Posts Tagged ‘காதல்’
ஓகஸ்ட் 9, 2013
ராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)

ராகுல் தனது “கேர்ல் பிரன்ட்” பற்றி பேசியது: 1999ல் உலக கிரிக்கெட் போட்டி நடந்தபோது, இவர் ஒரு அந்நியப் பெண்ணுடன் சேர்ந்து உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. வெரோனிக் என்ற ஸ்பெயின் தேசத்து பெண்ணான அவர் ஒரு கட்டிடக்கலை வல்லுனர். ஊடகங்கள் அப்பொழுதே ராகுல் அவரைக் காதலிக்கிறார், கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் என்று யேஷ்யமாக எழுதின.
அதுமட்டுமல்லாது, பாஸ்டன் விமான நிலையத்தில் அதிகமான டாலர்கள் வைத்திருந்ததால், வெரோனிக்கோவுடன் நிறுத்தப் பட்டு, சோதனைக்குட்படுத்தப் பட்டார்கள். பிறகு, பிரதமரின் மகன் என்று தெரிந்ததும் விட்டு விட்டார்கள் என்று செய்திகள் வந்தன[1].

Was Rahul Gandhi detained by FBI?
By Our Special Correspondent in “The Hindu” dated Sunday, September 30, 2001
http://www.frontlineonline.info/thehindu/2001/09/30/stories/02300003.htm
NEW DELHI, SEPT. 29. With the U.S. security agencies leaving nothing to chance after the September 11 terrorist strikes, sleuths of the Federal Bureau of Investigation (FBI) “detained” Mr. Rahul Gandhi, son of the former Prime Minister, Rajiv Gandhi, and the Leader of the Opposition, Ms. Sonia Gandhi, for about an hour at the Boston airport early this week, sources here said.
According to sources, Mr. Gandhi, reportedly travelling from Boston to Washington, was detained by the FBI agents who would not let him go even after checking his travel documents thoroughly. They checked his baggage, despite being told that he was the son of a former Indian Prime Minister.
Sources here maintain that only when the news reached 10, Janpath, and the Congress president, Ms. Sonia Gandhi, reportedly spoke to the Indian Ambassador in the U.S., Mr. Lalit Mansingh, Mr. Gandhi was able to proceed with his onward journey.
Though official circles were silent over the incident, Congress sources said they were concerned. Mr. Gandhi’s movement should have been known to the U.S. security agencies because he is a Special Protection Group protectee. And, under the security drill, any movement of a SPG protectee abroad is communicated in advance to their counterparts in that country.
`Envoy did not intercede’
Meanwhile, Sridhar Krishnaswami reports from Washington, quoting well-placed diplomatic sources, that media reports of Mr. Mansingh having been brought into the picture to allow Mr. Gandhi to proceed on his onward journey from Boston to Washington “are simply not true.”
The sources also said since Mr. Gandhi did not get any security protection here, the U.S. agencies were not under any obligation to inform the Indian Embassy of any contact they may have had with him.
In fact, some Embassy officials here have no knowledge of Mr. Gandhi’s trip from Boston to Washington. “But reports of Ms. Sonia Gandhi calling the Indian Ambassador and asking him to intercede with authorities on the `detention’ of Mr. Rahul Gandhi are simply not true,” a senior Indian diplomat told The Hindu.
Diplomats are pointing to the heightened security precautions in the U.S. in the aftermath of the terrorist attacks. Besides different layers of security check at airports, many are subjected to some intense questioning by the Federal Bureau of Investigation and other investigative agencies. But for official purposes, in the case of the movement of VVIPs – and in some cases VIPs – the Embassy notifies Diplomatic Security for necessary courtesies. |

இந்த சுமார் ஐந்தாண்டுகள் கழித்து 2004ல் அமேதி தேர்தலின் சுற்றுப்பயணத்தின் போது[2], “அவள் எனது கேர்ள் பிரென்ட் மற்றும் சிறந்த நண்பரும் கூட”, என்று சொன்னாராம். அதே போல, தேவி பிரசாத் என்ற அவரது ஆதரவாளர், ஆமேதி பிரச்சாரத்தின் போது, “எப்பொழுது அமேதிக்கு ராஜவம்ச மறுமகள் கிடைப்பாள்?”, என்று கேட்டதற்கு, “சீக்கிரமாக” என்று புன்னகையுடன் பதிலளித்தாராம் ராகுல்[3]. அடுல் வஸ்ஸன் என்ற கிரிக்கெட் வீரர், “தன்னைபோல பிரபலம் இல்லாத ஒருவரை ராகுல் மணக்கக் கூடும். அவர் புத்திசாலியாக, மக்கள் விரும்பும் வகையில், அமைதியானவராக இருப்பார். டயானாவைப் போல இருந்து, இப்பொழுதுள்ள காங்கிரஸின் தலைவியைப் போலிருக்கலாம்,” என்று விளக்கம் கொடுத்தாராம்[4].

