Posts Tagged ‘உடைப்பு’

ராம்ஜென்ம பூமி-பாபரி மஸ்ஜித் போராட்டம் தொடர்ந்து நடத்தப் படுவது ஏன் – செக்யூலரிஸமயமாக்கப்படும் நீதிமன்ற வழக்குகளும், தெரு ஆர்பாட்டங்களும் (1)

திசெம்பர் 7, 2014

ராம்ஜென்ம பூமி-பாபரி மஸ்ஜித் போராட்டம் தொடர்ந்து நடத்தப் படுவது ஏன் – செக்யூலரிஸமயமாக்கப்படும் நீதிமன்ற வழக்குகளும், தெரு ஆர்பாட்டங்களும் (1)

டிசம்பர் 6 முஸ்லிம்கள் ஆர்பாட்டம்

டிசம்பர் 6 முஸ்லிம்கள் ஆர்பாட்டம்

முஸ்லிம் மற்றும் இந்து அமைப்பினர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டது: இடிக்கப்பட்ட பாபர் மசூதியை மீண்டும் கட்ட வலியுறுத்தி, முஸ்லிம் அமைப்புகள் 06-12-2014 (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன[1]. முன்னர் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்து முன்னணி தொடர்ந்த வழக்கு 02-12-2014 (செவ்வாய்கிழமை) அன்று தள்ளுபடி செய்யப்பட்டது[2].  திருவெண்ணை நல்லூர் மற்றும் விழுப்புரம் முதலிய இடங்களில் தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக இந்துமுன்னணியினர் வழக்குத் தொடர்ந்தனர்[3]. ஆனால், அவ்விடங்கள் மிகவும் மக்கள் நெருக்கம் அதிகமான இடங்கள் என்பதால், போலீஸார் மறுத்துள்ளதாகவும், அதற்கு பதிலாக, புதிய வேறிடங்களில் போலீஸார் அனுமதியுடன், ஆனால், விதிக்கப்படும் நிபந்தனைகளுடன், நடத்தலாம் என்றும் நீதிபதி ஆணையிட்டார்[4]. ஏனெனில் அதே நாளில் இந்து அமைப்புகளுக்கும் ஆர்பாட்டம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக் காட்டினார் நீதிபதி[5]. ஆக, ஆர்பாட்டம் நடத்துவதும், இந்து இயக்கங்கள் சேர்ந்து கொண்டதால், செக்யூலரிஸமயமாக்கப் பட்டுவிட்டன.

06-12-2014-muslims-protest-தமிள் ஒன் இந்தியா

06-12-2014-muslims-protest-தமிள் ஒன் இந்தியா

வழக்கம் போல போலீஸார் பாதுகாப்பு, சோதனை, பயணிகள் அவதி: வழக்கம்போல, இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டது, தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர், சென்னையில் மட்டும் 18,000 போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர், ரயில் நிலையங்கள், கோயில்கள் (மசூதிகளை ஏன் விட்டுவிட்டனர் என்று தெரியவில்லை), கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும்  விமானநிலையத்தில் ஆயுதம் ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்[6] என்று செய்திகள் வெளியிடப்பட்டன. அனைவரும் முழுமையான பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் ரோந்துப் பணிகளை மேற்கொண்டனர். வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதற்காகும் செலவு என்னவென்று அறிவிக்கப்படவில்லை.

06-12-2014 திருமா முஸ்லிம்களுடன்

06-12-2014 திருமா முஸ்லிம்களுடன்

தா. பாண்டியன், திருமா வளவன், நெடுமாறன் முதலியோர் முஸ்லிம்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டது ஏன்?: உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி எனப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டிடம் 1992 டிசம்பர் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இதைக் கண்டித்து, ஆண்டுதோறும் டிசம்பர் 6-ஆம் தேதி முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. அதன்படி, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) சார்பில் சனிக்கிழமை 06-12-2014 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மற்றும் 22 ஆம் ஆண்டு தினம் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது[7].  இந்த ஆர்பாட்டத்தில் பெரியவர்கள் மட்டுமல்லாது சிறுவர்களும், குழந்தைகளும் கையில் பதாகைகளை ஏந்தி பங்கேற்றனர். தமுமுக தலைவர் ஜே.எஸ். ரிபாயீ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் எஸ்.எம். பாக்கர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசினர்.

