Posts Tagged ‘சிதம்பரத்தின் குசும்பு’

அயோத்திப் பிரச்சனையில் வரப் போகிற தீர்ப்பு இறுதியானதல்ல: உள்துறை சிதம்பரத்தின் குசும்புகளும், காங்கிரஸின் மறுமுகமும்!

செப்ரெம்பர் 23, 2010

அயோத்திப் பிரச்சனையில் வரப் போகிற தீர்ப்பு இறுதியானதல்ல: உள்துறை சிதம்பரத்தின் குசும்புகளும், காங்கிரஸின் மறுமுகமும்!

சிதம்பரத்தின் பொறுப்பற்ற பேச்சு, செயல்பாடுகள்: நிதித்துறையைக் கெடுத்து, இப்பொழுது சம்பந்தமே இல்லாத உள்துறைக்கு வந்து, முஸ்லீம்கள் என்றாலே பேதியோடு அலையும் சிதம்பரம்[1], அயோத்தியா விஷயத்தில் தேவையற்ற பொறுப்பற்ற முறையில் பேசி மறைமுகமாக வன்முறையைத் தூண்ட முயற்சித்து வருவது தெரிகிறது[2]. திக் விஜய சிங் என்ற காங்கிரஸ் தரப்பு பேச்சாளர், மறுபடியும் மத கலவரங்கள் வெடிக்கும் என்று ஒப்பாரி வைத்து மிரட்டியுள்ளார்[3].

நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த தேதியில் வெளியாகும் என்று ஏன் காங்கிரஸ் கலாட்டா செய்கிறது? நீதிமன்றத்தில் தினம்-தினம் பல தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதை விட முக்கியமான பல தீர்ப்புகள் உச்சநிதி மன்றத்தில் தீர்மானமாக சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனல், அப்பொழுதெல்லாம், இம்மாதிரியாக யாரும் விளம்பரப்படுத்தியதில்லை. மக்களை பீதிக்கு உண்டாக்கி, கலவரத்தைத் தூண்டும் அளவிற்கு எடுத்துச் சென்றதில்லை. பிறகு, ஏன் இப்பொழுதுள்ள அரசு செய்து வருகிறது? xசம்பந்தப்பட்ட்ட வாதி-பிரதிவாதிகளே அமைதியாக இருக்கும் போது, காங்கிரஸ், கருணாநிதி, சிதம்பரம் என்று சம்பந்தமே இல்லாதவர்கள் ஏன் தூபம் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்?

மசூதிக்காக வழக்காடும் காங்கிரஸ் வக்கீல்: காங்கிரஸ் இந்த உண்மை வெளிவந்து விடும் என்று பயப்படுகிறாதா? மசூதிக்காக வழக்காடும் பிரதிவாதி எண்.17 – ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் முன்னால் காங்கிரஸ் முதல் மந்திரி ஸ்ரீபதி மிஸ்ராவின் மறுமகன்[4]. இவர்தான், உச்சநீதி மன்றத்தில், இவழ்ழகின் தீர்ப்பை ஒத்திப் போடவேண்டும் என்று வழக்குப் போட்டவர், ஆனால், நேற்றே (புதன் கிழமை) தள்ளுபடி செய்யப் பட்டது. உடனே சிதம்பரம் கூட்டம் போட்டு இப்படி பேசுகிறார். அலஹாபாத் நீதிமன்றம் ஏற்கெனெவே, இவரது மனுவை கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. இப்படி முஸ்லீம்களுக்காக வாதிடும் வக்கீல் நீதிமன்றத்திற்கு ஓடும் / ஓடுகின்ற வக்கீல்[5], “இப்பிரச்சினையைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்” என்றும் சொல்லியுள்ளாராம்!

