Posts Tagged ‘உற்பத்தி வரி’

தமிழக மக்களுக்கு சென்றடையாத பிஜேபியைப் பற்றிய நல்ல விவரங்கள் – பிஜேபி தோல்வி ஏன் (2)!

மே 29, 2016

தமிழக மக்களுக்கு சென்றடையாத பிஜேபியைப் பற்றிய நல்ல விவரங்கள் – பிஜேபி தோல்வி ஏன் (2)!

தமிழக பிஜேபி கூட்டணி தோல்விதிராவிடத்துவ மேடை பேச்சு, கவர்ச்சி அரசியல், முதலியவை இல்லை: நவம்பர் 2015ல் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக துணைத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரான நடிகர் நெப்போலியன் மற்றும் அக்கட்சியின் மாநில தேர்தல் பிரிவு தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மலைச்சாமி நியமிக்கப்பட்டனர்[1]. தி.மு.க.வில் மு.க. அழகிரி ஆதரவாளராக இருந்தவர் முன்னாள் மத்திய அமைச்சராக நடிகர் நெப்போலியன். முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் உறவினரும் ஆவார். தி.மு.கவில் இருந்து அழகிரி நீக்கப்பட்ட நிலையில் அக்கட்சியை விட்டு விலகி அமித்ஷா முன்னிலையில் கடந்த ஆண்டு பா.ஜ.க.வில் அவர் இணைந்தார். தற்போது அவருக்கு கட்சியின் மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்தார். இதேபோல் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அ.தி.மு.க.வில் இணைந்து எம்.பி.யாக இருந்தவர் மலைச்சாமி. அவர் அ.தி.மு.க.வை விட்டு விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். அவர் மாநில தேர்தல் பிரிவு தலைவராக நியமனம் செய்யப்பட்டார். பா.ஜ.க. கலைபிரிவின் அறங்காவலராக இசையமைப்பாளர் கங்கை அமரன், அதன் செயலராக நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்[2]. நடிகர் தனுஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா, பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினராக்கப்பட்டார். பா.ஜ.க. பிரசார பிரிவின் துணைத் தலைவராக நடிகை குட்டி பத்மினி நியமிக்கப்பட்டார். இப்படி செய்திகள் வந்தன.

சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன்

எஸ்.வி சேகர், பிஜேபி மற்ற பிஜேபிகாரர்கள்: ஏற்கெனவே, எஸ்.வி. சேகர் இருந்து, புகைந்து கொண்டிருந்தது தெரிந்த விசயமே[3]. என்னைக் கட்சி பயன்படுத்திக் கொண்டால் அது கட்சிக்கு நல்லது. இல்லை என்றால், அது எனக்கு நல்லது. இவ்வளவுதான் சொல்ல முடியும், என்று ஆதங்கப்படுகிறார் எஸ்.வி.சேகர்[4]. பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளரான அவரை, நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கு தமிழக பாஜகவில் இருந்து முறைப்படி அழைக்கவில்லை என்ற கோபம்தான் வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இப்படி கொப்பளித்துள்ளது. தனது 6001வது நாடக அரங்கேற்ற விழாவுக்கு ஜெயலலிதாவை தலைமை தாங்க அழைக்க திட்டமிட்டுள்ளதாக கூறும் எஸ்.வி.சேகர், ஒருபக்கம் தமிழக பாஜகவினர் மீது சாடுகிறார்[5]. மோடிக்கு வேண்டியவர் எனது போலக் காட்டிக் கொண்டு, இவர் கராத்தே தியாகராஜனை ஆதரித்தார் என்பதும் தெரிந்த விசயமே. ஆனால், தேர்தல் நேரத்தில் இவர்கள் எல்லோரும் எங்கே இருந்தனர் என்று தெரியவில்லை. எங்குமே இவர்கள் பிரச்சாரம் செய்யவில்லை. பிறகு எதற்காக, இவர்களை கட்சியில் சேர்க்கவேண்டும், பதவிகள் கொடுக்க வேண்டும்.

சேலம்பொது கூட்டம் கர்நாடக்கா அமைச்சர் பிரச்சாரம்பாஜக மத்திய அமைச்சர்கள் மற்றும் மோடி முதலியோரது பிரச்சாரம்: 29-04-2016 அன்று மூன்று இடங்களில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பிரசாரம் செய்தார். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரும், தே நாளில் திருச்செங்கோடு உள்ளிட்ட, மூன்று இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்[6]. 30-04-2016 அன்று கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும் தமிழக பாஜக இணை பொறுப்பாளருமான சி.டி.ரவி, சேலம் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் கோபிநாத், தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாதுரை ஆகியோரை ஆதரித்து நேற்று சேலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். 06-05-2016 அன்று தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஓசூர் அந்திவாடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். மாலை சென்னையில், நந்தனம்- வொய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொது கூட்டம் நடந்தது. வெங்கைய்ய நாயுடு நன்றாகத்தான் பேசினார். பிறகு வந்த மோடி தனக்கேயுரிய பாணியில் ஹிந்தியில் மோடி பேசினார். இவையெல்லாம் பிஜேபி மற்றும் மோடி ரசிகர்கள், தொண்டர்கள், பின்பற்றுபவர்களுக்கு விருந்தாக இருந்தது. அவர்கள் கைதட்டி அரவாரம் செய்து ரசித்து சந்தோசப்பட்டனர். ஆனால், பொது மக்களுக்கு விசயம் சென்றடையவில்லை.

தாமரை வெல்லட்டும், தமிழகம் வளரட்டும்மோடி அரிசியா, அம்மா அரிசியா கோஷம் பொது மக்களுக்கு சென்றடையவில்லை: உண்மையில் அரிசி-அரசியல் தமிழகத்தில் நன்றாகவே வேலை செய்யும். அண்ணாதுரை ரூபாய்க்கு படி அரிசி கொடுப்பேன் என்று மேடையில், மக்களைக் கவர்ந்து ஓட்டைப் பெற்றனர். கருணாநிதியும் அத்தகைய முறையைக் கையாண்டார். ஜெயலலிதா 20 கிலோ இலவச அரிசி கொடுத்து, பாமர மக்களைக் கவர்ந்தார். பிரதமர் மோடியை அழைத்து வந்து பிரச்சாரம் செய்ய வைத்தும் கூட பாஜகவுக்கு பலனில்லை[7]. தமிழக மக்கள் மாதம் 20 கிலோ இலவச அரிசி பெறுவதற்கு மத்திய அரசே காரணம் என்றும், ஆனால் அதிமுக அரசு அதனை தான் வழங்குவதுபோல் காட்டிக்கொள்வதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். விலைக்கு அரிசி வாங்கி, இலவசமாக பொதுமக்களுக்கு அரசு வழங்குகிறது என்ற விவரம் பலருக்கும் தெரியவில்லை என்ற விவரத்தை பிப்ரவரி 2016ல் தினமலர் செய்தியாக வெளியிட்டிருந்தது. ஜெயலலிதா மிகக் குறைந்த விலையில் வழங்குவது அம்மா அரிசி இல்லை அது மோடி அரிசி என்று கூறிப்பார்த்தும் யாரும் அதை கேட்டதாக தெரியவில்லை[8].

maniarasanavd-அரிசி அர்சியல்நெருக்கடி ரேஷனில் இலவச அரிசி வழங்கும் திட்டம் தொடர்வதில்…நிதி பற்றாக்குறையில் அரசு தள்ளாடுவதால் சிக்கல்[9]: தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், சட்டசபை தேர்தலுக்கு பின், ரேஷனில் இலவச அரிசி தொடந்து வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில், பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில், ஒரு கிலோ அரிசி, 3.50 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த தி.மு.க., ஆட்சியில், கிலோ அரிசி, இரண்டு ரூபாயாக குறைக்கப்பட்டு பின், ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற, 2011ல் இருந்து, ரேஷனில், 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. அதற்கு, தற்போது மாதம்தோறும், 3.25 லட்சம் டன் அரிசி தேவை. இதில், 2.96 லட்சம் டன் அரிசியை, தமிழக அரசு, இந்திய உணவு கழகத்திடம் இருந்து, கிலோ மூன்று ரூபாய்; 5.65 ரூபாய்; 8.30 ரூபாய் என்று, மூன்று வகை விலைகளில்வாங்குகிறது. பற்றாக்குறை அரிசி ஒரு கிலோ, 19 ரூபாய் என்ற விலையில் வாங்கப்படுகிறது. ஏற்கனவே, நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழக அரசுக்கு, இலவச அரிசி வழங்குவதால், கூடுதல் சுமை ஏற்பட்டு வருகிறது. இதனால், சட்டசபை தேர்தல் முடிந்ததும், இலவச அரிசி தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 அம்மா அர்சி - 2016 தேர்தல்

