Posts Tagged ‘ஆநிரை கவர்தல்’

பசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (3)?

நவம்பர் 1, 2015

பசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (3)?

திக படம் - பசுவதையா, மனித வதையா

திக படம் – பசுவதையா, மனித வதையா

அக்டோபர் 26ம் தேதியில் நிகழ்த்தப்பட்ட இவ்விவகாரம் திட்டமிட்டதா?: அக்டோபர் 26, 2005 அன்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில், அரசியல் நிர்ணய சட்டத்தில் உள்ள அப்பிரிவை ஆமோதித்தது மட்டுமல்லாது, மாநிலங்கள் ஏற்படுத்தியுள்ள அத்தகைய பசுவதை எதிர்ப்பு சட்டங்களையும் ஆதரித்தது. பத்தாண்டுகள் கழித்து அதே அக்டோபர் 26 அன்று இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆக, இது திட்டமிட்டே செய்யப்பட்டதா, அல்லது எதேச்சையாக நடந்ததா என்று தெரியவில்லை. பொதுவாக, இதெல்லாம் பிஜேபிக்கு ஆதரவாக போகும் என்று மற்றவர்கள் கணிப்பார்கள். ஆனால், உண்மையில் இதனால் யார் லாபமடைகிறார்கள் என்பதனை கவனிக்க வேண்டும். ஐ.ஐ.டியில் மாட்டுக்கறி என்று முன்னர் பிரச்சினை செய்தவர்கள் யார் என்று பார்த்தால், கம்யூனிஸ்ட்கள், முஸ்லிம்கள் மற்ற இவர்களுடன் தொடர்பு கொண்ட குழுக்கள், இயக்கங்கள் என்பதனை கவனிக்கலாம். மாணவர்களிடையே, பிரிவு, வெறுப்பு, துவாசங்களை உருவாக்கவே, அவர்கள் செய்து வருகிறார்கள். ஏ.பி.வி.பி வருகிறது, வளர்ச்சியடைகிறது, பல பல்கலைக்கழகங்களில் தனது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால், சரஸ்வதியை எதிர்ப்பது, பசுமாமிசம் உண்ணுவதை ஆதரிப்பது என்ற முறைகளில் தடுத்துவிட முடியாது.

கோமாதா படம்

கோமாதா படம்

எதை வேண்டுமானாலும் உண்ணுவோம், அதை கேட்க நீ யார்?: நான் எதை உண்பது, உண்ணாமல் இருப்பது என்பதனை முடிவு செய்ய நீ யார்? என்னுடைய சமையலறை நுழைய உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்படுவதை கவனிக்கலாம். மனிதனுக்கு எதை வேண்டுமானாலும் சாப்பிட உரிமை இருக்கிறது என்றால், அவ்வாறே எதையாகிலும் உண்டு வாழட்டும். ஆனால், ஒருவன் உண்ணும் உரிமையை தடுக்க அடுத்தவனுக்கு இல்லை எனும்போது, அதேபோல, அவன் உண்ணும் உரிமையை தடுக்க, இவனுக்கும் இல்லை என்றாகிறது. பசு மாமிசம் உண்ணுவது என்னுடைய உரிமை என்றால், பன்றி மாமிசம் உண்ணுவது என்னுடைய உரிமை எனலாம். இல்லை, யூகாரிஸ்டில், நாங்கள் உண்மையிலேயே மனித மாமிசம் மற்றும் ரத்தம் தான் உண்ணுவோம் என்று, நாளைக்கு கிறிஸ்தவர்கள் தங்களது உரிமையைக் கேட்கலாம். பிறகு எப்படி பன்றி மாமிசம் உண்ணுவோம், மனித மாமிசம் உண்ணுவோம் என்று அறிவிப்பார்களா, பார்ட்டி நடத்துவார்களா? கருத்தரங்கங்கள் நடத்துவார்களா?

