பாண்டி லிட் பெஸ்ட்  2019 / புதுச்சேரி இலக்கிய விழா நடந்த விதம்: தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் போல நடத்தப் பட்டது [1]

பாண்டி லிட் பெஸ்ட்  2019 / புதுச்சேரி இலக்கிய விழா நடந்த விதம்: தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் போல நடத்தப் பட்டது [1]PondyLitFest 2019 - brochure front page

பாண்டி லிட் பெஸ்ட் 2018 முதல் 2019 வரை: சென்ற வருடம் போல[1], இவ்வருடமும், “புதுச்சேரி இலக்கிய விழா” என்ற போர்வையில், நவநாகரிகமான-உயரடுக்கு, தாராளமாக சலுகைகள் கொடுக்கப் பட்ட, தேர்ந்தெடுத்த, நியோ [Elite, privileged, selected, chosen one categories] வகைறாக்கள் பங்கு கொண்ட ஜாலியான விழா போன்று நடத்தப் பட்டது. அவர்கள் தங்களுக்குள் ஜாலியாக பேசி, சிரித்து, முடித்துக் கொண்டது போலிருக்கிறது. பெரும்பாலும், ஆங்கிலம், ஹிந்தி தான் பேசப் பட்டன. சிலரால், சில நேரங்களில் பேசப் பட்ட தமிழ் வார்த்தைகளும் கேட்கப் பட்டன. “பாரத சக்தி” என்ற தலைப்பில், என்னென்னமோ பேசினர்.

 1. தேசியம்: யார் தேச-விரோதி? -“Nationalism: Just who is an anti-national,”
 2. ஜம்மு-காஷ்மீர்: சரித்திர பிழையை நீக்குவது – Jammu and Kashmir: Erasing a blot on history,”
 3. இந்த்துத்துவ: வாழும் வழியா அல்லது புதியதாக விற்கப்படும் சித்தாந்தமா? – Hindutva: Way of Life or rebranded Hinduism,
 4. உலகத்தில் இந்தியா – “India in the world,”
 5. பொருளாதாரம்: $ 5 ட்ரில்லியன் = 3,52,52,250 கோடிகள் அடைவது கனவா – “Economy: Is $5trillion a mirage and
 6. பொய்யான செய்தி: திட்டமா அல்லது தொழிற்நுட்பத்தை குறை சொல்வதா? – “Fake News: Agenda or Technology to blame.”

பல லட்சங்கள் செலவழித்து நடத்தப் பட்டுள்ள இதனால், யாருக்கு வருமானம், லாபம், மற்றும் பலன் என்று நடத்தியவர்கள் தாம் அலசிப் பார்த்து முடிவுக்கு வரவேண்டும். வியாபார ரீதியில் பார்த்தால், பணம் கொடுத்தவர்-வாங்கியவர்களுக்கு பலன் தான். மூன்று நாட்கள் கலந்து கொண்டவர்களுக்கும் சந்தோஷம் தான்.

PondyLitFest 2019 - Local literary experts oppose
சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான இலக்கியத் திருவிழாவில் புதுவை முதல்வர் வே.நாராயணசாமி பங்கேற்கக் கூடாது[2]: சென்ற வருடம் போல, இவ்வருடமும், இதன் மீது குற்றச்சாட்டுகள் முதலிய இருந்தன. இணைதளத்தில் பார்க்கும் போது, பலர் பதிவு செய்தாலும், அவர்களை கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் பதிவு செய்தவர்கள் கண்டுகொள்ளப் படவில்லை. ஆக, இது, அவர்களுக்குள் நடத்தப் பட்ட கொண்டாட்டம் என்றாகியது. “சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான இலக்கியத் திருவிழாவில் புதுவை முதல்வர் வே.நாராயணசாமி பங்கேற்கக் கூடாது” இவ்வாறு, புதுவை எழுத்தாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து முதல்வர் நாராயணசாமியிடம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் தங்களின் கையெப்பம் இட்டு அளித்த கோரிக்கை மனு விவரம்: “புதுச்சேரியில் கடந்த ஆண்டு இலக்கியத் திருவிழா என்ற பெயரில் ஆளுநர் மாளிகையின் ஆதரவுடன் ஒரு குழு வகுப்புவாத வெறியை புதுச்சேரியில் விதைக்க முயற்சி செய்தது. இடதுசாரி அரசியல் இயக்கங்களும், முற்போக்கு கலை இலக்கிய அமைப்புகளும் மேற்கொண்ட நடவடிக்கையால் முதல்வர் பங்கேற்பதும், அலையன்ஸ் பிரான்சிஸ், பிரான்ஸ் தூதரகம் ஆகியவற்றின் பங்களிப்பும் தவிர்க்கப்பட்டது.

PondyLitFest 2019 - brochure front page-sponsors.jpg

போட்டி விழா நடந்ததா, இல்லையா?: போட்டியாளர் தொடர்ந்து சொன்னது,  நிகழாண்டு மீண்டும் அதே குழு செப். 27 முதல் 29-ஆம் தேதி வரை தனியார் விடுதியில் இலக்கியத் திருவிழாவை நடத்தவிருக்கிறது. அதில், வகுப்புவாத இயக்கங்களின் தேசிய பொறுப்பாளர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஆளுநர் மாளிகையின் மறைமுக ஆதரவும் உள்ளது. இந்த நிகழ்ச்சி நிரலில் முதல்வர் பங்கேற்க உள்ளதாகத் தெரிகிறது. எனவே, புதுச்சேரி கலை இலக்கிய சமூக நல அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, புதுவை முதல்வர் இந்த விழாவில் பங்கேற்கபதைத் தவிர்க்க வேண்டும்,” என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது[3]. மனுவில், சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன், தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் சு.ராமச்சந்திரன், புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர் எல்லை.சிவக்குமார், செயலர் பாலகங்காதரன், தனித்தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த முனைவர் க.தமிழமல்லன், அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகப் பொதுச் செயலர் ஜீவானந்தம், புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தலைவர் வீர.அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

PondyLitFest 2019 - Bedi governor

தமிழ் மொழி உலக மொழியாகத் திகழ்ந்து வருவதாக புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பெருமிதத்துடன் தெரிவித்தார்[4]: புதுச்சேரியில் 27-09-2019, வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற புதுவை இலக்கியத் திருவிழா 2019 என்ற நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து ஆளுநர் கிரண் பேடி பேசியதாவது: “புதுச்சேரி நகரம் பழங்காலத்தில் வேதபுரம் அல்லது வேதபுரி என்று அழைக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். வேதம், பண்பாடு ஆகியவற்றைக் கற்கும் இடமாக இந்த நகரம் விளங்கியது. புதுச்சேரியில் இருந்து 12.5 கி.மீ. தொலைவில் உள்ள பாகூர் மூலநாதர் கோயில், 21 கி.மீ. தொலைவில் உள்ள திருவண்டார் கோயில் ஆகியவை புதுச்சேரியின் வேத பண்பாட்டுக்குச் சான்றாக விளங்குகின்றன. இங்கு, பழங்காலத்திலேயே சிவனை மக்கள் வழிபட்டுள்ளனர். வேதபுரீஸ்வரர் கோயிலுக்கு அருகே கிடைத்த ஒரு கல்வெட்டின்படி, அகஸ்தீஸ்வரர் இங்குதான் வேதங்களைக் கற்றுக் கொண்டார் என்பது தெரிய வருகிறது. இதற்குப் பின்னர்தான் இந்த இடம் அகஸ்தீஸ்வரம் என்று அழைக்கப்பட்டது. 6-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இங்கு வந்த போர்ச்சுகீசியர்களால் இந்த நகரம் புதுச்சேரியா என அழைக்கப்பட்டது. டச்சுக்காரர்கள் கடலோர நகரம் என தங்களது மொழியில் அழைத்தனர். பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரி என்று அழைத்தனர்இதற்கு தமிழில் புதிய கிராமம் என்று பொருள். அதன் பிறகு புதுச்சேரி என்ற வார்த்தை பாண்டிச்சேரியாக பிரபலமானது.

