Posts Tagged ‘கப்பல்’

போலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (3)

ஜூலை 10, 2017

போலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (3)

Modi present to Isreal PM - copper plates 06-07-2017

மோடி, போப்பை சந்தித்தால், “தாமஸின் எலும்புத் துண்டு” மாதிரி கொடுப்பாரா?:  மோடியின் பரிசு-நட்புறவு பற்றிய விவகாரத்தில் சேரமான் பெருமாள், தாமஸ் போன்ற கட்டுக்கதைகள் பின்னணியில் இருப்பதுதான், சரித்திரம் தெரிந்தவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. பரிசு என்றால், சால்வை, குர்தா, போன்றவற்றைக் கொடுத்தது மாதிரி கொடுத்திருக்கலாம், ஆனால், இத்தகைய போலிகளை கொடுப்பதுதான் திகைப்பாக இருக்கிறது. நாளைக்கு, ஒருவேளை, போப்பை சந்தித்தால், “தாமஸின் எலும்புத் துண்டு” மாதிரி கொடுத்து, “தூது-நட்பு” பேசி, இரு நாட்டுறவுகளைப் போற்றுவாரா? ஆக, சரித்திரத்திற்குப் புறம்பான இவ்விசயங்கள் எப்படி நடக்கின்றன என்பது புதிராக உள்ளன. மோடியின் டுவிட்டர், அரசாங்கப்  பூர்வமான இணைதள பதிவுகள், புகைப்படங்கள் வெளியிடுவன எல்லாமே மறுக்க முடியாதவை. நாளைக்கு, கிருத்துவர்கள், முஸ்லிம்கள் தங்களது கட்டுக்கதை பரப்புப் புத்தகங்களில், பிரச்சாரங்களில் இவற்றை நிச்சயமாக சேர்த்துக் கொள்வர். மோடியே ஒப்புக் கொண்டு விட்டார் என்றும் எழுதப் போகிறார்கள். அதனால், தான், மிக கவலையுடன், இந்த பதிவுகள் என்னால் செய்யப்படுகின்றன. இனி, அந்த சேரமான் கட்டுக்கதை எப்படி உருவானது என்பதனை தொடர்ந்து பார்ப்போம்.

Later-dated mohammedan Mss claim such legends

900 CE முதல் 1800 CE வரை ஒரே கட்டுக்கதையை மாற்றிமாற்றி எழுதப்பட்டதாம்: டுயார்தே பார்போசா [Duarte Barbosa] என்ற போர்ச்சுகீசியர், முதன் முதலில் 1510 CEல் இக்கட்டுக்கதையைக் குறிப்பிட்டதாகத் தெரிகிறது. “எனக்கு 600 வருடங்களுக்கு முன்னால் சேரமான் பெருமாள் வாழ்ந்தான்…….” என்றாதால், அவனது காலம் c.900 CEஎன்று புனைய ஆரம்பித்தனர். இதே போன்ற இன்னொரு கட்டுக்கதையை ஷேக் ஜைமுத்தீன் [Sheikh Zeinuddin] என்பவர் 1700-1800 CE வாக்கில் எழுதி வைத்ததாக சொல்லப்படுகிறது. 1610 CEல் ஜோயாஸ் டி பரோஸ் [Joas deBarros] என்ற இன்னொரு போர்ச்சுகீசியர், இன்னொருவிதமாக, இக்கதையை அறிந்து எழுத் வைத்தாராம். இப்படி, கட்டுக்கதையே மாற்றி-மாற்றி எழுதப் பட்டதால் தான்,