கோமாதா - தெய்வமாக மதித்தல்

கோமாதா – தெய்வமாக மதித்தல்

தமிழ் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு பொறுத்தவரையில் மாடு என்பது தான் சகலமும்: சங்காலத்திலிருந்தே ஆநிரை, மாடுகள் முதலியன தெய்வீகமாக, செல்வமாக, சமுதாயத்தில் ஒரு முக்கிய அங்கமாகக் கருதப்பட்டது. “கோ” என்ற சொல்லிற்கு பல அர்த்தங்கள் மற்றும் அதிலிருந்து பல வார்த்தைகளும் உருவாகின. கோ என்றால் தலைவன், அரசன் பசு என்று இரண்டு பொருள் தரும். ஆடு மேய்த்தவன் அரசன் ஆனான் மாடு மேய்த்தவன் மன்னன் ஆனான் என்றெல்லாம் சொல்வதுண்டு. ஆயனின் கோலே அரசனின் செங்கோல் ஆனது. பசுக்களை வளர்ப்பவர்கள், காப்பவர்கள் என்று ஆயர், கோவலர். இடையர், பூழியர், குடவர் என்று பல பக்கள் குழுமங்கள் இருந்தன. பசுக்கள் செல்வமாகக் கருதப் பட்டதால், அப்பொழுது அவற்றைக் கவர்வது, திருடுவது என்ற பழக்கம் இருந்தது. இதனால், ஆநிரை கவர்தல் மற்றும் ஆநிரை மீட்டல் என்பறு புலவர்கள் தங்களது பாடல்களில் அவற்றை விவரித்துள்ளனர். பசுக்களை காக்கும் ஆயர்களுக்கும், அவற்றைக் கவரும் மழவர், மறவர், எயினர், வேடர் போன்றோருக்கும் சண்டை, போர் நடந்ததை சங்க இலக்கியம் எடுத்துக் காட்டுகிறது. ஆவுடையர்கள் பெரிய செல்வந்தர்களாக இருந்தனர்.  “கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்றையவை”, என்று வள்ளுவர் சொன்னதிலிருந்து அதன் மேன்மையை அறிந்து கொள்ளலாம். இடைக்காலத்தைய இலக்கியங்களும் அவ்வாறே மதித்து வந்தன.

ஆநிரை கவர்தல் - காத்தல்

ஆநிரை கவர்தல் – காத்தல்

இடைக்காலத்தில் ஆநிரை காப்பது: ‘ஆகெழு கொங்கு’ என்று பசுக்களை மையப்படுத்தி பெருமை கண்ட கொங்கதேசத்தவராக, பசுக்களை மீட்பதிலும் காப்பதிலும் பெருமைப்பட்டனர், பசுக்களை மீட்ட வீரனுக்கு ஊர்கள் மானியம் வழங்கப்பட்டன. செற்றார் திறல் அழிய, சென்று செருச் செய்யும் கோவலர், அதாவது, ஆநிரைகளை கவர வரும் பகைவர்களின் திறலை அழித்து, போர் / செரு புரியும் கோவலர்கள், கோ-காவலர்கள், கோரகக்ஷ்கர்கள் ஆனார்கள். ஆகவே, ஆநிரை காத்தல் என்பது தமிழரின் அறம் மட்டுமல்லாது கடமையும் ஆகும். குடியாத்தம் வட்டம் கல்லப்பாடி என்னும் ஊரின் மிக அருகில் உள்ள வங்கட்டூர் என்ற ஊரில் நடுகற்கள் துரைசாமி நாயுடு என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் இருந்து நான்கு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன.. இந்த நடுகற்கள் முதலாம் ராஜராஜனின் மூத்த சகோதரனும், சுந்தரசோழனின் மூத்த மகனுமான பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலனால் படைக்கப்பட்டு இருக்கிறது. நான்கு நடுகற்களில் இரண்டு பழங்கால போர் பற்றிய செய்தியினை தருகின்றது. அதாவது ‘ஆநிரை காக்கும் பூசலில்’ இறந்துபோன தந்தை தின்மச்செட்டி மற்றும் அவரது மகன் சாத்தையன் பற்றி குறிக்கின்றது[1].