PondyLitFest 2019 - brochure front page-Social media sponsors

2,400 ஆண்டுகள் புதுச்சேரி இலக்கிய வரலாறு சங்க காலத்தில் இருந்து தொடங்குகிறது: கிரண் பேடி தொடர்ந்து பேசியது, “புதுச்சேரி இலக்கிய வரலாறு என்பது 2,400 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க காலத்தில் இருந்து தொடங்குகிறது. தமிழ் உலக மொழியாகத் திகழ்கிறது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தமிழ்மொழி பேசப்படுகிறது. இந்தியாவின் பண்டைய செம்மொழியான தமிழ் சமுதாயம், மதம் குறித்த மிகவும் மதிப்புமிக்க, நுண்ணறிவு மிக்க பிரதிபலிப்புகளைக் கொண்ட ஒரு பெரிய கருவூலத்தைக் கொண்டுள்ளது. திருக்குறள், கம்ப ராமாயணம் உள்ளிட்டவை உலக இலக்கியத்தின் முக்கியமான படைப்புகளாகும். இவை இந்திய இலக்கிய கிரீடத்தை அலங்கரிக்கும் வைரத்தை போன்றவை. மகாகவி பாரதி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் வாழ்ந்த இல்லங்கள் இங்குள்ளன. எழுத்தாளர் பிரபஞ்சனும் இந்த புதுச்சேரி மண்ணில் உருவானவர்தான். அவரது படைப்புகளில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் புதுச்சேரியின் வரலாறு, பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை. புதுவையின் வரலாற்றை முழுமையாக அறிய வேண்டுமெனில், இங்குள்ள கோயில் சுவர்களில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்ய வேண்டும்,” என்றார் அவர்[5]. விழாவில் புதுவை மத்திய பல்கலை. துணைவேந்தர் குர்மீத் சிங், பல்கலைக்கழகப் பேராசிரியர் பி.ராஜா, வெங்கட்ட ரகோதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

© வேதபிரகாஷ்

07-10-2019

PondyLitFest 2019 -Nationalist, anti-nationalist discussion

[1] சென்ற வருட விழா நடப்புகளைப் பற்றிய விவரங்களை, என்னுடைய கட்டுரையில் வாசிக்கலாம்:

https://secularsim.wordpress.com/2018/09/11/pondy-litfest-right-versus-left-but-right-failed-with-closed-doors/ மற்றும்

https://secularsim.wordpress.com/2018/09/11/pondy-litfest-marrded-by-selective-hindutwavadis-dominating-neglecting-others/

[2] தினமணி, சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான இலக்கிய விழாவில் முதல்வர் பங்கேற்கக் கூடாது: எழுத்தாளர்கள் கோரிக்கை, By DIN | Published on : 24th September 2019 10:20 AM |

[3] https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/24/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3241153.html

[4] தினமணி, தமிழ் உலக மொழியாகத் திகழ்கிறது: புதுவை ஆளுநர் கிரண் பேடி பெருமிதம், By DIN | Published on : 28th September 2019 05:03 AM |

[5] https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/28/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3243980.html

குறிச்சொற்கள்: , , , ,

ஒரு பதில் to “பாண்டி லிட் பெஸ்ட்  2019 / புதுச்சேரி இலக்கிய விழா நடந்த விதம்: தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் போல நடத்தப் பட்டது [1]”

 1. Mahendra Varman Says:

  I am from Puducherry.

  None bothered about these people.

  Though, they look decent and all, they have been fundamental to the core.

Mahendra Varman க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: