கருணாநிதி, நித்யானந்தா, நாத்திகம், பகலில் சாமி, இரவில் காமி -II
கருணாநிதிக்கு யோக்கியதை இல்லை: நிச்சயமாக கருணாநிதி என்ற அந்த மனிதருக்கு, இந்து விரோத நாத்திகம் பேசி வரும் தமிழ் நாட்டு முதலமைச்சருக்கு [இந்த விஷயத்தில் அவர் மீது போடப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகள் இன்னும் நிலுவயில் உள்ளன], போலி மஞ்சள் துண்டு, யோகா செய்து வரும் ஆன்மீகவாதிக்கு, பலதார சாமானியனுக்கு, மானாட-மயிலாட-மார்பாட- பார்த்து அனுபவித்து வரும் தமிழக-திவாரிக்கு, நாத்திகக் கடவுளுக்கு எந்த யோக்கியதையும் இல்லை. முதலில் இவரையேத் திருத்திக் கொள்ளமுடியாத லட்சணத்தில் மற்றவர்கள் விஷயத்தில் அறிவுறைச் சொல்லக் கூட தகுதியற்றவர். அரசாளுகின்றவன் முன்னோடியாக இருக்கவேண்டும். அவனைப் பார்த்துப் பின்பற்ற வேண்டுமானால் தான் தனது தனி மனித வாழ்க்கையில் தூய்மைமையாக, தூயனாக, திருவள்ளுவர் காட்டிய நெறியில் வாழ்ந்திருக்க வேண்டும். அப்படியில்லாமல், சினிமா கூத்தாடி வாழக்கை வாழ்ந்து விட்டு, திரைப்படத்தில் நடிப்பது போல, தினம்-தினம் “ஷோக்கள்” காட்டிக் கொண்டு வாழும் போலி முதலமைச்சர்கள் மக்களின் நன்மை பற்றி பேசுவது வியப்பாகத்தான் உள்ளது.
திராவிடப் போலித் தனம்: அரிசி, பருப்பு, காய்கறி விஷயத்தில்கூட தனது விளம்பரம் போட்டு அரசு பணத்தை விரயம் செய்யும் இந்த நவீன நீரோக்கு ஏன் அப்பொழுதெல்லாம் வீரம் வரவில்லை? “பாமர மக்களின் வாழ்வையும், அறிவையும் பாழாக்கி வருகின்ற, பணக் கொள்ளை அடிக்கின்ற பகல் வேடக்காரர்களை, மக்களுக்கு அடையாளம் காட்ட, பகுத்தறிவு இயக்கம் பல்லாண்டு காலமாக, பல சான்றுகளைக் காட்டி, பலத்த எதிர்ப்புகளுக்கு இடையிலும் பிரசாரம் செய்து வருகிறது”. உம்மைப் போன்ற நாத்திக அரசியல்வாதிகளே இந்த “கழகத்தில்” தானே வருகிறது? கழகம் = சங்க இலக்கியத்தின்படி, திருடர்கள் கூடும் இடம். “பக்தி வேடம் பூண்டு, பாமர மக்களை படுகுழியில் தள்ளுகின்ற பகல் வேடக்காரர்களையும், அவர்களிடம் சிக்கி பலியாகி, சமுதாயத்தைச் சீரழிக்கின்ற சபல புத்தி உடையவர்களையும் இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது”, இதிலும் எல்லா திராவிட சாமியார்களும், திராவிட புரோகிதர்களும், திராவிட மணம் / மணமுறிவு செய்விக்கும் திராவிட ஐயர்கள், திராவிட நடிகை-நடிகர்கள்………..என வந்து விடிகிறார்களே?
முற்றும் துறந்த திராவிட முனிவர்களும், படிதாண்டாத் திராவிடப் பத்தினிகளும்: அவர்கள் எல்லாம் என்ன, அண்ணா சொல்லியபடி, “நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல, அவள் படிதாண்டா பத்தினியும் அல்ல” என்ற “கழக”த்தில் வருகிறதா? · ஜக்கி வாசுதேவன் அல்லது எந்த சாமியார் மேலேயும் இத்தகைய புகார்களை தாராளமாக, ஏன் எளிதாகக் கொடுக்கலாம். ஏன் செய்யவில்லை.
- கிருத்துவம் மற்ற இதர சாமியார்கள் கற்பழிப்பு, அபாசம், சிறுவர் பாலியல் குற்றாவாளிகள் (phedophiles), ஆபாச படங்கள், திரைப்படங்கள் (pornography), வன்முறை கலவிகள்…………..என்றெல்லாம் நுற்றுக்கணக்கான புகார்கள், செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவோ, தண்டிக்கப்படுவதாகவோ தெரிவவில்லை.
- ஊடகங்களும் செய்திகளை மட்டும் வெளியிட்டு விட்டு சமர்த்தாக, சாமர்த்தியமாக மௌனிகளாகி விடுகின்றனர் [இதைப் பற்றி வில் ஹுயூம், ஜோ, என்ற விஷயங்களில் பதிவுகளைக் காணலாம்].
- கருணாநிதியோ அதைப் பற்றி மூச்சுக்கூடவிடுவதில்லை. ஒருவேலை அவர்களுடைய கடவுளர்களைக் கண்டால் பயம் போலும், இல்லைக் கஞ்சிக் கூடக் கிடைக்காது என்ற ஏக்கம் போலும்!
- “சும்மா பார்த்துக் கொண்டு இருக்க முடியாது”, என்ற மிரட்டல்களோ, “பகலில் சாமி, இரவில் காமி, என்ற ரம்மியமான ரைம் செர்ந்த செம்மொழிகளோ உதிர்க்கப் படவில்லை. இத்தகையவற்றை பாரபட்சம் மிக்கவை என்று சொல்லாமல் என்ன சொல்வது?
- சட்டத்தின் முன்னால் எல்லொருமே சமம் எனும்போது, எல்லா குற்றாவாளிகளும் ஒரே மாதிரிதான் நடத்தப் படவேண்டும். பிறகு எதற்கு சலுகைகள், தளர்த்தல்கள், ரகசியங்கள், மர்மங்கள், மௌனங்கள் எல்லாம்?