ஊழல் அமைச்சர் ராஜினாமா – சோனியாவின் பிரமாதமான நாடகம் (3)

ஊழல் அமைச்சர் ராஜினாமா – சோனியாவின் பிரமாதமான நாடகம் (3)

சோனியாமன்மோஹன்சிங்ஊழல்: சோனியாதான் தலைவி-பாஸ், இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. இத்தனை ஊழலில் திளைத்தும், சந்தோஷமாக பவனி வந்து கொண்டிருக்கிறார் என்றால், அவரது திறமை அலாதியானது தான். மன்மோஹனை கைப்பாவையாக வைத்து ஆட்டி வைக்கும் போது, கால்வருடி அடிமையாக செயல்படும் போது, அவர்தான் சோனியா வீட்டிற்கு வந்து சலாம் போட்டிருப்பார். ஆனால், ஊழலையும் “கார்பரேட்” பாணியில் லாவகமாக செய்து வரும் அவர், தனக்கு நல்ல பெயர் உண்டாக்கிக் கொள்ளவே அப்படி இடம் மாறி சென்று நாடகம் ஆடியுள்ளார். இது 2ஜி, 3ஜி போன்ற ஊழல்களையும் மிஞ்சியது, ஆட்சிக்கே உலை வைப்பது என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அரசாங்க்சத்தில் இதைப் பற்றிய ஆவணங்கள் ஏகப்பட்டர்து இருக்கும். அனைத்தையும் ஒழித்து புனிதராக வேண்டும் என்றால், சிறிது காலம் தேவைப்படும். தமது ஆட்களை வைத்துக் கொண்டே சுத்தப்படுத்துவது சுலபம். அதைத்தான் சோனியா செய்து வருகிறார். சோனியாவின் நாடகம்[1] பலே, பலே!

 

குங்குமப் பொட்டுடன் உலா வரும் சோனியா: கர்நாடக வெற்றிற்காக காங்கிரஸ் ஆடிய மாபெரும் நாடகம்[2]. ஊழலின் மறு உருவம் சோனியா, காங்கிரஸ், யுபிஏ என்ற நிலை வந்துவிட்டப் பிறகு, 2014க்கு முன்பாக, எப்படியாவது தனது முகத்தின் மீது பூசப்பட்டுள்ள அழுக்கைத் துடைத்து, மக்களின் முன்பாக நல்லவன் போல வர காங்கிரஸ் மறுபடியும் ஏமாற்ற இறங்கியுள்ளது[3].

 

வேலியே பயிரை மேய்ந்தது: அஸ்வினி குமார் சட்ட அமைச்சர், இந்திய சட்டம், நீதி, முதலியவற்றின் நடப்புகளுக்குப் பொறுப்பான மத்திய அமைச்சர். சட்டம், விதிமுறைகள், விதிப்பு, நீதிவியல், சட்டவியல், திருத்தங்கள் என்று எல்லாவற்றிற்கும் பாத்தியதைக் கொண்ட அமைச்சர். நிலக்கரி ஊழல் விஷயமாக, சிபிஐயின் தன்விளக்க மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்குதல் செய்யப்படும் போது, அதனைப் பார்த்து, பிரதம மந்திரியை பாதிக்கும் முறையில் இருந்த பத்திகளை நீக்கினார் என்ற குற்றம் இவர்மீது சுமத்தப் பட்டது. என் மீது எந்த குற்றமும் இல்லை என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த இவர் இப்பொழுது ராஜினாமா செய்துள்ளார்[4].

 

மாடுகளை பிடித்துக் கட்டியது யார்?:05-05-2013 அன்று கூடிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குழுக் கூட்டத்தில் சட்ட அமைச்சர் அஸ்வனி குமார், ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் ஆகியோரை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்து பேசப்பட்டது. பின்னர் எதிர்க் கட்சிகளின் இந்தக் கோரிக்கையை முற்றிலும் நிராகரிப்பதாகக் கூறி, அவர்கள் இருவரும் ராஜினாமா செய்வார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெளிவாகக் கூறியது காங்கிரஸ் செயற்குழு. மேலும் நிலக்கரி ஊழல் வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கையையும் நிராகரித்தது அது. இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் அஸ்வினி குமார், பன்சால் விவகாரம் குறித்து ஆலோசிக்க 09.05.2013 மாலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் உயர்நிலைக்கூட்டம் கூடியது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் பன்சால் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.

 

மன்மோகன்சிங் விரும்பவில்லை, சோனியாதான் வற்புறுத்தினார்: இதையடுத்து 10-05-2013 (வெள்ளிக்கிழமை) மீண்டும் டெல்லியில் காங்கிரஸ் உயர்நிலைக் கூட்டம் கூடி இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படுவதாக இருந்தது. ஆனால், திடீரென இக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பன்சால், அஸ்வினிகுமார் விவகாரம் குறித்து சனிக்கிழமை கூடி ஆலோசிக்க முடிவு செய்தனர்.  பன்சாலை பதவிநீக்கம் செய்யவும், அஸ்வினி குமாரை வேறு துறைக்கு மாற்றவும் திட்டமிட்டிருப்பதாக தெரிந்தது. அஸ்வினிகுமார் மீதான நடவடிக்கைக்கு பிரதமர் மன்மோகன் சிங் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்பட்டது.

 

இல்லை, சோனியாமன்மோகன்சிங் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு:  இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி கூறுகையில், ஒரு சில மீடியாக்களில், அமைச்சர்கள் இருவரும், சோனியா வலியுறுத்தலினால் தான் பதவி விலகினார்கள் என செய்தி வெளியானது[5]. இது தவறான தகவல். பன்சால் மற்றும் அஸ்வனி குமார் இருவரும் பதவி விலக வேண்டும் என்ற முடிவு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் இணைந்து எடுத்த முடிவு என கூறியுள்ளார்[6]. ஆகவே இருவருக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்று காங்கிரஸ் தெளிவுபடுத்தியுள்ளது[7].

 

மந்திரிகளை நியமிப்பது பிரதம மந்திரியா, சோனியாவா?: பிரதம மந்திரியின் விருப்பப்படித்தான் அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதே மாதிரி அமைச்சரை நீக்குவதும், மாற்றியமைப்பதும், துறையை மாற்றவும் முதலிய அதிகார் இகள் அவருக்குத்தான் உண்டு. ஆனால், சோனியா ஊழல் அமைச்சர்கள் பதவி நீடிப்பதை விரும்பவில்லை, அதனால், மன்மோகன் சிங் வீட்டிற்குச் சென்றார், பதவி விலகுமாறு கூறினார் என்று முன்னர் செய்திகள் மறுக்கப்பட்டன. இல்லையென்றால், மன்மோகன் சிங் வெறும் பொம்மை / டம்மி, எல்லா முடிவுகளும் சோனியா தான் எடுக்கிறார் என்பது ஒப்புக்கொண்டது மாதிரியாகிவிடும்[8]. அதாவது இதெல்லாம் நாடகம் என்று தெரிந்து விடும்[9].

 

ஊழலுக்கு, ஊழலுக்காக, ஊழல் செய்தே, ஊழலை வளர்க்கும் ஒரே கட்சி: ஊழலுக்கு, ஊழலுக்காக, ஊழல் செய்தே, ஊழலை வளர்க்கும் ஒரே கட்சி சோனியா காங்கிரஸ் தான்[10], என்பதை அறிந்த பின்னும், ஊழலை மதிப்பதேன்? “ஊழல் உலகெங்கிலும் உள்ள ஒரு பிரச்சினை” என்று மாமியார் நியாயப்படுத்தினார், மறுமகளோ, அது எங்கள் பிறப்புரிமை, பிறப்பிடம், என்றெல்லாம் மெய்பித்து, கீழுள்ள அடிவருடிகளையும் ஊழலில் திளைத்து வைத்துள்ள ஒரு மாபெரும் ஊழல் மகாராணியாக மாறியுள்ளார். ஊழலை எதிர்ப்பவர்களே, ஊழல்காரர்களுக்கு ஓட்டுப் போடு வெற்றிப் பெறச் செய்தது – ஊழலுக்கு வெற்றியா அல்லது ஊழல் கட்சிக்கு வெற்றியா. காங்கிரஸ்காரர்கள், ஊழல் அமைச்சர்களை நீக்கிய வெற்றிக்கு சோனியா தான் காரணம் என்று மெச்சிக் கொள்கிறார்கள்[11].

 

© வேதபிரகாஷ்

12-05-2013


குறிச்சொற்கள்: , , , , , , , ,

3 பதில்கள் to “ஊழல் அமைச்சர் ராஜினாமா – சோனியாவின் பிரமாதமான நாடகம் (3)”

  1. K. T. Narayayanaswamy Pillai Says:

    பத்தாண்டுகளாக இப்படி கோடிகளில் மக்கள் பணத்தை சோனியா முதல் மற்ற காங்கிரஸ்காரர்கள் கொள்ளையடிக்கிறார்கள், அதாவது, அதற்கு துணை போயிருக்கிறார்கள்.

    ஆகவே, நாம் பொறுப்பில்லை, என்றால் யாரும் நம்பப் போவதில்லை.

    கூடிய சீக்கிரத்தில் இக்கூட்டம் பதவியை விட்டு விலக்கப்படுவது நல்லது.

  2. W. Lawrance David Says:

    It could be dramatic, drama or otherwise, but, none can beat Mrs Sonia, as otherwise, she cannot continue to rule India.

    Other than Sonia, there has not been any leader who could have such capabilities.

  3. K. T. Narayayanaswamy Pillai Says:

    நார்த் பிளாக் (வடக்குப் பகுதி) மற்றும் சவுத் பிளாக் (தெற்குப் பகுதி) என்று தில்லியில் மத்திய அமைச்சர் அலுவலகங்கள், அதிகாரிகள் மற்றும் அவர்கள் கீழ் வேலை செய்பவர் என்று எல்லோரும் அடங்கிய அலுவலகங்களில் தான், இந்த ஊழல் வெளியான ஆரம்ப நிலை கோப்புகள், ஆவணங்கள் முதலியன இருக்கும்.

    இப்பொழுது, இவரது அதிகாரத்தில் வரும் போது, அவற்றை மாற்றியமைக்க வாய்ப்புள்ளது. உச்சநீதி மன்றத்திற்கு வழக்கு வருவதற்கு முன்னர், அம்மாதிரி மாற்றியக்மைக்கப் பட்டால், உள்ள ஆவணங்கள் மறைக்கப்பட்டால், வழக்கு வலுவிழந்து விடும்.

    2ஜி விஷயத்தில் கபில் சிபல் அவ்வாறு செய்து காட்டினார், அதாவது, அந்த 1,75,000 கோடிகள் நஷ்டம் என்பது பொய், அந்த கணக்கீடே உத்தேசம் தான், ஊழல் ஒன்றும் நடக்கவில்லை என்ற தோரணையில் செய்துள்ளார்.

    ஜாஜா, கனிமொழி, மற்ற குற்றஞ்சாட்டப் பட்டவர்கள் எல்லாம் சிறிது காலத்திற்கு திஹார் சிறையில் இருந்து விட்டு, வெளியே வந்து விட்டனர்.

    மக்களும் மறந்து விட்டனர்.

    இனி இத்துறைகளுக்கும், அம்மாதிரியான வெள்ளையடிக்கப் பட்டு, சுத்தமாக்கப்படும் என்று தெரிகிறது.

    பிறகு தனக்குத்தானே, நற்சான்றிதழ் கொடுத்துக் கொண்டு பாராட்டு விழாவும் நடத்திக் காட்டுவர்!

பின்னூட்டமொன்றை இடுக