அமேதியில் ராகுல் ஒரு பெண்ணைக் கற்பழித்தார் என்ற வழக்கு (2011): சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. கிஷோர் சம்ரிட்டே. இவர் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்திக்கு எதிராக அலகபாத் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில், அமேதி தொகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை டிசம்பர் 3, 2006 அன்று ராகுல் காந்தி ஏமாற்றி கடத்திச் சென்று கற்பழித்தார். சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்படுகிறது[5]. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இணைதளங்களில் சுகன்யா அல்லது சுகன்யா தேவி என்ற பெண்ணை, ராகுல் மற்றும் அவர்களது பெண்கள் தூக்கிச் சென்று கற்பழித்ததாக ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் விவரங்கள் வெளியிடப்பட்டன.

ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் வழக்குகளை நடத்தின, தள்ளுபடி செய்தன: இந்த மனுவை மார்ச்.7, 2011 அன்று தள்ளுபடி செய்த அலகாபாத் ஐகோர்ட்டு, மனுதாரர் கிஷோருக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்தது[6]. மேலும், இவருக்கு எதிராக விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கிஷோர் அப்பீல் செய்தார். ஏப்ரல் 6, 2011 அன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்று, அலகாபாத் ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு 11-10-2011 அன்று நிறுத்தி வைத்தது[7]. மேலும், மனுதாரரின் புகாருக்கு உத்தரபிரதேச மாநிலம் அரசும், ராகுல் காந்தியும் பதில் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி ராகுல் தரப்பில் வக்கீல் ஒருவர் ஆஜராகி குற்றச்சாட்டை மறுத்தார். அதேபோல உத்தர பிரதேச அரசும் பதில் மனுதாக்கல் செய்தது. இதில் மனுதார் கிஷோர், ஒரு மனநோயாளி. எனவே அவரது அப்பீல் மனுவை ஏற்க கூடாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

கிஷோர் சம்ரிட்டே என்ற வாதி கொடுத்த விவரங்கள்: இதை மறுத்து சுப்ரீம் கோர்ட்டில் கிஷோர் கூறியதாவது: “அமேதி தொகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ராகுல் காந்தி கடத்திச் சென்று கற்பழித்த சம்பவம் வெளியான உடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் கிரமத்துக்கு சென்று விசாரித்து, கற்பழிப்பு நடந்ததாக உறுதி செய்து கொண்டேன். ராகுல் காந்திக்கு எதிராக பொதுநல வழக்கு தொடர விரும்பினேன். முன்னதாக சமாஜ்வாடி கட்சி தலைவர்களை சந்தித்து பேச முடிவு செய்தேன். அப்போது பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று கொண்டிருந்ததால், முன்னணி தலைவர்கள் டெல்லியில் இருந்தனர். எனவே, டெல்லி சென்று அவர்களை சந்தித்து, விவரத்தை முழுவதுமாக விவரித்தேன். இதைக்கேட்ட அவர்கள், ராகுலுக்கு எதிராக பொதுநல வழக்கு போடுமாறும், தங்களுக்கு தேவையான பாதுகாப்பும், உதவியும் செய்வதாகவும் என்னை ஊக்கப்படுத்தினர். இதன்பிறகே அலகாபாத் ஐகோர்ட்டில் ராகுல் காந்திக்கு எதிராக பொதுநல வழக்கு தாக்கல் செய்தேன். இன்று உத்தரபிரதேசத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. காங்கிரசுடன் சமாஜ்வாடி நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே சமாஜ்வாடி கட்சி தலைமையிலான உத்தரபிரதேச அரசு பல்டி அடித்துள்ளது. என்னை பலிகடா ஆக்கியதுடன், எனக்கு எதிராகவும் பதில் மனுதாக்கல் செய்துள்ளது. அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து என்னிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண் கற்பழிப்பு சம்பவம் பற்றி விவரமாகவும், விளக்கமாகவும் பதில் கூறினேன். நான் கோருவது எல்லாம், ராகுல் மீதான கற்பழிப்பு புகார் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுதான். ராகுலுக்கு எதிராக விசாரணை நடப்பட வேண்டும் என்று கோரவில்லை”, இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்[8]. ஆனால், சுப்ரீம் கோர்ட், இவ்வழக்கை தள்ளுபடி செய்து, கிஷோருக்கு ரூ..5 லட்சம் அபராதம் விதித்தது[9].

அயல் நாட்டு சதி உள்ளது என்று சிபிஐ கூறியதால் விசாரித்து அறிக்கை வெளியிட சுப்ரீம் கோர்ட் ஆணை (2012): அக்டோபர் 18, 2012 அன்று சுப்ரீம் போர்ட் மேல்முறையீட்டில் தீர்ப்பு கொடுத்தது[10]. சிபிஐ ஆறுமாத காலத்தில் விசாரித்து அறிக்கைக் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பில் ஆணையிட்டது[11]. மூன்று அயல்நாட்டு இணைதளங்களில் அத்தகைய ஆதாரமற்ற விவரங்கள், புகைப்படங்கள் வெளியிடப்பட்டதால், அயல்நாட்டு சதி இதில் இருக்கக் கூடும், என்று சிபிஐ முன்னர் கூறியிருந்தது[12]. அதுமட்டுமல்லாது, சமஜ்வாதி எம்.எல்.ஏவே அயல்நாடுகளிலிருந்து பெற்ற பணத்தை வைத்து தான் வக்கீல்களுக்கு பணம் கொடுத்து வழக்கு போட்டுள்ளார் என்றும் கூறியது[13]. அதாவது 17-04-2013ற்குள் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.
சோனியா காங்கிரஸ் இவ்விஷயத்தை அமுக்கப் பார்க்கிறது என்று தெரிகிறது: ஏற்கெனவே சுபரமணிய சுவாமி, ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோ, ராகுல் காந்தி முதலியோரைப் பற்றி பல வழக்குகள் போட்டுள்ளார். இந்நிலையில், இப்படியொரு வழக்கு போட்டது தள்ளுபடி செய்யப்பட்டாலும், விவாதங்கள் இருந்து கொண்டே இருக்கும். மேலும், இதில் அயல்நாட்டு சதி இதில் இருக்கக் கூடும், என்று சிபிஐ முன்னர் கூறியது, சோனியாவிற்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம். ஏனெனில், இதனால், வழக்கு முடிந்தாலும், விசாரணை என்னவாயிற்று, அறிக்கை என்னவாயிற்று, என்று ஊடகங்கள் பிரச்சினை கிளப்பிக் கொண்டிருக்கலாம். இன்று இணைதளம் ஒரு முக்கியமான அங்கமாகி, அதில் சோனியா காங்கிரஸ்காரர்களும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளாதால், இதைப் பற்றிய விவாதங்கள் மேன்மேலும் நடப்பதை நிச்சயமாக விரும்ப மாட்டார்கள்.

வேதபிரகாஷ்
© 09-08-2013
[1] தி இந்துவிலேயே வெளிவந்துள்ளன.
[10] October 18, 2012 – ITEM NO.1A COURT NO.12 SECTION II (For Judgment) – S U P R E M E C O U R T O F I N D I A – RECORD OF PROCEEDINGS – CRIMINAL APPEAL NO. 1406 OF 2012 – KISHORE SAMRITE Appellant(s) – VERSUS – STATE OF U.P. & ORS. Respondent(s); Date: 18/10/2012 This Appeal was called on for pronouncement of Judgment today.
http://www.indiankanoon.org/doc/75923839/
[11] The CBI shall continue the investigation in furtherance to the direction of the High Court against petitioner in Writ Petition No. 111/2011 and all other persons responsible for the abuse of the process of Court, making false statement in pleadings, filing false affidavits and committing such other offences as the Investigating Agency may find during investigation. The CBI shall submit its report to the court of competent jurisdiction as expeditiously as possible and not later than six months from the date of passing of this order.
[13] The CBI also claimed that the petitioner, Kishore Samrite, who filed a case against Rahul Gandhi, in the Allahabad High Court, had received foreign funds. The agency told a Supreme Court bench that it had seized chits showing Samrite had received foreign money for paying lawyers’ fees. The CBI said the abduction victim did not exist and the woman was conjured up in reports and uploaded on three foreign websites, which Samrite used with an ulterior motive. According to it, the victim woman was non-existent, her address fictitious and there was no record whatsoever with the Uttar Pradesh government or local bodies.
Read more at: http://indiatoday.intoday.in/story/foreign-hand-behind-bid-to-malign-rahul-gandhi-cbi-tells-sc/1/222107.html
குறிச்சொற்கள்:அந்தப்புரம், அந்தரங்கம், அந்நியன், அமேதி, இத்தாலி, ஊடல், ஒழுக்கம், கட்டுப்பாடு, கற்பழிப்பு, காதலி, காதல், காந்தி, கிஷோர் சம்ரிட்டே, குடும்பம், கூடல், சகோதரி, சதி, சமஜ்வாடி, சிபிஐ, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மைனோ, டேடிங், துணைவி, தேர்தல், நாகரிகம், நேரு, பணம், பண்பாடு, பிரம்மச்சரியம், பிரம்மச்சாரி, பிராமணன், பிரேசில், புகார், மனைவி, முன்னேற்றம், முலாயம், ரஷ்யா, ராகுல் காந்தி, வழக்கு, விருப்பம், விவாதம்
ஃபிரோஷ் காந்தி, ஃபிரோஷ் கான், அதிகாரம், அத்தாட்சி, அத்தை, அந்நிய நாட்டவன், அந்நியன், அமேதி, உடல், உரிமை, உறவு, ஒழுக்கம், கட்டுப்பாடு, கற்பழிப்பு, கற்பழிப்பு புகார், கவர்ச்சி, கவர்ச்சி அரசியல், காதலி, காதல், காந்தி கணக்கு, காமம், கிருத்துவ காதல், கிருத்துவம், கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கிஷோர் சம்ரிட்டே, செக்யூலரிஸம், செக்ஸ், சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, டேடிங், துணைவி, தேர்தல், தேர்தல் பிரச்சாரம், தொடர்பு, பிராமின், பிரியதர்சினி, பிரியதர்ஷினி, பிரிவு, புகார், மீடிங், முத்தம், ராகுல், ராஹுல், வென்ரிகோ இல் பதிவிடப்பட்டது | 4 Comments »
ஓகஸ்ட் 9, 2013
ராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)

