கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் எல்லாம் இருக்கும் பொழுது, நலவாரியம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன? இது செக்யூலரிஸ மாடலா அல்லது கம்யூனலிஸ மாடலா? (2)

சிறுபான்மையினர் என்ற சான்று பெற்றால் மட்டுமே நலத்திட்ட உதவிகளை பெறமுடியும்: திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறுபான்மையினர் நலத்துறை, கிறிஸ்தவ முஸ்லிம் மகளிர் சங்கங்கள் மற்றும் உலமாக்கள் நல வாரியம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர்கள் சாமு நாசர் மற்றும் செஞ்சி கே.மஸ்தான் ஆகியோர் பங்கேற்று தையல் இயந்திரம் இஸ்திரி பெட்டி மிதிவண்டிகளை பயனாளிகளுக்கு வழங்கினர். சிறுபான்மையினர் என்ற சான்று பெற்றால் மட்டுமே நலத்திட்ட உதவிகளை பெற முடியும் என அத்துறையின் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்[1]. இந்துக்களாக சான்றிதழில் பதிவு செய்துவிட்டு கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்களாக மதத்தினை தழுவுபவர்களுக்கு சிறுபான்மை துறை சார்பில் எந்தவித நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படாது[2]. ஒருவர் எந்த மதத்தை பின்பற்ற வேண்டும் என்பது அவரவர் விருப்பம் எனவும் தெரிவித்தார்.

இந்துக்களாக சான்றிதழில் பதிவு செய்துவிட்டு கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்களாக மதத்தினை தழுவுபவர்களுக்கு சிறுபான்மை துறை சார்பில் எந்தவித நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படாது: இங்கு முக்கியமாக நடந்து வரும் மோசடியை, “மத மொசடியை” கவனிக்க வேண்டும். குறிப்பாக எஸ்.சிக்கள், அதாவது பட்டியல்-சலுகை பெறும் இந்துக்கள், இந்துக்களாக இருந்தால் தான் இன்வொதிக்கீடு போன்ற சலுகைகளைப் பெற முடியும். ஆனால், கிருத்துவம் மற்றும் இஸ்லாம் மதம் மாறும் நபர்களுக்கு அந்த சலுகை தொடராது, கிடைக்காது. அதனால், மதம் மாறியப் பிறகும், தாங்கள் எஸ்.சிக்கள், இந்துக்கள் என்று மெய்ப்பிக்க சான்றிதழை வைத்திருக்கிறர்கள். நியாமாக, சட்டப் படி, மதம் மாறியப் பிறகு, அவர்களுக்கு அந்த சலுகை இல்லாமல் போகிறது. அதனால், சான்றிதழின் படி இந்துவாக இருந்து, அரசு சலுகைகள் பெற்று வாழும் அவர்கள், கிருத்துவர் அல்லது முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டு, இத்திட்டங்களின் கீழ் அளிக்கப் படும் சலைகைககள், மானியங்கள், நிதியுதவிகள் போன்றவற்றைப் பெற முடியாது. இதைத் தான் அமைச்சர் மறைமுகமாக எடுத்துக் காட்டுகிறார்.

17-12-2022 – பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி: கிறிஸ்தவ மக்களுக்கு உதவுவதற்காக தனி நல வாரியம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக சிறுபான்மையினா் நலன், வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தார்[3]. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சிறுபான்மையினா் நலத் துறையின் மூலம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி 17-12-2022 சனிக்கிழமை நடைபெற்றது[4]. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலா் காமாட்சி கணேசன் தலைமை வகித்தார். இதில், 314 பயனாளிகளுக்கு ரூ.33.99 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் வழங்கினா். இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா் பாட்ஷா முத்துராமலிங்கம், செ.முருகேசன், கருமாணிக்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினா் நல அலுவலா் சிவசுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் வேலுச்சாமி, ராமநாதபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கே.கார்மேகம், துணைத் தலைவா் பிரவீன் தங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனா்.

