Archive for the ‘பதமவிபூஷண்’ Category

தீவிரவாதி, அரை-நிர்வாண நடன நடிகை, மோசடிப் பேர்வழி, சிறைக்குச் சென்றவர்கள் இப்படி எல்லோருக்கும் பத்ம விருதுகள் அளிக்கப் படுகின்றன – ஆனால், தகுதி உரியவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை!

நவம்பர் 10, 2013

தீவிரவாதி, அரை-நிர்வாண நடன  நடிகை,  மோசடிப் பேர்வழி, சிறைக்குச் சென்றவர்கள் இப்படி எல்லோருக்கும் பத்ம விருதுகள் அளிக்கப் படுகின்றன – தகுதி உரியவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை!

தேசிய விருது கொடுக்கப்பட வேண்டுமானால், அசடிப் பேர்வழி, சிறைக்குச் சென்றவர்கள் இப்படி எல்லோருக்கும் பத்ம விருதுகள் அளிக்கப் படுகின்றன – ஆனால்,ந்தந்த மாநிலத்திலிருந்து பெயர் பரிந்துரைக்கப் படவேண்டும். அவரைப் பற்றிய விவரங்கள் அனுப்பப்படவேண்டும். பிறகு, மத்தியில் “ரெகமன்டேஷன்” தேவை. அப்பொழுதுதான் விருதுகள் கிடைக்கும். பத்ம விருதுகள் அளிக்கப்படும் முறைப் பற்றி அதிகமாகவே விமர்சனங்கள் வந்துள்ளன. காங்கிரஸைப் பொறுத்த வரைக்கும் அது கேவலமாகி விட்டது எனலாம். ஒவ்வொரு தடவையும், பத்ம விருதுகளைப் பெறும் பட்டியல்களில் உள்ளவர்களைப் பார்த்தால் ஆச்சரியமாகவும், கோபமாகவும், வெறுப்பாகவும், வருத்தமாகவும் இருக்கும். ஏனெனில், பலர் அதில் சம்பந்தமே இல்லாதவர்களாக இருப்பர். அருகதையைப் பற்றி பிறபாடுத்தான் பேச வேண்டிய நிலையிருக்கும்.

 • யார் பரிந்துரை செய்கிறார்கள்,
 • யாருக்கு பரிந்துரை செய்கிறார்கள்,
 • யார் யாருக்கு பரிந்துரை செய்கிறார்கள்,

என்பதெல்லாம் விவஸ்தையே இல்லை. மதம், மாநிலம், ஜாதி, அரசியல் கட்சி என்று பார்த்துதான் பரிந்துரை செய்யப் படுகின்றன. அவ்வாறே அரசியல்வாதிகளின் தயவோடு வேண்டியவர்களுக்குக் கிடைக்கிறது.

மாநிலத்திற்கு  மாநிலம்  பாரபட்சம்  ஏன்?: நமது தமிழ்நாட்டில் உள்ள பல கலை வல்லுனர்களுக்கு இன்னும் இவ்விருதுகள் வந்து சேரவில்லை என்ற ஆதங்கம் தமிழர்களிடம் மேலோங்கி உள்ளது. குறிப்பாக, தமிழர்களின் வாழ்வியலோடு பிண்ணிப் பிணைந்திருக்கும் பல்லாயிரம் பாடல்களுக்கு இசையமைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு இவ்வளவு காலம் ஆகியும் பத்ம விருது வழங்கப்படவில்லை என்ற ஆதங்கமும், ஆற்றாமையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட அனைத்து தமிழர்களுக்குமே உண்டு[1]. டி.எம்.எஸ், ஏம்.ராஜா போன்ற பாடகர்கள் ஒதுக்கப்பட்டனர், ஆனால், மற்ற மாநிலத்தைச் சேர்ந்த பாடகர்கள், ஒன்றிற்கும் மேலாக பத்ம விருதுகளை வங்கியுள்ளனர். ஜேசுதாஸ், எஸ். பி. பாலசுரமணியம் போன்றவர்கள் தமிழைத்தவிர இதர மொழிகளில் பாடியதால் அவ்வாறு பலவிருதுகளைப் பெற்றனர். இந்நிலையில், பத்ம விருதுகளுக்கு உரிய கலைஞர்களை எந்த அளவுகோலின்படி தேர்வு செய்கிறார்கள்? இதுவரை யார் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்று யார்,யார் பரிந்துரைத்துள்ளார்கள்? என்று சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வினாக்கணை தொடுத்திருந்தார்.