பிரமச்சாரியாக இருந்து தியாகம் செய்யவே திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்: நாற்பது வயதான ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பற்றி அடிக்கடி செய்திகள், வதந்திகள், குசுகுசுக்கள் முதலியன வந்து கொண்டே இருக்கின்றன. நேரு குடும்பம் தொடர்ந்து பரம்பரை அரசியல் நடத்தி வருவதால், சோனியாவிற்குப் பிறகு ராகுல் என்ற நிலையுள்ளது. அந்நிலையில், ராகுலுக்குப் பிறகு யார் என்ற கேள்வியும் எழத்தான் செய்யும். அப்பொழுது தான், ராகுல் ஏன் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கேள்வி இயற்கையிலேயே எழும். எனவே, ராகுல் திருமணம் வேண்டாம் என்று தீர்மானித்திருந்தால், ஏன் என்ற கேள்வியும் எழும். இல்லை, இத்தகைய விவாதங்கள் வரக்கூடாது என்றால், ராகுலே தெளிவாக சொல்லியிருக்க வேண்ட்டும். இப்படி 40 வயது வரை திருமணம் ஆகாமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

காங்கிரஸ் செயலாளர் சியோராஜ் ஜீவன் வால்மீகியின் புது விளக்கம்: இப்பொழுது, குடும்ப அரசியல் மற்றும் பரம்பரை ஆட்சி முறையை தவிர்ப்பதற்காகவே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் திருமணம் செய்து கொள்ளவில்லை என காங்கிரஸ் செயலாளர் சியோராஜ் ஜீவன் வால்மீகி தெரிவித்துள்ளார்[1]. அது மட்டுமல்லாது, “ராகுல் மிகப்பெரிய மனிதர், மற்றும் மிகப்பெரிய தியாகம் செய்துள்ளார். இந்த காரணத்திற்காகத் தான் அவர் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அடல் பிஹாரி வாஜ்பேயைப் போல இவரும் பிரம்மச்சாரியாக உள்ளார்”, என்றெல்லம் விவரித்தார்[2]. இவர் புதியதாக நியமிக்கப் பட்டுள்ள கமிட்டி செயலாளராக இருப்பதால், என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசியுள்ளார் போலும்[3]. இது காங்கிரஸ் கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது[4].

குடும்ப அரசியல் மற்றும் பரம்பரை ஆட்சிமுறையைத் தவிர்ப்பதற்காகவே காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் திருமணம் செய்து கொள்ளவில்லை: இப்படி சொன்னதும், உடனே செய்தியாளர்கள் அவரை அதை மறுபடியும் கூறுமாறு / விளக்குமாறு கேட்டதற்கு, பிரச்சினையை உணர்ந்து, வால்மீகி உடனே தனது பேச்சை மாற்றிக் கொண்டு, பரம்பரை ஆட்சி முறையை தவிர்ப்பதற்காகவே ராகுல் திருமணம் செய்த கொள்ளவில்லை என தான் எங்கேயோ படித்ததாகவும், தான் கூறியதில் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்[5]. பின்னர் அவ்வாறு கூறியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்[6]. வழக்கம் போல இந்தியில் பேசியதை ஆங்கிலத்தில் போட்டு பிரச்சினையை உண்டாக்கி இருக்கிறார்கள்[7].

वाल्मीकि ने प्रेस कॉन्फ्रेंस में राहुल गांधी को लेकर दावा किया, ‘वह महान आदमी हैं और उन्होंने काफी बलिदान दिया है। यही वजह है कि उन्होंने शादी न करने का फैसला किया है। यहां तक कि अटल बिहारी वाजपेयी ने भी शादी नहीं की थी।’ हालांकि, जब उनसे पूछा गया कि क्या खुद राहुल गांधी ने शादी न करने की बात उनसे कही है तो वाल्मीकि ने यू-टर्न ले लिया। वाल्मीकि ने कहा, ‘मैं राहुल गांधी से नहीं मिला हूं। मैंने ये बातें अखबारों में पढ़ी हैं। यह बात गलत भी हो सकती है।’
|

மோடியும் பிரமச்சாரி தானே?: உண்மையில் நரேந்திர மோடியும் பிரம்மச்சாரித் தான். இவர் இப்பொழுது பீஜேபி தரப்பில் பிரதம மந்திரி பதவிக்காக பரிந்துரைக்கப் படும் நிலையில் உள்ளார். ஆனால், காங்கிரஸ் இதுவரை ராகுல் தான் காங்கிரஸ் தரப்பில் பிரதம மந்திரி என்று சொல்லவில்லை. ஒருவேளை மனதில் அத்தகைய கருத்தை வைத்துக் கொண்டு, இப்படி சொல்லிவிட்டாரோ என்னமோ? இருப்பினும், ஊடகங்கள் இவர்களை விடுவதாக இல்லை. வயதாகி விட்டதாலும், அவர் ஏற்கெனவே தீர்மானித்து விட்டதாலும், இவ்விஷயத்தில் அவருக்கு ஒன்றும் இல்லை. ஆனால், இளைஞர் என்று அறிமுகப்படுத்தப் பட்டு வரும் ராகுல் 40 வயதாகியும், திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதால், இப்படி அடிக்கடி செய்திகள், வதந்திகள், குசுகுசுக்கள் முதலியன வந்து கொண்டே இருக்கின்றன.
நிச்சயமாக சோனியா அவருக்கு ஒரு கிருத்துவப் பெண்ணைத்தான் கட்டி வைப்பார் என்று நெருக்கத்தில் உள்ளவர்கள் கருதுகின்றனர். ஏனெனில் பிரியங்காவை ராபர்ட் வதேரா என்ற கத்தோலிக்கக் கிருத்துவருக்குத்தான் திருமணம் செய்து கொடுத்தார்.
இந்நிலையில் தான் காங்கிரஸ்காரர்கள் குழம்பியுள்ளனர் என்று தெரிகிறது. பாகிஸ்தான் விஷயத்தில் கூட வாஜ்பேயி பாதையைப் பின்பற்ற வேண்டும், மோடி பாதை பின்பற்றக் கூடாது என்று பேசும் நிலை வந்துள்ளது. இதனால், இன்று வரை பிரம்மச்சாரியாக உள்ள ராகுலை, மோடிக்குப் பதிலாக, வாஜ்பேயுடன் ஒப்பிட்டுள்ளதில் எந்த முரண்பாடும் தெரியவில்லை. இருப்பினும் அந்த காங்கிரஸ் செயலாளர் சியோராஜ் ஜீவன் வால்மீகி, ஏதோ சொல்லி மாட்டிக் கொண்டு விட்டார்.

