நித்யானந்தா, மதுரை ஆதீனம், இளைய பட்டம்: சட்டம், பாரம்பரியம், சம்பிரதாயம், செக்யூலரிஸம்!

நித்யானந்தா, மதுரை ஆதீனம், இளைய பட்டம்: சட்டம், பாரம்பரியம், சம்பிரதாயம், செக்யூலரிஸம்!

சட்டப்படி பட்டமேற்பது தடுக்கமுடியாதது: மடாதிபதி அதிகாரத்தில், இளையப் பட்டத்தை சட்டப் படி அமர்த்தலாம். அதனை யாராலும் தடுக்க முடியாது. விவரம் தெரியாதவர்கள் விளம்பரத்திற்காக எதிர்க்கலாம். மதுரை ஆதீனம் சாதாரணமாக சர்ச்சைகளில் சிக்குவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, சர்ச்சைக்குள்ளவரை அவ்வாறு நியமிப்பதுதான் கேள்விகளை எழுப்புகின்றன. இந்துவிரோத சக்திகளும், இதனைப் பெரிது படுத்தி செய்திகளாக்கி காசாக்கப் பார்க்கின்றன. ஒத்த காலத்தில் மற்ற மதத்தலைவர்கள் பற்பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு, தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தாலும், அவர்களை விட்டுவிட்டு, இப்படி திரும்பியுள்ளது நோக்கத்தக்கது. ஆங்கில நாளிதழ்கள் நித்யானந்த மதுரை மடத்தின் கவர்னர் ஆகியுள்ளார்[1] என்று செய்திகளை வெளியிட்டுள்ளன[2]. “ஹிந்து அவுட்விட்ஸ்” – Hindu outfits protest over Nityananda app’ment as Mutt head[3] – என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன[4]. நித்யானந்தா இவ்வாறெல்லாம் The controversial Bidadi-based godman,  self-styled godman, controversial self-styled godman விவரிக்கப் பாடுவதும் தவித்திருக்கலாம். அதாவது, வழக்குகள் முடிந்த பின்னர், இத்தகைய செயல்களில் ஈடுபடலாம்.

மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தா பதவியேற்றார்: மதுரை ஆதீனம் மடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 293-வது மதுரை ஆதீனமாக பெங்களூர் பிடதி ஆசிரம நிறுவனர் நித்யானந்தர் 29-04-2012 (ஞாயிற்றுக்கிழமை)  அன்று பொறுப்பேற்றார். அவர் இனிமேல் “மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்’ என்றழைக்கப்படுவார் என தற்போதைய ஆதீனம் அறிவித்தார்[5]. பாரம்பரியமிக்க மதுரை ஆதீன மடத்தின் 293-வது மதுரை ஆதீனமாக நித்யானந்தர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு பிரமாண்ட அலங்கார ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மடத்தின் இயற்கைச் சூழல் மாற்றப்பட்டு, குளுகுளு வசதியுடன் கிரானைட் கற்களால் நவீன முறையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. மடத்தின் நுழைவுவாயில் முதல் அனைத்துப் பகுதிகளிலும் பிடதி ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் காணப்பட்டனர். மடத்தின் கட்டுப்பாடு முழுவதும் அவர்கள் பொறுப்பில் விடப்பட்டிருந்தது.

விழா நிகழ்ச்சி, பத்திரிக்கையாளர்கள் கூட்டம்: மதுரை ஆதீனம் பிரமுகர்களைச் சந்திக்கும் அறை குளுகுளு வசதிகளுடன் பெரிய மண்டபமாக மாற்றப்பட்டு, இந்த மண்டபத்தில் நித்யானந்தர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்காக பெங்களூர், சென்னை போன்ற இடங்களிலிருந்தும் பத்திரிகையாளர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். மண்டபத்துக்குள்ளும், வெளியேயும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஹெட்போனுடன் கூடிய வயர்லெஸ் மைக் உள்ளிட்ட நவீன ஒலிபெருக்கி சாதனங்கள் சகிதமாக மதுரை ஆதீனமும், நித்யானந்தரும் மேடையில் தங்க ஆசனங்களில் அமர்ந்தனர். முறைப்படி நித்யானந்தாவை 293-வது மதுரை ஆதீனமாக நியமிப்பதாகவும், இனி அவர், “மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்சஸ்ரீ நித்யானந்த ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்’ என அழைக்கப்படுவார் என்று தற்போதைய ஆதீனம் அறிவித்தார். பின்னர், நித்யானந்தாவை மதுரை ஆதீனமாக நியமிப்பதற்கு அடையாளமாக, அவரது கழுத்தில் ஆதீனகர்த்தர்கள் அணியும் தங்க மாலை மற்றும் கிரீடங்களை தற்போதைய ஆதீனம் அணிவித்தார்[6].

2500 ஆண்டு ஆதீனத்தின் தொன்மை: “இந்த ஆதீனம் 2500 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். திருஞானசம்பந்தர் இதை புணரமைத்து 1500 ஆண்டு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்பு மதுரை மீனாட்சி அம்மன்கோவில், ராமேசுவரம் ராமநாதசாமி கோவில்கள் மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் அவற்றை அரசு எடுத்துக்கொண்டது. மதுரை ஆதீனம் 293வது குருமகா சன்னிதானமாக நித்தியானந்தா சுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். இது திடீர் என எடுத்தமுடிவு அல்ல. கடந்த 8 ஆண்டுகளாக யோசித்து வந்தோம். மதுரை ஆதீன மடத்தில் பதவி வகித்தவர்கள் அத்தனை பேரும் ஆற்றல்மிக்கவர்கள்[7]. சைவ சித்தானந்தத்தில் ஆற்றல் மிக்கவர்களாக இருந்து வந்தார்கள். அதேபோல நானும் எழுந்தருளி ஞானம், எழுச்சி, உணர்வு, போர்க்குணம் போன்ற தகுதியுடவனாக இருக்கிறேன். இப்போது 293வது மகா சன்னிதானமாக சிறந்தவரை தேர்ந்தெடுத்துள்ளோம். சிவன்-பார்வதி ஆசியுடன் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எழுச்சி, ஆற்றல், போர்குணம் கொண்ட ஒரு ஞானியை மதுரை ஆதீனமாக நியமித்துள்ளோம்”, இதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம் என்றார்[8].

மதுரை ஆதீன மடத்தின் வளர்ச்சிக்கு ரூ.5 கோடி- நிதுயானந்தா அறிவிப்பு[9]: மதுரை ஆதீன மடத்தின் வளர்ச்சிக்கு ரூ.5 கோடி வழங்குவதாகவும், பெங்களூர் மடத்திலிருந்து மருத்துவர், பொறியாளர்கள் அடங்கிய 50 சன்னியாசிகள் மதுரை மடத்தில் தங்கியிருந்து பணியாற்றுவார்கள் என்றும் நித்யானந்தா அறிவித்தார். மதுரை ஆதீன மடத்துக்குள்பட்ட பகுதியில் 100 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார். “நித்யானந்தர் ஆசிரமும், மதுரை ஆதீன மடமும் இணைந்து செயல்படும். இந்த மடத்தில் நித்யானந்தாவுக்கு முழு அதிகாரம் அளிப்பதாகவும், அவர் விரும்பிய மாற்றங்களை, பணிகளைச் செய்யலாம். நான் மதுரை மடத்தில் தங்கியிருந்து பணியாற்றுவேன். நித்யானந்தர் அவ்வப்போது வந்து செல்வார். நிர்வாகத்தை இருவரும் இணைந்து மேற்கொள்வோம்‘ என்றார் மதுரை ஆதீனம்.

இந்து மக்கள் கட்சி அமைப்புகள் ஆர்ப்பாட்டம்: மதுரை ஆதீனத்தைச் சந்திப்பதற்காக அர்ஜுன் சம்பத் தலைமையில் பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை வந்தனர். அவர்களை தனியாகச் சந்திக்க மதுரை ஆதீனம் மறுத்துவிட்டார். அதையடுத்து, சண்டிகேஸ்வரர் நற்பணி மன்றத் தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்ட 6 பேர் மட்டும் மதுரை ஆதீனத்தைச் சந்தித்தனர். புதிய ஆதீனத்தை நியமிக்க மற்ற ஆதீனகர்த்தர்களுடன் ஆலோசிக்க வேண்டியதில்லை என்றும், ஆதீனப் பொறுப்பேற்க நித்யானந்தருக்கு அனைத்துத் தகுதிகளும் உள்ளன என்றும் அவர்களிடம் மதுரை ஆதீனம் கூறியுள்ளார். அதையடுத்து, அங்கு நித்யானந்தரின் சீடர்கள், நித்யானந்தரை வாழ்த்தி கோஷம் எழுப்பியுள்ளனர். உடனே சுரேஷ்பாபு தலைமையில் சென்றவர்கள் தேவாரம் பாடினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பிரச்னையைத் தவிர்ப்பதற்காக போலீஸார் அவர்களை வெளியே அழைத்து வந்தனர். அதன் பிறகு மதுரை ஆதீன மடத்தின் அருகே இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரம்பரியம் தெரியவில்லை என்று கேள்விகள் கேட்கும் இந்து மக்கள் கட்சி தலைவர்: பின்னர் செய்தியாளர்களிடம் அர்ஜுன் சம்பத் கூறியதாவது: “ஆதீனமானவற்கு முன் குறிப்பிட்ட காலம் இளைய ஆதீனமாக இருந்து தீட்சை பெற்று, முறைப்படி நாமகரணம் சூடி பொறுப்பேற்றுக் கொள்வதுதான் வழக்கம். ஓர் ஆசிரமத்தின் மடாதிபதியை திடீரென இன்னோர் ஆதீனத்தின் தலைவராக நியமிக்க வேண்டிய அவசரம் ஏன் எனத் தெரியவில்லை. மடாதிபதிகள் ருத்ராக்சத்தைத் தான் அணிவார்கள், இவர்கள் தங்க நகைகளை அணிந்துள்ளார். இவையெல்லாம் பாரம்பரியமா என்று தெரியவில்லை. இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றார்.

“எனக்கு முழு அதிகாரம் உள்ளது புதிய ஆதீனம் நியமிக்கப்பட்டது குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது என்று மதுரை ஆதீனம் கூறினார். எனக்குள்ள முழு அதிகாரத்தைப் பயன்படுத்தி நித்யானந்தரை மதுரை ஆதீனமாக நியமித்துள்ளேன் என்றும் அவர் கூறினார். இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: “மதுரை ஆதீன மடத்துக்கு வந்த நித்யானந்தர் சில நாள்கள் தங்கியிருந்தார். அவரது அழைப்பின்பேரில் நான் பெங்களூரிலுள்ள அவரது ஆஸ்ரமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு நித்யானந்தாவின் போர்க் குணம், ஞானம், எழுச்சி போன்றவற்றைப் பார்த்து, எனது வாரிசாக நியமித்தேன். அவரிடம் நோய்களை குணமாக்கும் வல்லமையும் இருக்கிறது. எனக்கு பல ஆண்டுகளாக சுவாசப் பிரச்சனை (வீசிங்) இருந்தது. இதை அவர் குணப்படுத்தினார். பல அற்புதங்கள் நிகழ்த்திய திருஞானசம்பந்தரிடம் இருந்த சக்திகள் இவரிடம் இருப்பதாக உணருகிறேன்.

தந்தை – மகன் போல இணைந்து செயல்படுவோம்: உலகம் முழுவதும் அவருக்கு 1 கோடிக்கும் மேல் பக்தர்கள் உள்ளனர். மதுரை ஆதீன மடத்தில் இனி நானும், அவரும் தந்தை – மகன் போல இணைந்து செயல்படுவோம் என்றார். அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் நித்யானந்தர் கூறியது: மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள நான், 292-வது ஆதீனம் என்ன சொல்கிறாரோ அதன்படி நடப்பேன். மடத்துக்கு வழங்கப்பட்ட ரூ.5 கோடி நிதியில், நான்கு கோவில்கள் புனரமைக்கப்பட்டு, இந்த ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும். ஜூன் 5-ம் தேதி 292-வது ஆதீனத்துக்கு கனகாபிஷேகம் நடைபெறும். 151 நாடுகளிலுள்ள நித்யானந்த பீடங்கள் 292-வது மதுரை ஆதீனத்துக்கு கட்டுப்பட்டு இயங்கும் என்றார்.

இந்த நிலையில் பெங்களூரில் தங்கி உள்ள மதுரை ஆதீனம் அளித்துள்ள பேட்டி[10]:

கேள்வி: மதுரையின் இளைய ஆதீனமாக திடீரென நித்யானந்தாவை நியமித்தது ஏன்?

பதில்: இப்போதும் நாம்தான் தலைமை பொறுப்பில் இருக்கிறோம். நித்யானந்தாவுக்கு இளைய ஆதீனமாக பட்டம் சூட்டப்பட்டுள்ளது. அவர் எனது கட்டளையின்படி பணிகளை கவனிப்பார்.

கே: இனி நித்யானந்தா மதுரையிலேயே தங்கி ஆன்மீக பணியில் ஈடுபடுவாரா?

ப: நித்யானந்தாவுக்கு உலக அளவில் தியான பீடங்கள் உள்ளன. பெங்களூரில் தலைமை தியான பீடம் அமைந்துள்ளது. அந்த பணிகளையும் அவர் கவனிக்க வேண்டும். எனவே மதுரைக்கு அடிக்கடி வந்து ஆன்மீக பணிகளை கவனிப்பார்.

கே: மீனாட்சி அம்மன் கோவிலை, மதுரை ஆதீனத்திற்குள் கொண்டு வருவேன் என்று நித்யானந்தா கூறி இருக்கிறாரே?

ப: மீனாட்சி அம்மன் கோவில் கடந்த 1865-ம் ஆண்டு வரை மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. எனவேதான் மீனாட்சி அம்மன் கோவிலை மீண்டும் ஆதீன கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன் என்று அவர் கூறி இருக்கிறார். அவர் மதுரை சன்னிதானத்திற்கு மீனாட்சி அம்மன் கோவிலை மீட்டுக்கொடுப்பார். அவரது கருத்தில் எனக்கும் உடன்பாடுதான்.

கே: இதுவரை நீங்கள் இந்த முயற்சியில் ஈடுபட வில்லையே ஏன்?

ப: எனக்கு நிறைய ஆன்மீக பணிகள் இருந்த காரணத்தால் அதுபற்றி சிந்திக்கவில்லை. ஆனால் சிவபெருமானின் அருள் பெற்ற நித்யானந்தாவால் இது முடியும் என்று நினைக்கிறேன்.

கே: நடிகை ரஞ்சிதாவுடன் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்கு ஆளான நித்யானந்தாவுக்கு இளைய ஆதீனம் பட்டம் வழங்குவது ஏற்புடையதா?

ப: நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தாவை சம்பந்தப்படுத்துவது அறியாமையினாலும், பொறாமையினாலும், புரிந்து கொள்ளுதல் இல்லாததாலும் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள். இந்த குற்றச்சாட்டுகளில் எள்ளளவும் உண்மை இல்லை. அவரது நடவடிக்கைகளை பலதடவை கவனித்த பின்னர்தான் இந்த பொறுப்பிற்கு அவர் தகுதியானவர் என்று முடிவு செய்தேன்.

கே: மதுரையில் நித்யானந்தாவுக்கு விழா எடுக்கப்படுமா?

ப: இன்று (வெள்ளிக்கிழமை – 27-04-2012) மாலை நானும், நித்யானந்தாவும் மதுரை வருகிறோம். நாளை மதுரை ஆதீனத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறோம்.

ஜூன் மாதம் 5-ந்தேதி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் தங்க சிம்மாசனம், தங்க செங்கோல் ஆகியவற்றை நித்யானந்தா எனக்கு வழங்குகிறார். அப்போது இளைய ஆதீனமான நித்யானந்தாவுக்கு கவுரவம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 ஊடகக்காரர்களின் மேதாவித்தனம்: செக்யூலரிஸ ஊடகக்காரர்களுக்கு, குறிப்பாக இந்துவிரோத நிருபர்களுக்கு, அர்த்தமில்லாத கேள்விகள் கேட்பதில் வல்லவர்கள். ஐகோர்ட் போனாலும் செல்லாது: “ஆதீன மடத்தின் விதிப்படி, ஓலைச்சுவடி மூலம் தானே தேர்வு செய்திருக்க வேண்டும்; ஆனால் யாரிடமும் ஆலோசிக்காமல் திடீரென்று நியமித்து விட்டீர்களே?” என நிருபர்கள் கேட்டதற்கு, “”ஓலைச்சுவடியைப் பாருங்கள். அதில் நித்யானந்தா பெயர்தான் இருக்கும். இதை மற்ற ஆதீனங்கள் அங்கீகரித்துள்ளனர். இந்து சமயம் நலிவடையாமல் இருக்கவும், தூக்கி நிறுத்தவுமே அவரைத் தேர்ந்தெடுத்தேன். இதற்கு எதிராக ஐகோர்ட் போனாலும் அது செல்லாது,” என்றார் ஆதீனம்[11].  இதே சாதுர்யம் மற்ற விஷயங்களில் வெளிப்படாது. காஷ்மீர் தீவிரவாதிகள் முப்டி முஹம்மது சையதின் மகளைக் கடத்திக் கொண்டு வைத்திருந்த போது, விட்டில் பிரியாணி செய்து அவளுக்கு அனுப்பி வைத்தனர். அதாவது, அவள் இருக்கும் இருப்பிடம் தெரிந்தேயிருந்தது. இப்பொழுதும், ஒரு கலெக்டரைப் பிடுத்து வைத்துள்ளார்கள் என்கிறார்கள். ஆனால், அவருக்கு வேண்டியவை கொடுத்தனுப்பப் படுக்கின்றன[12]. மத்தியஸ்தம் பேசுகின்ரவர்கள் தாராளமாகச் சென்ரு வருகின்றனர். ஆனால், அரசாங்கத்திற்கு தெரியாது என்பது போல நாடகமாடி வருவது மக்களை ஏமாற்றத்தான். சர்ச்சிற்கும் நக்சல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு பல உள்ளதும் தெரிகிறது[13]. இதேபோலத்தான், நக்சல்கள் கேட்டத்தைக் கொடுத்து, ஒரிசா எம்.எல்.ஏ.ஐ மீட்டுள்ளனர். இவற்றில் கிருத்துவ பாதிரியார்கள் இடைதரகர்களாக ஈடுபட்டு வருவதை ஊடகங்கள் கண்டிக்கவில்லை. எந்த புத்திசாலியான நிருபரும் இந்த போக்குவரத்துகளை அறிந்தும், ஒன்ரும் தெரியாதது போலக் காட்டிக் கொள்கிறர்கள். திருநெல்வாலியில் பிரார்த்தனை செய்கிறார்கள் என்று செய்தி போடுகிறர்கள். ஆனால், அங்கு சென்று, அங்குள்ள பிஷப்புகள், பாதிரிகளிடம் என்ன நடக்கிறது என்று நேரிடையாகக் கேட்டுவிடலாமா? ஏன் கேட்பதில்லை?


[12] Manish Kunjam, former legislator from Konta district, took the medicines for Menon, an asthma patient, yesterday after Maoists made an appeal for medical help (the Union of Catholic Asian News).

http://www.ucanindia.in/news/abducted-collector%E2%80%99s-health-worsens/17642/daily

[13] “We can’t believe he has been kidnapped,” said Father Biju Uppanmackal, a priest working in Sukma in Bastar district, a tribal area under Maoist control.

http://www.ucanindia.in/news/maoists-under-fire-for-abduction/17620/daily

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

4 பதில்கள் to “நித்யானந்தா, மதுரை ஆதீனம், இளைய பட்டம்: சட்டம், பாரம்பரியம், சம்பிரதாயம், செக்யூலரிஸம்!”

 1. vedaprakash Says:

