மலேசிய சீக்கிய கோயில் மீது கற்கள் எறியப்பட்டன!

செந்துல் சீக்கிய கோயில் மீது கற்கள் எறியப்பட்டன

January 13, 2010, 6:34 pm மலேசியாஇன்று பிரிவு: செய்தி

http://www.malaysiaindru.com/?p=30864

மலேசியாவில் வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்கள் இன்னொரு தாக்குதலுடன் தொடர்கின்றன. இம்முறை தாக்குதல் செந்துலில் உள்ள ஒரு சீக்கிய கோயில் மீது கற்களை வீசி தாக்கப்பட்டது. அத்தாக்குதலால் அக்கோயிலின் பிரதான கதவின் கண்ணாடி நொருங்கியது. நூறு ஆண்டுகால பழமை வாய்ந்த குர்துவாரா சாகிப் செந்துல் கோயிலின் உடைபட்ட ஜன்னல் கண்ணாடிகளுக்கு அருகில் கோல்ப் பந்து அளவிலான 20 கற்களை போலீசார் நேற்று மாலையில் கண்டனர்.

நேற்று மாலை 6.45 க்கு கோயில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் கண்ணாடி உடையும் சத்தத்தைக் கேட்டனர். அவர்களில் ஒருவர் போலீஸ் அதிகாரி. அத்தாக்குதல் குறித்து அவர் போலீசுக்குத் தெரிவித்தார். கோயில் குழுத் தலைவர் குர்தயால் சிங், 57, தாக்குதல் நடத்தியவர்களை யாரும் அடையாளம் காணவில்லை என்றார். சீக்கிய சமய நூலில் சர்ச்சைக்குரிய “அல்லாஹ்” என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார். கோயில் அதிகாரிகள் பக்தர்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

ஆட்சிக்குழு உறுப்பினர் வருகை
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் எலிசபெத் வோங் மற்றும் செலயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் இன்று காலை மணி 10.30 க்கு குர்துவாராவுக்கு வருகை தந்தனர். டிஎபியின் தலைவர் கர்பால் சிங் மற்றும் அவரது மகன் கோபிந்த் சிங் டியோ இன்று பின்னேரத்தில் வருகை புரிவர் என்று தெரிவிக்கப்பட்டது.

சீக்கிய புனித புத்தகத்தில் “அல்லாஹ்”: ஹெரால்ட் வார இதழ் வழக்கு விசாரணையில் மலேசிய குர்துவாரா மன்றத்தின் தலைவர் ஜகிர் சிங் தலையீடு செய்வதற்கு மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், “அல்லாஹ்” என்ற சொல் சீக்கிய புனித நூலான ஸ்ரீ குரு கிராந்த் சாகிப் ஜியில் இருக்கிறது என்று அவர் கூறியிருந்தார்.  சீக்கிய சமய நூல் கடவுளால் அருளப்பட்டது. அதிலிருந்து ஒரு வார்த்தையைக்கூட மாற்றவோ, திருத்தவோ அல்லது வேறொன்றை சேர்க்கவோ முடியாது என்று ஜகிர் கூறினார். சீக்கிய சமூகத்தைப் பிரதிநிதிக்கும் அம்மன்றம் ஹெரால்ட் வழக்கில் தலையீடு செய்வதற்கு மனு செய்த பல அமைப்புகளில் ஒன்றாகும்.  தங்களுக்கும் அந்த வழக்கில் ஈடுபாடு இருப்பதாகக் கூறி பல இஸ்லாமிய அமைப்புகளும் தலையீடு செய்ய மனு செய்திருந்தன. நீதிமன்றம் அம்மனுக்களை நிராகரித்து விட்டது.

விமர்சனம்:

1. இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தின் படி (சரத்து.25) ஜைன, பௌத்த, சீக்கியப் பிரிவுகள் “இந்துக்கள்” என்றே கருதப் படுகின்றது.

2. ஆனால், மலேசியாவின் நிலை என்ன?

3. “கற்கல்” என்பதை “கற்கள்” என்று மாற்றியிருக்கிறேன்!


தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா?

January 13, 2010, 7:30 pm மலேசியாஇன்று பிரிவு: செய்தி

http://www.malaysiaindru.com/?p=30866#more-30866

தைப்பூசத்திற்கு முதல் நாள் ஜனவரி 29ம் நாள் பெட்ரோல் குண்டுகளைப் பயன்படுத்தி பத்துமலையில் உள்ள இந்துக் கோவிலைத் தாக்குவதற்கான உத்தேசத் திட்டம் என்று கருதப்படும் திட்டத்தை புத்ரா மஇகாவின் “மனோதத்துவ-போர்” பிரிவு உறுப்பினர் ஒருவர் எதிர்பாராத விதமாகக் கண்டு பிடித்துள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்ரா மஇகா சிகாம்புட் தொகுதி தலைவர் எஸ் எஸ் யோகேந்திரன் ஷாருல் மைஸாம் என்பவருக்கு எதிராக இன்று போலீஸில் புகார் செய்திருக்கிறார்.

பேஸ் புக் பக்கம் ஒன்றில் அபிஹ் மொஹ்சின் என்ற பயனாளியின் பெயரின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில் அந்த புகார் செய்யப்பட்டுள்ளது. அதில் “29 ni aq naik bt caves siallll” (29ம் தேதி நான் அந்த மோசமான பத்துகேவ்ஸுக்கு செல்ல விரும்புகிறேன்).

“கொடுக்கப்படும் பணம் சாதகமாக இருந்தால் தாம் பத்து கேவ்ஸில் குழப்பத்தை ஏற்படுத்த தயார் என்று ஷாருல் அதில் கோடி காட்டியுள்ளார். “வாசகம்: Ke nak aku baling bom petrol kat sana plak?  harga boleh runding என்பதாகும். (அங்கு நான் பெட்ரோல் குண்டுகளை வீச வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்களா ? அதற்கான விலையை பேச்சுக்களின் மூலம் முடிவு செய்யலாம்)

அந்த பேஸ் புக் பக்கம் குறித்து தமக்கு நேற்று தெரிவிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் அந்தப் பக்கத்தின் நிழல்படத்தை நான் புத்ரா மஇகா இணையத் தளத்தில் சேர்த்ததாகவும் யோகேந்திரன் கூறினார்.

“வழிபாட்டு மையங்கள் மீது அண்மையக் காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களை கருத்தில் கொண்டு நாங்கள் அந்த அறிக்கையைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை”, என்று கூறிய அவர், இப்போது அந்தக் கருத்துக்கள் பேஸ் புக்கிலிருந்து அகற்றப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்ற பின்னர் நேற்று சீக்கியக் கோவில் ஒன்று தாக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க வார சஞ்சிகையான தி ஹெரால்ட் தனது பாஹாசா மலேசியா பதிப்பில் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு அனுமதித்த பின்னர் தாக்குதல்கள் தொடங்கின.

‘எங்களை எள்ளி நகையாட வேண்டாம்’

கருத்துக்களைப் பெறுவதற்கு அபிஹ் மொஹ்சின், ஷாருல் ஆகியோருடன் தொடர்பு கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றி பெறவில்லை.

மலேசிய சமுதாயத்தின் பல இனத் தன்மையைக் கருத்தில் கொண்டு, இணையத் தளங்களில் கருத்துக்களை சேர்ப்பவர்கள் தாங்கள் எழுதுகின்ற விஷயங்களுக்கு பொறுப்பேற்கும்படி செய்யப்பட வேண்டும் என்று புத்ரா மஇகா தலைவர் பி கமலநாதன் கூறினார்.

“எங்களை எள்ளி நகையாட வேண்டாம்,” என்றும் அவர் எச்சரித்தார்.

இதனிடையே அந்த மிரட்டல் தமக்கு எதுவும் தெரியாது என்று பத்துமலை கோவில் குழுத் தலைவர் ஆர் நடராஜா கூறினார். எனினும் அத்தகையத் தாக்குதல்கள் ஏதும் நடைபெறாது என்று அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.

சிலாங்கூர் சிலாயாங்கிற்கு அருகில் உள்ள பத்துமலையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவில் நூறாயிரக்கணக்கான இந்து பக்தர்களும் சுற்றுப்பயணிகளும் கலந்து கொள்வர்.

4 பதில்கள் to “மலேசிய சீக்கிய கோயில் மீது கற்கள் எறியப்பட்டன!”

  1. KALIDASAN NAGAPPAN Says:

    B.N. always acting double standard

  2. kanna88 Says:

    valge sikh samugam and hindu samugam…

    • vedaprakash Says:

      “வெல்க / வாழ்க சீக்கிய மற்றும் இந்து சமூகம்” என்று பதிவு செய்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

      “valge” என்பதனை “வெல்க / வாழ்க” என்று குறிப்பிட்டதாகக் கொள்கிறேன், மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்கவும்.

      நன்றி.

பின்னூட்டமொன்றை இடுக