  1. நிலவை கனவில் பார்த்தான், நேரில் பார்த்தான், உப்பரியிலிருந்து பார்த்தான்.
  2. கனவில் கண்டான்.
  3. நிலவு இரண்டாக உடைந்தது, பிளந்தது.
  4. ஒரு பகுதி, பூமியில் விழுந்தது, மலபாரில் விழுந்தது.
  5. அதைப் பற்றி ஜோசியர்களிடம் விசாரித்தான், அரேபியர்களிடம் விசாரித்தான்.
  6. இந்து ராஜா மொஹம்மதைக் காணச் சென்றான்.
  7. மொஹம்மதுவைப் பார்த்தான், பார்க்கவில்லை.
  8. சுன்னத் செய்து கொண்டான், செய்து கொள்ளவில்லை.
  9. இந்தியாவுக்கு திரும்ப வந்தான், வரவில்லை;
  10. நோய்வாய்ப்பட்டு இறந்தான்; கல்லறை அரேபியாவில் உள்ளது, இந்தியாவில் உள்ளது, காணப்படவில்லை.

Cheraman witnessed moon split like mohammed

சரித்திர மற்றும் கால முரண்பாடுகள்: முன்னரே குறிப்பிட்டது, 17 / 18 நூற்றாண்டுகளில் 9ம் நூற்றாண்டு விசயங்கள் பற்றி எழுதப்பட்ட நூல் என்பதாகும். ஒருவேளை தீபவம்சம் மற்றும் மகாவம்சம் போல, ஐரோப்பியர்களால், உள்ளூர் பண்டிதர்களை வைத்து உருவாக்கப்பட்ட நூலாக இருக்கலாம். கேரளோத்பத்தியின் படி, அனகுன்டியைச் சேர்ந்த கிருஷ்ணதேவராயர், சேரமான் பெருமாளை மெக்காவுக்கு செல்லுமாறு பணித்ததாகவும், அங்கு அவர் மதம் மாறியதாக சொல்கிறது. சேரமான் பெருமாள் 355CEல் வந்து, 428ல் மெக்காவுக்குச் சென்றதாகவுள்ளது. ஆனால், மொஹம்மது 622 CEவாக்கில் தான் இருந்தார், பிறகு இஸ்லாம் தோன்றியது. கிருஷ்ணதேவராயர் 1509 CEல் தான் அனலுன்டியின் அரசராகிறார். ஆகவே, உள்ளூர்வாசி, இவ்வளவு தப்பும்-தவறாக எழுதியிருக்க மாட்டான். கிருஷ்ணதேவராயர், அரேபியர்களிடமிருந்து குதிரைகள் வாங்கினார் மற்றும் தனது ராணுவத்தில் முகமதிய தளபது, வீரர்களை வைத்திருந்தார் என்பதினார், அவரது பெயரைச் சேர்த்து எழுதியிருக்கலாம். மேலும் கேரளாவில் முதலில் இருந்தது, இந்து மதமா, ஜைனமா, பௌத்தமா என்ற குழப்பங்களும் ஐரோப்பிய-கிருத்துவ எழுத்தாளர்களிடம் இருந்தன. பச்சனன், அரேபியாவில் ஜைனம் இருந்தது என்றார்.

Ore Nadu - wrapper June 2017- spreading myth- tomb in Arabia

முகமதியர் சேரமான் கட்டுக்கதையினை முன்னால் தள்ள முயற்சித்தது: பிரான்சிஸ் டே என்பவரும், பெருமாள் கொச்சினின் ஆளுனராக 36 வருடங்கள் இருந்ததாகவும், ஓய்வு பெற்றப் பிறகு, அங்கிருந்த மஹாஜெயின்கள், அவரை 378ல் மெக்காவுக்குச் செல்லுமாறு பணித்தனர். மெக்காவில் ஜைனமதம் நன்றாக நிறுவப்பட்டிருந்ததாகவும், அங்கிருப்பவர்கள் இந்தியாவிடன் நன்றாக வியாபாரம் செய்து கொண்டிருந்ததாகவும் தெரிந்தது. பிறகு தான், அது முகம்தியர் வசமானது[1]. ஆனால் லோகன் 825ல் பெருமாள் மெக்காவுக்குச் சென்று முகமதியர் ஆனார் என்று எடுத்துக் காட்ட முயன்றார். உண்மையில் பெருமாள் மற்றும் ஜமோரின் கதைகளை எழுதும் போது, முகமதியர்களின் மனங்களில் குழப்பம் ஏற்பட்டது. ஏனெனில், பிற்காலத்தில் ஜமோரின் மன்னர்களில் ஒருவன், குரானை ஏற்றுக் கொண்டு, c.825 CE வாக்கில், மெக்காவுக்குச் சென்றதாக, ஒரு கதை இருந்தததை வைத்து குழப்பினர் அல்லது குழப்பப் பார்க்கின்றனர். ஏனெனில் உள்ள ஒரு மசூதி சமாதியில் உள்ள 9ம் நூற்றாண்டு தேதி இத்துடன் ஒத்துப் போகிறது. இதனால், அப்துர் ரஹ்மான் சமீரின் கதையினை ஏற்றுக் கொள்ள முடியாது, ஏனெனில், அதில் தகவல்கள், தேதிகள் மற்றும் பெயர்கள் எல்லாமே முன்னுக்கு முரணாக உள்ளன[2]..

பற்பல தேதிகளை, சேரமான் பெருமாளுக்குக் கொடுத்தனர்:

ஐரோப்பியகிருத்துவ எழுத்தாளர்கள் கொடுத்த தேதி குறிப்பு[3]
மோயின்ஸ் 426 CE Moens gives A. D. 426;
கிளாடியஸ் பச்சனன் 490 CE Dr .C. Buchman 490;
பிஷப் மிடில்டன் 508 CE Bishop Middleton 508;
லாஸன் 750 CE Mr, Lawson 750;
பாதிரி டி. ஒயிட்ஹவுஸ் 825 CE the Rev. T. Whitehouse 825;
பவோலி 10ம் நூற்றாண்டு CE Paoli, the tenth century ;
யூதர்கள் 379 CE and the Jews themselves, A. D. 379,
பாதிரி டி. ஒயிட்ஹவுஸ் 416 CE making a trifling difference of 416 years, between the date given by them and that by Mr. Whitehouse

இந்த கால முரண்பாடும், கட்டுக்கதையின் போலித்தனத்தை எடுத்துக் காட்டுகிறது[4]. சுந்தரரர் மற்றும் சேரமான் பெருமாள், தண்டிவர்மனின் சமகாலத்தைச் சேர்ந்தவர்கள் [795-845 CE]. ஆகவே, அக்காலத்தில் சென்றது என்பது பொய்யாகிறது.

Early spread of Islam 632-750 CE

10ம் நூற்றாண்டிற்கு பின்னர் தான், இஸ்லாம் மற்றும் முகமதியன் இந்தியாவில் அறியப்பட்டிருக்க வாய்ப்புள்ளது: முகமதிய மதத்தைத் தோற்றுவித்த, மொஹம்மதுவின் காலம் 6-7 நூற்றாண்டுகள் [c. 570 CE – 8 June 632 CE) ஆகும். ஆகவே, மதம் என்ற ஒன்று முழுமையாக உருவாகி, மெக்கா-மெதினா ஸ்தலங்களை புனித இடங்களாகக் கொண்டு, குரான் தொகுக்கப்பட்டு, புழக்கத்தில் வந்து, அம்மதம் பரவி, இந்தியாவிற்குள் நுழைய நிச்சயமாக 300 ஆண்டுகள் ஆகியிருக்கும். 610-632 வரை குரான் வெளிப்படுத்தப் பட்டுக் கொண்டிருந்து, மூன்றாம் காலிப் காலத்தில் [644-656] தொகுக்கப் பட்டதாலும், ஹதீஸ் போன்றவை 9-10 நூற்றாண்டுகள் வரை தொகுக்கப்பட்டு வந்ததாலும்,  எல்லாம் நிறைந்த இஸ்லாம் என்ற நிலை உருவாக 300 ஆண்டுகள் ஆகியிருக்கும். ஆகவே, அதுவரை, இந்தியாவில், அரேபியா, துருக்கி முதலிய இடங்களிலிருந்து வணிகம் நிமித்தம் வந்திருக்கலாம், ஆனால், அவர்கள் முகமதியர் கிடையாது. ஆரம்பத்தில் “காலிபைட்” பதவிக்கு சண்டை ஏற்பட்டு, சுன்னி-ஷியா பிரிவுகள், போர்கள் முதலியவை ஏற்பட்டு, பிறகுதான், ஒரு நிறுவனப்படுத்தப் பட்ட மதம் நிலையை அடைந்தது. ஆகவே, இவையெல்லாம் ஆதாரமில்லாத கட்டுக்கதைகள் தாம்.

 

© வேதபிரகாஷ்

09-07-2017

Early spread of Islam 632-750 CE-1500 by trade

[1] Some believe that the last Perumal was permitted to be Governor for thirty-six years, at the end of which he retired, and was induced by the Majains, commonly known as Jains, A.D. 378, to proceed to Mecca, at which plce many of that faith were established, carrying on a trade with India, which in subsquent centuries fell into Moorish hands.

 Francis Day, The Land of the Permauls or Cochin, its past and its present, The Adelph Press, Vepery, Madras, 1863, p.44.

[2] Mr. Logan tries to prove that the Perumal became a convert to Mahommedanism and went on a pilgrimage to Mecca in about 825 A. D. The story of Cheraman Perumal having become a Mohammedan to indicate a confusion in the minds of the writers between Cheranam  Perumal and one of the Zamorins who did accept the Koran and leave his country for Arabia in the first quarter of the 9th century, which well tallies with the beginning of the Malabar era. As the inscription on the tomb-stone of supposod apostate, on which the Perumal’s conversion and pilgrimage to Mecca is based, is Abdar Rahman Samiri, it cannot be connected with Cherman  Perumal except by a strange perversion of facts, dates and names.

Report by M. Sankara Menon, Census of India, 1901, Vol.XX, Cochin, Part-I, Cochin Government Press, Ernakulam, 1903, pp.xv-xvi.

[3] Dr. Francis Day has summed up in tho following paragraph the results of the investigation till 1863, as regards the date of thePeruraars abdication. “The shade of Cheraman Perumal is invoked eveu hundreds of years after he had paid the debt of nature, A. D. 378. For this event various authors have indulged in dates of their own, without advancing any argument whatever, tending to prove them correct; for instance, Moens gives A. D. 426; Dr .C. Buchman 490; Bishop Middleton 508; Mr, Lawson 750; the Rev. T. Whitehouse 825; Paoli, the tenth century ; and the Jews themselves, A. D. 379, making a trifling difference of 416 years, between the date given by them and that by Mr. Whitehouse.”

Report by M. Sankara Menon, Census of India, 1901, Vol.XX, Cochin, Part-I, Cochin Government Press, Ernakulam, 1903, p.xv.

[4] Though in prose, it claims to be an abridgement of the bigger Keralanaiakcm written by Thunjaththu Ezhuththachchan As it refers to the Ariyittmazhha of a Zamorm in 1627, it could not have made its appearance earlier Part I is pure myth and legends The chronology of Part II is not satisfactory, and it is inconsistent with what we know of Kerala from other more reliable sources Thus, Cheraman Perumal is said to have been sent by Krishnadeva Raya of Anagundi, and after going to Mecca and converted by uhammad, he is described as dying of fever on his way back According to the Keralolpaththi he arrived in Kerala in 355 and went to Mecca in 428 But Muhammad founded Islam in 622 and and Krishnadeva Raya became king of Anagundi m 1509 Apart from this anachronism there ts also a glaring inconsistentcy.

V. Krishna Ayyar, A Shory History of Kerala, Pai & Co., Ernakulam, 1966, pp.188-189.