Archive for the ‘இந்திய விரோதிகள்’ Category
பிப்ரவரி 27, 2018
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்– ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (3)

பார்வையாளர் கூட்டம்……………………………………..

மதிய உணவு நேரம்………………………..

பரிமாறும் மாணவியர்………………………….
கருத்து சுதந்திரம் எப்படி மற்ற மதவிசயங்களில் சுருங்கி விடுகிறது: உதாரணத்திற்கு, இதையும் எடுத்துக் கொள்ளலாம். இந்துமதத்தைப் பற்றி குதர்க்கமாக பல கேள்விகளைக் கேட்பார்கள். கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் அடிமனத்தில் ஊறியிருப்பதன் வெளிப்பாடுதான், அத்தகைய குதர்க்கமான கேள்விகளுக்கு ஊற்றாக இருந்து வருகிறது. கருத்து சுதந்திரம் எப்படி மற்ற மதவிசயங்களில் சுருங்கி விடுகிறது என்று செக்யூலரிஸ மேதைகள் விளக்குவதில்லை. குறிப்பிட்ட கூட்டங்கள், சித்தாந்திகள், அமைப்புகள் மட்டும் என்னவேண்டுமானாலும் கூறலாம், எழுதலாம் ஆனால், மற்றவர்கள் செய்யக் கூடாது என்றால் ஒருநிலையில் அத்தகைய பாரபட்சம் வெளிப்பட்டு விடுகிறது. இந்திய குடிமகன்களுக்கு எல்லோருக்கும் தான் கருத்து சுதந்திரம் இருக்கிறது, ஆனால், அவ்வாறு நினைப்பதோ பேசுவதோ, எழுதுவதோ அனுமதிக்கப் படுவதில்லையே? நினைப்பு-சுதந்திரம், பேச்சு-சுதந்திரம், எழுத்து-சுதந்திரம் முதலியவை ஏன் எல்லா இந்தியர்களுக்கும் அமூல் படுத்துவதில்லை என்றும் விளக்கப்படுவதில்லை. கடந்த ஆண்டுகளில் –
- ஷா பானு வழக்கு,
- சிவில் கோட் முஸ்லிம்களுக்கு செல்லாது,
- சல்மான் ருஷ்டியின் புத்தகம் தடை,
- உஸைன் சித்திரங்கள்,
- பொது சிவில் சட்டம் உச்சநீதி மன்ற தீர்ப்பு,
- தேசிய கீதம் பாடுவது,
- அதற்கு மரியாதை கொடுப்பது,
- மறுப்பது (ஜெஹோவா விட்னெசஸ்)
என்ற பல விசயங்களில் முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களுக்கு சாதகமகத்தான் அரசு இருந்திருக்கிறது. ஆனால், இந்துக்கள் விசயங்கள் வரும்போது, அவர்களுக்கு எதிராக செயல்பட்டதும் மக்கள் உணர்ந்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் இவ்விசயங்கள் அலசப்பட்டு வருவதால், இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப் பட்டு வருகிறார்கள் என்ற எண்ணம் உருவாகியுள்ளது.

Marx, Lenin, Mao- trinity of Communism
சித்தாந்தங்களை, சித்தாந்த ரீதியில் எதிர்ப்பது எப்படி?: குறிப்பாக நாத்திக-கம்யூனிஸ வாதங்களை எதிர்ப்பது என்பதை பார்ப்போம்:
- “இருக்கிறது” மற்றும் “இல்லை” என்ற இரண்டும் நம்பிக்கைகள் தாம். எந்த நம்பிக்கை மூலம் மனிதர்கள் சிறந்தார்கள் என்பது தான் நிதர்சனம்.
- நாத்திகம் என்பது பெரும்பாலும் பொய்யை அடிப்படையாகக் கொண்ட சித்தாந்தம், ஏனெனில், இல்லை என்று கூறுவது சுலபம்!
- “பொதுவுடமை” சித்தாந்தத்தில், எல்லாமே “வேண்டாம்” அல்லது “பொது” என்றபோது, சொத்து, குடும்பம் முதலியவை இடித்தன!
- குடும்பம் இருந்தால் சொத்து இருக்கும் எனும்போது, இல்லாத நிலை உருவாக்க, மனைவியை – பெற்றப் பிள்ளைகளை பொதுவாக்க முடியாது.
- பொதுவுடமை சித்தாந்தத்தில் அச்சடித்த, உருவங்களைப் போல, எல்லோரையும் ஒரே மாதிரி உருவாக்க முடியாது, இருப்பவற்றை பங்கு போட முடியாது!
- நாத்திக-பொதுவுடமை-மற்றத் தலைவர்கள், ஒன்றாக இல்லை, பதவி-அந்தஸ்து-பணம் முதலிய அடுக்குகளில் உயர்ந்து-தாழ்ந்து தான் இருக்கிறார்கள்!
- சித்தாந்திகளின் உயர்ந்த-தாழ்ந்த அடுக்குகளில், தலைவர்களுக்கு கீழுள்ளவர்கள் / தொண்டர்கள் / சேவகர்கள் – சூத்திரர்கள் தாம்!
- சமத்துவ-சகோதரத்துவங்களில் எல்லோருமே தலைவர்கள், தீர்க்கதரிசிகள், நபிகள் ஆகிவிட்டால், யார் வேலை செய்வார்கள்?
- என் தாய், என் தந்தை, என் மனைவி, என் குழந்தை என்றில்லாமல், வேறு மாதிரி சமத்துவ-சகோதரத்துவ-பொதுவுடமைவாதிகள் கூற முடியுமா?
- சம-பொது நீதி, நிலையில் நீதிபதி, நீதிமன்றங்கள் கூடாது, ஆனால், சித்தாந்த நாடுகளில் உள்ளது உயர்ந்த-தாழ்ந்த அடுக்குகளை வெளிப்படுத்துகின்றன.

வகுப்புகள் போன்று நடத்தி பயிற்சி அளிக்க வேண்டும்: கடந்த 60-70 ஆண்டுகால சரித்திரம், அரசியல் கூட்டணிகள், சித்தாந்தங்கள், இவற்றைப் பற்றி, அறிந்தவர்களை வைத்து வகுப்புகள் போன்று நடத்தி பயிற்சி அளிக்க வேண்டும். இது வாரத்தில் ஓரிரு நாட்கள் [சனி-ஞாயிறு] அல்லது மாதத்தில் ஒரு முறையாவது இருக்க வேண்டும். உணர்ச்சி பூர்வமான கோஷங்கள், பேச்சுகள், அறைத்த மாவையே அறைக்கும் போன்ற விசயங்கள் உதவாது.
- கடந்த 60-70 ஆண்டுகால சரித்திர நிகழ்வுகள் பற்றி நிச்சயமாக தெரிந்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
- அரசியல் நிர்ணய சட்டம், அச்சட்டம் உருவாகிய நிலையில், பாராளுமன்றத்தில் நடந்த விவாதங்கள், எவ்வாறு ஒவ்வொரு சரத்து ஏற்படுத்தப் பட்டு, சேர்க்கப்பட்டது போன்ற விவரங்கள் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.
- ஏபிவிபிஐப் பொறுத்த வரையில், இந்துத்துவம், கலாச்சார தேசியம் போன்ற விசயங்களை மையப் படுத்தி செயல்படுவதால், அவற்றை எதிர்க்கும் வாத-விவாதங்கள் பற்றி அதிகமாகவே தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
- அதற்கு, அரசியல் நிர்ணய சட்டப் பிரிவுகள், உச்சநீதி மன்ற தீர்ப்புகள், 60-70 ஆண்டுகால அவற்றுடன் சம்பந்தப்பட்ட சரித்திர நிகழ்வுகள் முதலியவை தெரிந்திருந்தால் தான், உதாரணங்களாக எடுத்துக் காட்டி பேச முடியும்.
- குறிப்பாக செக்யூலரிஸம், எண்ண உரிமை, கருத்துரிமை, பேச்சுரிமை, சகிப்புத் தன்மை, பெண்கள்-சிறார் உரிமைகள், சட்டமீறல்கள் முதலியவற்றைப் பற்றிய விவரங்களை எடுத்துக் காட்ட வேண்டும். ஆகவே, இவற்றைப் பற்றி தெரிந்து கொண்டவர்களை வைத்து வகுப்புகள் நடத்தப் பட வேண்டும்.
- ஒப்புக் கொண்டு போகும், சமரச, செய்து கொள்ளும், போக்குள்ளவர்களை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்யமுடியாது.

சித்தாந்தம், சித்தாந்திகளை முறையாக எதிர்கொள்வது எப்படி?: வலதுசாரி மாணவ-மாணவியர் குழுமங்கள் நெருங்கி வர ஆவண செய்ய வேண்டும். அவர்கள் மற்றவர்களின் மாநாடுகள், கருத்தரங்கங்கள், பட்டறைகள், முதலியவற்றில் பங்கு கொண்டு, அவர்களது அணுகுமுறை, வாத-விவாத திறமை, பேச்சுத் திறன், முதலியவற்றை அறிந்து கொள்ளவேண்டும். இடதுசாரி குழுமங்கள் பலவித முரண்பாடுகள் முதலியவற்றுடன், கடந்த 70 ஆண்டுகளாக ஒன்றாக செயல்பட்டு, வலதுசாரிகளை எதிர்த்து வருகின்றன. செக்யூலரிஸம் பேசினாலும், அடிப்படைவாதிகள், மதவாதிகள், தீவிர சித்தாந்தவாதிகள், மறைப்பு- சித்தாந்தவாதிகள், என்று பலவித மாறுபட்ட, எதிர்-துருவ கோஷ்டிகள் ஒன்று சேர்ந்து தாக்குவதை கவனிக்கலாம். அந்நிலையில், இந்துத்துவத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது. வழக்கம் போல, நாத்திகவாதிகள், சந்தேகவாதிகள், பிரக்ருதிவாதிகள், என்று பற்பல முகமூடிகளில், போர்வைகளில் அவர்கள் வேலை செய்து கொண்டுதான் இருப்பார்கள். கருத்துவாக்கும், தீர்மானம் எடுக்கும் அந்தஸ்து, அதிகாரங்களில் உள்ளவர்களை, சித்தாந்த ரீதியில், ஒன்றுபடுத்த வேண்டும்.
© வேதபிரகாஷ்
27-02-2018

குறிச்சொற்கள்:அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்துத்துவம், இந்துத்துவா, ஏபிவிபி, கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்தம், செக்யூலரிஸம், நாட்டுப் பற்று, நாட்டுப்பற்று, நாத்திகம்
அதிகாரம், அத்தாட்சி, அம்பேத்கர், அரசியல், அரசியல் ஆதரவு, அரசியல் விமர்சனம், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், கருத்து, கருத்து சுதந்திரம், கருத்துரிமை, சாதியம், தேசிய கீதம், தேசிய மாணவர் அமைப்பு, பெரியாரத்துவம், பெரியாரிசம், பெரியாரிஸம், மதவெறி, மதவெறி அரசியல், முத்துராம லிங்கம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
பிப்ரவரி 27, 2018
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்– ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (2)

பேராசிரியர் கிருஷ்ண மூர்த்தி அரங்கம்!: “மாற்றம் முன்னேற்றத்திற்கான மாணவர்” 23வது மாநில மாநாட்டு நிகழ்ச்சிகள் நடந்தன. 17-02-2018 அன்று பலர் மாணவ-மாணவியர்களுக்கு பலவித விசயங்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள். மாலையில், சிறப்பு நிகழ்ச்சிகள் இருந்தன. நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் பேரன் சந்திர குமார் போஸ், சொற்பொழிவாற்றினார். சுபாஷ் சந்திர போஸ் பேரன் சந்திர குமார் போஸ் 2016ல் பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் கட்சியில் இணைந்தார். ஹவுராவில் நடைபெற்ற பாஜக பொதுக்க கூட்டத்தின்போது அவர் தன்னை கட்சியில் இணைத்து கொண்டார். முன்னதாக, கடந்தஜனவரி 23 ம் தேதி 2016 தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுபாஷ் சந்திர போஸ் மரணம் தொடர்பான கோப்புகளை மத்திய அரசு வெளியிட்டது. பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் சந்திரகுமார் போஸும் கலந்து கொண்டார். அப்போதுபேசிய சந்திரகுமார், முந்தைய காங்கிரஸ் அரசு சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான பல கோப்புகளை அழித்துவிட்டது என குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவியர், மாணவர்களுக்கு இணையாக தற்காப்பு கலை பற்றிய பயிற்சிகளை செய்து காட்டினர்.

சந்தீப், தேசிய சிறுபான்மை கமிஷன், உறுப்பினர்

சந்தீப், தேசிய சிறுபான்மை கமிஷன், உறுப்பினர் – கேட்கும் மாணவ-மாணவியர்.

மாணவ–மாணவியர்களுக்கு விளக்கம் கொடுத்து பேசியவர்கள், விவரங்கள்: திரு சந்தீப், தேசிய சிறுபான்மை கமிஷன், உறுப்பினர் கல்வி பற்றி பேசிக்கொண்டிருந்தார். கேட்டுக் கொண்டிருக்கும் மாணவ-மாணவியர் வித்தியாசமான அணுகுமுறையில் இருந்தனர்; சிலர் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்-குறிப்புகள்ள் கூட எடுத்தனர்; சிலரோ தமக்குள் பேசிக் கொண்டிருந்தனர்; சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர்; மகேஷ் என்பவர், விவசாயத்தைப் பற்றி பேசி-விவாதித்துக் கொண்டிருந்தார். விலை அங்கு நடந்த உரையாடல்! லக்ஷ்மணன் என்பவர், இந்திய விஞ்ஞானத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்! நம்பி நாராயணன் தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றி பேசிக் கொண்டிருந்தார்! கேட்டுக் கொண்டிருக்கும் மாணவ-மாணவியர். பேசியதும் வேகவேகமாக சென்று விட்டார்!

விவசாயத்தைப் பற்றி பேசி-விவாதித்தது.

கேள்வி-பதில்…..

மாணவ–மாணவியர் ஏபிவிபி மாநாட்டில் கலந்து கொண்டது ஏன்?: எங்கள் குழு கலந்து கொண்டு, மாணவ-மாணவியர்களிடம் உரையாடி, கருத்து கேட்டு, விவரங்களை சேகரித்தது. சுமார் 60 மாணவ-மாணவியர்களிடம் உரையாடி, கருத்து கேட்ட போது [ஏபிவிபி பற்றி தெரியுமா, ஏன் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறீர்கள், சித்தாந்தம் பற்றி தெரியுமா போன்ற கேள்விகளுக்கு……..இவை விடையாகவும் இருந்தன……..], அறிந்த விசயங்கள்:
- படிப்பு முதலிய விசயங்களுக்கு…………….., எனக்கு உதவுகிறார்கள் அதனால் நான் வந்து, கலந்து கொண்டேன்.
- ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும், எவ்வாறு அப்படி இருக்க முடியும் என்பது பற்றி சொல்லிக் கொடுப்பதால், நான் இணைந்தேன்.
- நான் இந்து என்பதனால் கலந்து கொண்டேன்.
- எனக்கு புரியவில்லை, …………….எல்லோரும் வந்தார்கள், நானும் வந்தேன்……
- நமது நாடு பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. மாணவர்கள் அதனால், விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும்.
- மோடி சிறந்த பிரதமர், என்னை கவர்ந்தவர், அதனால், யாதாவது செய்ய வேண்டும் என்று வந்தேன்.
- எனக்கு ஆர்.எஸ்.எஸ் தொடர்பு இருந்ததால் / நான் ஸ்வம் சேவக் என்பதால் வந்தேன்,
- நான் அம்பேத்கர் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்றாலும், இங்கு எல்லோரையும் ஒரே மாதிரி நடத்தும் விதத்தை புரிந்து கொண்டேன். தொடர்ந்து கலந்து கொள்வேன்.
- மற்ற மாணவர் சங்கம் போல நாமும் வலுவாக திகழ வேண்டும், அதற்காக உரிய முறையில் பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்.
- நண்பர் கலந்து கொண்டதால், கலந்து கொண்டேன்.
- சென்னைக்கு இரண்டு நாள் மாநாடு, பஸ் போகிறது, வருகிறாயா என்று நண்பன் கேட்டான், வந்தேன்.
இப்படி சிறிய விடை அளித்தார்களே தவிர, அதற்கு மேல் விசாரித்தால், அவர்கள் சொல்ல தயங்கின்றனர் அல்லது சொல்ல முடியாமல் இருந்தனர்.

லக்ஷ்மணன் என்பவர், இந்திய விஞ்ஞானத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்!

கேட்டுக் கொண்டிருக்கும் மாணவ-மாணவியர்.
பங்கு கொண்டவர்களுக்கு என்ன தெரிந்திருக்கிறது – தெரியவில்லை: இவ்வாறு பலவிதமான பதில்களினின்று அறியப் படுவதாவது:
- 23வது மாநாடாக இருந்தாலும், புதியதாக வருபவர்களுக்கு அமைப்பைப் பற்றி சரியாக தெரியவில்லை.
- ஒன்றிற்கு மேற்பட்ட மாநாடுகளில் கலந்து கொண்டவர்களும், “பாரதத்தைக் காக்க வேண்டும்”,” நான் இந்து” போன்ற வட்டங்களிலிருந்து வெளியே வரவில்லை.
- இருப்பவர்களும் ஒரே மாதிரியாக பேசுவது, சொன்னதையே திரும்ப-திரும்பச் சொல்வது போன்ற ரீதியில் உள்ளார்கள். தமது திட்டங்களை காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாமல் [அப்-டேடிங் செய்யாமல்] உள்ளனர்.
- நடைமுறை பிரச்சினைகள், விவகாரங்கள், பற்றியவை தெரியாமல் இருக்கிறார்கள்.
- மற்ற மாணவ-மாணவியர் அமைப்புகள் பற்றி தெரிந்து வைத்து இருக்கவில்லை. தெரிந்து கொண்டாலும் அரைகுறையாக உள்ளது.
- அடிப்படை அரசியல் சித்தாந்தம், அரசியல் கட்சிகளின் தோற்றம்-வளர்ச்சி, அவற்றின் செயல்பாடுகள் முதலியவை தெரியவில்லை.
மாநாடு, கூட்டங்கள் நடக்கும் போது, 1000-100 என்று கலந்து கொண்டு பிரிந்து விடுகிறார்கள். மற்ற நேரங்களில் இரண்டு-மூன்று-ஐந்து பேர் கூட சேர்ந்து பேசுவதில்லை. பிரதிநிதிகள், நகர-மாவட்ட அதிகாரிகள் கூடி பேசுகிறார்கள்.

நம்பி நாராயணன் தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றி பேசிக் கொண்டிருந்தார்

நம்பி நாராயணன் தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றி………………

கேட்டுக் கொண்டிருக்கும் மாணவ-மாணவியர்.
சித்தாந்த ரீதியில் என்ன செய்ய வேண்டும்?: கீழ் கண்ட விசயங்களை அனைத்து உறுப்பினர்களும் தெரிந்து கொண்டு அலச வேண்டும்:
- இந்துத்துவம் என்பது இந்தியாவை இணைக்க வல்ல பலமான சித்தாந்தம் என்றால், இத்தனை வருடங்கள் ஆகியும் இந்துத்துவவாதிகள், சித்தாந்த ரீதியில் ஏன் எதிரிகளை எதிர்க்காமல், எதிர்க்க முடியாமல் இருக்கிறார்கள் என்று யோசிக்க வேண்டும்.
- “இந்துத்துவம்” மற்ற மதங்களுக்கு எதிரானது என்ற எதிரிகளின் பிரச்சாரத்தை முறையாக எதிர்க்காமல், மறைமுகமாக எதிர்-பிரச்சாரம் மூலம் ஏன் அவர்களை ஆதரித்து வருகிறார்கள், இது மாற்றப்பட வேண்டும்.
- “இந்துத்துவவாதிகள்” குறிப்பிட்ட சித்தாந்திகள் இடது-வலது என்று இருபக்கங்களிலும் இருந்து கொண்டு, பலனைப் பெற்று வருகிறார்கள், அதாவது, அவகர்ளால் பிரயோஜனம் இல்லை என்பதை அறிய வேண்டும்.
- “இந்து-விரோதி” என்று “சிலரை” அறிந்த பிறகும், அவர்களின் பொய்களை ஏன் இந்துத்துவவாதிகள், மல்லுக் கட்டிக் கொண்டு பரப்பி வருவதை, ஆதரிப்பதை தடுக்க வேண்டும்.
- “இந்துத்துவவாதிகள்” போர்வையில், “இந்துக்கள்”, இந்துக்களின் நலன்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருவது துரதிருஷ்டவசமானது, அது கண்டறியப்பட்டு களையெடுக்கப்பட வேண்டும்.
- இல்லை என்கிறான் ஒருவன், இருக்கிறது என்கிறான் இன்னொருவன். “இல்லை” என்பது உண்மையான பிறகும், அதைப் பற்றி சொல்லாமல் இருப்பது நாத்திகத்தை ஆதரிப்பதாக உள்ளது. இல்லாதத்தை இருக்கிறது என்ற பொய்யை திரும்ப-திரும்ப இந்துத்துவவாதிகள் போட்டு பரப்புவது, அவர்கள் உதவுவதைத் தான் மெய்ப்பிகிறது!
- “இல்லை என்று சொன்ன உண்மை” எனக்கு தெரியவில்லை, ஆனால், “இருக்கிறது என்ற சொன்ன பொய்” எனக்குத் தெரிகிறது என்று பாராட்டு ஏன்! இதெல்லாம் இந்துத்துவவாதிகளுக்கு என்று நான் சிந்தித்து எழுதினாலும், எதிர் சித்தாந்தவாதிகளை எதிர்ப்பதை அறிலாம், இதுதான் உண்மையான பிரச்சாரம்!
- +ve propaganda, –ve propaganda, anti/counter-propaganda, +ve suggestion, –ve suggestion, இதைப் பற்றியெல்லாம் இந்துத்துவவாதிகள் அறிந்து கொள்ள வேண்டும்! ஒன்றை செய்யாதே, பார்க்காதே என்றால், அதனை செய்ய/பார்க்கத் தூண்டுவது எதிர்-தூண்டுதல், –ve suggestion , –ve suggestion ஆகும்!
- திமுக 1960-70களில் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு மாணவர்களை பயன்படுத்திக் கொண்டது. சமீபத்தில் “ஜல்லிக் கட்டு” விவகாரத்தில், உபயோகப்படுத்தப் பட்டார்கள். அதுபோல ஏபிவிபி எவ்வாறு மாணவர்களை ஒன்று சேர்க்க முடியும் என்று யோசிக்க வேண்டும்.
- திராவிடத்துவம் பேச்சுத் திறமையினால், பொய்யான இனவெறி கருதுகொளால், நாடகம்-சினிமா தொழில்களால், அவற்றால் செய்யப்பட்ட பிரச்சாரங்களினால் வளர்ந்தது. அதனை, இந்துத்துவம் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் தான் ஏபிவிபி உள்ளது.
© வேதபிரகாஷ்
27-02-2018

ஏபிவிபி தலைவர்கள்…………………………..
குறிச்சொற்கள்:அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், ஏபிவிபி, கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்தம், செக்யூலரிஸம், தேசத் துரோகம், தேசத்துரோகம், தேசியம், நாட்டுப் பற்று, நாட்டுப்பற்று, நாத்திகம், மாநாடு, வியாசர்பாடி, விவேகானந்தர்
அகில பாரதிய வித்யார்தி பரிஷத், அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், அண்ணாயிசம், ஆர்.எஸ்.எஸ், இட ஒதுக்கீடு, இடதுசாரி, இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
பிப்ரவரி 27, 2018
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்– ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (1)

பள்ளி வளாகத்திற்கு செல்லும் தெருவின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள வளைவு.

ஶ்ரீமதி நர்மதா தேவி ஜே.அகர்வால் விவேகானந்த வித்யாலயா ஜூனியர் காலேஜ் வளாகம்.

வாசலில் வைக்கப்பட்டுள்ள பேனர்.

வாசலில் வைக்கப் பட்டுள்ள விவேகானந்தர் சிலை.
சென்னையில் தேதிகளில் ஏபிவிபியின் 23வது மாநில மாநாடு: அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவ-மாணவியர் அமைப்பு சார்பில் “மாற்றம் முன்னேற்றத்திற்கான மாணவர்” என்ற தலைப்பில் பிப்ரவரி 17, 18ம் தேதிகளில் 23வது மாநில மாநாடு வியாசர்பாடி மகாகவி பாரதியார் நகரில் உள்ள விவேகானந்தா பள்ளியில் நடைபெற்றது. ஶ்ரீமதி நர்மதா தேவி ஜே.அகர்வால் விவேகானந்த வித்யாலயா ஜூனியர் காலேஜ் வளாகத்தில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 225 கல்லூரிகளில் இருந்து 2,000 மாணவ, மாணவிகள், பல்கலைக் கழக துணை வேந்தர்கள், பேராசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டார்கள். சுமார் பத்து மணி அளவில் கொடியேற்றத்துடன் மாநாட்டின் நிகழ்ச்சிகள் துவங்கின. கே.ஆர். பரமசிவம் கண்காட்சி துவக்கப்பட்டது

தமிழகமும், தேசியமும்: சிறப்பு விருந்தினராக சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பேரன் சந்தரகுமார் போஸ் கலந்து கொண்டு உரையாற்றினார், என்று குறிப்பிட்டாலும், அவர், போஸின் அண்ணனான சரத் சந்திர போஸின் பேரன் ஆவர். இவர் சுபாஷ் சந்திர போஸுக்கும், தமிழகத்திற்கும் இருந்த நெருங்கிய தொடர்பைப் பற்றி விவரித்தார். போஸ் இந்திய தேசிய ராணுவம் ஆரம்பிக்கிறேன் என்று சொன்னபோது, 3,000 இளைஞர்களை, முத்துராம லிங்கம் அனுப்பி வைத்தார். இந்திய தேசியத்திற்கு, சுதந்திர போராட்டத்திற்கு, தமிழகம் முக்கிய பங்கு வகித்துள்ளது. அந்த அளவிற்கு தமிழகம் தேசியத்தில் ஈடுபாடு கொண்டிருந்தது.ஆகவே, தமிழகம் என்றுமே, இந்திய தேசியத்திற்கு எதிராக இருந்ததில்லை. காங்கிரஸ் போஸை, பல வழிகளில் அமுக்க பார்த்தது. அத்தகைய சதிகள் இல்லாமல் இருந்திருந்தால், போஸ் தான், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாகி இருப்பார்.

துவக்க விழா நிகழ்ச்சிகள், தீர்மானங்கள்: கோவா என்.ஐ.டி இயக்குனர் [Director, NIT, Goa] மாணவ-மாணவியர் எவ்வாறு நன்றாகப் படித்து, நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும். பல துறைகளில் மேம்பட்டு, தங்களது பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று பேசினார். சுனில் அம்பேத்கர் ஏபிவிபியின் துவக்கம், வளர்ச்சி முதலியவற்றைப் பற்றி விவரித்தார். கடந்த 67 வருடகங்களில் கம்யூனிஸ இயக்கம் பல கிளைகளாகப் பிரிந்து கிடங்கும் நிலையில், ஏபிவிபி பிரியாமல் கட்டுக் கோப்பாக இருந்து வருகிறது. மருத்துவர் சுப்பையா சண்முகம் பேசும் போது, தமிழகத்தில் ஜாதி-மதம் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கிறார்கள், ஆனால், இங்கு, 1200 மாணவ-மாணவியர் கலந்து கொண்டுள்ள நிலையில், அதைப் பற்றி அவர்களிடம் கேட்டதில்லை, அவர்களும் அதைப் பற்றி கவலைப்பட்டதில்லை. அதுதான் ஏபிவிபியின் பலம், என்று எடுத்துக் காட்டினார். காலை பத்து முதல் 12 வரை ஆரம்பவிழா நிகழ்ச்சிகளூக்குப் பிறகு, மாநாட்டில் தமிழகத்தில் நிலவும் கல்வி ரீதியான பிரச்னைகள், உயர்கல்வி மற்றும் சமுதாய விழிப்புணர்வு சார்ந்த மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
- தமிழகத்தில், கல்வித் துறையில் நடக்கும் ஊழல்.
- தமிழகத்தில், கல்விஇன் நிலை.
- கேரளாவில் நடக்கும்கொலைகள்.
இரண்டு நாட்களில் நடந்த நிகழ்ச்சிகளின் சிறு குறிப்பு கீழ் வருமாறு.

இந்தியாவில் உள்ள மாணவ–மாணவியர் அமைப்புகள்: இந்தியாவில் பல மாணவ-மாணவியர் அமைப்புகள் இருந்து வருகின்றன. ஒவ்வொரு அரசியல்கட்சியும் ஒரு மாணவ-மாணவியர் சங்கத்தை வைத்துள்ளது. இதில் காங்கிரஸைத் தவிர, மற்ற எல்லா குழுமங்களும், இந்திய தேசியத்தை எதிர்க்கும் சித்தாந்தங்கள் கொண்டவைகளாகத் தான் இருந்து வருகின்றன. தேர்தலில் போட்டியிடும் குழுமங்கள் அடக்கி வாசித்து வருகின்றன. இவற்றில் இந்தியாவை ஆதரிக்கும் குழுமம் என்றால் ஒன்றே ஒன்று அது அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் – ஏபிவிபி ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியாவில் உள்ள மாணவ-மாணவியர் அமைப்புகள்:
Name of the organization / association |
Associated with |
All India Students Federation (AISF) |
related to Communist Party of India |
All Bodo Students Union (ABSU) |
Related to Revolutionary Communist of Bodolonand |
All India Democratic Students Organisation (AIDSO) |
Socialist Unity Centre of India (Communist) |
All India Revolutionary Students’ Federation (AIRSF) |
Communist Party of India (Maoist) |
Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP) |
Constitutionally Rastriya Swayamsevak Sang |
All India Students Association (AISA) |
Communist Party of India (Marxist–Leninist) Liberation |
Bahujan Samaj Student’s Forum (BSSF) |
Bahujan Samaj Party |
Campus Front of India [CFI] |
Popular Front of India |
Chhatra Bharati [CB] |
Third Front and Anna Hazare |
Chin Student Association [CSA] |
No affiliation |
Concern |
No affiliation |
Kerala Students Union [KSU] |
Indian National Congress |
MGJSM |
Student wing of the Jacobite Syrian Christian Church |
MGOCSM |
Student wing of the Indian Orthodox Church |
Mithila Student Union [MSU] |
No affiliation |
Muslim Students Federation [MSU] |
Indian Union Muslim League |
National Students Union of India [NSUI] |
Indian National Congress |
Progressive Democratic Students Union [PDSU] |
Communist Party of India (Marxist-Leninist) New Democracy in Andhra Pradesh & Punjab |
Radical Students Union [RSU] |
Communist Party of India (Maoist) in Andhra Pradesh |
Students Islamic Organisation of India [SIOI] |
Jamaat-e-Islami Hind |
Students’ Federation of India [SFI] |
Communist Party of India (Marxist) |
Student Organisation of India [SOI] |
Shiromani Akali Dal |
Trinamool Chhatra Parishad [TCP] |
Trinamool Congress |
Twipra Students Federation |
A Nationalist students organisation of Tripura |
National conference students union |
Jammu & Kashmir National Conference |
West Bengal State Chhatra Parishad |
Indian National Congress |
இவற்றில் பெரும்பாலானவை, இடதுசாரி சித்தாந்த இயக்கங்களை சேர்ந்தவையாக இருப்பதை கவனிக்கலாம்.

பேராசிரியர் கே. ஆர். பரமசிவம் நினைவாக கண்காட்சி: உள்ளே நுழையும் போது, ஒரு வளைவு வைக்கப் பட்டிருந்தது. கல்லூரி வாயிலிலும் வளைவு மற்றும் பேனர் இருந்தன. வாயிலுக்கு நேராக, விவேகானந்தரின் சிலை ஏபிவிபி கொடிகளுடன் வைக்கப்பட்டிருந்தது. வலது பக்கம் பேராசிரியர் கே.ஆர். பரமசிவம் [காவூரி ராமலிங்கம் அப்பல] கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. அவரது நினைவாக புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. மதுரைக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர் கே.ஆர். பரமசிவம். இவர் அடிப்படை வாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். ஏபிவிபியின் துணைத் தலைவராக இருந்த அவரது 20 வது ஆண்டு நினைவாக, இக்கண்காட்சி வைக்கப்பட்டது. 28-03-1998 அன்று மதவெறியர்களால் தெருவில் படுகொலை செய்யப்பட்டார் பேராசிரியர் பரமசிவம் அவர்கள். இவர் கொலை செய்யப்பட்ட போது அன்று முதலமைச்சராக இருந்த இன்றைய முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை[1]. பரமசிவத்தின் சகோதரர் எழுத்தாளர் நரசய்யா[2] அப்போது வேதனையுடன் ஒரு பத்திரிகையில் கூறினார்[3]: “ஏபிவிபியில் இருந்த ஒரே காரணத்துக்காக என் தம்பி கொல்லப்பட்டிருக்கிறான். யாருக்கும் எந்தவிதத் தீங்கையும் செய்யாதவன். நல்லவர்கள் யாருமே நடமாட முடியாத சூழ்நிலை இப்போது இருக்கிறது. இதை அரசும் காவல்துறையும் சீர் செய்ய வேண்டும். இல்லையெனில் பரமசிவத்தைப் போல இன்னும் பலர் கொலை செய்யப்படலாம் என்ற நிலை உருவாகிவிடும்.”
© வேதபிரகாஷ்
27-02-2018

[1] 30-01-1988 முதல் 27-01-1989 வரை ஜனாதிபதி ஆட்சி நடந்து கொண்டிருந்தது. 2009ல் கருணாநிதி முதலமைச்சராக இருந்தார்.
[2] காவூரி ராமலிங்கம் அப்பல நரசய்யா ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் ஒரிசாவில் பிறந்தவர். தனது தொடக்கக் கல்வியைத் தமிழ்நாட்டில் பயின்றார். இவர் கப்பற் பொறியியலில் பயிற்சி பெற்றவர். 1949 ஆம் ஆண்டில் இந்தியக் கடற்படையில் சேர்ந்து கடற்படைக் கப்பல்களில் பத்தாண்டுகள் பணியாற்றினார். 1963 ஆம் ஆண்டில் கடற்படையில் இருந்து விலகிய பின் இரண்டு ஆண்டுகள் வணிகக் கப்பல்களில் பணியாற்றினார். 1965 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத் துறைமுகத்தில் தலைமைப் பொறியாளராகச் சேர்ந்தார். இக்காலத்தில் இவர் வங்கதேச விடுதலைப்போரிலும் பங்கு கொண்டுள்ளார். 1991ல் ஓய்வு பெற்றார். பின்னர் இந்திய துறைமுகச் சங்கத்தின் ஆலோசகராக இருந்த நரசய்யா உலக வங்கியின் அழைப்பின் பேரில் 1994 ஆம் ஆண்டு கம்போடிய அவசர மறுவாழ்வுத் திட்டப் பணிக்குழுவில் இடம் பெற்றார். 1996 ஆம் ஆண்டுவரை இவர் இத்திட்டத்தில் பணியாற்றினார். அதன் பின்னர் இவர் சென்னையில் வசித்து வருகிறார்.
[3] http://www.tamilhindu.com/2009/03/professor-paramasivam-a-tribute/
குறிச்சொற்கள்:அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், ஆர்.எஸ்.எஸ், இடதுசாரி, ஏபிவிபி, கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், கே.ஆர்.பரமசிவம், சந்தரகுமார் போஸ், செக்யூலரிஸம், நரசய்யா, பரமசிவம், மாணவர், மாணவர் சக்தி, முத்துராம லிங்கம், வலதுசாரி, விவேகாநந்தர், விவேகானந்த வித்யாலயா, விவேகானந்தர்
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், அடையாளம், அத்தாட்சி, அரசியல், அரசியல் ஆதரவு, ஆரியன், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், இந்துக்கள், ஏபிவிபி, கே.ஆர்.பரமசிவம், சந்தரகுமார் போஸ், நரசய்யா, பரமசிவம், மத வாதம், மதவாத அரசியல், மதவாதம், மாணவர், மாணவியர், முத்துராம லிங்கம், வந்தே மாதரம், வலது சாரி, வலதுசாரி, வழிமுறை, விதிமுறை, விவேகானந்த வித்யாலயா, ஹிந்து, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 26, 2016
நாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்?
முரண்பட்ட, மாறுபட்ட, வேறுபட்டதீர்ப்புகள்ஏன்?: ஷரீயத் என்னும் முஸ்லிம் சட்டத்தில் பெரும்பான்மையான ஒற்றுமையில்லை. நாட்டிற்கு நாடு, சமூகத்திற்கு சமூகம், ஜாதிக்கு ஜாதி ஒவ்வொரு கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் உள்ளதால், அவற்றிற்கு ஏற்றபடி உலேமாக்கள் மாற்றியமைத்து அனுசரித்து வருகிறார்கள்.
- நாய் போன்ற விலங்குகளை வளர்க்கலாமா, கூடாதா?
- ஜோதிடம், ஆரூடம், ஜாதகம் பார்க்கலாமா, கூடாதா?
- தாடி, மீசை வைக்கலாமா, கூடாதா?
- புகைப்படம் எடுக்கலாமா, வைத்திருக்கலாமா, கூடாதா?
- தாலி, கருப்பு மணி கட்டலாமா, கூடாதா?
- பூ, பொட்டு, பட்டுப்புடவை இதர அலங்காரம் செய்யலாமா, கூடாதா?
- நடனம் கற்றுக் கொள்ளாலாமா, கூடாதா?
- பாட்டு பாடலாமா, கூடாதா?
என்று இஸ்லாத்தில் பிரச்சினைகள் நீண்டு கொண்டே இருந்துள்ளன. அதற்கு மதத்தலைவர்கள் வெவ்வேறான, முரண்பட்ட கருத்துகளைத் தான் சொல்லியிருக்கிறார்கள். ஹதீஸ்களில் கூட வேறுபாடுகள், மாறுபட்ட விளக்கங்கள் உள்ளன. இந்நிலையில் “வந்தே மாதரம்” விஷயமாக முஸ்லீம்கள் பலமுறை, பலவிதமாக கலாட்டா செய்து வருகின்றனர்.
ஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது[1]: செக்யூலரிஸ இந்தியாவில், சவிகுர் ரஹ்மான் பர்க் ( Shafiqur Rahman Barq) என்ற முசல்மான், முகமதியர், முஸ்லிம் தான் யார் என்பதனை வெளிக்காட்டியுள்ளார். வந்தே மாதரம் இசைக்கும் போது வெளிநடப்பு செய்த மாபெரும் தேசியவாதியாகி விட்டார்[2] சவிகுர் ரஹ்மான் பர்க்! ஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது, என்று நியாயம் பேசினார்[3]. அப்படியென்றால், குரானில் எந்த பிரச்சினையும் இல்லை போலிருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் எம்பியின் இச்செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். “சபையை அவமதித்தவர், சபையில் மன்னிப்புக் கேட்க வேண்டும்”, என்றனர்[4]. கேட்பாரா அல்லது பதவியைத் துறப்பாரா என்று பார்க்க வேண்டும்.
சபாநாயகர் மீரா குமாரி கோபம்[5]: சாதாரணமாக, அமைதியாக, பொறுமையாக இருக்கும் மீரா குமாரி கூட, சவிகுர் ரஹ்மான் பர்க் நடந்து செல்வதைக் கண்டு கோபமடந்தார். “தேசிய கீதம் வந்தே மாதரம் இசைக்கும் போது, மதிப்பிற்குரிய அங்கத்தினர், வெளியே சென்று விட்டார். இதை நான் பெரிதாக (அவமதிக்கக் கூடிய) எடுத்துக் கொள்கிறேன். இவர் ஏன் இப்படி செய்தார் என்பதனை நான் அறிய விரும்புகிறேன். மறுபடியும் இது நடக்கக் கூடாது ”, என்றார்.
மதநம்பிக்கை பெரியது என்றால் எம்பியாகவே வந்திருக்க முடியாதே: வழக்கம் போல, பேச்சுகள், மறுபேச்சு, சாக்குப் போக்கு………………..அவ்வளவுதான். வயதானாலாம், பக்குவம் வரவில்லை போலும். “என்னுடைய மதநம்பிக்கைக்கு ஒவ்வாதலால் நான் பாட விரும்பவில்லை” (struck a defiant note saying he could not sing the song in view of his religious belief). உண்மையில், இவரை யாரும் பாடச் சொல்லவில்லை, ஆனால், நின்றிந்தால் கூட போதும். ஆனால், திமிராக, முதுகைக் காண்பித்துக் கொண்டு, விருவிருவென்று வெளியே நடந்து சென்றது கேவலமாக இருந்தது[6]. “நான் அரசியலில் இருக்கின்றேனோ இல்லையோ, என்னுடைய கருத்தின் படி, நான் நடந்து கொள்கிறேன்”, என்று தெளிவு படுத்தினார்[7]. முன்னர் சிதம்பரம் போன்றோரே, முஸ்லீம் கூடத்திற்குச் சென்று, இத்தகைய ஒழுங்கீன, தேசவிரோதச் செயல்களை ஊக்குவித்திருக்கிறார்கள்[8]. ஜிஹாதின் விளக்கத்திற்குக் கூட மென்மையான விளக்கம் கொடுத்து, பூசி மெழுக பார்த்தார்கள்[9].
“வந்தே மாதரம்” கீதத்திற்கு ஃபத்வா போட்டபோது நான் அங்கு இல்லை: முன்பு இதே சிதம்பரம், “வந்தே மாதரம்” கீதத்திற்கு எதிரான ஃபத்வாவை உறுதி செய்தபோது, நான் அங்கு இல்லை என்று தப்பித்துக் கொண்டார்[10]. முஸ்லீம்களை தாஜா செய்ய வேண்டும் என்று விழாவில் கலந்து கொண்டார். உள்துறை அமைச்சராக இருந்தும், மதவாத அமைப்பிற்குச் செண்ரு விழாவை துவக்கி வைத்தார். ஆனால், அதே மாநாடு, வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டபோது, “நான் அங்கில்லை” என்று தப்பித்துக் கொள்ளப் பார்த்தார்!
வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடையை நீக்க முடியாது: முஸாபர்நகர், நவ. 9, 2009: வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடையை நீக்க முடியாது என்று இஸ்லாமிய அமைப்பான தாரூல் உலூம் அறிவித்துள்ளது[11]. வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதற்கு பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது. அந்தப் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என தாரூல் உலூம் 2006-ம் ஆண்டு ஏற்கெனவே தடை விதித்துள்ளது[12]. தற்போது ஜமியத் உலேமா இ ஹிந்த் அமைப்பும் வந்தே மாதரம் பாடலுக்குத் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், வந்தே மாதரம் மீதான தடையை தாரூல் உலூம் அமைப்பும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்த மாதரம் பாடல் அமைந்துள்ளது, “தாயை நேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால் வழிபட முடியாது’ என்று வந்தே மாதரம் பாடல் மீதான தடைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
“தாயை நேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால் வழிபட முடியாது”: “வந்தே மாதரம்” பாடும் போது, யாரும் வழிபாடு செய்வதில்லை. பாடு போது எழுந்து நிற்கிறார்கள்; பாடுவதைக் கேட்கிறார்கள்; தெரிந்தவர்கள் உடன் சேர்ந்து பாடுகிறார்கள் அவ்வளவே. பாராளுமன்றத்தில், தலைவர்கள் படங்களைத் திறந்து வைக்கும் போது, மலர் தூவி கைகூப்பி மரியாதை செய்கின்றனர். அப்படி அது கூடாது என்றல், எந்த முஸ்லீமும் அவ்வாறு செய்திருக்கக் கூடாது, ஆனால், செய்து தான் வருகின்றனர். பிறகு எப்படி இந்த சவிகுர் ரஹ்மான் பர்க் வித்தியாசமாக இருப்பார்?
பத்வா யாரையும் கட்டாயப் படுத்தாது, உத்தரவும் அல்லது வழிகாட்டிதான். இதைக் கடைப்பிடிப்பதும் உதாசீனப்படுத்துவதும் அவர்களது விருப்பம்: தாரூல் உலூம் துணை வேந்தர் மௌலானா அப்துல் காலிக் மதரஸி கூறினார், “இந்தத் தடை யாரையும் கட்டாயப்படுத்தாது. இது உத்தரவும் அல்லது வழிகாட்டிதான். இதைக் கடைப்பிடிப்பதும் உதாசீனப்படுத்துவதும் அவர்களது விருப்பம். இருப்பினும் வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடை நீக்கப்படாது’. பிறகு எதற்கு பத்வா? இரண்டு விதமாகக் கொள்ளலாம் என்றால், முஸ்லீம்களை ஒழுங்காக நடத்தவா, குழப்பவா அல்லது தீவிரவாதிகளாக்கவா?
© வேதபிரகாஷ்
10-05-2013
[5] An angry Speaker Meira Kumar ticked off Barq for walking out during the national song whenParliament was being adjourned sine die on Wednesday. “One honourable member walked out when Vande Mataram was being played. I take very serious view of this. I would want to know why this was done. This should never be done again,” Kumar said.
குறிச்சொற்கள்:இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கீதம், சிதம்பரம், ஜிஹாத், தாய், தாய்நாடு, தேச விரோதம், பாராளுமன்றம், வந்தே மாதரம், ஷரீயத்
அகிம்சை, அதிகாரம், அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் ஆதரவு, அரசியல் கூட்டு சதி, இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், இந்தியன் முஜாஹித்தீன், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்ளூர் ஜிஹாத் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
பிப்ரவரி 12, 2016
சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ என்று கேட்டவர்கள் எல்லா சாமிக்கும் டிரஸ்கோட் உண்டா சாமீ என்று ஏன் கேட்கவில்லை (1)?

“சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?” – தி இந்து கட்டுரை: இப்பொழுது ஒர் நண்பர், “தி இந்து”வில் 29-12-2015 அன்று வெளியான ஒரு கட்டுரைப் பற்றி எனது கவனத்தைஈழுத்துள்ளார். உண்மையிலேயே அக்கட்டுரை வந்தது எனக்குத் தெரியாது. நேற்று (11-02-2016) தான் படித்து பார்த்தேன். “சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?” என்ற கட்டுரை, அதற்கு வெளியான பதில்கள், அவரது “பிளாள் ஸ்பாட்டி”ல் உள்ள கட்டுரைகள் முதலியவற்றையும் பொறுமையாகப் படித்துப் பார்த்தேன். “இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காக்கும் கடமையுள்ள ஒவ்வொருவரும் இந்துத்துவத்துக்கு இணையாக வஹாபியிஸத்தை எதிர்த்து நிற்பது இன்றைய தார்மிகக் கடமை!”, என்று ஒரு கட்டுரைக்கு முஸ்லிம்கள் தான் அதிக அளவில் எதிர்த்துள்ளார்கள்[1] என்பதையும் கனித்தேன். அதாவது அதில் கூட இணை வைக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை. மற்றவற்றைப் பற்றி (நல்லகண்ணு, ஜெயலலிதா, மோடி பற்றிய) விமர்சித்தால், இங்குள்ள விசயத்தை விட்டு விலக நேரிடும். கொஞ்சம் பிரபலமடைந்து விட்டால், எதை எழுதினாலும் பதிப்பித்து விடும் நிலை இன்றுள்ளது. பொதுவாக, கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் கொண்டு எழுதினால் அவை ஏற்புடையாகவே இருக்கிறது. அதிலும், இந்தியா, இந்தியர்களை குறைகூறி, இந்திய நலன்களுக்கு எதிராக இருந்தால், உடனடியாக ஏற்கப்படும்[2].

கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்களின் கலவையின் வெளிப்பாடு: இக்கட்டுரைக்கு வரும் போது, அதில் ஒன்றும் விசயம் இல்லை, ஏனெனில், என்றுமே கேள்விகளை எழுப்புவது சுலபம். மேலும், மறைப்புவாதம் செய்யும் சித்தாந்திகளிடம்[3], எல்லாவற்றையும் எடுத்துரைத்து விளக்க முடியாது. மேலும் “சமஸ்” யார் என்று கூட எனக்குத் தெரியாது. இப்பொழுது “கூகுள் செர்ச்சில்” பார்த்து விகிபீடியா மற்றும் “பிளாக் ஸ்பாட்” மூலம் அவர் எழுத்தாளர் என்று தெரிய வந்தது. வழக்கம் போல நவீன இந்தியனுக்குள்ள சந்தேகங்களின் குழப்பமாகத் தான் அக்கட்டுரை உள்ளது. கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் அடிமனத்தில் ஊறியிருப்பதன் வெளிப்பாடுதான், இத்தகைய குதர்க்கமான கேள்விகளுக்கு ஊற்றாக இருந்து வருகிறது. மேலும், எழுத்தாளர் எனும் போது, வெறும் செய்திகள் மூலம் மற்றும் நண்பர்கள் மூலம் அறிந்து கொள்பவற்றைத் தொகுத்து கருத்துருவாக்கம் செய்யும் வேலை மிகவும் ஆபத்தானது. ஏனெனில், ஒருவருக்குண்டான எண்ணங்களே சார்புடையவையாக இருக்கும் போது, சித்தாந்தக் குழப்பங்களின் கலப்பாக உள்ளபோது, அதில் சமநிலை சிந்தனைகள் இல்லாமல் போகின்றன.