தங்களுக்குத்  தானே  பரிந்துரை  செய்து  கொள்வது: பத்ம விருதுகளுக்கு முக்கிய பிரமுகர்கள் சிலர் தங்களது உறவினர்களையும், நண்பர்களையும் பரிந்துரை செய்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள உள்துறை அமைச்சகமானது, இந்த ஆண்டுக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட 1,300 பேர் கொண்ட பெயர் பட்டியலை அளித்துள்ளது[2]. அதில், தங்களது மகன்-மகள், உறவினர்கள், நண்பர்கள் என்று தான் பரிந்துரைச் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே பரிசுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

பத்மஶ்ரீ, பத்மவிபூஷண்யாருக்குக்  கொடுக்கப் படுகிறது: அதில் காங்கிரஸ் தலைவர் மோதிலால் வோரா, மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா, எம்.பி. சுப்பராமி ரெட்டி, ஹிந்துஸ்தானி இசைப் பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் உள்ளிட்டோர் பல்வேறு நபர்களுக்கும் இந்த விருதுகளை அளிக்குமாறு பரிந்துரை அளித்துள்ளனர். “பாரத ரத்னா’ விருது பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் மூன்று பேருக்கு பத்ம விருதுகளை அளிக்குமாறு பரிந்துரைத்தார். அவரது சகோதரி உஷா மங்கேஷ்கர், பின்னணிப் பாடகர் சுரேஷ் வடேகர், சமூக ஆர்வலர் ராஜ்மால் பரேக் ஆகியோரே அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், “பத்மவிபூஷண்’ விருது பெற்றவரும், சரோட் இசைக் கலைஞருமான உஸ்தாத் அம்ஜத் அலி, தனது மகன்களான அமான், அயான் மற்றும் ஹிந்துஸ்தானி பாடகர் கௌஷிக் சக்ரவர்த்தி, தபேலா கலைஞர் விஜய் காட்டே, ஓவியர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி என்ற நடராஜா கிருஷ்ணமூர்த்தி, சிதார் இசைக் கலைஞர் நீலாத்ரி குமார் ஆகிய 6 பேரையும் இவ்விருதுகளுக்குப் பரிந்துரைத்துள்ளார்.

பத்ம  விருதுகளுக்கு  ஏராளமான  சிபாரிசுகள்: நடிகையும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜெயப்பிரதாவை சமாஜவாதி கட்சியின் முன்னாள் பொதுச் செயலர் அமர் சிங் பரிந்துரைத்துள்ளார்[3]. ஆனால், உஷா மங்கேஷ்கர் மற்றும் உஸ்தாத் அம்ஜத் அலியின் மகன்களான அமான், அயான் ஆகியோரின் பெயர்கள் இந்த ஆண்டுக்கான பத்ம விருது தேர்வாளர்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. பிரபல பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் 9 நபர்களையும், மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா 8 பேரையும், உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே மேடை நாடகக் கலைஞர்கள் 2 பேரையும், வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் 2 பேரையும், காங்கிரஸ் எம்.பி. விஜய் தார்தா 3 பேரையும் பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்துள்ளனர். பத்ம விருதுகளுக்கு ஏராளமான சிபாரிசுகள், அதிலும் குறிப்பாக பணப் பலன் அளிக்கக் கூடிய மருத்துவம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு தவிர்க்க முடியாததாகி விட்டது என தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் சுபாஷ் அகர்வால் தெரிவித்தார்[4].

தீவிரவாதி,   அரைநிர்வாணநடிகை,   மோசடிப்  பேர்வழி,   சிறைக்குச்  சென்றவர்கள்  இப்படி  எல்லோருக்கும்  பத்மவிருதுகள்  அளிக்கப்படுகின்றன: 2010ல் காஷ்மீர தீவிரவாதிகளுக்குக் கூட பத்மஶ்ரீ கொடுக்கப்பட்டது[5]. சந்த் சிங் சத்வல் என்ற அமெரிக்காவில் ஓட்டல் வைத்திருப்பவருக்குக் கூட கொடுக்கப்பட்டது. இவர் ஏற்கெனவே குற்றங்களில் சம்பந்தப்பட்டவராம். குலாம் மொஹம்மது மீர் அல்லது மூமா கான் ஒரு தீவிரவாதி[6] மற்றும் சையது அலி ஒரு நடிகன். இன்னொருவர், “நிர்வாண நடனம் ஆடும் நடிகைகளுக்குக் கூட பத்ம விருதுகள் கொடுக்கப் படுகின்றன, ஆனால், தீவிரவாதிகளினால் கொலைசெய்யப்படும் அல்லது தீவிரவாதிகளை எதிர்கொண்டு இறப்பவரை, தியாகிகளுக்கு ஒன்றும் கொடுப்பது கிடையாது”, நொந்து போய் எழுதியிருந்தார்[7]. மோஹன்பாபு, பிரம்மானந்தம் போன்ற நடிகர்களுக்கு பத்மஶ்ரீ கொடுத்தத்தை எதிர்த்து வழக்கும் போடப்பட்டது[8]. யாஸின் மர்சென்ட் என்ற உலக பில்லியார்ட் வீரர், ராஹுல் காந்திக்கு எழுதி கடிதத்தில்[9],

 • “அரிய விலங்கினகளைக் கொன்றவர்களுக்கு (சல்மான் கான்),
 • திருமணம் செய்து கொள்ளாமல் தகாத உறவுமுறை கொண்டு வாழ்பவர்களுக்கு (கமல் ஹஸன் முதலியோர்),
 • மனைவியரை விட்டுச் சென்றவர்களுக்கு/ கொடுமைப்படுத்தியோருக்கு (ஓம் புரி முதலியோர்),
 • மனை-மக்களை விட்டுச் சென்றவர்களுக்கு,
 • ஒன்றும் தெரியாத கற்றுக் குட்டிகளுக்கு,
 • ஆமாம் போடும் சாமிகளுக்கு
 • விளையாட்டு என்றாலே தெரியாத ஆசாமிகளுக்கு[10],

என்று இவர்களுக்கெல்லாம் பத்ம விருதுகள் கொடுக்கப்படுகின்றனவே, ஆனால், எனக்கு ஏன் கொடுக்கப்படவில்லை என்று தெரியவில்லை”, என்று காட்டமாகவே குறிப்பிட்டிருந்தார்[11]. இது தவிர கடந்த பத்த்ஆண்டுகளில் பலவிதமான குற்றங்கள்,

 • மோசடிகள் செய்தவர்கலுக்கு பத்ம விருதுகள் கொடுக்கப் பட்டிருக்கின்றன:
 • பர்கா தத் ஊழலில் திளைத்த ஆசாமிகளுக்கு ஏஜென்டாக வேலைசெய்தார் (2008).
 • பல வரியேப்புகளை செய்த அருண் பிரோடியா[12] [ Arun Firodia, founder and chairman of the Kinetic Group of companies].
 • தீஸ்தா செதல்வாத் [Teesta Setalvad] – சர்ச்சைக்குள்ள பல வழக்குகளில் சிக்கியுள்ளதால் உச்சநீதி மன்றத்தினால் கண்டனத்திற்கு உள்ளானவர்.

இப்படி பட்டியல் நீளுகிறது.

© வேதபிரகாஷ்

10-11-2013


[2] தினமணி, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும்பத்மவிருதுகள்அளிக்கபரிந்துரை, First Published : 10 November 2013 02:28 AM IST

[5] The controversies over the Padma Awards seeming to be growing with every passing day.

After the row over US-based hotelier Sant Singh Chatwal’s Padma Bhushan and Bollywood actor Said Ali Khan’s Padma Shri, there are reports that a former terrorist from Jammu and Kashmir is among those who received the Padma Shri this year 2010. The list of Padma Shri awardees for public service includes the name of Ghulam Mohammed Mir, who is also known as Muma Khan.

[11] “Most importantly, the list included ‘Youth Icons’ who have been conferred with Padma Bhushans and Padma Shris for setting such examples like being allegedly involved in killing endangered species, having live-in relationships, abandoning wives and kids and moving on to ‘greener pastures’, getting involved in immature, juvenile digs at fellow performers. Are these the role models for our children?” Merchant writes.

http://articles.timesofindia.indiatimes.com/2010-01-30/snooker-billiards/28128418_1_yasin-merchant-final-list-deserving-candidates