party took out a rally through major streets of Raichur and staged demonstration outside the office of the Deputy Commissioner, to observe the 22nd anniversary of Babri Masjid demolition as Black Day. They raised slogans against Bharatiya Janata Party leaders L.K. Advani, Murali Manohar Joshi, and Vinay Katiyar for their alleged involvement in demolishing the historical structure. They also raised questions about the then Prime Minister P.V. Narasimha Rao for allowing the “historical crime” to take place.

http://www.thehindu.com/news/national/karnataka/citizens-in-raichur-observe-black-day-on-anniversary-of-babri-masjid-demolition/article6668083.ece

[12] http://www.jansatta.com/photos/entertainment-gallery/22nd-anniversary-of-babri-masjid-demolition-demonstration-in-india/7876-3/

[13] http://twocircles.net/2014dec06/1417885117.html#.VIObYPmSynU

[14] http://www.dinamalar.com/news_detail.asp?id=1131898

[15] https://islamindia.wordpress.com/2013/12/07/december-6-a-day-of-remembrance-or-terror-induement/

[16] https://islamindia.wordpress.com/2013/12/09/december-6-fake-calls-of-bombing-temples-cannot-be-brushed-aside/

ஹுஸைனி புலிகள் என்ற முஸ்லீம் இளைஞர் குழு ரூ.15 லட்சம் ராமர் கோவில் கட்ட கொடுக்க முன்வந்துள்ளது!

ஒக்ரோபர் 3, 2010

ஹுஸைனி புலிகள் என்ற முஸ்லீம் இளைஞர் குழு ரூ.15 லட்சம் ராமர் கோவில் கட்ட கொடுக்க முன்வந்துள்ளது!

 

உத்திர பிரதேசத்தில் பிரபலமான ஹுஸைனி புலிகள் என்ற முஸ்லீம் இளைஞர் குழு ரூ.15 லட்சம் ராமர் கோவில் கட்ட கொடுக்க முன்வந்துள்ளது. ஷியா பிரிவைச் சேர்ந்த இந்த முஸ்லீம்கள், மற்றவர்கள் உச்சநீதி மன்றத்திற்கு மேல் முறையீடு செல்லவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மௌலானா கல்பே சாதிக் என்ற முஸ்லீம் மதத்தலைவரின் உறவினரான, ஷம்ஸில் ஷம்ஸி என்பவர் ஹுஸைனி புலிகள் இயக்கர்த்தின் தலைவர். அகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் போர்ட் (AIMPLB) என்ற அமைப்பையும், உச்சநீதி மன்றத்திற்கு மேல் முறையீடு செல்லவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்துக்கள்-முஸ்லீம்கள் கூடி பேசி, ஒரு சமரசத்திற்குய் வரலாம் என்று சொல்கிறார்.

மௌலானா கல்பே சாதிக் அவர்களின் மகன் மௌலானா கல்பே ஜவ்வாத் என்பவர், உயர்நீதி மன்றத் தீர்ப்பிற்கு முன்பே அத்தகைய சமரச் தீர்விற்கு வரலாம் என்று சொல்லியிருந்தார். மேலும் அந்த அகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் போர்டின் உப தலைவராகவும் உள்ளார். இந்துக்களும், முஸ்லீம்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் ஒரு மசூதி கட்டிக்கொள்ள உதவ வேண்டும். அவ்வாறு செய்தால், மதநல்லுறவோடு நல்ல உறவு ஏற்படும் என்கிறார்.

முஸ்லீம்கள்-15 லட்சம் கொடுத்தனர்-ராமர் கோவிலுக்கு

முஸ்லீம்கள்-15 லட்சம் கொடுத்தனர்-ராமர் கோவிலுக்கு

பைசாபாதில் முஸ்லிம்கள் ராமஜென்மபூமிக்கு விரோதமாக இல்லை, ஏனெனில், அவர்களில் பெரும்பாலும், ராமர் கோவிலுக்கும் வரும் இந்துக்களை நம்பிதான் அவர்களது வாழ்வாதாரமே உள்ளது. மேலும், இப்பிரச்சினையால் இந்துக்கள் அவர்களை வேறுவிதமாக கருதுவது கூட தங்களுக்கு சங்கடமாக இருக்கிறது என்கிறார்கள்.

அயோத்தியில் இருந்த கோவிலை யார் இடித்தது, பிறகு மசூதியை யார் கட்டியது, சர்ச்சைக்குட்பட்ட கட்டிடத்தை யார் இடித்தது?

செப்ரெம்பர் 27, 2010

அயோத்தியில் இருந்த கோவிலை யார் இடித்தது, பிறகு மசூதியை யார் கட்டியது, சர்ச்சைக்குட்பட்ட கட்டிடத்தை யார் இடித்தது?

பதிலைத் தேடி உண்மையை அறியாமல், கேள்விகளை எழுப்பும் அறிவுஜீவிகள்: அயோத்தியில் இருந்த கோவிலை யார் இடித்தது, பிறகு மசூதியை யார் கட்டியது, சர்ச்சைக்குட்பட்ட கட்டிடத்தை யார் இடித்தது? இப்படிப்பட்ட கேள்விகள் ஏற்கெனெவே உச்சநீதி மன்றத்தில் அலசப்பட்டு, அதிகமான அளவில் விவரங்கள் கொடுத்துள்ள போதும், தமிழில் எழுது வரும் சில அறிவுஜீவிகள் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு ஏமாற்றி வருகின்றன. நீதிமன்ற தீர்ப்புகள் விவரங்களையும் கொடுக்காமல் பொய்-பிரச்சாரம் செய்து வருகின்றன.

இஸ்மாயில் ஃபரூக்கி .எதிர். இந்திய அரசாங்கம் 1995 AIR 605 தீர்ப்பு: இஸ்மாயில் ஃபரூக்கி .எதிர். இந்திய அரசாங்கம் 1995 AIR 605, 1994 SCC (6) 360 என்ற தீர்ப்பில், பல விவரங்கள் உள்ளன. இவற்றை ஒரு முறையேனும் படித்துப் பார்த்திருப்பார்களா என்று தெரியவிலை ஆனால், பாபர் மசூதியை யார் இடித்தது என்று கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Ismail Faruqui vs Union Of India on 24 October, 1994

http://www.indiankanoon.org/doc/1441422/

Equivalent citations: 1995 AIR 605, 1994 SCC (6) 360

Bench: Verma, J Saran

PETITIONER:

ISMAIL FARUQUI

Vs.

RESPONDENT:

UNION OF INDIA

DATE OF JUDGMENT24/10/1994

BENCH:

VERMA, JAGDISH SARAN (J)

BENCH:

VERMA, JAGDISH SARAN (J)

VENKATACHALLIAH, M.N.(CJ)

AHMADI, A.M. (J)

RAY, G.N. (J)

BHARUCHA S.P. (J)

160 பத்திகள் கொண்ட தீர்ப்பைப் படிக்க வேண்டும். டிசம்பர் 1949 லிருந்து 06-12-1992 வரையிலுள்ள நிகழ்ச்சிகளை அலசுகின்றது.

முழு தீர்ப்பு கீழே, முதல் பதிலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

விருப்பம் உள்ளவர்கள் பொறுமையாகப் படித்துக் கொள்ளலாம்.