அதிசயம், பாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள் இருக்கிறார்களாம்!

அதிசயம், பாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள் இருக்கிறார்களாம்!

லாஹூர் நீதிமன்றத்தின் நீதிபதி – குவாஜா ஸெரிஃப் (Justice Khwaja Sharif), இந்துக்கள் அந்த நாட்டில் நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு நிதியுதவி செய்கிறார்கள் என்றாராம்.

உடனே அந்நாட்டில் உள்ள ஒன்பது ஹிந்து எம்.பிக்களுக்கு கோபம் வந்துவிட்டதாம்!

பாகிச்தானில் நான்கு மில்லியன் / 4,000,000 – 40 லட்சம் ஹிந்துக்கள் இருக்கிறார்களாம்.

இப்பொழுதுதான் தெரிகிறது. அந்த ஆர்.எஸ்.எஸ்/பிஜிபி/முதலியோர் கூட இந்த விவரத்தைச் சொல்லவில்லையே!

உடனே பாகிஸ்தானிய தேசிய அசெம்பிளியை விட்டு புதன் கிழமை அன்று (31-03-2010) வெளிநடப்பு செய்து விட்டார்களாம்!

“பாகிஸ்தானில் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது முஸ்லீம்கள் தாம், இந்துக்கள் இல்லை”, என்று சொல்லிவிட்டு, “அவர்கள் அந்த தீவிரவாதிகளுக்கு நிதியளிக்கிறார்கள்”, என்று சொன்னாராம்!

எதிர்ப்புத் தெரிவித்து, வெளிநடப்பு செய்தவர்கள், சமாதானப்படுத்தப்பட்டு உள்ளே வரும்படி செய்தார்களாம்.

அதுமட்டுமல்லாது, “அவர்கள் நல்ல பாகிஸ்தானியர்கள். ஆகையால் நீதிபதியின் அவர்கள் மீதான பேச்சு கண்டனத்திற்கு உரியது. மேலும், அவர்களால் அதனைத் தாங்முடியாது (“They are good Pakistanis. The judge’s statement against Hindus is condemnable and indefensible)!

1947ல் கோடிகளில், ஆப்கானிஸ்தானத்தையும் தாண்டி வாழ்ந்துவந்த ஹிந்துக்கள் என்னவானார்கள் என்று யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

பலவந்தமாக மதம் மாற்றுதல், ஹிந்து அடையாளங்களை மறைத்து வாழ்தல் / அவ்வாறு வாழ வற்புறுத்துதல், கோவில்களை அபகரித்தல், ஹிந்துக்களை விரட்டிவிட்டு கோடவுனாக-கழிப்பிடமாக உபயோகித்தல், இஸ்லாமிய சட்டம் அமலில் உள்ளதால் “ஜிம்மி” வாழ்க்கை வாழுதல்,…………………ஆனால், இந்திய செக்யுலரிஸவாதிகள் இதைப் பற்றியெல்லாம் கண்டுக் கொள்வதில்லை.

இந்தியாவிலுள்ள ஹிந்துக்கள், காஷ்மீர ஹிந்துக்களுக்கேக் கவலைப் படுவதில்லையாம், பாவம், பிறகு, அவர்கள் எப்படி பாகிஷ்தான், ஆப்கானிஸ்தான்……………முதலிய நாடுகளில் இருப்பவர்களைப் பற்றிக் கவலைப் படப் போகின்றனர்?

குறிச்சொற்கள்: , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக