Posts Tagged ‘ஷரீயத் கோர்ட்’

சவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: கேரளப்பிரச்சினையா, இந்தியப் பிரச்சினையா?

ஏப்ரல் 14, 2013

சவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: கேரளப்பிரச்சினையா, இந்தியப் பிரச்சினையா?

Saudi colour code for Companies4

சவுதிக்கான உள்ளூர் பிரச்சினை: எகிப்தில் ஏற்பட்ட புரட்சி மற்றும் பக்கத்து நாடுகளில் அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் காரணமாக சவுதி அரேபியா பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உள்நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் வராமல் தடுக்கவும், ராணுவத்தை பலப்படுத்தவும் முடிவு செய்துள்ளது. சொந்த நாட்டினருக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் புதிய கொள்கை முடிவுகள் கொண்டுவர சவுதி அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு சவுதி அரசின் புள்ளியியல் மற்றும் தகவல் தொடர்பு துறை எடுத்த கணக்கெடுப்பில் நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் 12.2 சதவீதம் அளவில் உயர்ந்து இருப்பது தெரிய வந்தது. அதாவது 5 லட்சத்து 88 ஆயிரம் பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். குறிப்பாக 15 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 39 சதவீதம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் தவறான வழியில் செல்லாமல் இருக்க புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. இதற்காக புதிய தொழிலாளர் கொள்கை வகுக்கப்பட இருக்கிறது. இதன்மூலம் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தும் விஷயத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும். உள்நாட்டினருக்கு அதிக அளவில் வேலை கொடுக்கும் வகையில் இது இருக்கும்.

Saudi colour code for Companies

நிதாகத் என்றால் என்ன – ஏன் அமூல் படுத்த வேண்டும்: உணவகம், சிறு கடைகள், சிறிய அளவிலான தொழில் நிறுவனங்கள் போன்றவற்றை, சவுதி அரேபியா நாட்டினர் தவிர்த்து, பிற நாட்டினர் செய்து வருகின்றனர். இந்நிலையில், இனிமேல், இவ்வகை சிறுதொழில்களை சொந்த நாட்டினர் மட்டுமே நடத்தவேண்டும் என்பதற்காக, “நிதாகத்’ என்ற பெயரில் புதிய சட்டத்தை, சவுதி அரேபிய அரசு கொண்டு வந்துள்ளது.நேற்று முதல், புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. புதிய சட்ட விதிமுறைகளை அமல்படுத்தாத நிறுவனங்கள் மீது அந்நாட்டு தொழில் துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என, ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Saudi colour code for Companies3
முஸ்லீம் சட்டத்தின்படி பிரிக்கப்படும் வகைகள்[1]: “நிதாகத்” தொழிலாளர் கொள்கை அல்லது வேலைகள் பிரிப்புமுறைப்படி, சவுதி கம்பெனிகள் நான்காகப்பிரிக்கப்படுகின்றன[2]:

  1. நீளம் – அல்லது “VIP” வகை கம்பெனிகள் உலகம் முழுவதும் இணைதளத்தின் மூலமாக ஊழியர்கள் / வேலையாட்களை வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும்.
  2. மஞ்சள் – 23-02-2013 வரை தனது நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியும். இருக்கின்ற அயல்நாட்டு ஊழியர்கள் / வேலையாட்களின் விசாக்கள் ஆறுமாதங்களில் முடிந்துவிடும் போது, அவற்றை புதுப்பிக்க முடியாது.
  3. சிவப்பு – 26-11-2011 வரை தனது நிலையை மாற்றிக் கொள்ள முடியும். இருக்கின்ற அயல்நாட்டு ஊழியர்கள் / வேலையாட்களின் விசாக்கள் ஆறுமாதங்களில் முடிந்துவிடும் போது, அவற்றை புதுப்பிக்க முடியாது.
  4. பச்சை – சவுதிமயமாக்குதல் என்ற கொள்கையின் படி, மஞ்சள் மற்றும் சிவப்பு கம்பெனிகளினின்று, அயல்நாட்டு ஊழியர்கள் / வேலையாட்கள் வெளியேறிய பிறகு, உள்ளூர்காரர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள்.

Saudi colour code for Companies2

புதிய தொழிலாளர் கொள்கை அல்லது வேலைகள் பிரிப்புமுறை: சவுதி அரேபியா “நிதாகத்” என்ற புதிய தொழிலாளர் கொள்கை அல்லது வேலைகள் பிரிப்புமுறையை (Nitaqat’ (classification in jobs) / new labour policy ‘Nitaqat’ ) கொண்டுவருகின்றனர் என்றால், அதற்கு இந்தியாவோ, மற்றவரோ, அங்கு வேலை செய்யும் இந்தியர்களோ ஒன்றும் சொல்லமுடியாது, செய்யமுடியாது. ஒரு கம்பெனியில் / தொழிற்சாலையில் வேலை செய்கிறர்கள். ஏதோ காரணங்களுக்காக, எஜமானன்-சேவகன், முதலாளி-தொழிலாளி, என்ற ரீதியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலே சேவகன்-தொழிலாளி தனது வேலையை மாற்றிக் கொள்ளவேண்டியத்தான்.

Saudi colour code for Companies5

படிப்படியாக வேலைப்பிரிப்பு முறை அமூலுக்கு எடுத்து வந்தது: இம்முறைப்பற்றி இப்பொழுதுதான் தெரியவந்துள்ளது என்பது ஒரு பெரிய மோசடி-ஏமாற்று வேலை ஆகும்[3]. தெரிந்துதான் இந்தியர்கள் (முஸ்லீம்கள், கேரளத்தவர், மலையாளிகள்) சென்றனர். செல்லவைத்தவர்களும் கோடிகளை அள்ளியுள்ளனர்.

  • எண்பதுகளினின்றே வளைகுடா ஒத்துழைப்பு மைய நாடுகள் வெளிநாட்டு [Gulf Cooperation Council (GCC) countries] வேலைக்காரர்களைக் குறைக்க வேண்டும் உள்ளூர்வாசுகளுக்கு வேலைத்தரவேண்டும் என்று கொள்கைகளை திட்டமிட்டு வந்துள்ளன[4].
  • 2003லஏயே அரசு 10 ஆண்டுகளில் வெளிநாட்டு வேலையாட்களை 20%மாக குறைக்கப்படும் என்று அறிவித்தது. அதாவது, 80% வெளியே போகவேண்டியதுதான்[5].
  • 2004லிலேயே சவுதியின் சூரா கவுன்சில் 70% வேலை உள்ளூர்வாசிகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது[6]. அதாவது, 30% தான் வெளிநாட்டவர்களுக்கு! இல்லையென்றால், சவுதியினின்று வெளியேறும் பணம் பிடிக்கப்பட்டு உள்ளூர் முதலீட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும். அதாவது, வெளியாட்களுக்கு அந்தளவு சம்பளம் குறையும், குறைக்கப்படும்.
  • 2009ல் அதற்கான மசோதா எடுத்துவராப்பட்டது[7].
  • பிறகு 2011ல் சட்டத்தையும் நிறைவேற்றியது.
  • இப்பொழுது ஆறுமாத கால அவகாசம் கொடுத்துள்ளது.

Saudi scavenging

 

சவுதியில் உள்ள குப்பைத் தொட்டிகளின் நிறங்கள் – பச்சை, சிவப்பு, நீளம்

ஆசியர்கள், இந்தியர்கள், பேண்கள் கொடுமைப்படுத்தப் படுவது: ஆசியப்பெண்கள் எவ்வாறு கொடுமைப்படுத்தப் படுகின்றனர் என்று பற்பல செய்திகள் வெளிவந்தன. மனித உறிமைகள் மீறல் அறிக்கையிலும் வெளிக்காட்டப் பட்டன[8]. தமிழில் கூட வெளியிடப்பட்டுள்ளது[9]. ஆனால், ஏர்பஸ்ஸில் 300-400 என்று இந்தியப்பெண்களே தங்களது முடிச்சு-மூட்டைகளோடு அமீரக விமானநிலையங்களில் எத்தனையோ தடவைப் பார்த்திருக்கலாம். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் எப்படி நடத்தப்படுகின்றன என்று அறிக்கைகள் உள்ளன[10]. இருப்பினும் இந்தியர்கள் சென்றுதான் உள்ளனர்[11].

Two Arabs scavenging for food

 

இரு சவுதி வேலையாட்கள் குப்பைத் தொட்டியில் உணவைத் தேடுகின்றனராம்!

5 லட்சம் பேருக்கு வேலை போகும்: இந்த புதிய சட்டத்தால், அந்நாட்டில் செயல்பட்டு வரும், ஏழு லட்சம் சிறு நிறுவனங்களில், 84 சதவீத நிறுவனங்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் நாளிதழ்கள் கூறுகின்றன. இல்லையேல், அந்த நிறுவனங்களில், அந்நாட்டைச் சேர்ந்த ஒருவரையாவது வேலைக்கு நியமிக்கவேண்டும்.னைதில் ஒன்றும் தவறில்லையே. இதனால், கேரளாவின், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை உள்ளது. இது தவிர, பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கையும் சேர்த்தால், வேலையிழப்பவர் எண்ணிக்கை, ஐந்து லட்சத்தை தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.

How workers live in Saudi Arabia

 

வெளிநாட்டு வேலையாள் தங்கியுள்ள இடம்

இந்திய அரசியல்வாதிகளின் பங்கு: தற்போது எழுந்துள்ள இந்த “புதிய பிரச்னை” குறித்து, கேரள முதல்வர், உம்மன் சாண்டி, பிரதமருக்குகடிதம் எழுதியுள்ளார். அதில், “சவுதி அரேபியாவில், கேரளாவைச் சேர்ந்த ஆறு லட்சம் பேர் பல வேலைகளை செய்து வருகின்றனர்; அவர்களின் நலன்களை காக்க வேண்டும்” என, தெரிவித்துள்ளார். ஆலோசனைஇதுகுறித்து, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர், வயலார் ரவி கூறுகையில், “சவுதி அரேபியாவில் எழுந்துள்ள பிரச்னை குறித்து, அந்நாட்டிற்கான இந்திய தூதர், பாகித் அலி ராவிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தியா தனது கவலையை தெரிவித்துள்ளது. விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகிறேன்,” என்றார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இ.ஏ.அஹமது, சவுதி அரேபியாவின் வெளியுறவு துணை அமைச்சர் மற்றும் இளவரசர் அப்துல் ஆஜீஸை துஸான்பேயில் சந்தித்தபோது (28-03-2013) இந்திய குடிபெயர்ந்தவர்களுக்கு பாதிக்காமல், ரியாதில் உள்ள சவுதி அரசு எந்த முடிவையும் எடுக்காது என்று நம்பிக்கைத் தெரிவித்தார்[12]. “ஆஹா, அதற்கென்ன, இந்தியர்களுக்காக நாங்கள் எப்பொழுதும் நன்றானதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறோம். நான் ஊருக்குச் சென்றதும், தொழிலாளர் துறையிடம் இதை சொல்லிவிடுகிறேன்”, என்று வாக்குறுதி கொடுத்தார். 2011 கணக்குப்படி, உலகம் முழுவதும் கேரளத்தவர் சுமார் 23 லட்சம் (2.28 million Keralites) இருக்கின்றனராம், அதில், 570,000 பேர் மட்டும் சவுதியில் உள்ளனராம்[13]. ஆனால், சட்டத்திற்குப் புறம்பாக 200,000 பேர் இருக்கின்றனர் என்று குறிப்பிடுவதில்லை[14].

Saudi scavenging2

 

சவுதியில் குப்பை அள்ளும் பணி

மலப்புரத்திலிருந்து அனுப்பப்பட்ட முஸ்லீம்கள் எதற்காக சென்றனர்?: கேரளத்தவரை, மலையாளத்தவரை இப்படி லட்சக்கணக்கில் இந்தியாவிலிருந்து வெளியே போ என்று யாரும் சொல்லவில்லை. மலப்புரம் மாவட்டம் “முஸ்லீம்களுக்காக” என்று நம்பூதிரிபாடு தாரை வார்த்துக் கொடுத்தபோதுதான், முஸ்லீம்கள் அதிக அளவில் சவுதிக்கு அனுப்பப்பட்டனர். இதைத் தொடர்ந்து மற்றவர்கள் சவுதிக்குச் சென்றல் காசு வரும் என்று ஆசைப்பட்டு மற்றவர்கள் செல்ல ஆரம்பித்தனர். ஆனால், அதிகமாக சென்றது முஸ்லீம்கள் தான். முஸ்லீம்கள் அல்லாதவர்கள் கூட முஸ்லீம்களாக மாறினர், மாற்றப்பட்டனர், முஸ்லீம் போன்ற பெயர்களை வைத்துக் கொண்டனர் போன்ற உண்மைகள் ஏராளமாக உள்ளன.

Saudi scavenging3

 

சவுதியில் குப்பை அள்ளும் பணியாட்கள்

செக்யூலரிஸ-கம்யூனலிஸப் பிரச்சினைகளும் வேடங்களும்: கம்யூனலிஸப் பிரச்சினையை செக்யூலரிஸமாக்குவது, செக்யூலரிஸப் பிரச்சினையை கம்யூனலிஸமாக்குவது என்பது இந்திய அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்லாது, சித்தாந்தவாதிகளுக்கும் நன்றாகவே தெரியும். இதில் பாதிக்கப்படுவது இந்துக்கள், பயனடைவது முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள். இந்த சூழ்ச்சிதான் இங்கு நடக்கிறது, கேரள முஸ்லீம் மற்றும் கிருத்துவ அமைச்சர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அறிக்கைகள் விட்டுக் கொண்டு, தாராளமாக இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என்று அள்ளிவீசிக்கொண்டிருக்கின்றனர். பயனடையப் போவது யார் என்று பார்க்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்த வரைக்கும் 2014 தேர்தல் என்பதால், 2013ல் என்ன நடந்தாலும், அதனை தமக்கு சாதகமாக்கிக் கொள்ள “செக்யூலரிஸ”ப் போர்வையில், அவர்கள் என்னவேண்டுமானாலும் பேசுவார்கள்.

Saudi Arabia and its flag

 

சவுதி அரேபியாவும், அரசௌ சின்னமும்

முஸ்லீம்களின் விஷமத்தனம் –  சவூதிவாழ் இந்தியர்களுக்கு ஆப்புசீவிய மியன்மார் பெளத்த தீவிரவாதிகள்[15]: “எண்ணெய் வளமிக்க சவூதி அரசு 500,000 பர்மிய முஸ்லிம்களுக்கு வேலையுடன் கூடிய அகதிகள் குடியுரிமையை வழங்குவதாகக் கடந்த வாரம் அறிவித்தது”, சரிதான் என்று சொல்லிவிட்டு, “….சவூதியின் இந்தத் திடீர் முடிவுக்கு மறைமுகக் காரணம் மியான்மர் பவுத்த தீவிரவாதிகள் என்று கூட ஒரு கோணத்தில் சொல்லலாம்”, என்று முடிவுக்கு வந்துள்ளதில் தான் விஷயம் வெளிப்படுகிறது. சவுதி அரேபியாவிற்கு பௌத்தத் தீவிவாதிகள் செல்லப்போகின்றனராம், இப்படியும் சில முஸ்லீம்கள், இணைத்தளங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதாவது, மியன்மாரில் முஸ்லீம்கள் கொல்லப்படுகின்றனர், அவதிக்குள்ளாகின்றானர். அதனால், மியன்மார் முஸ்லீம்கள் சவுதிக்குச் செல்லலாம் என்றால், பௌத்தர்களும் அங்கு செல்ல தீர்மானித்துள்ளனராம். இதனால், இணைத்தள ஜிஹாதிகள், பௌத்தத் தீவிரவாதிகள் செல்கின்றனர் என்று பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்! பர்மாவில் ஏன் முஸ்லீம்களுக்கும், பௌத்த மதத்தினருக்கும் பிரச்சினை ஏற்படுகிறது என்பதற்கு மற்ற காரணங்களும் இருக்கின்றன[16]. பௌத்தர்கள் கொடுமைப் படுத்திய புகைப்படங்களை திரித்து[17], முஸ்லீம்கள் பௌத்தர்களால் கொடுமைப்படுத்தப்படுகிறாற்கள், கொல்லப்படுகிறார்கள் என்று திரித்து புகைப்படங்களை வெளியிட்டு, அதன்மூலம் அஸ்ஸாமில் தூண்டி விட்டு கலவரம் நடத்தினர்[18]. ஆகஸ்டு 2012ல் மும்பையில் இதையும் ஒரு சாக்காக[19] வைத்துக் கொண்டு ராஸா அகடெமி நடத்திய ஊர்வலத்தை மாற்றி[20], கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர்[21]. ஒருவேளை, அதே முறையை இதிலும் பின்பற்றுகிறார்களோ என்னமோ.

 

வேதபிரகாஷ்

14-04-2013


[2] Nitaqat classifies all private Saudi firms into four categories-Blue, Yellow, Green and Red-based on their size and the number of Saudi nationals they have recruited.

[3] The fear psychosis is bogus. What has happened in Saudi Arabia is not an overnight development.

http://newindianexpress.com/opinion/article1533803.ece

[4] From the early Eighties, all Gulf Cooperation Council (GCC) countries have been talking about localisation, in terms of employment opportunities.

[5] In 2003, government had said it would reduce the numbers of expat workers to 20 per cent of its total population in 10 years.

[6] As long ago as 2004, Saudi’s Shura Council stipulated that by 2007, 70 per cent of the country’s workforce would have to be locals to reduce dependence on foreign workers, recapture remittances that would otherwise flow out of the country, and reinvest.

[7] Saudi Arabia’s Shura Council passed a bill on July 8, 2009, to improve legal protections for the estimated 1.5 million domestic workers in the country, but the measure still falls short of international standards, Human Rights Watch said today. The bill goes from the Shura Council, an appointed consultative body, to the cabinet, which can make further changes before it is enacted into law. http://www.hrw.org/news/2009/07/10/saudi-arabia-shura-council-passes-domestic-worker-protections

[12] Minister of State for External Affairs E. Ahamad, who is in Dushanbe to attend the Asian Development Dialogue, met Saudi Arabia’s Deputy Minister of Foreign Affairs Prince Abdulaziz bin on Friday and expressed the hope that Riyadh would not take any step that would adversely impact expatriates in the Kingdom.

http://www.thehindu.com/news/national/best-consideration-for-indians-saudi-minister/article4562483.ece

[13] Overseas Indian Affairs Minister Vayalar Ravi had on Thursday said Indian Ambassador to Saudi Arabia had been asked to take up the issue with Riyadh and its Labour Ministry and ensure that there would be no job loss for Indians on a mass scale. In 2011, 2.28 million Keralites were working abroad. Of them, some 570,000 were in Saudi Arabia, a report said.

http://www.thehindu.com/news/national/best-consideration-for-indians-saudi-minister/article4562483.ece

[14] The press is full of figures of how Saudi Arabia over the last four months has deported more than 200,000 foreigners staying illegally, how they are stamping exit visas post haste in a manner that will deny those being turned away a chance to work in any other Gulf country, how foreigners are locking themselves up in rooms without water and food fearing arrest or worse.

http://newindianexpress.com/opinion/article1533803.ece

காளி உத்தரவுப்படிதான் நரபலி கொடுத்தோம், கொலைக்குதண்டனை கொடுப்பதாக இருந்தால் காளிக்கு கொடுங்கள்: கூறுவது அப்துல் கஃபூர்!

ஜூலை 28, 2010

காளி உத்தரவுப்படிதான் நரபலி கொடுத்தோம், கொலைக்குதண்டனை கொடுப்பதாக இருந்தால் காளிக்கு கொடுங்கள்: கூறுவது அப்துல் கஃபூர்!

கத்தி போய் வால் வந்தது டும், டும், டும்: “கத்தி போய் வால் வந்தது டும், டும், டும்” என்பதுபோல, அப்துல் கஃபூரின் அவதாரங்களும் பலவாறு மாறி வருகின்றன.

  • மந்திரவாதி, தாந்திரிக்[1], ஃபகிர்[2] / பக்கிரி, நரபலி கொடூரன், நரபலி மந்திரவாதி, சைக்கோ, சைக்கோ மந்திரவாதி, ………………என அவனது அந்தஸ்த்துகள் பெருகிவருகின்றன[3].
  • அசரீரி காளியாகியது போல, குழாய் மண்சட்டியாகிறது;
  • மனைவி, காதலியாகி, கள்ளக்காதலியாகிவிட்டாள்;
  • திடீரென்று ஒரு முத்துப்பேட்டை அலியார் வேறு வந்துவிட்டார்!
  • பலவித பொருட்கள் வருகின்றன: லட்சுமி குபேர எந்திரம், காளிபடம், குரான் புத்தகம், துளசிமாலை, விபூதி, குங்குமம், சிவப்பு துணி, காப்பு………………
  • காளி சொல்லிதான் குரான் வைத்திருந்தானா, இல்லை முஸ்லீம் எப்படி இந்த வகையறாக்களை வைத்துக் கொண்டு பூஜை செய்தான் என்று தெரியவில்லை.
  • 15 பூஜை, நடுராத்திரி பூஜை, பரிகாரம் என சங்குகள், முறைகல் வேறு விவரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
  • தர்கா லாட்ஜாகிறது, வீடாகிறது;
  • குரானில் சொல்லியபடி, காளியை வழிப்பட்டானா, நரபலி கொடுத்தானா, என்பதையெல்லாம், நேர்மையான விசுவாசிகளும், நேயமுள்ள நம்பிக்கையாளர்களும்தான் பதில் சொல்லியாக வேண்டும்!

கள்ளக்காதலி நோய் தீர குழந்தையை நரபலி கொடுத்தேன்: மந்திரவாதி காளி கனவில் வந்து சொன்னதால் கள்ளக்காதலியின் நோய் தீர்க்க குழந்தையை நரபலி கொடுத்தேன் என்று “சைக்கோ” மந்திரவாதி பேட்டியளித்துள்ளார். மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் செரின்பாத்திமா. இவரது கணவர் கவுஸ்பாஷா சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது 1 1/2 வயது ஆண் குழந்தை காதர்யூசுப் என்பவனை “சைக்கோ” மந்திரவாதி அப்துல் கபூர் கடத்தி சென்று துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுத்தான். நேற்று அந்தகுழந்தையின் தலை தூத்துக்குடி மாவட்டம் கல்லாமொழி பகுதியிலும், உடல் பாகங்கள் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள காட்டுப்பள்ளிவாசல் பகுதியிலும் தோண்டி எடுக்கப்பட்டன. குழந்தையை நரபலி கொடுத்ததாக “சைக்கோ” மந்திரவாதி அப்துல்கபூரும், அவனது கள்ளக்காதலி ரமலாபீவியும் கைது செய்யப்பட்டனர்.

“ஷிர்க் எனும் இணைவைத்தல் மற்றும் பித்அத் செய்பவர்கள் யார்?”: முஸ்லீம் என்று இந்தியாவில் அத்தகைய நம்பிக்கையாளர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்று பார்க்கும் போது, அப்படியென்றால், அவர்கள் பேசுவதும், எழுதுவதும், கலாட்டா-ஆர்பாட்டம்-போராட்டம் என்றெல்லாம் செய்து மிரட்டுவதும், ஆனால் இவ்வாறான நிகழ்ச்சிகள் நடந்தேறிவருவதற்கும் சம்பந்தமேயிலாது இருக்கிறதே? அதாவது, இருப்பதை மறைத்து அப்படி நாடகம் மாடுகிறார்களா, தமது குற்றங்களை மற்றவர்களின் மீது பழிபோட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்களா? இப்பிரச்சினை இப்படி ஊடகங்களில் அல்சப்படும்போதுதான், முஸ்லீம்களும் “ஷிர்க் எனும் இணைவைத்தல் மற்றும் பித்அத் செய்பவர்கள் யார்?”, என  ஜூலை[4] 24 மற்றும் 25 தேடிகளில் 2010 அன்று சென்னை தியாகராயர் அரங்கத்தில்[5] வைத்து சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவையினருக்கும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் இடையிலான விவாதம் அதிக எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மிகவும் பரபரப்பாக ஏற்பட்டதாம்! ஆனால், இப்பிரச்சினைப் பற்றி விவாதித்தார்களா என்று தெரியவில்லை!

சமதர்ம பூஜையா, செக்யூலார் தந்திரமா? குழந்தையின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் பூஜை பொருட்கள், லட்சுமி குபேர எந்திரம், காளிபடம், பாக்கெட் அளவிலான குரான் புத்தகம், துளசிமாலை, விபூதி, குங்குமம், சிவப்பு துணி, காப்பு போன்ற பொருட்கள் கிடந்தன. அதனை போலீசார் கைப்பற்றினர்[6]. நள்ளிரவு குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் “சைக்கோ” மந்திராவதி அப்துல் கபூர் பூஜை செய்ததாக தெரிவித்தான். குழந்தை தலை மற்றும் உடல் பகுதி எலும்புகள் சேர்க்கப்பட்டு சூப்பர் இம்போசிங் செய்ய சென்னைக்கு அனுப்பி வைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

முஸ்லீம் மந்திரவாதி பேட்டி: ஏர்வாடி தர்காவிலே காதல் ஆரம்பம்: குழந்தை உடலை தோண்டி எடுத்தபோது “சைக்கோ” மந்திராவதி அப்துல்கபூர் அவனது கள்ளக்காதலி ரமலாபீவி ஆகியோரையும் போலீசார் அங்கு அழைத்து வந்திருந்தனர். அங்கு “சைக்கோ” மந்திரவாதி அப்துல் கபூர் நிருபர்களிடம் கூறியதாவது: “நான் கடந்த 1993-ம் ஆண்டு ஏர்வாடி தர்காவில் தங்கினேன். அங்கு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து பிறகு விவாகரத்து செய்து விட்டேன். பின்னர் காயல்பட்டினம் சென்றேன். அங்கு ரமலாபீவியை சந்தித்தேன். ரமலாபீவியும் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரித்து விட்டதால் நாங்கள் 2 பேரும் கணவன்-மனைவிபோல வாழ்ந்தோம். ரமலாபீபிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டார். அவரது நோயை குணமாக்குவதாக கூறினேன். இனரென்ன டாக்டரா-மருத்துவரா என்று கேட்கவில்லை போலும்!

காளி உத்தரவுப்படிதான் நரபலி கொடுத்தோம், கொலைக்குதண்டனை கொடுப்பதாக இருந்தால் காளிக்கு கொடுங்கள்: பின்னர் மதுரை கோரிப்பாளையம் தர்காவுக்கு வந்து தங்கினோம். அங்கு தங்கி இருந்தபோது அதிகாலையில் வந்தகனவில் காளி தோன்றினார்[7]. தலைப்பிள்ளையாக பிறந்த ஆண் குழந்தையை நரபலி கொடுத்தால் ரமலாபீவியின் நோய் குணமாகும் என்று காளி கூறினார். இதனை நம்பிய நான் ரமலாபீவியை எழுப்பி சொன்னேன். பிறகு 2 பேரும் சேர்ந்து 1 1/2 வயது குழந்தை காதர் யூசுப்பை கடத்தி கொண்டு வந்தோம்.  காளி உத்தரவுப்படிதான் குழந்தையை நரபலி கொடுத்தோம். கொலைக்கும், எனக்கு சம்பந்தம் இல்லை. தண்டனை கொடுப்பதாக இருந்தால் காளிக்கு கொடுங்கள். இவ்வாறு “சைக்கோ” மந்திராவதி அப்துல்கபூர் கூறினான்.  இதனை அருகே நின்று கேட்டுக்கொண்டிருந்த பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். அப்போது அவன் வெறிபிடித்தவன் போல கூச்சலிட்டான். பின்னர் பொதுமக்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு அவனை அழைத்து சென்றனர்.

முத்துப்பேட்டை அலியார் என்ன அறிவுரைகளை அளித்தார்?: விசாரணையில் அப்துல்கஃபூர், கடந்த 2009ல் முத்துப்பேட்டை அருகே பெருகவாழ்ந்தான் ஊரில் அலியார் (60) என்பவரை சந்தித்ததாகவும், அவரது அறிவுரைகளைக் கேட்டப் பிறகு[8], மாந்திரீக வலிமையில் குழந்தைகளை நரபலி கொடுக்கும் உணர்வும், கனவுகளும் வந்தன என்று போலீஸாரிடம் தெரிவித்திருந்தான். இதன்பேரில், அலியாரிடல் விசாரணை நடத்த தனிப்படை போலீசர் நேற்று முத்துப்பேட்டை விரைந்தனர். ஆக இந்த அலியார் என்ன சொன்னார் என்றும் பார்க்கவேண்டியதுள்ளது. ஏர்கெனவே முஸ்லீம் நண்பர்களே, தர்காக்களில் பல காமக்களியாட்டங்கள் நடந்து வருவதை எடுத்துக் காட்டியுள்ளார்கள்[9].

15 நாள் பூஜை நடத்திய மந்திரவாதி: குழந்தையை நரபலி கொடுத்த பின்னர் 15 நாட்கள் பூஜை நடத்தியுள்ளார் அப்துல் கபூர் என்பது தெரிய வந்துள்ளது[10]. திருச்செந்தூர்-குலசேகரம் ரோட்டில் கல்லாமொழி நாயகம் ஹிலுருநபி தர்கா உள்ளது. இதனை சுற்றி 6 வீடுகள் உள்ளன. இவற்றில் 3 வீட்டில் மட்டுமே ஆட்கள் உள்ளனர். வெளியூரில் இருந்து தொழுகை நடத்த வருபவர்களுக்கு இங்குள்ள வீடுகளில் தங்கியுள்ளவர்கள் உதவி செய்வார்கள். கடந்த 4-ம் தேதி அப்துல் கபூர், ரமலா பீவியுடன் இங்கு வந்துள்ளார். அப்போது அவர்கள் கையி்ல் சில்வர் தூக்குவாளி வைத்திருந்துள்ளார். அங்குள்ளவர்களிடம் அப்துல் கபூர் தனது மனைவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் இங்கு வந்துள்ளதாக கூறியுள்ளார்.

கள்ளக்காதலியுடன் அர்தஜாம-நடுஇரவு பூஜைகள்: பின்னர் இரவு 9 மணி அளவில் தர்கா அருகே உள்ள உடைந்த ஓட்டு வீட்டில் வைத்து பூஜைகள் நடந்துள்ளது. இந்த பூஜை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. அதன்பிறகு மறுநாள் காலை தாங்கள் கொண்டு வந்த தூக்கு வாளியுடன் அருகில் உள்ள காட்டு பகுதியில் சென்று பூஜை நடத்தியுள்ளனர். இவ்வாறு தொடர்ந்து 15 நாட்கள் வரை பூஜை நடந்துள்ளது. இந்த பூஜை மூலம் அதீத மாந்திரீக சக்தி கிடைக்கும் என்று நம்பி இவ்வாறு செய்துள்ளனர். காதர் யூசுப்பை கடந்த 2-ம் தேதி மதுரையில் இருந்து கடத்தி 4-ம் தேதி கல்லாமொழிக்கு வந்துள்ளனர். இங்கு வந்து 2 நாட்கள் கழித்து குழந்தையைக் கொன்றுள்ளனர். அதாவது ஆறாம் தேதி நரபலியிட்டிருக்கிறான்.

நரபலி ஏரல் லாட்ஜில்தான் நடந்திருக்கிறது[11]: மதுரையில் இருந்து பஸ்சில் திருநெல்வேலி சென்றோம். குழந்தையை வெளியில் வைத்து கொலை செய்தால் தெரிந்து விடும் என ரமீலா சொன்னார். லாட்ஜில் அறை எடுத்து, அங்கு குழந்தையை கொல்ல முடிவு செய்தோம். இதன்படி, தூத்துக்குடி அருகே ஏரல் என்ற ஊருக்கு வந்தோம். பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள லாட்ஜில் அறை எடுத்தோம். குழந்தையின் வெள்ளி கொலுசு, வெள்ளி அறைஞாண்கயிரை கழற்றினேன். அதை விற்று வரும்படி ரமீலாவிடம் கொடுத்து அனுப்பினேன். அதை, 2,000 ரூபாய்க்கு ரமீலா விற்றார்.அறையில் இருந்த பாத்ரூமில் குழந்தையை ரமீலா பிடித்துக் கொண்டார். நான், கத்தியால் குழந்தையின் கழுத்தை அறுத்து, ரத்தத்தை ஒரு சில்வர் டப்பாவில் பிடித்தேன். உடலை ஒரு பெரிய தூக்குவாளியிலும், தலையை ஒரு சின்ன தூக்குவாளியிலும் போட்டு மூடினோம். அறையை காலி செய்து விட்டு, ஏர்வாடியில் நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு வந்தோம். ரத்தத்தை மண் சட்டியில் போட்டு வறுத்தோம். ரத்தம் லேகியம் போல் ஆனதும், அதை ஊதுபத்தி வைக்கும் சில்வர் குழாயில் வைத்து அடைத்தோம். சில நாட்கள் கழித்து, குழந்தையின் உடலை வீட்டிற்குள் குழி தோண்டி புதைத்தோம்.

குழந்தைதலையை தர்காவில் புதைத்தால் விஷேசமா? எனது தாயார், சிறு வயதில் என்னை தூத்துக்குடி மாவட்டம் கல்லாமொழி தர்காவிற்கு அழைத்து செல்வார். எனவே, குழந்தையின் தலையை, தர்கா அருகிலேயே புதைக்க திட்டமிட்டோம். இதன்படி, குழந்தையின் தலையை வைத்திருந்த தூக்குவாளி, ரத்தம் அடைத்து வைத்திருந்த சில்வர் குழாய், குழந்தையின் கழுத்தை அறுக்க பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை எடுத்து கொண்டு கல்லாமொழிக்கு சென்றோம். கடற்கரையில், ரத்தம் அடைத்த குழாயை, ரமீலாவின் தலையை சுற்றி கடலில் எறிந்தேன். தலை வைக்கப்பட்டிருந்த தூக்குவாளியை, ரமீலா தலையை சுற்றி கடற்கரையில் தலையை புதைத்தேன். கத்தி, வாளியை கடலில் வீசினேன்.பின், தினமும் அங்கு சென்று பூஜை செய்து தொழுது வந்தேன்.கடந்த 24ம் தேதி இரவு 8 மணிக்கு, தர்காவில் தூங்கி கொண்டிருந்த என்னையும், ரமீலாவையும் போலீசார் பிடித்தனர். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கள்ளக்காதலி ரமீலாவும் உடந்தையாக இருந்ததை ஒப்புக்கொண்டாள்: இவருக்கு உறுதுணையாக இருந்து குழந்தையை நரபலி கொடுத்தது குறித்து ரமீலாவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 364 (கொலை செய்யும் நோக்கில் கடத்துதல்), 302 (கொலை), 201 (தடயங்கள், சாட்சியங்களை அழித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ், மதுரை தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரமுருகேசன் வழக்குப்பதிவு செய்தார்.இருவரையும், மதுரை இரண்டாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் உமாமகேஸ்வரி முன் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு ஆஜர்படுத்தினார். மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி, அப்துல்கபூர் மதுரை சிறையிலும், ரமீலா திருச்சி சிறையிலும் ரிமாண்ட் செய்யப்பட்டனர்.

