பயங்கரவாதிகளுடன் நட்புறவு ? : கேரள ஐ.ஜி., இப்படியா ; அறிக்கை கேட்கிறது மத்திய அரசு !

பயங்கரவாதிகளுடன் நட்புறவு ? : கேரள ஐ.ஜி., இப்படியா ; அறிக்கை கேட்கிறது மத்திய அரசு!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=25644

புதுடில்லி: கேரள போலீஸ் உயர் பொறுப்பில் இருக்கும் போலீஸ் ஐ.ஜி., ஒருவர் கத்தாரில் பயங்கரவாதிகளை சந்தித்தார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் கேரள மாநிலத்தில் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. எதுவாக இருப்பினும் மாநில அரசு பொறுப்புடன் நடந்து கொள்ளும் என மாநில முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார். கேரள மாநில கன்னனூர் ஐ.ஜி.,யாக பணியாற்றியவர் தாமின் தக்கன்கரே இவர் அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்குவார்.

இந்நிலையில் இவருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக ஒரு செய்தி பரவியுள்ளது. இவர் கத்தாரில் சில பயங்கரவாதிகளுடன் சந்தித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசுக்கு விவரம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஐ.ஜி., விவகாரம் தொடர்பாக , நிருபர்கள் முதல்வர் அச்சுதானந்தனிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளிக்கையில் மத்திய அரசு என்ன கேட்கிறதோ அதனை மாநில அரசு செய்து கொடுக்கும். தலைமை செயலர் இந்த விஷயத்தில் தேவையான நடவடிக்கை எடுப்பார் என்றார்.

உள்துறை செயலர் ஜி.கே., பிள்ளை கடிதம் எழுதியிருப்பது குறித்து கேட்டதற்கு கடிதத்தில் என்ன இருக்கிறது என்றெல்லாம் நான் விவரமாக இதனை சொல்ல முடியாது. தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாநில அரசு பொறுப்புடன் நடந்து கொள்ளும் என்றார்.

ஐ.ஜி.,தக்கன்கரே ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் யாருக்கும் தெரியாமல் வெளிநாடு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். மீண்டும் ஐகோர்ட் உத்தரவுப்படி பணியில் சேர்ந்தார் . இருப்பினும் பயங்கரவாதிகளுடன் சந்திப்பு நடந்திருக்குமா என்ற கோணத்தில் ஏ.டிஜி.பி., சிபிமாத்யூ தலைமையில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

குறிச்சொற்கள்: , , , ,

ஒரு பதில் to “பயங்கரவாதிகளுடன் நட்புறவு ? : கேரள ஐ.ஜி., இப்படியா ; அறிக்கை கேட்கிறது மத்திய அரசு !”

  1. R. Karuppusami Says:

    He will escape caught-free, just like Sahi Imam!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: