அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் [3]
தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை அமைப்போம்[1]: 09-07—2018 மாலை விஜிபி வளகத்தில் பேசிய பேச்சு தொடகிறது. “ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. பா.ஜ.க முதன்முதலாகக் குஜராத்திலிருந்து ஊழலை விரட்டியது. அதன் பிறகு – ராஜஸ்தான், உபி என்று – இந்தியாவின் 19 மாநிலங்களில் ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியுள்ளோம்[2]. பல்வேறு மூத்த தலைவர்கள் எல்லாம் ஊழலுக்காகத் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்[3]. பல்வேறு தலைவர்கள் வழக்குகளைச் சந்தித்து வருகிறார்கள். இத்தகைய நிலையில், பா.ஜ.க அரசு ஊழல் இல்லா ஆட்சிக்கு உறுதிபூண்டுள்ளது. எந்தவொரு பா.ஜ.க தலைவர்களாவது ஊழலில் சிக்கியிருக்கிறார்களா[4]. நாங்கள் ஊழல் செய்திருக்கிறோம் என்று யாராவது கைநீட்டி குற்றஞ்சாட்டியிருக்கிறார்களா. அந்த அளவுக்கு நாங்கள் வெளிப்படையான ஊழலற்ற ஆட்சியைச் செய்து வருகிறோம். அதே நேரத்தில் கடும் நடவடிக்கை எடுத்து ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறோம்”.
ஊழலும், தமிழகமும்: இந்த நேரத்தில் தமிழகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறது. தமிழகத்தின் சூழலை நினைத்தாலே இதயம் வெடிக்கிறது; வருத்தத்தில் துடிக்கிறது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் ஊழல் அதிகமாக இருக்கிறது. இது எனக்கு வேதனையளிக்கிறது. எனவே, பா.ஜ.க தொண்டர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. தமிழ்நாட்டை ஊழலிலிருந்து மீட்க வேண்டும். ஊழல் இல்லாத ஆட்சியமைக்க நாம் இன்றே உறுதிபூண வேண்டும். இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் ஊழல் மட்டும் அல்லாது தேர்தலின்போது ஓட்டுக்கு நோட்டு என்ற மோசமான கலாசாரம் இருக்கிறது. இதிலிருந்தும் மீட்க வேண்டிய பொறுப்பு பா.ஜ.க-வுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. அதே சூழ்நிலையை நாம் ஆட்சியில் இருந்தால்தான் தமிழகத்தையும் சீர்படுத்த முடியும். ஊராட்சிகள் முதல் நாடாளுமன்றம் வரை பா.ஜ.க-வை ஆட்சியில் அமர வைப்பதே பா.ஜ.க தொண்டர்களின் லட்சியமாக இருக்க வேண்டும்,” என்றார்.
தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு நிலை, தமிழ் பற்றிய நிலைப்பாடு: “தமிழகத்தில் இதற்கு முன்பு நம் நிர்வாகிகள் பலர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு எதிராகவும் நாம் போராட வேண்டும். “சட்டம் ஒழுங்குநிலை” விசயத்தில், பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள நிலை இங்கும் வர வேண்டும். பட்டியல் இனத்தவருக்கு[5] பாடுபட வேண்டும். நிறைய என்.ஜி.ஓக்கள் அவர்களுக்கு உதவுகின்றன. அவற்றிற்கு, நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்திலே, ஒரு பொய் பிரசாரம் உருவாக்கப் பட்டு வருகிறது. தமிழ்-கௌரவம், தமிழ்-பெருமை பற்றி பிஜேபி அதிகமாகவே கவனத்தில் கொண்டுள்ளது. ஆனால் தமிழ் மொழியின் பெருமையை வளர்க்க, பாதுகாக்க பா.ஜ.க. போல எந்த கட்சியும் தீவிரமாக இல்லை. பா.ஜ.க. ஆட்சியில் தான் ரெயில் டிக்கெட்டுகளில் தமிழ் மொழி அச்சிடப்பட்டு இருக்கிறது. இது பெருமை இல்லையா? எப்போது தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வருகிறதோ, அப்போது தமிழின் பெருமையை தமிழ்நாட்டின் எல்லைகளுக்கு அப்பாலும் எடுத்துச் சென்று, உலகறிய செய்வோம். தமிழின் பெருமையைக் காப்பதில் பாஜகவை போன்று வேறு எந்த கட்சியும் செயல்படவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சி நிச்சயம் அமையும். தமிழின் பெருமையைக் காப்பதில் பாஜகவை போன்று வேறு எந்த கட்சியும் செயல்படவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் தமிழக எல்லையை கடந்து தமிழின் பெருமை கொண்டு செல்லப்படும். அந்தந்த மாநிலத்தின் பெருமை, பாஜக-வின் பெருமை என்று நாம் கருதுகிறோம்”.
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றிய அமித் ஷா: ஊடகங்கள் இப்படி ஒப்பிட்டது…..பா.ஜ., கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பா.ஜ., தலைவர் அமித்ஷா மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்தில் கையாண்ட ஸ்டைலை பின்பற்றினார். அவர் தமிழகத்திற்கு மோடி அரசு அதிக நிதி வழங்கியுள்ளது. ஆனால் கடந்த காலத்தில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி மத்திய ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு என்ன செய்தது என மக்களாகிய நீங்கள் கணக்கு கேட்பீர்களா, கேட்பீர்களா? என கேட்டார். தமிழகத்தில் மோடி ஆட்சி கொண்டு வருவோமா? , வருவீர்களா? தேஜ கூட்டணி ஆட்சி அமைய முயற்சி மேற்கொள்வோமா? வெற்றியின் உறுதிமொழியை உரக்க சொல்லுங்கள். இவ்வாறு அமித்ஷா பேசினார். இந்த பேச்சு மறைந்த ஜெ.,யின் செய்வீர்களா? செய்வீர்களா? என்று பிரசாரத்தில் கேட்பதை நினைவூட்டுவதாக இருந்தது.
அமித்ஷா வரவும், தில்லி திரும்பலும்: பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, 2019 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதன் முதற்கட்டமாக பா.ஜ.க சக்திகேந்திர பொறுப்பாளர்களை சந்தித்தார். இதற்காக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் ஒருபகுதியாக, தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமித் ஷா இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை ஈஞ்சம்பாக்கம் வி.ஜி.பி. தங்க கடற்கரையில், பா.ஜ.க உயர்மட்ட நிர்வாகக்குழு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் சுமார் 16 ஆயிரம் பேர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா “என்னைப் போன்ற கட்சி நிர்வாகிக்கு இன்றைய தினம் மகத்தான தினம்”, என்று ஆரம்பித்து, பேசினார். வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என அமித் ஷா உணர்ச்சிப்பெருக்குடன் பேசிய போது, அங்கு திரண்டிருந்தவர்கள் தங்கள் கரங்களை மடித்து அமித் ஷாவுடன் தமிழகத்தில் ஆட்சியமைப்போம் என உறுதி அளித்தனர். 7.40ற்கு அவரது பேச்சு முடிந்ததும், தனி விமானம் மூலம் தில்லிக்குப் புறப்பட்டு சென்று விட்டார்[6]. டுவிட்டரில், தமிழக மக்களுக்கு நன்றியும் தெரிவித்து விட்டார்[7].
அமித் ஷா பேச்சை ஊடகங்கள் விவரித்தது [சுருக்கம்]: தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கிண்டலும் கேலியும் செய்தனர்[8]. எதிர்ப்பாளர்களே..! தமிழகத்தில் பா.ஜ.க எங்கே இருக்கிறது என்பதை வரும் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நீங்கள் பார்ப்பீர்கள்[9]. 11 கோடி உறுப்பினர்களை பெற்று மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க உள்ளது. பா.ஜ.க.வுக்கு 330-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து பொன் ராதாகிருஷ்ணனை தேர்வு செய்து அனுப்பிய மக்களுக்கு நன்றி. தமிழகத்துக்கு பிரதமர் மோடி அதிகமான முன்னுரிமை கொடுத்து வருகிறார். தமிழகத்தைப் பற்றி நான் கவலைப்படுகிறேன்..நாட்டிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது[10]. “தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி” அமைக்க பாடுபடுவோம். ஊழலை அகற்றும் கட்சியுடன் தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைக்கும். தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டு வர பாஜகவினர் உறுதியேற்க வேண்டும்[11]. ஓட்டுக்கு நோட்டு என்கிற நிலையிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டிய பொறுப்பு பாஜகவினருக்கு உண்டு. கடந்த 10 ஆண்டுக்கால காங்கிரஸ் கட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சட்டீஸ்கர், மஹாராஷ்டிரா, ஹரியானா, அசாம், நாகாலாந்து, உத்தரப்பிரதேசம், உத்தகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஊழல் ஒழிந்துள்ளது. தமிழகத்திலும் ஊழலை ஒழிப்போம்.
© வேதபிரகாஷ்
12-07-2018
[1] அமித் ஷா பல ஜாதி சங்கத் தலைவர்களுடன் 2015லிருந்து பேசி வரும்போது, இதனை சொல்லியுள்ளார்.
[2] காங்கிரஸ் ஊழல் கட்சி – அதனை வெளியேற்றியுள்ளோம் என்று எடுத்துக் காட்டுகிறார்.
[3] கல்மாடி, ராஜா, கனிமொழி முதலியோர் ஜெயிலுக்குச் சென்றதைக் குறிப்பிடுகிறார். ஆனால், இப்பொழுது, அவ்வழக்கு தள்ளுபடியாகி விட்டது.
[4] எடியூரப்பா சிறைக்குச்சென்று வெளியே வந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
[5] அமித் ஷா “தலித்” என்ற பிரயோகத்தை செய்தாலும், ராஜா, “பட்டியல் இனம்” என்று மொழிபெயர்த்தார்.
[6] மாலை மலர், தமிழக பயணத்தை முடித்து பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா டெல்லி புறப்பட்டார், பதிவு: ஜூலை 09, 2018 23:38
[7] https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/09233829/1175487/bjp-leader-amit-shah-depart-delhi.vpf
[8] மாலைமலர், தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பதா? – சென்னை கூட்டத்தில் அமித் ஷா ஆவேசம், பதிவு: ஜூலை 09, 2018 19:39; மாற்றம்: ஜூலை 09, 2018 20:00.
[9] https://www.maalaimalar.com/News/District/2018/07/09193912/1175462/Amit-sha-claims-to-form-BJP-govt-in-TN.vpf
[10] தி.இந்து, “தமிழகத்தில் அதிகமான ஊழல்“: பாஜக தலைவர் அமித் ஷா வேதனை, பிடிஐ, Published : 09 Jul 2018 22:15 IST; Updated : 09 Jul 2018 22:17 IST
[11] http://tamil.thehindu.com/tamilnadu/article24373521.ece