Posts Tagged ‘கொழுக்கட்டை’

கஞ்சியும், கொழுக்கட்டையும்: கனிமொழிக்கு எது மகிழ்ச்சி தருகிறது?

செப்ரெம்பர் 8, 2010

கஞ்சியும், கொழுக்கட்டையும்: கனிமொழிக்கு எது மகிழ்ச்சி தருகிறது?

விழாக்களால் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும்: கனிமொழி

கஞ்சி குடிக்க வந்த, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், கனிமொழி பேசுவது: “விழாக்களால் மக்கள் மனதில் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும்; பயம் ஏற்படக் கூடாது,” என கனிமொழி எம்.பி., பேசினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. பாத்திமா முசாபர் தலைமை வகித்தார். 500 ஏழை பெண்களுக்கு இலவச சேலைகள், அரிசி, தையல் மிஷின்கள் வழங்கப்பட்டன. இவர்களில் எத்தனை பேர் முஸ்லீம்-அல்லாதவர்கள் என்று குறிப்பிடவில்லை!

தி.மு.., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி பேசியதாவது[1]: “இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, ரம்ஜான் விழா ஒரே நாளில் வருவதாக பாத்திமா குறிப்பிட்டு பேசினார். எந்த மத விழாவும், நிகழ்ச்சியும் மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும். பயம் ஏற்படக் கூடாது. இரண்டு விழாக்கள் நடைபெறுவதை இரட்டிப்பு மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும்; ஒன்றாக கொண்டாட வேண்டும். ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பு தேடும் அவல நிலை ஏற்படக் கூடாது. அடிப்படையில் எல்லா மதமும்,  “ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும். ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாதுஎன்பதைத் தான் போதிக்கின்றன[2]. முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அந்த ஒதுக்கீட்டில் ஆண்கள் மட்டும் படிக்க வேண்டும் என கருதக்கூடாது. முஸ்லிம் பெண்களும் கல்வி பயில வேண்டும். ஆண்கள் படித்தால் ஒரு குடும்பம் தான் முன்னேறும். பெண்கள் படித்தால் ஒரு சமுதாயமே முன்னேறும். எதிர்கால தலைமுறை முன்னேறும். பெண்களுக்கான 33 சதவீதம் ஒதுக்கீடு கேட்டு போராடி வருகிறோம். ஆயிரம் தடைகள், குறுக்கீடுகள் வந்து போகின்றன. இந்த கோரிக்கை நிச்சயம் நிறைவேறும்”,  இவ்வாறு கனிமொழி பேசினார்.

வின்சென்ட் சின்னதுரையும் கஞ்சி குடித்தாராம்: தமிழ்நாடு கேபிள் “டிவி’ உரிமையாளர்கள் சங்க தலைவர் காயல்இளவரசு, மகளிர் ஆணைய தலைவர் சற்குணபாண்டியன்  உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈமான் தமிழ் இலக்கிய பேரவை சார்பில் நடந்த இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு கமுதிபஷீர் தலைமை வகித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலர் காதர்மொய்தீன்,  தேசிய சிறுசேமிப்பு துணைத்தலைவர் ரகுமான்கான், சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் வின்சென்ட் சின்னதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இரண்டு விழாக்கள் நடைபெறுவதை இரட்டிப்பு மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும்: கனிமொழி இவ்வாறு பேசியுள்ளதால், கொழுக்கட்டையும் சாப்பிட வருவரா, அல்லது கஞ்சியுடன் நிறுத்திக் கொள்வாரா? பொறுத்துதான் பார்க்க வேண்டும்! இனமான வீரர் வீரமணி அசிங்கமாக அல்லவா பேசி வருகிறார். அதனால் மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்த முடியுமா இல்லை, பயத்தை உண்டாக்க முடியுமா? கனிமொழி விரமணியிடம் என்ன செய்வார்?

வித்தியாசமான முறையில் விநாயகர் சதுர்த்தி பற்றிய துண்டு அறிக்கைகள் தயார்[3]! விநாயகர் என்கிற இறக்குமதிக் கடவுளுக்கு தமிழ்நாட்டில் பண்டிகையாம்! தமிழர் தலைவர் அவர்கள் 3.9.2010 அன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டபடி, இவ்வாண்டு விநாயகர் சதுர்த்தி ஆபாசத்தை – அருவருப்பை மக்கள் மத்தியில் தீவிரமாகப் பரப்புவோம்! வித்தியாசமான வகையில் 4 பக்க அளவில் துண்டு அறிக்கைகள் அச்சிடப்பட்டுள்ளன. ஆயிரம் துண்டு அறிக்கைகளுக்கு நன்கொடை ரூ.300 தான். கழகத் தோழர்கள் வீட்டுக்கு வீடு, கடைக்குக் கடை சென்று விநியோகியுங்கள்! விநியோகியுங்கள்!! திராவிடர் கழகம் தலைமை நிலையம், பெரியார் திடல், சென்னை – 600 007 போன்: 044-26618163.


