இந்த தடவையும் அந்த கேடுகெட்டவர்களுக்கு ஓட்டுப் போட்டால், பெண்கள் தொடர்ந்து கற்பழிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள்!
பொது மக்கள் கட்சியின் பிரச்சார சுவரொட்டியும், வாசகங்களும்: “ஆம் ஆத்மி கட்சி” (आम आदमी पार्टी) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் இறங்கியுள்ள அரவிந்த கேசரிவால் செய்து வரும் பிரச்சாரத்தில், வைக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட சுவரொட்டி, பிரச்சினையைக் கிளப்பியுள்ளது. அதில் “பேயிமான்” என்ற வார்த்தை மனிதத்தன்மைக்கு எதிராக உள்ள எல்லா குணங்களையும் குறிக்கும் மற்றும் அத்தகைய தன்மைகளைக் கொண்ட மனிதர்களைக் குறிக்கும் –
- மனிதத்தன்மையற்றவர்கள்,
- ஊழல்காரர்கள்,
- கெட்டவர்கள்,
- அயோக்கியர்
- அரக்கர்கள்,
- கொடுங்கோலர்,
என்று பலவித அர்த்தங்களில் பிரயோகப்படுத்தலாம். சாதாரண மக்கள் புரிந்து கொள்வார்கள்.
வாசகமும், அதன் அர்த்தமும்: “बेईमानों को वोट तो महिलाओं के साथ होता रहेगा बलात्कार” –
இஸ் பார் பி தியா பேயிமானோம் கோ ஓட் தோ
மஹிலாவோங் கா ஹோதா ரஹேகா பலாத்கார்
‘Is baar bhi diya beimaano ko vote toh mahilao ka hota rahega balatkaar (if you vote for the corrupt this time, rapes will continue to occur)’
இந்த தடவையும் அந்த கேடுகெட்டவர்களுக்கு ஓட்டுப் போட்டால், பெண்கள் தொடர்ந்து கற்பழிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள்!
மூன்று மாதங்களில் 500 கற்பழிப்புகள்: தில்லியில் ஜனவரி முதல் மூன்று மாதங்களில் சுமார் 500 கற்பழிப்புகள் நடந்துள்ளன. தில்லி என்றாலே “ரேப் சிடி” அதாவது கற்பழிப்பு நகரம் என்றெல்லாம், டிவிசெனல்களில் விவாதம் செய்து வருகிறர்கள். ஆனால், இந்திய பெண்கள் நாகரிகமாக நடந்து கொள்ளஏண்டும் என்ற விஷயம் வரும்போது, நவீன உலக மங்கையர், இதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு நீங்கள் ஒன்றும் கூற வேண்டாம். எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்று பேசினார்கள். ஆனால், இப்பொழுது இத்தகைய கீழ்த்தரமான பிரச்சாரத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்களா அல்லது கண்டிப்பார்களா என்று பார்க்க வேண்டும்.
காங்கிரஸ் ஆரம்பித்து வைத்த கலாச்சாரத்தைப் பின்பற்றும் புதிய கட்சிகள்: அசிங்கமான, கீழ்த்தரமான தேர்தல் பிரச்சாரம், விளம்பரம் செய்வதில் காங்கிரஸ் ஏற்கெனவே வழி காட்டியுள்ளது. ராஜிவ் காந்தி காலத்திலேயே, காங்கிரஸார் கோடிகளை செலவழித்து, இந்தியாவின் முன்னணி நாளிதழ்களில் முழுபக்க விளம்பரங்களை வெளியிட்டது. அவற்றைப் படித்தால், அவ்வளவு மோசமான வாசகங்களு, அதற்கேற்றார்போல, தூண்டிவிடும் படங்களும் இருந்தன. ஒருவேளை மக்கள் இப்பொழுது மறந்திருக்கமாட்டர்கள்.
அரசியல்வாதிகள் எப்பொழுது நல்லவர்கள் ஆவார்கள்: அரசியல்வாதிகளை அப்படி விமர்சிப்பதால், அவர்கள் ஒன்றும் கவலைப்படப்போவதில்லை. அதனால், மனிதத்தன்மையற்றவர்கள்,
- ஊழல்காரர்கள், கெட்டவர்கள், அயோக்கியர், அரக்கர்கள், கொடுங்கோலர்,……….
என்றெல்லாம் சொன்னால் அவர்களுக்கு கோபம் வரப்போவதில்லை. கொலைகாரர்கள், கொள்ளைக் காரர்கள், கற்பழிப்பாளிகள், கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் என்பவர்களே எம்.பிக்களாக உள்ளனர், அமைச்சர்களகவும் உள்ளனர். சுத்தமாக வரவேண்டும் என்றால், எல்லோரும் அத்வானி மாதிரி ஒதுங்கிக் கொண்டு, வழக்கு முடிந்த பிறகு, மறுபடியும் அரசியலுக்கு வரமாட்டார்கள். அப்படியே இருந்து கொண்டுதான் அனுபவித்து வருகிறார்கள். ஜெயிலுக்கு போனாலும், கனிமொழி போன்றவர்கள் எம்.பி ஆகிவிடவேண்டும் என்ற வெறியில் உள்ளது, தங்களைப் புனிதர்களாகக் காட்டிக் கொள்ள போடும் வேடம் தான். அதற்கு காங்கிரஸ் உதவுகிறது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இப்பொழுது, இங்குகூட, பிஜேபி போன்ற கட்சிகள் காங்கிரஸை வெல்லமுடியாது என்று அரவிந்த கேசரிவால் பொன்றோர் பிரச்சாரம் செய்கிறார்கள். பிறகு, இவர்கள் காங்கிரஸைத் தோற்கடிக்கடிக்கப் போகிறார்களா? இல்லையே, இவர்கள் காங்கிரசூக்கு எதிரான ஓட்டுக்களை பிரிக்கிறார்கள். அப்படியென்றால், காங்கிரஸுக்கு சாதகமாக வேலை செய்கின்றார்கள் என்றாகிறது. பிறகு பிஜேபியை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்வதேன்.
காங்கிரஸ் 2013ல் மறுபடியும் வெற்றி பெற்றால் யார் பொறுப்பு?: காங்கிரஸ்-பிஜேபி ரகசிய கூட்டு வைத்திருக்கிறது என்றுகூட பெரிய அரசியல்வாதிகள் பலமுறை சொல்லியிருக்கிறார்கள், இப்பொழுதும் கூறி வருகிறார்கள். அப்படியென்றால், இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள். மூன்றாவது அணி என்று சொல்லிக் கொண்டு பேரம் பேசுவார்களா, காங்கிரஸை மறுபடியும் ஜெயிக்க வைப்பார்களா? கம்யூனிஸ்டுகள் 190களிலிருந்து மக்களை ஏமாற்றி வந்திருக்கிறார்கள். அவர்களால், அவர்களையும் புனிதர்களாக்கிக் கொள்ளமுடியவில்லை, மாறாக மற்ற கொள்கயுடைவர்களையும், தங்களது போலித்தனத்தனத்தால், இரட்டை வாழ்க்கையினால் பலரை சீரழித்தனர். சித்தாந்த பேசியே எமாற்றினர், ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையில் முதலாளித்துவத்தை விட அதிகமாகவே அனுபவித்தனர், அனுபவித்து வருகின்றனர்.
வேதபிரகாஷ்
© 27-06-2-13
குறிச்சொற்கள்: ஆம் ஆத்மி, ஊழல், ஓட்டு, கட்சி, காங்கிரஸ், கேசரிவால், பிஜேபி, பிரச்சாரம், பொது மக்கள்
2:44 முப இல் ஜூன் 27, 2013 |
“आप” के पोस्टर में “शीला को जीताया तो होते रहेंगे रेप”
published: 26/06/2013 | 19:50:43 IST
updated: 26/06/2013 | 20:44:45 IST
http://www.khaskhabar.com/hindi-news/National-kejariwal-party-poster-if-sheila-is-elected-again-rape-will-increase-22521337.html
नई दिल्ल। आम आदमी पार्टी (आप) के संयोजक अरविंद केजरीवाल ने दिल्ली की मुख्यमंत्री शीला दीक्षित के खिलाफ एक बार फिर मोर्च खोला है। अरविंद ने एक पोस्टर जारी किया है जिस पर लिया है, “बेईमानों को वोट तो महिलाओं के साथ होता रहेगा बलात्कार”। इस नारे के बाद पोस्टर में शीला दीक्षित और अरविंद केजरीवाल की तस्वीरें छपी हुई है।
शीला के ऊपर लिखा है “बेईमान” और अरविंद के सिर पर “ईमानदार”। कांग्रेस ने आप के इस प्रचार अभियान पर कडी आपत्ति जताई है। गौरतलब है कि आप के नेताओं के बयानों पर पिछले दिनों शीला दीक्षित के राजनैतिक सलाहकार पवन खेडा ने भी शिकायत दर्ज करवाई थी। उधर बीजेपी का कहना है कि हर पार्टी का प्रचार का और मुद्दे उठाने का अपनी तरीका होता है, जो उसकी संस्कृति से तय होता है। आप पार्टी शायद इसी ढंग से चुनाव ल़डना चाहती है।
गौरतलब है कि आम आदमी पार्टी खुद को नए लोकतंत्र का रक्षक बताती है और अपनी कार्यशैली में भी इसे अपनाने का दावा करती है। पार्टी फिलहाल दिल्ली विधानसभा के इस साल के आखिरी में होने वाले चुनावों पर फोकस किए है। केजरीवाल ने ऎलान किया है कि वह उस सीट से चुनाव ल़डेंगे, जहां से शीला दीक्षित ल़डेंगी, ताकि भ्रष्टाचार के खिलाफ उनकी ल़डाई को नई धार मिल सके। इस ऎलान के अलावा आप पार्टी बिजली के बढ़ी हुई कीमतों पर लगातार प्रदर्शन कर रही है।