தொல்காப்பியன் திருமாவளவனும், கார்த்திக் சிதம்பரமும்: அப்பனை மாற்றிய தமிழ் கலாச்சாரத்தின் முரண்பாடுகள்

தொல்காப்பியன் திருமாவளவனும், கார்த்திக் சிதம்பரமும்: அப்பனை மாற்றிய தமிழ் கலாச்சாரத்தின் முரண்பாடுகள்

அப்பனை மாற்றிய மகன்கள்: அப்பனின் பெயரை அல்லது ஊரின் பெயரை முன்னால் வைத்துக் கொண்டு / போட்டுக் கொண்டு அடையாளம் காணுவதுதான் முறை. ஆனால், இந்த இரண்டு நபர்களும் அப்பனையே மாற்றியவர்கள். அதாவது, அப்பா ராமசாமியை தொல்காப்பியனாக மாற்றியது முந்தையது, அப்பனை பின்னால் தள்ளியது பிந்தையது.

 

முஸ்லீம் ஓட்டு வங்கிக்கு அலையும் விதம்: வெட்கமில்லாமல், குல்லா போட்டு கஞ்சி குடித்து முஸ்லீம்களை தாஜா பிடிப்பதில் ஒருவேளை இரண்டு பேரும் போட்டாப்போட்டி போடுகிறார்கள் போலும்! காங்கிரஸ்தான் முஸ்லீம்களுக்கு ஏற்ற கட்சி என்று பின்னது சொல்லியிருக்கிறார். முன்னதுடன் ஒரு சினிமா இயக்குனர் இப்போழுதுதான் சேர்ந்துள்ளார் / சேர்க்கப்பட்டுள்ளார்.

 

இருவருமே அரசியல் அனாதைகளாக இருப்பது: இப்பொழுதுள்ள நிலையில் இருவருமே தேர்தலில் தனியாக நின்றால் வெற்றி பெறமுடியாது. ஆக, ஒட்டுண்ணியாக யாருடைய தயவாவது அவசியம் தேவைப்படுகிறது. கடந்த தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றிப்பெற்றது, ஜெயலலிதாவின் துணையாலே (கூட்டணி அமைத்தவிதம்) அன்றி, அவரவர் திறமை-தகுதியால் அல்ல. தனியொரு கட்சி அதிக இடங்களை வென்றாலும், அதனைத் தனிமைப் படுத்தி, கூட்டணி என்ற ரீதியில் ஆட்சியைப் பிடிப்பது இன்றைய அரசியல் விபச்சாரமாக இருக்கிறது. இதில் எந்த பத்தினியும் யாருடனும் படுக்கத் தயாராகவே இருக்கிறாள். அதனால்தான் “அரசியல் அனாதைகள்” அதிகமாகின்றனர்.

 

தமிழகக்கட்சிகள் ஒழுங்கற்றவைதாம்: தமிழகத்தில் உள்ள மாநில / தேசிய கட்சிகள் ஒழுங்கற்றவைதான். அவற்றிற்கு எந்தவித ஒழுங்கோ, ஸ்திரமான கொள்கையோ, அரசியல் பத்தினித்தனமோ இல்லை. சுவரொட்டிகளில் எப்படி ஒவ்வொரு கட்சியும் தமக்கு சம்பந்தம் இல்லாத தலைவர்களின் (அதுவும் எதிரும் புதிருமானவர்கள்) படங்களைப் போட்டுக் கொள்கிறார்களோ, அதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். “மசாலா- அரசியல்தனம்” தான் அதிலுள்ளதே தவிர, வேறெந்த கொள்கைபிடிப்பும் இல்லை. இதுவும் அரசியல் விபச்சாரத்தில் இன்னுமொரு ரகமாகிறது.

 

காங்கிரஸை திட்டியதில் கருணாநிதியை விஞ்சுபவர்கள் யாரும் இல்லை: காங்கிரஸை அந்த காலத்திலிருந்து இப்பொழுது வரை திட்டியிருக்கும் உண்மையை இந்த இருவருமே அறியமாட்டார்கள். முன்னது அப்பொழுது அரசியலிலேயே இல்லை, பின்னது பிறக்கவேயில்லை. ஆக காங்கிரஸ் ஒன்றும் ஒழுங்கான கட்சியில்லை. ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் இப்பொழுது அதிகமாகவே உள்ளன.

125 வருட காங்கிரஸ் பாரம்பரியம்: இப்படி காங்கிரஸே பேசுவதற்கு தகுதியில்லை. ஏனால், இன்றும் உயிரோடுள்ள 80-90 கிழங்களுக்கு காங்கிரஸைப் பற்றி நன்றாகவேத் தெரியும். ஏன் திமுக, திமுக தலைவர்கள் பற்றியும், அவர்கள் 1947க்குப் பிறகு, இந்திரா, ராஜிவ், சோனியா என்றுள்ள காங்கிரஸ்கள் பற்றி திட்டியுள்ளதை / அவதூறு பேசியுள்ளதைப் பற்றியும் அதிகமாகவே தெரியும்.

 

வேதபிரகாஷ்

23-10-2010

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

12 பதில்கள் to “தொல்காப்பியன் திருமாவளவனும், கார்த்திக் சிதம்பரமும்: அப்பனை மாற்றிய தமிழ் கலாச்சாரத்தின் முரண்பாடுகள்”

  1. K. Venkatraman Says:

    Both have no locus standi in the Tamilnadu politics.

    Tiruma has been pampered unnecessaily, because he is a SC / Dalit, with all his dubious roles, character and background.

    Kartik has been the son of Chidambaram, who has earned crores as a FM, HM etc.

    Of course, his mother Nalini has also been making money since 1980s through industrialists as an advocate, shareholder, director etc., on behalf of her husband and other relatives.

    Therefore, Kartik is promoted.

    As Tiruma has been known for his anti-Congress gimmicks, naturally, Congress might test him through Kartik.

  2. vedaprakash Says:

    திருமாவளவன் மீது காங்கிரஸ் பாய்ச்சல்
    பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2010,23:20 IST
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=112479

    சென்னை:சென்னை அசோக்நகர் நான்காவது அவென்யூவில் சிக்னல் அருகே, மார்பளவு ராஜிவ்காந்தி சிலையுள்ளது. நேற்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் செருப்பு மாலையை அணிவித்தனர். காலை 7 மணியளவில் அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காங்கிரசார் திரண்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கடைகள் மூடப்பட்டன.

    தி.நகர் துணை கமிஷனர் சண்முகவேல், சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தவர்கள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்ததை அடுத்து, காலை 11 மணியளவில் சாலைமறியல் முடிவுக்கு வந்தது.இந்நிலையில், இளைஞர் காங்கிரசை சேர்ந்த மாயா, யுவராஜ், வாசன் சவுந்தர் ஆகியோர் தங்களது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    அதன்பின், சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையிலான காங்., தொண்டர்கள் அங்கு வந்து மீண்டும் சாலை மறியலில் இறங்கினர். 24 மணி நேரத்திற்குள் செருப்பு மாலை போட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தி.நகர் துணை கமிஷனர் சண்முகவேல் உறுதியளித்ததை அடுத்து, மதியம் 12.45 மணிக்கு சாலை மறியல் முடிவுக்கு வந்தது.

    மறியலின் போது கராத்தே தியாகராஜன் கூறியதாவது: கடந்த சில நாட்களாக காங்., தலைவர் சோனியா மற்றும் இளைஞர் காங்., தலைவர் ராகுல் பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தேவையற்று விமர்சித்து வருகிறார். தன்னை தென்னகத்தின் பிரபாகரன் என காட்டிக் கொள்ளும் அவரது போஸ்டர் சென்னை மாநகர் முழுவதும் ஒட்டப்படுகிறது. தடை செய்யப்பட்ட இயக்கத்தின் ஆதரவாக தன்னைக் காட்டிக் கொள்ளும் அவரை போலீசார் கைது செய்யவில்லை.அவரது தூண்டுதலின் பேரிலே ராஜிவ் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. திருமாவளவன் மற்றும் சிலைக்கு செருப்பு மாலை போட்ட அக்கட்சியின் ஆதரவாளர்களை போலீசார் கைது செய்ய வேண்டும், என்றார்.

  3. vedaprakash Says:

    காங்கிரஸ்-சிறுத்தைகள் மோதல்:தி.மு.க., கூட்டணியில் குழப்பம்: ஆளுங்கட்சியின் திட்டமா?
    பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2010,22:37 IST
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=112409

    காங்கிரஸ் கூட்டணியை எப்படியும் காப்பாற்றி, தொடர்ந்திட வேண்டுமென தி.மு.க., பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது. ஆனால், அந்த கூட்டணியிலேயே இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியை உடைக்கும் வகையில் செயல்படுவதால், ஆளுங்கட்சியில் அதிருப்தி அலைகள் எழுந்துள்ளன.சட்டசபைத் தேர்தல் நெருங்க, நெருங்க எந்த கட்சி, எந்த கட்சியுடன் கூட்டணி சேரும் என்பது குறித்து யூகங்கள் இறக்கை கட்டிப் பறக்கத் துவங்கிவிட்டன. அதற்கேற்ப அரசியல் கட்சிகளும் கூட்டணி வியூகங்களை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்காக நேரடியான நடவடிக்கைகள், திரைமறைவு வேலைகள் என அனைத்தையும் அரங்கேற்றி வருகின்றனர்.

    எதிர் அணியில் உள்ளவர்களை தாக்கிப் பேசுவது என்ற நிலையுடன், கூட்டணியை கட்டுக்குள் கொண்டு வர சொந்த கட்சியினரையே விட்டு கூட்டணி கட்சிக்கு எதிராக பேசுவது, கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை விட்டு சக கூட்டணிக் கட்சிகளை மிரட்டுவது, திட்டித் தீர்ப்பது போன்ற தமிழக அரசியலில் இதுவரை இல்லாத புதிய அணுகுமுறைகளும் கையாளப்பட்டு வருகின்றன.காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என்பது தி.மு.க.,வின் விருப்பம். அதற்காக, எந்த தியாகத்தையும் செய்ய அக்கட்சி தயாராக உள்ளது. ஆனால், தி.மு.க.,வின் தோழமைக் கட்சியாக உள்ள விடுதலைச் சிறுத்தைகள், “தி.மு.க., கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியேற வேண்டும்’ என குரல் கொடுக்கத் துவங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த லோக்சபா தேர்தலின் போதே தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்று பெரிய அளவில் சலசலப்பு ஏற்பட விடுதலைச் சிறுத்தைகள் காரணமாக இருந்தனர். ஆனால், முதல்வர் கருணாநிதியின் ராஜதந்திரத்தால், தி.மு.க.,வுடன் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகியவை ஒரே அணியில் போட்டி யிட்டு வெற்றியை பறித்தன. அதற்கு தி.மு.க., அரசின் சாதனைகளும் பெரிய அளவில் உதவின.ஆனால், இப்போது தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை வெளியே கொண்டு வர வேண்டும் அல்லது தி.மு.க., கூட்டணியிலேயே தொடர்ந்து நீடித்தால், சரி பாதி இடங்களில் கட்சி போட்டியிட வேண்டும், அடுத்து அமைகின்ற ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்ற உரிமைக்குரலை காங்கிரஸ் தலைவர்கள் எழுப்பி வருகின்றனர்.அதற்கு தகுந்தாற் போல், சோனியாவின் தமிழக வருகையின் போது, தி.மு.க., – காங்கிரஸ் உறவு வலுப்படும் என்ற எதிர்பார்ப்பிற்கு மாறாக கருணாநிதி, சோனியாவை சந்தித்த பின்னும், அக்கட்சிகள் உறவில் விரிசல் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது.

    அதே சமயம், காங்கிரஸ் கட்சி தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேறி வந்தால், அதை ஏற்று அரவணைக்க அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தயராக இருப்பதால், காங்கிரஸ் கட்சிக்கு தமிழக அரசியலில் இன்றளவும் பெரிய டிமாண்ட் இருந்து வருகிறது. இந்த சூழலில் திருமாவளவனின் பேச்சு, கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.அவருக்கு கார்த்தி சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகளை கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என காங்கிரஸ் பதிலுக்கு கோரிக்கை விடுக்குமானால், அதை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் தி.மு.க.,விற்கு ஏற்படும். இந்த பிரச்னையை ஆளுங்கட்சி எப்படி கையாளப்போகிறது என்பதைப் பொறுத்தே கூட்டணியின் பலம் முடிவாகும்.

    கூட்டணி விவகாரத்தில், “கிணற்றில் போட்ட கல்லாய்’ காங்கிரஸ் மவுனம் காத்து வருவதால் தி.மு.க., அதிருப்தியடைந்துள்ளது. இளங்கோவன், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் அடிக்கடி தி.மு.க.,வை சீண்டி வரும்நிலையில், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், திருமாவளவனை ஆளுங்கட்சி களமிறக்கியுள்ளதே என்ற சந்தேகமும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணி உடையுமானால், அதை எதிர்கொள்ளவும் தி.மு.க., வியூகங்களை தயார் செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே முதல்வர் – ராமதாஸ் சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.-நமது சிறப்பு நிருபர்-

    • S. Ramananathan. Says:

      As for as Tamilnadu is concerned, now the situation is either DMK or AIDMK has to allign with Congress or BJP to fight the elections at the state or national level.

      Now, there have been more spoilers and vote-splitters like Vijayakanth, Saratkumar, Pahamuthu,………………………. and others.

      Tiruma, Krishnaswamy, Sivakami………………….and others could play only the SC/Dalit card.

      Thus, Karunanidhi has been out to exploit with all strategies – cinema, caste, ideology, above all – money!

  4. vedaprakash Says:

    கூட்டணியில் குழப்பம் விளைவிக்க சதி நட‌க்‌கிறது : திருமாவளவ‌ன்
    ஞாயிறு, 24 அக்டோபர் 2010( 10:57 IST )
    http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1010/24/1101024002_1.htm

    ‌தி.மு.க. தலைம‌யிலான கூ‌ட்ட‌ணி‌யி‌ல் குழ‌ப்ப‌ம் ‌விளை‌வி‌க்க ச‌தி நட‌ப்பதாகவு‌ம், எனவே ‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ள் தொ‌ண்ட‌ர்க‌ள் அமை‌தி கா‌க்கு‌‌ம்படியு‌ம் அ‌க்க‌ட்‌சி‌‌த் தலைவ‌ர் தொ‌ல்.‌‌திருமாவளவ‌ன் வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

    இதுகுறித்து அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

    டெல்லியில் அண்மையில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சிங்கள இனவெறியன் இராஜபக்சேவை இந்திய அரசு அழைத்துச் சிறப்பித்தது. இந்த நிகழ்வு கோடானுகோடி மானமுள்ள தமிழர்களின் நெஞ்சை நெருப்பாய்ச் சுட்டது.

    முள்ளிவாய்க்காலில் கடைசி ஓரிரு நாட்களில் மட்டுமே சுமார் 50,000 தமிழர்களைப் படுகொலை செய்த படுபாவி இராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டுமென சர்வதேச அளவில் மனிதநேய ஆர்வலர்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கிற இந்தச் சூழலில், இந்திய அரசு இராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்புக் கொடுத்ததும் விருந்தளித்ததும் ஈழத்தமிழர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்தத் தமிழர்களையும் அவமதிப்பதாகவே அமைந்தது.

    இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகளின் வேதனைகளை வெளிப்படுத்தும் வகையில் அண்மையில் இதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் எமது கண்டனத்தைப் பதிவு செய்தேன். கூட்டணி அரசியலைத் தாண்டி மனிதநேய அடிப்படையில்தான் என் ஆழ்மனதில் பொங்கிய உணர்வுகளைக் கொட்டினேன்.

    வேறெந்த அரசியல் உள்நோக்கமும் அதில் இல்லை. நாடாளுமன்றத்தில் எனது கன்னி உரையிலேகூட இந்திய அரசு தமிழினத்திற்கு மாபெரும் துரோகம் இழைத்துவிட்டது என்பதையும் பதிவு செய்தேன். ஈழத் தமிழினத்திற்கு எதிராக எப்போதெல்லாம் சதிச்செயல்கள் அரங்கேற்றப் படுகின்றனவோ அப்போதெல்லாம் விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம் செய்யத் தவறியதில்லை. அதன்படியேதான் தற்போதும் கண்டித்திருக்கிறோம்.

    அத்துடன், அதனையொட்டி தமிழகத்தில் உள்ள காங்கிரசின் நிலை குறித்தும் எமது கருத்துக்களை வெளியிட்டேன். நாகரிகத்தின் எல்லை மீறாமல் தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் மானுட கண்ணியத்தைப் போற்றும் வகையில், அந்த இதழுக்கு என் நேர்காணலாய் சில கருத்துக்களை நான் கூறியிருந்தேன். ஆனால், கருத்துக்குக் கருத்தை முன்நிறுத்தாமல் வன்முறைகளைத் தூண்டும் வகையில், ஒரு சிலர் செயல்படத் தொடங்கியுள்ளனர்.

    எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் காய்களை நகர்த்துகிறவர்கள் திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் சதி வேலைகளில் இறங்கியுள்ளனர். சென்னை, அசோக் நகர் பகுதியில் நிறுவப்பட்டிருந்த ராஜீவ் காந்தியின் அரை உருவச்சிலையை அவமதித்ததாக விடுதலைச் சிறுத்தைகள் மீது பழிபோட்டு சாலை மறியல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு தமிழகம் தழுவிய அளவில் வன்முறையைத் தூண்டிவிட முயற்சித்து வருகின்றனர்.

    கொள்கை ரீதியான கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் தலைவர்களை அவமதிப்பது போன்ற கீழ்த்தரமான சதிச் செயல்களை விடுதலைச் சிறுத்தைகள் ஒருபோதும் செய்ததில்லை. திட்டமிட்டே தமிழகத்தில் வன்முறையைத் தூண்டவும் திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தவும் இத்தகைய இழிவான செயல்களில் ஒரு சிலர் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது.

    எத்தகைய கருத்து மோதல்கள் இருந்தாலும் தனி மனித உறவுகளில் நாகரிகமான அணுகுமுறைகளையே கையாண்டு வருகிறோம். ராஜீவ் சிலை அவமதிப்புக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் துளியளவும் தொடர்பில்லை என்பதை உண்மையான காங்கிரசுக்காரர்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

    ராஜீவ் சிலையை அவமதித்ததில் தமிழக முதல்வரையும் தொடர்புபடுத்தி அவருடைய தூண்டுதலில்தான் இது நிகழ்ந்திருக்கிறது என்று அவதூறு பரப்புவதிலிருந்து அத்தகைய நபர்களின் அரசியல் உள்நோக்கத்தையும் சதித் திட்டத்தையும் அப்பாவி காங்கிரசுத் தொண்டர்களும் தமிழகப் பொதுமக்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். இத்துடன், இராஜபக்சே அழைப்பு தொடர்பாக நான் அளித்த பேட்டியின் மூலம் தனிப்பட்ட முறையில் உண்மையான காங்கிரசுத் தொண்டர்களின் மனம் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    திமுக கூட்டணியை விரும்பாதவர்கள் விடுதலைச் சிறுத்தைகளை ஒரு சாக்காக வைத்து பரப்புகிற அவதூறுகளுக்கும் வன்முறை செயல்களுக்கும் எதிர்வினை ஆற்றவேண்டும் என்கிற அடிப்படையில் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் போராட்ட நடவடிக்கைகளில் ஏதும் ஈடுபடவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

    கட்சித் தலைமையின் வழிகாட்டுதலின்றி தனிப்பட்ட முறையில் விடுதலைச் சிறுத்தைகள் யாரும் உணர்ச்சிவயப்பட்டு தன்னிச்சையாகச் செயல்பட வேண்டாம் எனவும் சகிப்புத்தன்மை யோடும் பொறுமையோடும் அமைதிகாக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன் எ‌ன்று திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

    • S. Ramananathan. Says:

      The DMK has never been loyal to the Congress.

      Since the days of Karunanidhi, the dravidian ideologists have been against Congress and therefore, no true Congresswala would bear such indignation.

      Karunanidhi was directly involved in the assassinatin plot of India Gandhi and there was a Supreme court case also.

      Of course, the involvement DMK in the killing of Rajiv Gandhi is wellknown.

      Even Annadurai was under clouds, when Seshan suggested that he could be a CIA agent or handler.

      Thus, Tiruma is not a better choice of such dubious alliance!

  5. vedaprakash Says:

    தமிழர்களின் உரிமையை புறக்கணிக்கிறது காங்கிரஸ்: திருமாவளவன்
    பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2010,02:50 IST
    மாற்றம் செய்த நாள் : அக்டோபர் 24,2010,02:51 IST
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=112747

    சென்னை: “”தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாததால், தமிழர்களை அந்த கட்சி புறக்கணித்து வருகிறது” என சென்னையில் நடந்த விழா ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார். அவர் மேலும் பேசியதாவது: என்னை பதவி விலக சொல்கிறார்கள் சிலர். கடந்த பார்லிமென்ட் தேர்தலில் நாங்கள் இரண்டு இடங்களில் போட்டியிட்டோம். ஒன்றில் வெற்றி பெற்றோம். இரண்டு தொகுதியில் மட்டும் எங்களுக்காக காங்கிரஸ் உழைத்தார்கள். ஆனால், நாங்கள் காங்கிரஸ் போட்டியிட்ட 15 இடங்களில் உழைத்தோம். நாங்கள் உழைத்து வெற்றி பெற்ற 9 தொகுதியில் அவர்கள் ராஜினாமா செய்வார்களா. 1967க்கு பின் காங்கிரசால் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால், தமிழர்களை அந்த கட்சி புறக்கணித்து வருகிறது. என்றார்.

    • S. Ramananathan. Says:

      Tiruma has been known for his anti-Indian feelings and he has never been a reliable person.

      He would be very often changing his colours, siding with diffeent politial parties, getting money from the Christians and Muslims.

      Man of his close friends and associated used to expose his hypoctitical activities.

      But for his SC / Dalit status, he has no oher qualification or plus point in political gamblings.

  6. S. Ramananathan. Says:

    The Tamilnadu Congress fellows have been just like puppets without any self-respect or sense as humanbeings.

    When Rajiv Gandhi’s statue is desecrated, they are coming to sense and shouting here and there.

    But Mahathma Gandhi is derided, they keep quite. It has happened many times in Tamilnadu.

    When our borders are crossed by the jihadi terrorists, they are not worried.

    It is better that original Congressmen again come out and identify themselves as Congresswalas, instead of acting as Congress (Sonia), Congress (DMK), Congress (Jayalalita)…………..and so on!

  7. John Chandrasekharan Says:

    Everywhere, some Satan-like dangerous people are nurtured by the vesed politricians, for one reason or the other.

    When Muslims, Christians, Dalits, and the controversial people like Tirumavalavan come, naturally, they want to exploit.

    After all, for the post of MP / MLA, these agents would go to the any extent.

    Thus, the politicians have been confident enough to test them by all means at different situations!

  8. தமிழன் Says:

    அரசியல் நாற்றம் உன் தலைக்குமேல் எறிவிட்டது திருமாவை இழிவுபடுத்தி எழுதினால் கடவுல் உன்னை தன்டிப்பார் நி கண்டிப்பாய் லாரியில் அடிபட்டு இரப்பாய் கடவுலின் தன்டனை விரைல் வரும்

பின்னூட்டமொன்றை இடுக