Archive for the ‘வளைக்குடா நாடு’ Category

காந்தி கணக்கில் உல்லாசமாக வாழ்க்கை நடத்திய அப்துல்ராபிக் மற்றும் அஸ்வதி!

நவம்பர் 6, 2010

காந்தி கணக்கில் உல்லாசமாக வாழ்க்கை நடத்திய அப்துல்ராபிக் மற்றும் அஸ்வதி!

அவரவர் நம்பிக்கை அவர்களுக்கு: நேற்று இரவு (05-11-2010) வழக்கம் போல ஒரு டிவி செனலில் பீ. ஜைனுல் ஆபிதின், முஸ்லீம்களுக்கு வளைக்குடா நாடுகளினின்று சுமார் ரூ.8,000/- தான் மாதம் வந்து கொண்டிருக்கிறது, இருந்தாலும், அவர்கள் வீட்டில் வேண்டிய பொருட்கள் டிவி, மிக்ஸி என்று எல்லாமே இருக்கும். பெண்கள் கைகளில் எல்லாம் நகைகள் போட்டிருப்பார்கள். மற்றவர்கள் வேண்டுமனால் ஏதோ அவர்களுக்கு நிறைய பணம் வருகிறது என்று நினைக்கலாம், ஆனால் உண்மையில் அல்லாதான் அப்படி மகத்துவம் / அதிசயத்தை செய்கிறார். அதாவது, சுமார் ரூ.8,000/- தான் மாதம் பணம் வந்தாலும் அல்லாவின் மகத்துவதினால் அத்தகைய அதிசயம் நிகழ்கிறது. அப்பொழுது “மோமின்” என்ற வார்த்தையையும் குறிப்பிட்டு, அவர்களுக்குத்தான் அது ஏற்படும் என்றார். அதாவது “காஃபிர்களுக்கு” ஏற்படாது என்று பொருட்பதிந்த மாதிரி கூறியபோது, நிச்சாயமாக தமது நம்பிக்கையைத் தாண்டி அடுத்தவருடைய நம்பிக்கையில் தலையிடுவதாகிறது. உடனே அதே நாளில் (05-11-2010) இப்படியும் செய்தி வருகிறது!

500 ரூபாய் கள்ளநோட்டு அச்சிட்ட கேரள தம்பதி நெல்லையில் கைது[1]: நெல்லையில் 500 ரூபாய் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்ட கேரள மாநில தம்பதி கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பத்தினாபுரம் கிராமத்தை சேர்ந்த உஸ்மான் ராவுத்தர் மகன் அப்துல்ராபிக் (47). இவரது துணைவி அஸ்வதி (45). முதல் கணவரை பிரிந்த அஸ்வதி தற்போது அப்துல் ராபிக்குடன் சேர்ந்து வாழ்ந்துவருகிறார். இருவரும் நெல்லை -தென்காசி ரோட்டில் அபிசேகபட்டியில் வாடகை வீட்டில் வசித்துவந்தனர்.

பட்டாசு வாங்கிய அப்துல்ராபிக்: நவம்பர் 4ம் தேதி இரவில் நெல்லை ஜங்ஷனில்  உள்ள பட்டாசு கடைகளில் அப்துல் ராபிக், 500 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து நூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கியபடி இருந்தார். ஒரே கடையில் மீண்டும் மீண்டும் 500 ரூபாய் நோட்டை கொடுத்து 100 ரூபாய்க்கு மட்டும் பட்டாசு வாங்கியதால் சந்தேகமடைந்த கடைக்காரர் அவரை பிடிக்க முயற்சித்தபோது தப்பி ஓடினார். பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்தனர்.

வீட்டில் சோதனை: போலீசார் அபிசேகபட்டியில் உள்ள வீட்டில் சோதனையிட்டபோது ஒரு ஸ்கேனர் கருவி, ஒரு பிரிண்டர் ஆகியவற்றை பயன்படுத்தி 500 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்தது தெரியவந்தது. நோட்டின் நீர்-எழுத்திலான காந்திபடத்தை மட்டும் ஸ்கிரீன் பிரிண்டிங் முறையில் அச்சிட்டுள்ளார். முழுமையாக அச்சடிக்கப்பட்ட நோட்டுகள் 27ம், பகுதியாக அச்சடிக்கப்பட்டிருந்த நோட்டுக்கள் 78ம் பறிமுதல்செய்யப்பட்டன. கடந்த 3 மாதங்களாக கள்ளநோட்டு தயாரிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.

சிறிய வீடாக இருந்தாலும் அனைத்து வீட்டு-உபயோக பொருட்களும் இருந்தன: போலீஸார் சோதனையிட்டபோது அவர்களுடய வீடு சிறிய வீடாக இருந்தாலும் அனைத்து வீட்டு-உபயோக பொருட்களும் இருந்தன. செய்திகளில் காட்டியபோதும், அது நன்றாகவே தேரிந்தது. “காந்தி கணக்கில் உல்லாசமாக வாழ்க்கை நடத்திய கணவன், துணைவி இருவரும் கைது செய்யப்பட்டனர்”, என்று தினமலர் முடித்திருந்தது!

காந்தி கணக்கில் உல்லாசமாக வாழ்க்கை நடத்திய கணவன், துணைவி இருவரும் கைது செய்யப்பட்டனர்: இரண்டு நிகழ்ச்சிகளும் ஒரே நாளில் பார்க்க / கேட்க நேரிட்டதால், இவற்றை இணைத்துப் பார்க்க நேரிட்டது. குற்றம் புரிபவர் எந்த மதத்தினராகவும் இருக்கலாம். ஆனால், அவர்களது நல்ல மற்றும் கெட்ட நிலையை மதசித்தாந்தங்கள் மூலம் வேறுபடுத்திக் காட்டி (காஃபிர்-மோமின்), தங்களது மதம்தான் உயர்ந்தது என்பது போல காட்டிக் கொள்ளும் போது தான் மற்றவர்களுக்கு அதனை தெளிவாக தெரிந்து கொள்ள விழைகிறான். ஆக, இங்கு மக்கள் அல்லாவின் அதிசயத்தால் வீட்டுப் பொருட்கள் வருகின்றனவா, “காந்தி கணக்கில்’ வந்தவையா என்றால் மனிதனுக்கு என்ன பதிலை ஆண்டவன் தருவான்?

வேதபிரகாஷ்

© 05-11-2010


[1] தினமலர், 500 ரூபாய் கள்ளநோட்டு அச்சிட்ட கேரள தம்பதி நெல்லையில் கைது, நவம்பர் 05, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=120646