சுவாமி விவேகானந்தரை, கருணாநிதி–வீரமணி போன்றோர் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்?
8வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி (ஆகஸ்ட்.2-8, 2016): இந்து ஆன்மிக சேவை மையம் சார்பில் சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் வரும் ஆகஸ்ட் 2 முதல் 8-ம் தேதி வரை இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடக்க உள்ளது. இதற்காக விழிப்புணர்வு, பிரச்சாரம், அறிவித்தல் என்ற ரீதியில் “கிருஷ்ண யோகதான்”, “பாரதீய கானதான்” என்று ஆயிரக்கணக்கில் மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இதற்கு முன்னோட்டமாக சுவாமி விவேகானந்தர் சிலைகளுடன் 25 ரதங்கள் சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் உள்ள 1,000-க்கும் அதிகமான பள்ளிகளுக்கு செல்ல இருக்கின்றன. இந்த ரதயாத்திரை மயிலாப்பூரில் 24-07-2016 சனிக்கிழமை அன்று தொடங்கியது. ஆனால், வழக்கம் போல திக வீரமணியிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.
தமிழக ஆன்மீகமும், நாத்திகமும்: தமிழகத்தைப் பொறுத்த வரையில் திராவிட சித்தாந்தம் வளர்ந்த பிறகு, தமிழர்கள் அதிகமாகவே குழம்பி போனார்கள். “நாங்கள் இந்துக்கள் அல்ல” என்றளவில் கூட, தமிழ் பித்து பிடித்த கூட்டங்கள் கூற ஆரம்பித்தன. ஆனால், சுயமரியாதை திருமணங்கள் அசிங்கமானவுடன், “இந்து திருமண சட்டத்தில்”, மரியாதை பெற்றன. 1980கள் வரை இவர்களது ஆட்டம் அதிகமாகவே இருந்தது. எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனப் பிறகு, அடங்க ஆரம்பித்தது. 1990களில் “அறிவு சார்ந்த ஞானம்” பரவ ஆரம்பித்தபோது, இளைஞர்களுக்கு, இவர்களின் போலித்தனம் புரிய ஆரம்பித்தது. 2000களில் கணினி மூலம் அத்தகைய ஞானம் பரவ ஆரம்பித்த போது, படித்த இளைஞர்கள் (ஜாதி, மதம், நாடு முதலிய வேறுபாடுகள் இன்றி) உண்மையினை அறிய ஆரம்பித்தனர். 2010களில் சித்தாந்த திரிபுவாதங்களையும் இளைஞர்கள் அடையாளங்கண்டு கொண்டார்கள். யோகா உலகம் முழுவதும் பின்பற்றப் படுகிறது. இந்து தத்துவம், முதலிய கொள்கைகள் பாராட்டப் படுகின்றன, போன்ற உண்மைகள் இவர்களை கலக்க ஆரம்பித்தது. இப்பொழுது 10,000 முதல் 11,000 மாணவ-மாணவியர் சேர்ந்து யோகா செய்கின்றனர், மொழி வித்தியாசம் இல்லாமல் பாட்டுப் பாடுகின்றனர் என்று செய்திகள் குறைவாகவே வந்தாலும், தாக்கம் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரத யாத்திரை செல்வதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது[1]:
இந்துவிரோத நாத்திக வீரமணியின் புலம்பல்: “இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக மயிலாப்பூரில் விவேகானந்தர் ரத பூஜையுடன் 25 ரதங்களுக்கு சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. சென்னையிலிருந்து நேற்று இரவு 9 மணிக்கு புறப்பட்ட 25 ரதங்களும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 1000க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளுக்குச் செல்லுகின்றன என்ற செய்தி வந்துள்ளது. இந்து மதத்தை அமெரிக்காவரை சென்று பரப்பியவர் என்று புகழப்படுபவர் விவேகானந்தர்.
- இப்பொழுது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியோடு சம்பந்தப்படுத்தி விவேகானந்தர் ரதங்கள் பள்ளிகளுக்குச் செல்லுவது என்பது அனுமதிக்கத் தகுந்தது தானா?
- ஏற்கத் தகுந்ததுதானா?
- மாணவர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட மதச் சிந்தனையை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமா?
- இந்துத்துவா பெயரில் நாட்டில் ஆங்காங்கே மதக் கலவரங்களை விசிறி விட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், மாணவர்கள் மத்தியிலும் இத்தகைய சிந்தனைகளைத் தூண்டுவது ஆபத்தான செயல் அல்லவா?
- மத்திய பிஜேபி என்னும் இந்துத்துவா ஆட்சியோடு, தமிழ்நாடு அரசும் கைகோத்துக் கொண்டு விட்டதா? இது மதச் சார்பற்ற அரசின் தன்மைக்கு விரோதமானதல்லவா?
- தமிழக முதல் அமைச்சர் இதன்மீது கவனம் செலுத்தி மதச்சார்பின்மையைப் பாதுகாக்க முன் வருவாரா?
- விவேகானந்தர் ரதம் ஊர்வலத்தைத் (குறைந்தபட்சம் பள்ளிகளுக்குச் செல்வதையாவது) தடுப்பாரா?
எங்கே பார்ப்போம்!”, இவ்வாறு கூறியுள்ளார்[2].
பி.டி.ஐ வேலையை தமிழ் ஊடகங்கள் செய்துள்ளன: சில செய்திகளை ஆங்கில ஊடகங்கள் கூட வெளியிட தயங்கும், அல்லது விருப்பம் இல்லாமல் இருக்கும். ஆனால், PTI [Press Trust of India] – இந்திய ஊடக சங்கம் சார்பில் அத்தகைய செய்திகள் வந்தால், வேறு வழியில்லை என்று அப்படியே, “ஈ அடிஞ்சான் காப்பி / கட் அன்ட் பேஸ்ட்” பாணியில் செய்திகள் வெளி வரும். அதில் தங்களது நோக்கில் கருத்துகளைக் கூட வெளியிட மாட்டார்கள். அதுபோல, வீரமணியின் அறிக்கையை அப்படியே வெளியிட்டுள்ளன. கேள்விகளை பிடுங்கி முன்னால் போட்டு[3], அறிக்கையை பின்னால் போட்ட விதம் தமிழ்.ஒன்.இந்தியா மூலம் தெரிகிறது. வழக்கம் போல போட்டோக்களை சேர்த்துள்ளது[4]. நக்கீரன், அமுக்கமாக அறிக்கையை மட்டும் போட்டுள்ளது[5]. ஆனால், ஓம், பாலஜோதிடம், பொது அறிவு, போன்ற பத்திரிக்கைகளை நடத்துவதில் கில்லாடி[6]. அவற்றுடன் தகடுகள் முதலியவற்றையும் விநியோகம் செய்யும் வழக்கம் உண்டு. “விடுதலை” அலுவலகத்திற்கு, அனுப்பி வைப்பாரா இல்லையா என்று தெரியவில்லை. தினமணியும் அதே பாணியைப் பின்பற்றியது[7]. “விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்கு அனுமதிக்கக் கூடாது: கி.வீரமணி”, என்று தலைப்பிட்டு போட்டது, அவ்வளவே தான்[8]. “தி.இந்து” மட்டும், ஏதோ, குருமூர்த்தி டுவிட்டரில் சொன்னார் என்று போட்டு, “சமன்” செய்து விட்டது போல காண்பித்துக் கொண்டுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் வீரமணி[9] மற்றும் குருமூர்த்தி[10] கருத்துகளை வெளியிட்டுள்ளது.
எஸ்.குருமூர்த்தி கருத்து[11]: கி.வீரமணியின் இந்த எதிர்ப்பு குறித்து இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் அமைப்பாளர்களில் ஒருவரான ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “கருப்புச் சட்டை அணிந்துள்ள வீரமணி, இந்து கடவுள்களை எதிர்ப்பவர். ஆனால், இன்று பல லட்சக்கணக்கான தமிழர்கள் அதே கருப்புச் சட்டை அணிந்து சபரிமலை செல்கின்றனர். காடுகள், விலங்குகளை பாதுகாக்க வேண்டும், சுற்றுச்சூழலை பேண வேண்டும், குடும்பம் மற்றும் மனித மதிப்பீடுகளை பின்பற்ற வேண்டும், பெண்களை மதிக்க வேண்டும், தேச பக்தியை கடைபிடிக்க வேண்டும் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடத்தப்படுகிறது. எனவே, இந்தக் கண்காட்சியை எதிர்ப்பது ஏன் என கி.வீரமணியிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்ப வேண்டும்”, இவ்வாறு குருமூர்த்தி கூறியுள்ளார்[12].
வீரமணி கேட்ட கேள்விகளுக்கு பதில்: திரிபு-குழப்பவாதிகளாக இருப்பதால், வீரமணி போன்றோர், நடுநிலையாக சிந்திக்க முடியாமல் போகும் நிலையில், கற்பனையில் ஏதேதோ நினைத்துக் கொண்டு, இத்தகைய கேள்விகளைக் கேட்கிறார்கள். எனினும், இதோ பதில்கள்:
1. இப்பொழுது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியோடு சம்பந்தப்படுத்தி விவேகானந்தர் ரதங்கள் பள்ளிகளுக்குச் செல்லுவது என்பது அனுமதிக்கத் தகுந்தது தானா? | 1. ஆமாம், இதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. |
2. ஏற்கத் தகுந்ததுதானா? | 2. ஆமாம். |
3. மாணவர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட மதச் சிந்தனையை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமா? | 3. செக்யூலார் நாடு எனும் போது, பிரச்சினை என்ன? |
4. இந்துத்துவா பெயரில் நாட்டில் ஆங்காங்கே மதக் கலவரங்களை விசிறி விட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், மாணவர்கள் மத்தியிலும் இத்தகைய சிந்தனைகளைத் தூண்டுவது ஆபத்தான செயல் அல்லவா? | 4. இதற்கும், அதற்கும் சம்பந்தமே இல்லையே? |
5. மத்திய பிஜேபி என்னும் இந்துத்துவா ஆட்சியோடு, தமிழ்நாடு அரசும் கைகோத்துக் கொண்டு விட்டதா? | 5. இது ஒரு கற்பனையான குற்றச்சாட்டு. |
6. இது மதச் சார்பற்ற அரசின் தன்மைக்கு விரோதமானதல்லவா? | 6. இல்லை, அதே கொள்கையில் தான் இந்நிகழ்ச்சி நடத்தப் படுகிறது. |
7. தமிழக முதல் அமைச்சர் இதன்மீது கவனம் செலுத்தி மதச்சார்பின்மையைப் பாதுகாக்க முன் வருவாரா? | 7. 150-விவேகானந்தர் விழாவை அவர் தான் துவக்கி வைத்தார். 1999ல் கருணாநிதியும் விவேகானந்தர் இல்லத்தில் கண்காட்சியைத் துவக்கி வைத்தார். |
8. விவேகானந்தர் ரதம் ஊர்வலத்தைத் (குறைந்தபட்சம் பள்ளிகளுக்குச் செல்வதையாவது) தடுப்பாரா? | 8. மேலே குறிபிட்டப்படி, திராவிட கட்சிகளின் இருவேறு முதலமைச்சர்களே கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்த நிகழ்ச்சிகளாக இருக்கும் போது, இந்த கேள்விக்கே இடமில்லையே? |
© வேதபிரகாஷ்
26-07-2016
[1] விடுதலை, பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரதம் செல்லுவதா?, திங்கள், 25 ஜூலை 2016 15:49.
[2] http://viduthalai.in/e-paper/126567.html
[3] தமிழ்.ஒன்.இந்தியா, இந்து துறவி விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்குள் அனுமதிக்க கூடாது.. வீரமணி போர்க்கொடி, By: Ganesh Raj Published: Monday, July 25, 2016, 16:39 [IST].
[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/spritual-school-is-it-against-secular-government-asks-k-veeramani-258776.html
[5] நக்கீரன், பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரதம் செல்லுவதா? –கி.வீரமணி, பதிவு செய்த நாள் : 25, ஜூலை 2016 (13:36 IST) ; மாற்றம் செய்த நாள் :25, ஜூலை 2016 (13:39 IST)
[6] http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=169746
[7] தினமணி, விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்கு அனுமதிக்கக் கூடாது: கி.வீரமணி, By சென்னை, First Published : 26 July 2016 03:13 AM IST
[8]http://www.dinamani.com/tamilnadu/2016/07/26/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/article3547501.ece
[9] New Indian Express, DK president gets it for opposing Ratha Yatras, By Express News Service, Published: 26th July 2016 06:39 AM, Last Updated: 26th July 2016 06:39 AM
[10] http://www.newindianexpress.com/cities/chennai/DK-president-gets-it-for-opposing-Ratha-Yatras/2016/07/26/article3547109.ece
[11] தி.இந்து, விவேகானந்தர் ரதம் பள்ளிகளுக்கு செல்வதா? – கி.வீரமணி கண்டனம், Published: July 26, 2016 08:05 ISTUpdated: July 26, 2016 08:06 IST
[12]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article8900224.ece