06-muslims-protestt-தமிள் ஒன் இந்தியா

06-muslims-protestt-தமிள் ஒன் இந்தியா

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும்: பாபர் மசூதி இடிப்பு வழக்கை விரைவுபடுத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும், இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் பாபர் மசூதி கட்ட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர்[8]. இதேபோல் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தபால் நிலையம் முன்பு முஸ்லீம் அமைப்புகள் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியாவில் உள்ள பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பாபர் மசூதி இடிப்புத் தினத்தை ஒட்டி நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தின் போது ஒரு சிலர் பேருந்து மீது கல்வீசி தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன[9]. பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களிலும், கடலோர காவல் நிலையங்களிலும் கூடுதல் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

06-muslims-protest-தமிள் ஒன் இந்தியா

06-muslims-protest-தமிள் ஒன் இந்தியா

தி ஹிந்துவின் கவரேஜ்: ஹைதரபாதிலும் நடைப்பெற்றது என்று “தி ஹிந்து” புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது[10].

A street in Hyderabad wears a deserted look on the 22nd Anniversary of Babri Masjid Demolition, on 06-12-2014. Photo-PTI

A street in Hyderabad wears a deserted look on the 22nd Anniversary of Babri Masjid Demolition, on 06-12-2014. Photo-PTI

ரெய்ச்சூரிலும் ஆர்பாட்டம் நடைப்பெற்றது என்று “தி ஹிந்து” புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. திப்பு சுல்தான் சங்கம் மற்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதிஹாத் [Tipu Sultan Sangha and the All-India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM)] போன்ற முஸ்லிம் இயக்கங்கள் சார்பில் ஆர்பாட்டம் நடந்துள்ளது.

Raichur, Karnataka RJM-BM demonstration 06-12-2014 - The Hindu

Raichur, Karnataka RJM-BM demonstration 06-12-2014 – The Hindu

பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோஹர் ஜோஷி, வினய் கத்தியார் முதலியோர் [Bharatiya Janata Party leaders L.K. Advani, Murali Manohar Joshi, and Vinay Katiyar for their alleged involvement in demolishing the historical structure] மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோஷமிட்டனர்[11]. ஜன்சத்தா என்ற நாளிதழ் தில்லி, கோயம்புத்தூர் முதலிய இடங்களில் நடந்த ஆர்பாட்டங்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது[12]. ஜமாத்-இ-ஹிந்த் நீதிமன்றத்திற்கு வெளியாக ஒரு சமரச உடன்படிக்கை ஏற்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்தது[13]. இருப்பினும் ஆர்பாட்டக்காரர்கள் பேசியதையே இவர்களும் பேசியுள்ளார்கள்.

06-muslims-pro-தமிள் ஒன் இந்தியா

06-muslims-pro-தமிள் ஒன் இந்தியா

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் கோயில் கட்ட வலியுறுத்தி, இந்து முன்னணியினர் சென்னையில் பல்வேறு இடங்களில் 06-12-2014 (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான இந்து முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர் என்று தினமணி இரண்டு வரிகளில் செய்தி வெளியிட்டது. ஆனால், இதில் எந்த அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டதாக செய்திகள் வெளிவரவில்லை. அதாவது, இந்துக்களுக்கு ஆதரவாக கலந்து கொள்ள யாரும் இல்லை அல்லது அந்த அளவிற்கு இன்னும் துணிவு வரவில்லை போலும். இணைத்தள இந்து போராட்ட வீரர்கள், கோஷ்டிகள் முதலியன என்ன செய்து கொண்டிருந்தனர் என்று தெரிடயவில்லை. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்று தினமலர் ஒரே வரியில் செய்தியை வெளியிட்டுள்ளது[14].

Babri-5th

Babri-5th

டிசம்பர் 6ம் தேதிபீதி கிளப்பும், பொது மக்களை தொந்தரவு செய்யும் தினமாக மாறி வருவது[15]: இந்த வருடமும் அம்பேத்கரை மறந்து விட்டனர். வழக்கம் போல இத்தினம் ரெயில்வே மற்றும் பேருந்து நிலையங்களில் கெடுபிடி இருந்தது. பொது மக்கள் தொல்லைக்குள்ளானார்கள். கோவில்களில் கூட பக்தர்கள் அத்தகைய தொல்லைகளை அனுபவிக்க வேண்டியிருந்தது. யாரோ குண்டு வைத்து விடுவார்கள் என்று தான், இத்தகைய சோதனகள். பிறகு, பொது மக்கள் மனங்களில் யார் குண்டு வைப்பார்கள் என்று அறிய மாட்டார்களா அல்லது அவர்களைப் பற்றி அடையாளம் காணமாட்டார்களா. இத்தகைய போராட்டங்களால் முஸ்லிம்கள் சாதிப்பது என்ன என்பதை அவர்கள் தான் தீர்மானித்துக் கொள்ளவேண்டும். இக்காலப் பிரசார யுகத்தில், விளம்பரத்திற்காக, இவ்வாறெல்லாம் செய்யலாம், ஆனால், தொடர்ந்து தொல்லகளுக்குள்ளாகும் பொது மக்களின் மனங்களில் முஸ்லிம்களைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகும் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்[16].

© வேதபிரகாஷ்

07-12-2014

[1] தினமணி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம்: முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம், By dn, சென்னை, First Published : 07 December 2014 01:47 AM IST

[2] On Tuesday (02-12-2014), the judge passed orders on two petitions filed by S Elumalai and K Balu, office bearers of Hindu Munnani. The Madras high court has rejected a petition which sought denial of permission for Muslim organisations to stage protests against demolition of Babri Masjid on Saturday (06-12-2014). Muslim organisations have been holding anniversary meetings and rallies across the country ever since the masjid was brought down on December 6, 1992.

[3] They challenged the police refusing them permission to hold demos at Thiruvennai Nallur and Villupuram on December 6 demanding a Ram temple at the disputed site in Ayodhya. The Villupuram police submitted that the places where the petitioners want to hold demonstration are highly congested. But the petitioners said that they were prepared to shift the time and venue if needed. Disposing of the petitions, the Judge said that the first petitioner may shift the venue of demonstration at Thiruvennai Nallur to the place suggested by the police, who shall permit to hold a demonstration at the new venue, subject to reasonable restrictions.

[4] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Muslim-Outfits-Can-Stage-Demo-on-Dec-6/2014/12/04/article2554298.ece

[5] http://timesofindia.indiatimes.com/city/chennai/Cant-deny-nod-for-Babri-protest-HC/articleshow/45367930.cms

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=121307

[7] தமிள் ஒன் இந்தியா, பாபர் மசூதி இடிப்பு தினம்: முஸ்லீம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம், Posted by: Mayura Akilan Updated: Saturday, December 6, 2014, 17:53 [IST], Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/protests-mark-babri-masjid-demolition-anniversary-216469.html

[8]http://www.dinamani.com/edition_chennai/chennai/2014/12/07/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF/article2558998.ece

[9] http://tamil.oneindia.com/news/tamilnadu/protests-mark-babri-masjid-demolition-anniversary-216469.html

[10] http://www.thehindu.com/news/cities/Hyderabad/babri-masjid-demolition-anniversary-passes-off-peacefully-in-hyderabad/article6668051.ece

[11] Thousands of citizens under the banner of Tipu Sultan Sangha and the All-India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM) party took out a rally through major streets of Raichur and staged demonstration outside the office of the Deputy Commissioner, to observe the 22nd anniversary of Babri Masjid demolition as Black Day. They raised slogans against Bharatiya Janata Party leaders L.K. Advani, Murali Manohar Joshi, and Vinay Katiyar for their alleged involvement in demolishing the historical structure. They also raised questions about the then Prime Minister P.V. Narasimha Rao for allowing the “historical crime” to take place.

