Posts Tagged ‘இசை’

ஜுபின் மெஹ்தா இசைநிகழ்ச்சியும், பரிக்ரமா (சுற்றிவரும்) பூஜையும் – செக்யூலரிஸ இந்தியாவின் இரட்டை முகமூடிகள் – சோனியா அமெரிக்காவில், பிரச்சினைகள் இந்தியாவில்!

செப்ரெம்பர் 10, 2013

ஜுபின் மெஹ்தா இசைநிகழ்ச்சியும், பரிக்ரமா (சுற்றிவரும்) பூஜையும் – செக்யூலரிஸ இந்தியாவின் இரட்டை முகமூடிகள் – சோனியா அமெரிக்காவில், பிரச்சினைகள் இந்தியாவில்!

Indian dogs go back home

Indian dogs go back home

பத்துநாட்களில்நடந்தஇரண்டுநிகழ்ச்சிகள்செக்யூலரிஸ்டுகளால்பத்துவிதமாகஅணுகப்பட்டிர்ருக்கின்றன: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜுபின் மெஹ்தா இசைநிகழ்ச்சி (07-09-2013) ஆர்பாட்டமாக, ஏகபட்ட ராணுவ, பாதுகாப்பு மற்றும் போலீஸார் பாதுகாப்புடன் நடைப்பெற்றது. ஆனால், உத்திரபிரதேச மாநிலத்தில் அயோத்தியாவில், பரிக்கிரமா என்ற சடங்கு நிகழ்சி (30-08-2013) நடத்த விடாமல் பாதுகாப்பு, கலவர தடுப்பு மற்றும் போலீஸார் துணையுடன் இரும்புக் கரம் கொண்டு தடுக்கப்பட்டது. வி.எச்.பி.தலைவர்கள் மாநிலத்தில், குறிப்பாக அயோத்தியாவில் கூட வரவிடாமல் தடுத்து, விமான நிலயத்திலேயே கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப் பட்டனர்[1]. இதில் வேடிக்கை என்னவென்றால் ஐந்தாவது நாளில் தான், அத்தகைய தடை, கைதுகள் முதலியன ஆரம்பித்தன[2]. மாகாண மாஜிஸ்ட்ரேட் தொகாடியாவை கைது செய்த போலீஸாருக்கு பரிசு வேறு அறிவித்தது படுவேடிக்கையாக இருந்தது[3]. காஷ்மீரத்தில், ஜுபின் மெஹ்தா இசைநிகழ்ச்சியை பிரிவினைவாதிகள் எதிர்தாலும், நடத்தியே திருவது என்று தீர்மானமாக இருந்தார் உமர் அப்துல்லா. இதுவே, முன்னர் காஷ்மீர பெண்கள் இசைநிகழ்ச்சி நடத்தியபோது, மௌல்விகள் எதிர்ப்புத் தெரிவித்து பத்வா போட்டபோது, இசைநிகழ்ச்சிக்கு அல்லது அப்பெண்களுக்கு ஆதரவாக ஒன்றும் செய்யவில்லை. அப்பெண்கள் மிரட்டப்பட்டதால், அந்த இசைக்குழுவே கலைப்பட்டது. இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் மத்திய அரசு – சோனியா காங்கிரஸ் மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளது.

 

சுற்றிவரும் சடங்கை தடுத்தது, அடக்கியது, கைது செய்தது

சுற்றிவரும் சடங்கை தடுத்தது, அடக்கியது, கைது செய்தது

ஸ்ரீநகரின்தால்ஏரியில் 07-09-2013 அன்றுஜுபின்மேத்தாஇசைநிகழ்ச்சி: ‘காஷ்மீர் உணர்வு’ என்ற பெயரில், 07-09-2013 அன்று அவர் நடத்த உள்ள இசை நிகழ்ச்சி குறித்து, சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ள, இந்தியாவைச் சேர்ந்த பிரபல இசைக்கலைஞர், ஜுபின் மேத்தா, 77, நேற்று கூறியதாவது: “அமைதியின் தூதவன் இசை. பிரிவினைவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் சொல்ல, என்னிடம் ஒன்றுமில்லை. என் இசை நிகழ்ச்சியை நடத்த, நான் காஷ்மீரை தேர்ந்தெடுக்கவில்லை; என்னை, காஷ்மீர் தேர்ந்தெடுத்துள்ளது. இசை, அமைதியின் மறுவடிவம்,” இவ்வாறு அவர் கூறினார்[4]. மும்பையில், பார்சி இனத்தை சேர்ந்த, மெஹ்லி மேத்தாவின் மகனாக பிறந்த இவர், உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். ஜம்மு – காஷ்மீரின் கோடைகால தலைநகர், ஸ்ரீநகரின் தால் ஏரி பகுதியில் ஷாலிமார் பாக் பூங்காவில்  அன்று, பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தினார். இதில் பங்கேற்க, நாடு முழுவதும் இருந்தும், உலக நாடுகளில் இருந்தும், ஏராளமான இசை ஆர்வலர்கள், ஸ்ரீநகரில் குவிந்தனர்.  இசை நிகழ்ச்சியில், ஜுபின் மேத்தாவும், பவேரியா மாநில இசைக்குழுவும் இணைந்து பீதோவன், ஹெய்டன் மற்றும் சாய்கோவ்ஸ்கி போன்ற உலகப் புகழ் பெற்றோரின் இசை கோப்புகளை நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு நிதி உதவி அளிக்கும் பிஎம்டபிள்யு நிறுவனம் இங்கு வந்த முக்கியமானவர்களின் போக்குவரத்திற்கான வாகனங்களை வழங்கியுள்ளது.

 

இந்த அயோத்தியாவின் உள்ளூர் குடிமகன் தான் ஆட்சியை வீழ்த்த போகிறானா - முல்லாயம் ஏன் பயப்படவேண்டும்?

இந்த அயோத்தியாவின் உள்ளூர் குடிமகன் தான் ஆட்சியை வீழ்த்த போகிறானா – முல்லாயம் ஏன் பயப்படவேண்டும்?

இந்தநாட்டின்வியத்தகுகுடிமகன், ஜுபின்: சமூக நல்லிணக்கத்திற்கான, தாகூர் விருது, ஜுபின் மேத்தாவுக்கு, டில்லி, ராஷ்டிரபதி பவனில் வழங்கப்பட்டது. மேத்தாவுக்கு அந்த விருதை வழங்கிய ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, “இந்த நாட்டின் யத்தகு குடிமகன், ஜுபின்,” என, புகழாரம் சூட்டினார். இதற்கு பிறகு, காஷ்மீரத்தில் தனது இசைநிகழ்ச்சி நடத்த சென்றார். அதாவது, அவர் இந்தியாவிற்கு வருவது-வரவழைப்பது என்பது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டதொன்று என்று தெரிக்கிறது. அதற்கு, அரசு தேவையானவற்றை செய்து கொடுத்தது. ராணுவ பாதுகாப்புப் பிரிவு பூங்காவையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் தங்களின் பாதுகாப்பு வளையத்திற்குள் 05-09-2013 வியாக்கிழமை அன்றே கொண்டுவந்தனர். அங்கிருக்கும் பல கடைக்காரர்களை அன்று மதியம் முதலே கடையை மூடும்படி அவர்கள் உத்தரவிட்டனர். பல அடுக்கு பாதுகாப்பை வழங்கியுள்ளதாக காஷ்மீர் பிரிவின் காவல்துறைத் தலைவர் ஏ.ஜி.மீர் தெரிவித்தார்.

 

காஷ்மீரத்தில் கடந்த ஜூலை 2013ல் பல்கலைக்கழகத்தின் சார்பாக நடந்த இசை நிகழ்ச்சி

காஷ்மீரத்தில் கடந்த ஜூலை 2013ல் பல்கலைக்கழகத்தின் சார்பாக நடந்த இசை நிகழ்ச்சி

இசைநிகழ்ச்சி நடந்தபோது, துப்பாக்கி சூடு: கிட்டத்தட்ட 2000 ரசிகர்கள் கூடியிருந்து இசை நிகழ்ச்சியினைக் கண்டு களித்த போதிலும், ஆங்காங்கே துப்பாக்கித் தாக்குதல்கள் நடைபெற்றவண்ணம்தான் இருந்தன. புட்ஷா சதுக்கத்தில் வேகமாகத் தங்களைக் கடந்து சென்ற காரை காவல்துறை வீரர்கள் சுட்டதில் காரை ஓட்டியவரின் இரண்டு கால்களும் சேதமடைந்தன. காஷ்மீரின் தென்பகுதியில் உள்ள புல்வாமா என்ற இடத்தில் அடையாளம் தெரியாத போராளிகள் காவல்துறையினர் மீது கையெறி குண்டுகளை வீசியதில் ஏழு பேர் காயமடைந்தனர்.  தலைநகரிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள ஷோபியன் மாவட்டத்தில் ராணுவக் காவல் துருப்புகளினால் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உள்ளூர் மக்கள் அவர்கள் அப்பாவி மனிதர்கள் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். ஆயினும், அவர்கள் அங்கிருந்த சோதனைச் சாவடியைத் தாக்கியதாகவும், ஆயுதங்களையும், கையெறி குண்டுகளையும் தங்களுடன் வைத்திருந்ததாகவும் சிஆர்பிஎப்பின் நிர்வாக இயக்குநர் திலிப் திரிவேதி தெரிவித்துள்ளார்[5]. ஆக, சிலர் இறந்தாலும், பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள் கவலைப்பட்டதாக தெரியவில்லை. இதனால், அனைத்துலக விள்ளம்ம்ப்பரம் கிடைததால் சரி என்ற நிலயில் இருப்பது தெரிகிறது.

 

பாட்டுக்குப் பாட்டு எடுத்த இசையை எதிர்க்கும் முஸ்லிம்களின் இசைக்கச்சேரி

பாட்டுக்குப் பாட்டு எடுத்த இசையை எதிர்க்கும் முஸ்லிம்களின் இசைக்கச்சேரி

குண்டுசப்தங்களுக்குஇடையேநடந்துமுடிந்தஜுபின்மேத்தாவின்இசைநிகழ்ச்சி: இந்த இசைநிகழ்ச்சி பல பிரிவினைவாத அமைப்புகளிடமிருந்து ஆட்சேபனையைத் தூண்டியது. ஜம்மு காஷ்மீர் மக்கள் கழகத்தின் கூட்டமைப்புப் பிரிவின் தகவல் தொடர்பாளர் பர்வேஸ் குர்ரம் இந்த இசை நிகழ்ச்சி மூலம் காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்திருப்பதை நியாயப்படுத்த முயலுவதாக குற்றம் சாட்டினார். இந்நிகழ்ச்சிக்குப் போட்டியாக மற்றொரு இசை நிகழ்ச்சியினை அவர்களது இயக்கம் நடத்தினர். பல்வேறு பிரிவினைவாத அமைப்புகளும் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. பிரபலமான தலைவரான சையது அலி ஷா கிலானி 06—09-2013 வெள்ளிக்கிழமை அன்றைய தொழுகைகள் முடிந்தவுடன் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். துக்தரான்-ஈ-மிலியத் அமைப்பின் தலைவர் சயீதா ஆசியா அந்த்ரபியும், ஒன்றுபட்ட ஜிஹாத் அமைப்பின் தலைவரும், ஹிஸ்புல் முஜாஹிதின் தலைவருமான சையத் சலாவுதீனும் கிலானியின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார். காஷ்மீர் மக்களின் புண்களில் உப்பைத் தடவுவது போன்ற செயலாகும் என்று இந்த இசை நிகழ்ச்சி குறித்து பாகிஸ்தானின் காஷ்மீர் பகுதியில் இருக்கும் சலாவுதீன் தெரிவித்தார்[6]. ஆனால், இவர்கள் பர்வேஸ் குர்ரம் இசைநிகழ்ச்சி நடத்துவேன் என்பதற்கு ஒன்றும் சொல்லவில்லை. வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு என்பதும் எந்த அளவிற்கு போலியானது என்பதை கவனிக்கலாம், ஏனெனில், அவ்வாறு வேலைநிறுத்தம் அமூல் படுத்தினால், நிச்சயம் பிரச்சினை அதிகமாகும். எந்த நிகழ்ச்சியும் நடக்காது. அதாவது அரசு ஏற்பாடு செய்தது மற்றும் பிரிவினைவாதிகள் ஏற்பாடு செய்தது இரண்டும் நடக்காது. ஆனால், அவ்வாறு வேலைநிறுத்தம் செயவில்லை. அதாவது இரண்டு நிகழ்ச்சிகளும் நடைபெற மறைமுகமாக ஒத்துழைப்புத் தந்துள்ளனர்.

ஜுபின் நிகழ்ச்சியினால் கல்யாண வைபவங்கள் தடை பட்டன என்று புகார்!

ஜுபின் நிகழ்ச்சியினால் கல்யாண வைபவங்கள் தடை பட்டன என்று புகார்!

என்.டி டிவியின் இந்தியவிரோதப் பிரச்சாரம்[7]: என்.டி டிவியின் இந்நிகழ்ச்சியைப் பற்றிய அதிகமான செய்தி தொகுப்புகள், வீடியோக்கள், விவாதங்கள் விரோதமான பாங்கைக் கொண்டிருந்தன. அவை பின்வருமாறு:

  • Zubin Mehta’s ‘concert-ed’ peace effort – ஜுபின் மேத்தாவின் சதிதிட்டமான அமைதி முயற்சி
  • Will return to Kashmir if it wants me: Zubin …[8] – காஷ்மீரத்திர்க்கு மறுபடியும் வருவேன், காஷ்மீர் என்னை கூப்பிட்டால்…
  • Zubin Mehta’s Kashmir concert[9]: Separatists vs …  பிரிவினைவாதிகளும், ஒற்றுமைக்கான இசைநிகழ்ச்சியும்….
  • Zubin Mehta in Srinagar: We hurt some inadver … எல்லோருக்கும் இந்நிகழ்ச்சி இல்லாததற்காக வருந்துகிறேன்[10]
  • Bullets to Beethoven – Zubin Mehta’s concert …..பீதோவன் இசைநிகழ்ச்சிக்கு துப்பாக்கித் தோட்டாக்கள்[11]
  • 4 killed in Jammu and Kashmir firing; police … 4 பேர் கொல்லப்பட்டனர்….
  • For Zubin Mehta concert, heavy security in Sr … அதிகமான பாதுலகாப்புடன் இசைநிகழ்ச்சி
  • Omar Abdullah slams separatists for opposing … உமர் அப்துல்லா பிரிவினைவாதிகளை குறைகூறுகிறார்
  • Omar Abdullah hits out at separatists over Zu .. ஜுபின் மேத்தா நிகழ்ச்சியை எதிர்ப்பதற்காக உமர் அப்துல்லா பிரிவினைவாதிகளை குறைகூறுகிறார்
  • Concert-ed effort at peace? – ஜுபின் மேத்தாவின் சதிதிட்டமான அமைதி முயற்சி
ஹகீகத்-இ-காஷ்மீர் இசைநிகழ்ச்சியின் அழைப்பிதழ்

ஹகீகத்-இ-காஷ்மீர் இசைநிகழ்ச்சியின் அழைப்பிதழ்

இதை ஜுபின் மேத்தாவே எடுத்துக் காட்டுகிறார்: “ஒரு கன்டெக்டரின் இசைநிகழ்ச்சி காஷ்மீரத்தில் கசப்பான ராகத்தை ஏற்படுத்தியுள்ளது”, என்று நக்கலாக தலைப்பிட்டு செய்து வெளியியட்டது[12]. என்.டி டிவியின் இந்தியவிரோத பிரச்சாரமே அலாதியானதாகும். பாகிஸ்தானில் தனக்கு கிளை உள்ளது என்ற பிரசித்தம் கொண்ட, இந்த தொலைக்காட்சி, பாகிச்தானுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னொரு கம்யூனிஸ, இந்தியவிரோதஊடகக்குழு “தி-ஹிந்து”வும் சேர்ந்து கொண்டு, “ஹிந்து- என்.டி டிவி” தொலைக்காட்சி செனலையும் நடத்துகின்றன. இப்பிரச்சினையைப் பொறுத்த வரைக்கும், அது எவ்வாறு நடந்து கொண்டது என்பதனை, ஜுபின் மேத்தா சொன்னதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். “அன்றைக்கு இரவு, 12 பேர் சேர்ந்து கொண்டு என்னுடைய இசைநிகழ்ச்சியைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். அதில் 9 பேர் சொல்லிவைத்தால் போல எதிர்த்துப் பேசிக் கொண்டிருந்தனர். 3 பேர் சப்தமாக ஆதரித்துப் பேசினர். அந்த 9 பேர் எனக்கு எதிராகப் பேசியதைக் கண்டு, நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். ஏனெனில் அவர்களுக்கு உண்மையே தெரியவில்லை. அப்படி தெரியாமல் இருந்தபோதிலும் அவர்கள் தெரிந்தது போல பேசிக் கொண்டிருந்தனர். யாருமே நான் ஏன் இசை நிகழ்ச்சி நடத்துகிறேன் என்பதனை குறிப்பிடவில்லை”, என்று அத்தொலைக்காட்சியின் பாரபட்சமான நிலையை எடுத்துறைத்தார்[13]. “அவர்கள் நினைக்கிறார்போல, உள்நோக்கம் எதுவும் இல்லை. சென்ற வருடம் ஜெர்மானிய தூதரகம் எனக்கு சவால் விட்டதால் அதனை ஏற்றுக் கொண்டேன். அவ்வளவுதான். எனக்கு காஷ்மீரத்தின் அரசியல் எவ்வாறு வேலை செய்கிறது என்பது கூட எனக்குத் தெரியாது”, என்றும் ஒப்புக்கொண்டார்[14].  பர்கா தத் எந்த அளவிற்கு நாடகம் போன்ற நிகழ்ச்சி நடத்தி அதனை, தொலைகாட்சியிலும் ஒலி-ஓளிபரப்பியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

© வேதபிரகாஷ்

09-09-2013


[2] Faizabad district officials on Thursday (29-08-2013)  arrested about 50 VHP activists in the Gosaiganj and Akbarpur police station areas of the neighbouring Ambedkarnagar district as they tried to perform the 84-Kosi parikrama. The arrests on Thursday came on the fifth day since the banned yatra was scheduled have kicked off. “We are alert and keeping a tight vigil on the movements of VHP activists… till the last date for the parikrama, we are not going to lower our guard,” said Faizabad district magistrate, Vipin Kumar Dwivedi. Strict checking is being carried out on buses, trains and at all entry points into the district. VHP has plans to perform the parikrama in the Taarun and Bikapur police station areas of Faizabad on Friday but the DM said they were ready to foil any such attempts. Read more at: http://ibnlive.in.com/news/50-vhp-activists-arrested-for-trying-to-perform-banned-84kosi-parikrama/418351-3-242.html?utm_source=ref_article
http://ibnlive.in.com/news/50-vhp-activists-arrested-for-trying-to-perform-banned-84kosi-parikrama/418351-3-242.html

[3] The DM announced a reward of Rs 10,000 to inspector Brijesh Chandra Tiwari for arresting Togadia. Earlier, over 200 sadhus led by Nritya Gopal Das, chairman of Ram Janmbhoomi Trust and Mahant to Maniram Chawani, offered arti in the temple before taking out a procession in the street. The police forced them to return to his ashram. They were later put under the house arrest.  Read more: http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2401837/Parikrama-stopped-tracks-VHP-leader-patron-TWO-THOUSAND-arrested-UP-controversial-Ayodhya-yatra.html#ixzz2eNvaaUCY
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[13] Mr Mehta admitted that he was hurt by some of the accusations made against him ahead of the concert and lamented that his opponents were not well-informed. “The night before the concert, I saw a discussion on TV with 12 people. All speaking candidly- about nine were against it and three people vociferously for it. The nine people who spoke against it really hurt me because they were completely misinformed, they talked about facts that they did not know anything about. Nobody had enlightened them about the matter,” he said.

http://www.ndtv.com/article/india/zubin-mehta-s-kashmir-dream-that-will-never-be-fulfilled-416065?curl=1378711189

[14] “There was no ulterior motive for doing this concert except for the expression of my dream at the German Embassy last year which the Ambassador (Michael Steiner) took as a challenge. I don’t even know the inner working of Kashmiri politics,” he added.

http://www.ndtv.com/article/india/zubin-mehta-s-kashmir-dream-that-will-never-be-fulfilled-416065?curl=1378711189

சோனியாவே ஆடியுள்ளபோது, தாக்கூர் ஆடியதில் என்ன பிரச்சினை?

மே 8, 2013

சோனியாவே ஆடியுள்ளபோது, தாக்கூர் ஆடியதில் என்ன பிரச்சினை?

Sonia-dances-with-tribals -renuka

சோனியா, மேற்கத்தையகலாச்சாரம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்: சோனியா ஆந்திராவிற்குச் சென்றிருந்த போது, வனவாசி பெண்களுடன் கைக் கோர்த்துக் கொண்டு[1], காலைத் தூக்கி ஆடியுள்ளார் (Febrarary 27, 2009). படங்கள், வீடியோ முதலிய உள்ளன[2]. பிறகு, 2011ல் காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் பழங்குடியின பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பான மாநாடு டில்லியில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற காங். தலைவர் சோனியா மேடையில் இருந்து இறங்கி வந்து அங்கு நின்று கொண்டிருந்த பழங்குடியின பெண்களுடன் இணைந்து நடனம் ஆடினார்[3]. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நான்கு மாதங்களுக்கு பின் இவ்வாறு சோனியா நடனமாடியதை பார்த்த காங்., மகளிர் அணியினர் உற்சாகமடைந்தனர். ஆண்டு தோறும், கிருஸ்துமஸ் விடுமுறையை (டிசம்பர் 25லிருந்து ஜனவரி 7 வரை[4]) கோவா மற்றும் லட்சத்தீவுகளுக்கு பிரத்யேகமாக குடும்பத்துடன் சென்று கழிப்பதுண்டு[5]. அப்பொழுது அங்கு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் எல்லாமே உண்டு[6]. சோனியா பலதிறமைகள் உள்ள பெண்மணி[7].

Sonia-dances-with-tribals

இளைஞர்காங்கிரஸ்கோடைக்காலமுகாம்நடக்கும் விதம்: இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் சார்பில் மும்பை புறநகர் பகுதியான கண்ட்விலியில் 14-4-2013 அன்று கோடைக்கால முகாம் நடந்தது[8]. காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு, என்.எஸ்.யு.ஐ., இதன், மும்பை நகர தலைவராக இருப்பவர், சூரஜ் சிங் தாக்குர். பொவையில் உள்ள சந்திரபன் சர்மா கல்லூரியின் மாணவன் மற்றும் கிருபா சங்கர் சிங், அரிப் நசீம் கான் (சிறுபான்மையினர் பிரிவு தலைமை) போன்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு வேண்டியவன்[9]. இதனால், இப்பிரிவு குழுக்கு எதிர்மறையான தாக்கம் ஏற்படும் என்று காங்கிரஸார் நினைக்கின்றனர்[10]. மார்ச் 13 முதல் 15 வரை கன்டிவிலியுள் ஒரு ஓட்டலில் பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது[11]. அதில் சுமார் 40 பேர் கலந்து கொண்டனர்.

Sonia-dances-with-tribals-AP

ஓட்டலின் மாடியில் பார்ட்டி நடத்திய இளைஞர் காங்கிரஸ்: இரண்டாவது நாள் 14-03-2013 அன்று ஓட்டலின் மாடியில் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்தனர். அதில் சுமார் 30-40 பேர் குடித்து சட்டையில்லாமல் ஆடிக் கொண்டிருந்தனர். தாகுர்தான், அனைவரைரும் சர்ட்டை எடுக்கும் படி கூறியுள்ளான். வைபவ் தனவதே என்பவன் உள்ளே நுழைந்த போது, அவனையும் சர்ட்டைக் கழட்டச் சொன்னான். மறுத்தபோது, சர்ட்டைப் பிடித்து இழுத்தான். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அதில் தனவதேயின் சர்ட் கிழிந்து விட்டது. மற்றவர்கள் அவனை சமாதானப் படுத்தினர்[12]. இளைஞர்கள் சிலருடன் சேர்ந்து, தாக்குர், நிர்வாண நடனம் ஆடியுள்ளார்[13]. அந்தக் காட்சிகள், கடந்த ஞாயிறு அன்று, இணையதளங்களில் வெளியாகின.

UPA Chairperson Sonia Gandhi dances with tribal women at Kutagudam in Khammam district of Andhra Pradesh

ராகுல் பார்த்ததும், நடவடிக்கை எடுத்ததும்: இதனிடையில் ராகுலுக்கும் புகார் அனுப்பப்பட்டது[14]. அதைப் பார்த்த காங்கிரஸ் மேலிடம்[15], தாக்குரை, இளைஞர் அமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து, தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளது[16]. நேற்று முன் தினம் வரை, தாக்குரின் நிர்வாண நடன காட்சிகள், இணைய தளங்களில், உலா வந்தன. கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அந்தக் காட்சிகள், பிறகு நீக்கப்பட்டன. அதாவது, சோனியா அல்லது ராகுலுக்கு அந்த அளவிற்கு உண்மைகளை அமுக்க சக்தி உள்ளது என்பதனை நினைவிற்கொள்ள வேண்டும். தாக்குர் உடன் சேர்ந்து, மேலும் சில நிர்வாகிகள், தங்கள் ஆடைகளை களைந்து, நிர்வாணமாக ஆடியுள்ளனர். தாக்குர் மற்றும் அவருடன் நிர்வாண நடனம் ஆடிய அனைவருமே, போதை மயக்கத்தில் இருந்தது, வீடியோ காட்சிகளில் தெரிந்தது. கட்சி கூட்டத்தில், எதற்காக, தாக்குர் நிர்வாண நடனம் ஆடினார்;

Sonia-dances-with-tribals2

உண்மையை மறைக்க கதைகளை அவித்து விடும் காங்கிரஸ்: மும்பை நகர தலைவர் பொறுப்புக்கு, கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தாக்குரை, கட்சி மேலிடத் தலைவர்கள், “ராகிங்’ செய்தனரா; அதனால் தான், அவர் நிர்வாணமாக ஆடினாரா என, விசாரிக்கப்படுகிறது. விசாரணைக்குப் பிறகு, தாக்குரும், அவருடன் ஆடிய நிர்வாகிகள் இருவரும், காங்கிரசில் இருந்து நீக்கப்படுவர் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் எழுதிய புத்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2011ம் ஆண்டு போராட்டம் நடத்தியதன் மூலம் பிரபலமான சூரஜ் சிங் தாக்கூர், தொடர்ந்து 2வது முறையாக கடந்த டிசம்பர் மாதம் மும்பை கிளையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது[17].

Saurav Ganguly dance - naked or otherwise

சர்ட்டைக் கழட்டி ஆடுவது நிர்வாணமா?: சௌரவ் கங்குலி என்ற கிரிக்கெட் விளையாட்டுக்காரர், இந்தியா வெற்றிப் பெற்றபோது, சர்ட்டை அவிழ்த்து, சுற்றி-சுற்றி ஆட்டி ஆடியுள்ளார். அப்பொழுது ரசிகர்கள் அதனை ஆதரித்து, ரசித்து ஆர்பாட்டம் செய்துள்ளனர். பிறகு அதனை ஏற்றுக் கொண்ட ரீதியில், அவர் அதை மறுபடியும் செய்துள்ளார். அப்படியென்றால், சர்ட்டைக் கழட்டி ஆடுவது ஆண்கள்  ஆடுவது நிர்வாணம் ஆகுமா? உண்மையில், குடித்து கலாட்டா செய்ததை மற்றும் வேறதையோ மறைக்கத்தான் காங்கிரஸ்காரர்கள் முயன்றுள்ளார்கள். இல்லையென்றால், அப்படங்கள் முழுவதையும் அப்புறாப்படுத்த வேண்டிய அவசியல் இல்லை. அபிஷேக் சிங்வி, திவாரி முதலியோரது செக்ஸ் படங்கள் வெளியிட்டதை முழுமையாகத் தடுக்கவில்லை. பிறகு இதனை மறைப்பதேன்?

Suraj Takur with Soniaசோனியாவுடன் சூரஜ் தாகூர் – நெருக்கமான இளைஞர் தலைவர்!

Suraj Takur with Rahul shaven neatlyராகுல் – முழுக்க மழித்த முகத்துடன் – உடன் தாகூர்!

Suraj Takur with Rahul shavenராகுல் – கொஞ்சம் முடி வளர்ந்த முகத்துடன் – உடன் தாகூர்!

Suraj Takur with Rahul bearededஆஹா, தாடி வளர்ந்து விட்டது – உடன் தாகூர் – ஆமாம், தாடி வைத்தவர்களுக்கு காங்கிரஸில் மௌசு போல!

© வேதபிரகாஷ்

08-05-2013


[3] Congress president Sonia Gandhi dances with tribal women during the National Convention on Empowerment to Tribal Women at AICC office in New Delhi

http://www.hindustantimes.com/photos-news/Photos-India/Sonia/Article4-783351.aspx

[4] ஏசு, கிருஸ்து, ஏசுகிருஸ்து இருந்தாரா, இல்லையா என்ற பிரச்சினையில், பிறந்ததேதியும் பலவாறு சொல்லப்படுகிறது. இருப்பினும், உலகத்தில் டிசம்பர் 25 மற்ற்யும் ஜனவரி 7 நாட்களில் கிருஸ்துமஸ் கொண்டாடுகின்றனர்.

[5] Congress president Sonia Gandhi is on a week-long private visit to the Lakshadweep Islands to celebrate the New Year along with her family, officials said here on Friday. The UPA (United Progressive Alliance) Chairperson arrived here on Thursday from Goa along with her mother Paola Maino, daughter Priyanka Gandhi and son-in-law Robert Vadra, they said.

http://www.thehindu.com/news/sonia-gandhi-in-lakshadweep-for-new-year/article74004.ece

[15] சோனியாவா அல்லது ராகுலா என்பது காங்கிரஸ்காரகளுக்குத் தான் தெரியும். மேலிடம் என்பது அந்த அளவிற்கு புனிதமாக, ரகசியமாக வௌக்கப்பட்டுள்ளது.