சவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: கேரளப்பிரச்சினையா, இந்தியப் பிரச்சினையா?

சவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: கேரளப்பிரச்சினையா, இந்தியப் பிரச்சினையா?

Saudi colour code for Companies4

சவுதிக்கான உள்ளூர் பிரச்சினை: எகிப்தில் ஏற்பட்ட புரட்சி மற்றும் பக்கத்து நாடுகளில் அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் காரணமாக சவுதி அரேபியா பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உள்நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் வராமல் தடுக்கவும், ராணுவத்தை பலப்படுத்தவும் முடிவு செய்துள்ளது. சொந்த நாட்டினருக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் புதிய கொள்கை முடிவுகள் கொண்டுவர சவுதி அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு சவுதி அரசின் புள்ளியியல் மற்றும் தகவல் தொடர்பு துறை எடுத்த கணக்கெடுப்பில் நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் 12.2 சதவீதம் அளவில் உயர்ந்து இருப்பது தெரிய வந்தது. அதாவது 5 லட்சத்து 88 ஆயிரம் பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். குறிப்பாக 15 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 39 சதவீதம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் தவறான வழியில் செல்லாமல் இருக்க புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. இதற்காக புதிய தொழிலாளர் கொள்கை வகுக்கப்பட இருக்கிறது. இதன்மூலம் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தும் விஷயத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும். உள்நாட்டினருக்கு அதிக அளவில் வேலை கொடுக்கும் வகையில் இது இருக்கும்.

Saudi colour code for Companies

நிதாகத் என்றால் என்ன – ஏன் அமூல் படுத்த வேண்டும்: உணவகம், சிறு கடைகள், சிறிய அளவிலான தொழில் நிறுவனங்கள் போன்றவற்றை, சவுதி அரேபியா நாட்டினர் தவிர்த்து, பிற நாட்டினர் செய்து வருகின்றனர். இந்நிலையில், இனிமேல், இவ்வகை சிறுதொழில்களை சொந்த நாட்டினர் மட்டுமே நடத்தவேண்டும் என்பதற்காக, “நிதாகத்’ என்ற பெயரில் புதிய சட்டத்தை, சவுதி அரேபிய அரசு கொண்டு வந்துள்ளது.நேற்று முதல், புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. புதிய சட்ட விதிமுறைகளை அமல்படுத்தாத நிறுவனங்கள் மீது அந்நாட்டு தொழில் துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என, ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Saudi colour code for Companies3
முஸ்லீம் சட்டத்தின்படி பிரிக்கப்படும் வகைகள்[1]: “நிதாகத்” தொழிலாளர் கொள்கை அல்லது வேலைகள் பிரிப்புமுறைப்படி, சவுதி கம்பெனிகள் நான்காகப்பிரிக்கப்படுகின்றன[2]:

  1. நீளம் – அல்லது “VIP” வகை கம்பெனிகள் உலகம் முழுவதும் இணைதளத்தின் மூலமாக ஊழியர்கள் / வேலையாட்களை வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும்.
  2. மஞ்சள் – 23-02-2013 வரை தனது நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியும். இருக்கின்ற அயல்நாட்டு ஊழியர்கள் / வேலையாட்களின் விசாக்கள் ஆறுமாதங்களில் முடிந்துவிடும் போது, அவற்றை புதுப்பிக்க முடியாது.
  3. சிவப்பு – 26-11-2011 வரை தனது நிலையை மாற்றிக் கொள்ள முடியும். இருக்கின்ற அயல்நாட்டு ஊழியர்கள் / வேலையாட்களின் விசாக்கள் ஆறுமாதங்களில் முடிந்துவிடும் போது, அவற்றை புதுப்பிக்க முடியாது.
  4. பச்சை – சவுதிமயமாக்குதல் என்ற கொள்கையின் படி, மஞ்சள் மற்றும் சிவப்பு கம்பெனிகளினின்று, அயல்நாட்டு ஊழியர்கள் / வேலையாட்கள் வெளியேறிய பிறகு, உள்ளூர்காரர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள்.

Saudi colour code for Companies2

புதிய தொழிலாளர் கொள்கை அல்லது வேலைகள் பிரிப்புமுறை: சவுதி அரேபியா “நிதாகத்” என்ற புதிய தொழிலாளர் கொள்கை அல்லது வேலைகள் பிரிப்புமுறையை (Nitaqat’ (classification in jobs) / new labour policy ‘Nitaqat’ ) கொண்டுவருகின்றனர் என்றால், அதற்கு இந்தியாவோ, மற்றவரோ, அங்கு வேலை செய்யும் இந்தியர்களோ ஒன்றும் சொல்லமுடியாது, செய்யமுடியாது. ஒரு கம்பெனியில் / தொழிற்சாலையில் வேலை செய்கிறர்கள். ஏதோ காரணங்களுக்காக, எஜமானன்-சேவகன், முதலாளி-தொழிலாளி, என்ற ரீதியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலே சேவகன்-தொழிலாளி தனது வேலையை மாற்றிக் கொள்ளவேண்டியத்தான்.

Saudi colour code for Companies5

படிப்படியாக வேலைப்பிரிப்பு முறை அமூலுக்கு எடுத்து வந்தது: இம்முறைப்பற்றி இப்பொழுதுதான் தெரியவந்துள்ளது என்பது ஒரு பெரிய மோசடி-ஏமாற்று வேலை ஆகும்[3]. தெரிந்துதான் இந்தியர்கள் (முஸ்லீம்கள், கேரளத்தவர், மலையாளிகள்) சென்றனர். செல்லவைத்தவர்களும் கோடிகளை அள்ளியுள்ளனர்.

  • எண்பதுகளினின்றே வளைகுடா ஒத்துழைப்பு மைய நாடுகள் வெளிநாட்டு [Gulf Cooperation Council (GCC) countries] வேலைக்காரர்களைக் குறைக்க வேண்டும் உள்ளூர்வாசுகளுக்கு வேலைத்தரவேண்டும் என்று கொள்கைகளை திட்டமிட்டு வந்துள்ளன[4].
  • 2003லஏயே அரசு 10 ஆண்டுகளில் வெளிநாட்டு வேலையாட்களை 20%மாக குறைக்கப்படும் என்று அறிவித்தது. அதாவது, 80% வெளியே போகவேண்டியதுதான்[5].
  • 2004லிலேயே சவுதியின் சூரா கவுன்சில் 70% வேலை உள்ளூர்வாசிகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது[6]. அதாவது, 30% தான் வெளிநாட்டவர்களுக்கு! இல்லையென்றால், சவுதியினின்று வெளியேறும் பணம் பிடிக்கப்பட்டு உள்ளூர் முதலீட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும். அதாவது, வெளியாட்களுக்கு அந்தளவு சம்பளம் குறையும், குறைக்கப்படும்.
  • 2009ல் அதற்கான மசோதா எடுத்துவராப்பட்டது[7].
  • பிறகு 2011ல் சட்டத்தையும் நிறைவேற்றியது.
  • இப்பொழுது ஆறுமாத கால அவகாசம் கொடுத்துள்ளது.

Saudi scavenging

 

சவுதியில் உள்ள குப்பைத் தொட்டிகளின் நிறங்கள் – பச்சை, சிவப்பு, நீளம்

ஆசியர்கள், இந்தியர்கள், பேண்கள் கொடுமைப்படுத்தப் படுவது: ஆசியப்பெண்கள் எவ்வாறு கொடுமைப்படுத்தப் படுகின்றனர் என்று பற்பல செய்திகள் வெளிவந்தன. மனித உறிமைகள் மீறல் அறிக்கையிலும் வெளிக்காட்டப் பட்டன[8]. தமிழில் கூட வெளியிடப்பட்டுள்ளது[9]. ஆனால், ஏர்பஸ்ஸில் 300-400 என்று இந்தியப்பெண்களே தங்களது முடிச்சு-மூட்டைகளோடு அமீரக விமானநிலையங்களில் எத்தனையோ தடவைப் பார்த்திருக்கலாம். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் எப்படி நடத்தப்படுகின்றன என்று அறிக்கைகள் உள்ளன[10]. இருப்பினும் இந்தியர்கள் சென்றுதான் உள்ளனர்[11].

Two Arabs scavenging for food

 

இரு சவுதி வேலையாட்கள் குப்பைத் தொட்டியில் உணவைத் தேடுகின்றனராம்!

5 லட்சம் பேருக்கு வேலை போகும்: இந்த புதிய சட்டத்தால், அந்நாட்டில் செயல்பட்டு வரும், ஏழு லட்சம் சிறு நிறுவனங்களில், 84 சதவீத நிறுவனங்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் நாளிதழ்கள் கூறுகின்றன. இல்லையேல், அந்த நிறுவனங்களில், அந்நாட்டைச் சேர்ந்த ஒருவரையாவது வேலைக்கு நியமிக்கவேண்டும்.னைதில் ஒன்றும் தவறில்லையே. இதனால், கேரளாவின், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை உள்ளது. இது தவிர, பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கையும் சேர்த்தால், வேலையிழப்பவர் எண்ணிக்கை, ஐந்து லட்சத்தை தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.

How workers live in Saudi Arabia

 

வெளிநாட்டு வேலையாள் தங்கியுள்ள இடம்

இந்திய அரசியல்வாதிகளின் பங்கு: தற்போது எழுந்துள்ள இந்த “புதிய பிரச்னை” குறித்து, கேரள முதல்வர், உம்மன் சாண்டி, பிரதமருக்குகடிதம் எழுதியுள்ளார். அதில், “சவுதி அரேபியாவில், கேரளாவைச் சேர்ந்த ஆறு லட்சம் பேர் பல வேலைகளை செய்து வருகின்றனர்; அவர்களின் நலன்களை காக்க வேண்டும்” என, தெரிவித்துள்ளார். ஆலோசனைஇதுகுறித்து, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர், வயலார் ரவி கூறுகையில், “சவுதி அரேபியாவில் எழுந்துள்ள பிரச்னை குறித்து, அந்நாட்டிற்கான இந்திய தூதர், பாகித் அலி ராவிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தியா தனது கவலையை தெரிவித்துள்ளது. விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகிறேன்,” என்றார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இ.ஏ.அஹமது, சவுதி அரேபியாவின் வெளியுறவு துணை அமைச்சர் மற்றும் இளவரசர் அப்துல் ஆஜீஸை துஸான்பேயில் சந்தித்தபோது (28-03-2013) இந்திய குடிபெயர்ந்தவர்களுக்கு பாதிக்காமல், ரியாதில் உள்ள சவுதி அரசு எந்த முடிவையும் எடுக்காது என்று நம்பிக்கைத் தெரிவித்தார்[12]. “ஆஹா, அதற்கென்ன, இந்தியர்களுக்காக நாங்கள் எப்பொழுதும் நன்றானதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறோம். நான் ஊருக்குச் சென்றதும், தொழிலாளர் துறையிடம் இதை சொல்லிவிடுகிறேன்”, என்று வாக்குறுதி கொடுத்தார். 2011 கணக்குப்படி, உலகம் முழுவதும் கேரளத்தவர் சுமார் 23 லட்சம் (2.28 million Keralites) இருக்கின்றனராம், அதில், 570,000 பேர் மட்டும் சவுதியில் உள்ளனராம்[13]. ஆனால், சட்டத்திற்குப் புறம்பாக 200,000 பேர் இருக்கின்றனர் என்று குறிப்பிடுவதில்லை[14].

Saudi scavenging2

 

சவுதியில் குப்பை அள்ளும் பணி

மலப்புரத்திலிருந்து அனுப்பப்பட்ட முஸ்லீம்கள் எதற்காக சென்றனர்?: கேரளத்தவரை, மலையாளத்தவரை இப்படி லட்சக்கணக்கில் இந்தியாவிலிருந்து வெளியே போ என்று யாரும் சொல்லவில்லை. மலப்புரம் மாவட்டம் “முஸ்லீம்களுக்காக” என்று நம்பூதிரிபாடு தாரை வார்த்துக் கொடுத்தபோதுதான், முஸ்லீம்கள் அதிக அளவில் சவுதிக்கு அனுப்பப்பட்டனர். இதைத் தொடர்ந்து மற்றவர்கள் சவுதிக்குச் சென்றல் காசு வரும் என்று ஆசைப்பட்டு மற்றவர்கள் செல்ல ஆரம்பித்தனர். ஆனால், அதிகமாக சென்றது முஸ்லீம்கள் தான். முஸ்லீம்கள் அல்லாதவர்கள் கூட முஸ்லீம்களாக மாறினர், மாற்றப்பட்டனர், முஸ்லீம் போன்ற பெயர்களை வைத்துக் கொண்டனர் போன்ற உண்மைகள் ஏராளமாக உள்ளன.

Saudi scavenging3

 

சவுதியில் குப்பை அள்ளும் பணியாட்கள்

செக்யூலரிஸ-கம்யூனலிஸப் பிரச்சினைகளும் வேடங்களும்: கம்யூனலிஸப் பிரச்சினையை செக்யூலரிஸமாக்குவது, செக்யூலரிஸப் பிரச்சினையை கம்யூனலிஸமாக்குவது என்பது இந்திய அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்லாது, சித்தாந்தவாதிகளுக்கும் நன்றாகவே தெரியும். இதில் பாதிக்கப்படுவது இந்துக்கள், பயனடைவது முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள். இந்த சூழ்ச்சிதான் இங்கு நடக்கிறது, கேரள முஸ்லீம் மற்றும் கிருத்துவ அமைச்சர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அறிக்கைகள் விட்டுக் கொண்டு, தாராளமாக இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என்று அள்ளிவீசிக்கொண்டிருக்கின்றனர். பயனடையப் போவது யார் என்று பார்க்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்த வரைக்கும் 2014 தேர்தல் என்பதால், 2013ல் என்ன நடந்தாலும், அதனை தமக்கு சாதகமாக்கிக் கொள்ள “செக்யூலரிஸ”ப் போர்வையில், அவர்கள் என்னவேண்டுமானாலும் பேசுவார்கள்.

Saudi Arabia and its flag

 

சவுதி அரேபியாவும், அரசௌ சின்னமும்

முஸ்லீம்களின் விஷமத்தனம் –  சவூதிவாழ் இந்தியர்களுக்கு ஆப்புசீவிய மியன்மார் பெளத்த தீவிரவாதிகள்[15]: “எண்ணெய் வளமிக்க சவூதி அரசு 500,000 பர்மிய முஸ்லிம்களுக்கு வேலையுடன் கூடிய அகதிகள் குடியுரிமையை வழங்குவதாகக் கடந்த வாரம் அறிவித்தது”, சரிதான் என்று சொல்லிவிட்டு, “….சவூதியின் இந்தத் திடீர் முடிவுக்கு மறைமுகக் காரணம் மியான்மர் பவுத்த தீவிரவாதிகள் என்று கூட ஒரு கோணத்தில் சொல்லலாம்”, என்று முடிவுக்கு வந்துள்ளதில் தான் விஷயம் வெளிப்படுகிறது. சவுதி அரேபியாவிற்கு பௌத்தத் தீவிவாதிகள் செல்லப்போகின்றனராம், இப்படியும் சில முஸ்லீம்கள், இணைத்தளங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதாவது, மியன்மாரில் முஸ்லீம்கள் கொல்லப்படுகின்றனர், அவதிக்குள்ளாகின்றானர். அதனால், மியன்மார் முஸ்லீம்கள் சவுதிக்குச் செல்லலாம் என்றால், பௌத்தர்களும் அங்கு செல்ல தீர்மானித்துள்ளனராம். இதனால், இணைத்தள ஜிஹாதிகள், பௌத்தத் தீவிரவாதிகள் செல்கின்றனர் என்று பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்! பர்மாவில் ஏன் முஸ்லீம்களுக்கும், பௌத்த மதத்தினருக்கும் பிரச்சினை ஏற்படுகிறது என்பதற்கு மற்ற காரணங்களும் இருக்கின்றன[16]. பௌத்தர்கள் கொடுமைப் படுத்திய புகைப்படங்களை திரித்து[17], முஸ்லீம்கள் பௌத்தர்களால் கொடுமைப்படுத்தப்படுகிறாற்கள், கொல்லப்படுகிறார்கள் என்று திரித்து புகைப்படங்களை வெளியிட்டு, அதன்மூலம் அஸ்ஸாமில் தூண்டி விட்டு கலவரம் நடத்தினர்[18]. ஆகஸ்டு 2012ல் மும்பையில் இதையும் ஒரு சாக்காக[19] வைத்துக் கொண்டு ராஸா அகடெமி நடத்திய ஊர்வலத்தை மாற்றி[20], கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர்[21]. ஒருவேளை, அதே முறையை இதிலும் பின்பற்றுகிறார்களோ என்னமோ.

 

வேதபிரகாஷ்

14-04-2013


[2] Nitaqat classifies all private Saudi firms into four categories-Blue, Yellow, Green and Red-based on their size and the number of Saudi nationals they have recruited.

[3] The fear psychosis is bogus. What has happened in Saudi Arabia is not an overnight development.

http://newindianexpress.com/opinion/article1533803.ece

[4] From the early Eighties, all Gulf Cooperation Council (GCC) countries have been talking about localisation, in terms of employment opportunities.

[5] In 2003, government had said it would reduce the numbers of expat workers to 20 per cent of its total population in 10 years.

[6] As long ago as 2004, Saudi’s Shura Council stipulated that by 2007, 70 per cent of the country’s workforce would have to be locals to reduce dependence on foreign workers, recapture remittances that would otherwise flow out of the country, and reinvest.

[7] Saudi Arabia’s Shura Council passed a bill on July 8, 2009, to improve legal protections for the estimated 1.5 million domestic workers in the country, but the measure still falls short of international standards, Human Rights Watch said today. The bill goes from the Shura Council, an appointed consultative body, to the cabinet, which can make further changes before it is enacted into law. http://www.hrw.org/news/2009/07/10/saudi-arabia-shura-council-passes-domestic-worker-protections

[12] Minister of State for External Affairs E. Ahamad, who is in Dushanbe to attend the Asian Development Dialogue, met Saudi Arabia’s Deputy Minister of Foreign Affairs Prince Abdulaziz bin on Friday and expressed the hope that Riyadh would not take any step that would adversely impact expatriates in the Kingdom.

http://www.thehindu.com/news/national/best-consideration-for-indians-saudi-minister/article4562483.ece

[13] Overseas Indian Affairs Minister Vayalar Ravi had on Thursday said Indian Ambassador to Saudi Arabia had been asked to take up the issue with Riyadh and its Labour Ministry and ensure that there would be no job loss for Indians on a mass scale. In 2011, 2.28 million Keralites were working abroad. Of them, some 570,000 were in Saudi Arabia, a report said.

http://www.thehindu.com/news/national/best-consideration-for-indians-saudi-minister/article4562483.ece

[14] The press is full of figures of how Saudi Arabia over the last four months has deported more than 200,000 foreigners staying illegally, how they are stamping exit visas post haste in a manner that will deny those being turned away a chance to work in any other Gulf country, how foreigners are locking themselves up in rooms without water and food fearing arrest or worse.

http://newindianexpress.com/opinion/article1533803.ece

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

8 பதில்கள் to “சவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: கேரளப்பிரச்சினையா, இந்தியப் பிரச்சினையா?”

  1. M. K. Mahalakshmi Says:

    இந்தியர்கள் தாம் பணத்திற்கு ஆசைப்பட்டு சென்றனர்.

    சிலர் நன்றாக சம்பாதித்துக் கொண்டு வந்து இந்தியாவில் செட்டில் ஆகிவிட்டனர்.

    சிலர் ஆசைக்காக மறுபடியும் சென்றுள்ளனர்.

    இவ்வாறு ஆண்கள் வளைகுடா நாடுகளுக்குச் சென்று தங்கிவிடும் போது, அவர்களது மனைவிகள் பிரச்சினகளில் சிக்கியுள்ளனர். இது பெரும்பாலும் முஸ்லீம்களில் ஏற்பட்டுள்ளது.

    கேரளாவைப் பொறுத்த வரைக்கும், வளைகுடாவிற்குச் சென்று வருவது என்பது சாதாரணமான விஷயமாகி, பிறகு பரம்பரைத் தொழிலாகி விட்டது.

    குருவிகள் எனப்படுகின்றவர்களும் உருவானார்கள். கடத்தல் இவ்வாறான அடிக்கடி சென்ற் வரும் பயணங்களில் மறைந்து நடந்து வந்தது.

    சட்டதிட்டங்கள் மாறும் போது, அவர்களும் தங்களது முறைகளை மாற்றிக் கொண்டனர்.

    இப்பொழுதும், முஸ்லீம்கள் என்றாலும் வெளியேற்றப் படுகின்றனர் எனும்போது, ஒரு அறியமுடியாத பிரச்சினை உள்ளது எனலாம்.

    • K. T. Narayayanaswamy Pillai Says:

      “இப்பொழுதும், முஸ்லீம்கள் என்றாலும் வெளியேற்றப் படுகின்றனர் எனும்போது, ஒரு அறியமுடியாத பிரச்சினை உள்ளது எனலாம்” – இதுதான், எனக்கும் பிரமிப்பாக இருக்கிறது.

      அப்படியென்றால், இந்திய முஸ்லீம்களை விட அவர்கள் எப்படி உயர்ந்தவர்கள்/

      ஒருவேளை தேர்தல் நேரத்தில் குழப்பத்தை ஏற்படுத்த அல்லது திசைத் திருப்ப, அவ்வாறு இப்பிரச்சினை ஏற்படுத்தப் பட்டுள்ளதா?

  2. L. K. Raghuraman Says:

    When the Indians earned millions and settled well, they did not care for others.

    Now, why the illegal immigrants should complain about the expulsion.

    They should have overstayed against the rule of law of Saudi Arabia.

    Having stayed, naturally, they have to face the consequences.

    Why then they ask for the intervention of their illegal activities there?

    That is why, the Indians of Tamilnadu, speaking Tamil make it a issue, about the suffering Tamils in Sri Lanka.

    Would GOI act to allay the sufferings of the Tamils there in the same way?

    • K. T. Narayayanaswamy Pillai Says:

      நிச்சயமாக சட்டத்திற்குப் புறம்பாக நடந்து கொண்டவர்கள் முடிவைப் பற்றி கவலைப் படுவது அல்லது நொண்டி சாக்குச் சொல்லி, இந்திய அரசாங்கத்திடம் கெஞ்சுவது போன்ற நடவடிக்கைகள் கூடாது.

      இப்பொழுது கூட, திரும்ப வர பிளேனுக்கு டிக்கெட் வாங்க காசு இல்லை என்றெல்லாம் சொல்லிக் கொள்வதும், ஊடகங்களில் வர்ணிப்பதும் வேடிக்கையக இருக்கிறது.

      ஏனெனில், சுமார் லட்சக்கணக்கில் பெண்கள் வீட்டு வேலை மற்ற வேலை என்று செய்வதற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளனர்.

      அவர்களில் பெரும்பாலோர் காணவில்லை என சொல்லப்படுகிறது.

      செக்ஸ் தொல்லைகளால் தற்கொலை செய்து கொண்டனர், விபச்சாரிகள் ஆனார்கள்; ஹேரங்களில் இருக்கிறார்கள் என்கிறார்கள்.

      இவர்களின் கதி என்ன?

      போன இந்திய பெண்கள் எல்லோருமே திரும்ப அனுப்பப் படுவாட்களா?

  3. K. T. Narayayanaswamy Pillai Says:

    சவூதிவாழ் இந்தியர்களுக்கு ஆப்பு சீவிய மியன்மார் பெளத்த தீவிரவாதிகள்
    This entry was posted on 12/04/2013, in உலகச்செய்தி 🌍 and tagged B. Bookmark the permalink. 1 பின்னூட்டம்

    பர்மா என்ற மியான்மரில் கடந்த வருடம் மீண்டும் தலைதூக்கிய பவுத்தமத வெறியர்களின் தீவிரவாதம் காரணமாக ஆயிரக் கணக்கான பர்மிய முஸ்லிம்கள் படுகொலை செய்யப் பட்டனர். இந்தப் படுகொலைகளுக்கு உலக நாடுகள் கண்டனம் கூடத் தெரிவிக்காமல் மெளனமாக இருந்ததுவெட்கக்கேடு.

    சூடான், மாலி போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் வன்முறை தலைதூக்கியபோது படை பரிவாரங்களுடன் கூடாரமடிக்கும் அமெரிக்கக் கூட்டுப்படைகள், மியான்மரில் நடந்த முஸ்லிம் இனப்படுகொலை விசயத்தில் துரும்பையும் அசைக்கவில்லை.

    ‘உயிர்களைக் கொல்வது பாவம்’ என்று நம்பும் ஜீவகாருண்ய பவுத்த மதத்தினர் இலங்கையைப் போல் மியான்மரிலும் பெரும்பான்மையாக உள்ளனர் என்பது இருநாடுகளுக்குமுள்ள ஒற்றுமை. இந்தியாவுடன் நெருக்கமான உறவுகொண்ட வகையிலும் இருநாடுகளுடனும் நட்புறவு உண்டு. எனினும், பிறநாட்டு விசயங்களில் தலையிடக்கூடாது என்ற நவீன அணிசேரா/வெளியுறவுக் கொள்கையை அஹிம்சாதேசம் இந்தியா கடைபிடிப்பதால் இந்நாடுகள் விசயத்தில் மறந்தும் வாய் திறக்கவில்லை.

    இந்நிலையில் பர்மிய முஸ்லிம்களின் விசும்பல் ஐரோப்பாவின் நோயாளி நாடான துருக்கியின் காதுகளை எட்டியது. அதிகாரப்பூர்வமற்ற பயணமாக மியான்மர் வந்திருந்த துருக்கி பிரதமர் தய்யிப் கலங்கிப் போனார். அவர் மனைவி எமினி எர்டகான் பாதிக்கப்பட்ட பர்மிய முஸ்லிம்களின் நிலையைக் கண்டு கண்ணீர்விட்டுக் கதறி விட்டார். எனினும் ஆறுதலைத் தவிர வேறெந்த உறுதிமொழியையும் அவர்களால் கொடுக்க முடியவில்லை.

    இது ஒருபக்கமிருக்க, எண்ணெய் வளமிக்க சவூதி அரசு 500,000 பர்மிய முஸ்லிம்களுக்கு வேலையுடன் கூடிய அகதிகள் குடியுரிமையை வழங்குவதாகக் கடந்த வாரம் அறிவித்தது. அண்டைநாடான பங்களாதேஷ் பர்மிய அகதிகளுக்கு உதவ மறுத்து விட்டபோது, பாலைவனத்திலிருந்து அடைக்கலக் காற்று வீசியது பாதிக்கப்பட்ட பர்மிய முஸ்லிம்களுக்கு ஓரளவு ஆறுதலாக இருந்தது.

    உள்நாட்டு வேலைவாய்ப்புகளில் சவூதிகளுக்கு உரிய இடம் இல்லாததால் எகிப்து, லிபியா போன்று எந்நேரமும் புரட்சி வெடித்து வளைகுடா புயல் சவூதியிலும் வீசக்கூடும் என்ற கலக்கம் சவூதி ஆட்சியாளார்களுக்கு இருந்து வரும் நிலையில், பர்மிய முஸ்லிம்களுக்கு அடைக்கலம் அறிவித்தது, சவூதி மக்களிடம் எதிர்ப்பை ஏற்படுத்தவில்லை. மாறாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் மனிதாபிமானக் கடமை என நிறைவு கொண்டனர்

    இந் நிலையில்தான் சவூதி அரேபிய அரசு உள்நாட்டு வேலைவாய்ப்புகளில் 10% சவூதிகளுக்கு இடஒதுக்கீடு (நிதாகத்) என்ற திட்டத்துடன், சட்ட விதிகளுக்குப் புறம்பாக வேலை செய்து கொண்டிருக்கும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சுதந்திர விஸாக்களை ரத்து செய்து அறிவித்தது. அதாவது, சவூதி அரேபியரின் ஸ்பான்சரில் விஸா பெற்று வேறொரு சவூதியிடம் சுதந்திரமாக வேலை செய்யக்கூடிய ஆசாத் விஸா அங்கீகாரங்களை அதிரடியாக ரத்துச் செய்தது. இதனால், லட்சக்கணக்கில் ஏஜெண்டுகளிடம் பணம் செலுத்தி விஸா பெற்று சிறு/பெரு முதலாளிகளாகச் சொந்தத் தொழில் செய்துவந்த வெளிநாட்டவர்களுள் குறிப்பாக இந்தியர்கள் பலரின் நிலை கேள்விக் குறியாகியுள்ளது. அவ்வாறு பணியாற்றும் இந்தியர்களுள் மூன்றில் ஒரு பங்கினர் கேரளத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    கேரளா ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படும் சவூதியின் முடிவு குறித்து மத்திய காங்கிரஸ் அரசு உருப்படியாக பெருமளவில் எதையும் செய்யவில்லை என்றாலும் கேரளாவிலுள்ள மூன்று விமான நிலையங்களில் இதற்கான சிறப்பு கவுண்ட்டர்களை அமைத்துள்ளனர். அவ்வாறு நாடு திரும்பும் ‘மலையாளிகளின்’ மறுவாழ்வுக்கான திட்டங்களையும் தீட்டியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சவூதியிலிருந்து வேலையிழந்து நாடு திரும்புபவர்களின் விமான கட்டணத்தை மத்திய அரசு ஏற்கும் என்று அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார். தமிழகம் உள்ளிட்ட எட்டு மாநில முதல்வர்களுடன் ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

    கடந்த வாரம் வரை அந்நியச் செலாவணி அனுப்பி இந்தியாவை வலுப்படுத்தியவர்கள் இன்று விமான டிக்கெட்டிற்காக இந்திய தூதரக வாசலில் வரிசையில் நிற்கும் அவல நிலைக்கு வந்துள்ளனர். சவூதிவாழ் இந்தியர்கள் பலரின் இந்தத் திடீர் அவல நிலைக்கு யார் காரணம்? உள்நாட்டு மக்களுக்கு வேலைகளில் 10% ஒதுக்கீடு வழங்கம் சவூதி அரசின் திட்டமா? சுதந்திரமாகப் பணியாற்றி வெளிநாடுகளில் முதலாளிகளாக இருக்கலாம் என்ற ஆசையில் முறையற்ற விஸாவில் சவூதி சென்ற இந்தியர்களா? போன்ற கேள்விகள் பொதுமக்கள் மனதில் எழுகின்றன.

    இவர்கள் ஓரளவு காரணம் என்றாலும் சவூதியின் இந்தத் திடீர் முடிவுக்கு மறைமுகக் காரணம் மியான்மர் பவுத்த தீவிரவாதிகள் என்று கூட ஒரு கோணத்தில் சொல்லலாம். ஐந்து லட்சம் பர்மிய அகதிகளுக்கு வேலையுடன் கூடிய அடைக்கலம் காரணமாக, சவூதியில் கடை முதலாளிகளாக இருந்த இலட்சக்கணக்கான இந்தியர்கள் அடுத்த மூன்று மாதங்களில் இந்தியாவுக்கு அகதிகளைப் போல் திரும்பும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என்று கருதினாலும் அதில் பிழையுண்டோ? (சத்தியமார்க்கம்)
    —————————————–
    தாங்கள் குறிப்பிட்ட மேற்கண்ட பதிவைப் படித்தேன்.

    ஏதோ முஸ்லீம்கள் புனிதர்கள் போலவும், பௌத்த பிக்குகள் தீவிரவாதிகள் போலவும் சித்தரிக்கப் பட்டுள்ளனர்.

    உண்மைக்குப் புறம்பாக இப்படி எழுதுவதும் தீவிரவாதம் தான்.

  4. நிகாதத் சட்டத்தை எதிர்க்காத திராவிடத்தின் இன்னொரு போலித்தனம் – இஸ்லாமிடம் ஏமாந்தும் புத்த Says:

    […] [13] https://secularsim.wordpress.com/2013/04/14/saudi-labour-policy-indian-problem-or-kerala-issue/ […]

  5. நிகாதத் சட்டத்தை எதிர்க்காத திராவிடத்தின் இன்னொரு போலித்தனம் – இஸ்லாமிடம் ஏமாந்தும் புத்த Says:

    […] [13] https://secularsim.wordpress.com/2013/04/14/saudi-labour-policy-indian-problem-or-kerala-issue/ […]

  6. நிகாதத் சட்டத்தை எதிர்க்காத திராவிடத்தின் இன்னொரு போலித்தனம் – இஸ்லாமிடம் ஏமாந்தும் புத்த Says:

    […] [13] https://secularsim.wordpress.com/2013/04/14/saudi-labour-policy-indian-problem-or-kerala-issue/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: