சூத்திரன் மற்றும் பறையன் – சுவாமி விவேகானந்தரை, சூத்திரர்கள், பறையர்கள், தலித்துகள் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்?
திராவிட கழகங்களும், சுவாமி விவேகானந்தரும்: சுவாமி விவேகானந்தர் என்றாலே, திராவிட கழகங்கள் எல்லாவற்றிற்குமே பயம் தான் என்பது அவர்களே வெளிப்படுத்திக் கொண்டுள்ள விசயங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். உண்மையினை மறைத்து திரிபுவாதங்கள் மூலம், பொய்களைப் பரப்புவதில் கழகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வேலைகளை செய்துள்ளன. வார்த்தைகளுக்கு தகுந்த மொழிபெயர்ப்பு கொடுக்காமல் இருப்பது, வாக்கியங்களை மறைப்பது, விட்டுவிடுவது போன்றதில் வல்லவர்கள். உதாரணத்திற்கு “விவேகானந்தர் இங்கர்சாலிடம் கூறியது என்ன?” என்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம்[1]..
திக, வீரமணி, விடுதலை எப்படி சுவாமி விவேகானந்தரை தூஷித்தது?: ரதயாத்திரை விசயத்தில் 2013ல் கூட வீரமணி இப்படி புலம்பியுள்ளார்[2]. ஊடகக்காரர்களுக்கு மறந்து விட்டது என்று சொல்ல முடியாது.
- “விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு என்ற போர்வையில் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன சக்திகள், சங்கப்பரிவார்க் கூட்டத்தினர் ஒரு திட்டமிட்ட வேலையில் இறங்கியுள்ளனர். சென்னையில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விவேகானந்தர் ரதம் செல்லுகிறதாம் – அரசின் அனுமதியோடு; இது ஒரு தவறான முன்னுதாரணமாகும்” (வெள்ளி, 08 பிப்ரவரி 2013 17:5) என்று 2013ல் கொட்டித் தீர்த்தது[3].
- “விவேகானந்தரின் 150ஆம் ஆண்டு என்ற போர்வையில் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன சக்திகள், சங்பரிவார்க் கூட்டத்தினர் ஒரு திட்டமிட்ட வேலையில் இறங்கி உள்ளனர்”, (விடுதலை தலையங்கம் நாள்2.2013) – அதே காழ்ப்பு, துவேஷம், தூஷணம்.
- “சென்னையில் எந்தக் கட்சி ஊர்வலத்திற்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால் விவேகானந்தர் 150ஆவதுஆண்டு என்ற பெயரில் வரும் 16ஆம் தேதி காலை சென்னை கடற்கரை சாலையில் 3000 பேர் பங்கு ஏற்கும் ஊர்வலத்திற்கு மட்டும் எப்படி அனுமதியளிக்கப் படுகிறது?”, என்று இன்னொரு புலம்பல்[4]. வேண்டுமென்றே, இது “அரசியல் ஊர்வலம்” என்று புளுகி இருப்பது! பொய்-பொய்-பொய் என்று சொல்லிக் கொண்டேயிருந்தால், யாராவது நம்புவார்கள் என்று நினைத்தார்கள் போலும், ஆனால், யாரும் கண்டுகொள்ளவில்லை. பிறகு என்னவாகும், வயிற்ரெரிச்சல் தாங்காமல், “டுபாக்கூர்” என்ற அளவில்; இறங்கியது.
- “அதிலென்ன வீரத்துறவி விவேகானந்தர்? வீரம் இருந்தால் துறவியாக முடியாது! துறவியாக இருந்தால் வீரம் இருக்கக்கூடாது!. விவேகானந்தர் டுபாக்கூரோ?” என்றெல்லாம் பேத்தியது விடுதலை[5]. விவேகானந்தரை பலவிதங்களில் தூஷித்தது[6].
இதையெல்லாம் படித்துப் பார்த்தாலே, இவர்களது யோக்கியதை, லட்சணம், முதலியவை நன்றாகவே வெளிப்பட்டுள்ளன.
விவேகானந்தர் – அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர்- கருணாநிதியின் பாழ்ப்பு, வெறுப்பு கொண்ட பதில்[7]: 2008ல் கருணாநிதி முதல்வராக இருந்த போது, கடற்கரையில் இருக்கும் “விவேகானந்தர் இல்லம்” என்ற காட்டிடத்தை குத்தகை முடிவதால், அரசு திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நடவடிக்கையில் ஈடுபட்டது. இதனால், அதிகாரிகள் அங்கு சென்று துறவிகளிடம் “காலி செய்யுங்கள்” என்ற ரீதியில் பேசினர். “கொஞ்சம் பொறுங்கள்ளென்று கேட்டபோது, “இடித்து விடுவோம்” என்று மிரட்ட ஆரம்பித்தனர். இதனால், பிரச்சினை பெரியதாகி, பாதிக்கும் நிலை வந்தபோது, கருணாநிதி சமாளித்துக் கொண்டு, விசயத்தை அமுக்கப் பார்த்தார். கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் பேசி, தன்ச்து துவேசத்தை வெளிப்படுத்திக் கொண்டார். “கட்டடத்தை எடுக்கப் போவதில்லையே, ஏன் இவ்வளவு நேரம் பேச இடம் கொடுத்தாய் என்று கேட்பீர்கள். விவேகானந்தர் பற்றி நம் தலைவர்கள் எல்லாம் பேசிக் கேட்க வேண்டும் என்பதற்காகத் தான். விவேகானந்தரைப் பற்றி பேசி ரொம்ப நாளாகி விட்டது என்பதற்காகவும், மூட நம்பிக்கைகளைச் சாய்த்தவர், புரட்சிக்காரர், அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர். இவையெல்லாம் மனம் சுத்தமாக இருந்தால் தன்னை ஒன்றும் செய்யாது என்று எண்ணி சீர்திருத்த நோக்கங்களோடு செயல் பட்டவர். அவரது பெயரால் உள்ள மண்டபத்தை இடிக்கப் போகிறோம் என்று சிலர் எழுதியிருக்கிறார்கள். இடிக்கக் கூடிய அளவு அது வலுவிழந்த மண்டபமா? இல்லை. அதை யாரும் இடிக்க விரும்பவுமில்லை. நினைக்கவுமில்லை. அந்தப் பக்கம் திரும்பவும் இல்லை”, இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்[8].
“நான் சூத்திரன் / பறையன்” என்று சொல்லிக் கொண்ட விவேகானந்தரை ஏன் சூத்திரர்கள் எதிர்க்க வேண்டும்?: விவேகானந்தர் பிறந்த காயஸ்தர் (கார்யஸ்தர்) சாதியைச் சேர்ந்தவர். அதாவது சூத்திரர். பெரியார் முதல் இன்றுள்ள பெரியார் தாசர்கள், பக்தர்கள், அடிமைகள் எல்லோருமே, தங்களை “சூத்திரர்கள்” என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், சுவாமி விவேகானந்தர், தனது ஜாதியைப் பற்றிக் கேட்டபோது, ஒரு நிலையில் தன்னை “பறையன்” என்று சொல்லிக் கொண்டார். ஒரு முறை, ஒரு சந்நியாசி வந்து, “நீங்கள் சூத்திரர் ஆயிற்றே, நீங்கள் எப்படி சந்நியாசி ஆக முடியும்”, என்று கேட்டபோது, சாஸ்திரங்களிலிருந்து உதாரணங்களை எடுத்துக் காட்டி உரிய பதில் அளித்தார். சத்திரியர்களே, சூத்திரர்கள் தாம் என்று எடுத்துக் காட்டினார். “என்னை சூத்திரன் என்று அழைக்கப்படுவதால், நான் வருத்தமடையவில்லை. ஒருவேளை என்னுடைய மூதாதையர் ஏழைகளுக்கு செய்த கொடுமைகளுக்கு அதை பிராயசித்தமாக எடுத்துக் கொள்கிறேன். நான் பறையனாக இருந்தால், அதைவிட சந்தோஷமடைகிறேன்,……ஏனெனில், நான் ஒரு மனிதருக்கு சீடராக இருக்கிறேன். அவர் பிராமணர்களுக்கே பிராமண் ஆக இருக்கிறார் – ஆனால் அவர் ஒரு பறையனுடைய வீட்டை சுத்தமாக்க நினைக்கிறார்”, என்று பதில் அளித்தார்.
Swami Vivekananda is a “Paraiah” – Shudra from Kayasth community. When he became a Sanyasi, some social reformers challenged him as to how a Shudra could become a Sanyasi. He gave them suitable reply with supporting evidences from scriptures proving that Shudras were nothing but Kshatriyas: “I am not all hurt if they call me a Shudra. It will be a little reparation for the tyranny of my ancestors over the poor. If I am a Paraiah, I will be more glad, for I am the disciple of a man, who – the Brahmn of Brahmins – wanted to cleanse the house of a Paraiah”[9]. |
சூத்திரன் யார்? – சுவாமி விவேகானந்தர் விளக்கம்: அவர் ஶ்ரீராமகிருஷ்ண மடத்தை அதற்காகத்தான் ஆரம்பித்தார். ஒடுக்கப்பட்டவர், அடக்கப்பட்டவர் முதலிவர்களின் விடுதலைக்காகத்தான் அது தோற்றுவிக்கப்பட்டது. “இந்த மடத்திலிருந்து வெளியேறும் மனிதர்கள்ளிந்த உலகத்தை ஆன்மீகம் மூலம் நிரப்புவார்கள்…..அப்பொழுது சூத்திரத்தன்மையே இருக்காது.. – அந்த வேலையை அவர்கள் மிஷினரிகள் போல செய்வார்கள்”, என்று சுவாமி விவேகானந்தர் விளக்கினார். சுத்திரத்துவம் என்பது, ஒருவன், அடுத்தவனிடம் வேலை செய்து அதற்காக காசைப்பெறுவதாகும் என்றார். உண்மையில் உயர்ந்த ஜாதியினர் சூத்திரர்களாகத்தான் இருக்க வேண்டும், ஏனெனில், உண்மையான சூத்திரர்கள் தங்களுக்குத் தாமே வேலை செய்து கொள்வார்களே தவிர, அடுத்தவர்களுக்கு, அதிலும், காசுக்காக வேலை செய்ய மாட்டார்கள், என்று மேலும் விளக்கினார்.
He started Sri Ramakrishna Mission only to liberate oppressed and suppressed: “From the Math will go out men of character who will deluge the world with spirituality…………The Shudra caste will exist no longer – their work being done by machinery”[10]. He defines “Shurahood” as the status of people “engaged in serving another for pay”. Then, perhaps most of the higher castes are “Shudras” and the real shudras are not, as they work for themselves and not for others to get any pay. |
© வேதபிரகாஷ்
26-07-2016
[1] http://www.viduthalai.in/home/viduthalai/medical/106888-2015-08-14-10-24-34.html
[2] http://www.viduthalai.in/component/content/article/108-2011-02-27-14-53-35/55121-2013-02-19-10-57-21.html
[3] http://www.viduthalai.in/component/content/article/71-2010-12-25-09-37-00/54384-2013-02-08-12-25-25.html
[4] http://www.viduthalai.in/component/content/article/137-2012-03-26-08-36-14/54655-2013-02-12-10-54-45.html
[5] http://www.viduthalai.in/component/content/article/108-2011-02-27-14-53-35/54093-2013-02-04-10-14-14.html
[6] http://www.viduthalai.in/component/content/article/71-2010-12-25-09-37-00/52692–150.html
[7] தினமலர், விவேகானந்தர் இல்லத்தை இடிக்க நினைக்கவில்லை : முதல்வர் விளக்கம், ஏப்ரல் 25,2008,00:00 IST
[8] http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=1106&ncat=TN&archive=1&showfrom=4/25/2008
[9] Swami Vivekananda, Complete Works, Vol. III, p.211.
[10] Ibid, Vol. V, p.316