Archive for the ‘பெரியாரிஸம்’ Category
செப்ரெம்பர் 11, 2018
பாண்டி இலக்கிய விழாவும், தீடீர்–இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்! [2]

இந்துத்துவ எழுத்தாளர்கள், கவிஞர்கள் முதலியோரின் இரட்டை வேடங்கள்[1]: கவிதையின் பெயரில் இப்படியெல்லாம் இருக்கிறது, இலக்கிய விழா விற்பன்னர்கள் கண்டுகொள்ள வேண்டும்.
- காளமேகம், ஆறுமுக நாவலர் இருந்திருந்தால், இவன் / இது எல்லாம் இப்படி தமிழில் உளறி, நாறி, கும்பியைக் கொட்டியிருக்க முடியாது.
- இவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்ட இந்துத்துவ கவிக்கள், எழுத்தாளர்கள் எல்லாம் உண்டு, அவர்களை என்னென்பது. அடையாளம் கண்டு கொண்டால், அவர்களது பரஸ்பர விருப்பங்கள் தெரியவரும்.
- அதுகள் கொள்கைக்காக எப்பொழுதும் பாடுபடுகின்றன, ஆனால், புதுக்கவிக்கள் என்.டி.ஏ இல்லாதபோது இருந்திருக்காது, இருக்காது!
- பொதுவுடமை, சமத்துவம், சகோதரத்துவ சாராயத்தை அதுகளும்-இதுகளும் தாராளமாக குடித்து, ஆட்டம் போட்டுள்ளன-போடுகின்றன.
- புத்தகச் சந்தையில், அச்சு திருட்டில் கைக்கோர்த்து வியாபாரம் செய்யும், இருதலைகளுக்கு, இந்துத்துவம் தேவையில்லை[2].
- இடதுசாரி கூடுதல்கள் 70 சண்டுகளாக, தொடர்ந்து நடக்கும் வேளையில், வலதுசாரி குறிஞ்சி மலர்கள் பூக்காமலே இருந்திருக்கின்றனவே?
- தஞ்சை மண்ணெடுக்காமல், தாமிரவருணி நீரூற்றாமல், செய்யாத பொம்மைகள், இப்படி வலது-இடது அல்லது அது-இது-எது என்றாக இருக்குமா?
- புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளன என்று இந்துத்துவ செகுவேராக்களாக இதுகள் மாறிய-மாறுகின்ற மர்மம் என்னவோ?
- இந்துத்துவாவில் சிந்து பாடுவோம் அந்தத்துவாவில் அந்தர் பல்டி அடிப்போம் என்ற சித்த-பித்த-கவியாட்டங்கள் இப்படித்தான் இருக்குமா?
- அந்தத்துவாவை அதுகள் பேஸ்புக், டுவிட்டர்களிலிருந்து, புத்தக வெளியீடு, உள்நாட்டு-வெளிநாட்டு பார்ட்டிகள் வரை அறிந்து கொள்ளலாம்.
முன்பெல்லாம் தாசர்கள் என்றால் இப்பொழுதெல்லாம், தமிழச்சி, மனுஷன், மனுஷி, கோணங்கி, குஞ்சு என்றெல்லாம், வழக்கமாக இருப்பதோடு, இப்பொழுது மிருக வகைகளும் சேர்ந்துள்ளன.

இன்றைக்கு கவி எழுதுவதற்கு இலக்கணம் இருக்கிறதா, தேவையா?: இன்றைக்கு எவனும் கவிதை எழுதலாம், எந்த இலக்கணமும் இல்லை, வெங்காயமும் இல்லை, பணம், பரிந்துரை, ஆட்கள் இருந்தால் போதும்[3].
- ஒரு வரி எழுதி, அதனை வெட்டி வார்த்தைகளை நான்கு வரிகளில், ஆச்சரியகுறி, ஒற்றைப்புள்ளி, முதலியவற்றைப் போட்டால் புதுகவிதை என்கிறார்கள்.
- கடி ஜோக் போன்று, ஒப்புமைகளுடன் இரண்டு வரிகள் எழுதினால் கவிதை ஆகிவிடுகிறது.
- அரசை, அதிகாரத்தை, ஆளும் நபர்களை, தலைவகளை, சித்தாந்தங்களை எதிர்த்து எழுதினால் கவிதை ஆகிவிடுகிறது[4].
- இந்துமதம், இந்துக்கள், அவர்களது நம்பிக்கைகள் முதலியவற்றை கொச்சைப்படுத்தினால் செக்யூலரிஸ கவிஞனாகி விடுகிறான்[5].
- காஷ்மீர் தேசத்துரோக பயங்கரவாதிகளை, பாலஸ்தீன தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டு எழுதினால், அனைத்துலக கவிஞர் ஆகி விடுகிறான். உதாரணத்திற்கு, ஈரோடு தமிழன்பன் படித்த பாடல் வரிகளில் “அஜர் பைஜான் நெருப்பு அசோகச் சக்கரத்தையும் விசாரிக்கும்” என்றது நினைவில் இருக்க வேண்டும். ப.அறிவு மதி என்பவன், சொன்னது – “1947 ஆகஸ்டு 15 நள்ளிரவில் நாங்கள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தோம் அப்போது எங்கள் மீது ஒரு போர்வையைப் போர்த்திவிட்டனர் அது இந்தியத் தேசியக் கொடி என்ற போர்வை. விடிந்ததும் விழித்துப் பார்த்தோம் போர்வை இருந்தது. கோவணத்தைக் காணவில்லை. தூங்குபவனுக்குப் போர்வை முக்கியம். விழித்துக் கொண்டவனுக்குக் கோவணம் முக்கியம் வாருங்கள் தேசியக் கொடியைக் கிழிப்போம். அவரவர் கோவணத்தை அவரவர் கட்டிக் கொள்வோம்!”
இங்கும் இந்துத்துவ புலவர்க:ள், கவிஞர்கள் இல்லை போலும். ஆதரவாக, கவிதை மழை பொழிந்து, மேடைகளில் வலம் வருவதில்லை. சாகித்திய அகடெமி விருது போன்றவை வேண்டும் என்றால், பிஜேபி அமைச்சர், எம்.பி முதலியோரை தாஜா பிடித்து வாங்கிக் கொள்வதுடன் சரி.

மாதவிடாய் மூன்று நாட்களில் உங்கள் பெண்தெய்வங்கள் எங்கு போயிருந்தன?: இப்படி ஒருவன், கார்ட்டூன் போடுகிறான். பெண்களின் மாதவிடாய், இந்து பெண்கடவுள் முதலியவற்றை தூஷித்தால், பெரிய புரட்சி கவிஞன் ஆகிவிடுகிறான். இவற்றையெல்லாம் சேர்த்து செய்தால், சாகித்திய அகடமி பரிசுக்கு பரிந்துரைக்கப் படுகிறான். அதற்கும், இந்துத்துவவாதிகள், அரசியல்வாதிகள், துணைபோகிறார்கள். இரண்டு அரைவேக்காடு இந்துத்துவ ஆட்களுக்கு பரிசு கொடுக்க வேண்டுமானால், அதற்கு சமரசம் செய்து கொண்டு எட்டு இந்துவிரோதிகளுக்கு பரிசு கொடுக்கப் படுகிறது[6]. இவ்விதத்தில் தான், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய விற்ப்பனர்கள், விமர்சகர்கள் உண்டாக்கப் படுகின்றனர். ஆனால், திராணியற்ற இந்த்துவவாதி, சித்தாந்த பற்றோடு, அவனுடன் மோதுவதில்லை, பதிலுக்கு கார்ட்டூன் போட்டு, தனது எண்ணவுரிமை, சிந்தனா வெளிப்பாட்டு உரிமை முதலியவற்றை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அதாவது, இந்துத்துவ கார்ட்டூனிஸ்ட் என்று எவனும் இல்லை போலிருக்கிறது. பேஸ்புக்கில், அவரவர் மேடைகளில், கூடுதல்களில் மட்டும் வீராப்புக் காட்டிக் கொன்டிருப்பர். சரி, ராஷ்ட்ரீய்ய சேவிகா சமிதி போன்ற பெண்கள் அமைப்பு இருந்தாலும், அவர்களில் பெண்ணுருமை பேசும் அளவுக்கு யாரும் இல்லை என்றே தெரிகிறது. வானதி சீனிவாசன், தமிழ் டிவி செனல்களில் வந்து செல்கிறார். மற்ற படி, பெண்கள் உரிமைகள் போன்ற விசயங்களில் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை[7].

முடிவுரை – இலக்கிய விழா ஏற்பாடு செய்தவர்களின் கவனத்திற்கு: இதைப் பற்றி கிடைக்கும் அனைத்து செய்திகள், வீடியோக்கள் எல்லாம் படித்து, கேட்டு, கீழ்கண்ட விசயங்கள் கவனத்திற்கு வைக்கப் படுகின்றன:
- பாண்டி இலக்கிய விழாவில் இந்துத்துவவாதிகள்377 பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது அவர்களின் சார்பினை தீர்ப்பிற்கு முன்னரே வெளியிட்ட போக்கைக் காட்டுகிறது.
- சரித்திரத்தை ஏன் மறுபடியும் எழுத வேண்டும் பற்றி பேசியவர்கள்,விசயத்தை நேரிடையாக சொல்லாமல், சுற்றி மூக்கைத் தொட வேண்டிய அவசியம் இல்லை.
- ரோமிலா தாபர், பிபன் சந்திரா, சதிஸ் சந்திரா போன்றோர் எழுதிய சரித்திரத்தைப் படிக்கிறோ, அது சரியில்லை என்றால், அந்த மேடையில் எதிர்த்திருக்க வேண்டும்.
- பலமுறை எடுத்துக் காட்டியபடி IHC, SIHC, TNHC முதலிய மாநாட்டுகளுக்கு வராமல், அவர்களுடன் சேர்ந்து விசயத்தைப் புரிந்து கொள்ளாமல், தனியாக உட்கார்ந்து அவர்களை குறை கூறிக் கொண்டிருந்தால் எந்த பிரயோஜனமும் இல்லை.
- சரித்திரம், வரலாற்றுவரைவியல், வரலாற்றுவரைவியல் சித்தாந்தம், கோட்பாடுகள், ஆராய்ச்சி நெறிமுறைகள் முதலியவற்றை அறியாமல் பேசிகொண்டே இருந்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை.
- 1987ல் நாங்கள் பேசியதைத் தான், இவர்கள் இன்றும் பேசிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களோ, திறமை, கடின உழைப்பினால் எங்கோ சென்று விட்டனர். அப்பொழுது ஶ்ரீராம் சாத்தே என்பவர் வழிநடத்தி வந்தார்.
- பெண்களை எவ்வாறு அதிகாரம் கொண்டவர்களாக மாற்ற வேண்டும் என்று பேசியவர் பரவாயில்லை ஆனால், அவர்களுடன் [எதிர்சித்தாந்தவாதிகளுடன்] விவாதிக்க வேண்டும்.
- சுகி.சிவத்தை விமர்சித்தால் போறாது, அத்தகைய சிறந்த பேச்சாளரை உருவாக்க வேண்டும், அது போலத்தான் ரோமிலா தாபர், பிபன் சந்திரா, சதிஸ் சந்திரா முதலியோர் போல உருவாக்க வேண்டும்.
- நான்கு பேர் சேர்ந்து கொண்டு, 50 பேர் முன்னால் பேசி, கைதட்டி, பெருமை பேசிக் கொண்டால், பொதுமக்களிடம் விசயம் சென்று சேராது.
- அரைகுறை, அரைவேக்காட்டுத் தனமாக, ஆத்திரத்துடன் செய்வதால் தான் “காவிமயமாக்கம்” போன்ற சிக்கலில் மாட்டிக் கொள்வது.
© வேதபிரகாஷ்
09-09-2018

[1] இத்தகைய இந்துத்துவவாதிகள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆதங்கத்தில், நல்ல எண்ணத்தில், சுயபரிசீலினை செய்து கொள்ள, கவனமாக பிரச்சினையை அலசி பஹிவு செய்யப்பட்டுள்ளது.
[2] அங்கெல்லாம் தமது இந்துத்துவத்தை மறைத்துக் கொள்வதோடு, வலதுசாரித்துவத்தையும் நீர்த்து உறவாடுகின்ரனர், வியாபாரம் செய்கின்றனர் என்பதனை கவனிக்கலாம்.
[3] விளையாட்டு, சினிமா போன்றவற்றில் உயர்மட்ட ஊழலைப் போல, இதில் இருக்கும் ஊழலை யாரும் கண்டுன்கொள்வ்ச்தில்லை ஏனெனில், பரஸ்பர பலன்கள், தங்களுடைய யோக்கிய அடையாளங்கள் முதலியவற்றை கெடுத்துக் கொள்ள பலன் பெற்றவர்கள் மறைத்து வருகின்றனர்.
[4] இப்பொழுது மோடி ஆதரவு, எதிர்ப்பு என்ற ரீதியில் கண்டு கொள்ளலாம், 2014ற்கு முன்பாக ஒன்றாக இருந்தனர். பிஜேபியை எதிர்த்தவர்கள், இப்பொழுது பிஜேபியில் இருப்பது போல.
[5] எல்லா இந்து-விரோதிகளும், இந்த வழிமுறையினைத் தான் பின்பற்றி வருகின்றனர். சுலபமாக பிரபலம் அடைகின்றனர். பரிச்களையும் பெறுகின்றனர்.
[6] ஆளும் கட்சி, கூட்டணி கடிகள், எதிர் கட்சிகள் என்று எல்லோருக்கும் இத்தகைய பரிசுகள், விருதுகள், சலுகைகள், நியமனங்கள் பிரித்துக் கொடுக்கப் படுகின்றன என்பது அறிந்த விசயமே.
[7] இத்தனை பெரிய இயக்கம், எல்லா அதிகாரங்கள், வசதிகள் கொண்டிருந்தாலும், பெண் சித்தாந்த அறிவுஜீவிகளை உருவாக்காமல் இருப்பது விசித்திரமாக இருக்கிறது.
குறிச்சொற்கள்:ஆரியன், இடதுசாரி, இலக்கிய விழா, கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், கவிதை, திராவிடன், நக்சலைட், நக்ஸலைட், பாண்டி லிட்பெஸ்ட், பாண்டிச்சேரி, புதுச்சேரி, புதுச்சேரி இலக்கிய விழா, புலமை, மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட், வலதுசாரி, வலதுசாரி அடிப்படை மதகும்பல்
அரசியல், அரசியல் அனாதை, அரவிந்த, அரவிந்த ஆசிரமம், அரவிந்தர், ஆரியன், ஆர்.எஸ்.எஸ், இடதுசாரி, இட்டுக்கதை, இந்திய வரலாற்றுப் பேரவை, இந்திய விரோதி, இந்து மக்களின் உரிமைகள், இந்து ராம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், திராவிடம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், நக்சலைட், நக்ஸலைட், நாத்திகம், பரிவார், பாசிஸம், பாஜக, பாண்டி லிட் பெஸ்ட், பாண்டி லிட்பெஸ்ட், பாண்டிச்சேரி, பிஜேபி, பிரச்சார ஆதரவு, பிரச்சாரம், புதுச்சேரி, புதுச்சேரி இலக்கிய விழா, புதுவை, பெரியாரத்துவம், பெரியாரிசம், பெரியாரிஸம், பெரியார், பேச்சாற்றல், பேச்சுத் திறமை, பேச்சுரிமை, பேஸ்புக், மார்க்சிஸம், மார்க்சிஸ்ட், முகத்திரை, மேடை பேச்சு, மோடி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
பிப்ரவரி 27, 2018
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்– ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (3)

பார்வையாளர் கூட்டம்……………………………………..

மதிய உணவு நேரம்………………………..

பரிமாறும் மாணவியர்………………………….
கருத்து சுதந்திரம் எப்படி மற்ற மதவிசயங்களில் சுருங்கி விடுகிறது: உதாரணத்திற்கு, இதையும் எடுத்துக் கொள்ளலாம். இந்துமதத்தைப் பற்றி குதர்க்கமாக பல கேள்விகளைக் கேட்பார்கள். கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் அடிமனத்தில் ஊறியிருப்பதன் வெளிப்பாடுதான், அத்தகைய குதர்க்கமான கேள்விகளுக்கு ஊற்றாக இருந்து வருகிறது. கருத்து சுதந்திரம் எப்படி மற்ற மதவிசயங்களில் சுருங்கி விடுகிறது என்று செக்யூலரிஸ மேதைகள் விளக்குவதில்லை. குறிப்பிட்ட கூட்டங்கள், சித்தாந்திகள், அமைப்புகள் மட்டும் என்னவேண்டுமானாலும் கூறலாம், எழுதலாம் ஆனால், மற்றவர்கள் செய்யக் கூடாது என்றால் ஒருநிலையில் அத்தகைய பாரபட்சம் வெளிப்பட்டு விடுகிறது. இந்திய குடிமகன்களுக்கு எல்லோருக்கும் தான் கருத்து சுதந்திரம் இருக்கிறது, ஆனால், அவ்வாறு நினைப்பதோ பேசுவதோ, எழுதுவதோ அனுமதிக்கப் படுவதில்லையே? நினைப்பு-சுதந்திரம், பேச்சு-சுதந்திரம், எழுத்து-சுதந்திரம் முதலியவை ஏன் எல்லா இந்தியர்களுக்கும் அமூல் படுத்துவதில்லை என்றும் விளக்கப்படுவதில்லை. கடந்த ஆண்டுகளில் –
- ஷா பானு வழக்கு,
- சிவில் கோட் முஸ்லிம்களுக்கு செல்லாது,
- சல்மான் ருஷ்டியின் புத்தகம் தடை,
- உஸைன் சித்திரங்கள்,
- பொது சிவில் சட்டம் உச்சநீதி மன்ற தீர்ப்பு,
- தேசிய கீதம் பாடுவது,
- அதற்கு மரியாதை கொடுப்பது,
- மறுப்பது (ஜெஹோவா விட்னெசஸ்)
என்ற பல விசயங்களில் முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களுக்கு சாதகமகத்தான் அரசு இருந்திருக்கிறது. ஆனால், இந்துக்கள் விசயங்கள் வரும்போது, அவர்களுக்கு எதிராக செயல்பட்டதும் மக்கள் உணர்ந்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் இவ்விசயங்கள் அலசப்பட்டு வருவதால், இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப் பட்டு வருகிறார்கள் என்ற எண்ணம் உருவாகியுள்ளது.

Marx, Lenin, Mao- trinity of Communism
சித்தாந்தங்களை, சித்தாந்த ரீதியில் எதிர்ப்பது எப்படி?: குறிப்பாக நாத்திக-கம்யூனிஸ வாதங்களை எதிர்ப்பது என்பதை பார்ப்போம்:
- “இருக்கிறது” மற்றும் “இல்லை” என்ற இரண்டும் நம்பிக்கைகள் தாம். எந்த நம்பிக்கை மூலம் மனிதர்கள் சிறந்தார்கள் என்பது தான் நிதர்சனம்.
- நாத்திகம் என்பது பெரும்பாலும் பொய்யை அடிப்படையாகக் கொண்ட சித்தாந்தம், ஏனெனில், இல்லை என்று கூறுவது சுலபம்!
- “பொதுவுடமை” சித்தாந்தத்தில், எல்லாமே “வேண்டாம்” அல்லது “பொது” என்றபோது, சொத்து, குடும்பம் முதலியவை இடித்தன!
- குடும்பம் இருந்தால் சொத்து இருக்கும் எனும்போது, இல்லாத நிலை உருவாக்க, மனைவியை – பெற்றப் பிள்ளைகளை பொதுவாக்க முடியாது.
- பொதுவுடமை சித்தாந்தத்தில் அச்சடித்த, உருவங்களைப் போல, எல்லோரையும் ஒரே மாதிரி உருவாக்க முடியாது, இருப்பவற்றை பங்கு போட முடியாது!
- நாத்திக-பொதுவுடமை-மற்றத் தலைவர்கள், ஒன்றாக இல்லை, பதவி-அந்தஸ்து-பணம் முதலிய அடுக்குகளில் உயர்ந்து-தாழ்ந்து தான் இருக்கிறார்கள்!
- சித்தாந்திகளின் உயர்ந்த-தாழ்ந்த அடுக்குகளில், தலைவர்களுக்கு கீழுள்ளவர்கள் / தொண்டர்கள் / சேவகர்கள் – சூத்திரர்கள் தாம்!
- சமத்துவ-சகோதரத்துவங்களில் எல்லோருமே தலைவர்கள், தீர்க்கதரிசிகள், நபிகள் ஆகிவிட்டால், யார் வேலை செய்வார்கள்?
- என் தாய், என் தந்தை, என் மனைவி, என் குழந்தை என்றில்லாமல், வேறு மாதிரி சமத்துவ-சகோதரத்துவ-பொதுவுடமைவாதிகள் கூற முடியுமா?
- சம-பொது நீதி, நிலையில் நீதிபதி, நீதிமன்றங்கள் கூடாது, ஆனால், சித்தாந்த நாடுகளில் உள்ளது உயர்ந்த-தாழ்ந்த அடுக்குகளை வெளிப்படுத்துகின்றன.

வகுப்புகள் போன்று நடத்தி பயிற்சி அளிக்க வேண்டும்: கடந்த 60-70 ஆண்டுகால சரித்திரம், அரசியல் கூட்டணிகள், சித்தாந்தங்கள், இவற்றைப் பற்றி, அறிந்தவர்களை வைத்து வகுப்புகள் போன்று நடத்தி பயிற்சி அளிக்க வேண்டும். இது வாரத்தில் ஓரிரு நாட்கள் [சனி-ஞாயிறு] அல்லது மாதத்தில் ஒரு முறையாவது இருக்க வேண்டும். உணர்ச்சி பூர்வமான கோஷங்கள், பேச்சுகள், அறைத்த மாவையே அறைக்கும் போன்ற விசயங்கள் உதவாது.
- கடந்த 60-70 ஆண்டுகால சரித்திர நிகழ்வுகள் பற்றி நிச்சயமாக தெரிந்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
- அரசியல் நிர்ணய சட்டம், அச்சட்டம் உருவாகிய நிலையில், பாராளுமன்றத்தில் நடந்த விவாதங்கள், எவ்வாறு ஒவ்வொரு சரத்து ஏற்படுத்தப் பட்டு, சேர்க்கப்பட்டது போன்ற விவரங்கள் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.
- ஏபிவிபிஐப் பொறுத்த வரையில், இந்துத்துவம், கலாச்சார தேசியம் போன்ற விசயங்களை மையப் படுத்தி செயல்படுவதால், அவற்றை எதிர்க்கும் வாத-விவாதங்கள் பற்றி அதிகமாகவே தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
- அதற்கு, அரசியல் நிர்ணய சட்டப் பிரிவுகள், உச்சநீதி மன்ற தீர்ப்புகள், 60-70 ஆண்டுகால அவற்றுடன் சம்பந்தப்பட்ட சரித்திர நிகழ்வுகள் முதலியவை தெரிந்திருந்தால் தான், உதாரணங்களாக எடுத்துக் காட்டி பேச முடியும்.
- குறிப்பாக செக்யூலரிஸம், எண்ண உரிமை, கருத்துரிமை, பேச்சுரிமை, சகிப்புத் தன்மை, பெண்கள்-சிறார் உரிமைகள், சட்டமீறல்கள் முதலியவற்றைப் பற்றிய விவரங்களை எடுத்துக் காட்ட வேண்டும். ஆகவே, இவற்றைப் பற்றி தெரிந்து கொண்டவர்களை வைத்து வகுப்புகள் நடத்தப் பட வேண்டும்.
- ஒப்புக் கொண்டு போகும், சமரச, செய்து கொள்ளும், போக்குள்ளவர்களை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்யமுடியாது.

சித்தாந்தம், சித்தாந்திகளை முறையாக எதிர்கொள்வது எப்படி?: வலதுசாரி மாணவ-மாணவியர் குழுமங்கள் நெருங்கி வர ஆவண செய்ய வேண்டும். அவர்கள் மற்றவர்களின் மாநாடுகள், கருத்தரங்கங்கள், பட்டறைகள், முதலியவற்றில் பங்கு கொண்டு, அவர்களது அணுகுமுறை, வாத-விவாத திறமை, பேச்சுத் திறன், முதலியவற்றை அறிந்து கொள்ளவேண்டும். இடதுசாரி குழுமங்கள் பலவித முரண்பாடுகள் முதலியவற்றுடன், கடந்த 70 ஆண்டுகளாக ஒன்றாக செயல்பட்டு, வலதுசாரிகளை எதிர்த்து வருகின்றன. செக்யூலரிஸம் பேசினாலும், அடிப்படைவாதிகள், மதவாதிகள், தீவிர சித்தாந்தவாதிகள், மறைப்பு- சித்தாந்தவாதிகள், என்று பலவித மாறுபட்ட, எதிர்-துருவ கோஷ்டிகள் ஒன்று சேர்ந்து தாக்குவதை கவனிக்கலாம். அந்நிலையில், இந்துத்துவத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது. வழக்கம் போல, நாத்திகவாதிகள், சந்தேகவாதிகள், பிரக்ருதிவாதிகள், என்று பற்பல முகமூடிகளில், போர்வைகளில் அவர்கள் வேலை செய்து கொண்டுதான் இருப்பார்கள். கருத்துவாக்கும், தீர்மானம் எடுக்கும் அந்தஸ்து, அதிகாரங்களில் உள்ளவர்களை, சித்தாந்த ரீதியில், ஒன்றுபடுத்த வேண்டும்.
© வேதபிரகாஷ்
27-02-2018

குறிச்சொற்கள்:அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்துத்துவம், இந்துத்துவா, ஏபிவிபி, கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்தம், செக்யூலரிஸம், நாட்டுப் பற்று, நாட்டுப்பற்று, நாத்திகம்
அதிகாரம், அத்தாட்சி, அம்பேத்கர், அரசியல், அரசியல் ஆதரவு, அரசியல் விமர்சனம், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், கருத்து, கருத்து சுதந்திரம், கருத்துரிமை, சாதியம், தேசிய கீதம், தேசிய மாணவர் அமைப்பு, பெரியாரத்துவம், பெரியாரிசம், பெரியாரிஸம், மதவெறி, மதவெறி அரசியல், முத்துராம லிங்கம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
திசெம்பர் 17, 2017
“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது? (2)

கல்பாக்கம் அருகே ஆளுநருக்கு பாதுகாப்புக்கு வந்த வாகனம் மோதி விபத்து: சிறுவன் உட்பட 3 பேர் பலி, போலீஸாரும் காயம்: இப்படி தலைப்பிட்டு, “தி இந்து” செய்தி வெளியிட்டுள்ளது. “இதற்கிடையே ஆளுநர் சென்னைக்கு கிழக்குக்கடற்கரை சாலை வழியாக திரும்பினார். அவருக்கு பாதுகாப்பு அளிக்க காஞ்சிபுரத்திலிருந்து சென்ற பொலிரோ ஜீப் வாகனம் பின்னர் கோவளம் வரை பாதுகாப்புக்கு வந்து விட்டு பின்னர் காஞ்சிபுரம் திரும்பியது”. அதாவது அந்த பணி முடிந்து விட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் பேரூர் திருப்போரூர் சாலை வழியாக கிழக்கு கடற்கரை அருகே வந்துக்கொண்டிருந்தது. மாலை 4 மணி அளவில் புதிய கல்பாக்கம் பேருந்து நிலையம் அருகே டிவிஎஸ் எக்செல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மோதியது. ஆக, இதற்கும், அதற்கும் என்ன சம்பந்தம் என்று நிருபருக்குத் தெரியவில்லையா? இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற திருப்போரூர், திருவஞ்சாவடியைச்சேர்ந்த சேர்ந்த சுரேஷ் (30) என்பவரும் அவருடன் பயணித்த நரேஷ்குமார் என்பவரின் மகன் கார்திக் (11) இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்[1]. அவர்கள் மீது மோதிய பொலீரோ காவல் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்த கெளசல்யா (70) என்ற மூதாட்டி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். இதில் சிகிச்சை பலனளிக்காமல் அவரும் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 3 ஆனது. இந்த விபத்தில் பொலீரோ போலீஸ் பாதுகாப்பு வாகனத்தில் இருந்த ஆய்வாளர் கண்ணபிரான் மற்றும் மூன்று காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டது. போலீஸ் வாகனம் கட்டுப்பாடில்லாமல் அதிக வேகத்தில் வந்ததே விபத்துக்கு காரணம் என அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[2]. பிறகு, இதில் கவர்னரை இழுக்க வேண்டிய அவசியம் என்ன என்பதனைக் கவனிக்க வேண்டும். ஊடகக்காரர்கள், முன்கூட்டியே, ஏதோ தீர்மானமாக இப்படித்தான் எழுத வேண்டும் என்ற முடிவோடு எழுதி, செய்திகளாக வெளியிடும் போக்கு தான் இதில் காணப்படுகிறது. இதற்கு, கீழ்கண்ட பொய்யானது-கற்பனையானது-தமாஷுக்கு எழுதியது என்பதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது?

கற்பனை செய்தியின் வர்ணனை– கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் எதிர்ப்பையும் மீறி ஆய்வு நடத்த ஆளுநர் பன்வாரிலால்[3]: கடலூர் வண்டிபாளையத்தில் ஆய்வு நடத்த வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கீற்று மறைப்புக்குள் இளம் பெண் ஒருவர் குளித்ததையும் பார்த்ததாக பகீர் புகார் எழுந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தமிழகத்தின் முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் கடந்த அக்டோபர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவை மற்றும் திருப்பூரில் ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆளுநர் துப்புரவு பணியையும் மேற்கொண்டார். ஆளுநர் மூலம் தமிழகத்தில் ஆட்சி நடத்த மத்திய அரசு முயற்சிப்பதாகவும், இது மாநில சுயாட்சிக்கு எதிரான செயல் என்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எனினும் தனது ஆய்வுகள் தொடரும் என்று ஆளுநர் கூறியிருந்தார். கடலூரில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ள வரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திமுக சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு, கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை அழைப்பு விடுத்தார். எதிர்ப்பையும் மீறி கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையத்தில் இன்று ஆய்வு நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்றார். அப்போது அம்பேத்கர் நகரில் உள்ள கழிவறைகளை ஆய்வு செய்துக் கொண்டிருந்தார்[4].

கற்பனை செய்தியின் வர்ணனை– நடப்பது பாஜக ஆட்சி, அதனால் கிருஷ்னர் முறையைக் கையேண்டேன்[5]: அந்த நேரம் அங்கிருந்த கீற்று மறைப்பை ஆளுநர் திறந்து பார்த்தார். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் ஆளுநரை பார்த்து அலறினார். இந்த பெண்ணின் சப்தம் கேட்டு அங்கு கூடிய ஊர்மக்கள், ஆளுநரை சுற்றி வளைத்தனர். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் ஊர்பொதுமக்களிடம் இருந்து ஆளுநரை பத்திரமாக மீட்டனர். இளம்பெண் குளித்ததை நேரில் பார்த்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர்மக்கள் கூறியதால் போலீஸார் செய்வதறியாது திகைத்துள்ளனர். இது குறித்து பன்வாரிலால் புரோகித் பிச்சுப் போட்ட இந்தியிலும் தமிழிலும் அளித்த பேட்டி: “நடப்பது பாஜக ஆட்சி, அதிமுக ஆட்சியல்ல. பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் யமுனை ஆற்றங்கரையில் குளித்திருந்த பெண்களின் ஆடைகளை களவாடினார் நானும் அதே போல ட்ரை பண்ணினேன். என்னை டம்மி ஆக்க கிளம்பிவிட்டது ஒரு கூட்டம். நான் நினைத்தால் எதை வேண்டுமாலும் செய்யமுடியும். மோடி மாதிரி பிரியங்கா சோப்ரா, கரீனா கபூர், கௌதமி என்று வேற லெவெல் போக முடியும். கொட்டாயில் இருக்கும் பெண்ணை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. காலையில்தான், திமுக , சிறுத்தைகள் எதிர்ப்பு போராட்டம்னு படிச்சேன். இப்போ தெரிந்து போயிற்று. அவங்க போய் பார்க்கறதுக்கு முன்னாடி கவர்னரான நான் எப்படி போகலாம் என்ற பொறாமை தான்[6].

கற்பனை செய்தியின் வர்ணனை– கண்னைத் துடைத்துக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால்[7]: தமிழச்சி குளிப்பதை தமிழன் மட்டுமே பார்க்கலாம் என்ற கோவம் போல. ஆட்சிக்கும், தமிழன் ஆளவேண்டியதை எப்படி பாஜக இந்திக்காரன் ஆளலாம் என்று இதே கதைதானே விடறாங்க. கோப்போடு ஆய்வு செய்யும் ஆளுனர்கள் நடுவே, சோப்போடு ஆய்வு செய்யும் வித்தியாசமான ஆளுனர். நானாக்கும். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பாக்கதான் நான் போனேன். இத புரிஞ்சுக்காம கிண்டலா பண்றீங்க. இது கையாலாகாத எதிர்க்கட்சியின் திட்டமிட்ட சதியாக இருக்கலாம். நீங்க ஒழுங்கா அரசியலும் மக்களுக்கு நல்லதும் பண்ணா எதுக்குடா நான் வந்து உங்க வேலையை பார்க்கணும். நான் என்ன கருணாவை. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடா. நல்ல இருக்கவே மாடீங்கடா.” என்று மோடி போலவே கண்ணீர் சிந்தி சால்வையால் துடைத்துக் கொண்டார்[8].

இந்துக்கள் எளிமையான தாக்குதல் இலக்கில் உள்ளனர், தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்: ஆக இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, கவர்னர் மீது தாக்குதல், தூஷணம் என்பது, பிஜேபி தாக்கதல் ஆகி, மோடியில் வந்து முடிந்துள்ளது. கிருஷ்ணர் என்று ஆரம்பித்து, இந்து தாக்குதலில் முடிந்துள்ளது. எனவே, அந்த அமானுஷ்யன், “அ. சையது அபுதாஹிர்” முதலியோரது மனம், மனத்தின் வெளிப்பாடு, முதலியவையும் நன்றாக புரிய வைக்கின்றன. உண்மையான செக்யூலரிஸவாதியாக இருந்தால், கற்பனையிலும் பொய்யான உதாரணங்கள் வராது, நிதர்சனத்தில் ஆபாச-நக்கல் இருக்காது, மததுவேசத்தில் வெளிப்படும் தூஷணங்கள் இருக்காது, …ஆனால், இவையெல்லாம் சேர்ந்திருப்பதால், இந்துக்கள் எளிமையான தாக்குதல் இலக்கில் உள்ளனர், தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர், பலவிதங்களில் கொடுமைகளுக்கு [வீடுகளில் நகை திருட்டு, தெருக்களில் தாலி / செயின் அறுப்பு, பேஸ்புக் காதல், பாலியல் வக்கிரங்கள் முதலியன] உள்ளாகி வருகின்றனர் என்பது உண்மையாகிறது.
© வேதபிரகாஷ்
16-12-2017

[1] தி.இந்து, கல்பாக்கம் அருகே ஆளுநருக்கு பாதுகாப்புக்கு வந்த வாகனம் மோதி விபத்து: சிறுவன் உட்பட 3 பேர் பலி, போலீஸாரும் காயம்,, Published : 15 Dec 2017 21:24 IST; Updated : 15 Dec 2017 21:24 IST.
[2] http://tamil.thehindu.com/tamilnadu/article21715911.ece
[3] உங்கள்.நியூஸ், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பார்க்கவே எட்டிப் பார்த்தேன் – பன்வாரிலால் வாக்குமூலம், செய்தியாளர்: அமானுஷ்யன், December 15, 2017.
[4] http://www.ungalnews.com/2017/12/15/governor-in-controversy/
[5] உங்கள்.நியூஸ், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பார்க்கவே எட்டிப் பார்த்தேன் – பன்வாரிலால் வாக்குமூலம், செய்தியாளர்: அமானுஷ்யன், December 15, 2017.
[6] http://www.ungalnews.com/2017/12/15/governor-in-controversy/
[7] உங்கள்.நியூஸ், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பார்க்கவே எட்டிப் பார்த்தேன் – பன்வாரிலால் வாக்குமூலம், செய்தியாளர்: அமானுஷ்யன், December 15, 2017.
[8] http://www.ungalnews.com/2017/12/15/governor-in-controversy/
குறிச்சொற்கள்:ஆர்.எஸ்.எஸ், ஆர்பாட்டம், கக்கூஸ், கவர்னர், குளிப்பது பார்ப்பது, குளியலறை, குளியல், சுப வீரபாண்டியன், திக, தூய்மை, தூய்மை இந்தியா, பன்வாரிலால், பாத்ரூம், புரோகித், பெண் குளிப்பது, ஸ்வச்ச பாரத்
ஆதரவு, ஆதாரம், இந்திய விரோதி, இந்து, இந்து மக்களின் உரிமைகள், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், இலக்கு, உரிமை, ஊடகங்களின் மறைப்பு முறை, எச். ராஜா, எண்ணம், எண்ணவுரிமை, எதிர் இந்து, எதிர்-இந்துத்துவம், எதிர்ப்பு, எழுத்துரிமை, கக்கூஸ், கருத்துரிமை, குளிப்பது, குளிப்பதை பார்த்தல், குளியலறை, செக்யூலரிசம், திராவிடத்துவம், தூய்மை இந்தியா, தூஷணம், தூஷித்தல், பாத்ரூம், புரோகித், பெரியாரத்துவம், பெரியாரிசம், பெரியாரிஸம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜூலை 26, 2016
சுவாமி விவேகானந்தரை, கருணாநிதி–வீரமணி போன்றோர் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்?

8வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி (ஆகஸ்ட்.2-8, 2016): இந்து ஆன்மிக சேவை மையம் சார்பில் சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் வரும் ஆகஸ்ட் 2 முதல் 8-ம் தேதி வரை இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடக்க உள்ளது. இதற்காக விழிப்புணர்வு, பிரச்சாரம், அறிவித்தல் என்ற ரீதியில் “கிருஷ்ண யோகதான்”, “பாரதீய கானதான்” என்று ஆயிரக்கணக்கில் மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இதற்கு முன்னோட்டமாக சுவாமி விவேகானந்தர் சிலைகளுடன் 25 ரதங்கள் சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் உள்ள 1,000-க்கும் அதிகமான பள்ளிகளுக்கு செல்ல இருக்கின்றன. இந்த ரதயாத்திரை மயிலாப்பூரில் 24-07-2016 சனிக்கிழமை அன்று தொடங்கியது. ஆனால், வழக்கம் போல திக வீரமணியிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.
தமிழக ஆன்மீகமும், நாத்திகமும்: தமிழகத்தைப் பொறுத்த வரையில் திராவிட சித்தாந்தம் வளர்ந்த பிறகு, தமிழர்கள் அதிகமாகவே குழம்பி போனார்கள். “நாங்கள் இந்துக்கள் அல்ல” என்றளவில் கூட, தமிழ் பித்து பிடித்த கூட்டங்கள் கூற ஆரம்பித்தன. ஆனால், சுயமரியாதை திருமணங்கள் அசிங்கமானவுடன், “இந்து திருமண சட்டத்தில்”, மரியாதை பெற்றன. 1980கள் வரை இவர்களது ஆட்டம் அதிகமாகவே இருந்தது. எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனப் பிறகு, அடங்க ஆரம்பித்தது. 1990களில் “அறிவு சார்ந்த ஞானம்” பரவ ஆரம்பித்தபோது, இளைஞர்களுக்கு, இவர்களின் போலித்தனம் புரிய ஆரம்பித்தது. 2000களில் கணினி மூலம் அத்தகைய ஞானம் பரவ ஆரம்பித்த போது, படித்த இளைஞர்கள் (ஜாதி, மதம், நாடு முதலிய வேறுபாடுகள் இன்றி) உண்மையினை அறிய ஆரம்பித்தனர். 2010களில் சித்தாந்த திரிபுவாதங்களையும் இளைஞர்கள் அடையாளங்கண்டு கொண்டார்கள். யோகா உலகம் முழுவதும் பின்பற்றப் படுகிறது. இந்து தத்துவம், முதலிய கொள்கைகள் பாராட்டப் படுகின்றன, போன்ற உண்மைகள் இவர்களை கலக்க ஆரம்பித்தது. இப்பொழுது 10,000 முதல் 11,000 மாணவ-மாணவியர் சேர்ந்து யோகா செய்கின்றனர், மொழி வித்தியாசம் இல்லாமல் பாட்டுப் பாடுகின்றனர் என்று செய்திகள் குறைவாகவே வந்தாலும், தாக்கம் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரத யாத்திரை செல்வதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது[1]:
இந்துவிரோத நாத்திக வீரமணியின் புலம்பல்: “இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக மயிலாப்பூரில் விவேகானந்தர் ரத பூஜையுடன் 25 ரதங்களுக்கு சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. சென்னையிலிருந்து நேற்று இரவு 9 மணிக்கு புறப்பட்ட 25 ரதங்களும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 1000க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளுக்குச் செல்லுகின்றன என்ற செய்தி வந்துள்ளது. இந்து மதத்தை அமெரிக்காவரை சென்று பரப்பியவர் என்று புகழப்படுபவர் விவேகானந்தர்.
- இப்பொழுது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியோடு சம்பந்தப்படுத்தி விவேகானந்தர் ரதங்கள் பள்ளிகளுக்குச் செல்லுவது என்பது அனுமதிக்கத் தகுந்தது தானா?
- ஏற்கத் தகுந்ததுதானா?
- மாணவர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட மதச் சிந்தனையை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமா?
- இந்துத்துவா பெயரில் நாட்டில் ஆங்காங்கே மதக் கலவரங்களை விசிறி விட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், மாணவர்கள் மத்தியிலும் இத்தகைய சிந்தனைகளைத் தூண்டுவது ஆபத்தான செயல் அல்லவா?
- மத்திய பிஜேபி என்னும் இந்துத்துவா ஆட்சியோடு, தமிழ்நாடு அரசும் கைகோத்துக் கொண்டு விட்டதா? இது மதச் சார்பற்ற அரசின் தன்மைக்கு விரோதமானதல்லவா?
- தமிழக முதல் அமைச்சர் இதன்மீது கவனம் செலுத்தி மதச்சார்பின்மையைப் பாதுகாக்க முன் வருவாரா?
- விவேகானந்தர் ரதம் ஊர்வலத்தைத் (குறைந்தபட்சம் பள்ளிகளுக்குச் செல்வதையாவது) தடுப்பாரா?
எங்கே பார்ப்போம்!”, இவ்வாறு கூறியுள்ளார்[2].
பி.டி.ஐ வேலையை தமிழ் ஊடகங்கள் செய்துள்ளன: சில செய்திகளை ஆங்கில ஊடகங்கள் கூட வெளியிட தயங்கும், அல்லது விருப்பம் இல்லாமல் இருக்கும். ஆனால், PTI [Press Trust of India] – இந்திய ஊடக சங்கம் சார்பில் அத்தகைய செய்திகள் வந்தால், வேறு வழியில்லை என்று அப்படியே, “ஈ அடிஞ்சான் காப்பி / கட் அன்ட் பேஸ்ட்” பாணியில் செய்திகள் வெளி வரும். அதில் தங்களது நோக்கில் கருத்துகளைக் கூட வெளியிட மாட்டார்கள். அதுபோல, வீரமணியின் அறிக்கையை அப்படியே வெளியிட்டுள்ளன. கேள்விகளை பிடுங்கி முன்னால் போட்டு[3], அறிக்கையை பின்னால் போட்ட விதம் தமிழ்.ஒன்.இந்தியா மூலம் தெரிகிறது. வழக்கம் போல போட்டோக்களை சேர்த்துள்ளது[4]. நக்கீரன், அமுக்கமாக அறிக்கையை மட்டும் போட்டுள்ளது[5]. ஆனால், ஓம், பாலஜோதிடம், பொது அறிவு, போன்ற பத்திரிக்கைகளை நடத்துவதில் கில்லாடி[6]. அவற்றுடன் தகடுகள் முதலியவற்றையும் விநியோகம் செய்யும் வழக்கம் உண்டு. “விடுதலை” அலுவலகத்திற்கு, அனுப்பி வைப்பாரா இல்லையா என்று தெரியவில்லை. தினமணியும் அதே பாணியைப் பின்பற்றியது[7]. “விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்கு அனுமதிக்கக் கூடாது: கி.வீரமணி”, என்று தலைப்பிட்டு போட்டது, அவ்வளவே தான்[8]. “தி.இந்து” மட்டும், ஏதோ, குருமூர்த்தி டுவிட்டரில் சொன்னார் என்று போட்டு, “சமன்” செய்து விட்டது போல காண்பித்துக் கொண்டுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் வீரமணி[9] மற்றும் குருமூர்த்தி[10] கருத்துகளை வெளியிட்டுள்ளது.
எஸ்.குருமூர்த்தி கருத்து[11]: கி.வீரமணியின் இந்த எதிர்ப்பு குறித்து இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் அமைப்பாளர்களில் ஒருவரான ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “கருப்புச் சட்டை அணிந்துள்ள வீரமணி, இந்து கடவுள்களை எதிர்ப்பவர். ஆனால், இன்று பல லட்சக்கணக்கான தமிழர்கள் அதே கருப்புச் சட்டை அணிந்து சபரிமலை செல்கின்றனர். காடுகள், விலங்குகளை பாதுகாக்க வேண்டும், சுற்றுச்சூழலை பேண வேண்டும், குடும்பம் மற்றும் மனித மதிப்பீடுகளை பின்பற்ற வேண்டும், பெண்களை மதிக்க வேண்டும், தேச பக்தியை கடைபிடிக்க வேண்டும் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடத்தப்படுகிறது. எனவே, இந்தக் கண்காட்சியை எதிர்ப்பது ஏன் என கி.வீரமணியிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்ப வேண்டும்”, இவ்வாறு குருமூர்த்தி கூறியுள்ளார்[12].
வீரமணி கேட்ட கேள்விகளுக்கு பதில்: திரிபு-குழப்பவாதிகளாக இருப்பதால், வீரமணி போன்றோர், நடுநிலையாக சிந்திக்க முடியாமல் போகும் நிலையில், கற்பனையில் ஏதேதோ நினைத்துக் கொண்டு, இத்தகைய கேள்விகளைக் கேட்கிறார்கள். எனினும், இதோ பதில்கள்:
1. இப்பொழுது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியோடு சம்பந்தப்படுத்தி விவேகானந்தர் ரதங்கள் பள்ளிகளுக்குச் செல்லுவது என்பது அனுமதிக்கத் தகுந்தது தானா? |
1. ஆமாம், இதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. |
2. ஏற்கத் தகுந்ததுதானா? |
2. ஆமாம். |
3. மாணவர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட மதச் சிந்தனையை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமா? |
3. செக்யூலார் நாடு எனும் போது, பிரச்சினை என்ன? |
4. இந்துத்துவா பெயரில் நாட்டில் ஆங்காங்கே மதக் கலவரங்களை விசிறி விட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், மாணவர்கள் மத்தியிலும் இத்தகைய சிந்தனைகளைத் தூண்டுவது ஆபத்தான செயல் அல்லவா? |
4. இதற்கும், அதற்கும் சம்பந்தமே இல்லையே? |
5. மத்திய பிஜேபி என்னும் இந்துத்துவா ஆட்சியோடு, தமிழ்நாடு அரசும் கைகோத்துக் கொண்டு விட்டதா? |
5. இது ஒரு கற்பனையான குற்றச்சாட்டு. |
6. இது மதச் சார்பற்ற அரசின் தன்மைக்கு விரோதமானதல்லவா? |
6. இல்லை, அதே கொள்கையில் தான் இந்நிகழ்ச்சி நடத்தப் படுகிறது. |
7. தமிழக முதல் அமைச்சர் இதன்மீது கவனம் செலுத்தி மதச்சார்பின்மையைப் பாதுகாக்க முன் வருவாரா? |
7. 150-விவேகானந்தர் விழாவை அவர் தான் துவக்கி வைத்தார். 1999ல் கருணாநிதியும் விவேகானந்தர் இல்லத்தில் கண்காட்சியைத் துவக்கி வைத்தார். |
8. விவேகானந்தர் ரதம் ஊர்வலத்தைத் (குறைந்தபட்சம் பள்ளிகளுக்குச் செல்வதையாவது) தடுப்பாரா? |
8. மேலே குறிபிட்டப்படி, திராவிட கட்சிகளின் இருவேறு முதலமைச்சர்களே கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்த நிகழ்ச்சிகளாக இருக்கும் போது, இந்த கேள்விக்கே இடமில்லையே? |
© வேதபிரகாஷ்
26-07-2016

[1] விடுதலை, பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரதம் செல்லுவதா?, திங்கள், 25 ஜூலை 2016 15:49.
[2] http://viduthalai.in/e-paper/126567.html
[3] தமிழ்.ஒன்.இந்தியா, இந்து துறவி விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்குள் அனுமதிக்க கூடாது.. வீரமணி போர்க்கொடி, By: Ganesh Raj Published: Monday, July 25, 2016, 16:39 [IST].
[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/spritual-school-is-it-against-secular-government-asks-k-veeramani-258776.html
[5] நக்கீரன், பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரதம் செல்லுவதா? –கி.வீரமணி, பதிவு செய்த நாள் : 25, ஜூலை 2016 (13:36 IST) ; மாற்றம் செய்த நாள் :25, ஜூலை 2016 (13:39 IST)
[6] http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=169746
[7] தினமணி, விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்கு அனுமதிக்கக் கூடாது: கி.வீரமணி, By சென்னை, First Published : 26 July 2016 03:13 AM IST
[8]http://www.dinamani.com/tamilnadu/2016/07/26/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/article3547501.ece
[9] New Indian Express, DK president gets it for opposing Ratha Yatras, By Express News Service, Published: 26th July 2016 06:39 AM, Last Updated: 26th July 2016 06:39 AM
[10] http://www.newindianexpress.com/cities/chennai/DK-president-gets-it-for-opposing-Ratha-Yatras/2016/07/26/article3547109.ece
[11] தி.இந்து, விவேகானந்தர் ரதம் பள்ளிகளுக்கு செல்வதா? – கி.வீரமணி கண்டனம், Published: July 26, 2016 08:05 ISTUpdated: July 26, 2016 08:06 IST
[12]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article8900224.ece
குறிச்சொற்கள்:அரசியல், ஆன்மீகம், இந்திய விரோத போக்கு, இந்துக்களின் உரிமைகள், கண்காட்சி, கருணாநிதி, குருமூர்த்தி, செக்யூலரிஸம், பள்ளி, மீனம்பாக்கம், மைலாப்பூர், ரதம், விவேகானந்தர், வீரமணி
அடையாளம், அத்தாட்சி, அரசியல், அவதூறு, ஆரியன், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், இந்துவிரோதி, எதிர்-இந்துத்துவம், எழுத்துரிமை, ஏற்புடையது, கருணாநிதி, காவி, குருமூர்த்தி, சங்கப் பரிவார், சங்கம், சித்தாந்தம், செக்யூலரிசம், திராவிட மாயை, திராவிட வெறி, திராவிடக் கட்சி, திராவிடத்துவம், திராவிடன், திராவிடம், திரிபு வாதம், நாத்திகம், பெரியாரத்துவம், பெரியாரிசம், பெரியாரிஸம், பெரியார், பெரியார் பக்தி, பெரியார் பித்து, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
மே 21, 2016
கோவில் நுழைவு போராட்டம் – தருண் விஜயும், திருப்தி தேசாயும் – எதிர்ப்பின் காரணங்கள் அரசியலா, பாரம்பரியமா, சாத்திரங்களா – ஊடகங்களின் பாரபட்சம் ஏன்!
சமீபத்தைய கோவில் நுழைவு போராட்டங்கள்: தருண் விஜய் என்ற பிஜேபி எம்.பி அதிக ஆர்வத்துடன் சில வேலைகளை செய்து வருவது தெரிந்த விசயமே. திருக்குறள் தேசிய நூல், திருவள்ளுவருக்கு சிலை என்றெல்லாம் அதிரடியாக வேலைகளை செய்து வந்தார். தமிழுக்கு ஆதரவாகவும் பாராளுமன்றத்தில் பேசிவந்தார். அவரது பேச்சுகள் மற்றும் காரியங்கள் முதலியவற்றைக் கவனிக்கும் போது, அவருக்கு ஆர்வம் இருந்தாலும், அவருக்கு இவ்விசயங்களில் ஆலோசனை கூறுபவர்கள் சரிவர விவரங்களை சொல்வதில்லை என்றே தெரிகிறது. யாரும் திடீரென்று ஒரு குறிப்பிட்ட காரியத்திற்கு தடாலடியாக இருங்க முடியாது. குறிப்பாக இருக்கின்ற சமூகக்கட்டமைப்பை எதிர்த்து செயல்படும் காரியங்கள் பொறுமையாக, நிதானமாக செய்ய வேண்டிய நிலையுள்ளது. மேலும், திருப்தி தேசாய் போன்றோர் செய்து வரும் கலாட்டாக்களுக்கு கொடுத்த விளம்பரம், முக்கியத்துவம் மற்றும் 24×7 பாணி-பிரச்சாரம் இவருக்கு செய்யப்படவில்லை. இப்பொழுது கூட பிடிஐ கொடுத்த செய்தியை, எல்லா நாளிதழ்களும் வெளியிட்டுள்ளன. திருப்தி தேசாய் பின்னால் ஓடிச் சென்று வீடியோ எடுத்து, டிவி-செனல்களில் போட்டு, வாத-விவாதங்களை வைத்து எதையும் செய்யவில்லை.
கோவில் நுழைவு அனுமதி யாருக்கு மறுக்கப்படுகிறது?: டேராடூனில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் புனா கிராமம் உள்ளது. அங்குள்ள சக்ரதா கிராமத்தில் உள்ள சில்குர் தேவதா கோயிலில் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது[1]. இதேபோல, ஜவுன்சார் – பாபார் பகுதியில் 349 கோயில்களில் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. தருண் விஜய், அந்தக் கோயில்களுக்கு தாழ்த்தப்பட்டோரை அழைத்துச் சென்று வழிபடும் பிரசார இயக்கத்தை தொடங்குவதாக அறிவித்தார். அதன்படி, 20-05-2016 அன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் சில தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் சில்குர் தேவதா கோயிலுக்குச் சென்று தருண் விஜய் வழிபட்டார்[2]. பின்னர் வெளியே வந்த தருண் விஜய் மீதும் அவருடன் வந்த குழுவினர் மீதும் ஒரு கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது[3]. கோவிலில் நுழைய யாருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்று தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டவர் (Backward communities), தலித் (Dalit) என்று பலவாறாகக் குறிப்பிடப்படுகின்றன.
போலீஸ் தரப்பில் கூறப்பட்டது[4]: இந்தச் சம்பவம் குறித்து உத்தரகண்ட் மாநில காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: “ஒரு பிரிவு சமுதாயத்தினருடன் கோயிலுக்குள் தருண் விஜய் சென்றது பற்றி கோயில் அருகே பந்தல் அமைத்து “பண்டாரா‘ (உணவு வழங்கும் நிகழ்ச்சி) நடத்திய கோயில் நிர்வாகிகளுக்குத் தெரிய வந்தது. இதை அறிந்து கோயில் வாயில் எதிரே முற்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். அப்போது வெளியே வந்த தருண் விஜய்யிடம் “தாழ்த்தப்பட்டோருடன் கோயிலுக்கு எவ்வாறு செல்லலாம்?’ என்று ஒரு பிரிவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அவர் மீதும் குழுவினர் மீதும் அந்தக் கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். கோயிலுக்கு வெளியே இருந்த தருண் விஜய்யின் கார் கண்ணாடியும் அடித்து நொறுக்கப்பட்டது. இது பற்றி தகவலறிந்ததும் உள்ளூர் காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் கோயில் பகுதிக்குச் சென்று தருண் விஜய்யை மீட்டனர். அவரது தலை, கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது. உடனடியாக அவரையும் மற்றவர்களையும் டேராடூனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி கிடைக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்”, என்றார் உயரதிகாரி[5].
தருண் விஜய் மீது தாக்குதல்[6]: உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜனதா எம்.பி. தருண் விஜய், நேற்று அம்மாநிலத்தில் உள்ள சக்ரதா பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்குள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அழைத்துச் செல்ல முயன்றார். அதற்காக அவர்களுடன் அவர் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தபோது, அவரது செயலுக்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவிலுக்கு முன்பு, இருதரப்புக்கும் இடையே கைகலப்பு உருவானது. அதில், தருண் விஜய் தாக்கப்பட்டார். விஜய் மீது ஒரு கும்பல் கற்களை வீசி கடுமையாகத் தாக்கியது. அவர் காயம் அடைந்ததுடன், அவரது காரும் நொறுக்கப்பட்டது. அவர் டேராடூனில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவிலில் நுழைய தடை ஏன், என்ன நடந்தது?: கோவிலில் நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பது எந்த காரணத்தால் என்று தெரியவில்லை என்கிறார்கள். மேலும் தாக்குதல்-மோதல்-கல்வீச்சு முதலியவை ஏன் ஏற்பட்டது என்றும் தெளிவாகத் தெரியவில்லை என்கிறார்கள். இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த முதல்–மந்திரி ஹரீஷ் ராவத் உத்தரவிட்டுள்ளார்[7]. எனினும் கோவிலுக்கு வெளியே எதனால் மோதல் ஏற்பட்டது என்பதற்கான காரணம் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை[8]. கோவிலுக்கு செல்லும் முன்னர் அல்லது சென்று வெளியே வந்தபோது, வாக்குவாதம், கல்வீச்சு ஏற்பட்டன என்று இருவிதமாக செய்திகள் வந்துள்ளன. சமீபத்தில் பிஜேபி சாங்கிரஸ் ஆட்சி கவிக்க்க சில காரியங்கள் செய்ததும், பிறகு நீதி மன்றம் மூலம், விலக்கப்பட்ட முதலமைச்சர் மறுபடியும் அமர்த்தப்பட்டது முதலியவை நடந்துள்ளன என்பதால், ஏதாவது அரசியல் உள்நோக்கம் இருக்குமா என்றும் யோசிக்கப்படுகிறது. மேலும் பி.எஸ்.பி தலைவியுடன் கோவிலில் சென்று தரிசனம் செய்துள்ளதால், உ.பி தேர்தலை மனத்தில் வைத்துக் கொண்டு செய்யப்படும் வேலையா என்றும் நோக்கத்தக்கது. சில்கூர் தேவ்தா கோவிலுக்குள் தலித்துகள் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. உத்தரகாண்டில் இருந்து நியமன எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் தருண் விஜய் ஆவார்[9].
வைரமுத்து கண்டனம்- தருண் விஜயை பெரியாரோடு ஒப்பிட்டது[10]: தருண் விஜய் எம்.பி. சம்பவத்துக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: “தருண் விஜய் மீதும், தலித்துகள் மீதும் நடந்த தாக்குதலை ரத்தம் கசியும் நெஞ்சோடு வன்மையாக கண்டிக்கிறேன். இது சமூக நீதியின் மீது விழுந்த காயம் என்று வருந்துகிறேன். கடவுள் மனிதனை படைத்தார் என்பது உண்மையானால், தலித்துகளையும் அவர் தான் படைத்திருப்பார். தலித்துகளை ஆலயத்துக்குள் செல்ல அனுமதிக்காதவர்கள் கடவுளையே அவமதிக்கிறார்கள். உத்தரகாண்ட் அரசு உரிய நடவடிக்கை எடுத்து சமூகநீதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்படி ஒரு வன்முறை இனி நிகழாமல் காக்க வேண்டும். எனக்கு தோன்றுகிறது, வடநாட்டுக்கும் ஒரு பெரியார் தேவைப்படுகிறார்”, இவ்வாறு கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். “வடநாட்டுக்கும் ஒரு பெரியார் தேவைப்படுகிறார்”, என்று சொன்னதால் பெரியார் பக்தர்கள், அத்தகைய ஒப்பீட்டை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை.
© வேதபிரகாஷ்
21-05-2016
[1] Indian Express, Mob attacks BJP MP Tarun Vijay in Dehradun, By: PTI, Dehradun, Updated: May 21, 2016 12:37 am
[2] http://indiatoday.intoday.in/story/ukhand-bjp-mp-tarun-vijay-attacked-by-mob/1/673715.html
[3] http://indianexpress.com/article/india/india-news-india/mob-attacks-bjp-mp-tarun-vijay-2811424/
[4] தினமணி, கோயிலுக்கு தலித்துகளை அழைத்து சென்ற தருண் விஜய் மீது தாக்குதல்: உத்தரகண்ட் மாநிலத்தில் சம்பவம், By நமது நிருபர், டேராடூன் / புது தில்லி,; First Published : 21 May 2016 03:21 AM IST.
[5]http://www.dinamani.com/india/2016/05/21/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4/article3443926.ece
[6] தினத்தந்தி, உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தாக்குதலில் தருண் விஜய் எம்.பி. காயம் அடைந்தார் கவிஞர் வைரமுத்து கண்டனம், மாற்றம் செய்த நாள்: சனி, மே 21,2016, 12:18 AM IST; பதிவு செய்த நாள்: சனி, மே 21,2016, 12:18 AM IST.
[7] தமிழ்.ஒன்.இந்தியா, உத்தரகாண்ட் கோவிலில் கோஷ்டி மோதல்.. பாஜக எம்.பி. தருண் விஜய் படுகாயம், By: Karthikeyan, Published: Friday, May 20, 2016, 20:51 [IST].
[8] “What exactly happened remains unclear, but it is not a case of Dalits not being allowed in the temple. Had that been the case, the MP and Mr. Kunwar would not have been allowed into the temple. But they were attacked after they visited the temple,” Dehradun Superintendent of Police (Rural) T.D. Waila toldThe Hindu.
http://www.thehindu.com/news/national/other-states/bjp-mp-tarun-vijay-injured-in-mob-attack-outside-temple-in-uttarakhand/article8627010.ece
[9] http://tamil.oneindia.com/news/india/bjp-mp-tarun-vijay-injured-after-scuffle-hospitalized-254222.html
[10] http://www.dailythanthi.com/News/India/2016/05/21001853/MP-Tarun-Vijay-in-attack-Was-injured.vpf
குறிச்சொற்கள்:அரசியல், இந்திய விரோத போக்கு, உத்தரகாண்ட், காங்கிரஸ், கோயில், கோவில், கோவில் நுழைவு, சமம், செக்யூலரிஸம், தருண் விஜய், தலித், திருப்தி தேசாய், நுழைவு, பக்தி, பெரியார், போராட்டம், ரோஹித், வெமுலா
இந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, உத்திரகாண்ட், கருத்து, கருவறை போராட்டம், கோவில் நுழைவு, ஜாதி, ஜாதி அரசியல், ஜாதியம், ஜாதிவாத அரசியல், தமிழ், தருண் விஜய், தலித், தலித் இந்து, திருப்தி தேசாய், பெரியாரிசம், பெரியாரிஸம், பெரியார், வெமுலா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜனவரி 17, 2015
“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (5)

சுயமரியாதை திருமணம்- தாலி மறுப்பு
சுயமரியாதை, சீர்திருத்தத் திருமணங்கள் சட்டவிரோதமானது, அத்திருமணத்தில் பிறந்த குழந்தைகளும் நிலையிழந்தது: பிராமணர்-எதிர்ப்பு, சடங்குகள்-இல்லாத, தாலி-கட்டாத, திராவிடத்துவ, பெரியாரிய சுயமரியாதை / சீர்திருத்த திருமணங்கள் நடந்தன. ஆனால், நீதிமன்றங்களுக்கு அவர்கள் வாரிசு உரிமை, சொத்துரிமை, சொத்துப் பிரிப்பு முதலிய வழக்குகளுக்குச் சென்றபோது, அவர்களின் திருமணம் அந்நேரத்தில் / அக்காலத்தில் உள்ள சட்டங்களின்படி செல்லாது என்றாகியது. அதாவது, அப்பொழுதிருந்த எந்த திருமணச் சட்டத்திலும், இத்தகைய முறை இல்லாமல் இருந்ததால், இவையெல்லாம் சட்டத்திற்குப் புறம்பாக நடந்தவை என்றாகியது. தமிழகத்தில் 1960-ம் ஆண்டுகளுக்கு முன்பு சீர்திருத்த திருமணங்களுக்கு சட்டப்படி அங்கீகாரம் கிடையாது என்பதனை பகுத்தறிவுகள், திராவிட வீரர்கள் புரிந்து கொண்டனர். அதாவது, அவர்களது திருமணங்களும் சட்டங்களுக்குப் புறம்பானவை, பிறந்த மகன்கள்-மகள்களும் அவ்வாறே பிறந்தவை என்றாகியது. பிறகு எப்படி மானத்தைக் காப்பாற்றிக் கொள்வது?

சுயமரியாதை திருமணம்
திராவிடர்கள் இந்துக்கள் ஆனது, மானத்தைக் காப்பாற்றிக் கொண்டது: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தனது திராவிட குழப்பங்களை முரண்பாடுகளைச் சரிசெய்து கொள்ள ஆரம்பித்தது. “தமிழ்-தமிழ்” என்று தமிழ் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியங்களுக்கு எதிராக போகும் நோக்கு பல பிரச்சினைகளை சமுதாயத்தில் ஏற்படுத்தியதை திராவிட சித்தாந்திகள் கண்டு, அதற்கான வழிமுறைகளையும் ஆய்ந்தனர். 1969ல் அண்ணாதுரை தலைமையில் ஆட்சிக்கு வந்ததும், முதலில் அத்திருமணபங்களை செல்லுபடியாக்க சுயமரியாதை திருமணம் சட்ட வடிவம் (28.11.1967) மசோதாவை அறிமுகப்படுத்தினர். “சுயமரியாதை திருமணம்” கிளப்பிய அவலத்தை இந்து திருமண சட்டத்தில் (The Hindu Marriage Act, 1956) பிரிவு 7A என்றதை நுழைத்து மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்[1]. அதாவது, அப்படி தடாலடியாக செய்து வைத்த திருமணங்கள் எல்லாம் செல்லாது, ……….என்றெல்லாம் நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வந்தபோது அதிர்ந்து விட்டனர் பகுத்தறிவி ஜீவிகள்! அதாவது இந்து திருமண சட்டத்தில் தான்[2] அந்த “சுய மரியாதை” அடங்கிவிடுகிறது! அனால், இன்றும், இப்படி பொய்களை பேசியே வாழ்க்கையை நடத்துகின்றனர். இந்துமதத்தை ஆபாசமாக வர்ணித்த பகுத்தறிவு பகலவன் பாதையில் திருமணம் செய்து கொண்டவர்கள், திராவிடர்கள் “இந்துக்களாகி” தமது மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்.

Self-respect marriage validated under Hindu Marriage Act
பெருமாள் முருகன் போன்றோர், இக்கருவை வைத்து ஒரு நாவல் எழுதுவார்களா?: இவையெல்லாம், இப்பொழுது கடந்த 60-80 ஆண்டுகளில் நடந்துள்ள உண்மைகள். அதில் சம்பந்தப்பட்டவர்கள், அவர்களது சந்ததியர் உயிரோடு இருக்கிறார்கள். ஆவணங்கள், அத்தாட்சிகள், சான்றுகள், ஆதாரங்கள் திறந்தே, வெளிப்படையாக இருக்கின்றன. ஆகவே, இவற்றை வைத்துக் கொண்டு, யாராவது கதை எழுத முன்வருவார்களா, எழுதி கொடுத்தால் யாராது பதிப்பிப்பார்களா? எழுதி-பதிப்பித்தால், தமிழர்கள் ஒப்புக் கொள்வார்களா? எண்ணும்-உரிமை, கருத்துரிமை, சொல்லுரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை என்றெல்லாம் பேசிவரும் முற்போக்குவாதிகள், “இந்துத்துவ-வாதிகள்”, இடதுசாரி சிந்தனையுள்ளவர்கள் மற்ற வகையறாக்கள் இதைப் பற்றி என்ன சொல்வார்கள்?

My rights and the rights of others
உரிமை, அதிகாரம், பாத்தியதை, சுதந்திரம் எல்லாமே எல்லைகளுக்குட்பட்டவை: உரிமை, அதிகாரம், பாத்தியதை, சுதந்திரம் என்றெல்லாம் ஒருவருக்கே, ஒரு சமூகத்திற்கே, ஒரு சித்த்தாந்த கூட்டத்திற்கே என்று தமதாக உரித்தாக்கிக் கொள்ளமுடியாது. அவ்வாறு உரித்தாக்கிக் கொள்ளவேண்டுமானால், உள்ள உரிமைகட்டுகளையும் உடன் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். அவற்றுடன் இணைந்த கடமை, பொறுப்பு முதலிய சரத்துகளையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும், அதாவது –
- மனம் ஒரு குரங்கு என்று தத்துவம் பேசலாம், ஆனால் உரிமைகள் என்று வரும் போது, கயிற்றால் கட்டித்தான் வைத்துக் கொள்ளவேண்டும்.
- ஒருவரது சிந்தனையுரிமை அடுத்தவரது சிந்தனையுரிமையை மீற முடியாது;
- ஒருவரது எண்ணவுரிமை, அடுத்தவரது எண்ணவுரிமையை பாதிக்கக் கூடாது;
- ஒருவரது கருத்துரிமை, அடுத்தவரது கருத்துரிமையை பரிக்க முடியாது;
- ஒருவரது சிந்தனையுரிமை, அடுத்தவரது சிந்தனையுரிமையை மீறமுடியாது;
- ஒருவரது பேச்சுரிமை அடுத்தவரது பேச்சுரிமையைக் கொள்ளைக் கொள்ள முடியாது;
- ஒருவரது எழுத்துரிமை அடுத்தவரது எழுத்துரிமையை தூஷிக்க முடியாது;
- அவரவர், அவரவரது இடங்களில், எல்லைகளுக்குள் இருந்துகொண்டு செயல்பட வேண்டும், வரம்புகள் மீறமுடியாது.
- பஞ்சபூதங்களுக்கு எல்லைகள்-வரம்புகள் இல்லை என்று இருக்கலாம், ஆனால், அவையும் மீறும்போது அழிவு, பேரழிவு ஏற்படுகின்றது. அதுபோலவே, பஞ்சபூதங்களிலான மனிதர்களும் அத்தகைய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவர்களே.
- கிரகங்கள், அண்டம், பேரண்டம் எல்லாமே, ஒழுங்காக தத்தம்வழிகளில் சென்று கொண்டிருக்கும் போது, நிலையில்லாத மக்கள், தங்கள் விருப்பம் போல நடந்து கொள்ள முடியாது. மற்றவர்களையும் அடக்கி-ஒடுக்க முடியாது.
வேதபிரகாஷ்
16-01-2015
[1] DMK introduced an amendment in “The Hindu Marriage Act, ” by inserting Section 7A and thus saving their disgrace, through the TN Act XXI of 1967 (20-01-1968). Also, see at:
கே. வீரமணி, அண்ணாவும், சுயமரியாதைத் திருமணச் சட்டமும், விடுதலை 01-09-2008. For full details, see at: http://www.unmaionline.com/20080901/page19.html
[2] வேதபிரகாஷ், பகுத்தறிவு-தீவிரவாதம் திராவிட புரோகிதர்களின் ஆண்-பெண் இணைப்புகள்!,
http://rationalisterrorism.wordpress.com/2010/01/29/பகுத்தறிவு-தீவிரவாதம்/
குறிச்சொற்கள்:எழுத்துரிமை, கருணாநிதி, கருத்து சுதந்திரம், கருத்துரிமை, சீர்திருத்தத் திருமணம், சீர்திருத்தம், சுயமரியாதை, சுயமரியாதை திருமணம், பெருமாள் முருகன், பேச்சுரிமை, மாதொரு பாகன், மாதொருபாகன்
“மாதொரு பாகன்” நாவல், அநிருத்தன் வாசுதேவன், இந்துத்துவம், இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், கருணாநிதி, கருத்து, கருத்து சுதந்திரம், கருத்துரிமை, சட்டம், சித்தாந்தம், சீர்திருத்தத் திருமணம், சுயமரியாதை திருமணம், சூஸன்னா, சூஸன்னா அருந்ததி, சூஸன்னா அருந்ததி ராய், பெரியாரத்துவம், பெரியாரிசம், பெரியாரிஸம், பெரியார், பெருமாள் முருகன், பேச்சுரிமை, மாதொருபாகன் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
ஜனவரி 17, 2015
“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4)

ஆலவாயன்- பெருமாள் முருகன்
திராவிடத்துவவாதிகள் மௌனம் சாதித்தது (தி இந்து வர்ணனை): எழுத்தாளர் பெருமாள்முருகன் மீது திணிக்கப்பட்டுள்ள சமூக புறக்கணிப்பை மேலும் உறுதி செய்வதாகவே இருக்கிறது ‘மாதொருபாகன்’ பிரச்சினையில், திராவிட கட்சிகள் மவுனம் சாதிப்பது[1]. தமிழ் இலக்கியப் பணியில் இருந்து முற்றிலும் விலகுவதாகவும், இனி ஆசிரியர் பணியை மட்டும் தொடரவுள்ளதாகவும் எழுத்தாளர் பெருமாள்முருகன் அறிவித்துள்ளார். அவரது உணர்ச்சிமிகு இந்த அறிவிப்புக்குப் பின்னரும்கூட அரசியல் கட்சிகள், குறிப்பாக திராவிட கட்சிகள் தங்களது மவுனத்தை கலைத்தபாடில்லை. முக்கியப் பிரச்சினைகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டி அறிக்கைகளை அவிழ்த்துவிடும் திமுக தலைவரும், இலக்கியவாதியுமான கருணாநிதிகூட ஒட்டுமொத்த ஊடக உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள பெருமாள்முருகன் பிரச்சினையில் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காதது ஏனோ? ஆளும் அதிமுகவும் இந்த விஷயத்தைப் பொருத்தவரை பாரபட்சமில்லாமல் மவுனம் காத்துவருகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டு நிரூபணமான பின்னர் ஜெயலலிதா எந்த விவகாரத்திலுமே தலையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது[2], என்று முடிக்கப்பட்டது. அரசியல்வாதிகள் இப்பிரச்சினையால் தமக்கு ஆதாயம் வருமா என்று பார்த்துதான், கருத்துத் தெரிவிப்பார்கள். ஒருவேளை எதிர்ப்புக் கிளம்பும், ஓட்டுகள் கிடைக்காது என்றால், அமைதியாகத்தான் இருக்கும்.

மாதொரு பாகன் – அத்தியாயம்,13, ப,84-85
சித்தாந்த ரீதியில் தமிழக எழுத்தாளர்கள் ஈடுபட்டு வருவது: தமிழகத்தைப் பொறுத்த வரையில் முற்போக்கு சிந்தனை, தாராளமான எண்ணங்கள், நவீனத்துவம், முதலிய முகமூடிகளில், நாத்திகர்கள், இடதுசாரி வகையறாக்கள், முஸ்லிம்கள், கிருத்துவர்கள் முதலியோர் சித்தாந்த ரீதியில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் எல்லோருமே பாரபட்சமுறையில் கருத்துகள் தெரிவிப்பது, குறிப்பிட்ட மதங்களுக்கு சார்பாக பேசுவது, அதே நேரத்தில், இன்னொரு மதத்தை தூஷிப்பது; குறிப்பிட்ட ஜாதிக்கு சார்பாக பேசுவது, அதே நேரத்தில், இன்னொரு மதத்தை விமர்சிப்பது; சில விழாக்கள், பண்டிகைகள், ஊர்வலங்கள் முதலியவற்றை ஆதரிப்பது, மற்றவற்றை எதிர்ப்பது என்று கடந்த 60 ஆண்டுகளாக செய்து வருகின்றனர். இப்பொழுது கூட சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின், ஜோசப், முதலியோர் பற்றி குறிப்பிடுவதில்லை. 1970ல் ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்டது போன்ற விசயங்களும் இப்பொழுதுள்ள இளைஞர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால், இன்று அப்படி செய்தால், என்னாகும் என்பது அவர்களுக்குத் தெரியும். இதை தமிழக மக்களும் கவனித்து வருகின்றனர். முன்பு திராவிட கட்சிகளை எதிர்த்துக் கேட்பவர்கள் அடிக்கப் பட்டார்கள், அவர்கள் உடமைகள் தாக்கப்பட்டன; இதனால் அவர்கள் பயந்து கிடந்தனர். இப்பொழுது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கே, தங்களது சித்தாந்தம் இனிமேல் எடுபடாது என்று தெரிந்து விட்டது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள், இதுவரை அடிகள் வாங்கி அமைதியாக இருந்தவவர்கள், திரும்பினால் என்னவாகும் என்பதனையும் அவர்கள் உணர ஆரம்பித்திருக்கலாம்.

அர்த்தநாரி- பெருமாள்
இந்துத்துவ–வசைபாடல், இந்து–விரோதவாதம் எப்பொழுதும் எடுபடாது: சமீப காலத்தில் அவர்களது அரசியல் மற்றும் சித்தாந்தம் வலுவிழந்து விட்டதால், மக்கள் உண்மையினை உணற ஆரம்பித்து விட்டனர். கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதே நிலையை அடைந்து விட்டதால், திராவிட கட்சிகள் போன்று, பல அவதாரங்களைப் பெற்று வேலை செய்து வருகின்றன. மதம், பாரம்பரியம் கலாச்சாரம், நாகரிகம் முதலியவற்றைப் பற்றிய அவர்களது விளக்கங்களும் திரிக்கப்பட்டவை, பொய்யானவை, சரித்திர ஆதாரமற்றவை என்றும் மக்களுக்குப் புரிய ஆரம்பித்தன. இதனால், தான் மக்கள் கேட்டுள்ளனர். ஆனால், அதனை, ஊடகங்கள் “இந்துத்துவவாதிகளின்” வேலை என்றெல்லாம் இன்னொரு திரிபு விளக்கத்தைக் கொடுத்து திசைத் திருப்பப் பார்த்தார்கள். “பெருமாள் முருகன் இந்துத்துவ மற்றும் சாதி சக்திகளினால் வேட்டையாடப்பட்டதால் எழுதுவதையே விட்டுவிட தீர்மானித்தார்…..” என்று தலைப்பிட்டு “தி ஹிந்து” பிரத்யேகமாக 14-01-2015 அன்று வெளியிட்டுள்ளது. அதில் கூட மக்களின் மனம் புண்பட்டதே, அதனால் தானே அவர்கள் வெகுண்டனர், போராட்டம் நடத்தினர்…என்பதனை மறைத்து, திரித்து இந்துத்துவம் என்றெல்லாம் வாதிப்பது நோக்கத்தக்கது. அதாவது, எல்லாவற்றிற்கும் காரணம் இந்து அமைப்புகள் தாம் என்ற கருத்தைத் திணிக்கப் பார்க்கிறது. கருணாநிதி மௌனமாக இருந்தாலும், இந்த இந்து-எதிர்ப்புவாதத்தை விடுவதாக இல்லை. சாதியத்தை வளர்த்து, கட்டிக்காத்தது திராவிட சித்தாந்தமும், அதனை சார்ந்த அரசியலும் தான் என்ற உண்மையினை அவர்கள் மறைக்கப் பார்க்கிறார்கள். இங்கும் சாதியப் பிரச்சினை சம்பந்தப்பட்டிருப்பதால், இன்னொரு உதாரணம் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.ஏனெனில், அதுவும் ஒரு புத்தகம் பற்றியது தான், மார்ச்.2014ல் நடந்த நிகழ்ச்சி! சென்ற 2014ல் அருந்ததி ராய் முன்னுரையுடன் வெளியான ஒரு புத்தகத்தை “தலித்துகள்” எதிர்த்ததைப் பற்றி நமது அறிவிஜீவிகள் மறைத்துள்ளதால், அதைப் பற்றிய விவரங்களைத் தருகிறேன்.

Arunthati Roy book – The Doctor and the Saint – released March 2014
தலித் அறிவிஜீவிகள் அருந்ததி ராயை எதிர்த்தது ஏன்?: “ஜாதியை ஒழித்துக் கட்டுவது எப்படி?” என்ற அம்பேத்கரின் புத்தகம், அருந்ததி ராய் எழுதிய முன்னுரை மற்றும் குறிப்புகளுடன் “மஹாத்மாவுக்கு ஒரு பதில் என்ற விதத்தில் நாராயண பதிப்பகத்தாரால் 2014ல் வெளியிடப்பட்டது[3]. அப்பதிப்பகம் தன்னுடைய இணைதளத்திலேயே பல விவரங்களைக் கொடுதுள்ளது[4]. ஹைதராபாதில் மார்ச்.9, 2014 அன்று நடக்கவிருந்த அப்புத்தக வெளியீட்டு விழா தலித்துகள் எதிர்ப்பார்கள்[5] என்ற அச்சத்தினால், ரத்து செய்யப்பட்டது[6]. தலித் அடிப்படைவாதிகள் அல்லது தீவிரவாதிகள் (Dalit Radicals), அருந்ததி ராய் அம்பேத்கரைப் பற்றி எழுத விரும்பவில்லை என்றும் கட்டுரைகள் உள்ளன[7]. அப்புத்தகம் தடை செய்யப் படவேண்டும் என்றும் சில தலித் இயக்கங்கள் குரல் எழுப்பின. மேலும் அந்த அருந்ததி ராய்-நாராயண திட்டம், ஒரு பார்ப்பன சதி என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது[8]. அருந்ததி ராய், அம்பேத்கரை விட காந்தியைப் பற்றி முன்னுரையில் அதிகமாக எழுதியிருக்கிறார், மாவோயிஸ சித்தாத்திக்கு அம்பேத்கரைப் பற்றி எழுத முடியுமா, அம்பேத்கரைப் பற்றி எழுத அவருக்குத் தகுதி இருக்கிறதா என்றெல்லாம் கேள்விகளை எழுப்பினர்[9]. அருந்தியின் பேட்டி[10] மற்றும் கட்டுரை[11] அவர்களால் எதிர்க்கப்பட்டன. காந்தியைப் பற்றிய அவரது எழுத்துகளை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா, அல்லது அருந்ததியை எதிர்க்க வெறென்ன காரணம் இருந்தது என்று புரியாமல் தான் இருந்தது[12]. “தலித்” அறிவுஜீவிகள் ஒட்டு மொத்தமாக எதிர்த்தபோது, ஆதரவு, முஸ்லிம்-ஆதரவு இணைதளத்திலிருந்து வந்திருப்பது சிந்திக்க வைப்பதாக இருக்கிறது[13]. இதை இங்கு ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால், இவ்விசயத்தில் “முற்போக்கு” யார், “பிற்போக்கு” யார், சாதியத்தை எதிர்ப்பது யார், ஆதரிப்பது யார் என்பதையெல்லாம் புரிந்து கொள்ளத்தான்! “எழுத்தாளர்கள்” என்று தங்களைத் தாங்களே பற்பல அடைமொழிகளை வைத்துக் கொண்டு தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள் “செலக்டிவ் அம்னீஸியா” இல்லாமல் எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கவேண்டும். திராவிடம் இத்தகைய ஆண்-பெண் சேர்ப்பு, புனைப்பு, பிள்ளைப் பிறப்பு முதலிவற்றுடன் சம்பந்தப் பட்டிருப்பதால், ஒரு திராவிட உதாரணத்தையும் கொடுக்கலாம்.
வேதபிரகாஷ்
16-01-2015
[1] http://www.thehindu.com/news/national/tamil-nadu/what-is-behind-dravidian-parties-silence-in-perumal-murugan-issue/article6787696.ece?ref=relatedNews
[2] http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/article6788072.ece?utm_source=vuukle&utm_medium=referral
[3] A Reply To The Mahatma– Excerpted from Annihilation of Caste: The Annotated Critical Edition, published by Navayana, New Delhi.B.R. AMBEDKAR
[4] http://navayana.org/product/annihilation-of-caste/#_amscckbx
[5] “……And yes, the launch was cancelled by Navayana for a number of reasons, including an SMS that was circulated that said: “Save Ambedkar writings. Oppose Navayan publication. Annihilation of Caste is our holy book. Arundhati Roy and Anand. S contaminated it. Participate in the protest on 9th March at Sundaraiah Vigynana Kendram, Hyderabad.” From Arunthati’s letter.
http://roundtableindia.co.in/index.php?option=com_content&view=article&id=7284:arundhati-roy-replies-to-dalit-camera&catid=119&Itemid=132
[6] Strangely, some Dalit radicals and intellectuals have a problem with Arundhati Roy reading, learning from and expounding about Ambedkar. On March 9, Roy was to be in Hyderabad to launch the book. But the event was cancelled because the publisher feared protests from Dalit radicals who have been upset about the book.
[7] http://scroll.in/article/658279/Why-Dalit-radicals-don’t-want-Arundhati-Roy-to-write-about-Ambedkar
[8] அப்பிரசுரத்தின் நாராயணன் என்ற இளைஞர் ஒரு பிராமணர் என்பதால், அவ்வாறு கூறப்பட்டது.
[9] In other words, Dalit intellectuals think it is their right, by virtue of their caste, to decide whether a Maoist sympathiser can write on Ambedkar; whether one can write on the Ambedkar debate with Gandhi; or whether one is allowed to write more words in criticism of Gandhi than in praise of Ambedkar.
[10] http://www.outlookindia.com/article/We-Need-AmbedkarNow-Urgently/289691
[11] http://www.outlookindia.com/article/The-Doctor-And-The-Saint/289693
[12] http://www.newsyaps.com/ambedkar-arundhati-roy-and-the-politics-of-dalit-representation/102338/
[13] http://twocircles.net/2014mar13/dalit_intellectuals_voices_should_be_heard_arundhati_roys_ambedkar_introduction.html#.VKx3evmSynU
குறிச்சொற்கள்:அர்த்தநாரீஸ்வரர், எழுத்துரிமை, கருணாநிதி, கருத்து, கருத்து சுதந்திரம், கருத்துரிமை, காகச்சுவடு, பெருமாள் முருகன், பேச்சுரிமை, மாதொரு பாகன்
அநிருத்தன் வாசுதேவன், அருந்ததி ராய், அர்ஜுன் சம்பத், அர்த்தநாரீஸ்வரர், புத்தகம், பெண்களை மானபங்கம் செய்தல், பெரியாரத்துவம், பெரியாரிஸம், பெரியார், பெருமாள் முருகன், மாதொருபாகன், மார்க்சிஸம், மார்க்ஸ் இல் பதிவிடப்பட்டது | 16 Comments »
ஜனவரி 17, 2015
“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)

ஆதாரம் இல்லை – பெருமாள் முருகன்
மாதொருபாகன் பிரச்சினையை ‘சார்லி ஹெப்டோ’வுடன் ஒப்பிட்டது: இப்பிரச்சினையில், கிருத்துவ-இஸ்லாமிய சர்ச்சைகளையும் ஏன் இணைக்க வேண்டும் என்று சிலர் கேல்வி எழுப்பியுள்ளனர். ஆனால், அத்தகைய ஒப்பீட்டை “தி இந்து” தான் செய்தது[1], “ஜனநாயகச் சமூகங்களின் அடிப்படையே கருத்துச் சுதந்திரம்தான். அந்தக் கருத்துச் சுதந்திரத்தின் மீது நிகழ்த்தப்பட்ட கொலை வெறித் தாக்குதல்தான் ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகையின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல். அந்த இதழின் ஆசிரியர், கேலிச்சித்திரக்காரர்கள் நால்வர், காவலர்கள் இருவர் உட்பட 12 பேரைப் பயங்கரவாதிகள் கொன்றிருக்கிறார்கள். பேனாவுக்கு மாற்று பேனாதானேயொழிய, துப்பாக்கி அல்ல என்பதை உணராத அந்தப் பயங்கரவாதிகள், இந்தத் தாக்குதலின் மூலம் பிரான்ஸில் உள்ள அப்பாவி முஸ்லிம்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விட்டார்கள்!”, என்று ஆரம்பித்து, தி இந்து தமிழில், “உலகின் பெரும்பாலான நாடுகளில் இது ஒரு பெரிய பிரச்சினை. படைப்புகளை உருவாக்குபவர்கள் கத்தி மேல் நடப்பதுபோல் செயல்பட வேண்டியிருக்கிறது. இந்தியாவில் சமீபத்திய உதாரணங்களாக ஆமிர் கானின் ‘பி.கே.’ திரைப்படத்துக்கும் பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவலுக்கும் எழுந்த சகிக்க முடியாத எதிர்ப்புகளைக் குறிப்பிடலாம்”, என்று இதையும் சேர்த்துள்ளது[2]. பிறகு யார், யாருக்கு வழி காட்டுகிறார்கள்?

பெருமாள் முருகன் சமரசத்திற்கு பிறகு வெளியே வருதல்
பேச்சுவார்த்தைக்குப் பிறகு பெருமாள் முருகன் வெளியிட்ட கடிதம்: 13-01-2015 அன்று அமைதி பேச்சிற்குப் பிறகு, வெளியிட்ட கடிதம்[3]: “எழுத்தாளன் பெருமாள்முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல. ஆகவே, உயிர்த்தெழப்போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி, ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான். பெருமாள்முருகனுக்கு ஆதரவு தெரிவித்தும் கருத்துரிமையை முன்னெடுத்தும் போராடிய பத்திரிகைகள், ஊடகங்கள், வாசகர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள், அமைப்புகள், கட்சிகள், தலைவர்கள், மாணவர்கள் முதலிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகள். ‘மாதொருபாகன்’ நூலோடு பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. வெவ்வேறு அமைப்புகள், தனிநபர்கள் அவனுடைய ஏதாவது ஒரு நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும். ஆகவே, பெருமாள்முருகன் இறுதியாக எடுத்த முடிவுகள் வருமாறு:
- பெருமாள்முருகன் தொகுத்த, பதிப்பித்த நூல்கள் தவிர, அவன் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய அனைத்து நூல்களையும் அவன் திரும்பப் பெற்றுக்கொள்கிறான். இனி, எந்த நூலும் விற்பனையில் இருக்காது என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறான்.
- பெருமாள்முருகனின் நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு, நற்றிணை, அடையாளம், மலைகள், கயல்கவின் ஆகிய பதிப்பகத்தார் அவன் நூல்களை விற்பனை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான். உரிய நஷ்ட ஈட்டை அவர்களுக்கு பெ.முருகன் வழங்கிவிடுவான்.
- பெருமாள்முருகனின் நூல்களை இதுவரை வாங்கியோர் தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திவிடலாம். யாருக்கேனும் நஷ்டம் எனக் கருதி அணுகினால் உரிய தொகையை அவருக்கு வழங்கிவிடத் தயாராக உள்ளான்.
- இனி, எந்த இலக்கிய நிகழ்வுக்கும் பெருமாள்முருகனை அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான்.
- எல்லா நூல்களையும் திரும்பப் பெறுவதால் சாதி, மதம், கட்சி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்திலோ பிரச்சினையிலோ ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறான்.
அவனை விட்டுவிடுங்கள். அனைவருக்கும் நன்றி. – பெ.முருகன் (பெருமாள்முருகன் என்பவனுக்காக)”, தி இந்து இதை வெளியிட்டு, இக்குறிப்பையும் கொடுத்துள்ளது. குறிப்பு: சர்ச்சைக்குரிய ‘மாதொருபாகன்’ நாவல் எதிர்ப்புப் போராட்டக்குழுவினர் – எழுத்தாளர் பெருமாள்முருகன் இடையே நாமக்கல் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில், “ பெருமாள்முருகன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். ‘மாதொருபாகன்’ நாவலில் சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கப்பட வேண்டும். தற்போது விற்பனையில் உள்ள பிரதிகள் திரும்பப் பெறப்பட வேண்டும்” ஆகிய நிபந்தனைகள் வலியுறுத்தப்பட்டன. கடைசியாக, பெருமாள்முருகன் இவற்றை ஏற்றுக்கொண்டதன்பேரில், அவருக்கு எதிரான போராட்டங்களைக் கைவிடுவதாகப் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்துக்குப் பின் பெருமாள்முருகன் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை இது.

பெருமாள் முருகன் – மாதொருபாகன்
மாதொருபாகன் நாவல் ஆசிரியர் விரக்தி என் புத்தகங்களை தீவிட்டு கொளுத்துங்கள்[4]: பெருமாள்முருகன் 13-01-2015 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “எழுத்தாளன் பெருமாள்முருகன் இனி இல்லை. அவன் கடவுள் அல்ல. ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான். மாதொருபாகன்’ நூலோடு பிரச்சனை முடியப்போவதில்லை. வெவ்வேறு அமைப்புகள், தனிநபர்கள் நான் எழுதிய ஏதாவது நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும். நான் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் அனைத்தையும் திரும்பப்பெற்றுக்கொள்கிறேன். இனி எந்த நூலும் விற்பனையில் இருக்காது. எனது நூலை வெளியிட்ட பதிப்பகங்களுக்கு உரிய நஷ்டஈடு அளிப்பேன். எனது நூல்களை இதுவரை வாங்கியோர் தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திவிடலாம். யாருக்கேனும் நஷ்டம் எனக் கருதி அணுகினால் உரிய தொகையை அவருக்கு வழங்க தயார்”, என்று பெருமாள்முருகன் தெரிவித்துள்ளார்[5]. இது விரக்தியா, அகங்காரமா என்பது அவருக்குத்தான் தெரியும். “உயர்வு நவிற்சி அணி” எப்படியிர்க்கும் என்பது தமிழர்களுக்குத் தெரிந்தது தான்! மேலும், “‘மாதொருபாகன்’ நூலோடு பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. வெவ்வேறு அமைப்புகள், தனிநபர்கள் அவனுடைய ஏதாவது ஒரு நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும்”, என்பது, ஏதோ எச்சரிப்பது போலத்தான் உள்ளது. அப்படியென்றால், அவரது-அவர்களது அடுத்த திட்டம் என்ன என்று தெரியவில்லை.

மாதொரு பாகன் ஆதரவு.2
நாத்திகக் கட்சிகள் உள்நுழைந்து ஆர்பாட்டம் செய்தது: சென்னைப் புத்தகத் திருவிழாவில் புதன்கிழமை (14-01-2015) இரவு திடீரென இருவர் முகத்தில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு வந்து கருத்துரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து, அனுமதியின்றி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றனர்[6]. பபாசி நிர்வாகிகளும் வந்து புத்தகத் திருவிழா அமைதியாக நடக்க ஒத்துழைக்குமாறு கோரினர். ஆனால், முகத்தில் கருப்புத் துணி கட்டியவர்கள் கோஷங்களை எழுப்பி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் அப்பகுதியிலிருந்து போலீஸார் அழைத்துச் சென்றனர்[7]. எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய “மாதொரு பாகன்’ நூல் தொடர்பான சர்ச்சையில், எழுத்தாளருக்கு ஆதரவாக மாற்றுவின் இடதுசாரி இளைஞர் சார்பில் போராட்டம் நடைபெற்றது, ஆனால், டிவிசெனலில் “விடுதலை ராஜேந்திரன்” தன் பெயரைச் சொல்லிக் கொண்டு பேட்டி கொடுத்தார். அதாவது, திராவிடக்கழகத்தவரும் இதில் நுழைந்துள்ளனர். இது குறித்து பபாசி செயலர் கே.எஸ்.புகழேந்தி வெளியிட்ட அறிக்கையில், புத்தக திருவிழாவை குறும்பதிப்பகத்தார், எழுத்தாளர்கள், ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். புத்தகத் திருவிழாவுக்கு மட்டுமே காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆகவே, யாருக்கும் ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ யாரும் புத்தகக் காட்சி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். அடுத்த நாள், “எழுத்தாளர் பெருமாள் முருகன் செத்து விட்டான்”, என்றெல்லாம் செய்திகள் வெளியிடப்பட்டன[8]. பெருமாள் முருகன், இனிமேல் தான் எழுதுவதையே விட்டுவிடப் போகிறேன் என்றெல்லாம் பேட்டி கொடுத்தார்.

Madhuru Bagan – Oppopsition for sales increase DM
மனுஷ்ய புத்திரன், எல்.ஆர்.ஜெகதீசன் முதலியோரின் விமர்சனங்கள்: பெருமாள் முருகனுக்கு ஆதரவாக நண்பர்கள் சிலர் புத்தக கண்காட்சிக்கு வெளியே மெளனப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது பெருமாள் முருகன், தனது படைப்புகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், தன் நூல்களை வெளியிட்ட பதிப்பகங்கள் அந்த நூல்களை இனி விற்க வேண்டாம் என்றும், அதற்கான் நஷ்ட ஈடை தான் பதிப்பகங்களுக்கு கொடுத்து விடுவதாகவும், அதேபோல தன் புத்தகங்களை இதுவரை வாங்கியவர்கள் அவற்றை எரித்துவிடலாம் என்றும், அதற்கான நஷ்ட ஈடை தான் கொடுத்து விடுவதாகவும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்… இதன் மூலமாக தனக்காக குரல் கொடுத்த அத்தனை பேரையும் செருப்பால் அடித்திருக்கிறார் பெருமாள் முருகன். ………அவர் – பெருமாள் முருகன் இப்போது செய்திருப்பதென்ன? இது பச்சையான கோழைத்தனம். பச்சாதாபத்தை தூண்டி தனக்கு இப்போது கிடைத்திருக்கும் ஊடக வெளிச்சத்தை இன்னும் சில தினங்களுக்கு தக்க வைத்துக் கொள்ளும் முயற்சி இது, என்று சாடியுள்ளார் மனுஷ்ய புத்திரன்[9]. எல்.ஆர்.ஜெகதீசன், காட்டமாக இதற்கெல்லாம் பெரியார் தான் காரணம் என்று நக்கலாக வாதம் புரிந்துள்ளார்[10]. அதாவது, இங்கு உண்மையினை மறைத்து, பிரச்சினையைத் திசைத்திருப்பி, விசயத்தையும் வேறுவழியில் இழுத்துச் செல்லும் போக்கைக் கவனிக்கலாம்.

ருஷ்டி-நஸ்.ரீன் -முருகன்
தமிழ் இந்துவின் விவரங்கள்: சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் கவிதைகள்’ நாவல் தடைசெய்யப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் ‘டாவின்சி கோட்’ திரைப்படம் தடை செய்யப்பட்டது. இந்த ஆண்டு வெண்டி டோனிகரின் ‘தி ஹிந்துஸ்: அன் ஆல்டர்னேட்டிவ் ஹிஸ்டரி’ புத்தகம். இன்னும் ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். இந்த உதாரணங்களுடன், எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவலும் சேர்ந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது, என்று “தி இந்து” கூறுகிறது. இந்த நாவல், திருச்செங்கோடு பற்றியும் அங்குள்ள கோயிலைப் பற்றியும் இந்துப் பெண்களைப் பற்றியும் தவறாகச் சித்தரிக்கிறது என்று சொல்லி, சில இந்து அமைப்புகள் புத்தகத்தின் பிரதிகளைச் சமீபத்தில் எரித்துப் போராட்டம் நடத்தின. எழுத்தாளர் பெருமாள்முருகனைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான அந்த அமைப்புகளின் செயலைக் கண்டித்துத் தமிழகமெங்கும் கண்டனக் குரல்கள் எழுந்திருக்கின்றன[11], என்று விவரித்தது. எம்.எஃப்.ஹுஸைன், தஸ்லீமா நஸ்.ரீன், ஜோசப் முதலியோரை விட்டுவிட்டது! பொதுமக்கள் திரண்டு எதிர்த்துள்ளதை மறைத்து, அவர்களைக் கண்டித்து, தமிழகம் எங்கும் குரல்கள் எழுந்துள்ளது என்று விவரிப்பது வேடிக்கையாக இருக்கிறது.
வேதபிரகாஷ்
16-01-2015
[1] தி இந்து, பேனாவைக் கொல்ல முடியாது!”, 10-01-2015.
[2]http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article6785870.ece
[3]http://tamil.thehindu.com/opinion/editorial/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/article6772647.ece
[4] தினகரன், மாதொருபாகன் நாவல் ஆசிரியர் விரக்தி என் புத்தகங்களை தீவிட்டு கொளுத்துங்கள், 14-01-2015.00.08.39, புதன்கிழமை.
[5] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=127240
[6]http://www.dinamani.com/edition_chennai/chennai/2015/01/15/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/article2620630.ece
[7] தினமணி, கருத்துரிமைக்காக போராட்டம், By dn, சென்னை First Published : 15 January 2015 04:47 AM IST
[8] The Hindu, “The writer is dead”, Wednesday, 14-01-2015, p.7.
[9] http://heronewsonline.com/novel-controversy/
[10] http://heronewsonline.com/periyaar/
[11]http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/article6733122.ece
குறிச்சொற்கள்:எழுத்துரிமை, கதை, கருணாநிதி, கருத்து, கருத்து சுதந்திரம், கருத்துரிமை, நாவல், பெருமாள் முருகன், பேச்சுரிமை, மாதொரு பாகன்
அநியாயம், அநிருத்தன் வாசுதேவன், கலவி, கூடா கலவி, படு, பாசிஸம், பாஜக, பாலியல், பிஜேபி, பெரியாரத்துவம், பெரியாரிசம், பெரியாரிஸம், பெரியார், பெருமாள் முருகன், மனம், மனைவி, மாதொருபாகன், மார்க்சிஸம் இல் பதிவிடப்பட்டது | 11 Comments »
ஜூன் 28, 2013
நிகாதத் சட்டத்தை எதிர்க்காத திராவிடத்தின் இன்னொரு போலித்தனம் – இஸ்லாமிடம் ஏமாந்தும் புத்தி வராத பெரியார் பித்துகள்!
பெரியாருக்குப் பாடம் புகட்டியும் பாடம் கற்காக திராவிட பிஞ்சுகள்: ஜின்னா பெரியாரை நன்றகவே கடிந்து கொண்டார், தான் முஸ்லிம்களுக்காகத் தான் பாடுபட முடியும், திராவிடர்களுக்காக பாடுப்பட முடியாது. பெரியாருக்கு ஸ்திரமான மனது இல்லை என்றெல்லாம் கடிதங்களில் சாடியுள்ளார். இருப்பினும் உண்மைகளை மறைத்து, மறந்து திராவிடக் கட்சிக்கள் முஸ்லிம்களை தாஜா செய்து கொண்டே தான் இருக்கின்றன. “ஏய் வராதே போ” என்றாலும் போய்-போய் ஒட்டிக்கொள்ளும் புத்தி என்னவென்று தெரியவில்லை. காபிர்களை அவர்கள் அப்பட்டித்தான் நடத்துவார்கள் என்பதனை எப்பொழுது புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை[1].
தமிழர்களை ஏமாற்றி இரண்டு வீடுகளை அபகரிக்கும் முஸ்லிம்கள்: சமீபத்தில், இலங்கைத் தமிழர்களே எப்படி இந்திய அரசாங்கம் ஒதுக்கும் வீடுகளை முஸ்லிம்கள் இருமுறை அபகரிக்கிறார்கள் என்று வெளிப்படையாகவே நோட்டீசுகள் விநியோகித்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்[2]. ஏழைநாடான இந்தியா அப்பொழுது ஏன் இலங்கைக்கு உதவுகிறது என்றும் கேட்கவில்லை[3]. ஆனால், வெல்லிங்டனில் இலங்கையினருக்கு பயிற்சி கொடுப்பதை எதிர்க்கின்றனர். அப்பொழுது, தமிழகத் தலைவர்கள், இனமான போராளிகள், திராவிட கத்திகள், போர்வாள்கள் எதுவுமே கண்டுகொள்ளவில்லை.
இஸ்லாமிய “நிதாகத்” சட்டத்தை ஏன் கருணாநிதி எதிர்க்கவில்லை?: அரபு நாடுகளில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை[4]: “சவூதி அரேபியாவில் நிதாகத் என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அந்தச் சட்டம் கடுமையாக நடைமுறைக்கு வரும் போது , அந்த நாட்டில் உள்ள எல்லா நிறுவனங்களிலும் பத்து சதவிகித இடங்களை சவுதி அரேபியர்களைக் கொண்டு தான் நிரப்ப வேண்டும் இதன் அடிப்படையில், இப்போதே அதனை அமல்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். அவர்கள் நாட்டைச் சேர்ந்த பத்து சதவிகிதத்தினரை பணிக்கு அமர்த்துகின்ற காரணத்தால், அந்த இடங்களிலே இதுவரை பணியாற்றி வந்த வெளிநாட்டினரையெல்லாம் திரும்ப அனுப்பும் நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு துவங்கி விட்டது[5].
வரும் ஜூலை 3-ஆம் தேதிக்குள் 60 ஆயிரம் இந்தியர்கள், இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட உள்ளனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தமிழர்கள். அதைப் போலவே குவைத் நாட்டில் பணிபுரியும் 1.20 லட்சம் தமிழர்களில் பலர் வெளியேற்றப்படும் நிலைமை உருவாகியுள்ளது. அந்த நாடுகளில் பணியாற்றும் தமிழர்கள் பல்லாண்டு காலமாக தங்கள் குடும்பத்தோடு அங்கே குடியேறி அந்த நாடுகளோடு ஐக்கியமாகி விட்டவர்கள். அவர்கள் தொடர்ந்து அங்கேயே பணியாற்ற இந்திய அரசும், தமிழ் மாநில அரசும் உதவிட முன் வர வேண்டுமென்று விரும்புகின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் இந்தப் பிரச்னையில் உடனடியாகத் தலையிட்டு, அவர்கள் தொடர்ந்து அந்த நாடுகளில் வாழவும், அவர்களுடைய வாழ்வாதாரத்தைக் காப்பாற்றவும், தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்”, என்று அவர் வலியுறுத்தியுள்ளார்[6].
தேசிய அளவில் கொள்லையடிக்கும் போது கூட “இந்தியர்கள்” என்ற உணர்வு வராதது: இப்பொழுதுகூட 50,000 இந்தியர்களைப் பற்றிக் கவலைப்படாமல், 10,000 தமிழர்கள் என்று பேசுகிறார்கள். “திராவிட நாடு” கனவு கண்டு, அண்ணாதுரை காலத்திலேயே, எதிர்ப்பை கைவிட்டு அரசியல் நிர்ணயச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு, முதலமைச்சாராகி, சுயமரியாதை திருமணங்கள் மரியாதை இல்லாமல் ஆகிப்போன போது, இந்து திருமணச் சட்டத்தில் ஐக்கியம் ஆகி மானத்தைக் காப்பாற்றிக் கொண்ட பிறகும், “மாநில சுயயாட்சி” பேசி ஏமாற்றி, இந்திய ஜனாதிபதி ஆகிவிடவேண்டும் என்று கனவு காணும் கருணாநிதிக்கு இன்னும் தேசிய மனப்பாங்கு, நாட்டுச்சிந்தனை, பரந்த குணம் வரவில்லை என்பர்து வேடிக்கையாக இருக்கிறது.
பிரச்சாரரீதியில் முன் வைக்கப் படும் பிரச்சினை: பிரச்சினை உண்மையா, பொய்யா அல்லது பீதிகிளப்ப உருவாக்கப்பட்டுள்ளதா என்று அலசப்படும் நிலையில், ஊடகங்கள் மற்றும் தமிழில் எழுதுபவர்கள் வெவ்வேறுவிதமாக வரைந்து கட்டிக் கொண்டிருந்தார்கள்[7]. இப்பொழுது கருணாநிதி குட்டையைக் குழப்ப வந்திருக்கிறார்:
- ஆசியக்காரர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
- இந்தியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
- கேரளத்தவரர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
- கேரள முஸ்லீம்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
- கேரள கிருத்துவர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
- கேரள இந்துகளுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது[8].
என்று ஒருபக்கம் தலைப்புகள் இட்டு ஆங்கில ஊடகங்கள் அலசும்போது, தமிழில் கீழ்கண்டவாறு செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்:
- சவுதி அரேபிய சட்டத்தினால் இந்தியர்கள் வேலை இழக்கக்கூடும்[9].
- அரேபிய அரசின் நடவடிக்கையால் தமிழர்கள் வேலை இழக்கும் அபாயம்[10]
- வேலை இழக்கும் தொழிலாளர்களை அழைத்து வர இலவச விமான சேவை[11]
- கேரளாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உதவிமையம்[12]
- சவுதியில் வேலை இழந்தவர்களுக்கு இந்தியாவில் வேலை.
என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், அரசியல்வாதிகளும் வாக்குற்திகளையும், சலுகைகளையும் அள்ளிவீசிக்கொண்டிருக்கிறார்கள்
கேரளக்காரர்கள் முன்பு தங்களது பிரச்சினைப் போலக் காட்டிக் கொண்டார்கள்[13]. அப்பொழுது நன்றாக தூங்கி விட்டு, இரண்டு மாதங்கள் கழித்து அறிக்கை விட்டிருக்கிறார் நமட்த்ஊ வீரர், தலைவர், மூதறிஞர்……………சவுதியில் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தாலே 50,000 வெளிநாட்டு ஆட்களை அனுப்பிவிடலாம் என்று சவுதி இளவரச்ரே வெளிப்படையாக சொன்னார்[14]. உத்தரகாண்ட மாநிலத்தில் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்று இவர் அறிக்கைவிடவில்லை. அப்பொழுதெல்லாம், சும்மாயிருந்து விட்டு, இப்பொழுது இவர் அறிக்கை விடுவதன் மர்மம் என்ன?
வேதபிரகாஷ்
© 28-06-2-13
சட்ட மீறலாகவும், உரிய பணியனுமதியின்றியும் தங்கியுள்ள வெளிநாட்டவர் தாயகம் திரும்பவோ, சட்டத்திற்குட்பட்டு தங்கள் ஆவணங்களைச் சரி செய்துகொள்ளவோ சவுதி அரேபியா அறிவித்திருந்த சலுகைக் காலம் மேலும் நான்கு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 4ம் , 2013 தேதிக்குள் (அரபு புது வருடம் முஹர்ரம் 1) எவ்வித அபராதமோ, தண்டனையோ இன்றி அத்தகையோர் தம் நாடு திரும்பவோ, முறையான பணி தேடி அமரவோ செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.dinamalar.com/news_detail.asp?id=747882
02-07-2013 அன்று சேர்க்கப்பட்டது.
[8] இதுவரை யாரும் சொல்லவில்லை, ஏனெனில் அப்படி குறிப்பிட்டால், இந்திய செக்யூலரிஸ அளவுகோள்களின் படி, உடனடியாக அவர் “கம்யூனலிஸ” சித்தாந்தியாகி விடுகிறார்.
[11] “சவுதி அரேபிய அரசின், புதிய சட்டத்தால், அங்கு பணியாற்றும் இந்திய தொழிலாளர்கள், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேலை இழந்தவர்கள், கேரளாவுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கான விமான பயண கட்டணத்தை, மத்திய அரசே, செலுத்த முன்வந்துள்ளது,” என, கேரள முதல்வர், உம்மன் சாண்டி கூறினார்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=681845
[12] இந்த விவகாரம் குறித்து, கேரள அமைச்சக கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. கேரளாவைச் சேர்ந்தவர்கள், சவுதியில், வேலை இழந்து திரும்பினால், அவர்களுக்கான மறு வாழ்வு பணிகளை மேற்கொள்வது குறித்தும், அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஒவ்வொரு மாவட்ட, கலெக்டர் அலுவலகங்களிலும், உதவி மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, உம்மன் சாண்டி கூறினார்.
குறிச்சொற்கள்:அண்ணத்துவம், அண்ணாதுரைத்துவம், அண்ணாத்துவம், அவகாசம், ஆப்கானிஸ்தான், கன்னடியர், கருணாநிதித்துவம், காபிரிஸ்தான், காலம், குவைத், சமயசார்பு, சமயபேதம், சமயப்பொறை, சவுதி, செக்யூலரிசம், செக்யூலரிஸம், தமிழர், திரவிடத்துவம், திராவிட பித்தம், திராவிடத்துவம், திராவிடன், திராவிடம், தெலுங்கர், நிகாதத், நீட்டிப்பு, நூரிஸ்தான், பாஸ்போர்ட், மத ஆதரவு, மதசார்பு, விசா
அண்ணாத்துவம், அண்ணாயிசம், அமீரகம், அலி, அவகாசம், கருணாநிதித்துவம், காலம், சமய ஆதரவு, சமய இணக்கம், சமய குழப்பம், சமய சச்சரவு, சமயசார்பு, சமயப்பிணக்கு, சலுகை, ஜின்னா, தமிழ்சங்கம், தலித்துஸ்தான், திராவிடத்துவம், திராவிடஸ்தான், நீட்டிப்பு, நூரிஸ்தான், பாஸ்போர்ட், பெரியாரத்துவம், பெரியாரிசம், பெரியாரிஸம், பெரியார், பெரியார் குஞ்சு, பெரியார் பக்தி, பெரியார் பிஞ்சு, பெரியார் பித்து, மதங்களின் மோதல், மதசச்சரவு, மதசார்பின்மை, மதசார்பு, மதப்பிணக்கு, மதமோதல், மதவாதம், மதவெறி, மஹர்ஸ்தான், முகமது, முகமது அலி ஜின்னா, விசா இல் பதிவிடப்பட்டது | 1 Comment »