[1] தினமலர், விழாக்களால் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும்: கனிமொழி, செப்டம்பர் 07, 2010. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=79829

[2] கனிமொழியின் புதிய கண்டுபிடிப்பா அல்லது தேர்தல் வருவதனால், செய்யப்படும் சமசரமா என்று தெரியவில்லை.

[3] விடுதலை, 07-09-2019, ப.8, http://www.viduthalai.periyar.org.in/20100907/news27.html

  • தே.மு.தி.க., சார்பில் சென்னையில் நடந்த இப்தார் நோன்பு திறப்பில் பங்கேற்று நோன்பு கஞ்சி ருசித்த அக்கட்சி தலைவர் விஜயகாந்த்.
  • இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பில், சென்னையில், நடந்த இப்தார் விருந்தில், கனிமொழி எம்.பி., கலந்து கொண்டார். அருகில், மகளிர் அணியின் மாநில தலைவி பாத்திமா முசப்பர்.

கஞ்சி குடிக்கும் விஜயகாந்த் சொல்வது: சிறுபான்மை மக்கள் முன்னேற முயற்சி எடுக்கவில்லை[1]: விஜயகாந்த் “சிறுபான்மை சமூக மக்களின் நண்பர் என்று கூறுபவர்கள், அந்த மக்கள் முன்னேற்றத்திற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை,” என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார். தே.மு.தி.க., சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வடசென்னை, தண்டையார்பேட்டையில் நேற்று நடந்தது.

இஸ்லாம் என்பது மதம் கிடையாது – இதில் பங்கேற்று நோன்பு திறந்து வைத்து அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: இஸ்லாம் என்பது மதம் கிடையாது; மார்க்கம். அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும், ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதைத்தான் குர்-ஆன் கூறுகிறது. எனக்கு அனைத்து மதங்களின் மீதும் நம்பிக்கை உள்ளது. எனது வீட்டிலும், அலுவலக அறையிலும் அனைத்து மத கடவுள் படங்களும் உள்ளன. கிடங்குகளில் வீணாகும் உணவுப்பொருட்களை ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், நாட்டில் ஏழைகள் அதிகம் உள்ளநிலையில், அவற்றை பங்கிட்டு கொடுக்க முடியாது. மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் சுப்ரீம் கோர்ட் தலையிடக் கூடாது என்கின்றனர்[2]. ஏழைகளை வாழவைக்கும் அரசு என்றால், வீணாகும் பொருட்களை கொடுக்கவேண்டியதுதானே. அங்கு அப்படி என்றால் இங்கு தி.மு.க., அரசு பொதுமக்களுக்கு குல்லா போட்டு ஏமாற்றுகிறது.

தி.மு.., அரசு பொதுமக்களுக்கு குல்லா போட்டு ஏமாற்றுகிறது[3]: சிறுபான்மை சமூக மக்களின் நண்பர் என்று கூறுபவர்கள், அவர்களின் முன்னேற்றத்திற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நான் இதை தட்டிக்கேட்டால் கோபம் வருகிறது. விஜயகாந்தால் மட்டும் இதையெல்லாம் செய்ய முடியுமா என்று கேட்கின்றனர். இப்படி தொடர்ந்து பேசினால் என் சொத்தை பறிப்பார்கள்; வெட்டுவார்கள். இதற்கெல்லாம் நான் என்றைக்கும் அஞ்சமாட்டேன். என்னை வாழ வைத்த மக்களுக்காக என்னவேண்டுமானாலும் செய்வேன். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.இந்நிகழ்ச்சியில் தே.மு.தி.க., மாநில நிர்வாகிகள் சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


[1] தினமலர், சிறுபான்மை மக்கள் முன்னேற முயற்சி எடுக்கவில்லை: விஜயகாந்த், பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2010,23:35 IST; மாற்றம் செய்த நாள் : செப்டம்பர் 08,2010,01:03 IST; http://www.dinamalar.com/News_Detail.asp?Id=79901

[2] மன்மோஹன் சிங் சொன்னதைக் குறிப்பிடுகிறார் போலும்!

[3] குல்லா போடுவதற்கு இத்தனை அர்த்தங்கள் இருந்தால், ஆபத்துதான்!