  நித்யானந்தாவை நீக்க கோரிய மனு: மதுரை ஆதீனம்-நித்யானந்தா …
  மாலை மலர் – ‎1 மணிநேரம் முன்பு‎
  மதுரையை சேர்ந்த வக்கீல் மணிவாசகம் மாவட்ட முதன்மை கூடுதல் நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்து இருந்தார். அதில் கூறியிருப்பதாவது:- மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக … சட்டத்தை சகட்டுமேனிக்கு மிதிக்கும் மதுரை ஆதீனம் …
  Oneindia Tamil – ‎33 நிமிடங்கள் முன்பு‎
  மதுரை: மதுரை கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியும் வராமல் முரண்டு பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள் மதுரை ஆதீனமும், … மதுரை ஆதீன சொத்துக்களை அபகரிக்க முயலவில்லை: நித்யானந்தா பேட்டி
  மாலை மலர் – ‎8 மணிநேரம் முன்பு‎
  அமெரிக்காவில் கலிபோர்னியாவில் நிதி மோசடி தொடர்பாக நித்யானந்தா அமைப்பிற்கு எதிராக கோர்ட்டு உத்தர விட்டது. கலிபோர்னியாக வழக்கிற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. கலிபோர்னியா வழக்கிற்கும், எனக்கும் தொடர்பில்லை: நித்யானந்தா …
  யாஹூ! – ‎16 மணிநேரம் முன்பு‎
  மதுரை:கலிபோர்னியா வழக்கிற்கும், எனக்கும் சம்பந்தமில்லை. நித்யானந்தா பீடம் மட்டும் தான் என்னுடையது. எனது பெயரில் உள்ள நிறுவனங்கள், அமைப்புகளுக்கும், எனக்கும் தொடர்பில்லை, … அழகர்கோவிலில் நித்யானந்தா: பணியாளர்களுடன் சீடர்கள் மோதல்
  யாஹூ! – ‎22 மணிநேரம் முன்பு‎
  அழகர்கோவில் : மதுரை அழகர்கோயில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நித்யானந்தா தனது சீடர்களுடன் சுவாமி தரிசனம் செய்தார்.நித்யானந்தா மடத்தின் வெளிநாட்டு சீடர்கள் 50க்கும் … அழகர்கோவிலில் நித்யானந்தா சாமி தரிசனம்
  மாலை மலர் – ‎23 ஜூலை, 2012‎
  மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தா இன்று காலை 11.30 மணி அளவில் மதுரையை அடுத்த அழகர்கோவிலுக்கு திடீரென்று சென்றார். அவருடன் உள்நாடு, வெளிநாடு சீடர்கள் 100 பேர் சென்றனர். நித்தியானந்தா தரப்பினர் மீது மதுரை ஆதீனம் கடும் அதிருப்தி …
  தினக்குரல் – ‎23 ஜூலை, 2012‎
  மதுரை: தன்னையும் மதுரை ஆதீன மடத்தையும் மதிக்காமல் நித்தியானந்தாவும் அவரது ஆதரவாளர்களும் தான்தோன்றித்தனமாக நடந்துவருவதால் கடும் அதிருப்தியும் கோபமும் அடைந்துள்ளாராம் … நித்தியானந்தா சீடர்களின் நடவடிக்கையில் அதிருப்தி: மதுரை …
  தினத் தந்தி – ‎22 ஜூலை, 2012‎
  நித்தியானந்தா சீடர்களின் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக மதுரை ஆதீனம் அருணகிரிநாதருக்கும், நித்தியானந்தாவுக்கும் இடையே `திடீர்’ மோதல் ஏற்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைக்கு ஆஜராகும்படி நித்யானந்தாவுக்கு கர்நாடக …
  தின பூமி – ‎22 ஜூலை, 2012‎
  மதுரை,ஜூலை – 23 – மருத்துவ பரிசோதனைக்கு ஆஜராக வேண்டும் என்று நித்யானந்தாவுக்கு கர்நாடக போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தாவிடம் சம்மன் … நித்யானந்தா சீடர்கள் மீது மதுரை ஆதீனம் அதிருப்தி: கைலாய …
  மாலை மலர் – ‎22 ஜூலை, 2012‎
  மதுரை ஆதீன சொத்துக்களில் நித்யானந்தா சீடர்கள் தலையிட்டதையடுத்து அவர்கள் மீது மதுரை ஆதீனம் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து நித்யானந்தாவுடன் … நித்யானந்தாவுக்கு கர்நாடக போலீஸ் சம்மன்: மருத்துவ …
  மாலை மலர் – ‎22 ஜூலை, 2012‎
  மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தாவிடம் சம்மன் கொடுப்பதற்காக நேற்று கர்நாடக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார் மதுரை ஆதீன மடத்துக்கு வந்தனர். நித்யானந்தாவிற்கு சம்மன்
  தினமலர் – ‎21 ஜூலை, 2012‎
  மதுரை:மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்யானந்தா, தற்போது கொடைக்கானலில் உள்ளார். கர்நாடகா பிடதி ஆசிரமம் தொடர்பான வழக்கில், அவருக்கு பெங்களூரூ விக்டோரியா … நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை: பெங்களூர் போலீஸ் மதுரையில் …
  தினகரன் – ‎21 ஜூலை, 2012‎
  மதுரை: பெங்களூரில் இந்த மாதம் 30ம் தேதி நடக்கும் மருத்துவப் பரிசோதனைக்கு ஆஜராகும்படி சிபிசிஐடி போலீசார் மதுரையில் நேற்று நித்யானந்தாவிற்கு சம்மன் கொடுத்தனர். நிதிமோசடியில் எனக்கு சம்பந்தமில்லை: நித்தியானந்தா
  நியூஇந்தியாநியூஸ் – ‎5 மணிநேரம் முன்பு‎
  அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நிதிமோசடி வழக்கில் தனக்குதொடர்பில்லை என்று சுவாமி நித்தியானந்தா கூறியுள்ளார். கலிபோர்னியா மாகாணத்தில் வேதப் … ஆரம்பித்தது சண்டை, நித்தியானந்தா மீது மதுரை ஆதீனம் கோபம்!
  யாழ் – ‎19 மணிநேரம் முன்பு‎
  ஆரம்பித்தது சண்டை… நித்தியானந்தா மீது மதுரை ஆதீனம் கடும் கோபம்! மதுரை: தன்னையும், மதுரை ஆதீன மடத்தையும் மதிக்காமல் நித்தியானந்தாவும் அவரது ஆதரவாளர்களும் … அழகர்கோவிலில் சுவாமி நித்தியானந்தா தரிசனம்
  நியூஇந்தியாநியூஸ் – ‎21 மணிநேரம் முன்பு‎
  தமிழ்நாடு, மதுரை அழகர் கோவிலில் சுவாமி நித்தியானந்தா தனது வெளிநாட்டு சீடர்களுடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார். கர்நாடக பிடதி ஆசிரமத்திற்கு அம்மாநில அரசு சீல் … ஆர்த்தி ராவ் வழக்கு: மருத்துவப் பரிசோதனைக்கு வருமாறு …
  Oneindia Tamil – ‎22 ஜூலை, 2012‎
  மதுரை: ஆர்த்தி ராவ் என்ற முன்னாள் பெண் சீடர் ஒருவர் தொடர்ந்த வழக்கு தொடர்பாக மருத்துவப் பரிசோதனைக்கு ஆஜராக வேண்டும் என்று நித்யானந்தாவுக்கு கர்நாடக போலீஸ் சம்மன் … மதுரை ஆதீனம்-சுவாமி நித்தியானந்தா இடையே மோதலா?
  நெருடல் இணையம் – ‎22 ஜூலை, 2012‎
  இவ் விடயம் 23. 07. 2012, (திங்கள்), தமிழீழ நேரம் 11:20க்கு பதிவு செய்யப்பட்டது மதுரை ஆதீனமடத்தின் சொத்துக்கள் விடயத்தில் தேவையில்லாமல் நித்தியானந்தாவின் சீடர்கள் ஆஜாராவது மூத்த … நித்தியானந்தாவுக்கு சம்மன்
  nakkheeran publications – ‎21 ஜூலை, 2012‎
  கர்நாடகா பிடதி ஆசிரமம் தொடர்பான வழக்கில், அவருக்கு, பெங்களூரு விக்டோரியா மருத்துவ மனையில், ஜூலை 30ல், மருத்துவப் பரிசோதனை நடக்கிறது. இது தொடர்பாக அவர், பெங்களூரு சி.பி.சி.ஐ.
  அதிகம் தொடர்புடைய முடிவுகளைக் காண்பிப்பதற்காக, முன்னரே காண்பிக்கப்பட்டது போன்ற சில உள்ளீடுகளை கைவிட்டுள்ளோம். நீங்கள் விரும்பினால், புறக்கணிக்கப்பட்ட முடிவுகளையும் சேர்த்து மீண்டும் தேடலாம்.

 2. V. Narayanan Says:

  நித்யானந்தாவை விட்டால் தமிழக ஊடகங்களுக்கு வேற்எந்த வேலையும் இல்லை போலிருக்கிறது.

  இனி அவருக்காகவே, தனி ஊடகப் படை, போலீஸ் படை, நீதிமன்றம் முதலியவை ஏற்படுத்தப் பட்டாலும் ஆச்ச்சரியம் இல்லை.

  சன்-டிவியினர் ஒரு தனி செனலும் ஆரம்பிப்பார்கள்!

 3. “இந்து” இயக்கங்கள் அதிரடியாக பேட்டிகள், வழக்குகள், புகார்கள் முதலியவைக் கொடுப்பது-போடுவது, இந Says:

  […] [9] https://secularsim.wordpress.com/2012/04/30/nityananda-becoming-pontif-madurai-mutt/ […]

 4. “இந்து” இயக்கங்கள் அதிரடியாக பேட்டிகள், வழக்குகள், புகார்கள் முதலியவைக் கொடுப்பது-போடுவது, இந Says:

  […] [9] https://secularsim.wordpress.com/2012/04/30/nityananda-becoming-pontif-madurai-mutt/ […]

vedaprakash க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: