மாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி சகிப்புத்தன்மையும் – குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (2)!

மாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி  சகிப்புத்தன்மையும்குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (2)!

N Ram opposed - for food untouchability - 04-11-2015

N Ram opposed – for food untouchability – 04-11-2015

தமிழினப் படுகொலையில் பங்கெடுத்த எம்.கே.நாராயணன், என்.ராமை கைது செய்யக் கோரி முற்றுகை போராட்டம்![1]: தமிள்ஸ்-நௌ என்ற தளத்தின் படி, இவ்விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன – ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை மறைத்து விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்த என்.ராமும், இனப்படுகொலையை அரங்கேற்றிய எம்.கே நாராயணனும் இணைந்து சென்னையில் மியூசிக் அகாடமியில் நடத்திய ”ஈழ அகதிகள் குறித்து கருத்தரங்கத்தினை”எதிர்த்து இன்று மாலை [03-11-2015] முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தது. 2009 இனப்படுகொலைப் போரில் இந்தியாவின் பங்களிப்பினை இலங்கைக்கு வழங்கிய பணியை முன்னின்று செய்து முடித்தவர் எம்.கே நாராயணன். ராஜீவ் கொலைவழக்கில் சந்தேகத்திற்குறிய நபர் என்று வர்மா கமிட்டி , ஜெயின் கமிட்டி அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர் இவர். தமிழின விரோத நிலைப்பாடு கொண்ட இந்த முன்னாள் உளவுத்துறை அதிகாரி, 2009இல் இந்தியாவின் பாதுகாப்பு செயலாளராக இருந்து இலங்கைக்கு முழு உதவியையும் செய்தவர். ஈழத்தில் 2009 யுத்தம் முடிவுற்றவுடன் ’ஈழத்தமிழர்களை’ சித்தரவதை முள்வேலி முகாமில் வைத்திருந்ததை கண்டு ‘மிகச்சிறந்த அனுபவத்தினை கண்டுணர்ந்தேன்’ என என்.ராம் தி இந்துவில் எழுதிய கட்டுரை தமிழின செயல்பாட்டாளர்களை கொதிப்படைய வைத்தது. தினம் தினம் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட அந்த முகாமை சிலாகித்து கட்டுரை எழுதியவர் தி இந்துவின் ஆசிரியர் என்.ராம். மேலும், பாலச்சந்திரன் படுகொலைப் படத்தினை தனது இதழில் வெளியிட்டு, பாலச்சந்திரன் குறித்தான பொய்ச் செய்திகளையும், பாலச்சந்திரனும் குழந்தைப் போராளி போன்றே இருப்பவன் என்றும், பிற குழந்தைகள் உடுத்த உடையின்றி வரும் பொழுது பள்ளிக்கு ஏ.சி கார்களில் சென்றவன் என்றும் பொய்க்கட்டுரைகளை எழுதியது தி இந்து. இதன் மூளையாகச் செயல்படுபவர் என்.ராம். இவர்கள் இணைந்து நடத்தும் ஈழ அகதிகள் குறித்து கருத்தரங்கத்தினை எதிர்க்கும் வகையில் இன்று மாலை இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

N Ram opposed - participating parties - 04-11-2015

N Ram opposed – participating parties – 04-11-2015

போராட்டத்தின் போது எம்.கே.நாராயணன், என்.ராமின் உருவப்படங்களை எரித்தும், செருப்பால் அடித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இப்போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடியல் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, எஸ்.டி.பி.ஐ, தமிழக மக்கள் முன்னனி, தமிழ்த்தேச குடியரசு இயக்கம்,  பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் தமிழக மக்கள் ஜனநாயக முன்னனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முற்றுகையில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Beef politics enters The Hindu.1

Beef politics enters The Hindu.1

 

பார்ப்பன வெறியன் இந்து ராம்”, “மோடியின் கைகூலிஎன்றெல்லாம் கத்திய காம்ரேடுகள்: தமிழகத்திலிருந்து வெளியாகும் தி ஹிந்து பத்திரிகையினையும் என். ராமையும் கண்டித்து, ஹிந்து பத்திரிகை அலுவலகத்தினை முற்றுகையிட்டு “மே பதினெழு இயக்கம்” போராட்டம் நடத்தியது[2]. இன்று இடம்பெற்ற இப்போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன் உள்ளிட்ட தோழர்கள், தமிழர் விடுதலைக் கழகத்தின் தோழர் சுந்தரமூர்த்தி, தமிழர் விடியல் கட்சியின் தோழர் நவீன் ஆகியோரும், தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.  மாட்டிறைச்சியை ஆதரிப்பதாகவும், இந்துத்துவத்தினை எதிர்ப்பதாகவும் தன்னை முற்போக்களராக காட்டிக்கொள்ளும் தி இந்து நாளிதழ், தனது அலுவலத்தில் மாட்டிறைச்சி மட்டுமல்ல, எவ்வித அசைவ உணவு உட்கொள்ளக் கூடாது என்று சட்டத்தினை வைத்திருக்கிறது[3] என்று சிலர் இந்து அலுவலகத்திற்கு அருகே கத்திக்கொண்டிருந்தனர்.

  • “அசைவ உணவை தடைசெய்த இந்து ராமைக் கண்டிக்கின்றோம்”,
  • “பார்ப்பன வெறியன் இந்து ராமைக் கண்டிக்கின்றோம்”,
  • ஜாதி வெறியைத் தூக்கிப் பிடிக்காதே…….,
  • “உணவு தீண்டாமையை செயல்படுத்தும் இந்து ராமைக் கண்டிக்கின்றோம்”,
  •  “பார்ப்பன வெறியன் இந்து ராம்”,
  • “பத்திரிக்கைத் தொழில் நடத்த தகுதியில்லை….”,
  • “பத்திரிக்கைத் தொழிலிலிருந்து வெளியேறு.. ”
  • “மோடியின் கைகூலி” என்றெல்லாம் கத்தியது வேடிக்கையாக இருந்தது.

காம்ரேடை, திட்டும் இந்த காம்ரேடுகள் எப்படி உருவானார்கள் என்று தெரியவில்லை.

Beef politics enters The Hindu.2

Beef politics enters The Hindu.2

தனது முற்போக்கு முகமூடியை வைத்து ஊடகத்தின் வணிகத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் பார்ப்பனியத் தன்மை: தமிள்ஸ்-நௌ என்ற தளத்தின் படி, இவ்விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன – ‘மாட்டிறைச்சியை ஆதரிப்பதாகவும், இந்துத்துவத்தினை எதிர்ப்பதாகவும் தன்னை முற்போக்களராக காட்டிக்கொள்ளும் தி இந்து நாளிதழ், தனது அலுவலகத்தில் மாட்டிறைச்சி மட்டுமல்ல, எவ்வித அசைவ உணவு உட்கொள்ளக் கூடாது என்று சட்டத்தினை வைத்திருக்கிறது. ‘பெரும்பான்மையானவர்கள் சைவ உணவு உண்பவர்களாக இருப்பதால் , அசைவ உணவினை அனுமதிப்பதில்லை’ என்றும் சொல்லி இருக்கிறது[4]. பெரும்பான்மையானவர்கள் சைவ உணவு உண்பவர்களாக இருப்பதால், அசைவ உணவினை அனுமதிப்பதில்லை என்றும் சொல்லி இருக்கிறது. மேலும் இந்துத்துவாவினை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் இந்து நாளிதழ் கொலைக்குற்றச்சாட்டிற்கு உள்ளான சங்கராச்சாரியரை பாதுகாப்பது முதல், மோடி அரசிற்கு எதிர் நிலைப்பாடு கொண்ட பத்திரிகையாளர்களை பதவி நீக்கம் செய்வது வரை, தனது இந்துத்துவ விசுவாசத்தினை காட்டியே வருகிறது. இவ்வாறு தனது முற்போக்கு முகமூடியை வைத்துக்கொண்டு அரசியல் செயல்பாட்டாளர்களை தனது பிடிக்குள் கொண்டு வருவதும், தனது ஊடகத்தின் வணிகத்திற்கு பயன்படுத்திக்கொள்வதுமாக இருக்கும் பார்ப்பனியத் தன்மையை அம்பலப்படுத்துவது அவசியம்.