அழிக்கும் கிருமிகளை உருவாக்கும், வைரஸைத் தோற்றுவித்துப் பரப்பும், சமூகத்தை சீரழித்து வரும் சித்தாந்தம் எது?: தமிழகத்தில் கோவில் நிர்வாகம் சரியாக இல்லை என்றால், அதற்கு யார் பொறுப்பு என்று ஆராய்ச்சி செய்து பார்த்தால், கடந்த கால திராவிட அரசியல்வாதிகள் ஆட்சி, சுரண்டல்கள், கொள்ளைகள் முதலிய என்று அறிந்து கொள்ளலாம்[4]. ஆக மூலகாரணமாக உள்ள அத்தகையை அழிக்கும் கிருமிகளை உருவாக்கும், வைரஸைத் தோற்றுவித்துப் பரப்பும், சமூகத்தை சீரழித்து வரும் சித்தாந்தம் எது என்பதனை கண்டுகொள்ளாமல், கோவில் சிற்பங்கள் மற்றும் அச்சிற்பங்கள் கொண்ட கோவில்களை வைத்து, மனிதர்களின் ஆடைக் கட்டுப்பாடு பற்றி தாராளமாக விமர்சிப்பது, கோவணத்துடன் சென்று கொண்டிருக்கும் பரதேசியின் கோவணத்தை உருவி விட்டது போல உள்ளது. சமீபத்தில் பிறந்து வளர்ந்துள்ளவர்களுக்கு 1940-50, 1950-60 மற்றும் 1960-70 அரசியல், கட்சிகளின் உருமாற்றங்கள், இந்தியதேசிய ஆதரவு-எதிப்பு, நாட்டுப்பற்று-மொழிப்பற்று, முதலியவற்றில் உள்ள நெளிவு-சுளிவுகள் எல்லாம் தெரிந்திருக்காது.
நிர்வாண சினிமா நடிகைகளுக்கு படுதா போட்டு மூடி விட முடியுமா?: சினிமாவில் நடிகைகள் அரைகுறை ஆடைகளில் ஆடி, இப்பொழுது நிர்வாணமாக தோன்றும் அளவுக்கு தாராளமயமாக்கப்பட்ட சமூக சுதந்திரங்களில் திரிந்து வந்தாலும்[5], தெருக்களில் நிர்வாணமாக வரக்கூடாது என்று தானே நவீனத்துவவாதிகள் சொல்கிறார்கள்? போர்ன்-படப்புகழ் சன்னி லியோனிக்கு[6] படுதா போட்டு மூடவா முடியும்? ஆகவே, “திருச்சியில் பெண்களுக்கு மேலே துப்பட்டா போட்டு விடுவதை “எவ்வளவு பெரிய வன்முறை!” என்று கேட்டிருப்பது தமாஷாகத்தான் இருக்கிறது. “முடிகள் அடர்ந்த மாரோடும் கக்கத்தோடும் தொந்தியும் தொப்பையுமாக நடந்துகொண்டிருந்தார்கள் பல ஆண்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள் பெண்கள்”, எனும் போது படு-தமாஷாக இருக்கிறது[7]. ஏன் இக்கால பெண்களால் அவற்றை சகித்துக் கொள்ள முடியவில்லை? சமகால நாரிமணிகளுக்கு சகிப்புத் தன்மை ஏற்படவில்லையா? பெண்களிலும் சிலர் அவ்வாறு இருக்கலாமே? அவர்களை யாரும் அவ்வாறு விமர்சிப்பதில்லையே? இங்கு சமநிலை ஏன் பிறழ்கிறது? சரி, பெண்கள் மார்பகங்களைக் காட்டிக் கொண்டு சென்றால் என்னாகும், அதை அனுமதிக்கலாமா?
ஆழ்வார்கள்–நாயன்மார்களுக்குத் தெரியாதவை, இப்பொழுதுள்ள அறிவிஜீவிகளுக்கு எப்படி தெரிகிறது?: கோவில் சிற்பங்கள் மற்றும் அச்சிற்பங்கள் கொண்ட கோவில்களை உருவாக்கியவர்கள் முட்டாள்களா, மடையர்களா, அல்லது அவற்றை அவ்வாறு வழிபடும் ஸ்தலங்களில் வைத்திருப்பது கேவலமான செயல் என்றெல்லாம் எப்படி இத்தனை ஆண்டுகள் யாரும் உணராமல் இருந்து, திடீரென்று, முகமதியர், ஆங்கிலேயர், முதலியோர் வந்து எழுதி வைத்தப் பிறகு தெரிகிறது? அத்தகைய “உருவ-எதிர்ப்பு, மறுப்பு, ஒழிப்பு” ஆட்களிடமிருந்தும் தப்பித்து வந்துள்ளனவே? கோடிக்கணக்கில் சிற்பங்கள் இருந்துள்ள; அவற்றில் பல “உருவ-எதிர்ப்பு, மறுப்பு, ஒழிப்பு” ஆட்களான துருக்கியர், முகமதியர், முகலாயர் மற்றும் ஐரோப்பிய கிருத்துவர்கள் உடைது, அழித்து, ஒழித்துள்ளனர். அவற்றில் மிஞ்சியவை கடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான அந்நிய அருங்காட்சியகங்களில் அலங்கரித்டுக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாவற்றையும் மீறி தப்பித்தவை தான் இன்றுள்ளன. தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஏற்புடையதாக இருந்தவை, ஆழ்வார்கள்-நாயன்மார்கள் எல்லோரும் பார்த்தவை, இப்பொழுது இவர்களுக்கு எப்படி ஆபாசமாக தோன்றுகிறது? அவர்களை விட இவர்கள் பெரிய அறிவுஜீவிகள் ஆகி விட்டார்களா? ஆனால், இன்று, அவை இது போல சஸ்ஸுகளுக்கு உறுத்துவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
சமஸ்த-செக்யூலரிஸ ரீதியில் விவாதிக்கப்படாத நிர்வாணம்: ஆதம்-ஏவாள் நிர்வாணமாக இருக்க வேண்டும் என்பது, தெய்வீக அடிப்படை ஏற்புச் சிந்தனை, முக்கியமான நம்பிக்கை, மற்றும் இறையியல் கட்டாயம், ஆனால், இந்து மதத்தில் அவ்வாறு இல்லை. இதிலிருந்தே நிர்வாணம் அவசியம் எங்கு தேவை, தேவையில்லை என்ற உண்மையினை அறிந்து கொள்ளலாம். முற்றும் துறந்த நிலையை ஆரம்பகால கிருத்துவம் நம்பியது, ஆனால், பிறகு சாத்தானைப் புகுத்தி, மூலங்களை மறைத்தது. சாத்தான் பாம்பாக வந்தபோது, கனி தின்க தூண்டியபோது, வெட்கப்பட்டு, இலைகளால் தங்களது உறுப்புகளை மறைத்துக் கொண்டார்களாம்! இரண்டாம் ஆதம் என்று போற்றிய கிருத்துவ இறையியல் வல்லுனர்கள், ஏசு கிருத்துவையும் அவ்வாறே கண்டறிந்தனர். ஏசு கிருத்துவையும் நிர்வாணமாகவே சித்திரங்களில் தீட்டி மகிழ்ந்தனர். இடைக்காலத்தில், முகமதியர்களின் கொக்கோக சிந்தனைகளால் அத்தகைய சித்தரிப்புகள் உருவாகின. உண்மையில், ஜைன-பௌத்த நிர்வாணங்கள், கிருத்துவ-முகமதிய மதங்களில் தொடர்ந்தன. இஸ்லாத்தில் இன்று வரை காபாவைச் சுற்றும் சடங்கில் நிர்வாணம் இருக்கிறது, ஆனால், ஒற்றை ஆடையால் மறைத்திருக்கிறார்கள். அந்த நிலை இடைக்காலத்திலும், மேற்கத்தைய நாகரிகங்களில் தொடர்ந்தது. எகிப்திய, கிரேக்க நிர்வாணங்கள் பற்றி சொல்ல வேண்டிய அவசியல் இல்லை. ஆகவே, தேவையில்லாமல் தி இந்து போன்ற நாளிதழ்கள், இந்து கடவுளர்களின் நிர்வாணத்தைப் பற்றி விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளது என்றாகிறது.
© வேதபிரகாஷ்
12-02-12016
[1] http://writersamas.blogspot.in/2016/02/blog-post.html#more
[2] ஷேக் தாவூத் ஜிலானி ஜிஹாதைப் பற்றி விவரங்களை வெளியிடும் நேரத்தில் ஜே.என்.ஏவில், அப்சல் குருவைப் போறுவது எங்கள் உரிமை என்று கிளம்ப்பியுள்ளது நோக்கத்தக்கது!
[3] தெரிந்தே மறைக்கிறார்களா, அல்லது தெரிந்தும் அப்படி எழுதினால் ஏற்கப்படாது, பணம் கிடைக்காது என்று மறைக்கிறார்களா என்பதை அவர்கள் தாம் சொல்ல வேண்டும்.
[4] இவற்றைப் பற்றியெல்லாம் கூட தெரியாது என்றால், அந்நிலையை என்னவென்பது. சுதந்திர தினத்தில் தேர் எரிந்தது என்றால், ஓடாத தேரை நான் ஓட்டினேன் என்ற கதைகளையும் அறிந்திருக்க வேண்டுமே? தேரில் நிர்வாண சிற்பங்கள் இருந்ததால் எரித்தேன் என்றால் சரியாகிவிடுமா?
[5] எத்தனை நிகழ்ச்சிகளில் தோன்றுகிறார்கள். நான் உடுப்பதைப் பற்றி யாரும் ஒன்றும் தீர்மானிக்க முடியாது என்று தீபிகா இதைப்பற்றி ஒரு குறும்படத்தை வெளியிட்டுள்ளாரே?
[6] இப்பொழுது கோவில் உள்ளே கான்டம் பற்றி பேசியதால் வழக்கு போட்டுள்ளதாக செய்தி, சரி செக்யூலரிஸ ரீதியில் சர்ச், மசூதி முதலியவற்றிலும் அத்தகைய காட்சிகளை சேத்திருக்கலாமே?
[7] பெண்களின் நிர்வாணத்தை ஆண்கள் விரும்பும் போது, ஆண்களின் நிர்வாணத்தை ஏன் பெண்கள் விரும்பவதில்லை? இதுவும் குழப்பவாதமோ?
குறிச்சொற்கள்:ஆடை, இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், உடை, ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, காங்கிரஸ், சமத்துவம், சமஸ், செக்யூலரிஸம், ஜிஹாத், ஜீன்ஸ், தீவிரவாதம், பேன்ட், மார்பகம், முஸ்லீம், மோடி, லெக்கிங், ஸ்டைல்
அடையாளம், அதிகாரம், அமைதி, ஆகமம், ஆகமவிதி, இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, இஸ்லாம், உரிமை, ஊக்குவிப்பு, எண்ணவுரிமை, எதிர் இந்து, எதிர்-இந்துத்துவம், கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், கம்யூனிஸ்ட், கருத்துரிமை, கருவறை போராட்டம், சட்டதிட்டம், சட்டமீறல், சட்டம், சமதர்மம், சமத்துவம், சமரசம், சமஸ், சம்மதம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நவம்பர் 14, 2015
ஹசன் சுரூர் – சிறுமி பாலியல் விவகாரத்தில் கைதானவர் – நாத்திகரா, இடதுசாரியா, மோடி-விரோதியா, ஜிஹாதி-ஆதரவாளரா, யாரிவர் (1)?

Hasan Suroor caught in pedophile case, arrested
ஹசன் சுரூர் லண்டனில் “பிடோபைல்” குற்றத்திற்காகக் கைது: பிரிட்டன் பத்திரிகையாளர் மற்றும் இந்திய வம்சாவளியினரான ஹசன் சரூர் (65), 14 வயது சிறுமி ஒருவருடன் பாலியல் உரையாடல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார்[1]. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் குழு ஒன்றின் வீடியோ ஆப்ரேஷன் ஒன்றில், அவர், குழந்தையிடம் பாலியல் ரீதியில் பேசி சிக்கினார்[2]. இதனை தெரிவித்ததையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்[3]. ஹசன் சரூர், தி ஹிந்து, தி கார்டியன், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், பர்ஸ்ட் போஸ்ட் போன்ற [The Hindu, The Guardian, The Indian Express and Firstpost] பிரபல பத்திரிகைகளில் எழுதி வருபவர். ஹசன் சரூர், பிரதமர் மோடி இங்கிலாந்து வரும் இந்தியாவுக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார். ‘இண்டியாஸ் முஸ்லிம் ஸ்பிரிங்: வொய் நோபடி டாக்கிங் அபெளட் இட்?’ என்ற இவருடைய புதிய புத்தகம் ‘ரூபா & கோ’ பதிப்பகத்தால் வெளியிடப்படவிருக்கிறது, என்று “தமிழ் இந்து” விளம்பரம் செய்துள்ளது. என். ராமும், இவரும் காம்ரேடுகள் என்பதால், சுரூரின் கட்டுரைகள் எல்லாம் ஜரூராக தமிழில் கூட வெளியிடப்பட்டுள்ளன.

As leftists, N Rams patronage is obvious in accommodating in The Hindu
14 வயது சிறுமி என்றால் டீன் ஏன் கார்ல் தானே – பிறகென்ன, 65 கிழத்திற்கு பிடோபிலியா என்பது?: இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது[4]: “14 வயது சிறுமி பாலியல் விவகாரத்தில் 65 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். இவர் போலீஸாரால் நவம்பர் 9-ம் தேதி டெப்ட்போர்ட் பிரிட்ஜ் டிஎல்ஆர் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது[5]. இவர் அந்த 14-வயது சிறுமியை சந்திக்க, செல்ஷியாவிலிருந்து டிஎல்ஆர் ரயில் நிலையத்திற்கு பயணம் செய்து வந்ததாக ஒப்புக் கொண்டார்[6]. சிறுமியரை பாலியல் ரீதியாக தூண்டும் விவகாரத்தைத் தடுக்கும் அன்நோன் டிவி (Unknown TV) என்ற குழுவின் ரகசிய புலனாய்வின் மூலம் ஹசன் சுரூர் சிக்கியதாகக் கூறப்படுகிறது. பேஸ்புக்கில் இவருடன் 14 வயது சிறுமி போல் உரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் படி சந்திப்பதாக முன்னேற்பாடாக கொடுக்கப்பட்ட இடமான டெப்ட்போர்டு ரயில் நிலையத்துக்கு ஹசன் சூருர் வர அங்கு அவர் கைது செய்யப்பட்டார்[7], என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Marx, Lenin, Mao- trinity of Communism
பிடோபைல்கள் மாபெரும் குற்றவாளிகள், அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்: இப்பொழுதெல்லாம் பிடோபைல் குற்றங்களை நீர்த்துவிட, டீன்-ஏஜ் பெண்களை “சிறுமிகள்” என்றும் “குழந்தைகள்” என்று குறிப்பிட்டு திசைத்திருப்பப் பார்க்கின்றனர். அதாவது அறியாத சிறிசுகள், பெருசுகளிடம் ஏதோ மாட்டிக் கொண்டுவிடுகின்றன, அவற்றைப் பெரிது படுத்த வேண்டாம் என்பது போல செய்திகளை வெளியிடுகிறார்கள். தமிழில் “சில்மிஷம்” என்று குறிப்பிட்டு முடித்து விடுகிறார்கள். ஆனால், கற்பழிப்பு என்றால், கற்பழிப்பு தான் இதில் குழந்தை, சிறுமி, இளம் பெண், வயதுக்கு வந்த பெண், வயடுக்கு வராத பெண் போன்ற வித்தியாசங்களை எடுத்துக் காண்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே, சிறுவயதிலேயே இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும், இந்த குழந்தை-கற்பழிப்பாளிகள், சிறுமியர்-வன்புணர்ச்சியாளர்களை விட்டு வைக்கக் கூடாது, அவர்களை மாபெர்ம் குற்றவாளிகளாக கருதப்பட்டு, சட்டப்படி தண்டிக்கப்படவேண்டும்.

Hasan Suroor – Muslim apologetic columnist supporting IS
பிடோபைல்கள் மேனாட்டுப் பிரச்சினை மட்டுமல்லாது, இப்பொழுது இந்திய, ஏன் சென்னைப் பிரச்சினையாகவும் மாறியுள்ளது: பிடோபைல் என்பது மேனாடுகளில் சாதாரணமான விசயமாகி விட்டது. இதை ஒரு பெரிய குற்றமாக எடுத்துக் கொண்டுள்ள வேளையில், இது ஒரு நோய் [பிடோபிலியா] போலவும் சித்தரிக்கப்படுகிறது. இதில் நடுத்தர மற்றும் வயதானவர்கள் தாம் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர் மற்றும் மாட்டிக் கொண்டு வருகின்றனர். குறிப்பாக கிறிஸ்தவ மத பாஸ்டர்கள், பிஷப்புகள், ஏன் கார்டினல்கள் கூட மாட்டிக் கொண்டுள்ளனர். வாடிகனைப் பொறுத்த வரையில், இது மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனால், வெளிநாடுகளில், மிகவும் ஜாக்கிரதையாக அத்தகையோரைக் கண்காணிப்பட்டு வருகின்றனர். அன்நோன் டிவி போன்ற குழுக்கள், சிறுவர்-சிறுமியர் போன்று நடித்து, டேடிங் மற்றும் சமூக வளைதளங்களில், வயதானவர்கள், அவ்வாறு சிறுவர்-சிறுமியர்களிடம் செக்ஸ் ரீதியில் அணுகும் போது கண்காணிக்கின்றனர்[8]. இக்குழுவில் பெற்றோர்களும் உள்ளனர்.

Hasan Suroor – Muslim apologetic columnist
செய்தியாளர்கள் செய்யும் “ஸ்டிங் ஆபரேஷனில்” பத்திரிக்கையாளர் மாட்டிக் கொண்டது: இது ஒரு “ஸ்டிங் ஆபரேஷன்” என்று சொல்லப்படுகிறது, அதாவது, குற்றம் செய்பவர்கள் என்று அனுமானித்து, ஒருவரை, குறிப்பிட்ட விசயத்திற்காக தூண்டிவிட்டு, தூன்டில் போட்டு, பண ஆசைக் காட்டி, விசயத்தை வரவழைக்கும் விதமாகும். அவ்வாறு ஈடுபடும் போது, ரகசிய கேமராவில், உரையாடல், பணம் கொடுக்கும்-வாங்கும் நிகழ்ச்சி, அல்லது மற்ற விவாகாரங்கள் பதிவு செய்யப்படும். நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகை ஆசிரியர்கள் மற்றும் நிருபர்களால் நடத்தப்படும் இத்தகைய “கொட்டும் சிகிச்சைகள்”, சில நேரங்களில் வெற்றிகரமாக முடிகின்றன, சில நேரங்களில், வெறும் உற்சாகத்தூண்டுதலை உண்டாக்கி, பரபரப்பான செய்திகளாக மாறி, பிறகு அடங்கி விடுகின்றன. ஆனால், இந்நிகழ்ச்சியில், ஒரு பத்திரிக்கையாளரே மாட்டிக் கொண்டிருப்பது, கவனிக்கத்தக்கது.

Beef eating party politics- good or bad
‘இண்டியாஸ் முஸ்லிம் ஸ்பிரிங்: வொய் நோபடி டாக்கிங் அபெளட் இட்?’: இப்புத்தகத்தின் படி, “பத்திரிகையாளர் ஹசன் சுரூர் சந்தித்த இஸ்லாமிய இளம் பெண்களும் ஆண்களும் உற்சாகமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் சுயகழிவிரக்கம் இல்லை. எங்களில் பலர் பொருளாதாரத்திலும் கல்வியறிவிலும் பின்தங்கியிருப்பதற்குக் காரணம் நாங்களும்தான் என்று மனம் திறந்து ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் சுதந்தரமாக இருக்க விரும்புகிறார்கள். நன்றாகப் படிக்கவும் நல்ல வேலையில் அமரவும் நன்றாக ஆடையணிந்துகொள்ளவும் நன்றாக வாழ்வை ரசித்து வாழவும் விரும்புகிறார்கள். நல்ல வீடுகளில் வசிக்கவும் நல்ல காற்றைச் சுவாசிக்கவும் நல்ல நண்பர்களைப் பெறவும் கனவு காண்கிறார்கள்”, என்று மருதன் குறிப்பிட்டுள்ளது உள்ளது[9]. …..தனது India’s Muslim Spring : Why is Nobody Talking about it? புத்தகத்துக்காக ஓர் இளம் பெண்ணைப் பேட்டியெடுக்கும்போது ஹசன் சுரூரால் வியக்காமல் இருக்கமுடியவில்லை. ‘மன்னிக்கவும், புர்கா அணிந்த ஒரு பெண்ணைச் சந்திப்பேன் என்றுதான் நினைத்தேன். உங்களை எதிர்பார்க்கவில்லை.’ ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்த அந்தப் பெண் ‘வாட் நான்சென்ஸ்?’ என்று சொல்லி சிரிக்கிறார். …….முஸ்லிம்களில் நாத்திகர்கள் இருக்கிறார்கள். மிதவாதிகள் இருக்கிறார்கள். தீவிர நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள். என் நம்பிக்கை எனக்கு, உனது நம்பிக்கை உனக்கு என்று நாசூக்காக ஒதுங்கிச்செல்பவர்கள் இருக்கிறார்கள்………………..இப்படியெல்லாம் குறிப்பிட்டாலும், அதே ஹசன் சுரூர் தனது கட்டுரைகளில் வேறுவிதமாக எழுப்பியுள்ள பிரச்சினைகள், இதில் அலசப்படவில்லை என்று தெரிகிறது. புத்தக மதிப்பீடு செய்பவர்கள், விமர்சிப்பவர்கள், அவற்றை வைத்து கட்டுரைகள் எழுதுபவர்கள், இவ்வாறு ஆசிரியரைப் பற்றி, அவரது சமீபத்தைய கட்டுரைகளில் வெளிப்படுத்திய கருத்துகளை விடுத்து, தேர்ந்தெடுத்து அலசும் போக்கில் இருப்பது, படிப்பவர்களுக்கு “சென்சார்” செய்வது போலுள்ளது.

உற்சாகமான மோடி ஆதரவாளர்கள்
ஹசன் சுரூர் ஏன் மோடியை சுரூர் என்று கொட்டுகிறார்?: ஹஸன் சுரூர் எழுத்துகள் எல்லாம், மோடியை விமர்சிப்பதாக உள்ளது[10]. “இப்பொழுது ஆவியாகிப் போகும் இந்திய அரசியல் கலவையில், “செக்யூலரத்துவம்” என்ற ஒன்று முஸ்லிம் பிரச்சினைகளை கடத்தி செல்கிறது. அந்த சமூகம் பதில் சொல்வதற்கு தயாராவதற்கு முன்பாகவே, அவர்களுடன் ஓடி அக்கடத்தல் வேலை நடக்கிறது”, என்று ஒரு கட்டுரையில் கிண்டல் அடிக்கிறார்[11]. காங்கிரஸின் வீழ்ச்சிற்குப் பிறகு, செக்யூலரிஸம் வேறு பக்கத்தை நாடவேண்டியுள்ளது. இன்னொரு கட்டுரையில், “முஸ்லிம்களுக்கு தலைமை இல்லாதலால், மோடியை நம்பவேண்டியுள்ளது”, என்று நக்கல் அடிக்கிறார்[12]. உலக மாற்றங்களுக்கு ஏற்றவகையில், முஸ்லிம்கள் தங்களை மாற்றிக் கொள்ளா வேண்டும்[13]. என்று இப்படி தொடர்ச்சியாக முஸ்லிம்கள், இஸ்லாம் என்று அவ்விசயங்களைச் சுற்றிதான் இவரது எழுத்துகள் இருந்து வருகின்றன. இப்பொழுது கூட மோடிக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள கூட்டத்திற்கு ஆதரவு சேர்க்கும் முறையில் இவர் செயல்பட்டார் என்று கூறப்படுகிறது. மோடி இங்கிலாந்திற்கு வருவது விரும்பப்படவில்லை என்று ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டது. ஆனால், பிறகு, அது பொய்யானது என்று தெரியவந்தது[14]. சரி, கருத்துரிமை, எழுத்துரிமை என்று எடுத்துக் கொண்டால், இவையெல்லாம் சாதாரண விசயங்கள் தாம், ஆனால், ஏன் தேர்ந்தெடுத்து கொட்டும் வேலை, என்பதில் தான் சந்தேகம் எழுகின்றது.
© வேதபிரகாஷ்
14-11-2015
[1] தினமலர், பாலியல் உரையாடல் குற்றச்சாட்டில் ஹசன் சரூர் கைது, நவம்பர்.12, 2015: 02.11.
[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1385051
[3] இன்.4.இந்தியா, சிறுமி பாலியல் விவகாரத்தில் இந்திய பத்திரிக்கையாளர் கைது, Thursday ,12 November 2015.
[4] தமிழ்.இந்து, பாலியல் குற்றச்சாட்டு: லண்டனில் இந்திய வம்சாவளி பத்திரிகையாளர் கைது, Published: November 12, 2015 12:57 ISTUpdated: November 12, 2015 13:06 IST
[5] http://in4india.in/news/Other-News/2015/11/indian-journalist-arrested-in-london
[6] http://www.huffingtonpost.in/2015/11/11/hasan-suroor-video_n_8529978.html
[7]http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article7869057.ece
[8] http://timesofindia.indiatimes.com/nri/other-news/Indian-origin-journalist-Hasan-Suroor-arrested-in-UK-on-paedophilia-charges/articleshow/49756604.cms
[9] http://marudhang.blogspot.in/2014/03/blog-post.html
[10] Hasan Suroor, Modi, fauxsecularists and Muslims, September 22, 2014 Last Updated at 21:46 IST.
[11] http://www.business-standard.com/article/opinion/hasan-suroor-modi-faux-secularists-and-muslims-114092201238_1.html
[12] http://www.thehindu.com/opinion/op-ed/narendra-modi-and-ties-with-muslims/article7114109.ece
[13] http://www.thehindu.com/opinion/op-ed/comment-article-islamic-difference-and-radicalisation/article6760854.ece?ref=relatedNews
[14] http://www.ibnlive.com/news/india/narendra-modi-not-welcome-image-on-uk-parliament-photoshopped-1162875.html
குறிச்சொற்கள்:ஆர்.எஸ்.எஸ், இடதுசாரி, இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்தியாவின் மீது தாக்குதல், இந்து, இந்து ராம், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துத்துவம், கைது, சிறுமி பாலியல், ஜிஹாத், பிடோபைல், மோடி, லண்டன், வலதுசாரி, ஹசன் சரூர், ஹசன் சுரூர், ஹஸன் சரூர், ஹஸன் சுரூர், ஹிந்து ராம்
அல்-குவைதா, ஆப்கானிஸ்தான், இடதுசாரி, இந்திய விரோதிகள், இந்தியன் முஜாஹித்தீன், இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்து ராம், இந்துக்கள், இந்துத்துவம், உண்மை, சிறுமி பாலியல், ஜிஹாத், பிடோபைல், மோடி, லண்டன், வலதுசாரி, ஹசன் சரூர், ஹசன் சுரூர், ஹஸன் சரூர், ஹஸன் சுரூர், ஹிந்து ராம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நவம்பர் 1, 2015
பசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (3)?

திக படம் – பசுவதையா, மனித வதையா
அக்டோபர் 26ம் தேதியில் நிகழ்த்தப்பட்ட இவ்விவகாரம் திட்டமிட்டதா?: அக்டோபர் 26, 2005 அன்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில், அரசியல் நிர்ணய சட்டத்தில் உள்ள அப்பிரிவை ஆமோதித்தது மட்டுமல்லாது, மாநிலங்கள் ஏற்படுத்தியுள்ள அத்தகைய பசுவதை எதிர்ப்பு சட்டங்களையும் ஆதரித்தது. பத்தாண்டுகள் கழித்து அதே அக்டோபர் 26 அன்று இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆக, இது திட்டமிட்டே செய்யப்பட்டதா, அல்லது எதேச்சையாக நடந்ததா என்று தெரியவில்லை. பொதுவாக, இதெல்லாம் பிஜேபிக்கு ஆதரவாக போகும் என்று மற்றவர்கள் கணிப்பார்கள். ஆனால், உண்மையில் இதனால் யார் லாபமடைகிறார்கள் என்பதனை கவனிக்க வேண்டும். ஐ.ஐ.டியில் மாட்டுக்கறி என்று முன்னர் பிரச்சினை செய்தவர்கள் யார் என்று பார்த்தால், கம்யூனிஸ்ட்கள், முஸ்லிம்கள் மற்ற இவர்களுடன் தொடர்பு கொண்ட குழுக்கள், இயக்கங்கள் என்பதனை கவனிக்கலாம். மாணவர்களிடையே, பிரிவு, வெறுப்பு, துவாசங்களை உருவாக்கவே, அவர்கள் செய்து வருகிறார்கள். ஏ.பி.வி.பி வருகிறது, வளர்ச்சியடைகிறது, பல பல்கலைக்கழகங்களில் தனது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால், சரஸ்வதியை எதிர்ப்பது, பசுமாமிசம் உண்ணுவதை ஆதரிப்பது என்ற முறைகளில் தடுத்துவிட முடியாது.

கோமாதா படம்
எதை வேண்டுமானாலும் உண்ணுவோம், அதை கேட்க நீ யார்?: நான் எதை உண்பது, உண்ணாமல் இருப்பது என்பதனை முடிவு செய்ய நீ யார்? என்னுடைய சமையலறை நுழைய உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்படுவதை கவனிக்கலாம். மனிதனுக்கு எதை வேண்டுமானாலும் சாப்பிட உரிமை இருக்கிறது என்றால், அவ்வாறே எதையாகிலும் உண்டு வாழட்டும். ஆனால், ஒருவன் உண்ணும் உரிமையை தடுக்க அடுத்தவனுக்கு இல்லை எனும்போது, அதேபோல, அவன் உண்ணும் உரிமையை தடுக்க, இவனுக்கும் இல்லை என்றாகிறது. பசு மாமிசம் உண்ணுவது என்னுடைய உரிமை என்றால், பன்றி மாமிசம் உண்ணுவது என்னுடைய உரிமை எனலாம். இல்லை, யூகாரிஸ்டில், நாங்கள் உண்மையிலேயே மனித மாமிசம் மற்றும் ரத்தம் தான் உண்ணுவோம் என்று, நாளைக்கு கிறிஸ்தவர்கள் தங்களது உரிமையைக் கேட்கலாம். பிறகு எப்படி பன்றி மாமிசம் உண்ணுவோம், மனித மாமிசம் உண்ணுவோம் என்று அறிவிப்பார்களா, பார்ட்டி நடத்துவார்களா? கருத்தரங்கங்கள் நடத்துவார்களா?

கோமாதா – தெய்வமாக மதித்தல்
தமிழ் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு பொறுத்தவரையில் மாடு என்பது தான் சகலமும்: சங்காலத்திலிருந்தே ஆநிரை, மாடுகள் முதலியன தெய்வீகமாக, செல்வமாக, சமுதாயத்தில் ஒரு முக்கிய அங்கமாகக் கருதப்பட்டது. “கோ” என்ற சொல்லிற்கு பல அர்த்தங்கள் மற்றும் அதிலிருந்து பல வார்த்தைகளும் உருவாகின. கோ என்றால் தலைவன், அரசன் பசு என்று இரண்டு பொருள் தரும். ஆடு மேய்த்தவன் அரசன் ஆனான் மாடு மேய்த்தவன் மன்னன் ஆனான் என்றெல்லாம் சொல்வதுண்டு. ஆயனின் கோலே அரசனின் செங்கோல் ஆனது. பசுக்களை வளர்ப்பவர்கள், காப்பவர்கள் என்று ஆயர், கோவலர். இடையர், பூழியர், குடவர் என்று பல பக்கள் குழுமங்கள் இருந்தன. பசுக்கள் செல்வமாகக் கருதப் பட்டதால், அப்பொழுது அவற்றைக் கவர்வது, திருடுவது என்ற பழக்கம் இருந்தது. இதனால், ஆநிரை கவர்தல் மற்றும் ஆநிரை மீட்டல் என்பறு புலவர்கள் தங்களது பாடல்களில் அவற்றை விவரித்துள்ளனர். பசுக்களை காக்கும் ஆயர்களுக்கும், அவற்றைக் கவரும் மழவர், மறவர், எயினர், வேடர் போன்றோருக்கும் சண்டை, போர் நடந்ததை சங்க இலக்கியம் எடுத்துக் காட்டுகிறது. ஆவுடையர்கள் பெரிய செல்வந்தர்களாக இருந்தனர். “கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்றையவை”, என்று வள்ளுவர் சொன்னதிலிருந்து அதன் மேன்மையை அறிந்து கொள்ளலாம். இடைக்காலத்தைய இலக்கியங்களும் அவ்வாறே மதித்து வந்தன.

ஆநிரை கவர்தல் – காத்தல்
இடைக்காலத்தில் ஆநிரை காப்பது: ‘ஆகெழு கொங்கு’ என்று பசுக்களை மையப்படுத்தி பெருமை கண்ட கொங்கதேசத்தவராக, பசுக்களை மீட்பதிலும் காப்பதிலும் பெருமைப்பட்டனர், பசுக்களை மீட்ட வீரனுக்கு ஊர்கள் மானியம் வழங்கப்பட்டன. செற்றார் திறல் அழிய, சென்று செருச் செய்யும் கோவலர், அதாவது, ஆநிரைகளை கவர வரும் பகைவர்களின் திறலை அழித்து, போர் / செரு புரியும் கோவலர்கள், கோ-காவலர்கள், கோரகக்ஷ்கர்கள் ஆனார்கள். ஆகவே, ஆநிரை காத்தல் என்பது தமிழரின் அறம் மட்டுமல்லாது கடமையும் ஆகும். குடியாத்தம் வட்டம் கல்லப்பாடி என்னும் ஊரின் மிக அருகில் உள்ள வங்கட்டூர் என்ற ஊரில் நடுகற்கள் துரைசாமி நாயுடு என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் இருந்து நான்கு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன.. இந்த நடுகற்கள் முதலாம் ராஜராஜனின் மூத்த சகோதரனும், சுந்தரசோழனின் மூத்த மகனுமான பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலனால் படைக்கப்பட்டு இருக்கிறது. நான்கு நடுகற்களில் இரண்டு பழங்கால போர் பற்றிய செய்தியினை தருகின்றது. அதாவது ‘ஆநிரை காக்கும் பூசலில்’ இறந்துபோன தந்தை தின்மச்செட்டி மற்றும் அவரது மகன் சாத்தையன் பற்றி குறிக்கின்றது[1].

ஆநிரை கவர்தல்- நடுகற்கள்
ஆநிரை மீட்ட வீரக்கல்‘ தேனியில் கண்டுபிடிப்பு[2]: 11 மற்றும் 14ம் நூற்றாண்டு காலத்து சிற்ப கற்றூண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு கல் “ஆநிரை மீட்ட வீரக்கல்.’ இக்கல்லில் கீழிருந்து மேலாக நான்கு நிலைகளில் இரண்டு வீரர்களின் வீரச்செயல்கள் காட்டப்பட்டுள்ளன. சிற்பத்தில் பொறிக்கப்பட்டுள்ள முதல் நிலையில், போரில் ஈடுபடும் வீரன் குதிரையின் மீது அமர்ந்து எதிரியை ஈட்டி கொண்டு எரிவதாகும். இரண்டாவது நிலையாக வீரனின் காலடியில் பெண் அல்லது வீரனின் மனைவியாக கருதும் அந்த பெண்ணும் கணவருடன் இறந்திருப்பதற்கான சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.மூன்றாவது நிலையில், சங்க காலம் முதல் போரின் போது தமிழருக்கே உரித்தான ஆநிரை மீட்டல் அதாவது போரின் போது எதிரிகளிடமிருந்து மாடுகள் அல்லது பெண்களை மீட்டு வருவதாகும். அதன் நினைவாக மீட்டு வரும் வீரரின் நினைவாகவும், இரு மனைவிகளும் இறந்ததன் நினைவாக எழுப்பப்பட்ட வீரக்கல்லாகும். நான்காவது நிலையாக வீரர்கள் தனது மனைவிகளோடு இறந்ததை குறிக்கும் வகையில் இடது புறம் சூரியனும், மையத்தில் சிவலிங்கமும், வலது புறத்தில் சந்திரனும் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் ஆநிரை கவர்தல் அல்லது மீட்டு வருவதற்காக இரு ஆட்சியாளர்களிடையே போர் நடந்ததற்கான ஆதரமான வீரக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது போல் நாயக்கர் கால நிர்வாக முறையில் சிறப்புடையதாக கருதப்பட்ட நாட்டுக்காவல் முறை (ஊர்க்காவல் முறை) இருந்ததற்கான நாட்டுக் காவல் ஒற்றைக் கல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் உருவ அமைப்பாக வீரன் ஒருவன் குத்துவாள் இடுப்பில் செருகி ஆவேசத்துடன் ஒரு கையில் வாளை உயர்த்திய நிலையிலும், ஊர்க்காவல் முறையின் அடையாளமாக மறுகையில் தடி ஊன்றிய நிலையிலும் உள்ளது. இந்த கல் 14 ம் நூற்றாண்டை சார்ந்தவையாக இருக்கலாம், என கண்டறியப்பட்டுள்ளது[3].

ஆநிரை காத்தல் – தெய்வமாக மதித்தல்
இக்காலத்தைய நிலைமை: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839 நவம்பர் 22 – 1898 ஜூலை 5) 19 ஆம் நூற்றாண்டில் புலால் உணவுக்காக பசுக்கொலை செய்து மாமிசம் உண்ணும் ஆங்கிலேயர்களின் கொடுமையை மற்றும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நூறு பாடல்கள் கொண்ட, “ஆங்கிலியர் அந்தாதி” என்று பாடினார். இவ்வாறிருக்கும் போது, “தமிழர்கள்” என்று பறைச்சாற்றிக் கொள்பவர்கள், இவற்றையெல்லாம் மறைத்து, மறந்து ஏதேதோ பேசுகிறார்கள், எழுதிகிறார்கள். இருப்பினும் வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவும் இல்லாமல், தங்களை கவிக்கோ, பெருங்கவிக்கோ என்றெல்லாம் கூறிக்கொள்கிறார்கள், பாராட்டு விழா நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பசுமாமிசம் உண்ணும் விழா நடத்துகிறார்கள், பிறகு எப்படி, ஏன் மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்?

1966 anti-cow slaughter rally Delhi.6
1966ல் தில்லியில் நடைப்பெற்ற பசுவதை எதிர்ப்பு பேரணியும், சாதுக்கள் கொல்லப்பட்டதும்: இந்தியாவில் பசுவதையைத் தடைசெய்ய வேண்டி இந்துக்கள் பல காலமாகப் போராடி வருகின்றனர். நவம்பர் 7, 1966 அன்று “கோபாஸ்டமி” என்று கொண்டாடப்படும் தினத்தன்று சாதுக்கள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர். ஜெயபிரகாஷ் நாராயணனும் பசுவதையை தடை செய்யக் கோரி குரல் எழுப்பினார், இந்திரா காந்திக்கு கடிதமும் எழுதினார்[4]. சாதுக்களின் பேரணி பாராளுமன்றைத்தை நோக்கிச் சென்றபோது, பேரணி மீது அப்போதைய இந்திரா காந்தி அரசின் உத்தரவுப்படி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் எட்டு சாதுக்கள் பலியானார்கள் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதனால், தில்லியில் இருந்த காமராஜர் வீடு தாக்கப்பட்டது. இதற்காக சங்கராச்சாரியார் சுவாமி நிரஞ்சன் தீர்த்தர், சுவாமி பர்பத்திரி, மஹாத்மா ராமசந்திர வீர் முதலியோர் கண்டனம் தெரிவித்து உண்ணாவிரதம் மேற்கொண்டர். மஹாத்மா ராமசந்திர வீர் 166 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அப்போதைய உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தா இதற்காக பொறுபேற்று ராஜினாமா செய்தார். ஆனால், தமிழகத்தில் இவ்வுண்மைகளைச் சொல்வது கிடையாது. மாறாக, நாத்திகவாதிகள், இந்துவிரோதிகள் (ஏனெனில் அவர்கள் எழுதும் விதத்திலேயே அதனை வெளிப்படுத்துக் கொள்கின்றனர்[5]) இதைக்கூடத் திரித்து எழுதுகிறர்கள் என்பதை கவனிக்க வேண்டும்[6].

1966 anti-cow slaughter rally Delhi.1
சென்னையில் நடைப்பெற்ற போராட்டங்கள்: ஆலய வழிபடுவோர் சங்கம், சென்னை எனும் எஸ்.வி.பத்ரி என்பவரால் அமைக்கப்பட்ட அமைப்பு தமிழகம் வழியாகக் கடத்தப்பட்டு கேரளாவிற்கு இறைச்சிக்காகக் கொண்டு செல்லப்படும் பசுக்கள், கன்றுகள், எருமைகள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு எதிராகப் போராடி வருகின்றது. சென்னை பெரம்பூரில் 2012 ஆம் ஆண்டு தமிழக அரசு நவீன இறைச்சிக்கூடம் அமைக்க ஆரம்பித்தது. பல ஆண்டுகளாக இங்கு சாதாரண இறைச்சிக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இதனை அமைக்கும் பொறுப்பை டெல்லியைச் சேர்ந்த ஹின்ட்-அக்ரோ லிமிடெட் அமைப்பு ஏற்றது. இந்த நவீன இறைச்சிக்கூடம் ஒரு நாளில் 10,000 மாடுகளை வதை செய்யும் திறன் கொண்டது. ஒரு மணி நேரத்தில் 60 மாடுகளையும் 250 கன்றுகளையும், ஆடுகளையும் வதை செய்யும் திறன் கொண்ட இந்த நவீன இறைச்சிக்கூடத்திற்கு பொது மக்கள், தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டும், உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டும் எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது.

1966 anti-cow slaughter rally Delhi.3
© வேதபிரகாஷ்
31-10-2015
[1] http://www.dailythanthi.com/News/Districts/Vellore/2015/03/22223735/Planting-defense-appeal-to-remain-in-a-state-of-near.vpf
[2] தினமலர், ஆநிரை மீட்ட வீரக்கல்‘ தேனியில் கண்டுபிடிப்பு, செப்டம்பர்.5, 2014.02.34.
[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1062756&Print=1
[4] In his letter, written in 1966 to the then Prime Minister, Mrs. Indira Gandhi of 1966, Lok Nayak Shri Jaya Prakash Narayan wrote that “ For myself, I cannot understand why, in a Hindu majority country like India, where rightly or wrongly, there is such a strong feeling about cow-slaughter, there cannot be a legal ban”. A copy of the letter is annexed and marked as Annex I (4). http://dahd.nic.in/ch1/chap1.htm#item13
[5] http://www.unmaionline.com/new/2486-euthanasia-cow-human-euthanasia.html
[6] http://subavee-blog.blogspot.in/2015/03/2.html
குறிச்சொற்கள்:அரசியல், ஆநிரை, ஆநிரை கவர்தல், ஆநிரை காத்தல், இந்தியா, உயிர், ஊண், கலாச்சாரம், கவிக்கோ, கோ, கோபாலன், கோவலன், கோவில், சங்க இலக்கியம், சங்கம், செக்யூலரிஸம், செல்வம், நடு கல், பசு, பசுவதை, பிரச்சாரம், பீப், புலால், பெருங்கவிக்கோ, பேச்சுரிமை, மாடு, மாமிசம்
அகிம்சை, அடையாளம், அரசியல், அரசியல் விபச்சாரம், ஆ, ஆதரவு, ஆநிரை, இந்திய விரோதிகள், இந்து மக்கள், இம்சை, இலக்கு, எறுமை, கறி, கலாச்சாரம், சட்டம், ஜீவகாருண்யம், பசு, பீப், மதவாத அரசியல், மாட்டுக்கறி, மாமிசம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஓகஸ்ட் 22, 2015
புனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (2)

U R Ananathmurthy and his christian wife Esther
யு.ஆர். அனந்தமூர்த்தி (2005-2011): யு.ஆர். அனந்தமூர்த்தி எஸ்தர் என்ற கிருத்துவ பெண்ணை திருமணம் செய்து கொண்டார், இதனால், பல பிரச்சினைகள் ஏற்பட்டன[1]. தனது தனிமனித வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்புகளை, “பிராமண விரோதம்” மூலம் முரண்பட்ட தூஷணமாக கருத்துகளை-எழுத்துகளை வெளிப்படுத்தினார். பிஜேபிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். ஆர்.எஸ்.எஸ், பிஜேபி முதலிய இயக்கங்களைக் கடுமையாக விமர்சித்து வந்தார். 2013ல் மகாபாரத்தில் பிராமணர் பசு மாமிசம் உண்டார்கள் என்று குறிப்புள்ளது என்றார், ஆனால், உடுப்பி மட விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள் இல்லை என்று எடுத்துக் காட்டினார். நரேந்திர மோடி ஆளும் இந்தியாவில் தான் வாழமாட்டேன் என்றெல்லாம் பேசியுள்ளார். ஆனால், இவர் நன்றாக குடிப்பார் என்ற விவரங்களை யாரும் குறிப்பிடவில்லை[2]. விஸ்கி போட்டால் தான் மூட் வரும் போன்றிருந்தவர் என்று யாரும் எடுத்துக் காட்டவில்லை[3]. இவ்வாறு முரண்பட்ட இலக்கிவாதியைப் பற்றியும் யாரும் விமர்சிக்கவில்லை. இரண்டுமுறை அப்பதவியை வகித்துள்ளார்.

Saeed-Akhtar-Mirza
சயீத் அக்தர் மீர்ஜா (2011-14): ஜெனிபர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரது மகன்கள் சப்தர் மற்றும் ஜஹீர் நியூ யார்க் மற்றும் துபாயில் வேலை செய்கின்றனர். 1989ல் “சலீம் லங்டே பே மத் ரோ” என்ற சலீம் என்ற திருடன் மற்றும் குண்டாவின் வாழ்க்கையினை விவரிப்பது போல படத்தில் “இந்துத்துவா” பற்றிய விமர்சனத்தை வைத்தார். இஸ்லாமிய சமூகத்தில் எப்படி சட்டத்தீர்குப் புறாம்பான செயல்கள் மற்றும் குற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட வேலைகளாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்பதனை, இந்துத்த்வ தாக்கத்தில் எடுத்துக் காட்டினாராம்[4]. 1995ல் நஸிம் என்ற படத்தில் பாபரி மஸ்ஜித் இடிப்பு முன்பு, மும்பையில் எப்படி இந்து-முஸ்லிம்களுக்கு இடையே பதட்டமான நிலை இருந்தது, பிறகு மும்பைத்தெருக்களில் கலவரமாக மாறியது பற்றி விளக்கியுள்ளார்[5]. இதனால், புகழ் பெற்றார். இத்தகைய படங்கள். அவற்றில் வசனங்கள் முதலியன அவர்களது சித்தாந்த சார்பு, விரோதம் மற்ற பாரபட்சம் கொண்ட நோக்கு முதலியவற்றைத்தான் காட்டுகின்றன. அதே நேரத்தில் ரோஜா, பாம்பே போன்ற படங்கள் முஸ்லிம்களினால் எதிர்க்கப்பட்டன என்பது நோக்கத்தக்கது.

Saeed aktar mirza, babar and masjid
கஜேந்திர சௌஹான் ஒரு “புரோன் ஏக்டர்” (Porn actor): சௌஹான் விசயத்தில், டைம்ஸ்நௌ டிவிசெனலில் ஒரு விவாதத்தை வைத்து, அவருக்கு தகுதியில்லை என்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது[6]. இதில் அர்னவ் கோஷ்வாமி வழக்கம் போல, தானே குற்றஞ்சாட்டுவதில் ஈடுபட்டு, விவாதத்தில் ஈடுபட்டவர்களை சௌஹானுக்கு எதிராக பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுத்து, திசைத்திருப்பினார். அரசியல்-சார்பு என்பது பிரச்சினை இல்லை, ஆனால், அவருக்கு தகுதி இல்லை என்பதுதான் முக்கியமான விசயம் என்று முன்னமே தீர்மானித்தது போன்று விவாதம் தொடர்ந்தது. அனுபம் கேர், அவரை ஒரு “புரோன் ஏக்டர்” (Porn actor) என்றே குறிப்பிடுகிறார். அப்படியென்றால், மேலே எடுத்துக் காட்டப்பட்ட முந்தைய தலைவர்களின் விவரங்களை வைத்துக் கொண்டு பார்த்தால் அவர்களை எவ்விதத்தில் சேர்ப்பது என்று பார்க்க வேண்டும். என்னத்தான் சினிமாத்துறையைத் தூக்கி வைத்துக் கொண்டு, இவர்களையெல்லாம் பெரிய மகாத்மாக்கள் போல சித்தெரித்துக் கொண்டாலும், இவர்களால் சமூகம் சீரழிகிறது என்பதனை நன்றாகவே புரிந்து கொள்ளலாம். அவர்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கவிருப்பதனால், இங்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களே சாக்கடையில் உழலும் புழுக்களாக இருக்கும் போது, இன்னொரு புழு வந்துள்ளது என்பதா, இல்லை எல்லா புழுக்களும் தக்கக்கம்பிகள் என்று அவரவர் சித்தாந்தத்தை வைத்து அளவிட முடியுமா என்பதனை மக்கள் தான் சொல்லவேண்டும்.

Saeed aktar mirza, babar and masjid exploiting Muslim sentiments
தகுதி–தராதரம்–பாண்டித்யம் முதலியன எவ்வாறு எடைபோடுவது?: பர்ஸ்ட்-போஸ்ட் இதழில் இவர் லாயக்கற்றவர் என்ற தோரணையில் கட்டுரையை, செய்தியாகவே வெளியிட்டது[7]. “அறிவுஜீவித்தனம் அற்றவர்கள் மோடி அரசாங்கத்தில் தடுக்கமுடியாத அளவிற்கு உயர்ந்த பதவிகளுக்கு வருகிறார்கள்” என்றே தலைப்பிட்டு அதனை வெளியிட்டது[8]. இதற்கு முன்னால், பிஸ்வநாத் கோஷ் என்பவரின், இதே தோரணையில் “தி ஹிந்துவில்” ஒரு கட்டுரை “சித்தாந்தமும், பாண்டித்யமும்” என்ற தலிப்பில் வெளிவந்தது. அதிலும் அந்த “குலி கிடிகி” படத்தை வைத்துதான் விமர்சனம் செய்யப்பட்டது[9]. விளக்கேந்தும் பையனை, படம் டைரக்ட் செய்யச் சொல்வது போலுள்ளது, அந்த பையன் கூட விசயத்தைப் புரிந்து கொண்டால், சென்று விடுவான், ஆனால் மந்தமாக இருக்கும் இவர் என்ன செய்வாரோ என்று முடிக்கிறார்[10]. நடுநிலையாக ஒருசில கட்டுரைகளே வெளிவந்தன. யு.ஆர். அனந்தமூர்த்திக்கும் சினிமாவிற்கும் என்ன சம்பந்தம் இருந்தது, அவர் திரையுலகத்தில் எதை சாதித்தார், என்ன பங்கிருந்தது என்று யாரும் எதிர்க்கவில்லையே, ஒரு மதிக்கப்பட்ட இலக்கிய எழுத்தாளர் என்றுதானே தேர்ந்தெடிக்கப்பட்டார் என்று விவேக் தேஷ்பாண்டே என்பவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டார்[11]. சௌஹானைப் பொறுத்த வரையில், அவரைப் பற்றி எந்த பொய்யான விவரங்களும் இல்லை. தன்னுடைய நிலையை அவர் நன்றாகவே உணர்ந்துள்ளார். விவாதங்களில் நிச்சயமாக அவரால் வெல்லமுடியாது, ஆனால், அவர் தோற்கவும் இல்லை. அவரை வேலைசெய்ய விட்டால் தான், அவரது லாயக்கான தன்மை அல்லது லாயக்கற்ற தன்மை வெளிப்படும் என்று முடித்தார்[12].

Saeed-Akhtar-Mirza- Salim Langde pe mat ro
ஆர்.எஸ்.எஸ் தொடர்பிருந்தால் பதவிக்கு வரமுடியுமா?: ஆர்.எஸ்.எஸ் தொடர்பினால் தான் ஆர்.எஸ்.எஸ் தேர்ந்தெடுத்து கஜேந்திர சௌஜ்ஹான் நியமிக்கப்பட்டார்[13]. மற்ற இமயம் போன்றவர்களையெல்லாம் பிந்தள்ளிவிட்டு, இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார், இதெல்லாம் இருக்கும் நிறுவனங்களை காவிமயமாக்கும் திட்டம் தான். என்று அச்செய்தி முடித்தது[14]. ஒரு “சி” கிரேட் நடிகர் என்று தலைப்பிட்டு, அவர் நடித்த படங்களின் போஸ்டர்களுடன் “டைம்ஸ் ஆப் இந்தியா” செய்தி வெளியிட்டது[15]. பொதுவாக அவர் படங்களில் இவ்வாறான “நெகட்டிவ் ரோல்களில்” தான் நடித்துள்ளார், தேடியும் வேறெதுவும் கிடைக்கவில்லை என்று அக்கட்டுரை செய்தி முடித்தது[16]. இவ்வாறு ஜூலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட அவருக்கு எதிரான பிரச்சாரம், அவரது மனிதத்தன்மையினை தூஷிப்பது என்ற முடிவான நோக்கத்துடன் செயல்பட்டது. ஆர்.எஸ்.எஸ் தொடர்பிருந்தால் பதவிக்கு வரமுடியும் என்பதெல்லாம் கூட ஒரு மாயை எனலாம். பிஜேபியிலேயே பலர் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். அவர்களுக்கெல்லாம் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு உள்ளது. பிஜேபியில் பலர் பதவிகளில் உள்ளனர், ஆனால் அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தொடர்பு இல்லை. இதெல்லாம் சந்தர்ப்பவாத அரசியல் எனலாம். கம்யூனிஸ்டுகள், மற்ற இடதுசாரி சித்தாந்திகள் போல வலதுசாரி மற்றும் இந்துத்துவசித்தாந்திகள் அந்த அளவிற்கு திறமைசாலிகள் அல்லர். இருந்திருந்தால், கஜேந்தர சௌஹான் என்றோ, இப்பிரச்சினையிலிருந்து வெளிவந்திருப்பார் அல்லது பிரச்சினையே இல்லாமல் போயிருக்கும்! இனி தமிழ் ஊடகங்களின் விம்ர்சனம், செய்தி வெளியீடு முதலியவற்றைப் பார்ப்போம்.
© வேதபிரகாஷ்
22-08-2015
[1] He married a Christian lady, Esther, and faced many problems for his inter-religious wedding. http://www.firstpost.com/living/ur-ananthamurthy-pioneer-kannada-literatures-navya-movement-1677817.html
[2] http://scroll.in/article/675713/kannada-writer-ananthamurthy-loved-whiskey-and-a-good-argument
[3] . On the first day of class, a seminar on Indian mythology, he looked around at his ten or so students, and said, “Why don’t we go to my house, and continue the class over dinner and whiskey?” And so we abandoned the classroom for the rest of the term, and met at his house every week. The classes, fueled by good Scotch and his wife Esther’s tamarind rice, went on until one in the morning.
Suketu Mehta, Kannada writer Ananthamurthy loved whiskey and a good argument- A former student pays tribute to the towering writer who passed away on Friday, aged 81., Aug 23, 2014 · 07:46 am
[4] http://parallelcinema.blogspot.in/2005/08/salim-langde-pe-mat-rodont-cry-for.html
[5] The delicate relationship between a 15-year-old girl and her grandfather is used to describe how the growing political tensions between Muslems and Hindus in 1992 led to the destruction of a medieval Muslim mosque and subsequently, violent rioting in the streets of Bombay.
[6]In a debate moderated by TIMES NOW’s Editor-in-Chief Arnab Goswami, panelists — Gajendra Chauhan, Chairman, FTII, Paintal, Actor; Uday Shankar Pani, Filmmaker & Alumni FTII; Narendra Pathak, Member, FTII; Anupam Kher, Actor; Vinay Shukla, Filmmaker and Writer; Aruna Raje Patil, Filmmaker; Prateek Vats, Alumni, FTII; Saurabh Shukla, Actor; and Vikas Urs, Student, FTII (Cinematography).
http://www.timesnow.tv/Debate-FTIIMahabharat-Bollywood-fights-Yudhisthira/videoshow/4478061.cms
[7] http://www.firstpost.com/politics/gajendra-chauhan-to-pahlaj-nihalani-the-unstoppable-rise-of-the-anti-intellectuals-under-modi-govt-2376458.html
[8] Rishi Majumder, Gajendra Chauhan to Pahlaj Nihalani: The unstoppable rise of the anti-intellectuals under Modi govt, Aug 3, 2015 15:44 IST.
[9] http://www.thehindu.com/features/magazine/bishwanath-ghosh-gajendra-chauhans-appointment-as-ftii-chairman/article7460395.ece
[10] Biswanath Ghosh, Ideology vs stature, Updated: July 26, 2015 01:14 IST
[11] Vivek Deshpande, The problem with Gajendra Chauhan -Debate over the appointment of the FTII chairman has acquired an elitist hue, Updated: July 16, 2015 12:26 am.
[12] http://indianexpress.com/article/opinion/columns/the-problem-with-gajendra-chauhan/
[13] Mohua Chatterjee & Himanshi Dhawan, Chauhan was RSS pick for top job at FTII, TNN | Jul 11, 2015, 12.08 AM IST
[14] http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Chauhan-was-RSS-pick-for-top-job-at-FTII/articleshow/48025610.cms
[15] Deeptiman Tiwary, Gajendra Chauhan: A 34-year veteran of C-grade exploits, TNN | Jul 11, 2015, 01.19 AM IST
[16] http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Gajendra-Chauhan-A-34-year-veteran-of-C-grade-exploits/articleshow/48026077.cms
குறிச்சொற்கள்:அனந்தமூர்த்தி, அனுபம் கேர், அயோத்யா, அரசியல், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், இந்து, இந்துக்களின் உரிமைகள், இந்துக்கள், இஸ்லாம், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கஜேந்திர சௌகான், கஜேந்திர சௌஹான், சயீத் மீர்ஜா, திக் விஜய சிங், திரைப்படம், நசீம், நஸீம், நுக்கட், புனா, புனே, புருனோகிராபி, புரோன், மீர்ஜா
அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூறு, ஆதரவு, ஆதாரம், ஆர்பாட்டம், இடதுசாரி, இந்திய விரோதிகள், இந்து மக்கள், இந்துக்கள், இலக்கு, உண்மை, ஊக்கு, ஊக்குவிப்பு, ஒழுக்கம், கஜேந்திர சௌகான், கஜேந்திர சௌஹான், சௌகான், சௌஹான், புனா, புனே, வலதுசாரி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
மே 10, 2013
நாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்?முரண்பட்ட, மாறுபட்ட, வேறுபட்டதீர்ப்புகள்ஏன்?: ஷரீயத் என்னும் முஸ்லிம் சட்டத்தில் பெரும்பான்மையான ஒற்றுமையில்லை. நாட்டிற்கு நாடு, சமூகத்திற்கு சமூகம், ஜாதிக்கு ஜாதி ஒவ்வொரு கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் உள்ளதால், அவற்றிற்கு ஏற்றபடி உலேமாக்கள் மாற்றியமைத்து அனுசரித்து வருகிறார்கள்.
- நாய் போன்ற விலங்குகளை வளர்க்கலாமா, கூடாதா?
- ஜோதிடம், ஆரூடம், ஜாதகம் பார்க்கலாமா, கூடாதா?
- தாடி, மீசை வைக்கலாமா, கூடாதா?
- புகைப்படம் எடுக்கலாமா, வைத்திருக்கலாமா, கூடாதா?
- தாலி, கருப்பு மணி கட்டலாமா, கூடாதா?
- பூ, பொட்டு, பட்டுப்புடவை இதர அலங்காரம் செய்யலாமா, கூடாதா?
- நடனம் கற்றுக் கொள்ளாலாமா, கூடாதா?
- பாட்டு பாடலாமா, கூடாதா?
என்று இஸ்லாத்தில் பிரச்சினைகள் நீண்டு கொண்டே இருந்துள்ளன. அதற்கு மதத்தலைவர்கள் வெவ்வேறான, முரண்பட்ட கருத்துகளைத் தான் சொல்லியிருக்கிறார்கள். ஹதீஸ்களில் கூட வேறுபாடுகள், மாறுபட்ட விளக்கங்கள் உள்ளன. இந்நிலையில் “வந்தே மாதரம்” விஷயமாக முஸ்லீம்கள் பலமுறை, பலவிதமாக கலாட்டா செய்து வருகின்றனர்.
ஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது[1]: செக்யூலரிஸ இந்தியாவில், நாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்? சவிகுர் ரஹ்மான் பர்க் ( Shafiqur Rahman Barq) என்ற முசல்மான், முகமதியர், முஸ்லிம் தான் யார் என்பதனை வெளிக்காட்டியுள்ளார். வந்தே மாதரம் இசைக்கும் போது வெளிநடப்பு செய்த மாபெரும் தேசியவாதியாகி விட்டார்[2] சவிகுர் ரஹ்மான் பர்க்! ஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது, என்று நியாயம் பேசினார்[3]. அப்படியென்றால், குரானில் எந்த பிரச்சினையும் இல்லை போலிருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் எம்பியின் இச்செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். “சபையை அவமதித்தவர், சபையில் மன்னிப்புக் கேட்க வேண்டும்”, என்றனர்[4]. கேட்பாரா அல்லது பதவியைத் துறப்பாரா என்று பார்க்க வேண்டும்.
சபாநாயகர் மீரா குமாரி கோபம்[5]: சாதாரணமாக, அமைதியாக, பொறுமையாக இருக்கும் மீரா குமாரி கூட, சவிகுர் ரஹ்மான் பர்க் நடந்து செல்வதைக் கண்டு கோபமடந்தார். “தேசிய கீதம் வந்தே மாதரம் இசைக்கும் போது, மதிப்பிற்குரிய அங்கத்தினர், வெளியே சென்று விட்டார். இதை நான் பெரிதாக (அவமதிக்கக் கூடிய) எடுத்துக் கொள்கிறேன். இவர் ஏன் இப்படி செய்தார் என்பதனை நான் அறிய விரும்புகிறேன். மறுபடியும் இது நடக்கக் கூடாது ”, என்றார்.
மதநம்பிக்கைபெரியதுஎன்றால்எம்பியாகவேவந்திருக்கமுடியாதே: வழக்கம் போல, பேச்சுகள், மறுபேச்சு, சாக்குப் போக்கு………………..அவ்வளவுதான். வயதானாலாம், பக்குவம் வரவில்லை போலும். “என்னுடைய மதநம்பிக்கைக்கு ஒவ்வாதலால் நான் பாட விரும்பவில்லை” (struck a defiant note saying he could not sing the song in view of his religious belief). உண்மையில், இவரை யாரும் பாடச் சொல்லவில்லை, ஆனால், நின்றிந்தால் கூட போதும். ஆனால், திமிராக, முதுகைக் காண்பித்துக் கொண்டு, விருவிருவென்று வெளியே நடந்து சென்றது கேவலமாக இருந்தது[6]. “நான் அரசியலில் இருக்கின்றேனோ இல்லையோ, என்னுடைய கருத்தின் படி, நான் நடந்து கொள்கிறேன்”, என்று தெளிவு படுத்தினார்[7]. முன்னர் சிதம்பரம் போன்றோரே, முஸ்லீம் கூடத்திற்குச் சென்று, இத்தகைய ஒழுங்கீன, தேசவிரோதச் செயல்களை ஊக்குவித்திருக்கிறார்கள்[8]. ஜிஹாதின் விளக்கத்திற்குக் கூட மென்மையான விளக்கம் கொடுத்து, பூசி மெழுக பார்த்தார்கள்[9].
“வந்தே மாதரம்” கீதத்திற்கு ஃபத்வா போட்டபோது நான் அங்கு இல்லை: முன்பு இதே சிதம்பரம், “வந்தே மாதரம்” கீதத்திற்கு எதிரான ஃபத்வாவை உறுதி செய்தபோது, நான் அங்கு இல்லை என்று தப்பித்துக் கொண்டார்[10]. முஸ்லீம்களை தாஜா செய்ய வேண்டும் என்று விழாவில் கலந்து கொண்டார். உள்துறை அமைச்சராக இருந்தும், மதவாத அமைப்பிற்குச் செண்ரு விழாவை துவக்கி வைத்தார். ஆனால், அதே மாநாடு, வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டபோது, “நான் அங்கில்லை” என்று தப்பித்துக் கொள்ளப் பார்த்தார்!
வந்தேமாதரம்பாடலுக்குஎதிரானதடையைநீக்கமுடியாது: முஸாபர்நகர், நவ. 9, 2009: வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடையை நீக்க முடியாது என்று இஸ்லாமிய அமைப்பான தாரூல் உலூம் அறிவித்துள்ளது[11]. வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதற்கு பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது. அந்தப் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என தாரூல் உலூம் 2006-ம் ஆண்டு ஏற்கெனவே தடை விதித்துள்ளது[12]. தற்போது ஜமியத் உலேமா இ ஹிந்த் அமைப்பும் வந்தே மாதரம் பாடலுக்குத் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், வந்தே மாதரம் மீதான தடையை தாரூல் உலூம் அமைப்பும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்த மாதரம் பாடல் அமைந்துள்ளது, “தாயை நேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால் வழிபட முடியாது’ என்று வந்தே மாதரம் பாடல் மீதான தடைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
“தாயைநேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால்வழிபடமுடியாது”: “வந்தே மாதரம்” பாடும் போது, யாரும் வழிபாடு செய்வதில்லை. பாடு போது எழுந்து நிற்கிறார்கள்; பாடுவதைக் கேட்கிறார்கள்; தெரிந்தவர்கள் உடன் சேர்ந்து பாடுகிறார்கள் அவ்வளவே. பாராளுமன்றத்தில், தலைவர்கள் படங்களைத் திறந்து வைக்கும் போது, மலர் தூவி கைகூப்பி மரியாதை செய்கின்றனர். அப்படி அது கூடாது என்றல், எந்த முஸ்லீமும் அவ்வாறு செய்திருக்கக் கூடாது, ஆனால், செய்து தான் வருகின்றனர். பிறகு எப்படி இந்த சவிகுர் ரஹ்மான் பர்க் வித்தியாசமாக இருப்பார்?
பத்வா யாரையும்கட்டாயப்படுத்தாது, உத்தரவும்அல்லதுவழிகாட்டிதான். இதைக்கடைப்பிடிப்பதும்உதாசீனப்படுத்துவதும்அவர்களதுவிருப்பம்: தாரூல் உலூம் துணை வேந்தர் மௌலானா அப்துல் காலிக் மதரஸி கூறினார், “இந்தத் தடை யாரையும் கட்டாயப்படுத்தாது. இது உத்தரவும் அல்லது வழிகாட்டிதான். இதைக் கடைப்பிடிப்பதும் உதாசீனப்படுத்துவதும் அவர்களது விருப்பம். இருப்பினும் வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடை நீக்கப்படாது’. பிறகு எதற்கு பத்வா? இரண்டு விதமாகக் கொள்ளலாம் என்றால், முஸ்லீம்களை ஒழுங்காக நடத்தவா, குழப்பவா அல்லது தீவிரவாதிகளாக்கவா?
© வேதபிரகாஷ்
10-05-2013
[5] An angry Speaker Meira Kumar ticked off Barq for walking out during the national song whenParliament was being adjourned sine die on Wednesday. “One honourable member walked out when Vande Mataram was being played. I take very serious view of this. I would want to know why this was done. This should never be done again,” Kumar said.
குறிச்சொற்கள்:அரசியல், இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியதேசிய கீதம், இந்தியா, இஸ்லாம், உள்துறை அமைச்சர், எம்பி, காங்கிரஸின் துரோகம், குரான், சவிகுர் ரஹ்மான் பர்க், சிதம்பரம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸம், ஜிஹாத், தாய், தேசியம், பத்வா, முஸ்லிம், முஸ்லீம், முஸ்லீம்கள் மிரட்டுதல், வந்தே மாதரம், ஷரீயத், ஹதீஸ், Indian secularism
அமைதி, அரபி, அரபு, அவதூறு, ஆட்டம், ஆதரவு, ஆதாரம், ஆத்மா, இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், இந்தியன் முஜாஹித்தீன், இஸ்லாமிய பண்டிதர், இஸ்லாம், உபி, உயிர், உயிர்விட்ட தியாகிகள், எம்.பி, எம்பி, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, காஃபிர், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சவிகுர் ரஹ்மான் பர்க், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, ஜோதிடம், தாலி, திரிபு வாதம், தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோதம், தேசிய கீதம், தேசிய கொடி, நாட்டுப் பாடல், நாட்டுப்பாடல், பூ, வந்தே மாதரம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
மே 4, 2013
இன்னொரு பிந்தரன்வாலேயை உருவாக்கும் சோனியா மெய்னோ சீக்கியர்களுடன் அபாய விளையாட்டு ஆடும் காங்கிரஸ்காரர்கள் (1)
ராஜிவ்காந்திதூண்டிவிட்டகலவரம்: அமெரிக்கா எப்படி ஒசாமா பின் லேடனை உருவாக்கி, தீவிரவாதத்தால் வாங்கிக் கட்டிக் கொண்டதோ, அதேபோல முன்னர் இந்திரா காந்தி பிதரன்வாலேயை உருவாக்கி, சீக்கியர்களாலேயே அக்டோபர் 31, 1984 அன்று கொலையுண்டார். அதனால், கோபமுற்ற ராஜிவ் காந்தி, “உன்கி நாநி யாத் ஆயேகி (அவர்களுக்கு அவர்களது பாட்டி-கொள்ளூப் பாட்டி ஞாபகம் வரவேண்டும் – அதாவது அப்படியொரு பாடம் புகட்டவேண்டும்)” என்று சீக்கியர்களைக் கொலை செய்ய வேண்டும் என்ற ரீதியில் தூண்டி விட்டதாக பேசினார்[1]. கனிகான் சௌத்ரி, ஜகதீஸ் டைட்லர், சஜ்ஜன் குமார் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூடி, சீக்கியர்களைக் கொல்ல திட்டம் போட்டு, அதன்படியே ஆயிரக்கணக்கானவர் 1984ல் கொலை செய்யப்பட்டனர்[2]. தில்லியில் அப்பொழுது ஒரு பெரிய கூட்டத்தில், “ஒரு பெரிய மரம் விழுந்தால், அப்படித்தான் அதன் சுற்றியுள்ள பூமியின் மண் பெயரத்தான் செய்யும்” என்று ராஜிவ் பேசினார்[3]. ஏப்ரல் 2012ல் கூட, தில்லி கன்டோன்மென்ட் வழக்கில், சிபிஐ தனது வாதத்தை வைக்கும் போது, இது ஒரு அரசியல் பின்னணியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலாகும் என்றது[4].
29 வருடம்கழித்துநீதிமன்றம்சஜ்ஜன்குமாரைவிடிவித்தது: 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டார். முன்னர், ஜகதீஸ் டைட்லரும் இதே மாதிரி விடுவிக்கப்பட்டார். இதைக் கண்டித்து, தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தை நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் 02-05-2013 வியாழக்கிழமை அன்று முற்றுகையிட்டனர். சீக்கிய அமைப்புகள் செவ்வாய், புதன் இரு நாள்களிலும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின. மன்மோஹன் சிங், சோனியா முதலியோரது கொடும்பாவிகளை எரித்தனர்[5]. கடந்த புதன்கிழமை ஏராளமான சீக்கியர்கள், சோனியா காந்தியின் வீடு அமைந்துள்ள அக்பர் சாலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, மத்திய துணை ராணுவப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று கூட்டத்தைக் கலைத்தனர். ஜந்தர் மந்தர், திலக் நகர், சுபாஷ் நகர் ஆகிய பகுதிகளில் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். வேடிக்கையென்னவென்றால், அதே நாளில் தனக்கு ஒன்றுமே தெரியாதது போல, கர்நாடகத்தில் பிஜேபியை வசைபாடி, தேர்தல் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார்.
சோனியாவீடுமுன்புகொடும்பாவிஎரிப்பு: இரண்டாவது நாளாக வியாழக்கிழமை காலையிலும் சோனியா காந்தியின் இல்லத்தை முற்றுகையிட மான்சிங் சாலை அருகே தில்லி சீக்கிய குருத்வாரா பிரபந்தக், சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த சீக்கியர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்[6]. அதையொட்டி அக்பர் சாலை-மான்சிங் சாலை சந்திப்பில் போலீஸார் தடுப்புகளை அமைத்திருந்தனர். அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். எனினும், போலீஸாரை தள்ளிவிட்டு, தடுப்புகள் மீது ஏறி குதித்து அக்பர் சாலையில் பலர் நுழைந்தனர். அங்கு நின்றிருந்த போலீஸ் வாகனங்களில் ஏறிய சிலர் சோனியா ஒழிக, காங்கிரஸ் அரசு ஒழிக என்று கோஷம் எழுப்பினர். சோனியா வீட்டு முன்பாக சஜ்ஜன் குமாரின் உருவ பொம்மையை தீயிட்டுக் கொளுத்தினர்[7]. அதனால், சுமார் இரண்டு மணி நேரம் அந்தப் பகுதியில் சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர், போலீஸ் உயரதிகாரிகள் சீக்கிய குருத்வாரா பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினர். அதன் பிறகு போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
உள்துறைஅமைச்சர்வீட்டின்முன்பும்ஆர்பாட்டம்: இதற்கிடையே, ஒரு பிரிவு சீக்கியர்கள் மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே இல்லம் அமைந்துள்ள கிருஷ்ண மேனன் மார்க் பகுதிக்குச் சென்று போராட்டம் நடத்தத் திட்டமிட்டனர். இதை அறிந்த போலீஸார், அந்தச் சாலையை இணைக்கும் அனைத்துச் சந்திப்புகளிலும் தடுப்புகளை அமைத்தனர். கிருஷ்ண மேனன் மார்கில்தான் முன்னால் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்களின் இல்லம் அமைந்துள்ளது. அதனால், அப்பகுதி வழியாக நாடாளுமன்றச் சாலை, இந்தியா கேட் செல்ல வேண்டிய வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன.
பிந்தரன்வாலேமரணஅறிவிப்பு 25 ஆண்டாகியும்வெளியாகவில்லை: பொற்கோவிலில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை வெளியேற்றுவதற்காக ராணுவம் மேற்கொண்ட “ப்ளூ ஸ்டார்’ நடவடிக்கையின் போது, பிந்தரன்வாலே கொல்லப்பட்டது தொடர்பாக அரசு தரப்பிலோ, அதிகாரப்பூர்வமாக, 25 ஆண்டுக்கு பிறகும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை[8]. அப்போதைய டம்டாமி தக்சல் தலைவராக இருந்த பிந்தரன்வாலேயின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தும் கூட, அவரது மரணம் குறித்து அரசு பகிங்கர அறிவிப்பு வெளியிடவில்லை. இதனால், பொற்கோவில் நடவடிக்கையில் பிந்தரன்வாலே தப்பித்து, பாகிஸ்தான் சென்றுவிட்டதாக வதந்திகள் கூட உலவின.
பிந்தரன்வாலேஇறக்கவில்லை: சீக்கிய மதத்தவர்களில் ஒரு பிரிவினர் மத்தியில், குறிப்பாக கிராமப்புரத்தை சேர்ந்தவர்கள் மத்தியில், பிந்தரன்வாலே இன்னும் இறக்கவில்லை என்றும், அவர் தகுந்த நேரத்தில் திரும்பி வருவார் என்றும் நம்பிக்கை நிலவியது. பிந்தரன்வாலே மரணத்தை அவர் தலைமை வகித்த தக்சல் அமைப்பும் கூட, அவரது மரணத்தை அங்கீகரிக்கவில்லை. இதன் புதிய தலைவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்வரை நியமிக்கப்படாமலேயே இருந்தார்.
பிந்தரன்வாலேஇறந்ததைஏற்றுக்கொண்டபப்பர்கல்சா: பிந்தரன்வாலே இறந்ததை ஏற்றுக் கொண்ட ஒரே அமைப்பு பப்பர் கல்சா அமைப்பு மட்டுமே. 1989ம் ஆண்டு இதை அங்கீகரித்த இந்த அமைப்பு, பிந்தரன்வாலேவை வீரதியாகியாக அறிவிக்கும்படி வலியுறுத்தியது. பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, பிந்தரன்வாலே, 1984ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி கொல்லப்பட்டார். அவரது உடல், ஜூன் 7ம் தேதி இரவு 7.30 மணிக்கு பஞ்சாப் போலீஸ் குழுவினரால், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது உடல் மருத்துவக் கல்லூரி அதிகாரிகளிடம், ராம்பாக் போலீஸ் நிலைய துணை எஸ்.ஐ., மூலம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில், துப்பாக்கி குண்டுகளின் காயம் மற்றும் அதிர்ச்சி காரணமாக பிந்தரன்வாலே இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலில் உள்ள அனைத்து 14 காயங்களும் துப்பாக்கி குண்டுகளால் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டது. அது தவிர விலா எலும்புகளில் இரண்டு உடைந்திருந்தன. பிந்தரன்வாலேயின் உடல், அவரது கூட்டாளியின் உடலுடன், ஜூன் 8ம் தேதி அமிர்தசரசில் குருதுவாரா சகீதா தகன மைதானத்தில் எரிக்கப்பட்டது. 203 பேரின் சாம்பல்களுடன், பிந்தரன்வாலேயின் சாம்பலும், ரோபர் மாவட்டத்தில் உள்ள கிரட்பூர் சாகிப்புக்கு எடுத்து செல்லப்பட்டு, சட்லஜ் நதியில், அமிர்தசரஸ் ஜில்லா பரிஷத் செயலர், மற்றும் நிர்வாகி மாஸ்டிரேட் ஆகியோரால் கலக்கப்பட்டது. ராணுவ நடவடிக்கையின்போது, பிந்தரன் வாலே இறந்து போனதாக அவரது குடும்பத்தினர் கூட எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. எஸ்.ஜி.பி.சி., அதிகாரப்பூர்வமாக அறிவித்தபிறகு, பிந்தரன்வாலேயின் மரண சான்றிதழ் கோரி, அவரது மகன் இஷார் சிங், மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்தார்.
சோனியாவின்அரசியல் நாடகம் ஆபத்தானது: சீக்கியர்கள் இப்படி தன் வீட்டின் முன்பாக ஆர்பாட்டம் செய்யும் வேளையில், சோனியா தந்திரமாக கர்நாடகத்திற்கு வந்து, தேர்தல் கூட்டங்களில், பிஜேபியைக் கடுமைகயாகப் பேசி வருகிறார். புதன்கிழமை அன்று ரெய்ச்சூரில் பேசினார்[9]. கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக, காங்கிரஸ் தலைவர் சோனியா, துணை தலைவர் ராகுல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர், வரும், 23ம் தேதி முதல், சூறாவளி பிரசாரம் மேற்கொள்கின்றனர்.கர்நாடகாவில், அடுத்த மாதம், 5ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம், ஏற்கனவே, சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. வரும், 25ம் தேதி, சிக்மகளூர் மற்றும் மங்களூரிலும்; ஏப்ரல், 30ல், குல்பர்க்கா மற்றும் பெல்காமிலும்; மே, 2ம் தேதி, மைசூரு மற்றும் பெங்களூருவிலும், சோனியாவின் பிரசாரம் செய்கிறார்.வரும், 23ம் தேதி, ராய்ச்சூர் மற்றும் பீஜப்பூர் மாவட்டங்களிலும், வரும், 26ல், கோலார், தும்கூர் மற்றும் ஹாவேரி மாவட்டங்களிலும், மாண்டியா, ஹசன் மற்றும் ஷிமோகா மாவட்டங்களில், மே, 1ம் தேதியும், ராகுல் பிரசாரம் செய்கிறார். பிரதமர் மன்மோகன் சிங், 29ம் தேதி, ஹூப்ளி மற்றும் பெங்களூரில் பிரசாரம் செய்கிறார்[10]. பெங்களூரு பேலஸ் மைதானத்தில் சோனியா 02-05-2013 அன்று பேசியபோது, நிறைய நாற்காலிகள் காலியாக இருந்தன[11].
வேதபிரகாஷ்
04-05-2013
[1]. According to the CBI the police were co-conspirators as the officials did not register cases and did not pick up dead bodies from the streets. The CBI referred to a speech senior Congress leader Sajjan Kumar had made in Delhi’s Raj Nagar where he incited the mob and said that not a single Sikh should survive and those sheltering Sikhs should be set ablaze. The CBI also pointed out that police control room records don’t have details of any of the major incidents of violence. In fact the police asked those residing in the Raj Nagar Gurdwara to surrender their weapons and hours later mobs came and attacked them. No damage to houses other than those of Sikhs were reported from the area.
[2] While there have been documented reports of voter-lists and school registration forms being distributed amongst the rampaging hooligans to specifically identify the Sikh families and destroy them, it is also a proven fact that during the same period, at a massive rally in Delhi, while reacting to the killings, Rajiv Gandhi had stated that ‘Once a mighty tree falls, it is only natural that the earth around it shakes‘.
[4] The killing of people in the Delhi Cantonment area during the 1984 anti-Sikh riots was the result of a well executed conspiracy, the Central Bureau of Investigation (CBI) said on Monday as the agency finished its arguments in the 1984 anti-Sikh riots in the Delhi Cantonment area case. The CBI said that people belonging only to a certain community were targeted with the pattern and scale of operation indicating that the action wasn’t a spontaneous reaction but a well organised operation, which had the backing of the police and patronage of the system.
குறிச்சொற்கள்:1984 சீக்கியப் படுகொலை, அரசியல், இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்திரா, உள்துறை அமைச்சர், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குரூரம், கொலை, சதி, சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொலை, சீக்கியர், செக்யூலரிஸம், சோதனை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, திட்டம், தீவிரம், தீவிரவாதம், தூண்டு, தூண்டுதல், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், படுகொலை, பிந்தரன்வாலா, மன உளைச்சல், ராஜிவ் காந்தி, வன்முறை
1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அடையாளம், அத்தாட்சி, அரசின் பாரபட்சம், அரசியல், அவதூறு, ஆயுதம், இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இலக்கு, உண்மை, உண்மையறிய சுதந்திரம், உள்துறை அமைச்சர், உள்துறை தலையீடு, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஒழி, ஓட்டு, ஓட்டு வங்கி, கடவுள், கட்டுக்கதை, கட்டுப்பாடு, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், கூட்டுக்கொலை, கெடு, கெட்ட எண்ணம், சஜ்ஜன்குமார், சட்டம், சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், ஜகதீஸ் டைட்லர், டைட்லர், படுகொலை, பிந்தரன்வாலா, பிந்தரன்வாலே இல் பதிவிடப்பட்டது | 4 Comments »