கிறிஸ்தவர்களுக்கு, முஸ்லிம்களுக்கு அளிக்கப் படும் உதவிகள்: இதைத்தொடா்ந்து அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பேசியதாவது: “தமிழகத்தில் மாவட்டம் தோறும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, சிறுபான்மையினருக்கு கூடுதலாக மகளிர் உதவும் சங்கங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழகத்தில் முதல் கட்டமாக 5 மாவட்டங்களில் சிறுபான்மையினா் மேம்பாட்டுக்காக தனி அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா். இரண்டாம் கட்டமாக, ராமநாதபுரம் உள்பட 5 மாவட்டங்களில் இதேபோல தனி அலுவலா்கள் நியமிக்கப்பட உள்ளனா். கிறிஸ்தவ மக்களுக்கும் தனி நல வாரியம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தேவலாயங்களில் பணிபுரியும் பணியாளா்களின் பட்டியல் பெறப்பட்டு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டிகள், மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. உலமாக்கள் உறுப்பினா்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வாங்க ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. உலமாக்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. சிறுபான்மையினருக்கு மத்திய அரசு வழங்கி வந்த கல்வி உதவித்தொகையை நிறுத்தி விட்டது. இதனால், தமிழக முதல்வா் அதே கல்வி உதவித் தொகையை வழங்க உத்தரவிட்டார்,” என்றார் அவா்.

முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்: சிறுபான்மை இசுலாமிய சமூகத்தைச் சார்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள மகளிருக்கு உதவும் பொருட்டும், தன்னம்பிக்கை ஏற்படுத்தவும், சென்னையில் “முஸ்லிம் மகளிர் உதவிச் சங்கம்” என்ற அமைப்பு 01.10.1982 – ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. இச்சங்கம் அதனது நிதி ஆதாரத்தினை நன்கொடைகள் மூலம் திரட்டுகிறது[5]. இந்த நிதிக்கு இணையான தொகையினை (Matching Grant) அரசு இச்சங்கத்திற்கு மானியமாக வழங்கி வருகிறது. இதே போன்ற சங்கங்கள் தமிழ்நாட்டில் உள்ள 30 மாவட்டங்களில் 2007 ஆம் ஆண்டு தமிழக அரசால் துவங்கப்பட்டது. இச்சங்கங்கள் தொண்டு நிறுவனங்களாக (NGO) செயல்பட்டு முஸ்லிம் மகளிர் மற்றும் பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்கு பாடுபடுகின்றன. இத்திட்டம், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் (டாம்கோ) நிர்வாக இயக்குநரின் மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்படுகின்றது. இச்சங்கங்களுக்கான விதைத் தொகை (Seed Money) ரூ.1 இலட்சம் மற்றும் அரசின் இணைத் தொகை ஆகியவை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல இயக்குநர் மூலம் விடுவிக்கப்படும்.
© வேதபிரகாஷ்
18-12-2022

[1] இ.டிவி.பாரத், சிறுபான்மையினர் என்ற சான்று பெற்றால் மட்டுமே நலத்திட்ட உதவிகளை பெற முடியும்…அமைச்சர் தகவல், Published on: August 24, 2022 9.29 AM IST.
[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/thiruvallur/welfare-benefits-can-be-availed-only-if-you-have-proof-of-minority-status-minister-masthan/tamil-nadu20220824092932136136811
[3] தினமணி, கிறிஸ்தவா்களுக்கு தனி நல வாரியம், By DIN | Published On : 18th December 2022 01:19 AM | Last Updated : 18th December 2022 01:19 AM
[4] https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2022/dec/18/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B2–%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3968816.html
[5] https://ta.vikaspedia.in/social-welfare/b9abaebc2b95ba8bb2-bb5bbfbb4bbfbaabcdbaabc1ba3bb0bcdbb5bc1/ba4baebbfbb4bcdba8bbeb9fbcdb9fbbfbb1bcdb95bbeba9-b95bc1bb1bbfbaabcdbaabbeba9-ba4b95bb5bb2bcdb95bb3bcd/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D