Beef politics enters The Hindu.3

Beef politics enters The Hindu.3

இந்த அடிப்படையில் தி இந்துவின் இரட்டைத் தன்மையை அம்பலப்படுத்தும் விதமாகவும், அசைவ உணவினை உட்கொள்ளும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பணியாளர்கள் மீதான தி ஹிந்து நிர்வாகத்தின் சாதிவெறியை அம்பலப்படுத்தும் விதமாகவும் மே பதினேழு இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடுதலைக் கழகம்,  பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் மற்றும் தமிழர் விடியல் கட்சி தோழர்களால் இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். முற்றுகையில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை மறைத்து விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்த என்.ராமும், இனப்படுகொலையை அரங்கேற்றிய எம்.கே நாராயணனும், ”ஈழ அகதிகள் குறித்து கருத்தரங்கத்தினை” நாளை மாலை சென்னையில் மியூசிக் அகாடமியில் நடத்துகிறார்கள். இந்த கருத்தரங்கத்தினை எதிர்த்து நாளை மியூசிக் அகாடமி முன்பு போராட்டம் நடத்தப் போவதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்[5].

Beef politics enters The Hindu.4

Beef politics enters The Hindu.4

மாட்டிறைச்சி, மோடி எதிர்ப்பு, இந்துத்துவ எதிப்பு என்று மற்ற கலவைகளும், மசாலாக்களும் இதனுடம் சேர்வது ஏன் என்று அவர்கள் விளக்குவதாக இல்லை: 2009 யுத்தம் முடிவுற்றவுடன் “ஈழத்தமிழர்களை சித்திரவதை முஸ்வேலி முகாமில் வைத்திருந்ததை கண்டு மிகச்சிறந்த அனுபவத்தினை கண்டுணர்ந்தேன்”, என்று ராம் இந்துவில் எழுதிய கட்டுரை தமிழின செயல்பாட்டார்களை கொடிப்படைய வைத்தது….என்றெல்லாம் “பதிவு” என்ற தளம் குறிப்பிடுகின்றது[6]. பாலச்சந்தன் புகைப்படத்தை வெளியிட்டு, குழந்தை போராளி என்றெல்லாம் பொய் செய்திகளை வெளியிட்ட ராம் என்றும் சாடியுள்ளது, இந்தியாவை எதிர்க்கிறேன் என்பவர்கள், ஈழத்தை நேசிக்கிறேன் என்பவர்கள், தமிழனை கொச்சைப்படுத்துபவனை வெல்வேன் என்று மார்தட்டுகிற அனைத்து தோழர்களும் கைகோர்ப்போம், – கட்சி, சாதி, மத இல்லை கடந்து ஒன்று கூடுவோம்”, என்கின்றது[7]. ஈழத்தமிழர்களின் நலன்களுக்காகப் போராடுகிறோம் என்பவர்களிடம், ஏன் இத்தகைய வேறுபாடுள்ளது என்பது புதிராக உள்ளது. கம்யூனிஸ்ட்டுகள், கம்யூனிஸ்ட்டுகளை எதிர்ப்பதும்; திராவிட சித்தாந்திகள், திராவிட சித்தாந்திகளை குறை சொல்வதும்; பெரியார் பெயரில் இயக்கங்கள் நடத்துபவர்கள் அடித்துக் கொள்வதும்; தமிழ்-தமிழ் என்பவர்களும் மாறுபட்டிருப்பதும் வேடிக்கையான விசயம் தான். மாட்டிறைச்சி, மோடி எதிர்ப்பு, இந்துத்துவ எதிப்பு என்று மற்ற கலவைகளும், மசாலாக்களும் இதனுடன் சேர்வது ஏன் என்று அவர்கள் விளக்குவதாக இல்லை.

Beef politics enters The Hindu.5

Beef politics enters The Hindu.5

மாட்டிறைச்சி அரசியல் இந்துவில் நுழைந்து விட்டது!

Beef politics enters The Hindu.6

Beef politics enters The Hindu.6

காம்ரேடுகள் மோதிக் கொள்ளும் வினோதம்.

Beef politics enters The Hindu.7

Beef politics enters The Hindu.7

© வேதபிரகாஷ்

05-11-2015

[1] http://tamilsnow.com/?p=64166

[2] தமிழ்.வின், தி ஹிந்து பத்திரிகை அலுவலகம் முற்றுகை!, புதன்கிழமை, 04 நவம்பர் 2015, 04:27.33 PM GMT.

[3] http://www.tamilwin.com/show-RUmtzBTYSVfx2B.html

[4] http://tamilsnow.com/?p=63949

[5] http://tamilsnow.com/?p=63949

[6] பதிவு, எம்.கே.நாராயணன், தி இந்துவின் என். ராமிற்கு எதிராகப் போரட்டம், ஆர்த்தி, சென்னை, புதன், நவம்பர் 4, 2015: 02.52,தமிழீழம்.

[7] http://www.pathivu.com/?p=48964

பின்னூட்டமொன்றை இடுக