ஆநிரை கவர்தல்- நடுகற்கள்

ஆநிரை கவர்தல்- நடுகற்கள்

ஆநிரை மீட்ட வீரக்கல்தேனியில் கண்டுபிடிப்பு[2]: 11 மற்றும் 14ம் நூற்றாண்டு காலத்து சிற்ப கற்றூண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு கல் “ஆநிரை மீட்ட வீரக்கல்.’ இக்கல்லில் கீழிருந்து மேலாக நான்கு நிலைகளில் இரண்டு வீரர்களின் வீரச்செயல்கள் காட்டப்பட்டுள்ளன. சிற்பத்தில் பொறிக்கப்பட்டுள்ள முதல் நிலையில், போரில் ஈடுபடும் வீரன் குதிரையின் மீது அமர்ந்து எதிரியை ஈட்டி கொண்டு எரிவதாகும். இரண்டாவது நிலையாக வீரனின் காலடியில் பெண் அல்லது வீரனின் மனைவியாக கருதும் அந்த பெண்ணும் கணவருடன் இறந்திருப்பதற்கான சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.மூன்றாவது நிலையில், சங்க காலம் முதல் போரின் போது தமிழருக்கே உரித்தான ஆநிரை மீட்டல் அதாவது போரின் போது எதிரிகளிடமிருந்து மாடுகள் அல்லது பெண்களை மீட்டு வருவதாகும். அதன் நினைவாக மீட்டு வரும் வீரரின் நினைவாகவும், இரு மனைவிகளும் இறந்ததன் நினைவாக எழுப்பப்பட்ட வீரக்கல்லாகும். நான்காவது நிலையாக வீரர்கள் தனது மனைவிகளோடு இறந்ததை குறிக்கும் வகையில் இடது புறம் சூரியனும், மையத்தில் சிவலிங்கமும், வலது புறத்தில் சந்திரனும் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் ஆநிரை கவர்தல் அல்லது மீட்டு வருவதற்காக இரு ஆட்சியாளர்களிடையே போர் நடந்ததற்கான ஆதரமான வீரக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது போல் நாயக்கர் கால நிர்வாக முறையில் சிறப்புடையதாக கருதப்பட்ட நாட்டுக்காவல் முறை (ஊர்க்காவல் முறை) இருந்ததற்கான நாட்டுக் காவல் ஒற்றைக் கல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் உருவ அமைப்பாக வீரன் ஒருவன் குத்துவாள் இடுப்பில் செருகி ஆவேசத்துடன் ஒரு கையில் வாளை உயர்த்திய நிலையிலும், ஊர்க்காவல் முறையின் அடையாளமாக மறுகையில் தடி ஊன்றிய நிலையிலும் உள்ளது. இந்த கல் 14 ம் நூற்றாண்டை சார்ந்தவையாக இருக்கலாம், என கண்டறியப்பட்டுள்ளது[3].

ஆநிரை காத்தல் - தெய்வமாக மதித்தல்

ஆநிரை காத்தல் – தெய்வமாக மதித்தல்

இக்காலத்தைய நிலைமை: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839 நவம்பர் 22 – 1898 ஜூலை 5) 19 ஆம் நூற்றாண்டில் புலால் உணவுக்காக பசுக்கொலை செய்து மாமிசம் உண்ணும் ஆங்கிலேயர்களின் கொடுமையை மற்றும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நூறு பாடல்கள் கொண்ட, “ஆங்கிலியர் அந்தாதி” என்று பாடினார். இவ்வாறிருக்கும் போது, “தமிழர்கள்” என்று பறைச்சாற்றிக் கொள்பவர்கள், இவற்றையெல்லாம் மறைத்து, மறந்து ஏதேதோ பேசுகிறார்கள், எழுதிகிறார்கள். இருப்பினும் வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவும் இல்லாமல், தங்களை கவிக்கோ, பெருங்கவிக்கோ என்றெல்லாம் கூறிக்கொள்கிறார்கள், பாராட்டு விழா நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பசுமாமிசம் உண்ணும் விழா நடத்துகிறார்கள், பிறகு எப்படி, ஏன் மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்?