திக் விஜய சிங்கின் பொறுப்பற்ற பேச்சு[6]: திக் விஜய சிங் என்ற காங்கிரஸ் தரப்பு பேச்சாளர், மறுபடியும் மத கலவரங்கள் வெடிக்கும் இதனால் நாட்டின் பொருளாதார நிலை சீரடையும் என்று ஒப்பாரி வைத்துள்ளார். நமக்கு முக்கியமானது நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சியே அன்றி, இத்தகைய பிரச்சினைகள் அல்ல. இதற்காக நாடி ஏற்கெனவே அதிக விலையைக் கொடுத்தாகி விட்டது (Congress on Wednesday warned against another spell of communal violence and strife undermining the country’s current economic boom. “The focus at this point should be entirely on economic growth and not on controversies like this,” said party general secretary Digvijay Singh. He said the country had already paid a heavy price as a consequence of the Ayodhya demolition).

அயோத்திப் பிரச்சனையில் வரப் போகிற தீர்ப்பு இறுதியானதல்ல[7]: இந்த சாதாரண விஷயம் எல்லோரிக்கும் தெரியும், இது சிதம்பரம் சொல்லித்தான் தெரிவதில்லை. பிறகு எதற்காக இந்த கலாட்டா?  இதில் வாதிடுபவர்கள் சட்டம் தெரிந்தவர்கள், சரித்திரம் அறிந்தவர்கள். சிதம்பரத்தைப் போல ஜிஹாதிகளுக்கு பயப்படும், பரிந்து பேசும் கோழைகள் அல்ல. முஸ்லீம் கூட்டத்தில் பங்கு கொண்டு, ஃபத்வா போடும் போது[8], “ஐயையோ, நான் அப்பொது அங்கு இல்லவே இல்லை”, என்று ஓடிப் போகும் பயந்தாகொள்ளிகள் அல்ல[9].

அதனால் பாதிக்கப்படும் எந்தத் தரப்பினரும் அப்பீல் செய்ய வாய்ப்புள்ளது: தாலியறுத்த கசாப்புக்காரன் கசாப் கூட அப்பீலுக்குத் தான் செல்கிறான். பாதிக்கப் பட்டவர் கோடிக்கணக்கான இந்தியர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவனுக்குதானே கோடிக்கணக்கில் செலவு செய்து வருகிறார்கள். அவனைப் போன்ற ஜிஹாதி பயங்கரவாதிகளுக்கு, காஷ்மீரத்தில்  பெண்களை வேறு கூட்டிக் கொடுக்கிறர்கள். இந்த அளவிற்கு கேவலமாக உள்ளவர்கள் தாம் “இறைவனின் மீது” என்று மனிதர்களைக் கொன்றுக் குவிக்கிறர்கள்.

எனவே தீர்ப்பை அமைதியாக எதிர்கொள்ள அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும் என்று உள்துறை அமைச்சர் .சிதம்பரம் கூறியுள்ளார்: அயோத்தி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் இதுகுறித்து ப.சிதம்பரம் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், ஒரு சட்ட நடவடிக்கையின் முடிவுதான் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளிக்கப் போகும் இந்தத் தீர்ப்பு. இதை அமைதியான முறையில் அனைவரும் எதிர்கொள்ள வேண்டும். இந்த தீர்ப்பில் திருப்தி இல்லாத ஒருவரோ அல்லது இரு தரப்பினருமோ சுப்ரீம் கோர்ட்டை உடனடியாக அணுகி அப்பீல் செய்ய வாய்பபுகள் உள்ளன. இந்தத் தீர்ப்பு இறுதியானதல்ல, யார் வேண்டுமானாலும் அப்பீல் செய்து நிவாரணம் தேடலாம். எனவே இதை அமைதியான முறையில் எதிர்கொள்வதை அனைத்துத் தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும். எந்த வகையிலும் சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. இந்தத் தீர்ப்பு ஒருவருக்கு வெற்றி என்றோ இன்னொருவருக்கு தோல்வி என்றோ பார்க்கக் கூடாது.

கோவிலுக்குத் தீர்ப்பு சாதகமாக இருந்தால்: கோவிலுக்காக தீர்ப்பு சாதகமாக இருந்தால், உடனே கோவில் கட்டுவதற்கு அனுமதி கேட்பார்கள். ஆனால், அந்த 67 ஏக்கர் நிலம் மத்திய அரசின் கையில் உள்ளது கோவிலை ஆதரிப்பவர்கள் அரசின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள். ஆனால், நிச்சயமாக முஸ்லீம்கள் இதை எதிர்ப்பார்கள்[10]. (In the event of the verdict going in favour of those favouring a mandir, they would immediately demand permission to construct the Ram temple. A major impediment in this will be the fact that 67 acres around the disputed site is in the possession of the Union government. The temple advocates could pile up pressure on the government to enact a law to hand over the acquired land to the temple trust. But this is certain to be contested by Muslims).

மசூதிக்குத் தீர்ப்பு சாதகமாக இருந்தால்: மசூதிக்காக போராடுபர்களுக்கு சாதகமாக இருந்தால், உடனடியாக ஒரு “சரித்திர தவறு”. நடந்ததை சரி செய்யவேண்டும் என்று பாபரி கமிட்டிக்கு கொடு என்று குரல்கள் எழும்.  (In the event of the verdict favouring the masjid votaries, there would be calls to immediately correct a ‘historic wrong’ and hand over the site to the Babri committee. As the next legal step is available to the losing party, the latter is sure to approach the higher judiciary for relief).
கையகப்படுத்தியுள்ள நிலத்தை மாற்றிக் கொடுக்க தாமதம் ஏற்பட்டால்: அந்நிலையிலும் தோற்கும் குழு மேல்முறையீடு செய்யும். அந்நிலையில் நிலத்தை மாற்றுவதில் ஏற்படும் தாமதத்திற்கு சமந்தப்பட்டக் குழுக்கள் நீதிமன்ற தீர்ப்பு கொடுத்தப் பிறகுக்கூட, தாங்கள் பாதிக்கப் படுகிறோம், பலனை அனுபவிக்காமல் அரசு செய்கிறது என்பார்கள். (Any intervention that would delay the transfer of the land is certain to provide an opening to community members to invoke ‘victimhood politics’ — despite the court’s order, justice was being denied to them).

அனைத்து மாநில அரசுகளும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்: தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்க முன்வர வேண்டும். தீர்ப்பையொட்டி அனைத்து மாநில அரசுகளும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார் ப.சிதம்பரம். தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் இன்று காலைதான் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதை பரிசீலித்த நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச், இதை விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை. மனுதாரர் வேறு கோர்ட்டை நாடுமாறு கூறி விட்டது. இதனால் அலகாபாத் உயர்நீதிமன்றம் திட்டமிட்டபடி தனது தீர்ப்பை 24ம் தேதி அறிவிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்தப் பின்னணியில்தான் ப.சிதம்பரம் இன்று அவசரமாக செய்தியாளர்களைச் சந்தித்து அனைவரும் அமைதி காத்து, ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

மறுபடியும் கோவில்-மசூதி என்று பிரச்சினையை மாற்றியுள்ளது: காங்கிரஸ் இப்படி தொடரெந்து நீதித் துறையில் புகுந்து சட்டத்தை அசிங்கமாக்குவது நல்லதல்ல என்பதை மக்கள் பிறகுதான் உணர்வர். ஏற்கெனவே, ஒய்வு பெற்ற காங்கிரஸ் ஆதரவான நீதிபதிகளை வைத்துக் கொண்டு, தொடர்ந்து முக்கியமான பிரச்சினைகளையெல்லாம் ஏதோ கமிஷன் வைத்து[11], அறிக்கைத் தாக்கல் செய்து[12], பிரச்சினைகளைத் தீர்ப்பது போல, சட்டரீதியாக, மேன்மேலும் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. இதேபோல, இந்த ராமஜன்மபூமி-பாபரி மஸ்ஜித் வழக்கிலும் குளறுபடி செய்ய காங்கிரஸ் தீர்மானமாக உள்ளது என்பது தெரிகிறது. கோடிக்கணக்கில் ஊழலில் நாறி, பாலம், கூரைகளே தினம்-தினம் விழும் போது, ஒருவேளை, இப்படி காங்கிரஸ் செய்கிறது என்றும் ஊடகங்கள் விளக்கம் அளிக்கலம், ஆனால், முன்பு இது உள்ளூர் பிரச்சினை, வாதி-பிரதிவாதி விரச்சினை, மற்றவர்கள் தலையிடக் கூடாது என்றெல்லாம் சொன்னதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.


[1] வேதபிரகாஷ், சிதம்பரமும், உள்துறை அமைச்சரும்: இஸ்லாமும், ஜிஹாதும்!, http://islamindia.wordpress.com/2010/01/10/சிதம்பரமும்-உள்துறை-அமை/

[2] வேதபிரகாஷ், ஜிஹாத் என்று சொல்லி வாபஸ் வாங்கிய பயந்தான்கொள்ளி, “வந்தே மாதரத்திற்கு” ஃபத்வா போட்ட போது நான் அங்கில்லை என்ற புளுகிய பொய்யர், இன்று தான் “காவி பயங்ரவாதம்” என்று சொன்னது சொன்னதுதான் என்கிறாராம்!, http://islamindia.wordpress.com

[3] http://timesofindia.indiatimes.com/india/High-court-may-decide-not-to-decide-title-suits-feel-netas/articleshow/6610104.cms

[4] http://www.indianexpress.com/news/petitioner-kin-of-excong-cm-and-defendant-in-title-suit/686407/

[5] http://www.thehindu.com/news/national/article777442.ece

[6] http://timesofindia.indiatimes.com/india/High-court-may-decide-not-to-decide-title-suits-feel-netas/articleshow/6610104.cms

Read more: High court may ‘decide not to decide’ title suits, feel netas – The Times of India http://timesofindia.indiatimes.com/india/High-court-may-decide-not-to-decide-title-suits-feel-netas/articleshow/6610104.cms#ixzz10JAUR2GW

[7] In fact, Article 134A of the Constitution of India allows a party aggrieved to make an oral application in this regard immediately after the passing of the judgment.

[8] தினமணி, வந்தே மாதரம் மீதான தடை நீக்கப்படாது: முஸ்லிம் அமைப்பு, First Published : 10 Nov 2009 12:33:38 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=152349&SectionID=130&MainSectionID=130&SEO

[9] வேதபிரகாஷ், வந்தே மாதரம் மீதான தடை நீக்கப்படாது: முஸ்லிம் அமைப்பு, http://islamindia.wordpress.com/2009/11/11/வந்தே-மாதரம்-மீதான- தடை-நீ/

[10] http://economictimes.indiatimes.com/news/politics/nation/Ayodhya-verdict-Chidambaram-advises-caution/articleshow/6610340.cms

[11] ராஜிந்தர் சச்சார், ரங்கநாத் மிஸ்ரா, லிபரான், சகீர் அகமது என்று பல கமிஷன் / கமிட்டிகள் வைத்து விளம்பரப்படுத்தி, கவர்ச்சிகர அறிக்கைகளை சமர்ப்பிக்க செய்து தமாஷக்கள் செய்துள்ளது.

[12] சச்சார் கமிஷனை உடனடியாக அமூக்ல் படுத்து என்ரு முஸ்லீம்கள் கோழமிட்டனர், ஆனால், கிருத்துவர்கள் எதிர்த்தவுடன் அமைதியாகி விட்டர்து. இதே நிலைதான் தமிழகத்திலும் ஏற்பட்டது – கருணாநிதி முஸ்லீம்கள்-கிருத்துவர்களுக்கு உள்-ஒதுக்கீடு என்று செய்தபோது, கிருத்துவர்கள் தமக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டனர்.