கடந்த மார்ச் – ஏப்ரல் மாதங்களிலும் ராகுலே இத்தகைய விளக்கம் கொடுத்தார்: ஏப்ரலில் ராகுல் தான் திருமணம் செய்து கொண்டால், குழந்தைகள் பிறக்கும், குழந்தைகள் பிறந்தால் அவர்களை கவனிக்க வேண்டியிருக்கும், அதனால் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றார்[8]. அதற்கு முன்னால் மார்ச்சிலும் அதே மாதிரி பேசியுள்ளார்[9]. 2010ல் யார் ராகுலுக்கு மனைவியாக முடியும் என்று “இந்தியா டுடே”வில் அவ்வாறே தலைப்பிட்டு, ஒரு கட்டுரை வெளிவந்தது[10]. இப்படி ராகுலே பேசியிருகும் போது, காங்கிரஸ்காரர்களுக்கு குழப்பம் தான் ஏற்படும். ஆனால், தேவி பிரசாத் என்ற அவரது ஆதரவாளர், ஆமேதி பிரச்சாரத்தின் போது, “எப்பொழுது அமேதிக்கு ராஜவம்ச மறுமகள் கிடைப்பாள்?”, என்று கேட்டதற்கு, “சீக்கிரமாக” என்று புன்னகையுடன் பதிலளித்தாராம் ராகுல்[11]. பிறகு ராகுலின் மனதில் ஏன் முரண்பாடு, முன்னுக்கு முரணான பதில்கள் முதலியன?
வேதபிரகாஷ்
© 09-08-2013
[5] தினமலர், ராகுல்திருமணம்:காங்., தலைவர்சர்ச்சைபேச்சு, பதிவு செய்த நாள்: ஆகஸ்ட் 08,2013,08:55 IST; மாற்றம் செய்த நாள் : ஆகஸ்ட் 08,2013,10:47 IST
குறிச்சொற்கள்:அந்தப்புறம், அந்தரங்கம். ராஜாங்கம், அனுமதி, அழகி, இத்தாலி, இந்திரா, இளவரசன், உறவு, ஒழுக்கம், கல்யாணம், காதலி, காதல், கார்டெல்லி, கூடல், சோனியா, டேடிங், துணைவி, நடிகை, நேரு, பாஸ்டன், பிரம்மச்சரியம், பிரியங்கா, பிரிவு, பிரேசில், மனைவி, ராகுல், ராபர்ட், ராஹுல், வதேரா, வெரோனிக், வெரோனிக் கார்டெல்லி, ஸ்பெயின், Veronique Cartelli
அனுஷ்கா, ஆணவம், ஆதாரம், இத்தாலி, இலக்கு, இளமை சோனியா, இளைஞர், உடல், உண்மை, உரிமை, உறவு, கவர்ச்சி, காதலி, காதல், கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், செக்ஸ், தோழி, பாஸ்டன், ராகுல், ராஹுல், வெரோனிக், வெரோனிக் கார்டெல்லி, ஸ்பெயின், Veronique Cartelli இல் பதிவிடப்பட்டது | 5 Comments »
மார்ச் 21, 2013
கருணாநிதி பேரன் வீட்டில் ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி!

முடிவை இரவேஎடுத்ததுஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ? கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19-ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.

பேரன்வீட்டில்ரெய்ட் – குசும்புசெய்யும்சோனியாபாட்டி!: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[1]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் ட்செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்? சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும்?

அர்த்தராத்திரியில்ரெய்ட்ஆரம்பித்ததுஏன்?: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[2].

விவரங்களைக்கொடுதததுவருவாதுறைபிரிவைச்சேர்ந்தஅதிகாரிகள்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து மற்றும் வெளி நாட்டு கார் வாங்கியது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. மு.க.ஸ்டாலின் வீட்டில்[3] அதிரடி சோதனை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் சட்டவிரோதமாக ரூ. 20 கோடி மதிப்புள்ள[4] சொகுசு கார்களை இறக்குமதி செய்து வைத்திருப்பது குறித்து வழக்கு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது[5]. அதாவது அவற்றின் மீது வரி செல்லுத்தப்படவில்லையாம்[6]. ஸ்டாலின் ரெய்ட் ஏன் நடக்கிறது என்று தெரியவில்லை என்று கூறினாலும், பாலு இது ஒரு அரசியல் பழிவாங்கும் போக்கு என்று கூறியுள்ளார்[7].

© வேதபிரகாஷ்
21-03-2013
குறிச்சொற்கள்:உதயநிதி, உள்துறை அமைச்சர், ஊடல், கருணாநிதி, கல்யாணம், காதல், கார், கூடல், கூட்டணி, கூட்டணி தர்மம், சிதம்பரம், சொகுசு கார், டைவர்ஸ், தேசத் துரோகம், பகல், மிரவு, முதலிரவு, ரெய்ட், ஸ்டாலின், Indian secularism
அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, அவதூறு, ஆயுதம், ஆரோக்யம், இரவில் காமி, உடன்படிக்கை, உண்மை, உதயநிதி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊடல், ஊழல் குற்றச்சாட்டு, ஒட்டுண்ணி, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கம்யூனிஸம், கருணாநிதி, கருத்து, காமம், காழ்ப்பு, கூடல், கைப்பேசி, சமதர்மம், சமத்துவம், சம்மதம், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, ஜிஹாத், டைவர்ஸ், நாடியா, படுக்கை, பட்டம், முறிவு, ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, ரெய்ட், ஸ்டாலின் இல் பதிவிடப்பட்டது | 6 Comments »
ஜனவரி 26, 2012
இந்து-முஸ்லீம் காதல் கொலையில் முடிந்த கதை!
காதல் மதத்தைக் கடந்ததா? விஜய் டிவி, பம்பாய், சினிமா காதல் முதலியவை நடமுறைக்கு உதவாது, வராது என்ரு மறுபடியும், ஒடரு காதல் கொலையில் முடிந்து மெய்ப்பித்துள்ளது. காதல் மத்தைக் கடத்து இல்லை. குறிப்பாக முஸ்லீம் / கிருத்துவர்கள் காதலில் “ஒரு வழி” பாதைத் தான் கடைப் பிடிப்பார்கள். முதலில் பொய் சொல்லி ஏமாற்றுவார்கள். ஆனால், திருமணம் என்று வரும்போது, மதம் மாறச் சொல்வார்கள். பிறகு, உறவினர்களை மாறச் சொல்வார்கள், அல்லது மாற்றச் சொல்வார்கள். கடவுளை மாற்றியப் பிறகு தான், இந்த வற்புறுத்தலான மாற்றங்கள். பிறகு, ஏகப்பட்ட மன-உளைச்சல்கள். பெற்றோர்களையே மறந்துவிட வேண்டும். சகோதர-சகோதரிகளை பார்த்தால் கூட பேச முடியாது. உற்றார்-உறவினர்கள் ஒதுங்கி விடுவார்கள் அல்லது ஒதுக்கப் படுவார்கள். சம்பிரதாயங்கள், பழக்க-வழக்கங்கள் எல்லாவற்றையும் மாற்றிக் கொள்ள வேண்டும். ஆனால்,புரியாத இளைஞர்கள் அத்தகைய காதலில் வீழ்கிறார்கள், மாட்டிக் கொள்கிறார்கள், மாய்கிறார்கள், மாய்த்துக் கொள்கிறார்கள்.
ஷாஜிதாவை காதலித்த சந்தானம்: சென்னையை அடுத்துள்ள வண்டலூர் கிரசன்ட் என்ஜினீயரிங் கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து வருபவர் ஜியாவுதீன். இவரது மனைவி தவுசிக் நிஷா (39). இவர்களுக்கு ஷாஜிதா (19), ஷர்மிதா (17) என்ற 2
வாலிப வயதில் காதல் போன்ற உணர்ச்சிகள் வருவது, உண்மையான காதல் இல்லை, அது காமத்துடன் கூடிய எண்ணம் தான். இப்பொழுதுள்ள, நண்பர்களின் சகவாசம், சினிமாக்கள் பார்ப்பது, பேசுவது முதலியனத்தான் அச்த்தகைய உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன, படிக்கின்ற வயதில் காதல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை |
மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள இன்னொரு கல்லூரியில் படித்து வருகிறார்கள். ஷாஜிதாவை அதே கல்லூரியில் படித்து வந்த சந்தானம் (20) என்ற வாலிபர் தீவிரமாக காதலித்து வந்தார். அவரை திருமணம் செய்வதற்காக பலமுறை வீட்டுக்கு சென்று சந்தானம் பெண் கேட்டுள்ளார். இதற்கு ஷாஜிதாவின் தாய் தவுசிக் நிஷா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த விவகாரத்தை அறிந்த தாய் தவ்ஹீத்நிஷா, மகளை கண்டித்தார். அத்துடன் சந்தானத்துடன் பழகவும் தடை விதித்தார். ஆனால் சந்தானம் காதலை விடவில்லை. ஷாஜிதாவை பின் தொடர்ந்து சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக தவுசிக் நிஷாவை தனியாக சந்தித்து சந்தானம் பலமுறை பேசி உள்ளார். இருப்பினும் தவுசிக் நிஷா மனம் மாறாமல் தனது முடிவில் தெளிவாக இருந்தார்.
பேண் கேட்டு வந்த சந்தானம் குடும்பமும், மறுத்த முஸ்லீம் பெற்றோர்களும்: இந்த சூழ்நிலையில் கடந்த 19ம் தேதி சந்தானம், தனது பெற்றோர் மற்றும்
இத்தகைய தடைகள் இருப்பதை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஏதோ, ஒரு செக்யூலரிஸ நாட்டிலடீருக்கிறோம் என்று கனவு காண வேண்டாம். இஸ்லாத்தைப் பொறுத்த வரையிலும் “ஒரு வழி” தான், அதாவது, காதலிக்கும் முஸ்லீம் அல்லாதவர், முஸ்லீமாக மாறினால் தான், காதல், இல்லையெனில் சாதல் தான். கிருத்துவத்திலும் அதே கதிதான். |
உறவினர்களுடன் கியாஜூதீன் வீட்டுக்கு வந்தார். முறைப்படி சர்மிதாவை திருமணம் செய்து தரும்படி தவ்ஹீத் நிஷாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், “நாங்கள் வேறு மதம் என்பதால் திருமணத்துக்கு எந்த வகையிலும் உறவினர்கள் சம்மதிக்க மாட்டார்கள். எனவே, மகளை இனி பார்க்க கூடாது, பேசக்கூடாது” என்று கூறியுள்ளார்[1]. இதையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சந்தானம், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தாயைக் கொலைசெய்த் காதலன்[2]: இந்நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் சந்தானம் கல்லூரி வளாகத்தில் உள்ள காதலியின் வீட்டுக்கு சென்றார். அங்கு தனியாக இருந்த தவுசிக் நிஷாவிடம், ஷாஜிதாவை எனக்கு திருமணம் செய்து வையுங்கள். நான் அவளை நன்றாக பார்த்துக் கொள்வேன் என்று கூறியுள்ளார்[3].
காதல், திருமணம் என்று வரும்போது, மதம் குறிக்கிடத்தான் செய்கிறது. இஸ்லாத்தைப் பொறுத்த வரையிலும் “ஒரு வழி” தான், அதாவது, காதலிக்கும் முஸ்லீம் அல்லாதவர், முஸ்லீமாக மாறினால் தான், காதல், இல்லையெனில் சாதல் தான். |
இதற்கு தவுசிக் நிஷா, வேறு மதத்தை சேர்ந்தவன். எங்கள் குடும்பத்துக்கு இது ஒத்து வராது. எனவே ஷாஜிதாவை தொந்தரவு செய்வதை விட்டு விடு என்று கூறியுள்ளார். இது சந்தானத்துக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. திடீரென ஆவேசமடைந்த சந்தானம் தான் மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தியை எடுத்து தவுசிக் நிஷாவை சரமாரியாக வெட்டினார். இதில் கழுத்து, நெஞ்சு பகுதி உள்ளிட்ட இடங்களில் அவருக்கு வெட்டு விழுந்தது. இதனால் அலறி துடித்தப் படியே தவுசிக் நிஷா வீட்டுக்குள் அங்கும் இங்குமாக ஓடினார். ஆனால் சந்தானம் ஈவு இரக்கமின்றி வீட்டுக்குள்ளேயே விரட்டிச்சென்று தவுசிக் நிஷாவை துடிக்க துடிக்க வெட்டிக் கொன்றார். பின்னர் சந்தானம் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்[4].
கொலை செய்த காதலன், தப்பி ஓட்டம்: இது குறித்து தகவல் கிடைத்ததும் ஓட்டேரி போலீசார் அங்கு விரைந்து சென்று தவுசிக் நிஷாவின் உடலை கைப்பற்றி செங்கல் பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வீடு முழுவதும் ரத்தக் கறையாக
நினைத்தது நடக்கவில்லை, எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்ற ஒன்றும் செய்ய முடியாத நிலையை அடையும் போது, மனிதனை இந்த அளவிற்கு கொலை செய்யத் தூண்டுகிறது. அதாவது, காதலைத் தடுப்பது என்ன, யார் என்று அடையாளம் காணும் போது, அத்தடையை நீக முயன்ற காதலனின் விரக்தி கொலையில் முடிந்துள்ளது. ஆனால், சட்டப்படி அவன் தப்ப முடியாது. |
காட்சி அளித்தது. சந்தானம் பதட்டத்தில் கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் ஒரு அரிவாளை அங்கு விட்டுச் சென்றுள்ளார். அவரது செல்போனும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை வைத்து போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள். தவுசிக் நிஷாவை கொலை செய்து விட்டு தப்பிச்சென்ற சந்தானம் சப்-இன்ஸ்பெக்டரின் மகன். இவரது தந்தை பெயர் சந்திரபாபு. இவர் பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். தவுசிக் நிஷாவை தீர்த்துக்கட்ட சந்தானம் திட்டம் போட்டு வேலை செய்தது தெரிய வந்துள்ளது. இந்த கொலைக்கு சந்தானத்தின் நண்பர் ஒருவரும் உடந்தையாக இருந்துள்ளார். தலைமறைவாகி விட்ட அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இன்று காலையில் கல்லூரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும் கல்லூரி வளாகத்தில் அனுமதிக்கப் பட்டு வருகிறார்கள்.
விஜய் டிவி விவாதம் நடமுறைக்கு வராது: விஜய் டிவியில், “நீயா, நானா” என்ற நிகழ்ச்சியில், பல முறை, வாழ்க்கையில் ஒரு சிலர் செய்து வரும் காரியங்களை, ஒட்டு மொத்தமாக அனைவருமே சமுதாயத்தில் செய்து வருகின்ற மாதிரியும், அதனால், சமூகத்தில் ஏதோ பெரிய தாக்கம் ஏற்படுத்துகின்றது போலவும், குறிப்பிட்ட, தேர்ந்தெடுக்கப் பட்டவரளை வைத்துக் கொண்டு, வலிந்து, தங்களது கருத்துகளை பார்வையாளர்களின் / நேயர்களின் மீது திணிக்க யத்தணித்து வருகிறது. அப்படித்தான், ஒன்று / இரண்டு நிகழ்ச்சிகளில், மதம் கடந்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் எப்படி வாழ்கின்றனர் என்று நிகழ்ச்சி நடத்தப் பட்டது.
மதம் கடந்து காதல், திருமணத்தால் யாருக்கு லாபம்? அதில் இந்து காதலி தான், முஸ்லீம் / கிருத்துவ காதலனுக்காக மதம் மாறி திருமணம் செய்து கொண்டுள்ளாள். அதே போலத்தான் இந்து காதலன், முஸ்லீம் / கிருத்துவ காதலிக்காக மதம் மாறி திருமணம் செய்து கொண்டுள்ளான். ஏன் முஸ்லீம் / கிருத்துவ காதலன் / காதலி தங்களது மதத்தைத் துறந்து இந்து காதலி / காதலனைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று விவாதிக்கவில்லை. அதாவது, காதல் மதத்தைக் கடந்து என்பது இஸ்லாம் / கிருத்துவ மதங்களைப் பொறுத்த வரைக்கும் பொய் என்றேயாகிறது.
ஏன் முஸ்லீம் / கிருத்துவ காதலன் / காதலி தங்களது மதத்தைத் துறந்து இந்து காதலி / காதலனைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது: இதற்கு “முடியாது” என்று முஸ்லீம்கள் / கிருத்துவர்கள் பதிலளிக்கும் பட்சத்தில், பள்ளியில், கல்லூரியில் படிக்கும் இந்து மாணவ-மாணவியர் முஸ்லீம்-கிருத்துவ மாணவி-மாணர்களுடன் அதிக அளவில் நட்பு வைத்துக் கொள்ளவேண்டாம். அதே போல பணி புரியும் இடங்களில் வஇருக்கும் இந்துக்கள் முஸ்லீம்-கிருத்துவர்களிடம் அதிக அளவில் நட்பு வைத்துக் கொள்ளவேண்டாம். அதாவது, நட்பு என்ற எல்லைகளை கடந்து காதல் என்று நிலை வரவேண்டாம். ஏனெனில், பிரச்சினைகள் தாம் வரும், குடும்பங்கள் பாதிக்கப் படும், உறவுகள் துண்டிக்கப் படும். அதாவது, பெருமளவில் இந்துக்களுக்குத் தான் எல்லா விதங்களிலும் பாதிப்பு ஏற்படும். அதையும் மீறி காதலித்து, கல்யாணம் செய்து கொண்டால், ஏதோ பெரிய தியாகம் செய்து, எல்லாவற்றையும் துறந்த நிலை தான் ஏற்படும். குறிப்பாக இந்துப் பெண்கள் பெருமளவில் பாதிக்கப் படுவார்கள். இவையெல்லாம், அந்த நிகச்ழ்ழிகளிலேயே தெரிய வருகிறது. இருப்பினும், தணிக்கை செய்து, மழுப்பி அத்தகைய எண்ணம் உருவாகாதவாறு நிகழ்ச்சியை அமைத்துள்ளனர்.
வேதபிரகாஷ்
26-01-2012.
குறிச்சொற்கள்:இந்திய விரோத போக்கு, இந்து காதலன், இந்து காதலி, இந்து காதல், இந்துக்களின் உரிமைகள், கலாச்சாரம், காதல், கிருத்துவ காதலன், கிருத்துவ காதலி, கிருத்துவ காதல், சாதல், செக்யூலரிஸம், ஜிஹாத், மதம், மதம் கடந்த காதல், மதம் கடந்தது, மன உளைச்சல், முஸ்லீம் காதலன், முஸ்லீம் காதல்
அயோத்யா, அவதூறு, இந்து காதலன், இந்து காதலி, இந்து காதல், இந்துக்கள், உண்மை, காதல், கிருத்துவ காதலன், கிருத்துவ காதலி, கிருத்துவ காதல், சிறுபான்மை பிரிவு மாணவர், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, மதம், மதரீதியாக பாரபட்சம், மதவேற்றுமை, முஸ்லீம் காதலன், முஸ்லீம் காதலி, முஸ்லீம் காதல் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »