விஷமிகளால் காஷ்மீரில் பிரச்னை : சோனியா வேதனை! அமெரிக்காவிலிருந்து அறிக்கையா!

விஷமிகளால் காஷ்மீரில் பிரச்னை : சோனியா வேதனை

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=53324

புதுடில்லி – ஆகஸ்ட் 02,2010: காஷ்மீரில் அதிகரித்துவரும் வன்முறை சம்பவங்கள், தனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளதாக, காங்., தலைவர் சோனியா தெரிவித்துள்ளார். காங்., கட்சி பத்திரிகையான, “சந்தேஷ்’ -ல், அவர் தெரிவித்துள்ளதாவது:

“காஷ்மீரில் அதிகரித்துவரும் வன்முறை சம்பவங்கள் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன. இதுபோன்ற கால கட்டத்தில், மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது  அவசியம். இந்த வன்முறை சம்பவங்களை விஷமிகள் வேண்டுமேன்றே கட்டவிழ்த்து விடுகின்றனர். இதற்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது  சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். காஷ்மீரில் பலருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதன் மூலம் பலரது வாழ்க்கைத்தரம் உயரும். பயங்கரவாதம் மற்றும் வன்முறை போன்றவற்றுக்கு இதுவே மாற்று சக்தியாக இருக்கும். வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பீகார் சட்டசபை தேர்தல் மிகவும் முக்கியமானது. காங்., கட்சியின் வெற்றிக்கு தொண்டர்கள் கருத்து வேறுபாடின்றி பாடுபட வேண்டும். மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு வழங்கிய வளர்ச்சி நிதி குறித்து, மக்களிடையே எடுத்துச் சொல்ல வேண்டும். இவ்வாறு சோனியா தெரிவித்துள்ளார். மேலும், பீகாரில் காங்கிரசார்  ஒன்றாகப்  முயன்று  பணியாற்றினால், சட்டசபைத் தேர்தலை, எதிர்கொள்ள வசதியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவில் சோனியா இல்லாதபோது, காங்கிரஸ் பத்திரிக்கையில் இவ்வாறு செய்தி வெளியிட்டிருப்பது வேடிக்கையக இருக்கிறது.

குறிச்சொற்கள்: , , , , , , ,

ஒரு பதில் to “விஷமிகளால் காஷ்மீரில் பிரச்னை : சோனியா வேதனை! அமெரிக்காவிலிருந்து அறிக்கையா!”

  1. R. Karuppusami Says:

    We, Indians, do not know as to whether two / three Sonias are there in different places.

    I know about Hitler, as he appeared reportedly at two different places at the same time!

பின்னூட்டமொன்றை இடுக