Posts Tagged ‘ஜான் ஜோசப்’

சர்வதேச சுயாதீன திருச்சபை பேராயத்தை சேர்ந்த சுமார் 150 கிறிஸ்தவர்கள் பாதிரிகளுடன், பிஜேபியில் சேர்ந்த மர்மம் என்ன? கிறிஸ்தவ-இந்துத்துவ வாதிகளின் வாத-விவாதங்கள் – (2)

நவம்பர் 21, 2020

சர்வதேச சுயாதீன திருச்சபை பேராயத்தை சேர்ந்த சுமார் 150 கிறிஸ்தவர்கள் பாதிரிகளுடன், பிஜேபியில் சேர்ந்த மர்மம் என்னகிறிஸ்தவ-இந்துத்துவ வாதிகளின் வாத-விவாதங்கள் – (2)

1947லிருந்து கிருத்துவர்கள் அரசியல் ரீதியில் ஆதிக்க செல்லுத்துவது: கத்தோலிக்க-புருடெடெஸ்டென்ட் வித்தியாசங்கள் (டினாமினேஷன்கள், Catholic-Protestent denominations) இருந்தாலும், அரசியலில் ஆதிக்கம் செல்லுத்தி வருகிறார்கள். காங்கிரஸ்-ஜனதா-பிஜேபி என்று எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், தங்களது உரிமைகளை அமைதியாக பெற்றுக் கொண்டு ஆதிக்கம் செல்லுத்துகின்றனர். மோடியே ஆண்டாலும், தமது ஆதிக்கத்தைச் செல்லுத்துவது, மோடி அடிக்கடி அவர்களுக்கு வாழ்த்து சொல்வது, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது முதலியவற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அதனால், மாநில அளவில், அவர்கள் பிஜேபி தலைவர்களைக் கண்டு கொள்வதே இல்லை. ஏனெனில், நேரிடையாக மோடிக்கு செய்தி செல்லும் அளவுக்கு லாபி / அழுத்தம் (national and political influence) கொண்ட சக்திகளை உபயோகித்து வருகின்றனர். ஆங்கிலோ-இந்தியர்களுக்கு இடவொதிக்கீடு உள்ளது. ஆனால், இந்தோ-ஆங்கிலேயர் என்று யாரும் நினைத்துப் பார்த்தது கிடையாது. இந்துத்துவ வாதிகள், லவ்-ஜிஹாத் பற்றி பேசுபவர்கள், லவ்-குரூசேட் (Lov-crusade) பற்றி மூச்சு விடுவது கிடையாது. அப்படியென்ன கரிசனமோ தெரியவில்லை. இப்பொழுது சில பாதிரிகள் உட்பட சுமார் 150 கிருத்துவர்கள், பிஜேபியில் இணைந்தது பற்றி, வாத-விவாதங்கள் நடந்துள்ளன.

பாதிரிகள் / பாஸ்டர்கள் பிஜேபியில் இணைந்தது பற்றி, கிருத்துவர்கள் விமர்சித்தது[1]: பாதிரிகள் / பாஸ்டர்கள் பிஜேபியில் இணைவது பற்றி, வீடியோக்களைப் பார்த்து, கிருத்துவர்களும் பேஸ்புக்கில் உரையாடி இருக்கிறார்கள், ஆனால், தமது மதத்தை எப்படி காப்பது என்ற ரீதியில் அது இருந்தது. பாதிரிகள் / பாஸ்டர்கள் பிஜேபியில் இணைந்ததை எதிர்த்துள்ளனர், கண்டித்துள்ளனர், திட்டவும் செய்துள்ளனர்[2]. “கிறிஸ்தவ சங்கிகள்” என்றே விமர்சித்துள்ளனர். பாஸ்டர்களுக்கு இடைக்கச்சை (கர்டில்) அணிய அனுமதி இல்லை. பாஜகவிடம் பணம் வாங்கிக் கொண்டு அவ்வாறு செய்கின்றனர் என்று கூட பதிவு செய்துள்ளனர். அவற்றிலிருந்து சில[3]:

  1. கொஞ்சமும் கவலை படாமல் இப்படி அங்கியோடு அவர்கள் முன் நிற்பதும் அவர்களை ஆதரிப்பதும் எத்தணை மதியீனம். போன தேர்தலில் நம் அங்கிகள் அவர்களிடம் பணத்திற்கு போய் நின்றதும் ஜெபித்ததும் காணிக்கை என்ற பெயரில் ஓட்டுக்கு பணம் வாங்கியதும் என்னிடம் ஊர் அறிந்ததே.
  2. போன தேர்தலில் சென்னை சேர்ந்த ஒரு பாஸ்டர் கன்யாகுமரி மாவட்டம் முழுவதும் சபை பாஸ்டர்களிடம் ஓட்டு சேகரிக்க சென்றார். சென்னையில் 300 பாஸ்டர்களை அழைத்து, வெள்ளை சட்டை சீலை கையில் பணம் கொடுத்து BJP க்கு ஆதரவு தெரிவித்தார். இன்று அவர் சென்னையில் பெரிய பாஸ்டர்களில் ஒருவர். செட்டில் ஆகி விட்டார். பணம் பத்தும் செய்யும். அருவருப்பு.
  3. அங்கி போட்டால் மதிப்பு என்று சொல்லி அங்கி கழுத்தில் சிலுவை என்று வலம் வருகிறார்கள்.
  4. அந்த சொட்ட தலை பெயர் அருமைநாயகம்… கிருஸ்மஸ் காலத்தில் ஸ்டார் கட்டியிருக்கும் வீடுகளுக்கெல்லாம் அழைக்காமலே சென்று அஞ்சு பத்து கேட்பதுத்தான் அந்த அங்கியின் பிராதான ஊழியம்..
  • 5. இதில் யாரும் CSI போதகர்கள் இல்லை அண்ணன். எல்லாருமே பெந்தேகோஸ்தே சபை போதகர்கள்.
  • 6. இதில் நம்ம நோபுள் காட் பிரையும் இருக்காரு.
  • 7. தமிழ்நாட்டில் ஏராளமான டயோசிஸ்கள் உள்ளன… இவர்கள் எந்த டயோசிஸ்யை சேர்ந்தவர்கள்… தமிழக போதகர்களை இவர்களின் வஞ்சக வேலையிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்..
  • 8. இவர்கள் … யூதாஸ் யை போல பணத்திற்காக ஊழியர்களையும், ஊழியங்களையும் காட்டி கொடுக்கும் கூட்டம்.. மனசாட்சி சூடுண்ட பொய்யர்கள்… இன்னும் பல..
  • 9. தன் மத கொள்கை, தன் மத வைராக்கியம் என்றுமே விட்டுக்கொடாமலிருக்கும் இந்துக்களிடம் சென்று கற்றுக்கொள்ள வேண்டியவர்கள் இந்த சந்தர்ப்ப வாதிகள், நம்முடைய ஆபத்திலும், அவசர தேவைகளிலும் சகாயம்பண்ணுவது நம்முடைய கர்த்தர் என்பதையும் மறந்து, நம்மையே அழிக்க முயலும் எதிரிகள் முன் சரணனடைவது அடிப்படை விசுவாச துரோகம்.
  • 10. இவர்களைப் பற்றி நாம் அதிகம் பேச வேண்டிது தேவை இல்லாத ஒன்று. நான் பல ஆண்டுகளாக ஒரு விஷயத்தை திரும்ப திருமப சொல்லி வருகிறேன் அதாவது எப்படி RSS தங்களது ஆட்களை மற்ற அரசியல் கட்சிகளில் இனைத்து பல ஆண்டுகளாக உண்மையான தொண்டர்கள் போல இருந்து இப்போது அந்த கட்சிகளை அழித்து கொண்டு இருக்கிறார்களோ அதேபோல் அவர்கள் நமது திருச்சபைகளிலும் அவர்களுடைய ஆட்கள் அநேகம் பேர் உண்மை விசுவாசிகள் போல் வளர்ந்து இன்று அதிகாரமிக்க பல பதவிகளை அனுபவித்து வருகின்றனர். இது அவரகளின் நடவடிக்கைகள் மூலமே நாம் உணர்ந்து கொள்ளலாம். எடுத்துக் காட்டாக வேதாகமத்தை மொழிபெயர்க்கிறோம் என்ற பெயரில் அதன் வீரியத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்கி அதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று சட்டம் இயற்றும் அளவிற்கு உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள். RSS இன் sleeper cells are spoiling our churches. Be aware

இவற்றையெல்லாம் பாஜக, ஆர் எஸ் எஸ், இந்த்துவ வாதிகள் படித்துப் பார்த்தார்களா என்று தெரியவில்லை. இனி, இவர்களின் பதிவுகளைப் பார்ப்போம்.

கிறிஸ்தவர்களின் உரையாடல்
கிறிஸ்தவர்களின் உரையாடல் தொடர்ந்தது
கிறிஸ்தவர்களின் உரையாடல் தொடர்ந்தது. RSS இன் sleeper cells are spoiling our churches. Be aware

பிஜேபிஆர்.எஸ்.எஸ்காரர்களின் வெளிப்பாடு, பேஸ்புக் பதிவுகள்: 12-11-2020 அன்று கமலாலயத்தில், அநிகழ்ச்சி நடந்தாலும், இப்பொழுது ஒரு வாரம் கழித்து, 19-11-2020 அன்றந்திடீரென்று பேஸ்புக்கில் கதையளந்து, அக்கதையின் உண்மைத் தன்மைப் பற்றி கவலை படாது, டுவிட்டரில் உள்ள கதைய பேஸ்புக்கில் போட்டு, பேஸ்புக்கில் ஓடவிட்டக் கதையை, “செய்தி” போலாக்கினாலும், நம்பகத் தன்மை வேண்டும். ஆனால், ஒரே நாளின் எல்லாமே நடந்துள்ளது. ஜடாயு என்பவர், பேஸ்புக்கில் இவ்வாறு பதிவு செய்ய, அங்கேயே விவாதம் நடந்துள்ளது[4]. “கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ? (பாரதியார்). “பிஷப் டாக்டர் ஜான்சன் தலைமையிலான பெரிய டயசீஸ் முழுவதுமாக இன்று சென்னையில் டாக்டர் முருகன் தலைமையில் இயங்கும் தமிழ்நாடு பாஜகவில் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறதுஎன்று ட்விட்டரில் இந்தப் படத்டோடு பதிவிட்டுள்ளார் பாஜக தேசிய பேச்சாளர் டாம் வடக்கன். 2019 தேர்தலுக்கு சற்று முன்பாக பாஜகவில் வந்து இணைந்தவர் இவர். காங்கிரசில் நீண்டநாள் சோனியா விசுவாசியாக இருந்த மலையாள கிறிஸ்தவர். “முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச்என்ற ஆர் எஸ் எஸ் சார்பு அமைப்பை 15 வருடங்கள் முன்பு உருவாக்கிய ஆர் எஸ் எஸ் தலைவர் இந்திரேஷ்ஜியுடன் சேர்ந்து அதே பாணியில்கிரிஸ்தவ ராஷ்ட்ரீய மஞ்ச்என்று ஒன்றை இவர் உருவாக்க முயற்சிக்கிறாராம்[5].

இந்துத்துவ வாதி கிருத்துவர்களுடன் சந்தித்துப் பேசிய நிலை: “நிற்க. தேசிய உணர்வும், இந்துப் பண்பாட்டின் மீது மரியாதையும், மதமாற்றத்தை எதிர்க்கும் கொள்கைகளும் கொண்ட கிறிஸ்தவர்கள் பாஜக, ஆர் எஸ் எஸ் இயக்கங்களில் சேர்வதை நான் முழுமையாக வரவேற்கிறேன். ஆதரிக்கிறேன். பெங்களூரின் Jerome Warrier கேரளத்தின்  Godwin Joseph போன்ற இத்தகைய நண்பர்களை நான் சந்தித்து உரையாடியிருக்கிறேன்[6]. தங்களை Hindustani Christians என்று குறிப்பிடும் இந்த நண்பர்கள், வெளிப்படையாக கிறிஸ்தவ மதமாற்றங்களையும், இஸ்லாமிய பயங்கரவாதத்தையும் எதிர்த்து தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றனர். ஆனால் டாம் வடக்கன் இப்படிப் பட்டவரல்ல என்பது அவர் செயல்பாடுகள் மூலம் தெளிவாகத் தெரிகிறது. பாஜக பல மாநிலங்களில் ஒரு பெரிய சக்தியாக வளர்ந்து வருவதால், அதனால் கிறிஸ்தவ ஆக்கிரமிப்புக்கும் மத அதிகார பீடங்களுக்கும் ஏதேனும் பிரசினை வந்துவிடக் கூடாது என்பதைக் கணக்கிட்டு, கிறிஸ்தவர்களை கட்சிக்குள் ஊடுருவ வைக்கவேண்டும் என்பதே அவரது திட்டமாக உள்ளது. மதப்பிரசாரத்தையும் மதமாற்றத்தையுமே முழுநேர தொழிலாகக் கொண்ட பாதிரியார்கள் கட்சிக்குள் இணைவது என்பது இதன் ஒரு பகுதி போலும்”.

பாஜக கண்மூடித்தனமாக கட்சியில் சேர்ப்பது ஆபத்தானது, அபாயகரமானது: “தமிழ்நாட்டில் இந்துக்களின் மிகப்பெரிய எதிரி கிறிஸ்தவ சர்ச்களும் மதமாற்ற கும்பல்களும் தான். அரசியல், ஊடகம், சினிமா, சமூகம் என்று எல்லாத் துறைகளிலும் இந்துத்துவத்தையும் மோதி அரசையும் வெறித்தனமாக எதிர்ப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் இந்த சக்திகள். இவர்களை பாஜக கண்மூடித்தனமாக கட்சியில் சேர்ப்பது ஆபத்தானது, அபாயகரமானது. நான் மேலே குறிப்பிட்ட தேசபக்த கிறிஸ்தவ நண்பர்களும் இந்தக் கருத்தையே தெரிவிக்கின்றனர். EDIT: கட்சியில் சேர்ந்த வேகத்திலேயே விலகியும் விட்டேன் என்று ஒரு பாதிரியார் (?) கூறுவதாக உள்ள வீடியோ சுட்டியை Deva Priyaji முதல் மறுமொழியில் கொடுத்திருக்கிறார். அது மேற்கூறிய பாதிரியார் தானா என்பது ஆதாரபூர்வமாகத் தெரியவில்லை”. இவர் எதையும் நேரிடையாக சொல்வதில்லை. அங்கிருந்து இங்கு, இங்கிருந்து அங்கு என்று காபியடித்து பதிவுகள் போட்டுக் கொண்டிருப்பார். நான் இதை எடுத்துக் காட்டினேன். கேட்டவுடன் உஷாராகி, ஜடாயு, “அது மேற்கூறிய பாதிரியார் தானா என்பது ஆதாரபூர்வமாகத் தெரியவில்லை,” என்று முடித்துக் கொண்டார். ஆனால், மாலை, “தினசரி,” என்ற இணதளத்தில், இவை வெளிவந்துள்ளன. அவ்வளவு வேகமாக “செய்தி” தயாரிக்கப் படுகிறது.

இந்துத்துவ கோஷ்டிகள் போலியான செய்திகளை உருவாக்குகின்றனவா?: ஆக மேலே கூறியுள்ளபடி, கிருத்துவர் மற்றும் இந்துத்துவ வாதிகளின் வாத-விவாதங்களௌ உன்னிப்பாகப் படித்து, தெரிவது ஆவது, அரசியல் என்பதால், எதிர்பார்ப்புகளுடன், வேலை செய்யும் சுயநல காரர்களின் போக்கு, நம்பிக்கையாளர்களுக்கு உதவுவாதாக இல்லை. சமூக ஊடகங்களில், இதுத்துவ வாதிகள் / கோஷ்டிகள் விசாரிக்காமல், சரிபார்க்காமல், இணை தளங்களில், அடுத்தவர் போட்ட பிளாகுகள் என்றவற்றிலிருந்து, அப்படியே காபி அடித்து, அதற்கு 100-200 என்று லைக்குகள் போட்டு, பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதற்கெல்லாம் காசு கொடுக்காமலேயே வேலை நடக்கிறது என்று யோசிக்க வேண்டியுள்ளது. மற்ற அரசியல் கட்சிகள் போல, பிஜேபி-ஆர்.எஸ்.எஸ்-இந்துத்துவ வாதிகள்-மற்ற கோஷ்டிகள், இத்தகைய பிரச்சாரங்களை செய்து வருகின்றன. 100 பேர் சேர்ந்து உருவாக்கினால், அது உண்மையாகாது, செய்தியாகாது, ஏனெனில், ஆதாரங்கள் வெளிகாட்டி விடும். பிஜேபி அலுவலகத்திற்கு கூட்டி வந்து, பொன்னாடை போர்த்தி, பிறகு ஜெபித்து, பாதிரிகளை பேசவிட்டு, எல்லாம் முடிந்த பிறகு, அவர்களிடமே கேட்டிருக்கலாமே? சம்பந்தப் பட்ட தலைவர்கள் முருகன், நாகராஜன் முதலியோருக்குத் தெரியாததா, இவர்களுக்குத் தெரியும்?

©வேதபிரகாஷ்

20-11-2020


[1] இவ்விவரங்கள் பாஸ்டர் ஜான் ஜோசப் என்பவரது முகநூலில் உள்ள உரையாடல்களிலிருந்து தொகூக்கப் பட்டுள்ளது –  https://www.facebook.com/brojohnjoseph. இவை ஆராய்ச்சி ரீதியில் உபௌஓகப் படுத்தப் படுகின்றன.

[2] பாஸ்டர் ஜான் ஜோசப் பிஜேபி அலுவகத்தில் பேசும் வீடியோ, https://www.facebook.com/691874987/videos/pcb.10161897721739988/10161897721564988

[3]  பாஸ்டர் மருத நாயகம், பிஜேபி அலுவகத்தில் ஜெபிக்கும் / பேசும் வீடியோ, https://www.facebook.com/691874987/videos/pcb.10161897721739988/10161897721464988/

[4]  ஜடாயு பிஜேபி-ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ வாதியாக பதிவுகளை செய்து வருவது தெரிகிறது –  https://www.facebook.com/jataayu.blore

[5] தினசரி, பாஜகவில் கிறிஸ்துவ பாதிரிகள் ஊடுருவல்! பின்னணி என்ன?! 19/11/2020, 3.4 மணி.

[6] https://dhinasari.com/latest-news/181373-background-of-christians-joining-in-bjp.html

சர்வதேச சுயாதீன திருச்சபை பேராயத்தை சேர்ந்த சுமார் 150 கிறிஸ்தவர்கள் பாதிரிகளுடன், பிஜேபியில் சேர்ந்த மர்மம் என்ன?

நவம்பர் 16, 2020

சர்வதேச சுயாதீன திருச்சபை பேராயத்தை சேர்ந்த சுமார் 150 கிறிஸ்தவர்கள் பாதிரிகளுடன், பிஜேபியில் சேர்ந்த மர்மம் என்ன?

எல்லாவித ஆட்களும் பிஜேபியில் சேர்வது ஏன்?: சில தமிழ்.ஊடகங்கள் பிஜேபியைப் பற்றி இப்படி விவரிக்கிறது. தமிழகத்தில் சமீபகாலமாக பாஜக தனது கட்சியை வலுவாக்கும் விஷயங்களை செய்துவருகிறது. சர்வதேச சுயாதீன திருச்சபை பேராயத்தை சேர்ந்த சுமார் 150 கிறிஸ்தவர்கள் நேற்று பேராயர் ஜான் ஜோசப் தலைமையில்கிறிஸ்தவர்கள் சிலர் பாஜகவில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர்[1]. இது பாஜகவின் வளர்ச்சியை பிரதிபலிப்பதாகவும், மதசார்பற்ற கட்சி என்ற பெயரை எட்டிப் பிடிப்பதாகவும் அமைந்து வருகிறது[2]. தமிழகத்தில் சமீபகாலமாக பாஜக தனது கட்சியை வலுவாக்கும் விஷயங்களை செய்துவருகிறது[3]. இது ஒரு விவாதத்தையே அரசியல் கிளப்பி வருகிறது. பாஜகவில் தொடர்ந்து நடிகர், நடிகைகள் இடம்பெறுவது வெறும் கவர்ச்சி அரசியலையே பிரதிபலிக்கிறது என்ற கருத்தும் பதிவாகி வருகின்றன[4]. அதேசமயம், “அன்னைக்கு இருந்த பாஜக வேற. வெறும் சினிமாக்காரர்கள் பாஜகவில் இணைகிறார்கள் என்று மட்டும் எப்படி சொல்லலாம்? ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சேர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் எல்லா தரப்பு மக்களின் ஆதரவையும்தான் பாஜக பெற்று வருகிறது” என்று பாஜக தரப்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அனுபவம் உள்ளவர்கள் பிஜெபியின் போக்கு சரியில்லை என்றுதான் எடுத்துக் காட்டுகின்றனர்.

முருகன், பாதிரியாருக்கு பொன்னாடைப் போர்த்தி மரியாதை செய்கிறார்!
முன்னர் முருகனுக்கு புனித நீர் தெளித்து, ஜெபத்துடன், ஆசிர்வாதம் நடந்தது.

சுயாதீன திருச்சபை என்றால் என்ன?: சுயாதீன திருச்சபை நோக்கம் தேவை – (Indigenization Focus): இந்த புதியதாக நிறுவப்பட்ட திருச்சபைகள் சுயாதீன திருச்சபைகளாக மாற வேண்டும். இந்த கூரிய நோக்கப் பார்வை, திருச்சபைகளை சுயாதீன சபைகளாக மாற்றும். இந்த சுயாதீன திருச்சபைகள் –

1. சுயமாக நிர்வாக திறமை,

2. சுயமராக நிதிநிலைமையை மேற்கொள்வது,

3. சுயமாக சுவிசேஷத்தை அறிவிப்பது –

என்ற இந்த மூன்று நிலைகளை அடைவதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும். இந்த சர்ச்சுகள் பெந்தகோஸ்தே, வகைகளாக இருக்கின்றன.

எல்லாவித ஆட்களும் பிஜேபியில் சேர்வது ஏன் – சித்தாந்தத்தை நீர்ப்பது ஏன்?: ஜாதி-ஜாதியத்தை எதிர்க்கிறோம் என்று பிரச்சாரம் செய்தாலும், மற்ற தமிழக கட்சிகள், திராவிட கட்சிகள் பாணியில், வழியில், பிஜேபியும் பின்பற்றி வருகிறது. அம்பேத்கர் இந்து என்றெல்லாம் சொல்லி, பிறகு “பெரியார் கொள்கைகளைத் தான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி பின்பற்றுகிறது,” என்ற அளவுக்கு அவற்றின் தலைவர்கள் பேசினர். பிறகு குற்றவாளிகள், ரௌடிகள், மோசடிக் காரர்கள் எல்லோரும், பிஜேபியில் சேர்ந்தனர். இது பலரை திடுக்கிட வைத்தது. ஏதோ சொல்லி பிஜேபிக்காரர்கள் சமாதானம் செய்யப் பார்த்தனர். இந்த சூழலில்தான், திடீரென திருமாவளவனின் மனுஸ்மிருதி விவகாரம் வெடித்தது. இதற்கு பிறகு திருமாவுக்கு எதிராக இந்துக்கள் பெருகிவிட்டதாக பாஜக தரப்பு சொல்லி வருகிறது. அதற்கேற்றார்போல், சில விசிகவினர் பாஜகவிலேயே இணைந்தும் விட்டனர். மற்றொரு பக்கம் திமுக, அதிமுகவில் இருந்தும் அதிருப்தியாளர்கள் பாஜக பக்கம் தாவி வருகிறார்கள். தற்போது கிறிஸ்தவர்களும் பாஜகவில் இணைந்துள்ளனர்.

பாதிரிகள் பிஜேபியில் சேர்ந்ததற்கான உறுப்பினர்-அடையாள அட்டைக் கொடுக்கப் பட்டது.

சர்வதேச சுயாதீன திருச்சபை பாஸ்டர்கள் சேர்ந்தது ஏன்?: சர்வதேச சுயாதீன திருச்சபை பேராயத்தை சேர்ந்த சுமார் 150 கிறிஸ்தவர்கள் பேராயர் ஜான் ஜோசப் தலைமையில் பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர், என்று சிறிதளவே செய்தி வந்தது. கமலாயம், பிஜேபி தலைமையகத்தில், நாகராஜன் பைபிளிலிருந்து ஆசீர்வாதம் செய்ய அனுமதிக்க, அருமைநாயகம் பாதிரி, ஜெபித்தார்! ஏதோ ஆர்.எஸ்.எஸ்.காரர் போன்று, ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு, “பஞ்சாங்கம்” எல்லாம் படித்து, ஜெபித்தார். சுயாதீன திருச்சபை பேராயர் ஜான் ஜோசப், பிஜேபி-ஆர்.எஸ்.எஸ் ஆட்கள், தலைவர்கள் இடையே, தேவனை ஸ்தோத்திரம் செய்ய, பரிசுத்த ஆவி இறங்கியது! ஜான் ஜோசப் பற்றி, ஒரு கிருத்துவ பெண்மணி போற்றிப் பேசி, அவருக்கு அகில இந்திய அளவில் பதவி கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்! பேராயர் ஜான் ஜோசப், ஏசுவின் திருநாமத்தில், ஜெபித்து, தாமரை மலர்ந்தே தீரும் என்று தனது உரையை முடித்துக் கொள்ள, பரிசுத்த ஆவி சென்று விட்டது. கர்த்தரின் பெயரால்,பிஜேபி தலைவர் முருகன், தலை மீது, புனித நீர் தெளிக்கப் பட்டு, மெழுகு வர்த்தி தீபத்துடன், ஆசிர்வதிக்கப் பட்டார். பரித்த ஆவி / கர்த்தர் / 2016ல் அதிமுகவுடன் சேர் என்றும் , 2020ல் பிஜேபியுடன் சேர் என்றும் சொல்லுமா? இல்லை கூட்டணி சரியாகுமா?

கமலாலயத்தில் பாதிரிகள்.
2016ல் ஜெயலலிதாவை சந்திக்கும் போது, பவ்யமாக கை கட்டிக் கொண்டு உட்கார்ந்தார்கள்.
சுயாதீன சர்ச்சுகளின் பாஸ்டர்கள் / பாதிரியார்கள் 2016ல் ஜெயலலிதாவை சந்தித்த போது.
2016ல் வெளியே வந்து, ஜெயலலிதாவுக்காக வாக்குதத்தம் கொடுத்தது.

பரித்த ஆவி / கர்த்தர் / 2016ல் ஒன்று சொல்லும், 2020ல் வேறு மாதிரி சொல்லுமா?: இதே பாதிரிகள் மற்றும் இதர சர்ச் கூட்டங்கள், 2016ல், பவ்யமாக, கைகளைக் கட்டிக் கொண்டு, ஜெயலலிதாவைப் பார்த்தனர். எதிரே, இ. பன்னீர்செல்வம் உட்கார்ந்திருந்தார்:

1. மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவரும், இந்திய சுயாதீன திருச்சபைகள் மாமன்றத்தின் நிறுவனத் தலைவருமான பேராயர் டாக்டர் மா. பிரகாஷ் தலைமையில்,

2. Rhema AC Church ICI பொதுச் செயலாளர் போதகர் ஜான் மில்டன்,

3. Siswa Mission இயக்குனர் போதகர் சோல் வின்னர்,

4. Blessing Church Bishop in Chennai பேராயர் ஞானப்பிரகாசம்,

5. Faith in Jesus Mission போதகர் தேவரூபன்,

6. Carmel Pentecostal Church போதகர் வில்சன் ஆகியோர் நேரில் சந்தித்து,

வரும் 2016, சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.விற்கு இந்திய சுயாதீன திருச்சபை மற்றும் ஏனைய திருச்சபைகளின் சார்பில் முழு ஆதரவை தெரிவித்தனர். அப்பொழுது யாரும் பிரேயர் செய்யவில்லை. ஜெயலலிதா வேறு, பிஜேபி வேறு என்பது தான் காட்டுகிறது. இப்பொழுது 2020ல் பிஜேபிக்கு தாவுகின்றனர் என்றால் எப்படி? பரித்த ஆவி / கர்த்தர் / 2016ல் ஒன்று சொல்லும், 2020ல் வேறு மாதிரி சொல்லுமா போன்ற கேள்விகள் எழுகின்றன.

மூன்றே நாளில் ஒரு பாதிரி பிஜேபியில் சேர்ந்து, விலகுவது ஏன்?: அரசியல் இந்துக்களே, சுயாதீன திருச்சபை என்றால் என்ன [கத்தோல்லிக்கரா அல்லது புருடெஸ்டென்டா / Catholic or Protestant] பேராயர் ஜான் ஜோசப், யார், என்று கேட்டால் பதில் சொல்லவில்லை.மற்றவர் யார்? முகத்தை மறைத்து கொணடிருப்பதால் யார் என்று தெரியவில்லை. இவர்கள் ஏன் பிஜேபியில் சேர்ந்தார்கள்? என்ற கேள்விகளுக்கும் பதில் இல்லை. ஆனால், “மூன்று நாட்களுக்கு முன்னர் (12-11-2020) நான் பிஜேபியில் சேர்ந்தது உண்மை, ஆனால், அருமைநாயகம் கேட்டதற்கு, இணங்க, இப்பொழுது, பிஜேபியிலிந்ருது விலகி விட்டேன்,” என்று வீடியோவில் உறுதி செய்யும்[5], இந்த பாஸ்டர் யார் என்று தெரியவில்லை. பாதிரி-பாஸ்டர் போன்று அங்கியும் அணியாமல், ஜோராக புள்ளிகள் கொண்ட பிரௌன் சொக்கா / சர்ட் போட்டுக் கொண்டு, இவ்வாறு பேட்டிக் கொடுத்துள்ளார். வழக்கம் போல, சங்கப் பரிவார் என்று சொல்லிக் கொள்ளும் ஆட்கள் தான் இதையும் பரப்பி வருகிறார்கள். ஆனால், தலைவர் முருகன், இதற்கு எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

‘கிறிஸ்துவ மிஷினரி அணி’ – மீசோராமின் நிலை தமிழகத்தில் உள்ளதா?: பாஜக கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்சி என்ற அடையாளத்தை மறைக்க, இளைஞரணி, மகளிரணியைப் போல, கிறிஸ்துவ மிஷினரி அணி’ ஒன்றை பாஜக உருவாக்கி இருக்கிறது[6]. பாஜக தலைவர் அமித்ஷாவின் உத்தரவின் அடிப்படையில் இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது[7]. மேலும், இந்த மிஷினரிகள் அணிக்கு, மிசோ இன மக்கள் மத்தியில், செல்வாக்குள்ள லால்ஹிரியதெரங்கா என்பவரை தலைவராக பாஜக நியமித்துள்ளது[8]. பாஜகவும் கிறிஸ்தவர்களுக்கு எதிரானதல்ல என்பதைக் காட்டவே இந்த அணி அமைக்கப்பட்டுள்ளது[9].

இந்த அம்மணிதான், ஜான் ஜோசப்புக்கு, அகில இந்திய அளவில் பதவி கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

தமிழகத்தில் அத்தகைய நிலை இல்லை. கன்னியாகுமரி பகுதிகளில் தான், கிருத்துவர்களின் மக்கட்தொகை உள்ளது. அதனால், தமிழகத்தில் அத்தகைய மிஷினரி அணி தேவையில்லை. டாக்டரான ஜெமிலா கடந்த 2015ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார்[10]. அவருக்கு தமிழக பாஜக மகளிரணி மாநில செயலாளர் மற்றும் ஊடக செய்தி தொடர்பாளராக பதவிகள் வழங்கப்பட்டன. 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ராயபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். ஆனால், 2017ல் கட்சியின் செயல்பாடுகளில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது என்று விலகினார்[11]. சண்முகநாதன் என்ற பழுத்த, திறமையுள்ள தலைவர், கிருத்துவர்களின் சகவாசத்தால், பதவியிழக்க நேரிட்டது. அதாவது, நிச்சயமாக, அடிப்படையில் ஒத்து வராத, இரண்டு சித்தாந்த ஆட்களும், கூட்டாக வருவது, அரசியலுக்கு சகஜம் என்றிருக்கலாம், ஆனால், அது சகஜமாகாது, என்பதை, மூன்றே நாளில் ஒரு பாதிரி மெய்பித்துள்ளது நோக்கத் தக்கது.


© வேதபிரகாஷ்

15-11-2020


[1] தமிழ்.ஒன்.இந்தியா, முருகனைதேடி வந்தஜான் ஜோசப்“.. கூடவே 150 பேரும்.. பாஜகவின் கலர் படு வேகமாக மாறுதே!, By Hemavandhana, Updated: Saturday, November 14, 2020, 10:10 [IST].

[2] https://tamil.oneindia.com/news/chennai/nearly-150-christians-join-bjp-403074.html

[3] நக்கீரன், பாஜகவில் இணைந்த 150 கிறிஸ்தவர்கள், நக்கீரன் செய்திப்பிரிவு

பி.அசோக்குமார், Published on 13/11/2020 (15:16) | Edited on 13/11/2020 (15:31).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/politics/150-christians-join-bjp

[5]https://www.youtube.com/watch?v=kHyTiQvp1W4&feature=youtu.be&fbclid=IwAR2oDTN8Xf1Udn0f6OBi6UulyfK82osrMQ0qzRXFDXtRoxqd5r1TmSdwzNQ

[6] தமிழ்.ஏசியா.நெட்.நியூஸ், பாஜகவில் தொடங்கப்பட்டுள்ள கிறிஸ்தவ மிஷினரி அணி….. மிசோரமில் அதிரடியாக களம் இறங்கிய அமித்ஷா !!, By Selvanayagam P, Mizoram, First Published 26, Jul 2019, 11:46 PM

[7] https://tamil.asianetnews.com/politics/christain-misinaery-in-bjp-pv9hg5

[8] தமிழ்.ஒன்.இந்தியா, மிசோரம் பாஜகவில் கிறிஸ்தவ மிஷினரி அணி உதயம்!, By Mathivanan Maran, Published: Wednesday, July 24, 2019, 12:53 [IST].

[9] https://tamil.oneindia.com/news/india/bjp-sets-up-missionary-cell-in-mizoram-357946.html

[10] தமிழ்.ஒன்.இந்தியா, பாஜகவுக்கு நேரம் சரியில்லை.. விலகினார் தமிழக மகளிரணி மாநில செயலாளர் ஜெமிலா!, By Kalaimathi | Published: Saturday, October 21, 2017, 12:09 [IST].

[11] https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-bjp-woman-wing-secretary-jemila-has-resigned-from-299081.html