Archive for the ‘மொஷ்ஹி’ Category

26/11 தீவிரவாத குண்டுக் குரூர கொலைகளுக்கும், இறந்தவர்களுக்கும் தீர்வு இன்னும் கிடைக்கவில்லை – இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா – நினைவுகூறும் விதம்!

நவம்பர் 26, 2010

26/11 தீவிரவாத குண்டுக் குரூர கொலைகளுக்கும், இறந்தவர்களுக்கும் தீர்வு இன்னும் கிடைக்கவில்லை – இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா – நினைவுகூறும் விதம்!

இந்தியாவில் 26/11 நினைவுகூறும் விதம்: 26/11 வந்தால் மெழுகுவர்த்தி ஏற்றி பயங்கரவாதத்தை, தீவிரவாதத்தை, ஜிஹாதி குரூரத்தை மறைக்க மும்பையில் சில கும்பல்கள் வேலை செய்து வருகின்றன. இந்தியாவில் இரண்டு வருடங்கள் ஆகியும், எந்தவித தீர்மானமும் எடுக்காமல், பாகிஸ்தானுடன் நட்பு என்ற ரீதியில் செயல்பட்டு வருகின்றது. 26/11 பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இங்கு வழக்குத் தொடர்ந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. வழக்கும் ஜவ்வு மாதிரி இழுத்து வருகிறார்கள், போதாகுறைக்கு கசாப்பிற்கு தூக்கு வேண்டாம் என்ற அளவுக்கு பேச வந்துவிட்டார்கள் நியாயவான்கள். இவர்களுக்கு கொல்லப்பட்டவர்களின் நினைவு கொஞ்சம் கூட இல்லை போலும்! சென்ற வருடம் மெழுகுவர்த்தி ஏற்றி நாடகம் ஆடி, அமுக்கி மூடிவிட்டார்கள் போலும். இவ்வருடமும், அதே முறை கடைப்பிடிக்கப்படும்.

பாகிஸ்தானிலும் வழக்கு நடக்கிறது: இதில் வேடிக்கை என்னவென்றால், மும்பை தாக்குதல் வழக்கின் விசாரணையை பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்திலும் நடந்து வருகின்றது. மும்பை தாக்குதல் வழக்கில் குற்றம்சாற்றப்பட்டுள்ள லஷ்கர் – இ – தயீபா கமாண்டர் ஜாகீர் ரெஹ்மான் லக்வி உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கு, பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேற்கூறிய ஏழு பேருக்கு எதிராக ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தங்களை இவ்வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி அவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆக, அவர்களை ஒன்றும் சொல்ல முடியாது. அமெரிக்காவைத் திருப்தி படுத்த இப்படி நாடகம் ஆடிக்கொண்டிருக்கும்.

அமெரிக்கக் கோர்ட் மும்பை தீவிரவாதிகளுக்கு சம்மன்: ஆனால், அமெரிக்காவினர் என்ன செய்கின்றனர்? குழந்தை மோசே / மொஷ்ஹி சார்பாக, அவனது தாய்-தந்தையர் சப்பத் இல்லத்தில், 26-11-2008ல் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, புரூக்லின் நீதிமன்றத்தில் 26-பக்கங்கள் கொண்ட குற்றச்சாட்டுகளுடன் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது[1]. ராப்பி காவ்ரியேல் என்பவர் தனது மனைவி ஆகியோருடன் கடந்த 2008ம் ஆண்டு மும்பை வந்த போது பயங்கரவாத தாக்குதலின் போது காவ்ரியேலின் மனைவி மரணமடைந்தார். அப்போது அவர் கர்ப்பமாகவும் இருந்தார். அவரது 2 வயது மகன் மொஷ்ஹி தாக்குதலில் இருந்து பத்திரமாகமீட்கப்பட்டார். $ 75,000 நஷ்ட-ஈடாகவும் கேட்கப்பட்டுள்ளது. அதன்படி, கீழ்கண்டவர்கள் தீவிரவாதத்திற்கு, தீவிரவாதிகளுக்கு, குறிப்பாக, கராச்சி திட்டத்திற்கு துணைபோனதற்காக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது[2]. இந்த வழக்கினை மொஷ்ஹியின் தாத்தா தொடர்ந்துள்ளார். அவர் தற்போது இஸ்ரேலில் வசித்து வருகிறார்.

Major Samir Ali ISI officer
Azam Cheema Inter-Services Intelligence of the Islamic Republic of Pakistan
Major Iqbal ISI officer
Zakiur Rahman Lakhvi Lashkar-e-Toiba,
Sajid Majid  
Maj. Gen. Ahmed Shuja Pasha director general of the ISI since September 2008
Hafiz Saeed LeT leader, JuD chief
Nadeem Taj the director general of ISI from September 2007 to September 2008.
  LeT leader

ஃபலா-இ-இன்ஸானியத் நிறுவனம் தடை செய்யப்பட்டது: பாகிஸ்தானில் ஜமாத்-உத்-தாவா [Jamaat-ud-Dawa (JuD)] தடைசெய்யப்பட்டு ஐந்து மாதங்கள் கூட ஆகவில்லை, ஆனால், அந்த பயங்கரவாதிகள் ஃபலா-இ-இன்ஸானியத் நிறுவனம் [Falah-e-Insaniat Foundation] என்ற பெயரில்[3] மே 2009லேயே உலாவர ஆரம்பித்து விட்டது. மறுபடியும், உலகம் முழுவதும் கோடிகள் வந்து கொட்ட ஆரம்பித்து விட்டன[4]. வெள்ளத்தினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவுகிறோம் என்ற போர்வையில் தீவிரவாதிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது / படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தியாவால் கொடுக்கப்பட்ட உதவிப்பொருட்களே இவர்கள் மூலமாகத்தான் விநியோகப்பட்டதாம். அமெரிக்கா இதை கண்டுபிடுத்துவிட்டதால், 24-11-2010 அன்று தடைசெய்துள்ளது[5]. அவற்றின் கணக்குகளையும் முடக்க ஆணையிட்டது[6].

வேதபிரகாஷ்

© 26-11-2010


[4] Just five months after Pakistan banned Jamaat-ud-Dawa (JuD) over its links to the terrorist organization blamed for last November’s Mumbai massacre, the Islamist charity group’s flags are flying high over a relief effort for refugees fleeing the fighting in the Swat Valley. The banned group’s signature black-and-white banner bearing a scimitar flew in the heart of Mardan as tens of thousands of refugees poured into the northwest garrison town, fleeing the military campaign to oust the Taliban from Swat and its surroundings. Read more: http://www.time.com/time/world/article/0,8599,1898127,00.html#ixzz16LOLnnLm

[6] The State Department and Treasury on Wednesday announced separate moves against the Falah-e-Insaniat Foundation, which has provided humanitarian assistance to Pakistanis displaced by recent floods and military action. The group is believed to be a front for Lashkar-e-Taiba, the banned organization blamed for deadly 2008 attacks in Mumbai, India.

http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/11/24/AR2010112403997.html