http://www.thehindu.com/news/national/karnataka/citizens-in-raichur-observe-black-day-on-anniversary-of-babri-masjid-demolition/article6668083.ece

[12] http://www.jansatta.com/photos/entertainment-gallery/22nd-anniversary-of-babri-masjid-demolition-demonstration-in-india/7876-3/

[13] http://twocircles.net/2014dec06/1417885117.html#.VIObYPmSynU

[14] http://www.dinamalar.com/news_detail.asp?id=1131898

[15] https://islamindia.wordpress.com/2013/12/07/december-6-a-day-of-remembrance-or-terror-induement/

[16] https://islamindia.wordpress.com/2013/12/09/december-6-fake-calls-of-bombing-temples-cannot-be-brushed-aside/

அரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தம் என்ன – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தாக்கிய மர்மம் என்ன?

மார்ச் 21, 2013

அரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தம் என்ன – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தாக்கிய மர்மம் என்ன?

Aurobindu Ashram attacked by Dravidian group

இலங்கைப் பிரச்சினைக்காக புதுச்சேரியில் போராட்டம்: இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள ஐ.நா.தீர்மானத்துக்கு மத்திய அரசு அனைத்து கட்சிகளுடன் கருத்து கேட்டது. மேலும் நாடாளுமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவும் அரசியல் கட்சிகளிடம் மத்திய அரசு கருத்து கேட்டது. இதற்கு பிற மாநிலத்தில் உள்ள பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.  புதுச்சேரியில், மாணவர் கூட்டமைப்பு மற்றும் வணிகர்கள் சங்கம் உள்ளிட்ட, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில், கடையடைப்பு போராட்டம் இன்று நடந்தது. இதையொட்டி புதுச்சேரியிலுள்ள பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில், உண்ணாவிரதம், பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடந்தன[1]. அரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தம் என்ன?

DK attacked Ayodhya mantap with petrol bombs

ஶ்ரீலங்கா பிரச்சினை விஷயத்தில் மம்தா கூறியது: ஶ்ரீலங்கா பிரச்சினை விஷயத்தில் காங்கிரஸை ஆதரிப்பேன் என்று மம்தா கூறியிருந்தார்[2]. மம்தா பேஸ்புக்கில்[3] குறிப்பிட்டது, இவ்வாறாக உள்ளது[4]:

“Our Party supports the cause of the Tamil brothers and sisters. We are deeply concerned about the atrocities meted out to a section of Tamil population in a foreign country.Local sentiments and their causes sometimes become very critical. We are supporting their cause. At the same time, our Party follows a policy that we should not interfere into issues involving external relations with foreign countries. We leave it for the Central Government to decide on such issues. However, the concerns of the state and the sentiments of the people must be kept in view by the Centre, before taking any decision pertaining to foreign country.”

மாறாக, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இலங்கை நட்பு நாடு என்பதால் அந்நாட்டு எதிராக தீர்மானம் கொண்டு வரக்கூடாது என கருத்து தெரிவித்து இருந்தார், என்று தமிழ் ஊடகங்கள் கூறியிருக்கின்றன. ஆங்கிலத்தில் இருப்பதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் புதுவை அரவிந்தர் ஆசிரமம் அருகில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று பகல் 12 மணியளவில் ஒன்று கூடினார்கள். “தி ஹிந்து” காரணம் என்னவென்று தெரியவில்லை என்று குறிப்பிடுகின்றது[5].

புதுவையில் அரவிந்தர் ஆசிரமம் சூறை: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கடந்த காலங்களில் வன்முறையில் ஈடுபடுவதை பழக்கமாகக் கொண்டுள்ளனர். இப்பொழுதும், அரவிந்தர் ஆசிரமம் அருகில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று பகல் 12 மணியளவில் ஒன்று கூடி ஆர்பாட்டம் என்ற பெயரில், “ஒழிக” கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர். அதனால், யாரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர் அங்கிருந்து அதன் தலைவர் வீரமோகன், துணை தலைவர் இளங்கோ ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக வந்து ஆசிரமம் முன்பு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென்று ஆசிரமத்துக்குள் புகுந்து அங்கிருந்த பூ ஜாடிகளை அடித்து உடைத்தனர்[6]. மேலும் அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்த கண்ணாடிகள், அலுவலக பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினார்கள்[7]. மேலும் ஆசிரமத்தையும் கல்வீசி தாக்கினார்கள். இதில் ஆசிரம கட்டிடத்தில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்தன[8]. இதனால் அந்த பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையெல்லாம் மற்றவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர். யாரும் தடுத்ததாகத் தெரியவில்லை.

அப்படியென்றால், மென்மையான இலக்கு, தாக்குதலுக்கு ஏற்ற சௌகரியமான சின்னம், அவற்றைத் தாக்குவது சுலபம், யாரும் கேட்க மாட்டார்கள், அடித்தாலும், உதைத்தாலும், பெட்ரோல் பாம்ப் / குண்டு போட்டு வெடித்தாலும், ஏன் அரிவாளால் வெட்டினாலும் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள் என்று அவர்கள் எப்படி அடையாளம் காண்கிறார்கள் அல்லது காட்டப்படுகிறது. இதே மாதிரி மற்ற சின்னங்கள் ஏன் அடையாளம் காணப்படுவதில்லை, காணப்பட்டாலும், இதே மாதிரி தாக்கப்படுவதில்லை. அப்படியென்றல், இதில் உள்ள நுணுக்கம், ரகசியம், சதி தான் என்ன?

Salem Kanchi mutt attacked

எளிதான இலக்கைத் தேர்ந்தெடுத்து இவர்கள் தாக்குவது ஏன்?: உண்மையில் இவஎகள் தாக்க வேண்டும் என்றால், காங்கிரஸ்காரர்களைத் தாக்கியிருக்க வேண்டும். அவர்களது சின்னங்களைத் தாக்க வேண்டும் என்றால், சோனியா, ராஹுல், பிரியங்கா புகைப்படங்களைத் தாக்கியிருக்க வேண்டும். ஆனால், இப்படி சமந்தம் இல்லாமல் ஆசிரமத்தைத் தாக்குவது, பொருட்களை நாசம் செய்வது, வன்முறையில் ஈடுபடுவது என்பது இவர்களுக்கு வாடிக்கையாக இருந்து வருகின்றது. முன்பு, சென்னையில், பழைய மாம்பலத்தில், இதேபோல சம்பந்தமே இல்லாத, இரண்டு அப்பாவி பிராமணர்களைத் தாக்கி, அருவாளால் வெட்டியுள்ளனர். இப்பொழுது இங்கு இப்படி செய்த அட்டூழியத்திற்காக, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டனர்[9] என்று செய்திகள் வந்துள்ளன. அப்பொழுதும், வெட்டியதற்கு சிலர் கைது செய்யப்பட்டனர். ஆனால், பிறகு என்னவாயிற்று என்று எந்த செய்ட் ஹிகளும் வெளிவரவில்லை. இப்படி வன்முறையில் ஈடுபட்டு, ஒருவேளை கைது செய்யப்பட்டு விடுவிக்கப் பட்டால், அத்தகையோர் மறுபடி-மறுபடி வன்முறையில் ஈடுபடுவது வாடிக்கையாகி விடும்.

Raghavendra Brindavan attacked - Rama idol uprooted and thrown

© வேதபிரகாஷ்

21-03-2013


[5] A group of pro-Tamil activists today barged into the Aurobindo Ashram, damaged furniture and smashed glass panes after reportedly attacking and injuring the watchman. Police said activists of the Periyar Dravidar Kazhagam (PDK) also smashed flower pots and damaged the notice board, a clock and the ashram emblem atop the main gate. They also raised pro-Tamil slogans, police said, adding that the reason for the attack was not known.

http://www.thehindu.com/news/national/protamil-activists-attack-aurobindo-ashram/article4534302.ece