திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடிய தமிழக ஆளுனர் – திராவிடத்துவ மற்றும் இந்துத்துவவாதிகள் எதிர்த்த மற்றும் ஆதரித்த நிலைகள் – பாதிக்கப் பட்டது இந்துக்கள் தாம்! (2)

திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடிய தமிழக ஆளுனர்திராவிடத்துவ மற்றும் இந்துத்துவவாதிகள் எதிர்த்த மற்றும் ஆதரித்த நிலைகள்பாதிக்கப் பட்டது இந்துக்கள் தாம்! (2)

முழுக்க முழுக்க ஆரியப் பார்ப்பனிய வர்ணாசிரமத்திற்கு எதிரான கருத்துடைய திருக்குறள்: முழுக்க முழுக்க ஆரியப் பார்ப்பனிய வர்ணாசிரமத்திற்கு எதிரான கருத்துடைய திருக்குறளை ஆரிய வயப்படுத்திட ஆளுநர் இரவி தொடர்ந்து செய்து வரும் சூழ்ச்சிச் செயல்பாடுகளை மானமுள்ள தமிழர்கள் அனைவரும் கடுமையாகவே கண்டித்து வந்திருக்கின்றனர். ஆனாலும், ஆர் எஸ் எஸ் இன் வேலை திட்டத்தை ஆளுநர் இரவி விடுவதாக இல்லை. அவருடைய தனிப்பட்ட கருத்தாக கருத்தரங்கில் பேசிக் கொள்வதையோ, நூல்கள் எழுதி வெளியிடுவதையோ நாம் பொருட்படுத்தப் போவதில்லை. ஆனால், தமிழ்நாட்டு அரசின் இலச்சினைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டு அரசின் அறிவிப்புப் போல் ஆளுநராக இருந்து கொண்டு கருத்தறிவிப்பதும், திருவள்ளுவரைப் பட்டை போட்டுக் காவி உடை அணிவித்து விழா எடுப்பதாக அறிவிப்பதும் கடுமையான கண்டனத்திற்குரியது. அரசமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள மதச்சார்பின்மைக்கும் இது எதிரானது[1]. தமிழ்நாடு அரசு இதைக் கண்டித்தாக வேண்டும் எனக் கீழ்க்காணும் அறிஞர் பெருமக்கள், இயக்கப்பொறுப்பாளர்கள், தலைவர்கள் அனைவரும் கூட்டாக இணைந்து வலியுறுத்துகிறோம்”என்று கூறப்பட்டுள்ளது[2].

திராவிடக் கழகம் முதல் மற்ற அமைப்புகள்: ஆளுநர் ரவியைக் கண்டித்து விரைவில் அனைத்துக் கட்சி கண்டன போராட்டம் நடைபெறும்  என்று திராவிடர் கழகத் தலைவர்  கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்[3]. அனைத்துக் கட்சிகளையும், அமைப்புகளையும் கலந்து ஆலோசித்து மாபெரும் கண்டனப் போராட்டத்தை நடத்திட கழகம் முயற்சிகளை மேற்கொள்ளும்[4]. முன்னதாக ஜனவரி மாதம் 2024 திருவள்ளூவர் விழாவில் பேசிய கவர்னர் ஆர்.என். ரவி, “ஆன்மிக பூமியான தமிழ்நாட்டில் பிறந்த திருவள்ளூவர், சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான ஞானி என்றார். இந்தக் கூற்றுக்கு பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்தனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்து இருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது[5]. இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் ரங்கநாதன் வெளியிட்ட அறிக்கையில் சமத்துவ மண்ணான தமிழ்நாட்டில் சமத்துவ சமயக் கோட்பாடுகளைத் தொடர்ந்து திருடி ஸ்டிக்கர் ஒட்டும் வேலை நடந்து வருவதாக கூறியுள்ளார்[6]. அய்யா வைகுண்டர், வள்ளலார் தொடங்கி இன்று திருவள்ளுவர் வரையில் இது தொடர்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இருஎதிர்சித்தாந்திகள் மோதிக்கொள்ளும் பொழுது, பாதிக்கப் படுவது இந்து மதமே: ஆகவே இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்து விரோத திராவிடத்துவவாதிகளும், இந்துத்துவவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களும் ஏதோ சித்தாந்த ரீதியில் எதிர்ப்பது போல தோன்றினாலும், இறுதியில் பாதிக்கப்படுவது, தாக்கப்படுவது –  இந்து மத சின்னங்கள், இந்து மத சம்பிரதாயங்கள், இந்து மத நம்பிக்கைகள், ஏன் இந்துக்கள் தான் என்பது வெட்டவெளிச்சமாகிறது. இங்குதான் உண்மையான பிரச்சனை இருக்கிறது. இவர் மாறுபட்ட எதிர் துருவங்களாக இருக்கும் அரசியல் கட்சிகள், தங்களது அதிகாரம், ஆட்சி போன்றவற்றிற்காக ஒன்றுக்கு ஒன்று சண்டை போட்டுக் கொள்ளலாம், ஜனநாயக ரிதியிலும் மோதலாம், மேடைகளில் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், இதில் இந்து மதம் என் தாக்கப்பட வேண்டும், இதற்கு இந்துத்துவவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் ஏன் துணையாக போக வேண்டும் என்பது தான் முக்கியமான கேள்வி.

நெறியற்றவர்கள் ஏன் ஒன்றாக செயல்பட வேண்டும்?: இவ்வாறு எதிர் சித்தாந்த வாதிகள் – இந்து மதத்தை எதிர்க்கும் மற்றும் ஆதரிக்கும் அரசியல்வாதிகள், கட்சிகள் ஏதோ தங்களை தாமே விமர்சித்துக் கொள்கின்றன, அதனால் இவ்வாறு திருவள்ளுவரை, திருக்குறளை வைத்து அரசியல் செய்வது என்றெல்லாம் செய்யப்படுகிறது என்று நினைத்து இருந்துவிட முடியாது. ஏனெனில் இந்த இரு கூட்டங்களுக்கும் உண்மையாகவே திருவள்ளுவர் மீதும், திருக்குறள் மீது எந்த காதலும், அன்பும், இலக்கிய நேசமும், எதுவும் இல்லை என்பது தெரிந்த விஷயம் தான். இதே கட்சிகள், இதே நபர்கள், இதை ஆராய்ச்சியாளர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் பத்தாண்டுகளுக்கு முன்பு, 20 ஆண்டுகளுக்கு முன்பு, 30 ஆண்டுகளுக்கு முன்பு என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பது கவனிக்கலாம். நிச்சயமாக அவர்கள் அந்த இதில் எந்த நாட்டுமும் காட்டவில்லை. ஆக, திடீரென்று இப்பொழுது ஒரு கட்சி ஆதரவினால் ஏதோ பலன் கிடைக்கிறது என்ற ஒரே நோக்கத்துடன், திடீரென்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு, இவ்வாறு நடிக்க துடிக்கிறார்கள், நடிக்கிறார்கள், துடித்து ஊழல்கிறார்கள் எனும்போது, அதில் தான் நியாயமோ, தர்மமோ, எந்த நெறியும் இல்லை.

வழக்கம் போல, மனதில் எழுந்த விசயங்கள்:

  1. இந்த வருடம் எல்லீஸர் விருதை இந்துத்துவ வாதிகள் யாருக்குக் கொடுத்தனர்? திருவள்ளுவர் விழா கொண்டாட்டம் 2024!
  2. 2017ம் ஆண்டிற்குப் பிறகு கொண்டாடும் இந்த இந்துத்துவ வாதிகள் கவர்னரை வைத்து கும்பிட வைத்த மர்மம் என்னவோ?
  3. திருவள்ளுவர் திருநாட்கழகம் எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தி, எல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் பிறகு, யாரும் தகுதியுடன் இல்லையா?
  4. எல்லீஸர் பிறகு, எல்-சடையான் போன்ற விருதுகளை உருவாக்கி, திருக்குறளைக் கரைத்துக் குடிக்கும் இந்துத்துவ வாதிகளுக்குக் கொடுக்கலாமே?
  5. திருக்குறள், திருவள்ளுவர் இருக்கும், ஆனால், அவற்றை வைத்து செய்யும் வியாபாரம், அரசியல் முதலியவை தற்காலிகமானவை, .. மறைந்து விடும்.
  6. இந்துவிரோதிகளும், இந்துத்துவவாதிகளும் அவற்றையே செய்கின்றனர் எனும்பொழுது, அதில் அரசியல்-சித்தாந்தாம் தான் வெளிப்படுகின்றன!
  7. ஒரு கட்சியை / தலைவனை ஆதரித்தால் தான் இந்து, அவ்வாறே நாங்கள் தான் சான்றிதழ் கொடுப்போம் என்பது இந்துத்துவமா?
  8. இந்துமத விசயங்கள் அரசியல் வைத்து தீர்மானிக்கப் படுகின்றன என்றால், அதற்கு கோவில்கள், சம்ஸ்காரங்கள் போன்றவை தேவையில்லை!
  9. கட்சி, சின்னம், தலைவனுக்கு ஜே என்று கோஷம் போட்டு, கும்பல் கூட்டி, அரசியல் நடத்தலாம், ஆனால், இந்து மதம் காக்கப் படாது!
  10. அதனால் தான், இந்துமதம் சனாதனமாக நிலைத்துத் தொடர்கிறது. பலவித சித்தாந்தங்களையும் எதிர்கொண்டு தழைக்கிறது.

© வேதபிரகாஷ்

26-05-2024


[1] கலைஞர் செய்திகள், “திருவள்ளுவரை ஆரியக் காவிக்குள் அடக்க வேண்டும் என நினைக்கும் ஆளுநர்” : உலகத் தமிழர் கழகம் கண்டனம்!, Praveen, Updated on : 25 May 2024, 06:29 PM.

[2] https://www.kalaignarseithigal.com/politics/2024/05/25/tamil-movement-condemns-the-governor-who-thinks-that-tiruvalluvar-should-be-buried-in-saffron

[3]  விடுதலை, மாநில அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட  திருவள்ளுவர் படத்துக்கு மாறாக காவி சாயம் பூசுவதா?, Published May 24, 2024; Last updated: May 24, 2024 2:48 pm.

[4] https://viduthalai.in/62951/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/

[5] சமயம், திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசும் ஆளுநர் ஆர்.என்.ரவி? அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் எதிர்ப்பு!, Authored By மரிய தங்கராஜ் | Samayam Tamil24 May 2024, 3:09 pm

[6] https://tamil.samayam.com/latest-news/state-news/archakar-trained-students-association-protested-against-the-release-of-a-photograph-of-thiruvalluvar-wearing-saffron-by-the-governor-house/articleshow/110391967.cms

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக