Posts Tagged ‘முஹமது நபி’

பழ.கருப்பையாவும், ஜோஸப்பும், தீபக் பென்தாலும்

ஜூலை 7, 2010

பழ. கருப்பையா கருணாநிதியை விமர்சனம் செய்து கட்டுரைகள் எழுதியதால் தாக்கப்பட்டார்.

ஜோஸப்  ஒரு உருவகமாக உபயோகப் படுத்திய பத்தியினால் தாக்கப்பட்டார்.

தீபக் பென்தால் டில்லி பகலைக்கழகத்தின் துணைவேந்தர்.

Deepak-pental-VC-NewDelhi

Deepak-pental-VC-NewDelhi

ராமாயணத்தை பழித்த பாடம்: துணைவேந்தருக்கு நோட்டீஸ்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=33786

புதுடில்லி:டில்லி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பி.ஏ., வரலாறு இரண்டாம் ஆண்டு பாடத்திட்டத்தில், ராமாயணத்தைப் பற்றி, உண்மைக்கு புறம்பான வகையிலும், ராமரின் புகழுக்கு களங்கத்தை விளைவிக்கும் வகையிலும் இடம் பெற்றுள்ள தகவல் குறித்து, டில்லி பல்கலைக் கழகத்திடம் சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டுள்ளது. அத்துடன், பல்கலைக் கழக துணை வேந்தருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. டில்லி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பி.ஏ., வரலாறு இரண்டாம் ஆண்டு பாடத்திட்டத்தில் “முன்னூறு ராமாயணங்கள், ஐந்து உதாரணங்கள் மற்றும் மூன்று விதமான கருத்துக்கள் என்ற தலைப்பில், ராமாயணம் பற்றிய பாடம் இடம் பெற்றுள்ளது. இதை, மறைந்த பேராசிரியர் ராமானுஜம் என்பவர் தயாரித்திருந்தார்.

இந்த பாடம், உண்மைக்கு புறம்பான வகையிலும், கடவுள் ராமரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதத்திலும் உள்ளது. இது போன்ற சர்ச்சைக்குரிய பாடத்திட்டத்தை, நீக்க வேண்டும் என, டில்லியை சேர்ந்த தீனா நாத்பத்ரா என்பவர், டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை, டில்லி ஐ கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில், நாத், அப்பீல் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “ராமாயணத்தை பற்றிய பாடத்தில், உண்மைக்கு புறம்பான வகையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் குறித்து, உரிய ஆதாரங்களுடன், பல்கலைக் கழக துணைவேந்தரிடம் தெரிவித்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என, கூறியிருந்தார்.

இதை கடந்த செப்., 18, 2009ல் சுப்ரீம் கோர்ட் விசாரித்து, மனுதாரர் நேரடியாக டில்லி பல்கலை துணைவேந்தரிடம் புகார் தெரிவிக்க அனுமதித்தது. ஆனால், டில்லி பல்கலை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் தீனாநாத். இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி சதாசிவம் தலைமையில் விசாரணைக்கு வந்தது. ராமாயணம் பாடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் குறித்து, டில்லி பல்கலைக் கழகம் உரிய முறையில் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறிய நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக, நடவடிக்கை எடுக்கத் தவறிய, டில்லி பல்கலைக்கழக துணைவேந்தருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

கையை சிதைத்து தலிபான் பாணி தண்டனை

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=33772

கொச்சி : கேரளாவில் கல்லூரி பேராசிரியருக்கு தலிபான் பாணி தண்டனை தந்தவர்கள் தொடர்பாக ஒருவரை விசாரித்து, அவர் வீட்டில் சோதனை நடத்திய போலீசாரை மிரட்டிய சம்பவம் நடந்தது. மேலும், இம்மாதிரி சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்பட்டதை அகில இந்திய அளவில் இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் செய்திருக்கின்றன.

கேரள மாநிலம் தொடுபுழா அடுத்த ஆனிக்காடு ஹாஸ்டல் சந்திப்பு அருகே வசிப்பவர் டி.ஜெ.ஜோசப். இவர், தொடுபுழா நியூமேன் கல்லூரியில் மலையாள மொழித் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.இவர், குறிப்பிட்ட மதத்தவர் புண்படும்படியான கேள்வித்தாள் தயாரித்தார் என்பது புகார். ஆனால் இது விவகாரம் ஆனதும் ஜோசபை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

ஜோசப் செயலில் ஆத்திரமடைந்த கும்பல், பழிவாங்க காத்திருந்தது. கடந்த 4ம் தேதி அதிகாலை 5 மணிக்கு பேராசிரியரும், அவரது தாய் ஏலிக்குட்டியும், சகோதரி கன்னியாஸ்திரியுமான மேரி ஸ்டெல்லா ஆகியோரும் சர்ச்சில் பிரார்த்தனைக்கு காரில் சென்றனர்.அங்கிருந்து திரும்பி வரும் வழியில் அவரது வீட்டுக்கு அருகே மாருதி வேனில் வந்த ஒரு கும்பல் வழிமறித்தது. பின், டிரைவர் இருக்கையில் இருந்த பேராசிரியரை கீழே இறக்கி அவரது வலது கையின் முன்பகுதியை பயங்கரமாக கோடரி போன்ற கருவியால் சிதைத்து தப்பினர்.அதை பார்த்து அலறிய அவரது தாயையும், சகோதரியையும் அக்கும்பல் கீழே தள்ளி மிரட்டியது. பின், அவர்கள் வந்த வேனிலேயே ஏறி தப்பிச் சென்றது.

16 மணி நேர சிகிச்சை: கொச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பேராசிரியருக்கு அங்கு 16 மணி நேரம் தீவிர அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சையில் மைக்ரோ வாஸ்குலர் அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் ஆர்.ஜெயக்குமார், முதன்மை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை டாக்டர்கள் ஆசா சிரியாக், செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய குழு பங்கேற்றது. அறுவை சிகிச்சை 4ம் தேதி காலை 10 மணிக்கு துவங்கி மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு முடிந்தது. சிகிச்சை 16 மணி நேரம் நீடித்தது. அவரது கையில் வெட்டப்பட்ட பகுதியில் சேதமடைந்த சதைக்கு பதிலாக அவரது தொடை பகுதியில் இருந்து சதை எடுக்கப்பட்டு பொருத்தப்பட்டது. ஜோசப் நிலைமை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜோசப் கையை சிதைத்தாக ஜாபர் மற்றும் அஷ்ராபை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்அதையடுத்து, போலீசார் சில வீடுகளில் சோதனை நடத்தினர். அந்த வீடுகளில் ஜோசப்பை தாக்கியதாக போலீசாரால் சந்தேகிக்கப்படும் நபரான ஒரு மதவாத இயக்கத்தின் ஆதரவாளரான ரஷீத் (30) என்பவரது வீடும் ஒன்று. சம்பவத்தன்று, ஜோசப்பை தாக்குவதற்காக, குற்றவாளிகள் வந்த வேனை வாங்கிக் கொடுத்தவராகக் கருதப்படும் கே.கே.அலி என்பவரின் நண்பர் தான் ரஷீத். இதனால் ரஷீத், இச்சம்பவம் குறித்து விசாரித்து வரும் புலனாய்வுக் குழுவிலுள்ள சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பேமஸ் வர்கீஸ் என்பவரை மிரட்டியதாக, போலீசார் தெரிவித்துள்ளனர். ரஷீத் மீது, மிரட்டல் குற்றம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தவிரவும் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட பலருடைய மொபைல் போனில் வந்த தகவல்கள் குறித்தும் விசாரிக்கப்படுவதாக கூறப்பட்டது.

கண்டனம்: இதற்கிடையில், அகில இந்திய அளவில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அறிக்கை விவரமாவது:சம்பந்தப்பட்ட பேராசிரியர் விஷயத்தில் சட்டம் தன் கடமையைச் செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், இஸ்லாம் மதத்தின் அடிப்படை தத்துவமான மன்னிப்பு வழங்கும் மாண்பிற்கு எதிரானது.தகுதியான அதிகாரிகள் இருக்கும் போது ஒருவர் சட்டத்தைக் கையில் எடுப்பதை இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிறது. அவருக்கு ரத்தம் வழங்கிய ஜமாத் -இ- இஸ்லாமி இந்த் அமைப்பின் இளைஞர் பிரிவையும் பிற தொண்டர்களையும் பாராட்டுகிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

“மடையன் என்று சொல்லவில்லை’ :திருவனந்தபுரம்:”கல்லூரி ஆசிரியர் தயாரித்த கேள்வி தான் மடத்தனமானது என்று சொன்னேனே தவிர, ஆசிரியரை மடையன் என்று சொல்லவில்லை’ என, கேரள கல்வி அமைச்சர் எம்.ஏ.பேபி தெரிவித்தார். நேற்று காலை சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., கே.எம்.மானி பேசுகையில், “ஆசிரியரை மடையன் என்று அமைச்சர் பேபி பேசியது முற்றிலும் தவறானது. “இது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல பயன்படுமே தவிர வேறு எதற்கும் பயன்படாது’ என்றார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பேபி, “நான் அவ்வாறு பேசவில்லை. ஆசிரியரை மடையன் என்று பேசவே இல்லை. அவர் தயாரித்த கேள்வி மடத்தனமானது என்று மட்டும் தான் பேசினேன்’ என்று மறுத்துள்ளார்.