Archive for the ‘முசபர்நகர்’ Category

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (6)

செப்ரெம்பர் 13, 2013

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (6)

 

10-09-2013 (செவ்வாய்): மாநிலத்தில் நடந்த கலவரத்திற்கு, காங்கிரஸ் கூட்டணி பிரதமர் மன்மோஹன் சிங், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி – இறந்தவர்களுக்கு ரூ. 3 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ 50,000/- என்று அறிவிக்கின்றார். அகிலேஷ் யாதவிடம், என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன் என்றாராம்[1]. இதை வழக்கமாக செய்யப்படும் காரியம் என்பதா அல்லது காங்கிரஸ்-சமஜ்வாடி கட்சி கூட்டு என்பதா? ஏனெனில், எங்கு கலவரம் நடந்தாலும், இவர் இவ்வாறே செய்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. இங்கும் முக்கியமான முரண்பாடு, உண்மை மறைப்பு, மோசடி வெளிப்படுகிறது. முன்னர் 27-08-2013லிருந்து தெளிவாக என்ன நடந்தது என்று எந்த ஊடகமும் செய்தியை வெளியிடவில்லை. அடித்துக் கொண்டது, இறந்தது யார் என்று கூட விவரங்கள் கொடுக்கப்படவில்லை. யாரோ-யாரையோ அடித்தார்கள், கொன்றார்கள் என்பது போலத்தான் செய்திகளை வெளியிட்டார்கள். இப்பொழுது பணம் எனும் போது, எப்படி பட்டுவாடா செய்வார்கள்? அப்பொழுது எல்லா விவரங்களும் வந்து விடுமா? இல்லை, அதிலும் இந்து-முஸ்லிம் என்று பாரபட்சம் காட்டுவார்களா?

 

11-9-2013 (புதன்): சோனியா அமெரிக்காவிலிருந்து திரும்புகிறார். சோனியா மற்றும் மன்மோஹன் வெளிநாடு செல்லும் போதெல்லாம் இந்தியாவில் ஏதாவது நடக்கிறது என்பதனை கவனிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட கூட்டங்களில் எடுக்கப்பட்ட வீடியோக்களினின்று, கீழ்கண்டவர்கள் தூண்டிவிடும் வகையில் பேசியுள்ளார்கள் என்று ஊடகங்கள் இப்பொழுது எடுத்துக் காட்டுகின்றன.

 

 • காங்கிரஸைச் சேர்ந்த சயீத்-உஸ்-ஜமன் [Saeed-uz-zaman of the Congress],
 • பகுஜன் சமாஜ் கட்சியின் காதிர் ரானா மற்றும்
 • அதே கட்சியைச் சேர்ந்த ஜமீல் அஹமது [Qader Rana and Jameel Ahmed of the BSP],
 • சமாஜ்வாடி கட்சியின் ரஷீத் சித்திகி [Samajwadi Party’s Rashid Siddiqui]

 

வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு தூண்டிவிட்டு பேசும் போது, போலீஸ்காரர்களும் இருந்திருக்கிறார்கள், கேட்டிருக்கிறார்கள், பேச்சுகளையும் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை. இதனை ஊடகங்கள் இப்பொழுதுதான் தெரிவிக்கின்றன[2], டிவி-செனல்கள் மூலம் போட்டுக் காட்டுகின்றன. முதலில் “ஹட்லைன்ஸ்-டுடே” இப்படி போட்டதை, மற்றவர்கள் எடுத்தாண்டுள்ளார்கள், “Be it Sadhvi Prachi of the BJP at the mahapanchyat, or BSP MP Qadir Rana, Congress leader Saeed-uz-Zaman, Samajwadi Party’s Rashid Siddiqui and another BSP leader Noor Salim Rana, all were present at the religious gathering spouting venom to inflame passions”[3]. மேலும் சாத்வி பிராசி என்ற பிஜேபி பெண்மணி சனிக்கிழமை பதிலூக்கு பேசியிருந்தாலும், இவர்களுக்கு முன்னால் போட்டு [Sadhvi Prachi of the BJP, BSP MP Qadir Rana, Congress leader Saeed-uz-Zaman, Samajwadi Party’s Rashid Siddiqui, and another BSP leader Noor Salim Rana]செய்தியை வெளியிட்டுள்ளனர்[4] . உள்துறை அமைச்சரும் இப்பொழுது, “இந்த கலவரத்திற்கு பின்னணியில் அரசியல் கட்சிகள் இருக்கின்றன”, என்கிறார்[5]. முன்னர் ஹுகும் சிங் என்ற பிஜேபியிடம் ஊடகங்கள் தாங்கள் தூண்டி விட்டது போல பேசினீர்களே என்றெல்லாம் கேட்டு பேட்டி எடுத்தனர். அவர் மறுத்தாலும், அதனை திரும்ப-திரும்பப் போட்டுக் காட்டினார்கள். ஆனால், இவர்களைப் பற்றி மூச்சுக்கூட விடவில்லை. ஏனெனில், அவர்கள் எல்லோருமே முஸ்லிம்கள்! முதலில் அகிலேஷை ஆதரித்த காங்கிரஸ், இப்பொழுது பதவி விலக வேண்டும் என்கின்றது. அதேபோல, முஸ்லிம்களும் சொல்கின்றனர்.

 

மொஹம்மதுஆஸம்கான்காணாமல்போய்விட்டாராம்!: மொஹம்மது ஆஸம் கான் என்ற முஸ்லிம் மந்திரியோ, திடீரென்று புதன்கிழமை காணாமல் போய்விட்டாராம். “தி ஹிந்து, இப்படி கவலையுடன் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[6]. அவரது வீட்டிற்கு தொடர்பு கொண்டு விசாரித்தபோது, வைரல் ஜுரத்துடன் இருக்கிறார் என்றார்களாம். செவ்வாய்கிழமை அகிலேஷ் ஹஜ் இல்லத்திற்கு வந்தபோது காணாமல் இருந்தாலும், பிறகு திடீரென்று மதியம் தோன்றினாராம்[7]. முசபர்நகர் விசயத்தை கையாண்டதில் ஆவ்வர்ருக்குத் திருப்தி இல்லையாம்! இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த மாவட்டமே, இவரது பொறுப்பில் தான் வருகிறது. இவருக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது. போதாகுறைக்கு, மாநிலத்தில் முஸ்லிம் நலன் விவகாரங்கள் மந்திரியாகவும், அப்பா-மகன் இருவரையுமே ஆட்டிவைக்கும் அளவில் தோரணையுடன் இருந்து வருகிறார்.

 

எல்லாம் முடிந்த பின் எப்படி காங்கிரஸ் மற்றும் சமஜ்வாடி தலைவர்கள் மட்டும் செல்லமுடிகிறது?: உ.பி. மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் இரு தரப்பு மோதலில் ஏற்பட்ட கலவரத்தி்ல் இதுவரை 44 பேர் கொல்லப்பட்டனர் என்று அரசுசார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உ.பி.யில் ஆளும் சமாஜ்வாதி கட்சித்தலைவர் முலாயம்சிங் யாதவ், கலவரப்பகுதிகளில் விரைவில் சென்று பார்வையிட உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து காங். தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுல் ஆகியோரும் முசாபர்நகர் மாவட்டத்தில் கவால் பகுதிக்கு சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற உள்ளனர்[8]. ஏன் மற்ற கட்சியினர் இவர்களுக்கு ஆறுதல் சொல்ல முடியாதா? இதற்கிடையே பக்கத்து மாவட்டமான பாக்பாத் பகுதியில் கலவரம் பரவியது. அங்கு செல்ல முயன்றதாக மத்திய அமைச்சர் அஜித்சிங்கை போலீசார் தடுத்துநிறுத்தி திருப்பி அனுப்பினர். பிறகெப்படி முலாயம்சிங் யாதவ், சோனியா, ராகுல் முதலியோர் மட்டும் செல்ல முடியும் அல்லது அனுமதிக்கப் படுவர்? இதற்கு முன்னர் பிஜேபி தலைவர் அனுமதிக்கப் படவில்லை. ஒருவேளை செக்யூலரிஸம் இப்படியும் வேலை செய்யும் போலிருக்கிறது. தேர்தல் நேரத்தில் இவ்வாறு செய்வது கூட பாரபட்சம் தானே?

 

கற்பழிப்பு, மானபங்க, கொலைகள் முதலியவற்றை மறந்து / மறைத்து அரசியலை அலச ஆரம்பித்துள்ள ஊடகங்கள்:  பாதிக்கப்பட்ட ஜட் மக்கள் ராணுவம்-போலீஸ் பலம் வைத்து பரிக்ரமா யாத்திரையை தடுக்கும் போது, ஏன் இந்த கலவரத்தை தடுக்கவில்லை என்று கேட்கிறார்கள்[9]. அஜித் சிங்கும் அவர்களது பலம் தனக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்று பயப்படுகிறார். சென்ற தேர்தலில் ஏதோ சில இடங்களில் ஜெயித்ததால், காங்கிரஸ் கூட்டணியில் ஒரு அமைச்சராக இருக்கிறார். இப்பொழுது அதுவும் போய்விடுமோ என்று யோசிக்கிறார். ஆசம்கான் மிரட்டுவதால் முல்லாயம் சிங்கும் பயந்திருக்கிறார்[10]. அகிலேஷ் இனி அப்பா மாதிரி முல்லா மௌலானா அகிவிடுவார் என்று வெளிப்படையாக செய்திகள் வருகின்றன[11]. 1990களில் கர்சேவகர்கள் மீது சுட ஆணையிட்டதால், முல்லாயம், முல்லா என்று அழைக்கப்பட்டார். அதேபோல், இவர் முஸ்லிம்களை தாஜா செய்தால் மௌலானா ஆகிவிடுவார்[12].

 

 1. ஜட் ஜாதியினர் இதுவரை அகித் சிங்குடன் இருந்தார்கள், இனி பிஜேபியின் பக்கம் சாய்ந்து விடுவார்கள்[13].
 2. ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் பலம் குறைந்து விடும்.
 3. ஜட்-மூஸ்லிம் கூட்டு உடைந்து விட்டதால், சமாஜ்வாடி கட்சியின் ஓட்டு சதவீதம் குறையும், இதனால் பிஜேபிக்கு சாதகமாக போகும்[14].
 4. ஜட்-ஜாதியினர் 6% உபியில் இருந்தாலும் பிஜ்னோர், ஜேபி நகர், முசபர்நகர், மீரட், பாக்பட், கஜியாபாத், ஜிபி.நகர், மதுரா, அலிகர்முதலிய மாவட்டங்களில் வெற்றி வாய்ப்பை ஏற்ப்ச்டுத்தவல்லது. இங்கு சமாஜவாதி கட்சிக்கு ஆதரவு இல்லாததால், முஸ்லிம்களை வைத்துக் கொண்டு சமாளித்து வருகிறது[15].

.

 

வேதபிரகாஷ்

© 13-09-2013


[1] Muzaffarnagar clashes: PM Manmohan Singh announces compensations for victims

Press Trust of India | Updated: September 10, 2013 18:31 IST

Prime Minister Manmohan Singh today announced Rs. 2 lakh each for the family of those killed and Rs. 50,000 each for the seriously injured in the clashes in Muzaffarnagar.The compensation was sanctioned from the Prime Minister’s National Relief Fund, the PMO said in a statement. “Prime Minister has expressed his deep anguish over the loss of lives in the recent clashes in Muzaffarnagar district of Uttar Pradesh,” it added. Dr Singh yesterday condemned the violence and assured Chief Minister Akhilesh Yadav of all required help from the Centre in dealing with the situation. The Prime Minister gave the assurance while speaking to Mr Yadav about the steps being taken to restore peace in the areas which have witnessed violence. Muzaffarnagar has been in the grip of violence for last few days and Army has been called in to assist the civil administration.

http://www.ndtv.com/article/india/muzaffarnagar-clashes-pm-manmohan-singh-announces-compensations-for-victims-416893?h_related_also_see

[2] With an audience of about 2,000 people, most of them Muslims, local leaders from the Congress and Mayawati’s Bahujan Samaj Party or BSP took the stage. When asked why they didn’t intervene to have the meeting cancelled, local officials claimed they had been misled. Kaushal Raj, the District Magistrate of Muzaffarnagar, said that religious leaders had said the meeting would focus on collecting a petition demanding justice in the Kawal case, but that the gathering was then hijacked by the politicians – Qader Rana and Jameel Ahmed of the BSP, and Saeed-uz-zaman of the Congress.

http://www.ndtv.com/article/india/muzaffarnagar-riots-a-meeting-after-friday-prayers-exploited-by-politicians-416915

[7] Azam Khan’s absence sets rumour mills churning – He is reportedly unhappy with the way in which Muzaffarnagar district administration handled the clashes- With Uttar Pradesh Chief Minister Akhilesh Yadav facing flak for mishandling the Muzaffarnagar communal violence, senior Samajwadi Party leader and Minority Welfare Minister Mohammad Azam Khan’s absence at the Samajwadi Party’s national executive meeting — which commenced in Agra on Wednesday and is possibly the last before the next general election — was the talking point of the meet’s opening session.Though why Mr. Khan gave the meet a miss is not known, he is reportedly unhappy with the manner in which the district administration handled the situation in Muzaffarnagar. Mr. Khan, the minister-in-charge of Muzaffarnagar, was reportedly aware of the communal tension that was building up there since August 27.On Wednesday, the Minister spent the whole day in his residence here and did not attend office. The Hindu tried to contact him, but the staff at his residence said he was unwell and was down with viral fever.Nonetheless, the Minister’s absence in Agra set tongues wagging, with many taking it as an indication that all is not well between him and the Chief Minister, and possibly with even Mr. Mulayam Singh Yadav. On Tuesday, Mr. Khan did not attend the Cabinet meeting presided over by the Chief Minister, but later in the day made a surprise inspection of the Haj House. This was the eighth consecutive time that he had not attended Cabinet meeting.

http://www.thehindu.com/news/national/other-states/azam-khans-absence-sets-rumour-mills-churning/article5116383.ece?ref=relatedNews

[12] His father and Samajwadi Party (SP) president Mulayam Singh Yadav had been given the title of “Maulana” by Muslim clerics in 1990 when he, as the Chief Minister of Uttar Pradesh, had ordered the police to open fire on kar sevaks in Ayodhya, resulting in deaths of several Hindu zealots. Read more at: http://indiatoday.intoday.in/story/akhilesh-yadav-muzaffarnagar-violence-maulana-mulayam-skullcap-muslims/1/309384.html

[15] Although Jats comprise just 6% voters in western UP, they can swing the outcome in the districts of Bijnor, JP Nagar, Muzaffarnagar, Meerut, Baghpat, Ghaziabad, GB Nagar, Mathura, Agra and Aligarh. The SP, which did not have much presence in the region, has strengthened its position by wooing the minority community.

http://articles.economictimes.indiatimes.com/2013-09-10/news/41937865_1_jats-amroha-and-sambhal-muzaffarnagar

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (4)

செப்ரெம்பர் 13, 2013

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (4)

 

பாரபட்சமாக வழக்குகள் பதிவு செய்யப் பட்ட விதம்: 27-08-2013 அன்ற நிகழ்சி தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மற்றும் கொலையுண்ட பெற்றொர்களின் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டது[1]. இதில் வேடிக்கை என்னவென்றால், அவர்கள் சம்பவ்வம் நடந்தபோது கூட அங்கில்லை. ஆனால், பெண்ணை மானபங்கம் செய்ததற்காக, இரண்டு பேர் கொலை செய்யப்பட்டதற்காக எந்த எப்.ஐ.ஆரும் போடப்படவில்லை[2]. இது நிச்சயமாக இந்துக்களுக்கு அதிருப்தியையும், வெறுப்பையும் ஏபடுத்தியது. இது தவிர கவால் பஞ்சாயத்திற்கு போட்டியாக இன்னொரு பஞ்சாயத்து கலாப்பூர் என்ற இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது, எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், உள்ளூர் அரசியல்வாதிகள், தலைவர்கள் தைரியம் இருந்தால் ஆகஸ்ட் 31ம் தேதி, அதே நேரத்தில் கூட்டுங்கள் பார்ப்போம் என்று சவால் விட்டனர்[3]. இவர்களில் பெர்ம்பாலோர் முஸ்லிம்கள் என்று குறிப்பிடத் தக்கது. இதனால், முன்னரே அவர்கள் பஞ்சாயத்து கூட்டினர் போலும். எதிர்பார்த்தபடி கூட்டம் வரவில்லை, 40,000 பேர்கள் வந்திருந்தனர். இதனால், செப்.7ம் தேதி தள்ளி வைத்தனர். ஆனால், கலைந்து செல்லும் போது, பஸி என்ற கிரமத்தில், ஷாபூர் போலீஸ் நிலையம் அருகில் கத்திகளால் தாக்கப்பட்டனர்[4]. இப்பொழுது போலீசார் 7 இந்துக்கள் மீதும், ஒரு முஸ்லிம் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்[5]. இங்கும் பாரபட்சம் காட்டப் படுகிறது. இது “செக்யூலார் ஜுடிசியலிஸம்” [மதசார்பற்ற நீதிசெயல்படுத்தும் முறை] போலுள்ளது. அதாவது, எதிர்மறையாக செயல்ப்டும் முறையாகி விட்டது. முதலில் முஸ்லிம்கள் மீது வழக்கே பதிவு செய்யப்படவில்லை. இங்கோ ஏதோ 7:1 விகிதத்தில் வழக்குப் பதிவு செய்தது போலுள்ளது. இதனால், கலவரம் அருகிலுள்ள ஷம்லி, மீரட் போன்ற பகுதிகளில் பரவியது.

 

30-08-2013 (வெள்ளிக்கிழமை): ஷஹீத் சௌக் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக, பெருளவில் கூடினர். முஸ்லிம் தலைவர்கள் தூண்டிவிடும் விதத்தில் பேசியதாகச் சொல்லப்படுகிறது. இதில் பாஜக தவிர மற்ற எல்லா கட்சியிகளின் முஸ்லிம் தலைவர்களும் மோசமாக, தூண்டிவிடும் வகையில் பேசியுள்ளனர்[6]. முஸ்லிம்கள் முஸ்லிம்களாக செயல்படுவதும் வெளிப்படுகிறது. அதாவது அம்மாவட்டம், பஞ்சாயத்து தொகுதிகளில் முஸ்லிம்கள் பதவிக்ளில் இருந்தாலும், அவர்கள் எல்லா பிரஜைகளின் நலன்களையும் கவனிக்க  வேண்டும் என்ற கடமையை மறந்து, முஸ்லிம்கள் என்ற எண்ணத்திலேயே, செயல்பட்டுள்ளனர், பேசியுள்ளனர். கலவரம் பெரிதானதற்கு இதுதான் காரணம் எனலாம் (பிறகு ஊடகங்கள் அவ்வாறு வெளியிடுகின்றன). குறிப்பாக, முஸ்லிம்கள் தூண்டிவிடும் போக்கில் இருந்தது. ஆஸம்கான் வழக்கம் போல, பஞ்சாயத்தில் யாரோ முஸ்லிம்கள் கொல்லப்பட வேண்டும் என்று பேசியதாக கூறினார்[7]. வழக்கம் போல, வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு கலவரம் நடத்துதல் என்பது, பல கமிஷன்களில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

 

அதுமட்டுமல்லாது, இன்று தான், போலி வீடியோ என்று சொல்லப்படும், வீடியோ இணைதளத்தில் ஏற்றப்பட்டது. இரண்டு இளைஞர்களை ஒரு கும்பல் தாக்கப்படுவது போல காட்சிகள் இருந்தன. ஆனால், அது இரண்டு வருடங்களுக்கு முன்னர், பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்டதாகும்[8]. சியால்கோடில் (பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது) என்றும் செய்திகள் வந்துள்ளன[9]. அப்படியென்றால், அதனை சுற்றுக்குள் விட்டது, யார் என்று ஆராயவேண்டியுள்ளது. அரசு எங்கிருந்து அந்த வீடியோ வந்தது என்று கண்டுபிடிக்க உத்தாவு இட்டுள்ளது[10]. ஏற்கெனவே சங்கீத் சிங் சோம் என்ற பிஜேபி எம்.எல்.ஏ இந்த வீடியோவை பகிர்ந்து கொண்டதற்காக, அவர் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது[11].

 

31-08-2013 (சனிக்கிழமை): அந்த இரண்டு இளைஞர்களும் ஜட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் பஞ்சாயத்தைக் கூட்டி நியாயம் கேட்டனர். பாரபட்சமாக நடந்து கொண்ட ஷம்லி மாகாணத்தின் போலீஸ் சூப்பிரென்டென்டென்ட்டை விலக்குமாறு கோரிக்கை வைத்தனர். இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கு, தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும், இல்லையென்றால், அவர்களே செய்யலில் இறங்கவேண்டியிருக்கும் என்று பேசினர்[12]. 07-09-2013 அன்று நக்லா மண்டூர் என்ற இடத்தில் “மஹா பஞ்சாயத்தை” கூட்ட முடிவு செய்தனர். கலைந்து செல்லும் போது, ஒரு கார் மடக்கப் பட்டு, காரில் இருந்தவர்கள் தாக்கப்பட்டனர்.

 

01-09-2013 (ஞாயிறு): ஷஹீத் சௌக் (முஸ்லிம்கள்) மற்றும் நக்லா மண்டூர் (இந்துக்கள்) இடங்களில் பேசியவர்களின் மீது, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டது. அதாவது, உள்ளூர் போலீசார், அப்படி நடந்து கொண்டுள்ளது.

 

02-09-2013 (திங்கள்): கூட்டம் சஞ்ஷக் மற்றும் கவல் என்ற இடங்களில் உள்ள வழிபாட்டு ஸ்தலங்களை தாக்கியது. இதனால் பிஜேபி பந்தை அறிவித்தது. இதிலிருந்து, முஸ்லிம்கள் கோவில்களை தாக்கியுள்ளனர் என்றாகிறது. இதைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

 

03-09-2013 (செவ்வாய்): சங்கீத் சோம் என்ற எம்.எல்.ஏ மீது கவல் நிகழ்ச்சி பற்றி போலியான விடியோ பரப்பியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஷம்லியில் கலவரம்.

 

04-09-2013 (புதன்கிழமை): முசாபர்நகர் பகுதிகளில் கலவரம் பரவியது.

 

05-09-2013 (வியாழக்கிழமை): மஹாபஞ்சாயத்திற்கான அழைப்பு விடப்பட்டது.

 

06-09-2013 (வெள்ளிக்கிழமை): பாரதீய கிஷான் யூனியன் ஆட்கள், நங்க்லா மந்தௌத் ஜெயிலில் உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். அப்படியென்றால், அவர்கள் சிறைபிடித்துச் செல்லப்பட்டார்கள் என்றாகிறது. பாரதீய கிஷான் யூனியன் உத்திரபிரதேசத்தில் உள்ள கட்சி சார்பற்ற விவசாய சங்கம் ஆகும். ஒரு காலகட்டத்தில், சரண் சிங்கிற்கு ஆதரவாக இருந்தது. அவர் காலமாகிய பிறகு, அவரது மகன் அஜித் சிங்கிற்கு ஆதரவாக உள்ளது. ஆனால், அரசியல் செல்வாக்கு ஒன்றும் இல்லை எனலாம். பஞ்சாயத்தில் கலந்து கொண்ட திகாயத் சகோதர்களின் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது.

 

வேதபிரகாஷ்

© 13-09-2013


[1] Sources said police registered the first information report (FIR) against the parents of the girl who were not present on the spot. The inclusion of parents’ names in the FIR did not go down well with the majority community of the area, following which the sympathisers of the girl’s family announced a panchayat in Kawaal Aug 31. The rival community opposed the plan.

http://www.hindustantimes.com/India-news/UttarPradesh/Stalker-s-death-triggered-sectarian-violence-in-Muzaffarnagar/Article1-1119594.aspx

[3] Opposing the Kawaal panchayat, a parallel panchayat was planned in Khalapar area of the city. At this, the government representatives, including members of parliament and state legislature, and local leaders dared the Kawaal panchayat organisers to hold it at the appointed time on Aug 31.

http://indiatoday.intoday.in/story/stalkers-death-triggered-muzaffarnagar-conflagration/1/308991.html

[4] A huge gathering of about 40,000 people turned out but the Kawaal panchayat organisers called off the proceedings and announced the assembly again Sep 7. But when the participants of the – ‘Beti Bachao Bahoo Bachao panchayat’ – were returning to their homes they were attacked by swords at Basi village under Shahpur police station.

http://www.hindustantimes.com/India-news/UttarPradesh/Stalker-s-death-triggered-sectarian-violence-in-Muzaffarnagar/Article1-1119594.aspx

[5] The police booked under the National Security Act (NSA) eight people, of whom seven people were from the majority community and one person was from the minority community. The riot quickly spread to the neighbouring areas falling under Shamli and Meerut districts.

 

[6] இதை 11-09-2013 அன்று தான் “ஹெட்லைன்ஸ் டுடே” செனல் வெளியிடுகிறது. அதாவது, ஒரு பிஜேபி எம்.எல்.ஏ பிறகு பேசியதை முன்னால் காட்டி, முன்னால் தூண்டிவிட்டு முஸ்லிம்கள் பேசியதை பின்னால் காட்டுகிறார்கள். இதுதான் செக்யூலரிஸ ஊடகங்களின் தலைகீழ் செய்தி வெளியீடும் யுக்தி.

[7] The state’s minority welfare minister, Mohammad Azam Khan, said some at the meeting gave provocative speeches calling for Muslims to be killed.

http://www.washingtonpost.com/world/asia_pacific/troops-deployed-to-quell-deadly-communal-clashes-between-hindus-muslims-in-north-india/2013/09/08/66e33f48-1854-11e3-961c-f22d3aaf19ab_story.html

[8] “The video shows a group of men lynching two boys. It went viral, particularly among the Jats. But we found out that the video was made at least two years ago and had been shot in either Pakistan or Afghanistan,” the officer said. He said the police managed to block the video, but by then several people had downloaded the clip on their mobile phones.

http://www.indianexpress.com/news/communal-clashes-in-western-up-town-reporter-among-six-killed/1166240/2

[9] Police said DVDs and CDs of the maha-panchayat remain in circulation and have surfaced in east and central UP as well. The hunt for BJP MLA Sangeet Som and 228 others for distributing the malicious morphed video of the Sialkot riots continues. The police plan bulk SMSes to counter rumour-mongering. Gupta said fly-by-night computer centres making the CDs are on their radar as well.

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (3)

செப்ரெம்பர் 13, 2013

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (3)

 

28-08-2013 (புதன்): செவ்வாய்கிழமை (27-08-2013) அன்று நடந்த ஒரு இந்து பெண்ணின் கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் உபி மற்றும் மத்திய அரசுகளுக்கு நன்றாக தெரிந்து தான் இருந்தது[6]. ஆனால், பி.டி.ஐ கொடுத்த செய்தியை அப்படியே ஆங்கில நாளிதழ்கள் வெளியிட்டன. ஆனால், உள்ளூர் செய்திதாள்கள், டிவிசெனல்கள் ஓரளவிற்கு அவர்களால் காட்டமுடிந்ததை காட்டினர். ஆனல், அவை மேலும் கலவரத்தைத் தூண்டும் என்ற நோக்கில் அவையும் கட்டுப்படுத்தப்பட்டன.

 

 1. முதலில் ஒரு இந்து பெண், முஸ்லிம் ஆணானால் கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்யப் பட்டான்.
 2. தட்டிக் கேட்ட, தடுத்த அவளது சகோதரன் மற்றும் அவனது நண்பன் முஸ்லிம் கும்பல் துரத்திக் கொன்றுள்ளது.
 3. அதில் அந்த இரண்டு இந்து இளைஞர்கள், கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் முஸ்லிம் இளைனைக் கொன்றுள்ளார்கள்.
 4. புகார் கொடுத்ததற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
 5. முஸ்லிம்கள் தாக்கினர் என்பதால் தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்துக்களுக்கு புரிந்தது.
 6. “ஜட் / ஜாட்” ஜாதி மக்களிடையே ஜாதி கலவரம் நடந்தது என்று செய்திகள் பரப்பப் பட்டன.
 7. முஸ்லிம்கள், முஸ்லிம்கள் என்று சொல்லப்பட்டபோது, இந்துக்கள் இந்துக்கள் என்று சொல்லப்படாமல்“ஜட் / ஜாட்” ஜாதி மக்கள் என்று ஜாதி பெயர் குறிப்பிடப்பட்டு செய்திகள் வெளியிடப்பட்டன.
 8. அதாவது, முஸ்லிம்கள் முதலில் ஒரு இந்து பெண்ணை கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்தார்கள், கும்பலாக சேர்ந்து கொண்டு இரண்டு இந்துக்களைக் கொன்றுள்ளார்கள், கொல்லப்பட்ட இந்து முஸ்லிம் இளைஞனை கொன்றுள்ளான் போன்ற விவரங்கள் மறைக்கப்பட்டன.
 9. இதனால், இந்துக்கள் உண்மையினை அறிவிக்க முயற்சி செய்தனர்.
 10. உடனே சமூக-ஊடகங்கள் எனப்படுகின்ற இணைதள டுவிட்டர் போன்ற முறைகள் கட்டுப்படுத்தப்பட்டன.
 11. உண்மை செய்திகளை வெலியிடாமல், இணைதளத்தில் உள்ளவை எல்லாமே பொ, நம்பவேண்டாம் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.
 12. இதற்கு தேசிய, பிரபலமான ஆங்கில நாளிதழ்களும் ஒத்துழைத்தன.
 13. இதனால் தான், மஹாபஞ்சாயத்து கூட்டப் பட, இந்துக்கள் முடிவு செய்தனர்.

 

இந்த பின்னணியில் தான் புதன்கிழமை நிகழ்சிகள் நடந்துள்ளன.

 

அந்த பெண் என்னவானாள் – எங்கு இருக்கிறாள் என்பது முழுவதுமாக மறைக்கப்பட்டுள்ளது: இப்பிரச்சினை எல்லாமே, முஸ்லிம் இளைஞன் முதலில் ஒரு இந்து பெண்ணை கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்தான் என்றுதான் ஆரம்பித்தது எனும் போது, அப்பெண்ணின் கதி என்னவாயிற்று என்று சொல்லப்படவில்லை. அவள் உயிரோடு உள்ளாளா  இல்லையா அல்லது முஸ்லிம் கும்பல் அவளையும் கொன்றுவிட்டார்களா என்றுமே தெரியவில்லை. ஒருவேளை, போலீசார் உடல்களை வைத்திருந்தார்கள், அவர்களிடமிருந்து உடல்கள் பெறப்பட்டுள்ளன எனும் போது, அதில் அவளது உடலும் இருந்ததா என்ற விசயங்கள் தெரியவில்லை. எனவே, பொறுப்புள்ள ஊடகங்கள், சட்டத்தை அமூல் படுத்தும் மாவட்ட மாஜிஸ்ட்ரேட், போலீஸ் அதிகாரிகள் முதலியோர் இத்தகைய உண்மைகளை மறைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்குதான், ஒரு பெண் கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்யப்பட்டாள் என்ற விசயத்தில் எப்படி எல்லோரும் இரட்டை வேடங்கள் போடுகிறார்கள் என்றும் வெளிப்படுகின்றது.

 

சுடுகாட்டிற்குச்சென்றுஉடல்களைஎரித்துதிரும்பவரும்இந்துக்கள்ஏன்கலாட்டாவில்இறங்கவேண்டும்?: போலீசார் கொல்லப்பட்ட உடல்களை கொடுத்தார்கள். முன்னமே குறிப்பிட்டப்படி “போஸ்ட் மார்டம்” செய்தபிறகு உடல்களை கொடுத்தார்கள் என்று எடுத்துக் கொண்டால், இறந்தவர்கள் யார், எப்படி இறந்தார்கள் என்ற விவரங்கள் பொலீசாரிடம் இருக்கின்றன என்றாகிறது. ஏனெனில், அப்பொழுதுதான் உரியவர்கள் வந்து உடல்களைக் கேட்டிருக்க முடியும், போலீசாரும் கொடுத்திருக்க முடியும். இங்கும் விவரங்கள் வெளியிடப்படாமல் மறைக்கப்பட்டுள்ளன. இந்துக்களில் சுடுகாட்டிற்கு சென்று திரும்பிய கூட்டத்தினர், நெருப்பை வைத்து எரிக்க ஆரம்பித்தனர், என்று மட்டும் பிறகு செய்திகள் வெளியிடப்பட்டன. அதாவது இந்துக்கள் கலாட்டாவில் இறங்கியுள்ளார்கள். அப்படியென்றால்,ஆவர்கள் ஏன் அந்த அளவிற்கு கோபம் கொண்டிருக்க வேண்டும், ஏன் கோபம் அடைந்தனர், எரியூட்ட வேண்டும் என்ற அளவிற்கு குரோதம் எப்படி திடீரென்று வந்திருக்க முடியும்? இந்த தடவை, இதனை “பேக் லாஷ்” [backlash] / “பதிலுக்குப்பதில்” என்று வர்ணிக்கவில்லை. அப்படியென்றால், இந்துக்களின் உணர்வுகள் ஒட்டு மொத்தமாக அடக்கப்படவேண்டும், மறைக்கப்பட வேண்டும் என்று யார், ஏன் நினைக்கிறார்கள்? அவ்வாறே அதிகாரத்தின் மூலம் அடக்கியுள்ளார்கள்?

 

29-08-2013 (வியாழன்): இது இரண்டு சமுதாயத்தினரிடையே கலவரத்தை உண்டாக்கியது. அதாவது, முஸ்லிம்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் போலும். அதற்குள் ஒரு வழிபடும் ஸ்தலம் அருகே ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டாள். இது கலவரத்தை இன்னும் அதிகமாக்கி இருக்கும். ஆனால், இதையும் ஊடகங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒருபெண்ணை கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்தது தான் பிரச்சினையின் ஆரம்பம் என்று இருந்தாலும், இன்னொரு பெண் கோவிலின் அருகில் பலாத்காரம் செய்யப்பட்டாள் என்ற போது கண்டுகொள்ளவில்லை. அதாவது, இங்கும் ஒரு பெண் முஸ்லிம்களால் பலாத்காரம் செய்யப்பட்டாள் என்றகிறது. ஆக இரண்டு இந்து பெண்கள் பலாத்காரம் செய்யப் பட்டபோதும், எல்லோரும் உண்மைகளை மறைக்கிறார்கள் அல்லது ஊடகங்களில் வரக்கூடாது என்று பார்க்கிறார்கள்.

 

பெண்கள்கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம்செய்யப்படுவதற்குஅல்ல: வெட்கக்கேடு, மானக்கேடு, கற்பழிப்பாளர்களை துக்கில் போட வேண்டும், அவர்கள் மனிதர்களே இல்லை, கொடிய மிருகங்களை, எங்களை கற்பழிக்காதே, நாங்கள் பற்பழிப்பதற்காக இல்லை, என்றெல்லாம் பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டு, தில்லியில் மற்ற நகரங்களில், ஏன் சென்னையில் கூட ஆர்பாட்டம் நடத்தினார்கள். ஆனால், 27-08-2013 அன்றே அத்தகைய நிகழ்சி நடந்துள்ள போது, மேலும் தில்லி கற்பழிப்பு பற்றி ஆர்பாட்டமாக ஊடகங்களில் அலசிக் கொண்டிருக்கும் போது, அப்பெண்ணின் பெற்றொர்களைப் பேட்டிக் கண்டு, அவர்கள், “கற்பழித்தவர்களுக்கு மிகக் கொடுமையான தண்டனை கொடுக்கப்படவேண்டும்”, என்று கண்ணீருடன் சொன்னதையெல்லாம் டிவி-செனல்களில் காட்டிக் கொண்டிருக்கும் போது, ஏன் இந்த இரண்டு பெண்களின் நிலைமைய கண்டு கொள்ளவில்லை? ஆசாராம் பாபுவின் விசயத்தில் அந்த அளவிற்கு தினசரி 24 x 7 முறையில் செய்திகளை அள்ளிக் கொட்டினார்களே? பிறகு இங்கு ஏன் அப்படியே உண்மைகளை மறைக்கிறார்கள்?

 

அச்சு, மின்-ஊடகங்கள் ஏன் பாரபட்சமாக இருக்கின்றன?: இப்படி ஊடகங்கள் ஏன் செயல் படுகின்றன? யார் அவற்றை ஆட்டி வைக்கிறார்கள்? உண்மை என்று பறைச்சாட்டிக் கொண்டு, தங்களுக்குத் தாமே விளம்பரங்கள் கொடுத்டுக் கொண்டு, பரிசுகளை அளித்துக் கொண்டு வியாபாரம் செய்து வரும் இவர்கள் ஏன் இப்படி பொய்களை சொலிகிறார்கள் என்றெல்லாம் ஆராய வேண்டியிருக்கிறது.

 

 • ஆசாராம் பாபு விசயத்தில், ஆசாராம் மற்றும் கற்பழிக்கப்பட்டதாக சொல்லப்படும் பெண் இருவரும் இந்துக்கள்.
 • தில்லி கற்பழிப்பு விசயத்திலும் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் இந்துக்கள்.
 • மும்பயிலும் அப்படியே.
 • பெங்களூரிலும் அப்படியே.

 

ஆக, இந்துக்கள் எப்பொழுதும் கற்பழித்துக் கொண்டே இருப்பார்கள். இந்துப் பெண்களும் தொடர்ந்து கற்பழிக்கப் படுவார்கள் என்று அறிவுருத்துகிறார்கள் போலும்!

 

ஆனால், மற்ற கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்த விசயங்களில் யார் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள்?

 

 • திருச்சி மானபங்கம் விசயத்தில், அந்த முஸ்லிம் பெண்ணை அழைத்துச் சென்றது, ஒரு முஸ்லிம் பையன் / காதலன்.
 • இங்கு முசபர்நகரில் இந்து பெண்னை கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்தது ஒரு முஸ்லிம்.
 • முன்பு ஜாபுவா கற்பழிப்பு விசயத்தில், ஒரு கன்னியாஸ்திரீயை இந்துக்கள் கற்பழித்தார்கள் என்று ஓலமிட்டார்கள். ஆனால், அவர்கள் கிருத்துவர்கள் தாம் என்றதும் அடங்கி விட்டார்கள்.
 • பிறகு, கந்தமாலில் ஒரு கன்னியாஸ்திரீ கற்பழிக்கப் பட்டாள் என்று ஆர்பாட்டம் செய்தார்கள். ஆனால், மருத்துவப் பரிசோதனையில் அவள் ஏற்கெனவே உடல் உறவு கொண்டிருக்கிறாள் என்று தெரிந்தவுடன் அப்படியே அடங்கி விட்டார்கள்.

 

ஆக முஸ்லிம்கள் கற்பழித்தால் யாரும் கேட்கக் கூடாது, முஸ்லிம்கள் கற்பழித்தால் யாரும் கேட்கக் கூடாது, முஸ்லிம்-கிறிஸ்தவ பெண்கள் சம்பந்தப் பட்டிருந்தால் ஊடகங்கள் அமைதியாக இருக்க வேண்டும் அல்லது அடக்கி வாசிக்க வேண்டும். எனவே, இங்கு இந்துக்கள் என்றால் ஒருமாதிரி ஊடகங்கள் செயல்படுகின்றன, இந்துக்கள் இல்லை எனும் போது, அதிலும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் எனும் போது வேறுவிதமாக செயல்படுகின்றன, என்று அப்பட்டமாகத் தெரிகின்றது.

 

பத்திரிகாதர்மம்அல்லது செக்யூலரிஸ ஜேர்னலிஸம் இந்துக்களுக்கு எதிராகச் இருக்க வேண்டுமா?: அதாவது “பத்திரிகா-தர்மம்” [journalistic ethics, code of conduct of jouranalists, discipline of media writers / reporters] மறக்கப்படுகிறது. இந்துக்கள் எனும் போது, ஊடக வல்லுனர்களின் ஒழுக்கம், எழுத்தாளர்களின் நடத்தை, செய்தியாளர்களின் யோக்கியதை முதலியவை வேறுவிதமாக, பாரபட்சமாக, திரித்து வெளியிட்டாலும் ஏற்றுக் கொள்லப்படுகின்றன, பாராட்டப் படுகின்றன, ஏன் பரிசு-பட்டங்கள் கூட கொடுக்கிறார்கள். ஏன்?

 • அதுதான் இன்றைய ஊடக செக்யூலரிஸம், மதசார்பின்மையான பத்திரிகா தர்மம் என்றாகிறதா?
 • அத்தகைய போக்கை யார் உருவாக்கியது?
 • மனப்பாங்கை எப்படி கற்றுக் கொடுத்தார்கள்?
 • எந்த ஊடகப் பள்ளியில், பல்கலைக் கழகத்தில் சொல்லிக் கொடுக்கப் படுகிறது?

படிக்கும்போதே, மனங்களில் “கம்யூனலிஸம்” [மதம், மதவேறுபாடு போன்றவை] இருக்கக்கூடாது என்கிறார்கள், ஆனால், அதே நேரத்தில் குறிப்பிட்ட மதத்தைப் பற்றி எதுவும் பேசக்கூடாது, சொல்லக்கூடாது, எழுதக்கூடாது, விமர்சிக்கக் கூடாது என்றால் அது என்ன? ஆனால்,

 • இந்துமதத்தை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்.
 • நாத்திகர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் முழு உரிமையோடு குறை கூறலாம்.
 • மனித உரிமைகள் போர்வையில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
 • ஏன், அடிப்படைவாத, மதவாத, சமயவெறி பிடித்த முஸ்லிம்களே இந்துக்களை அடிப்படைவாதிகள் என்று குறிப்பிடலாம்.
 • கிறிஸ்தவர்களும் அவ்வாறே செய்யலாம்.

ஏனெனில், இவையெல்லாம் செக்யூலரிஸம் ஆகிறது.

 

வேதபிரகாஷ்

© 13-09-2013

 

 


[1] சில ஊடகங்கள் தாம் இவற்றைக் குறிப்புட்டுள்ளன, பிறகு இச்செய்திகள் நீக்கப்பட்டுள்ளன மற்றும் மாற்றப்பட்டுள்ளன.

[2] The incident took place in the Jansath area of Muzaffarnagar, 495 km from here, when a youth was caught harassing a girl. Her brother and his friend bashed up the alleged molestor and shot him dead, but were themselves lynched by a mob. Muzaffarnagar’s Senior Superintendent of Police (SSP) Manjil Saini told IANS that Sachin, a resident of Malakpura village was told by his sister hat a boy named Shahnawaz was harrasing her. Enraged at this, he, along with a friend, attacked Shahnawaz with a knife and later shot him. As the two tried to flee the crime scene, they were overpowered by the villagers and were beaten to death. With the news of the killings spreading in the area, people from both sides attacked each other and police reinforcements were rushed to the village.After great difficulty, police managed to take possession of the three dead bodies and bring the situation under control. The bodies have been sent for post-mortem while Provincial Armed Constabulary (PAC) personnel have been deployed in the village.

http://www.mid-day.com/news/2013/aug/280813-three-killed-in-up-after-girls-harassment.htm

[3] Tension prevails in Muzaffarnagar after clash [Last Updated: Wednesday, August 28, 2013, 13:38] Muzaffarnagar: Security has been tightened in Kawal village here where tension prevailed after three persons were killed over a minor dispute, police said here.  Security has been tightened and patrolling has been intensified as tension prevailed in the area. A posse of police have been deployed to maintain law and order, police said.  Three persons were killed over a minor dispute which broke out after two motorbikes had collided with each other at Kawal village yesterday. While victim Qureshi was allegedly stabbed to death by Gaurav and his friend Sachin (25), hearing his cries, locals later rushed to the spot and beat the duo to death. A case has already been registered in this regard. Meanwhile, in a major reshuffle, the Uttar Pradesh government has transferred 25 IPS officers, including Director Generals.  SSP Muzaffarnagar Manjil Saini has been transferred from the district and attached to the DG headquarters, an official spokesperson said today in Lucknow.

[6] Referring to the suspected root of the flare-up, the vulgar remarks passed on a girl on August 27 in Kaval village of Muzaffarnagar and three subsequent murders of people from different communities, she said timely police action could have stopped escalation of tension.

http://www.hindustantimes.com/India-news/Lucknow/Women-raped-by-rioters-in-Muzaffarnagar/Article1-1121326.aspx

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (2)

செப்ரெம்பர் 12, 2013

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (2)

 

கலவரத்தில்பாதிக்கப்பட்டவர்கள்எல்லோருமேஎனும்போதுதொப்பிப்போட்டுக்கொண்டுவந்துசெக்யூலரிஸத்தைக்காட்டிக்கொள்ளவேண்டும்?: மக்கள் செய்திகளை நம்பித்தான் நிலைமையைத் தீர்மானிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு சரியான செய்திகள் கொடுக்கப்படவேண்டும். கலவரம் நடந்த இடங்களுக்கு, பீஜேபிகாரர்கள் செல்லக் கூடாது என்று தடுக்கும் போது, அகிலேஷ் யாதவ் எப்படி, முஸ்லிம் போல தொப்பிப் போட்டுக் கொண்டு, ஆஸம் கான் என்கின்ற அடிப்படைவாத முஸ்லிம் அமைச்சருடன் உலா வந்து கொண்டு ஊடகங்களுக்கு எப்படி பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. தான் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்கிறார் என்று காட்டிக் கொள்கிறாரா அல்லது இந்துக்களுக்கு விரோதமாக செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறாரா? ஊடகங்களில் இந்து-முஸ்லிம் கலவரம் என்று குறிப்பிடக் கூடாது என்றால், இவர்கள் ஏன் தொப்பிப் போட்டுக் கொண்டு வந்து செக்யூலரிஸத்தைக் காட்டிக் கொள்ள வேண்டும்?

முஸ்லிம் குல்லாவும், செக்யூலரிஸமும், மதவாதமும்:  முஸ்லிம் குல்லா போட்டு செக்யூலசிஸத்தைக் காட்டிக் கொள்ளும் போக்கு, முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டது. குறிப்பாக, தர்கா வழிபாடு செய்யவரும் இந்துக்களை அவ்வாறு செய்ய வைத்தார்கள். பிறகு, ரம்ஜான் நோன்பு விருந்துகளில் அதனை ஊக்குவித்தார்கள். அரசியல்வாதிகள் அவ்வாறு வருவதை ஏதோ பெருமையாக அல்லது தங்கள் முஸ்லிம்களுக்கு மிகவும் நெருக்கம் ஆகி விட்டோம் அல்லது முஸ்லிம்கள் தங்களுக்கு மிகவும் நெருக்கம் ஆகி விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டார்கள். இதுபோலத்தான், முல்லாயம் மற்றும் அவரது மகன் அகிலேஷ் குல்லா போட்டுக் கொண்டு திரிந்து வருகிறார்கள். சென்னைக்கு வந்தபோது கூட, அகிலேஷ் தாங்கள் முஸ்லிம்களுக்கு வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று பறைச்சாற்றிக் கொண்டார். இப்பொழுது, கலவரம் நடக்கும்போது, ஹஜ் இல்லத்திற்கு சென்ற போது (செவ்வாய்கிழமை) கூட இவர் குல்லாவோடு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். கூட மொஹம்மது ஆஸம் கானும் இருக்கிறார்! பிறகு, உபியில் இந்துக்களே இல்லையா? இனி 27-08-2013லிருந்து நடந்த நிகழ்சிகள் அலசப்படுகின்றன.

27-08-2013 (செவ்வாய்): உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள கவல் கிராமத்தில் ஒரு இளம் பெண்ணை ஒரு இளைஞன் கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் [ஆங்கிலத்தில் “Eve-teasing, molestation” என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளனர்] செய்ததால், அவளுடைய சகோதரன் தன்னுடைய நண்பனுடன் தடுக்கச் சென்றவர்களை சுமார் நூற்றுக்கும் மேலானவர் துரத்திச் சென்று குத்திக் கொன்றனர். அச்சண்டையில் கத்தியைப் பிடுங்கி, திருப்பி குத்தியில், அந்த கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்த இளைஞனும் இறந்துள்ளான். இந்த செய்தியை ஊடகங்கள் விதவிதமாக (முதலில், ஒரு மாதிரி, பிறகு வேறு மாதிரி என்று) வெளியிட்டன:

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள கவல் கிராமத்தில் ஒரு இந்து பெண்ணை ஒரு முஸ்லிம் (குரேசி) கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்ததால், அவளுடைய சகோதரன் தன்னுடைய நண்பனுடன். ஆங்கிலத்தில் “Eve-teasing, molestation” என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளனர். தடுக்கச் சென்றவர்களை (கௌரவ் மற்றும் சச்சின்) சுமார் நூற்றுக்கும் மேலான முஸ்லிம்கள் துரத்திச் சென்று குத்திக் கொன்றனர். (அவர்களிடம் ஆயுதங்கள் ஒன்றும் இல்லை என்று குறிப்பிடத்தக்கது)[1]. அச்சண்டையில் கத்தியைப் பிடுங்கி, திருப்பி குத்தியில், ஒரு முஸ்லிமும் இறந்துள்ளான். முஸ்லிம்கள் இந்த நிகழ்ச்சிகளை நியாயப்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சி பிறகு விதவிதமாக ஊடகங்கள் வெளியிட்டன[2]:

 1. ஒரு முஸ்லிம் இளைஞன், ஒரு இந்து பெண்ணை கலாட்டா செய்தான். அதனை அவளது சகோதரன் மற்றும் அவனது நண்பன் தட்டிக் கேட்டுள்ளனர். சண்டையில், முஸ்லிம் இளைஞன் கொல்லப்பட்டான். முஸ்லிம் கூட்டம் அந்த இருவரையும் கொன்றுள்ளனர்.
 2. உள்ளூர் போலீஸ் சூப்பிரென்டென்டென்ட் கூறுவதாவது, மலகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவனின் சகோதரி தான் ஒருவனால் தொந்தரவு செய்யப்படுவதாக புகார் கொடுத்தாள். அவனும், அவன் நண்பனும் சென்று, பெண்னை பலாத்காரம் செய்தவனை அடித்துள்ளனர். ஆனால், கத்தி உபயோகப்படுத்தப் பட்டதால்,   பலாத்காரம் செய்தவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அந்த இரண்டு இளைஞர்களும், கூட்டத்தினரால் கொல்லப்பட்டனர்.
 3. மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தவர்கள், மோதிக் கொண்டதில், சண்டை ஏற்பட்டு, அதில் மூவர் இவ்வாறு கொல்லப்பட்டனர்[3]. இச்செய்தி பி.டி..ஐ மூலம் கொடுக்கப்பட்டிருதால், அப்படியே மற்ற நாளிதழ்களும் போட்டிருக்கின்றன[4].

ஆனால், இரு இந்து பெண்ணை கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்தது தான் பிரச்சினையின் ஆரம்பம் என்பதனை மறைக்க முடியாது[5]. இறந்தவர்களின் குடும்பத்தினர், ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். பிறகு பொலீசாரால் கட்டுப்படுத்தப்பட்டனர். உடல்கள் திருப்பிக் கொடுக்கப் பட்டது. அப்படியென்றால், போலீசார், எதற்காக உடல்களை எடுத்து சென்றனர், அல்லது வைத்திருந்தனர் என்ற கேள்வி எழுகின்றது. போஸ்ட்மார்ட்டம் செய்தபிறகு உடல்கள் கொடுக்கப் பட்டிடருக்கலாம்.

தொந்தரவுசெய்யப்பட்டபெண்பொலீசிடம்புகார்கொடுத்துன்நடவடிக்கைஎடுக்காதது: பாதிக்கப்பட்ட பெண், ஏற்கெனவே மஞ்சில் சைனி என்ற பெண் போலீஸ் அதிகாரியிடம், ஒரு முஸ்லிம் இளைஞன் தன்னை தொந்தரவு செய்கிறான் என்று புகார் கொடுத்துள்ளாள், ஆனால், அந்த அதிகாரி எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை. இவ்விசயத்தை ஊடகங்கள் வெளியிடாததால், தில்லி-மும்பை மாதிரி ஒரு தட்டிக் கேட்கும் நிகழ்சியாக மாறவில்லை. அப்படி செய்திடுந்தால், ஒருவேளை கலவரமே நடந்திருக்காது. இத்தனை உயிர்களும் போயிருக்காது. ஆனால், அவை அவ்வாரு செய்யவில்லை.

அதிகாரிகள்பயந்துகொண்டுநடவடிக்கைஎடுக்கவில்லையாஅல்லதுஅவ்வாறுபணிக்கப்பட்டனரா?: சென்ற மாதம் துர்கா சக்தி நாக்பால் என்ற அதிகாரி, விசயமே இல்லாததற்கு பதவி நீக்கமே செய்யப் பட்டிருக்கிறார். அதாவது, முஸ்லிம் சம்பந்தப் பட்டால், எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது, எடுத்தால் அக்கதிதான் ஏற்படும் என்று மறைமுகமாக அறிவுருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு இளம் பெண் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்யப்படுகிறாள் எனும் போது, ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுதான் கேள்வி. மேலும் அச்சு-ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டாலும், டிவி-ஊடகங்கள் மௌனம் காத்தன. தில்லி-மும்பை போல ஆர்பாட்டம் செய்யவில்லை. எனெனில் இங்குள்ள பெண் விசயம் அவர்களுக்கு ஆகவில்லை அல்லது சம்பந்தப்பட்ட ஆண் முஸ்லிமாக இருக்கிறான் என்று அடங்கிவிட்டனர் என்ன்றாகிறது. திருச்சி விசயத்திலும், முஸ்லிம் பெண்ணை கூட்டிச் சென்றவன், அவளது காதலன் மற்றும் அந்த காதலன் ஒரு முஸ்லிம் என்றதும், விசயத்தை அப்பட்டியே அமுக்கிவிட்டனர். தேசிய-பல்நாட்டு டிவி-ஊடகங்கள் கண்டுகொள்லவில்லை.

வேதபிரகாஷ்

© 12-09-2013


[1] சில ஊடகங்கள் தாம் இவற்றைக் குறிப்புட்டுள்ளன, பிறகு இச்செய்திகள் நீக்கப்பட்டுள்ளன மற்றும் மாற்றப்பட்டுள்ளன.

[2] The incident took place in the Jansath area of Muzaffarnagar, 495 km from here, when a youth was caught harassing a girl. Her brother and his friend bashed up the alleged molestor and shot him dead, but were themselves lynched by a mob. Muzaffarnagar’s Senior Superintendent of Police (SSP) Manjil Saini told IANS that Sachin, a resident of Malakpura village was told by his sister hat a boy named Shahnawaz was harrasing her. Enraged at this, he, along with a friend, attacked Shahnawaz with a knife and later shot him. As the two tried to flee the crime scene, they were overpowered by the villagers and were beaten to death. With the news of the killings spreading in the area, people from both sides attacked each other and police reinforcements were rushed to the village.After great difficulty, police managed to take possession of the three dead bodies and bring the situation under control. The bodies have been sent for post-mortem while Provincial Armed Constabulary (PAC) personnel have been deployed in the village.

http://www.mid-day.com/news/2013/aug/280813-three-killed-in-up-after-girls-harassment.htm

[3] Tension prevails in Muzaffarnagar after clash [Last Updated: Wednesday, August 28, 2013, 13:38] Muzaffarnagar: Security has been tightened in Kawal village here where tension prevailed after three persons were killed over a minor dispute, police said here.  Security has been tightened and patrolling has been intensified as tension prevailed in the area. A posse of police have been deployed to maintain law and order, police said.  Three persons were killed over a minor dispute which broke out after two motorbikes had collided with each other at Kawal village yesterday. While victim Qureshi was allegedly stabbed to death by Gaurav and his friend Sachin (25), hearing his cries, locals later rushed to the spot and beat the duo to death. A case has already been registered in this regard. Meanwhile, in a major reshuffle, the Uttar Pradesh government has transferred 25 IPS officers, including Director Generals.  SSP Muzaffarnagar Manjil Saini has been transferred from the district and attached to the DG headquarters, an official spokesperson said today in Lucknow.

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (1)

செப்ரெம்பர் 12, 2013

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (1)

சாதாரண  “ஈவ்-டீசிங்”  சண்டையில்  (பெட்டி மேட்டர்)  இருவர்  /  மூவர்  கொல்லப்பட்டனர்  என்று  ஆங்கில  ஏடுகள்  விவரிக்கின்றன: ஒருபக்கம் பாலியல் பலாத்காரம் செய்தவனை தூக்கில் போடுங்கள் என்று பெண்கள் முழக்கம் இடுகிறார்கள், போராட்டம் நடத்துகிறார்கள். மறுபக்கம் இப்படி (அதாவது, முசபர்நகர் விசயத்தில்) “ஈவ்-டீசிங்” என்பது சாதாரண விசயம் என்கிறார்கள். ஆனால், எந்த பெண்ணியக்கமும், வீராங்கனைகளும், தேசிய பெண்கள் ஆணையம் முதலியன தூங்கிக் கொண்டிருக்கின்றன. ஒன்றும் புரியவில்லையே? தில்லியில், மும்பையில் நடந்தால் அத்தகைய பெரிய குற்றமாகிறது, ஆனால், முசபர்நகரில் நடந்தால் சாதாரணமாகி விடுகிறாதா? பிறகு மூவர் கொல்லப்படுவதும் சாதாரணமான விசயமா? படிப்பவர்களுக்கு புத்தியில்லையா அல்லது சொல்பவர்களுக்கு அறிவில்லையா? உண்மையினை, உண்மையாக சொல்வதற்கு ஊடகங்கள் ஏன் பாரபட்சம் காட்டுகின்றன?

முசபர்நகர்  கவரத்தில்  இரு  பெண்கள்  பலாத்காரம்  /  மானபங்கம்: பாதிக்கப்பட்ட பெண், ஏற்கெனவே மஞ்சில் சைனி என்ற பெண் போலீஸ் அதிகாரியிடம், ஒரு முஸ்லிம் இளைஞன் தன்னை தொந்தரவு செய்கிறான் என்று புகார் கொடுத்துள்ளாள், ஆனால், அந்த அதிகாரி எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை. சென்ற மாதம் துர்கா சக்தி நாக்பால் என்ற அதிகாரி, விசயமே இல்லாததற்கு பதவி நீக்கமே செய்யப் பட்டிருக்கிறார். அதாவது, முஸ்லிம் சம்ப்பந்தப் பட்டால், எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது, எடுத்தால் அக்கதிதான் ஏற்படும் என்று அறிவுருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு இளம் பெண் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்யப்படுகிறாள் எனும் போது, ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுதான் கேள்வி. மேலும் அச்சு-ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டாலும், டிவி-ஊடகங்கள் மௌனம் காத்தன. தில்லி-மும்பை போல ஆர்பாட்டம் செய்யவில்லை. எனெனில் இங்குள்ள பெண் விசயம் அவர்களுக்கு ஆகவில்லை அல்லது சம்பந்தப்பட்ட ஆண் முஸ்லிமாக இருக்கிறான் என்று அடங்கிவிட்டனர் என்றாகிறது. திருச்சி விசயத்திலும், முஸ்லிம் பெண்ணை கூட்டிச் சென்றவன், அவளது காதலன் மற்றும் அந்த காதலன் ஒரு முஸ்லிம் என்றதும், விசயத்தை அப்பட்டியே அமுக்கிவிட்டனர். தேசிய-பல்நாட்டு டிவி-ஊடகங்கள் கண்டுகொள்லவில்லை.

ஜாதிகலவரமா,  மதக்கலவரமா – இப்படி கேட்கிறார்கள்: வழக்கம் போல, மத்திய-மாநில அரசுகள், ஊடகங்கள் உண்மை நிலையை மறைக்க முயற்ச்சி செய்வது தெரிகிறது. தமிழ் ஊடகங்கள் உண்மை என்ன என்பது கூட அறியாமல், முசபர்நகரில் ஜாதி கலவரம் நடக்கின்றது[1] என்று செய்திகளை வெளியிட்டுள்ளனர். ஜாதி கலவரம் என்றால், ஏன் அகிலேஷ் முஸ்லிம் தொப்பிப் போட்டுக் கொண்டு அலைகிறார்? திடீரென்று அப்பா முல்லாயம் வந்து வக்காலத்து வாங்குகிறார்? ஆனால், வழக்கம் போல இந்துக்கள்-முஸ்லிம்கள் என்று குறிப்பிடாமல் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

சமூக  ஊடகங்களை  ஊக்குவித்து  வருபவர்கள்  அவற்றைக்  குற்றஞ்சாட்டுவது: உதாரணத்திற்கு, “தி ஹிந்து” எப்படி “சோசியல் மீடியா” துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதை இவ்விசயத்தில் பிரத்யேகமாக விளக்கியிருக்கிறது[2]. ஆனால், புத்தகயா குண்டுவெடிப்பின் போது அவ்வாறு செய்யவில்லை. இங்குதான் அந்த ஊடக பாரபட்சம் வெளிப்படுகிறது. என்.டி.டிவி-தி ஹிந்து, இவ்விசயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, தினமும் நிகழ்ச்சிகளே ஒளிபரப்பி வருகின்றன. ஆகவே, இவை அத்தகைய சார்புடைய கொள்கையைப் பின்பற்றுவது, வாசகர்களை ஏமாற்றுவதாகும். கீழ்கண்ட தலைப்புகளினின்றே, அது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை எதிர்க்கிறது மற்றும் ஆதரிக்கின்றது என்று தெரிகிறது. இது ஏன்?

New media presents scope for misuse: Tewari SEPTEMBER 10, 2013

Similarities in communal violence in Akhilesh regimeSEPTEMBER 11, 2013

FIR against several BJP leaders; death toll up to 33 SEPTEMBER 9, 2013

Where Sangh spins narratives of victimhood, belligerenceSEPTEMBER 11, 2013

Riot victims recount tales of terrorSEPTEMBER 9, 2013

MHA calls for more forces to be deployedSEPTEMBER 9, 2013

Manmohan calls up Akhilesh, conveys concernSEPTEMBER 9, 2013

SC declines to entertain plea on Muzaffarnagar riotSEPTEMBER 9, 2013

Mayawati sees SP-BJP conspiracySEPTEMBER 9, 2013

Centre offers to send more forces to Uttar PradeshSEPTEMBER 9, 2013

SP, BJP behind Muzaffarnagar violence: TiwariSEPTEMBER 9, 2013

Left parties accuse UP government of ‘lax’ attitudeSEPTEMBER 9, 2013

காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங்கே டுவிட்டரில் கண்டபடி பொய்களை பரப்பி வருகிறார், என்பது படிப்பவர்களுக்கு நன்றகவே தெரியும். ஆனால், இந்நேரத்தில் மணீஸ் திவாரி ““சோசியல் மீடியா” துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது” என்று சொல்கிறார் என்று “தி ஹிந்து” செய்தி போட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது[3]. பிறகு, இவர் ஏன் திக்விஜய் சிங்கைக் கட்டுப்படுத்துவது இல்லை? பெங்களூரு குண்டுவெடிப்பு பிஜேபிக்கு சாதகமாக இருக்கும் என்று அந்த காங்கிரஸ்-முஸ்லிம்-தலைவர்- முகமது ஷகீல் டுவிட்டரில் போட்டபோதும் கண்டுகொள்ளவில்லை. அப்படியென்றால், காங்கிரஸ் திட்டமிட்டே இப்படி செய்து வருகின்றது என்றாகிறது. ஊடகங்களும் அவ்வாறே இருக்கின்றன.

வேதபிரகாஷ்

© 12-09-2013