1966 anti-cow slaughter rally Delhi.6

1966 anti-cow slaughter rally Delhi.6

1966ல் தில்லியில் நடைப்பெற்ற பசுவதை எதிர்ப்பு பேரணியும், சாதுக்கள் கொல்லப்பட்டதும்: இந்தியாவில் பசுவதையைத் தடைசெய்ய வேண்டி இந்துக்கள் பல காலமாகப் போராடி வருகின்றனர். நவம்பர் 7, 1966 அன்று “கோபாஸ்டமி” என்று கொண்டாடப்படும் தினத்தன்று சாதுக்கள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர். ஜெயபிரகாஷ் நாராயணனும் பசுவதையை தடை செய்யக் கோரி குரல் எழுப்பினார், இந்திரா காந்திக்கு கடிதமும் எழுதினார்[4]. சாதுக்களின் பேரணி பாராளுமன்றைத்தை நோக்கிச் சென்றபோது, பேரணி மீது அப்போதைய இந்திரா காந்தி அரசின் உத்தரவுப்படி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் எட்டு சாதுக்கள் பலியானார்கள் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதனால், தில்லியில் இருந்த காமராஜர் வீடு தாக்கப்பட்டது. இதற்காக சங்கராச்சாரியார் சுவாமி நிரஞ்சன் தீர்த்தர், சுவாமி பர்பத்திரி, மஹாத்மா ராமசந்திர வீர் முதலியோர் கண்டனம் தெரிவித்து உண்ணாவிரதம் மேற்கொண்டர். மஹாத்மா ராமசந்திர வீர் 166 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அப்போதைய உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தா இதற்காக பொறுபேற்று ராஜினாமா செய்தார். ஆனால், தமிழகத்தில் இவ்வுண்மைகளைச் சொல்வது கிடையாது. மாறாக, நாத்திகவாதிகள், இந்துவிரோதிகள் (ஏனெனில் அவர்கள் எழுதும் விதத்திலேயே அதனை வெளிப்படுத்துக் கொள்கின்றனர்[5]) இதைக்கூடத் திரித்து எழுதுகிறர்கள் என்பதை கவனிக்க வேண்டும்[6].

1966 anti-cow slaughter rally Delhi.1

1966 anti-cow slaughter rally Delhi.1

சென்னையில் நடைப்பெற்ற போராட்டங்கள்: ஆலய வழிபடுவோர் சங்கம், சென்னை எனும் எஸ்.வி.பத்ரி என்பவரால் அமைக்கப்பட்ட அமைப்பு தமிழகம் வழியாகக் கடத்தப்பட்டு கேரளாவிற்கு இறைச்சிக்காகக் கொண்டு செல்லப்படும் பசுக்கள், கன்றுகள், எருமைகள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு எதிராகப் போராடி வருகின்றது. சென்னை பெரம்பூரில் 2012 ஆம் ஆண்டு தமிழக அரசு நவீன இறைச்சிக்கூடம் அமைக்க ஆரம்பித்தது. பல ஆண்டுகளாக இங்கு சாதாரண இறைச்சிக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இதனை அமைக்கும் பொறுப்பை டெல்லியைச் சேர்ந்த ஹின்ட்-அக்ரோ லிமிடெட் அமைப்பு ஏற்றது. இந்த நவீன இறைச்சிக்கூடம் ஒரு நாளில் 10,000 மாடுகளை வதை செய்யும் திறன் கொண்டது. ஒரு மணி நேரத்தில் 60 மாடுகளையும் 250 கன்றுகளையும், ஆடுகளையும் வதை செய்யும் திறன் கொண்ட இந்த நவீன இறைச்சிக்கூடத்திற்கு பொது மக்கள், தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டும், உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டும் எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது.

1966 anti-cow slaughter rally Delhi.3

1966 anti-cow slaughter rally Delhi.3

© வேதபிரகாஷ்

31-10-2015

[1] http://www.dailythanthi.com/News/Districts/Vellore/2015/03/22223735/Planting-defense-appeal-to-remain-in-a-state-of-near.vpf

[2] தினமலர், ஆநிரை மீட்ட வீரக்கல்தேனியில் கண்டுபிடிப்பு, செப்டம்பர்.5, 2014.02.34.

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1062756&Print=1

[4] In his letter, written in 1966 to the then Prime Minister, Mrs. Indira Gandhi of 1966, Lok Nayak Shri Jaya Prakash Narayan wrote that “ For myself, I cannot understand why, in a Hindu majority country like India, where rightly or wrongly, there is such a strong feeling about cow-slaughter, there cannot be a legal ban”. A copy of the letter is annexed and marked as Annex I (4). http://dahd.nic.in/ch1/chap1.htm#item13

[5] http://www.unmaionline.com/new/2486-euthanasia-cow-human-euthanasia.html

[6] http://subavee-blog.blogspot.in/2015/03/2.html