முஸ்லீம் மாந்திரீகம் முதலியவற்றை நம்புவது, பரப்புவது முதலியன: ஒரு முஸ்லீம் நண்பர் தர்காக்கள் மற்றும் முஸ்லீம்களின் நம்பிக்கைகளைப் பற்றி விவரங்களை, “அவ்லியாக்களின் பெயரால் அரங்கேறும் அவலங்கள்” என்ற தலைப்பில் கொடுத்துள்ளதையும் படிக்கலாம்[12]. ஒரு கோவிலைப் பற்றிய விவரங்களில், இப்படியும் சேர்த்திருக்கிறார்கள்[13], “இங்கு வழிபாடு செய்பவர்களுக்கு பில்லி, சூனியம், மாந்திரீகம், ஏவல் கட்டு போன்றவைகளால் பாதிப்பு இருந்தால் அவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது”. விஜய்குமார் என்பவர்[14], “முஸ்லீம் மாந்திரீகம்:, என்ற புத்தகத்தை ரூ.1000/- என்று இணைதளத்தில் போட்டுள்ளார். இப்படி ஏராளமான ஆதாரங்களைக் கொடுக்கலாம். முஸ்லீம்கள் ஜமாத், ஷரீயத் கோர்ட், தார் உல் கடா, என்ற பல நிலைகளில், அவர்களது குற்றவாளிகளை மறைத்துவிடுகின்றனர் எப்பொழுதாவது, இப்படி எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்ட கேசுகள்தாம், ஊடகங்களில் வருகின்றன. ஆனால், சில நாட்களில் இவையும் மறக்கப்படும், மறைக்கப்படும்.


[1] ஆங்கில டிவிக்களின் – டைம்ஸ்-நௌ, ஹெட்லைன்ஸ்-டுடே- உபயம். தாந்த்ரிக் முஸ்லிம் குழந்தையை பலிகொடுத்து ரத்தம் குடித்தான் என்ற ரீதியில், ஒலிபரப்பி, ஆங்கிலம் தெரிந்தவர்களை குழப்பியுள்ளது. இதனால், ஒரு அந்நிய தளம் இந்த செய்தியை ஒரு பிரபலமான கோவிலுடன் இணைத்து வெளியிட்டுள்ளது!

 

[2] இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டது.

[3] ஊடகங்களில் முஸ்லீம்கள் அதிக அளவில் முஸ்லீம்களாகவே செயல்படுவதால், அவர்கள் இந்த சமாசாரத்தை அமுக்கி வாசித்து, மறைத்துவிட முயல்கின்றனர். ஆகையால், வித-விதமான செய்திகளை மாற்றி-மாற்றி வெளியிட்டு திசைத் திருப்பப் பார்க்கிறார்கள்.

[4] ஜூலை என்று அவர்கள் குறிப்பிடவில்லை, இல்லையென்றால் மாற்றிக்கொள்ளப்படும்.

[5] http://kky30100.wordpress.com/2010/07/27/ஷிர்க்-மற்றும்-பித்அத்-ச/

[6] கள்ளக்காதலி நோய் தீர குழந்தையை நரபலி கொடுத்தேன்: மந்திரவாதி , திங்கட்கிழமை, 26 ஜுலை 2010,

http://www.newindianews.com/view.php?2b3e0AA22eeYYDN30ecI4OXR2cddQQAKccd3AmM064b44xlmmaa43ffmA3d0e2y46600

[7] ஒரு முஸ்லீம் இவ்வாறு சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. உண்மை சொல்கிறாரா தப்பித்துக் கொள்ள இப்படி நாடகம் ஆடுகிறாரா என்று தீவிர விசாரணை செய்யவேண்டிய அவசியம் உள்ளது.

[8] தினகரன் 27-07-2010, http://www.dinakaran.com/tamilnadudetail.aspx?id=11419&id1=4

[9] http://hrmanson.blogspot.com/2010/06/blog-post_1375.html

http://tmpolitics.wordpress.com/

[10] http://thatstamil.oneindia.in/news/2010/07/26/human-sacrifice-head-exhume.html

[11] தினமலர், குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன், ஜூலை 27, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=47984

[12] http://kadayanalluraqsha.com/?p=3187

[13] http://www.coimbatore.tn.nic.in/tamilversion/tourism_t.html

[14] http://siddhayogicscience.com/tamil/books.html