Posts Tagged ‘சார்பு’

தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவின் அரசியல் கூட்டணிகள் – மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகள் (3)

பிப்ரவரி 15, 2014

தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவின் அரசியல் கூட்டணிகள் – மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகள் (3)

பச்சமுத்து லீமா ரோஸ் மார்ட்டினின் மனைவி

பச்சமுத்து லீமா ரோஸ் மார்ட்டினின் மனைவி

பச்சமுத்து பாரிவேந்தர் ஆன கதை: பச்சமுத்து திடீரென்று தன்னை “பாரிவேந்தர்” என்று கூறிக்கொண்டு, பிஓஸ்டர்கள் அடுத்து, விழாக்கள் நடத்த ஆரம்பித்தார். இவையெல்லாம் 1960களில் இருந்த இன்றும் வாழ்ந்து வரும் பழைய நண்பர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில், பச்சமுத்து அத்தகைய விளம்பரங்களுக்கு ஆசைப்படுபவர் அல்ல. அப்படியென்றால், ஒன்று அவரே மாறியிருக்க வேண்டும் அல்லது ஏதோ ஒரு கூட்டம் அவரை மாற்றிருக்கவேண்டும்[1]. சமீபத்தைய திரைப்பட முதலீடுகள், தொடர்புகள் அவர்களை தூரத்தில் எடுத்துச் சென்று விட்டது. சங்கர், “நண்பன்” திரைப்படத்தில் “பாரிவேந்தர்ரென்ற பெயரை அறிவும், முயற்சியும், ஒழுக்கமும் இல்லா ஒரு பாத்திரத்திற்கு  அப்பெயரைச் சூட்டியதால், பேராசிரியர் க.நெடுஞ்செழியன்[2] என்பவர் கண்டித்து “விடுதலையில்” எழுதியுள்ளார்.  “பேராசிரியர்    பச்சமுத்து   உழைப்பின்  குறியீடு.  முயற்சியின்    வடிவம்.    ஆல்போல்   தழைத்து    அருகுபோல் வேர்விட்டு  வளர்ந்து வரும்  ஒரு  பெரிய  நிறுவனத்தின்  தலைவர்.  ஓர் அரசியல் கட்சியின்  நிறு வனர்.    மணிமேகலை    அமுதசுரபியைக்கொண்டு, காணார், கேளார், கால்  முடப்பட்டோர்  பேணுநரின்றிப் பிணியால்  வாடியோர்  ஆகியோருக்குச்  செய்த அறங்களைப் போல, இன்று  ஆயிரக்கணக்கான  ஏழை,  எளியோருக்கு  வாழ்வளிக்கும்  வள்ளல்  பாரிவேந்தர்  என  அவரை  மற்றவர்கள்அவரால்  பயன்பெறும்  மக்கள்  அழைத்து  மகிழ்கின்றனர். விருதுக்கு  ஏற்ப  வாழும்  வாழ்க்கை  அவரின்  வாழ்க்கைஅவரைச் சிறுமைப் படுத்துவது  தனிமனித  அவதூறாகும்  இது மன்னிக்க  முடியாத  குற்றமே!”, என்று முடித்துள்ளார்[3]. திராவிட இயக்கத்தின் “விடுதலை’யில், இது வந்துள்ளதால் இதெல்லாம், அரசியல், சித்தாந்தம், ஜாதி முதலியவை கலந்துள்ள பிரச்சினை போன்று தெரிகிறது. இவரைப்பற்றி தமிழ் இணைதளங்களிலும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மற்ற கல்லூரி வேந்தர்கள், முதலாளிகள் முதலியோரும் கோடிகளை அள்ளிக் கொண்டிருந்தாலும், திமுக-அதிமுக ஆதரவுடன் வியாபாரம் செய்து கொண்டிருந்தாலும் அவர்களைப் பற்றி அத்தகைய விமர்சனங்கள் வருவதில்லை.

பச்சமுத்துவின் மீது பாலியல் புகார்

பச்சமுத்துவின் மீது பாலியல் புகார் – உதாரணத்திற்கு கொடுக்கப் பட்டது

பாரிவேந்தர்  மீது  பாலியல்  புகார்  கூறும்  திலகா[4]: பச்சமுத்து பற்றி தமிழ் இணைதளங்களிலும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது என்று குறிப்பிடப்பட்டது. உதாரணத்திற்காக இவை கொடுக்கப் படுகின்றன. இந்திய ஜனநாயக கட்சியில் தூத்துக்குடி மாவட்ட மகளிரணி செயலாளராக பொறுப்பு வகிப்பவர் திலகவதி. 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக ஐ.ஜே.கே. கட்சியின் சார்பில் போட்டியிட்டவர். மீனவ சமுதாயத்தை சார்ந்த இவர் எஸ்.ஆர்.எம். குழுமத்தின் அங்கமான லேனிங் ட்ரீ பிரைவெட் லிமிடெட் நிறுவத்தின் தூத்துக்குடி கிளையை நடத்துபவர். பாரிவேந்தருக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்ட திலகவதி பாரிவேந்தர் மீது கூறும் குற்றச்சாட்டுகள் அச்சில் ஏற்ற முடியாத ரகத்தை சார்ந்தவை. நம்மை சந்தித்து கடிதம் கொடுத்து பிரசுரிக்குமாறு கேட்டுக் கொண்டதன் பேரில் அக்கடிதத்தை அப்படியே பிரசுரிக்கிறோம்….

பச்சமுத்துவும் கூட்டணியில் லீமா ரோஸும்

பச்சமுத்துவும் கூட்டணியில் லீமா ரோஸும் இருப்பது செக்யூலரிஸமா, ஊழல் தர்மமா?

பியர்ல்  சிட்டி  பவுண்டேசன்  நடத்தும்  திலகா (2011-12): ‘‘தூத்துக்குடி, 1&பி. சன்பீட்டர் கோவில் தெருவில் வசிக்கும் திலகவதி ஆகிய நான், இந்திய ஜனநாயக கட்சியில் மாவட்ட மகளிரணி செயலாளராக இருந்து வருகிறேன். ஏழை மக்கள் மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு பியர்ல் சிட்டி பவுண்டேசன் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றும் நடத்தி வருகிறேன். 2011&ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்ற வேட்பாளராக ஐ.ஜே.கே. கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கலும் செய்திருந்தேன். சில காரணங்களுக்காக வேட்பு மனு தள்ளுபடி செய்யப்படவே நான் போட்டியிட முடியாத சூழ்நிலை உருவானது. இதற்காக வழக்கு தொடுத்து வழக்கும் நடந்து வருகிறது. திருநெல்வேலியில் நடந்த கட்சியின் மாநாடு, சென்னையில் நடந்த பாரிவேந்தரின் பிறந்த நாள் விழாவான இளைஞர் எழுச்சிநாள் ஆகியவற்றில் பெருந்திரளான பெண்கள் மற்றும் இளைஞர், இளைஞிகளுடன் கலந்து கொண்டேன்.

Narendra Modi at SRM convocation 2014 urging to create google, ms etc in India

Narendra Modi at SRM convocation 2014 urging to create google, ms etc in India

எஸ்.ஆர்.எம். லேனிங்  ட்ரீ  பிரைவெட்  லிமிடெட்  நிறுவனத்திற்கு  திலகா   செலவழித்தது: இந்நிலையில் எஸ்.ஆர்.எம். லேனிங் ட்ரீ பிரைவெட் லிமிடெட் நிறுவனத்திற்கு கிளைகள் தேவைப்படுவதாக புதிய தலைமுறை பத்திரிக்கையில் வந்த விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்தேன். நான் கட்சியில் பொறுப்பில் இருந்ததால் எனக்கு எளிதில் அனுமதியும் கிடைத்தது. இந்த பயிற்சி மையத்தை புகழ் பெற வைக்க வேண்டும் என நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதை அடுத்து, மேம்பட்ட உள்கட்டமைப்பு, எஸ்.ஆர்.எம். நிறுவனத்திற்கான வைப்புத் தொகை, விளம்பர செலவுகள் என ரூ.45,00,000 (நாற்பத்தைந்து லட்ச ரூபாய்) செலவழித்துள்ளேன். இந்த பயிற்சி மையத்தை திறம்பட நடத்துவதற்கு எஸ்.ஆர்.எம். நிறுவனம் சிறு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி துவக்க விழா சம்பந்தமாக விளம்பரங்களும், ஊடக விளம்பரங்கள் போன்றவற்றையும் செய்யவில்லை. இதனால் மாணவர் சேர்க்கையில் தொய்வு ஏற்பட ஆரம்பித்தது. ஆதனால் பயிற்சி மையம் நடத்துவதற்கு சிரமப் பட ஆரம்பித்தேன்.

 

modi-tatto-னநமோ பச்சை குத்துதல்

modi-tatto- நமோ பச்சை குத்துதல்

பெண்களைக்  கூட்டி  வந்தாயா  என்ற  பிரச்சினை: இதற்கிடையில் 2011&ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டு போட்டியிட்டேன். இதற்காகவும் நிறைய பணத்தை செலவழித்தேன். பொருளாதார ரீதியாக எனக்கு ஏற்பட்ட இந்த சிக்கலை தீர்ப்பதற்கு கட்சியின் நிறுவனரும், எஸ்.ஆர்.எம். வேந்தருமான பாரிவேந்தரை சந்தித்து முறையிட திட்டமிட்டு, அப்போதைய மாநில இளைஞரணி செயலாளர் மதன் அவர்களை தொடர்பு கொண்டேன். அந்த சமயத்தில் மதுரை வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அவர்களை சந்திக்க பாரிவேந்தர் வருவதாகவும், அந்த சமயத்தில் மதுரை பாண்டியன் ஹோட்டலுக்கு வந்தால் வேந்தரை சந்திக்கலாம் என்றும், அதற்காக சிறிய வேலை ஒன்று செய்ய வேண்டும் எனவும் கூறினார். ஏதேனும் கூட்டம் அழைத்து வரச் சொல்வார்களோ என்று எண்ணிய என்னிடம், “நீ தொண்டு நிறுவனம் நடத்தி சமூகப் பணிகள் செய்து வருவதால் நிறைய இளம்பெண்களின் அறிமுகம் வைத்திருப்பாய். அழகான இரு இளம்பெண்களை அழைத்து வந்து வேந்தரை திருப்திப்படுத்தினால் உன் பிரச்சினை அனைத்தும் இன்றே தீர்க்கப்பட்டு விடும்’’ எனக் கூறினார். அதிர்ச்சியடைந்த நான் மதனை திட்டிவிட்டு அவரின் உதவி இல்லாமலேயே வேந்தரை சந்தித்தேன். என்னை பார்த்த வேந்தர் “என்ன தனியாக வந்திருக்கிறாய்? மதன் ஏதும் கூறவில்லையா?” என்று கேட்டார். அதற்கு “அந்த மாதிரி ஆள் நான் இல்லை. உங்கள் கட்சியையும், நிறுவனத்தையும் நம்பி நான் மோசம் போய்க் கொண்டிருக்கிறேன்.

 

selling Modi and brand

selling Modi and brand

எஸ்.ஆர்.எம். லேனிங் ட்ரீ பிரைவெட் லிமிடெட்  பிரான்சைஸ்  வியாபாரமா, மோசடியா: நிறுவனத்திற்காக நிறைய முதலீடும் செய்து விட்டேன். தற்போது தாங்க முடியாத கடன் பிரச்சினையில் இருக்கிறேன். எனவே என்னுடைய பிரச்சினைக்களுக்கு தீர்வு காண ஆவணச் செய்யுமாறு எஸ்.ஆர்.எம். லேனிங் ட்ரீ பிரைவெட் லிமிடெட் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டேன். நமட்டுச் சிரிப்போடு என்னை அனுப்பி வைத்த வேந்தர் ஆவணச் செய்வதாக கூறினார். பணத்தை பெற சென்னைக்கும் & தூத்துக்குடிக்கும் அலைந்தேன். ஒரு பயனும் இல்லை. கட்சியின் தலைமை அலுவலகத்துக்கும் சென்று முறையிட்டேன். ஊடகங்கள் வாயிலாக உங்கள் மோசடியை வெளிக் கொண்டு வருவேன் என சூளுரைத்தேன். ஊடகங்களுக்கு நாங்கள் தான் ராஜா. ஊடகங்களின் பெயரை பயன்படுத்தி எங்களையே மிரட்டுகிறாயா? என சீறியவர்கள் முடிந்ததை பார் என சத்தமிட்டார்கள். இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள என்னுடைய பயிற்சி மையம் பாரிவேந்தர் மற்றும் மதன் ஏற்பாட்டில் அடித்து நொறுக்கப்பட்டு அனைத்துப் பொருட்களும் அள்ளி செல்லப்பட்டு விட்டன. எனக்கு மன உளைச்சலையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்திய பாரிவேந்தர் மீதும் அவருடைய நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வழி வகை செய்யும் பொருட்டு இந்த மோசடியை பிரசுரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி, அன்புடன் என்றும் தாயக பணியில் திலகவதி[5]. இதில் உண்மை எந்த அளவிற்கு, பிரச்சினை என்ன என்பதெல்லாம் தெரியவந்தால் தான் பின்னணி விளங்கும்.

 

மோடி வியாபாரம் லாபம் யாருக்கு

மோடி வியாபாரம் லாபம் யாருக்கு

பச்சமுத்துவின் மாற்றங்கள் பெயரிலும், நடவடிக்கைகளிலும் உள்ளன (2010-14): தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து அரசியல் நோக்கோடுதான் “பாரிவேந்தர்” ஆனார். எஸ்.ஆர்.எம். நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் மூலம் நடிகர்கள், எழுத்தாளர்கள், ஊடகக்காரர்கள் முதலியோரை சிறப்பித்து ஆதரவைப் பெருக்கினார். பெரிய அரசியல்வாதிகள், தொழிலாளிகள், பணமுதலைகளின் வாரிசுகள் இவர் கல்லூரிகளில் படித்து அல்லது படிக்க வைக்கப் பட்டு பொறியியல், மருத்துவ, நிர்வாக பட்டங்களுடன் வெளியேறியுள்ளனர். அதில் கட்சிபேதம் பார்க்கப்படவில்லை. ஆனால், அவரே அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படவில்லை. இருப்பினும், இவரது சாம்ராஜ்யத்தையே ஒரு திராவிடக் கட்சி விலைபேசியது, இவரை ஒழிக்கத் தீர்மானித்தது எனும் நிலையில் பாரிவேந்தர் இரண்டாவது முறையாக மாறிவிட்டார். பழையமாம்பலத்திலிருந்து காட்டாங்கொளத்தூருக்கு மாறிய போது ஏற்பட்ட மாற்றத்தை விட, இம்மாற்றம் வித்தியாசமானது. ஆக அரசியல்வாதியாகி விட்டப் பிறகு அவரிடம் கொள்கைகள், நியாயங்கள், தர்மங்கள் எல்லாம் எதிர்பார்க்க முடியாது. கூட்டணிகள் என்று வரும்போது, யாரோடோ கூட்டு வைத்துக் கொள்ளத்தான் வேண்டியுள்ளது.

 

namostore-launched

namostore-launched

“மோடி பிரான்ட்” மூலம் அரசியல் வியாபாரம்: தூய்மையின் சின்னமாக இருக்கும் அன்னா ஹஜாரே கூட இப்பொழுது மம்தா பேனர்ஜியை ஆதரிக்கிறேன், அவருக்காக பிரச்சாரம் செய்யப் போகிறேன் என்று கிளம்பி விட்டார். மம்தா பேனர்ஜி ஊழலற்ற சுத்தமான அரசியல் தங்கமா, வெள்ளியா என்று தெரியவில்லை. அதைப் பற்றி சில கம்யூனிஸ்டுகளைத் தவிர யாரும் பேசுவதும் இல்லை, விமர்சிப்பதும் இல்லை. இந்நிலையில், பிஜேபியுடன் கூட்டு என்பது கட்டாயமாகி விட்டது. போதாகுறைக்கு “மோடி பிரான்ட்” கண்டு கருணாநிதி போன்ற அரசியல் வித்தகர்களே கலக்கத்தில் உள்ளனர். சோனியாவைவிட, இவருடன் சேர்ந்தால் வெர்றிபெறலாம் என்ற நம்பிக்கையும் வந்துவிட்டது. வாஜ்பேயியையும் மிஞ்சக்கூடிய கவர்ச்சி, பேச்சு, அனைவரைம் வசீகரிக்கும் திறன், அமெரிக்கா போன்ற நாட்டினரையே திகைக்க வைக்கும் திறன் முதலியவற்றைக் கண்டு வியக்காமல் இல்லை. ஆகவே தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகளை “மோடி பிரான்ட்” மூலம் தீர்த்துக் கொள்ள தீர்மானித்ததில் வியப்பொன்றும் இல்லை. பதிலுக்கு பிஜேபியும் அனுசரித்து, சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

வேதபிரகாஷ்

© 15-02-2014


[2] விடுதலை, பகடிக்குரியபெயராபாரிவேந்தர்?, வியாழன், 26 ஜனவரி 2012 , பேராசிரியர் க.நெடுஞ்செழியன் என்றிருந்தாலும், எழுதியவர் “சங்கர்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

[5] இது சம்பந்தமாக பாரிவேந்தரின் கருத்தையறிய இரண்டு முறை அக்கட்சியின் தலைமை நிலையத்திற்கு சென்றோம். சந்திக்க முடியவில்லை. இருப்பினும் புகாரை பிரதி எடுத்து கொடுத்து கருத்தை பதிவு செய்யுமாறு கேட்டு கொண்டோம் அதற்கும் பதிலில்லை. என்னதான் நடக்குது நாட்டில்? – நன்றி ஏகவலைவன் வார இதழ்