விலைக்கு அரிசி வாங்கி, இலவசமாக பொதுமக்களுக்கு அரசு வழங்குகிறது: இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது[10]: விலைக்கு அரிசி வாங்கி, இலவசமாக பொதுமக்களுக்கு அரசு வழங்குகிறது என்ற விவரம் பலருக்கும் தெரியவில்லை. இதனால், சிலர் அரிசியை, பிற மாநிலங்களுக்கும், வியாபாரிகளுக்கும் விற்கின்றனர். அரிசிக்கு விலை வைத்தால், தேவை உள்ளவர்கள் மட்டும் வாங்குவர். தமிழகத்தில், உணவு பாதுகாப்பு சட்டத்தை, செப்டம்பர் மாதத்திற்குள் அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இல்லையெனில், மத்திய அரசிடம் இருந்து, குறைந்த விலையில் அரிசி கிடைக்காது. அரிசிக்கான ரேஷன் கார்டு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், செலவும் உயர்ந்து வருகிறது. எனவே, சட்டசபை தேர்தல் முடிந்ததும், இலவச அரிசிக்கு பதில், குறைந்தபட்ச விலையை அரசு, நிர்ணயிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஜி எஸ் டி வரி - மசோதா - ரசியல்ஜி.எஸ்.டியும், அரசியலும்: கலால் / எக்சைஸ் தீர்வை / வரி [Excise duty] இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மீது மத்திய அரசு வசூலித்து வருகிறது. அதில் ஒருபகுதி மாநிலங்களுக்குக் கொடுக்கப்படுகிறது. சேவை வரி [Service Tax] அறிமுகப்படுத்தியப் பிறாகும், இம்முறை தொடர்ந்தது. 2006-07களில் “பொருட்கள் மற்றும் சேவை வரி சட்டம்” [The Goods and Services Act] அறிமுகப்படுத்த வேண்டிய முயற்சிகள் தொடங்கின. காங்கிரஸ் கூட்டணி ஆரம்பித்து வைத்தாலும், அதற்கான தொலைநோக்கு திட்டம், அமல் படுத்தும் துணிவு, மாநிலங்களுடன் சரியில்லாத உறவுகள் போன்ற காரணங்களினால் அப்படியே வைத்திருந்தது. 2014ல் மோடி பதவிக்கு வந்ததும், அயல்நாட்டு மூலதனம் [FDI] வரவேண்டுமானால், ஜி.எஸ்.டி அமூல்படுத்தவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இதில் காங்கிரஸ் வழக்கம்போல தகராறு செய்து வந்தது. கம்யூனிஸ்டுகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், அமெரிக்கா-முதலாளித்துவம் என்றெல்லாம் தடுத்துக் கொண்டேயிருந்தனர். இந்நிலையில் 2016 தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தது, கம்யூனிஸ்டுகளும் அதே நிலையை அடைந்தனர். அதனால், மம்தா, ஜெயா ஒப்புக் கொண்டால், “பொருட்கள் மற்றும் சேவை வரி மசோதா” அமூலாக்கப்பட்டு விடும். ஆனால், தமிழக பிஜேபிக்காரர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படவில்லை.

© வேதபிரகாஷ்

 28-05-2016

[1] தமிழ்.ஒன்.இந்தியா, பாஜக தமிழக துணைத் தலைவரானார் நடிகர் நெப்போலியன்தேர்தல் பிரிவு தலைவர் மலைச்சாமி!!, By: Mathi, Published: Thursday, November 26, 2015, 15:35 [IST]

[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/actor-napolean-made-vice-president-tn-bjp-240819.html

[3] https://www.patrikai.com/sv-shekhar-tease-bjp-party/

[4] தமிழ்.ஒன்.இந்தியா, என்னை பயன்படுத்திக்கொண்டால் பாஜகவுக்கு நல்லது, இல்லை என்றால்.. எச்சரிக்கிறாரா எஸ்.வி.சேகர்?, By: Veera Kumar, Published: Friday, May 27, 2016, 15:36 [IST].

[5] http://tamil.oneindia.com/news/tamilnadu/s-v-shekar-showing-anger-toward-tamilnadu-bjp-254686.html

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/nirmala-sitharaman-prakash-javadekar-will-campaign-on-friday-intamil-nadu-252433.html

[7] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழகத்தில் மோடி அரிசியை தூக்கி சாப்பிட்டு பீர் குடித்த டாஸ்மாக், By: Siva, Published: Thursday, May 19, 2016, 12:23 [IST]

[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/modi-wave-powerless-amma-s-state-254054.html

[9] தினமலர், நெருக்கடி ரேஷனில் இலவச அரிசி வழங்கும் திட்டம் தொடர்வதில்…நிதி பற்றாக்குறையில் அரசு தள்ளாடுவதால் சிக்கல், பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2016,20:12 IST.

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1450802