Posts Tagged ‘ராம்’

ஹசன் சுரூர் – சிறுமி பாலியல் விவகாரத்தில் கைதானவர் – நாத்திகரா, இடதுசாரியா, மோடி-விரோதியா, ஜிஹாதி-ஆதரவாளரா, யாரிவர் (2)?

நவம்பர் 14, 2015

ஹசன் சுரூர் – சிறுமி பாலியல் விவகாரத்தில் கைதானவர் – நாத்திகரா, இடதுசாரியா, மோடி-விரோதியா, ஜிஹாதி-ஆதரவாளரா, யாரிவர் (2)?

COMMUNIST BEEF

COMMUNIST BEEF, bluff, brief – of history and historiography

இந்திய வலதுசாரிகள் மிக எளிதாக வரலாற்றைத் திரித்து தங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறார்கள்: “படேலைப் பற்றி நரேந்திர மோடி படேல் குறித்த விவாதத்தை மோடி உருவாக்கியிருப்பது தேர்தல் நேர உத்தியாக இருக்கலாம். ஆனால், மறக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் யாரையும் விடுபடல் இல்லாமலும் அடிக்கடியும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை மோடியின் பேச்சு உருவாக்குமானால், அது உண்மையிலேயே உருப்படியானதாக இருக்கும்[1]; வெறுமனே, தலைவர்களுக்குச் சிலைகள் நிறுவுவதையும் திட்டங்களுக்கு அவர்கள் பெயர்களை வைப்பதையும் விடுத்து, அவர்களின் சிந்தனைகளைப் பரப்புவதிலும் அவற்றின் அடிப்படையில் செயல்படுவதிலுமே இருக்கிறது உண்மையான நினைவுகூரல். ஆங்கிலேயர்கள் வரலாற்றுப் பித்துப் பிடித்தவர்கள்; அதற்கு நேர்மாறாக வரலாற்று உணர்வற்றிருப்பதில் இந்தியர்கள் தனித்துவம் மிக்கவர்கள். அதனால்தான், இந்திய வலதுசாரிகள் மிக எளிதாக வரலாற்றைத் திரித்து தங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறார்கள்[2]. நவீன இந்தியாவின் வரலாறு பல்வேறு குரல்களின் வழியே சொல்லப்பட வேண்டிய காலம் இது. நேருவும் படேலும் சந்தேகமின்றி ‘பெரும்புலி’கள்தான், ஆனால், இந்தக் கதையில் வெறுமனே வந்துபோகாமல் பெரும் பங்கு வகித்த மற்றவர்களும் இருக்கிறார்கள். அவர்களுடைய பெருமைகளும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்!”, இப்படி இக்கட்டுரையில் இந்திய வலதுசாரிகள் மிக எளிதாக வரலாற்றைத் திரித்து தங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறார்கள் என்று அவர்களது திரிபு வரலாற்றை ஆதரிப்பதில் அச்சந்தேகம், இன்னும் வளர்கிறது.

Kishtwa riot - perpetrators and actorsஇஸ்லாத்தைக் காப்பதற்காக, சில குழந்தைகளைக் கொல்வதிலும் தவறில்லை: ஹசன் சுரூர் எழுத்துகள் இவ்விதமாகத்தான் இஸ்லாம் சார்புடையதாக, இடதுசாரி ஆதரவாக ஆனால் மோடி-எதிர்ர்ப்பாக பீரிட்டு எழுந்துள்ளது. இவ்வாறு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, வலதுசாரிகளை விமர்சனம் செய்வதில் ஒன்றும் பிரச்சினை இல்லை, எல்லாமே கருத்துரிமை, எழுத்துரிமை என்று ஆர்பாட்டமாகச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், மோடி-எதிர்ப்பு விமர்சனம் மட்டும், அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. இவருக்குத்தான் எல்லாமே தெரியும் என்ற தோரணையில் வசைப்பாடியிருப்பதுடன், தூஷணத்தை அள்ளி வீசியிருக்கிறார். இஸ்லாத்தைக் காப்பதற்காக, சில குழந்தைகளைக் கொல்வதிலும் தவறில்லை என்ற ரீதியில் ஐ.எஸ். ஜிஹாதிகளை ஆதரித்துள்ளார்[3]. பெண்கள் குழந்தைகளை விடுத்து,, குடும்ப்பத்தை விடுத்து, “இஸ்லாமிக் ஸ்டேட்” என்ற ஐ.எஸ்.ஜிஹாதி கூட்டத்திற்காக சேவை செய்வதை கடமையாகக் கொண்டதைக் குறிப்பிட்டுப் புரிக்கிறார்[4].  ஆக, இப்படி, கூட்டுக் கலவையாகத் தான் சுரூர் இருக்கிறார்.

Wandhma massacre2ஹசன் சுரூர் யார், அவரது சித்தாந்தம் என்ன?: இஸ்லாம் பற்றிய பெரிய கட்டுரையில், இஸ்லாம், ஜிஹாத்…….போன்றவை என்ன என்று நீளத்தில் எழுதினால், அது அப்படியே “தி ஹிந்துவில்” பதிப்பிடப்படுகிறது[5]. இவையெல்லாம் ஒன்றும் புதியதல்ல, இவரது விளக்கங்களும் புதியதல்ல. பிறகு, எதற்காக “தி ஹிந்து”, இவரது எழுத்துகளுக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுத்து பதிபிக்க வேண்டும்? குழந்தைகள் பெற்றெடுத்த முஸ்லிம் பெண்கள், அதிலும் இங்கிலாந்தில் பிறந்து, பாகிஸ்தானிய ஆண்களை மணந்து கொண்டதால், அந்த “சகோதரிகள்” ஏன், கணவன்களை விட்டு “ஜிஹாதி சகோதரர்கள்”களுடன் சேர்ந்து கொண்டதை நியாயப்படுத்த வேண்டும்? தன்னை நாத்திகன் என்று கூறிக்கொள்கிறார், இடதுசாரி என்கிறார், முஸ்லிம் என்கிறார், ஜிஹாதிகளை, குறிப்பாக ஐ.எஸ்.சகோதரர்களை ஆதரிக்கிறார், ஆனால், மோடியை, பிஜேபியை, இந்துத்துவத்தை, இந்துக்களை வசைபாடுகிறார். இத்தகைய கலப்பு சித்தாந்தம் என்ன்னவோ? என். ராமுடனான நெருக்கம் பலவித கோணங்களில் வெளிப்படுகிறது. ஏப்ரல்.8, 2011ல் ஜூலியன் அஸாஞ்சை சந்திக்கும் போது, ஹசன் சுரூருடன் சென்றிருந்தார்[6]. அதில் தான், ஹசன் சுரூர், “தி ஹிந்து”வின் இங்கிலாந்தின் “கரஸ்பான்டென்ட்” என்று குறிப்பிடப்படுகிறார்.

Hasan Suroor - Leftist, Is supporter, Hindutwa opponent-twitters.1

Hasan Suroor – Leftist, Is supporter, Hindutwa opponent-twitters.1

ஹசன் சுரூரின் டுவிட்டுகள் சில: இன்று டுவிட்டரில் வருகின்றவை தான் செய்திகளாக வெளியிடப்படுகின்றன. டிவிசெனல்களில் விவாதிக்கபடுகின்றன. உடனே, அல்லது அடுத்த நாளில், அப்பதிவை எடுத்து விட்டால் கூட, அல்லது மறுத்தால் கூட விடாப்பிடியாக விவாதங்கள் தொடர்கின்றன. இனி, இவரது டுவிட்டுகளப் பார்ப்போம்:

  • தில்லி, பிஹார் முதலியவற்றிற்கு பிறகு, மோடி, அவருடைய “இந்தியா” பற்றிய எண்ணத்தை மறுபடியும் பரிசீலினை செய்ய வேண்டும்.
  • ஷர்ம் அல் ஷைக் விமான வீழ்ச்சி பற்றி சார்லி ஹெப்டோ கார்ட்டூன்களை வெளியிட்டுள்ளது. இனியும், அதில் பீதியளிக்கும் வகையில் எதுவுமே இல்லையா?
  • பௌத்தர்கள் மிகவும் சகிப்புத்தன்மை வாய்ந்த மக்களாக நம்பப்படுகின்றனர். ஆனால், அவர்கள் பர்மாவில் ஹோஹிங்ய முஸ்லிம்களை அழிக்கும் வகையில் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளனர்.
  • பிஜேபி-விரோத வெறியைத் தூண்டிவிடுவதாக ஜைட்லி இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸைக் குற்றஞ்சாட்டுகிறார். தல்வீன் சிங் இடதுசாரியைச் சேர்ந்தவா? நாராயண மூர்த்தியும் அவ்வாறா? ஷோரியும் கம்யூனிஸ்டா? ரகுராம் ராஜனும் இடதுசாரியா?
  • லண்டன் விஜயம் போது, மோடி ராணியுடன் மதிய உணவு உண்ணவேண்டியுள்ளது. அவரது பாதுகாப்பு வீரர்கள், பக்கிங்ஹாம் அரண்மனையின் சமையலறை பிரிட்ஜில் பசுமாமிசம் எதுவும் இல்லை என்பதனை சோதித்து விட்டனரா?
  • சுதந்திரமான பேச்சா? என்ன அது? “தி ஹிந்து”வில், எனது கட்டுரையைப் பாருங்கள்.

இப்படி சமீபத்தில் வந்துள்ள சில டுவிட்டுகளிலிருந்தே, இவரது போக்கு நன்றாகவே வெளிப்படுகிறது.

Hasan Suroor - Leftist, Is supporter, Hindutwa opponent-twitters.2

Hasan Suroor – Leftist, Is supporter, Hindutwa opponent-twitters.2

© வேதபிரகாஷ்

14-11-2015

[1] தமிழ்.இந்து, ஆசாத், கித்வாய்: இரு ஆளுமைகள்!, Published: November 10, 2013 15:38 ISTUpdated: November 11, 2013 16:44 IST.

[2]http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article5335293.ece

[3] He has subtly supported Islamic State (IS). He doesn’t see any harm in IS ruthlessly killing children just for the sake of saving such a great religion. Then, how can you expect a moron like Hasan Suroor to not become a sex predator.

http://indicivil.blogspot.in/2015/11/hasan-suroor-family-profile-and.html

[4] As I write this, Britain is rocked by the strange case of three housewives (sisters born and brought up in Britain and married to men of Pakistani origin) who have fled to Syria (along with their nine children aged between 3 and 15) to team up with IS militants…………………. the power of propaganda and persuasion that can make people believe in the righteousness of a ‘cause’ and that urges them to perform certain acts as part of their “Islamic duty”.

http://www.thehindu.com/opinion/op-ed/the-siren-call-of-pure-islam/article7347254.ece

[5] http://www.thehindu.com/opinion/lead/islam-and-its-interpretations/article6455101.ece

[6]  On April 8, Julian Assange, the brilliant and articulate Editor-in-Chief of WikiLeaks, gave a one-hour interview at Ellingham Hall in the county of Norfolk to N. Ram, The Hindu’s Editor-in-Chief, who was accompanied by Hasan Suroor, the newspaper’s U.K. Correspondent.

http://www.thehindu.com/opinion/interview/video-excerpts-of-n-rams-april-8-2011-interview-with-julian-assange/article1699186.ece

மாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி சகிப்புத்தன்மையும் – குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (4)!

நவம்பர் 6, 2015

மாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி  சகிப்புத்தன்மையும்குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (4)!

Marxist beef eating propaganda

Marxist beef eating propaganda

கம்யூனிஸம், உண்மையான கம்யூனிஸம் மற்றும் போலி கம்யூனிஸம்: பிளவுபட்டு வேலைசெய்ய ஆரம்பித்த காம்ரேடுகள் தங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ள, வரும் வரும்படியைப் பிரித்துக் கொள்ள, சங்கங்களை, சங்க உறுப்பினர்களை தொடர்ந்து கட்டுக்குள் வைத்துக் கொள்ள பலவித சித்தாந்தங்களை உருவாக்க ஆரமித்தனர். இவையெல்லாம், பொதுவாக ஒரு அல்லது பலவித எதிரியை / எதிரிகளை உருவாக்கி, அதனை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வது, நடக்க முடியாததை நடத்திக் காட்டுவேன் என்பது[1], போன்ற வாய்ஜாலங்களில் ஈடுபட்டே காலத்தைத் தள்ளிக் கொண்டு வந்தனர். நடக்காதவற்றிற்கும், தோல்விகளுக்கும், அந்த கற்பனை எதிரிகள் தாம் என்று குற்றஞ்சாட்டி வந்தனர். லெனின் கூறிய “சுயநிர்ணய உரிமை” என்றதை[2] குழப்பி, இந்திய மாநிலங்களில் பிரிவினைவாதத்தை வளர்த்து வருவது, அதே நேரத்தில் இந்திய தேசியத்தைப் பேசிவருவது முதலிவை அவர்களை வெளிக்காட்டியது. இதனால் கம்யூனிஸம், உண்மையான கம்யூனிஸம் மற்றும் போலி கம்யூனிஸம் போன்ற வாதங்களும் வழக்கில் தாராளமாக வந்தன.  இப்பொழுதும், அவர்கள் தங்களுக்குள் நடக்கும் சித்தாந்த மோதல்களுக்கு இத்தகைய பிரயோகத்தை செய்து வருகிறார்கள்[3].

COMMUNIST BEEF

COMMUNIST BEEF

பிரிவினைவாதங்களினால் வளர்ந்து, நீர்த்துப் போன கம்யுனிஸ்ட் குழுமங்கள்: சிப்தாஸ் கோஷ் போன்றோர், சிபிஐ பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவாக செயல்பட்டதை எடுத்துக் காட்டியுள்ளனர்[4]. ஜோஷி, ரணதேவ், ராஜேஸ்வர ராவ், அஜய் கோஷ் இவர்களிடையே இருந்த முரண்பாடுகளும் விவாதிக்கப்பட்டன. மார்க்ஸ் மற்றும் மாவோ சித்தாந்த மோதல்கள் பலவிதங்களில் வெளிப்பட்டன. மார்க்சிஸம்-லெனினிஸம் தான் சரியான தீர்வு என்றும் பேசப்பட்டது. 1969 [CPM (ML)] கல்கத்தாவில் உருவானது. கனு சன்யால் [ Kanu Sanyal] ஏப்ரல்.22, 1969 அன்று, அதாவது, லெனினின் பிறந்த நாள் அன்று, அக்கட்சியின் ஆரம்பத்தை அறிவித்தார். ஆனால், 1948ல் தொடங்கப்பட்ட எஸ்.யு.சி.ஐ தான்தான் இந்தியாவின் ஒரே உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி என்று பறைச்சாட்டிக் கொண்டு வருகிறது[5]. அரசியல் ரீதியில் வைத்துப் பார்க்கும் போது 1950 முதல் அவர்களது ஆதிக்கம் குறைந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி, 1970 – 80 ஆண்டுகளில் 10 சதவீத ஓட்டுகளை வைத்திருந்தது. அது 2004ல் 8 சதவீதமாக குறைந்தது. தற்போது 5 சதவீதம் மட்டுமே பெறும் என தெரிகிறது.
பத்தாண்டுகளுக்கு முன், லோக்சபாவில் மூன்றில் ஒரு பங்காக 59 சீட்களை பெற்றிருந்தது. தற்போதைய தேர்தலில். இந்தியா முழுவதும் 14-20 இடங்களை மட்டுமே பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. 2014 பொதுத்தேர்தலில், 282 இடங்களை பிடித்து, பா.ஜ., ஆட்சி அமைத்த போது, கம்யூனிஸம் வீழ்ச்சியடைந்தது[6] எனலாம். இருப்பினும்ப் மூன்றாவது அணி என்றெல்லாம் கலாட்ட செய்து வருவார்கள். ஆனால், இப்பொழுது பிஹார் தேர்தலில் அவர்களை காணவில்லை, மாறாக, பசு-மாமிச விருந்து கலாட்டாகளை மற்ற மாநிலங்களில் கொண்டாடி வருகிறார்கள்.

FEMEN-ized communist propaganda posters-cow and milk

FEMEN-ized communist propaganda posters-cow and milk

தேசியமா, கூட்டாட்சியா, சுய-நிர்ணயமா – எடுபடாத சித்தாந்தங்கள்: யு.எஸ்.எஸ்.ஆர் பிளந்த பிறகு, அவர்களது சித்தாந்தம் உலக அளவில் நீர்த்துப் போய் விட்டது. மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவிலும் அவர்களது ஆட்சி வீழ்ந்து விட்டன. இந்திய தேசீயம் என்று வந்தபோது, அவர்களது “பிரிந்து போகும் உரிமை” போன்ற வாதங்கள் எடுபடாமல் போய்விட்டன. திராவிடத் தலைவர்கள் பிரிவினையிலிருந்து, “மாநில சுயயாட்சி”க்கு வந்து, பிறகு, ஆரிய கட்சிகளுடன் தொடர்புகள் வைத்துக் கொண்டு, தேசிய நீரோட்டத்துடன் கலந்து விட்ட பிறகு, தமிழகத்திலேயே இவர்களது சித்தாந்தம் தேய்ந்து விட்டது. ராமமூர்த்தி எழுதிய ’’ஆரிய மாயையாதிராவிட மாயையா? விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்’, திராவிடத்தால் வீழ்ந்தோம், முதலிய புத்தகங்கள், திராவிட சித்தாந்திகளை விட, காம்ரேடுகளைத்தான் அதிகம் பாதித்தன. இதனால், காஷ்மீர் மற்றும் தமீழீழம் பிரச்சினைகளை உசுப்பிக் கொண்டு காலந்தள்ளி வருகின்றனர். பிரபாகரன் கொலையுண்டு, திராவிடத் தலைவர்களின் நிலைப்பாடு வெளியானவுடன், “இந்துத்துவா”வை எதிர்த்து பிழைத்து வருகின்றன[7].

FEMEN-ized communist propaganda posters-cow-woman and milk yield

FEMEN-ized communist propaganda posters-cow-woman and milk yield

கம்யூனிஸ சித்தாந்தம் எப்படி இந்தியாவில் மற்றும் தமிழகத்தில் வேறுபடுகின்றன?: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் [Communist Party of India[8]] பரிவாரத்தில் [AITUC, AIKS, AIYF, AISF, NFIW, BKMU] என்று பல அவதாரங்கள் உள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)டின் Communist Party of India (Marxist) அங்கங்கள் [CITU, AIKS, DYFI, SFI, AIDWA, GMP] என்று பலவாறு செயல்பட்டு வருகின்றன. எஸ்.யு.சி.ஐ [Socialist Unity Centre of India (Communist), மற்றும் அதன் பாகங்களான [AIUTUC, AIMSS, AIDYO, AIDSO] முதலியவையும் சித்தாந்த ரீதியில் போராடி வருகின்றன. இதுதவிர, கத்தார் கட்சி (Communist Ghadar Party of India), நக்ஸல்பாரி எழுச்சி (Naxalbari uprising), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) [Communist Party of India (M-L)[9]], Liberation, புதிய ஜனநாயகக் கட்சி [New Democracy], ஜனசக்தி [Janashakti], மற்றும் PCC, 2nd CC, Red Flag, Class Struggle, Communist Party of India (Maoist), போன்ற பல்வேறு பிரிவுகள் உள்ளன. ஆனால், தமிழகத்தில், இவை மொழி, இனம், சாதி போன்ற பிர்ச்சினைகளை உணர்வுப் பூர்வமாக எடுத்துக் கொண்டு, மற்ற சித்தாந்திகளை ஆட்டிப் படைத்து வருகின்றன. தமிழ், தமிழினம், தமிழ்வெறி, தமிழகம், தமிழ்நாடு-தனி நாடு, தமிழ் ஆட்சிமொழி, தமிழீழம், ஆரிய-திராவிட இனவாதங்கள், பார்ப்பன, சமஸ்கிருத, இந்து-விரோத, நாத்திக வாதங்கள் என்று பலவற்றை வைத்துக் கொண்டு குழப்பி காலந்தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.

DYFI beef eating Kerala

DYFI beef eating Kerala

என். ராம் மற்றும் தி இந்து மேல் திரும்பியது ஏன்?: தமிழகத்தில் இவர்கள், இதனால், இந்தியப் புரட்சி, தமிழ்த் தேசிய விடுதலைப் புரட்சி, குடிநாயகம்-ஜனநாயகம், இந்தியதேசம்-தமிழ்தேசம், பார்ப்பனீயம், பார்ப்பன பயங்கரவாதம், கள்ளச்சாராயம்-நல்ல சாராயம், தனியார் கல்வி- அரசு கல்வி, இந்தி-தமிழ், தேர்தல் பாதை-திருடர் பாதை, புரட்சி பாதை – மக்கள் பாதை, கருவி போராட்டம், தமிழ் பாதுகாப்பு போராட்டம், தமிழ் ஆட்சி மொழி, வர்க்கம்-வர்க்க போராட்டம், என்றெல்லாம் பேசிக்கொண்டு தமக்குள் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். தேசிய அளவில் இடதுசாரி சித்தாந்தங்கள் பொய்த்த பிறகு, மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்திற்கேற்றபடி திரிபுவாதக்கள் செய்து கொண்டிருப்பதால், எங்கும் எடுபடாமல், குழப்பவாதங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். முதலாளிகளை, வியாபாரிகளை, தொழிலதிபர்களை, நிலதிபர்களை, பண்ணையார்களை மிரட்டி பணம் வாங்கிக் கொண்டு பிழைத்து வரும் இவர்கள், எதையெதையோ பேச ஆரம்பித்து விட்டார்கள். தங்களுக்கு மேலேயே சேற்றை இறைத்து வாரி, தங்களது பலவீனங்களை, சித்தாந்த வரட்சியை, போலிப் புரட்சித் தனத்தை வெளிக்காட்டி வருகிறார்கள்.

CPI-ML- activists consuming beef outside the Tahsildar office in Sindhanur on Thursday -05-11-2015- Photo-SANTOSH SAGAR.

CPI-ML- activists consuming beef outside the Tahsildar office in Sindhanur on Thursday -05-11-2015- Photo-SANTOSH SAGAR.

பீப்-ஈடிங் – பசு-மாமிசக்கறி தின்னும் ஆர்பாட்டம், போராட்டம் முதலியன: கம்யூனிஸ்ட் எந்த கறி சாப்பிடவேண்டும் என்று மார்க்ஸ், லெனின், மாவோ முதலியோர் ஒன்றும் சொல்லவில்லை. ஆகவே, அவர்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். இந்தியாவைப் பொறுத்தவரையில், அவர்கள் இதைத்தான் சாப்பிடுவோம் என்று ஆர்பாட்டம் செய்யலாம் போராட்டம் நடத்தலாம், பீப்-உண்ணும் விழா நடத்தலாம். ஆனால், அதில் சமத்துவம், சமதர்மம், செக்யூலரிஸம் முதலியவைப் பின்பற்றப்படுகிறதா என்று காம்ரேடுகள் கவனிக்கவேண்டும். இப்பொழுது எல்லா மாநிலங்களிலும் அத்தகைய விருந்துகளை – பீப்-ஈடிங்-பசு மாமிசக்கறி தின்னும் – நடத்தி வருகிறார்கள்[10]. அதாவது, பிஜேபியை எதிக்கிறேன் என்று, இந்துக்களைத் தான் அவமதித்து வருகின்றனர்[11]. அதனால்தான், இந்துமதத்தலைவர், இது போல, நீங்கள் பன்றி மாமிசம் தின்னும் விழா நடத்துவீர்களா என்று கேட்டிருக்கிறார். ஆக, பிரச்சினையைத் தூண்டி விட்டு, கலவரமாக்கும் போக்கு, இவர்களிடம் தான் காணப்படுகிறது.

ommunism-political-ideologies-

Communism-political-ideologies-

© வேதபிரகாஷ்

06-11-2015

[1] ஏழ்மையை ஒழிப்போம், ஊழலை ஒழிப்போம், சுரண்டலை ஒழிப்போம், விபச்சாரத்தை ஒழிப்போம் போன்றவை; அனைவருக்கும் வேலை செய்யும் உரிமை (வேலை கிடைக்கிறாதோ இல்லையோ)……

[2] Lenin, The Right of Nations to Self-Determination, Progress Publishers, Moscow, 1974.

[3] போலி கம்யூனிஸ்டுகள்: பாசிச ஜெயாவின் அடிமைகள்! – இவ்வளவு கேவலமான நிலைக்குப் போய் போலி கம்யூனிஸ்டுகள் பார்ப்பன பாசிச ஜெயலலிதாவுக்குப் பல்லக்குத் தூக்குவதற்கான காரணம், இக்கட்சிகள் தமது வர்க்க அடித்தளத்தை இழந்து பிழைப்புவாதப் புதைசேற்றில் விழுந்து கிடப்பதுதான். புரட்சிகர அரசியலையும் சித்தாந்தத்தையும் கைவிட்டு நாடாளுமன்ற – சட்டமன்ற சாக்கடையில் விழுந்து புரள்வதற்குத் தீர்மானித்த காலத்திலிருந்தே இந்தப் பிழைப்புவாத நோய் அவர்களைப் பற்றிக் கொண்டு விட்டது. பின்னர் படிப்படியாக அது முற்றத் தொடங்கி, வரலாற்றைப் படைக்கும் உந்துசக்திகளான உழைக்கும் மக்கள் மீது நம்பிக்கை வைக்காமல், வர்க்கப் போராட்டத்தையே கைகழுவிட்டு ஓட்டுக்கும் சீட்டுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களின் காலை நக்கி ஆதாயமடைவதே அவர்களது இலட்சியமாகிப் போனது. http://www.vinavu.com/2014/04/08/cpi-cpm-slaves-of-jayalalithaa/

[4]  Shibdas Ghosh, Selected Works, Vol.II, Central committee – Socialist Unity Centre of India, Calcutta, 1992, p.220-221.

[5]  சிப்தாஸ் கோஷ், எஸ்.யு.சி..யே இந்தியாவின் ஒரே உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி, மதுரை, 1987.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=961946

[7]  இது உதாரணத்திற்காகக் கொடுக்கப்படுகிறது – இது தவிர பலவுள்ளன –  http://theekkathir.in/2015/11/05/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/

[8] http://www.communistparty.in/

[9] http://www.cpiml.org/

[10] http://www.thehindu.com/news/national/karnataka/backing-cms-stance-left-activists-eat-beef-in-public/article7848635.ece

[11] http://www.thehindu.com/news/national/karnataka/left-activists-eat-beef-in-public-to-support-cm/article7846296.ece

மாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி சகிப்புத்தன்மையும் – குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (3)!

நவம்பர் 6, 2015

மாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி  சகிப்புத்தன்மையும்குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (3)!

Beef politics enters The Hindu.2

Beef politics enters The Hindu.2

எம்.கே.நாராயணனை செருப்பால் அடித்து, என். ராமை வசைப்பாடியக் கூட்டங்களில், இடதுசாரிகள் அதிகமாக இருந்தது வேடிக்கையாக இருந்தது. பசு மாமிசம் உண்ணும் விசயத்தில், ராமும், தி ஹிந்துவும் பாரபட்சமாக நடந்து கொண்டனர் என்று அவர்கள் வாய்க்கு வந்தபடி வசைபாடி, பதாகைகள் மூலமும் அத்தகைய கருத்துகளை தாராளமாக வைத்து பிரச்சாரம் செய்து குற்றஞ்சாட்டியுள்ளனர். மாட்டிறைச்சியை ஆதரிப்பதாகவும், இந்துத்துவத்தினை எதிர்ப்பதாகவும் தன்னை முற்போக்காளராக காட்டிக்கொள்ளும் “தி இந்து நாளிதழ்”, தனது அலுவலத்தில் மாட்டிறைச்சி மட்டுமல்ல, எவ்வித அசைவ உணவு உட்கொள்ளக் கூடாது என்று சட்டத்தினை வைத்திருக்கிறது[1] என்று அவர்கள் இந்து அலுவலகத்திற்கு அருகே கத்தி ஆர்பாட்டம் செய்ததும் விசித்திரமாக இருந்தது.

  • “அசைவ உணவை தடைசெய்த இந்து ராமைக் கண்டிக்கின்றோம்”,
  • “பார்ப்பன வெறியன் இந்து ராமைக் கண்டிக்கின்றோம்”,
  • ஜாதி வெறியைத் தூக்கிப் பிடிக்காதே…….,
  • “உணவு தீண்டாமையை செயல்படுத்தும் இந்து ராமைக் கண்டிக்கின்றோம்”,
  • “பார்ப்பன வெறியன் இந்து ராம்”,
  • “பத்திரிக்கைத் தொழில் நடத்த தகுதியில்லை….”,
  • “பத்திரிக்கைத் தொழிலிலிருந்து வெளியேறு.. ”
  • “மோடியின் கைகூலி” என்றெல்லாம் கத்தியது வேடிக்கையாக இருந்தது.

காம்ரேடை, திட்டும் இந்த காம்ரேடுகள் எப்படி உருவானார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அதனை அறிந்து கொள்ள, கம்யூனிஸ்டுகளின் ஆரம்பம், பிளவு, சிதறல்கள் முதலிய விவரங்கள அறிந்து கொள்ள வேண்டும். இப்பொழுது கூட, “இலங்கைத் தமிழர் பிரச்சனைகள் பற்றி மாறுபட்ட கருத்துக்கள் இருப்பின் அவற்றை ஜனநாயகப் பூர்வமான முறைகளில் வெளிப்படுத்துவதே சரியான அணுகுமுறையாகும். கருத்தை கருத்தால் எதிர்கொள்வதற்குப் பதிலாக, வன்முறையில் ஈடுபடுவது சரியான அணுகுமுறையல்ல. எம்.கே.நாராணயன் தாக்கப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது”, என்று வெளியிட்டுள்ளது நோக்கத்தக்கது[2].  இதெல்லாம் வெறும் சம்பிரதாய வெற்றுவார்த்தைகள் தான் என்று அறிந்து கொள்ளலாம். ஏனெனில், அவர்களால், அத்தகைய செருப்படியைத் தடுக்க முடியவில்லை என்பதுத்தான் உண்மை.

Marx, Lenin, Mao- trinity of Communism

Marx, Lenin, Mao- trinity of Communism

என். ராம் கம்யூனிஸ்டு, ஆனால் மார்க்சிஸ்டா, லெனினிஸ்டா, மாவோயிஸ்டா?: பொதுவாக என். ராம் மார்சிஸ்ட் கம்யூனிஸ ஆதரவாளர், உறுப்பினர் என்றெல்லாம் சொல்லப்படுகிறது, குறிப்பிடப்படுகிறார். ஆனால், 2009ல், அவர் சைனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று திபெத்திய விடுதலைப் போராளிகள் குற்றஞ்சாட்டினர்[3]. 2011ல் என். ரவியை பதவி நீக்கம் செய்தபோது, அவரது கடிதத்திலும், அது எடுத்துக் காட்டப்பட்டது[4]. ஜாங் யான் நவம்பர்.27, 2009 அன்று ராமை சந்தித்தது, சைன இணைதளமே படங்களுடன் செய்தியை வெளியிட்டது[5]. சாய்நாத் மற்றும் ப்ரவீன் சுவாமி, என்ற இரு பத்திரிக்கையாளர்கள், அங்கு வேலைசெய்கின்ற சூழ்நிலை சரியில்லை என்றும், போல்போட் அரசு போல யதேச்சதிகாரத்துடன் அடந்து கொள்கின்றனர் என்றும் கூறி, ஜூலை 2014ல் தி இந்துவிலிருந்து ராஜினாமா செய்தனர்[6]. இவ்வாறு சித்தாந்த போராட்டங்கள் நடைபெறுவது, அவர்களுக்கு சாதாரணமாக இருக்கலாம், ஆனால், சாதாரண இந்திய மக்களுக்கு இதனால் எந்த பாதிப்பு என்பது புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள். மேலே குறிப்பிட்ட விவகாரங்களால், என். ராம் கம்யூனிஸ்டு, ஆனால் மார்க்சிஸ்டா, லெனினிஸ்டா, மாவோயிஸ்டா என்ற கேள்வி எழுகின்றது அல்லது பொது எதிரியை தாக்க, கம்யூனிஸ்டுகள் ஓன்றாக வேலைசெய்ய வேண்டும் என்ற திட்டமா என்று கவனிக்கவேண்டும்..

N Ram accused of leaning towards China by N Murali - 2011

N Ram accused of leaning towards China by N Murali – 2011

தி இந்து மற்றும் என்.ராமை ஏன் இருவகைப்பட்ட எதிர்சித்தாந்தவாதிகளும் எதிர்க்கின்றனர்?: 1992க்குப் பிறகு[7] சங்கப்பரிவார் ஆதரவாளர்கள், வயதான இந்துக்கள், பாரம்பரிய “தி இந்து” வாசகர்கள் (காலையில் காப்பியுடன் இந்து பேப்பர் படிக்கும் கோஷ்டி), “தி இந்து”வில், தொடர்ந்து இந்து-விரோத செய்திகள், தலையங்கங்கள், கட்டுரைகள், பேட்டிகள், கடிதங்கள், என்று வந்து கொண்டிருப்பதும் மற்ற எல்லாவற்றிலும் அத்தகைய இந்து-விரோதம், இந்து-தூஷணம், இந்து-காழ்ப்பு முதலியவை வெளிப்பட்டதால், பலர் அதற்கு கண்டிப்பையும், கண்டனத்தையும் தெரிவித்தனர். பேப்பரை வாங்கி, திருப்பி அனுப்பியும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்; வாங்குவதை நிறுத்தினர்[8]; அலுவலத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தினர். ஆனால், அப்பொழுது ஆசிரியராக இருந்த என். ராம் மசியவில்லை. அதனால், அவரை இந்து-விரோதி என்றும் கூற ஆரம்பித்தனர். அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்று கூட விமர்சித்தனர். ஆனால், இப்பொழுது அதே என். ராம் மேற்குறிப்பிடப்பட்டபடி தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார். ஆனால், எதிர்ப்பதோ கம்யூனிஸ்டுகள் தாம். சில இந்துத்துவவாதிகளுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும்[9], மற்றவர்கள் கூர்மையாக, சிரத்தையுடன் கவனித்து வருகின்றனர். ஏனெனில், அவர்களது, இந்த குழப்பவாதங்களிலும் தாக்கப்படுவது – இந்துமதம், இந்துமத நம்பிக்கையாளர்கள், முதலியன. இருப்பினும் எல்லாமே “செக்யூலரிஸம்” என்ற போர்வையில் நடத்தப்படுகிறது. காம்ரேடுகள், காம்ரேடை குற்றஞ்சாட்டுவது, தூஷிப்பது, படத்தை எரிப்பது முதலியன எந்த சகிப்புத்தன்மையில் வரும் என்று தெரியவில்லை.

N Ram accused of leaning towards China by Tibet - 2009

N Ram accused of leaning towards China by Tibet – 2009

சிகப்புப் பரிவாரங்கள் இந்தியாவில் வளர்ந்த விதம்: “கம்யூனிஸம்”, “பொதுவுடமை” என்றால், எல்லோரும் சமம், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும், எல்லோருக்கும் ஒரே சட்டம், அதனால் எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் உண்டு, அரசு தமக்கு வேண்டியவற்றையெல்லாம் பார்த்துக் கொள்ளும் என்று தான் பொதுவாக மக்கள் ஆரம்ப காலத்தில் புரிந்து கொண்டனர். ஆனால், கம்யூனிஸ்டுகள் சிபிஐ [CPI] மற்றும் சிபிஎம் [CPI (M)] என்று பிளவு பட்டுள்ளதை அறிந்து கொண்டனர்[10]. 1925ல் ஆரம்பித்த அக்கட்சி, இன்று அடையாளம் தெரியாமல் பலவித சித்தாந்தங்களுடன் உலாவி வருகிறது எனலாம்[11]. தங்களது பலவீனத்தை உணர்ந்த அவர்கள் இடதுசாரி ஒற்றுமை பேசு அளவுக்கு அவர்கள் பேரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்[12]. அவர்களது சித்தாந்த, ஊக்குவிக்கும் மற்றும் ஆட்டுவிக்கும் சக்திகள் சைனா மற்றும் ரஷ்ய நாடுகளில் உள்ளன என்பதனையும் அறிந்து கொண்டார்கள். மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் ஆட்சி செய்து கொண்டிருந்தாலும், கம்யூனிஸத் தலைவர்கள் முதலாளிகளாக, முதலாதித்துவக் கொள்கைகளுடன் தான் லாபங்களை ஈட்டி வந்தார்கள். தொழிற்சாலைகள், வியாபாரங்கள் முதலியவற்றில் ஈடுபட்டு சொத்துக்களைக் குவித்து வந்தார்கள்[13]. தமக்கு இல்லாதவற்றையெல்லாம் அவர்கள் / தொண்டர்கள், குறிப்பாக யூனியன் தலைவர்கள் போன்றவர்கள் வைத்திருந்ததைப் பார்க்க முடிந்தது. அதாவது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும், என்பது பொய் என்று அறிந்து கொண்டார்கள். இதனால், கம்யூனிஸ்ட் கட்சிகள் மேன்மேலும் உடைய ஆரம்பித்தன. புரட்சி, தீவிரவாதம், ஆயுதப் புரட்சி, தேர்தல் புறக்கணிப்பு என்று அவை கிராமங்களில், நகர்ப்புறங்களில் தங்களது சித்தாந்தங்களைப் பரப்பி, வளர ஆரம்பித்தனர். இருப்பினும் ஒருநிலையில் இவர்கள் சேர்ந்து செயல்பட்டு வந்தார்கள். இவ்வாறுதான் சிகப்பு பரிவாரங்கள் இந்தியாவில் பல பகுதிகளில் ஊன்றி வளர்ந்தார்கள்.

November 27, 2009, Mr. Zhang Yan, Chinese Ambassador to India met with Mr. N. Ram, Editor-in-Chief of the Hindu in Chennai

November 27, 2009, Mr. Zhang Yan, Chinese Ambassador to India met with Mr. N. Ram, Editor-in-Chief of the Hindu in Chennai

© வேதபிரகாஷ்

06-11-2015

[1] http://www.tamilwin.com/show-RUmtzBTYSVfx2B.html

[2] http://theekkathir.in/2015/11/06/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/

[3] A card-holding member of the Communist Party of India (Marxist) who had been to China and occupied-Tibet at least fifteen times in junkets mostly arranged by the Chinese Embassy in New Delhi, N Ram is also the mastermind behind ‘India-China Association of Journalists’, an embassy-sponsored organisation specialising in arranging pleasure trips for Indian journalists

http://www.friendsoftibet.org/save/

[4] http://archive.tehelka.com/story_main49.asp?filename=Ws210411JOURNALISM.asp

[5] http://in.china-embassy.org/eng/embassy_news/2009/t631131.htm

[6] http://www.firstpost.com/living/p-sainath-praveen-swami-quit-the-hindu-citing-unpleasant-working-conditions-1620013.html

[7]  டிசம்பர்.6, 1992ல் சர்ச்சைக்குரிய பாப்ரி கட்டிடம் இடிக்கப்பட்டப் பிறகு, அதிரடி பிரச்சார ரீதியில், இடதுசாரி அற்விஜீவிகளைக் கொண்டு, பிரம்மாண்டமான பிரச்சாரத்தை என். ராம், “தி இந்து” மூலம் மேற்கொண்டார். விமர்சன கடிதங்களைக் கூட போடாமல், எதேச்சதிகாரமாக செயல்பட்டார். Sri K. RAMANI, Ex-President, Vigil, Retd. Accounts Officer, P&T Telecom Circle, Chennai என்பவர் இதனை எடுத்துக் காட்டியுள்ளார். செக்யூலரிஸம் பற்றிய கருத்தரங்கத்தை சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்திய போது, மணி சங்கர் ஐயர், தான் பாகிஸ்தானில் பிறந்த பசு மாமிசம் உண்ணும் இந்து என்றுதான் அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்பொழுது, என். ராம் தனது மனைவி-குழந்தையுடன் வந்திருந்தார்.

[8] இந்த 25 ஆண்டுகளில் தி இந்துவின் விற்பனை குறைந்து விட்டது என்பதனை அது நடத்திய சர்வேயிலேயே புரிந்து கொண்டது. டெக்கான் ஹெரால்ட், டைம்ஸ் ஆப் இந்தியா போண்றோர் நுழைந்து விட்டனர். “தமிழ் இந்து” மூலம் சரிகட்டப் பார்க்கிறது.

[9] கம்யூனிஸ்டுகள், கம்யூனிஸ்டுகளைத் தாக்குவது பற்றி சமூகவளைத்தளங்களில் விமர்சனங்களை செய்து வருகின்றனர்.

[10] 1964ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இவ்வாறு இந்தி கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தி கம்யூனிஸ்ட் கட்சி [மார்க்சிஸ்ட்] என்று இரண்டாகப் பிரிந்தது.

[11] On December 26, 1925, a few ardent young patriots moved by the urge to free the motherland from colonial bondage, inspired by the Great October Socialist Revolution and fired with revolutionary zeal, braved imperialist persecution and came together in the city of Kanpur, to form the Communist Party of India with a view to fight for national independence and a future of socialism.

https://sites.google.com/a/communistparty.in/cpi/brief-history-of-cpi

[12] The split in the CPI has adversely affected the Indian Communist and Left Movement, as also its position in India’s political life. The CPI has been putting forward the need for the unification of the Communist Movement, in particular of the CPI and the CPIM on a principled basis. Differences persist between the two parties.

https://sites.google.com/a/communistparty.in/cpi/brief-history-of-cpi

[13]  மார்க்ஸ் குறிப்பிட்ட குடும்பம், சொத்து உதலிய சித்தாந்தங்கள் காற்றில் பறக்கவிடப்பட்டன.

மாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி சகிப்புத்தன்மையும் – குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (1)!

நவம்பர் 5, 2015

மாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி  சகிப்புத்தன்மையும்குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (1)!

M K Narayana, S C Chandrahasan, N Ram - 04-11-2015

M K Narayana, S C Chandrahasan, N Ram – 04-11-2015

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம்: சென்னை ஆழ்வார்பேட்டையில் இந்து மையம் [The Hindu Centre for Politics and Public Policy] சார்பில், “இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம்”, குறித்து 04-11-2015 அன்று நடைபெற்ற கருத்தரங்கில் எம்.கே. நாராயணன் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டார்[1]. இக்கருத்தரங்கில் இந்து பத்திரிகை குழுமத் தலைவர் என். ராம் மற்றும் எம்.கே. நாராயணன் பங்கேற்க, “மே 17 இயக்கம்” எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடெமியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், அனைவரது பைகளும் சோதிக்கப்பட்ட பிறகே அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர்[2]. அங்கும் தீவிரக் கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்[3]. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்தவர் எம்.கே. நாரயணன். ஐந்தாண்டு அந்த பதவியில் இருந்தார். இதையடுத்து மேற்கு வங்க ஆளுநராகவும் பதவி வகித்தார். வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. அவரிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து, கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்[4]. இது தவிர, எ.எஸ். சந்திரஹாஸன் – ஈழ அகதிகள் நிறுவனம் [S.C. Chandrahasan,  Organisation for Eelam Refugees Rehabilitation treasurer], பொருளாளர்; என். ராம் – கஸ்தூரி அன்டு சன்ஸ் லிமிடெட், சேர்மென் [N. Ram, the Chairman of Kasturi and Sons Limited]; ஆர். கே. ராதாகிருஷ்ணன், பிரன்ட்லைன், துணை ஆசிரியர் [R.K. Radhakrishnan, Senior Deputy Editor, Frontline] முதலியோர் கலந்து கொண்டனர்[5].

Police taking custody of a man who attacked M.K. Narayanan in Chennai on Wednesday. Photo- R. Ravindran

Police taking custody of a man who attacked M.K. Narayanan in Chennai on Wednesday. Photo- R. Ravindran

பிரபாகரன் செருப்பை வீசினாரா, செருப்பால் அடித்தாரா, சரமாரியாக அடித்தாரா, துவைத்து எடுத்தாரா?: தமிழ் ஊடகங்களின் செய்தி வெளியீடே அலாதியானது எனலாம். ஒரே நிகழ்ச்சியை எப்படியெல்லாம் வர்ணிக்கின்றது என்பதனை பாருங்கள்:

  1. இந்நிலையில், 2 மணி நேர நிகழ்ச்சி முடிந்தவுடன், புதுக்கோட்டை பிரபாகரன் என்று பதிவு செய்யப்பட்ட நபர், திடீரென தனது காலணியை எடுத்து எம்.கே. நாராயணனை அடித்தார்[6].
  2. “செருப்பால் அடித்ததாக, அதனை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்”, என்கிறது தமிழ்வின்[7]. உடனே அங்குள்ள போலீஸார் அவரைப் பிடித்து அரங்கில் இருந்து வெளியே அழைத்துச் சென்றனர். அப்போது, அந்த நபர், எம்.கே. நாராயணன் இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்ததாக கோஷம் எழுப்பினார். தமிழக சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு மதிக்கவில்லை என்றும் கோஷமிட்டார். தாக்கிய நபர்”எல்லாத்துக்கும் நீ தாண்டா காரணம்” என்று கூறியபடியே அடித்தார்.
  3. இதில் இரண்டு – மூன்று அடிகள் நாராயணன் மீது விழுந்ததாக கூறப்படுகின்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த முன்னாள் டிஜிபி அலெக்ஸாண்டர் உடனடியாக அந்த நபரைப் பிடித்துத் தள்ளினார்.
  4. சென்னையில் தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் எம்.கே. நாரயணனை தமிழ் அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன் என்ற இளைஞர் செருப்பால் சரமாரியாக தாக்குதல் நடத்தினார்[8] என்கிறது ஒன்.இந்தியா.தமிள்.
  5. “எம்.கே. நாராயணனை பலமுறை செருப்பால் அடித்து துவைத்தார்”, என்கிறது ஒன்.இந்தியா.தமிள், இன்னொரு இடத்தில்.
  6. தினமலர், “அவர் மீது செருப்பு வீச்சு நடத்தி தாக்குதலில் ஈடுபட்டார். செருப்பில் ஆணி பதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது”, என்கிறது[9].

இதனைத் தொடர்ந்து எம்.கே. நாராயணனை செருப்பால் அடித்த புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த பிரபாகரன் என்ற அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அந்த கருத்தரங்கம் நடைபெற்ற பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

N Ram opposed - reason explained - 03-11-2015

N Ram opposed – reason explained – 03-11-2015

செருப்படிதாக்குதல் ஏன்?: பிரபாகரன் செருப்பை வீசினாரா, செருப்பால் அடித்தாரா, சரமாரியாக அடித்தாரா, துவைத்து எடுத்தாரா, என்று ஆராய்ச்சி செய்கின்ற நிலைக்கு எடுத்துச் சென்றுள்ள ஊடகங்கள், செருப்பால் ஏனடித்தார் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. எம்.கே. நாராயணனை செருப்பால் சரமாரியாக தாக்கி கைது செய்யப்பட்ட பிரபாகரன் செய்தியாளர்களிடம், நான் எந்த இயக்கத்தையும் சார்ந்தவன் இல்லை; இலங்கைத் தமிழர் பிரச்சனையில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை தவறாக வழிநடத்தியவர் எம்.கே.நாராயணன். அதனால் தான் அவரைத் தாக்கினேன் என்றார்[10].  இருப்பினும், கைதானவர் “மே 17 இயக்கத்தை” சேர்ந்தவர் என்று தெரிகிறது, என்கிறது மாலைமலர்[11]. அவ்வாறு சந்தேகிக்கப்படுகின்றது என்கிறது தினமலர்[12].  அதென்ன, அவ்வளவு பெரிய இயக்கமா, இல்லை, “ராம்” போன்ற கம்யூனிஸ சித்தாந்திகள் நடத்தும் கருத்தரங்கத்தையே பாதிக்கும் அளவில் உள்ல பலம் கொண்ட அமைப்பா? நல்லவேளை, அவருக்கு / செருப்பால் அடித்தவருக்கு சகிப்புத்தன்மை ஏனில்லை என்றெல்லாம் யாரும் கேட்கவில்லை! சுதேந்திர குல்கர்னியின் மீது மை ஊற்றியதற்கு கலாட்டா செய்தி, உலக செய்தியாக்கிய போது, இவ்விசயம் உள்ளூர் விசயமாக முடக்கப்பட்டுள்ளது.

How beef-eating politics and Sri Lankan issue mixed-04-11-2015

How beef-eating politics and Sri Lankan issue mixed-04-11-2015

விளிம்பு நிலை இயக்கங்களை சேர்ந்தவர்கள்தமிழகத்தில் இருக்கிறார்களா?: இச்சம்பவத்திற்கு பின்னர், நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த என். ராம், இது முட்டாள்தனமான, மக்கள் விரோத கும்பல் நடத்திய அறிவற்ற செயல் என்று குறிப்பிட்டார். மேலும், மே 17 இயக்கத்திடம் இருந்து அச்சுறுத்தல் வந்தபிறகு இந்து மையம், போலீஸாருக்கு தகவல் அளித்ததாகவும், இதையடுத்து காவல்துறை தரப்பில் சிறந்த பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் என். ராம் தெரிவித்தார். மேலும், இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்ததாகவும், இதில் பங்கேற்ற பல வல்லுநர்கள் மற்றம் இலங்கை தமிழ் அகதிகள் கருத்துப் பரிமாற்றம் செய்ததாகவும், இதுபோன்ற நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.  இந்தத் தாக்குதலைக் கண்டித்த இந்துக் குழுமத்தின் தலைவர் என்.ராம், இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடுபவர்களுக்கு எந்த விதமான ஆதரவும் தமிழ் நாட்டில் இல்லை, அவர்கள் விளிம்பு நிலை இயக்கங்களை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார். இவர்கள் முழுக்க முழுக்க இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு எதிரானவர்கள் என்று ராம் குறிப்பிட்டார்[13]. முன்னதாக, எம்.கே. நாராயணின் வருகையை கண்டித்து மே 17 இயக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில், அவரது உருவப்படம் தீவைத்து கொளுத்தப்பட்டது.

mk_naraayanan_nram_protest.Nov.2015

mk_naraayanan_nram_protest.Nov.2015

இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு எதிரானவர்கள் யார், ஆதரவாளர்கள் யார்?: என்.ராம், இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடுபவர்களுக்கு எந்த விதமான ஆதரவும் தமிழ் நாட்டில் இல்லை, அவர்கள் விளிம்பு நிலை இயக்கங்களை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார் என்றால், இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு எதிரானவர்கள் யார், ஆதரவாளர்கள் யார்? என்ற கேள்வி எழுகின்றது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் அல்லது சித்தாந்த ரீதியில் செயல்படும் பலரின் நட்பை, மதிப்பை, ஆதரவைப் பெற வேண்டுமானால், இலங்கைப் பிரச்சினையை யாராக இருந்தாலும் ஆதரித்தாக வேண்டும், இல்லையெனில் அவன் தமிழ் விரோதி, தமிழ் துரோகி, தமிழின விரோதி என்றெல்லாம் வசைப்பாடப்படுவர். அதனால், எல்லோருமே, ஒரே பாட்டைத்தான் பாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பிரபாகரன் கொலையுண்டதை யாரும் தடுக்கவில்லை, தடுக்க முடியவில்லை. ஆனால், இன்றும், படை தயாராக இருக்கிறது, அனுப்புவோம் என்றெல்லாம் மேடைகளில் பேசி வருகின்றனர். எந்தப் படையை, எப்படி அனுப்புவர் என்று தெரியவில்லை. தமிழுக்காக உயிரை விடுவேன் என்றவர்கள், தமிழீழம் அமைத்தேத் தீருவேன் என்றவர்களும் வேறு பாட்டைப் பாட ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில், மாட்டுக்கறிப் பிரச்சினையை லாவகமாக, இச்சித்தாந்திகள், இப்பிரச்சினையுள் நுழைத்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

05-11-2015

[1] தமிழ்வின், எம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்!, புதன்கிழமை, 04 நவம்பர் 2015, 05:54.02 PM GMT .

[2]  பிபிசி.தமிழ், எம்.கே.நாராயணன் சென்னையில் தாக்கப்பட்டார்!, புதன்கிழமை, 04 நவம்பர் 2015, 05:54.02 PM GMT .

[3] நியூஸ்.7, சென்னையில் எம்.கே.நாராயணன் மீது தாக்குதல், Updated: Wednesday, November 4, 2015.

[4]  மாலைமலர், காங்கிரஸ் ஆட்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணன் மீது செருப்பு வீசி தாக்குதல், பதிவு செய்த நாள்: புதன்கிழமை, நவம்பர் 04, 11:09 PM IST.

[5] http://www.thehindu.com/news/national/tamil-nadu/mk-narayanan-for-across-the-border-citizenship-for-tamil-refugees/article7842860.ece

[6] http://ns7.tv/ta/man-attacks-former-nsa-m-k-narayanan-chappal-chennai.html

[7]  http://www.tamilwin.com/show-RUmtzBTYSVfx2G.html

[8] ஒன்.இந்தியா.தமிள், சென்னையில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாரயணனுக்கு சரமாரி செருப்படிபிரபாகரன் கைது, Posted by: Karthikeyan, Updated: Wednesday, November 4, 2015, 23:13 [IST].

[9] தினமலர், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது செருப்பு வீச்சு, நவம்பர்.5, 2015, 00.37.

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/former-nsa-m-k-narayanan-attacked-chennai-239225.html

[11] http://www.maalaimalar.com/2015/11/04230940/Man-attacks-former-national-se.html

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1380019

[13] http://www.bbc.com/tamil/india/2015/11/151104_mknarayanan